11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/08/2019
கார மற்றும் காரமண் உலோகங்கள்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றுள் சரியானது எது?
லித்தியம் நைட்ரஜனுடன் நேரடியாக இணைந்து Li3N ஐ தருகிறது.
மெக்னீசியம் நைட்ரஜனுடன் நேரடியாக இணைந்து Mg3N ஐ தருகிறது
(அ) மற்றும் (ஆ) சரி
லித்தியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய இரண்டும் பைகார்பனேட்டுகளை உருவாக்குகின்றன.
2.
பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையை கண்டறி.
சுடரில் தனிமங்களால் கொடுக்கப்படும் நிறங்கள் கீழே தரப்பட்டுள்ளன.அவற்றில் பொருந்தாததை கண்டறி.
பேரியம் - பச்சை ஆப்பிள் நிறம்
ரேடியம் - கிரிம்சன்சிவப்பு
கால்சியம் செங்கல் சிவப்பு நிறம்
ஸ்டிரான்சியம் - நீல நிறம்
3.
பின்வருவனவற்றுள் எது பாரீஸ் சாந்து என அறியப்படுகிறது?
CaSO4.2H2O
CaCl2
CaSO4
CaSO4.\(\frac{1}{2}\)H2O
4.
கடல் நீரில் அதிக அளவில் கரைந்துள்ள மூன்றாவது தனிமம்
பெரிலியம்
பேரியம்
கால்சியம்
மெக்னீசியம்
5.
பின்வருவனவற்றுள் காரமண் உலோகம் எது?
சோடியம்
கால்சியம்
லித்தியம்
பொட்டாசியம்
6.
CaC2 ஐ வளிமண்டல நைட்ரஜனுடன் சேர்த்து, மின்உலையில் வெப்பப்படுத்தும்போது கிடைக்கும் சேர்மம்.
Ca(CN)2
CaNCN
CaC2N2
CaNC2
7.
நைட்ரஜன், CaC2 உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள் (NEET-Phase I)
Ca(CN)3
CaN2
Ca(CN)2
Ca3N2
8.
லித்தியம் எதனுடன் மூலைவிட்ட தொடர்பு உடையது?
சோடியம்
மெக்னீசியம்
கால்சியம்
அலுமினியம்
9.
சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது?
ஆல்கஹால்
நீர்
மண்ணெண்ணெய்
இவற்றில் ஏதுமில்லை
10.
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?
கார உலோக நேரயனிகளில், Li+ அயனியின் நீரேற்றும் தன்மையின் அளவு மிகக் குறைவு.
KO2 ல் K ன் ஆக்ஸிஜனேற்ற எண் +1.
Na/Pb உலோக கலவையை உருவாக்கசோடியம் பயன்படுகிறது.
MgSO4 நீரில் எளிதில் கரையும்.
11.
கார உலோகங்களின் பயன்களை வரிசைப்படுத்துக.
12.
பின்வருவனவற்றை குறித்து சிறு குறிப்பு எழுதுக.
(i) கார உலோகங்களின் எலக்ட்ரான் அமைப்பு
(ii) கார உலோகங்களின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற
13.
பாரீஸ் சாந்தின் பயன்களைக் குறிப்பிடுக
14.
சோடியம் கார்பனேட்டை தயாரிக்கும் சால்வே முறையில் நிகழும் வேதிவினைகளின் சமன்பாடுகளை எழுதுக
15.
நீரில் சோடியம் ஹைட்ராக்சைடின் கரைதிறன், சோடியம் குளோரைடின் கரைதிறனை விட மிக அதிகம் ஏன்?
16.
சோடியத்தின் ஆனா ஈத்தைனின் வினையைத் தருக.
17.
பாலைவன ரோஜா என்பது எது?ஏன்?
18.
பெரிலியத்தின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் என்ன?உன் பதிலை விளக்குக.
19.
கார உலோகங்களை விட கார மண் உலோகங்கள் கடினமானவை ஏன்?
20.
முதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது – உறுதிப்படுத்து.
21.
லித்தியத்தின் தனித்துவமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள மாற்ற தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.
22.
கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் உயிரியல் முக்கியத்துவத்தை சுருக்கமாக விவரி
23.
பெரிலியம் மற்றும் அலுமினியத்திற்குமான ஒத்தத் தன்மைகளை விவரிக்க
1.
(c)
(அ) மற்றும் (ஆ) சரி
2.
(d)
ஸ்டிரான்சியம் - நீல நிறம்
3.
(d)
CaSO4.\(\frac{1}{2}\)H2O
4.
(d)
மெக்னீசியம்
5.
(b)
கால்சியம்
6.
(b)
CaNCN
7.
(c)
Ca(CN)2
8.
(b)
மெக்னீசியம்
9.
(c)
மண்ணெண்ணெய்
10.
(a)
கார உலோக நேரயனிகளில், Li+ அயனியின் நீரேற்றும் தன்மையின் அளவு மிகக் குறைவு.
11.
கார உலோகங்களின் பயன்கள்:
உலோக லித்தியமானது, பயனுள்ள உலோக கலவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.எடுத்துக்காட்டாக இது லெட் உடன் சேர்ந்து, மோட்டார் எஞ்சின்களில் பயன்படும் வெண்மை உலோக (white metal)பேரிங்குகள், அலிமினியத்துடன் சேர்ந்து ஆகாய விமான பாகங்கள் மற்றும் மெக்னீசீயதுடன் சேர்ந்து கேடயங்கள் ஆகியன தயாரிக்கப்படுகின்றன.இது வெப்ப உட்கரு வினைகளில் பயன்படுகிறது.
(i) லித்தியம் மின்வேதிக்கலன்கள் செய்யவும் பயன்படுகிறது.
(ii) லித்தியம் கார்பனேட் மருந்துகளில் பயன்படுகிறது.
(iii) Pb(Et)4 மற்றும் Pb(Me)4 ஆகியவற்றை தயாரிக்க தேவைப்பதேவைப்படும் Na/Pb உலோக கலவை தயாரிக்க சோடியம் பயன்படுகிறது.இந்த கரிம லெட் சேர்மங்கள் சில காலங்களுக்கு முன்னர் பெட்ரோலுடன் சேர்க்கப்படும் இடிப்பு எதிர்ப்பு (anti-knock) சேர்மங்களாக பயன்பட்டன.தற்காலத்தில் லெட் இல்லாத பெட்ரோல் பயன்பாட்டில் உள்ளது.
(iv) திரவ சோடியம் அதிவேக ஈணுலைகளில் குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.பொட்டாசியம் ஹைட்ராக்சைடு மென் சோப்புகள் (Soft Soap) தயாரித்தலில் பயன்படுகிறது.மேலும் இது மிகச்சிறந்த கார்பன் டையாக்சைடு உறிஞ்சு பொருளாகவும் பயன்படுகிறது.
(v) சீசியம் ஒளிமின்கலன்களை வடிமைத்தலில் பயன்படுகிறது.
12.
(i)
| தனிமம் | குறியீடு | அணு எண் | எலக்ட்ரான் அமைப்பு |
|---|---|---|---|
| லித்தியம் | Li | 3 | [He]2s1 |
| சோடியம் | Na | 11 | [Ne]3s1 |
| பொட்டாசியம் | K | 19 | [Ar]4s1 |
| ரூபீடியம் | Rb | 37 | [Kr]5s1 |
| சீசியம் | Cs | 55 | [Xe]6s1 |
| ஃபிரான்ஷியம் | Fr | 87 | [Rn]7s1 |
(ii) பொதுவான ஆக்ஸிஐனேற்ற நிலை:இந்த தனிமங்கள் அனைத்தும் அதிக நேரமின்தன்மை கொண்டவையாக உள்ளன.இவைகள் எளிதில் தங்களின் இணைதிறன் கூட்டு எலக்ட்ரானை இழந்து ஒற்றை மின்சுமையுடைய நேர்மின் அயனிகளை (M+) உருவாக்குகின்றன.கார உலோகங்கள் +1 என்ற ஒரே ஒரு ஆக்ஸினேற்ற நிலையை மட்டுமே கொண்டுள்ளன.
13.
1.கட்டுமானத் தொழிலில் அதிக அளவில் பயன்படுகிறது.
2.ஒரு உறுப்பில் எலும்பு அல்லது சுளுக்கு பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நகராமல் இருந்தி வைக்கப் பயன்படுகிறது.
3.பற்சீராக்கும் துறை, அணிகலன்கள் உருவாக்கும் தொழில்,சிலைகள் மற்றும் வார்ப்புகள் உருவாக்குவதில் இது பயன்படுகிறது.
14.
சால்வே வினையுடன் தொடர்புடைய சமன்பாடுகள் பின்வருமாறு :
\(2NH_{3}+H_{2}O+CO_{2} \rightarrow (NH_{4})_{2}CO_{3}\)
\((NH_{4})_{2}CO_{3}+H_{2}O+CO_{2} \rightarrow 2NH_{4}HCO_{3}\)
\(2NH_{4}HCO_{3}+NaCl \rightarrow NH_{4}Cl+NaHCO_{3}\)
\(2NaHCO_{3} \rightarrow Na_{2}CO_{3}+CO_{2}+H_{2}O\)
15.
NaCl கரைசலின் ΔH = +3.9 KJ/mol
NaOH கரைசலின் ΔH = 44.5 KJ/mol
NaCl ன் ΔH0 மரிப்பு = +787.6 KJ
நீரேற்ற என்தால்பி = -784.1 KJ
ஃ கரைசலின் ΔH மரிப்பு = +787.6-784.1=+3.5 KJ
NaCl ன் கரைதிறன் சிறிதளவு வெப்பமாறுபட்டால் நிகழும்.எனவே NaCl ன் கரைதிறன் NaOH கரைதிறனை விட குறைவு.
16.
\(H-C\equiv C-H\overset { Na }{ \longrightarrow } H-C\equiv C-Na\overset { Na }{ \longrightarrow } Na-C\equiv C-Na\)
17.
சில நேரங்களில்,ஜிப்சம் மலர்களின் இதழ்களை ஒத்த வடிவமைப்பில் கிடைக்கப் பெறுகிறது.இவ்வகை 'பாலைவன ரோஜா' என அழைக்கப்படுகிறது.இது பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளில் உண்டாகிறது.
18.
i.சிறிய உருவளவு மற்றும் அதிக முனிவுறுத்தும் திறன்
ii.அதிக எலக்ட்ரான் கவர் தன்மை மற்றும் அயனியாக்கும் ஆற்றல்
iii.இணை திற கூட்டில் காலியான d-ஆர்பிட்டால் காணப்படுவதில்லை.
19.
1.கார மண் உலோகங்களின் அணு ஆரம் சிறியது மற்றும் அதன் அடர்த்தி கார உலோகங்களை விட அதிகம்.
2.கார மண் உலோகங்களின் உலோகப்பிணைப்பு கார உலோகங்களை காட்டிலும் வலிமையானது.
3.எனவேதான் , கார உலோகங்களை விட கார மண் உலோகங்கள் கடினத்தன்மை உடையவை.
20.
1.கார உலோகங்களின் புளூரைடுகள் பின்வரும் கரைதிறன் வரிசையைக் கொண்டுள்ளன.
LiF < NaF < Kf < RbF < CsF
2.LiF ன் கரைதிறன் மிகக்குறைவு.Li+ மற்றும் F- ன் சிறிய உருவளவு காரணமாக மிகக்குறைந்த கரைத்திறனைக் கொண்டுள்ளது.
21.
i.லித்தியத்தின் தனித்துவமான பண்பு
ii.Li+அயனியின் தனித்துவமான பண்பிற்கான காரணங்கள் அதன் மிகச்சிறிய உருவளவு,அதிக முனைவாக்கும் திறன்,அதிக நீரேற்றம் ஆற்றல் மற்றும் d-ஆர்பிட்டால்கள் இல்லாத்தன்மை போன்றவையே ஆகும்.
| லித்தியம் |
தொகுதியிலுள்ள மற்ற தனிமங்கள் |
|---|---|
| i.கடினமானது, ii.அதிக உருகுநிலை iii.மற்றும் கொதிநிலை கொண்டது |
i.மிதுவானவை, |
| iv.குறைவா வினைத்திறன் உடையது v.(எடுத்துக்காட்டாக,இது ஆக்சிஜனுடன் வினைப்பட்டு சாதாரண ஆக்சைடை உருவாக்குகிறது, பெராக்சைடுகளை உருவாக்குவது மிகவும் கடினம்,மேலும் இவற்றின் உயர் ஆக்சைடுகள் நிலைப்புத்தன்மை அற்றவை) |
ivஅதிக வினைதிறன் மிக்கவை |
| vi.நைட்ரஜனுடன் வினைபுரிந்து Li3 ஐ தருகிறது. | v.வினை இல்லை |
| vii.புரோமினுடன் மெதுவாக வினைபுரிகிறது | vi.வீரியத்துடன் வினைபுரிகின்றன. |
| viii.கார்பனுடன் நேரடியாக வினைபுரிந்து அயனி கார்பைடுகளை உருவாக்குகின்றன. ix.எடுத்துக்காட்டாக 2Li+2C⟶Li2+C2 |
viii.கார்பனுடன் நேரடியாக வினைபுரிவதில்லை. ஆனால் கார்பன் சேர்மங்களுடன் வினைபுரிகின்றன. 2Na+C2H2⟶Na2C2+H2 |
| x.இதன் சேர்மங்கள் நீரில் பகுதியளவு கரைகின்றன. | ix.நீரில் நன்கு கரைகின்றன. |
22.
1.உயிர் செயல் முறைகளில் மெக்னீசியம் மற்றும் கால்சியம் மிக முக்கிய
2.ஒரு சராசரி மனித உடலில் 25g மெக்னீசியம் மற்றும் 1200 g கால்சியம் அடங்கியுள்ளது.
கால்சியத்தின் உயிரியல் முக்கியத்துவம்:
1.எலும்பு மற்றும் பற்களில் முக்கிய பகுதிப்பொருளாக கால்சியம் பயன்படுகிறது.
2.கால்சிடோனின் மற்றும் பாரா தைராய்டு ஹார்மோன்களால் இரத்தