11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/09/2019
தாவரவியல் - உடலப் புறஅமைப்பியல்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தவறான இணையைத் தேர்ந்தெடு
மியூஸா – ஓர் நடு நரம்பு
லாப்லாப் – முச்சிற்றிலைஅங்கைக்கூட்டிலை
அகாலிஃ பா – இலை மொசைக்
அலமாண்டா – மூவிலை அமைவு
2.
கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?
பைசம் சட்டைவம் தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன
அடலான்ஷியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது.
நெப்பந்தஸ் தாவரத்தில் நடு நரம்பு மூடியாக மாறியுள்ளது.
ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் மஞ்சரி அச்சு பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.
3.
பிரையோஃபில்லம், டயாஸ்கோரியா – எதற்கு எடுத்துக்காட்டு
இலை மொட்டு, நுனி மொட்டு
இலை மொட்டு, தண்டு மொட்டு
தண்டு மொட்டு, நுனி மொட்டு
தண்டுமொட்டு, இலைமொட்டு
4.
குர்குமா அமாடா, குர்குமாடோமஸ்டிகா, அஸ்பரேகஸ், மராண்டா – ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு
கிழங்கு வேர்
வளைய வேர்
மணி வடிவ வேர்
முடிச்சு வேர்
5.
எதிர் புவி நாட்டமுடைய வேர்களுக்கு எடுத்துக்காட்டு
ஐபோமியா, டாலியா
அஸ்பராகஸ், ரூயெல்லியா
வைடிஸ்,போர்டுலகா
அவிசீனியா, ரைசோஃபோரா
6.
கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?
மாஞ்சிஃபெரா
பாம்புசா
மியூசா
அகேவ்
7.
வேர்கள் என்பவை ______.
கீழ்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை
கீழ்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை
மேல்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை
மேல்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை
8.
பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?
9.
ஓர் நடு நரம்பமைவுக்கும் பல நடு நரம்பமைவுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை கூறு.
10.
கீழ்கண்டவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகளை எழுதுக.
அ) அவிசீனியா, ட்ராபா
ஆ) ஆலமரம், இலவம் பஞ்சு மரம்
இ) கதிர்கோல் வடிவ வேர், பம்பர வடிவ வேர்
11.
வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.
12.
வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன?
1.
(d)
அலமாண்டா – மூவிலை அமைவு
2.
(b)
அடலான்ஷியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது.
3.
(b)
இலை மொட்டு, தண்டு மொட்டு
4.
(d)
முடிச்சு வேர்
5.
(d)
அவிசீனியா, ரைசோஃபோரா
6.
(b)
பாம்புசா
7.
(b)
கீழ்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை
8.
பக்கவேரானது வேர்களின் பெரிசைக்களிலிருந்து தோன்றி அகத்தோல், புறணி மற்றும் ரைசோடெர்மியை தாண்டி வெளி வருவதால் அவைகள் அகத் தோன்றிகளாகும்.
9.
| ஓர் நடு நரம்பமைவு | பல நடு நரம்பமைவு | |
| 1. | இவ்வகை நரம்பமைவில் இலையின் மையத்தில் ஒரே ஒரு மைய நரம்பு மட்டும் உள்ளது. |
இவ்வகை நரம்பமைவில், இலையின் ஒரு புள்ளியிலிருந்து இரண்டு அல்லது பல மைய நரம்புகள் தோன்றுகிறது. |
| 2. | இம் மைய நரம்பிலிருந்து பல கிளை நரம்புகள் தோன்றி ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துகிறது. |
பல மைய நரம்புகள் இலையின் வெளிப்புறமாகவோ அல்லது மேற்புறமாகவோ செல்கிறது. |
| 3. | இதன் மறுபெயர் சிறகு வடிவ வலைப் பின்னல் நரம்பமைவு ஆகும். |
இதன் மறுபெயர் அங்கை வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு ஆகும். |
| 4. | எ.கா: மாஞ்சிஃபெராபூ இண்டிகா, ஃபைகஸ் ரிலிஜியோஸா, நீரியம். |
எ.கா. குக்கர் பிட்டர் (பூசனி), லூஃபா(பீர்க்கங்காய்), காரிக்கா பப்பாயா (பப்பாளி), ஜிஜீஃபஸ் (இலந்தை), சின்னமோமம் (பிரிஞ்சிஇலை) |
10.
ஒற்றுமை:
| அவிசீனியா | ட்ராபா | |
| 1. | இத்தாவரத்தில் வேர்கள் பூமிக்கு மேலே காணப்படுகிறது. | இத்தாவரத்தில் வேர்கள் பூமிக்கு மேலே காணப்படுகிறது. |
வேற்றுமை:
| 1. | அவிசீனியா | ட்ராபா |
| 1. | இத்தாவரத்தில் சுவாச வேர்கள் காணப்படுகிறது. | இத் தாவரத்தில் ஒளிச் சேர்க்கை வேர்கள் காணப்படுகிறது |
| 2. | இத்தாவரங்கள் சதுப்புநிலத்தில் காணப்படுகிறது. | சாதாரண நிலைச்சூழலில் காணப்படுகிறது. |
| 3. | சுவாசத்திற்கென எண்ணிலடங்கா சுவாசத்துளைகள் காணப்படுகின்றன. | ஒளிச்சேர்க்கை நிலச்சூழலில் காணப்படுகிறது. |
ஆ) ஆலமரம், இலவம் பஞ்சு மரம் ஒற்றுமை:
| ஆலமரம் | இலவம் பஞ்சு மரம் | |
| 1. | இதில் வேற்றிட வேர்கள் உருமாற்றம் அடைந்துள்ளது. | இதில் வேற்றிட வேர்கள் உருமாற்றம் அடைந்துள்ளது. |
| 2. | வளரியல்பு-மரம் | வளரியல்பு-மரம் |
வேற்றுமை:
| 1. | ஆலமரம் | இலவம் பஞ்சு மரம் |
| 1. | இதில் வேற்றிட வேர்கள் தூண் வேர்களாக உருமாற்றம் அமைந்துள்ளது. | இதில் வேற்றிட வேர்கள் பலகை வேர்களாக உருமாற்றம் அடைந்துள்ளது. |
| 2. | பக்க கிளைகளிலிருந்து கீழ்நோக்கி நேராக வளர்ந்து மண்ணுக்குள் சென்று, பக்கக் கிளையை தூண் போன்று தாங்குகிறது. | இம்மரங்களில் அகலமான பலகை போன்ற புற வளர்ச்சியானது தண்டைச் சுற்றி கீழ்நோக்கி வளரும். இவை சாய்வாகக் கீழ்நோக்கி வளர்ந்து பெரும் மரங்களுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது. |
இ) கதிர்கோல் வடிவ வேர், பம்பர வடிவ வேர் ஒற்றுமை:
| கதிர்கோல் வடிவ வேர் | பம்பர வடிவ வேர் | |
| 1. | இவைகள் ஆணி வேரின் உருமாற்றமாகும். | இவைகள் ஆணி வேரின் உருமாற்றமாகும். |
| 2. | உணவை சேமிப்பதால், இவைகள் சேமிப்பு வேர்கள் எனப்படுகிறது. | உணவை சேமிப்பதால், இவைகள் சேமிப்பு வேர்கள் எனப்படுகிறது. |
வேற்றுமை:
| கதிர்கோல் வடிவ வேர் | பம்பர வடிவ வேர் | |
| 1. | இவ்வேரின் நடுப்பகுதி பருத்தும், இரு முனைகளை நோக்கி குறுகி காணப்படுகிறது. | இவ்வேரின் மேல்பகுதி மிகப்பருத்தும் நுனியில் திடீரென வால்போல் குறுகியிருக்கிறது. |
| 2. | கதிர் போன்ற வடிவத்தைப் பெற்றுள்ளது. | பம்பரம் போன்ற வடிவத்தைப் பெற்றுள்ளது. |
| 3. | எ.கா. முள்ளங்கி (ரஃபானஸ் சட்டைவஸ்) | எ.கா: பீட்ரூட் போன்ற வடிவத்தைப் பெற்றுள்ளது. |
11.
| வரம்பற்ற கிளைத்தல் | வரம்புடைய கிளைத்தல் | |
| 1. | இவ்வகை தண்டு கிளைத்தலில் நுனி மொட்டு தடையின்றி தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்று பல பக்கவாட்டுக் கிளைகளை உருவாக்குகிறது. |
இவ்வகை தண்டு கிளைத்தலில் நுனி மொட்டு சிலகால வளர்ச்சிக்குப் பிறகு நின்றுவிடுகிறது. பின்னர் தாவரத்தின் வளர்ச்சியானது பக்க ஆக்குதிசுக்களின் மூலமாகவோ, மொட்டுகளின் நடைபெறுகிறது. |
| 2. | எ.கா. பாலியால்தியா, ஸ்வைடீனியா, ஆன்ட்டியாரிஸ் | எ.கா. சைகஸ். |
12.
| வேர் ஏறு கொடிகள் | தண்டு ஏறு கொடிகள் | |
| 1. | தாவரங்களின் கணுக்களிலிருந்து தோன்றும் வேற்றிட வேர்களின் மூலம் ஆதாரத்தைப் பற்றி தாவரங்கள் ஏறுகின்றன. |
இவ்வகை தாவரங்களில் ஆதாரத்தைப் பற்றி ஏறுவதற்கான சிறப்புத் தகவமைப்புகள் கிடையாது. எனவே தண்டு ஆதாரத்தைச் சுற்றி பின்னி வளர்கின்றன. |
| 2. | எ.கா. பைப்பர் பிடல் பைப்பர் நைக்ரம் ஹீடிரா ஹீடிரா ஹெலிக்கஸ், போதாஸ் |
எ.கா. ஐபோமியா, கண்வால்வுலஸ், டாலிகஸ், கிளைட்டோரியா குவிஸ் குவாலிஸ். |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards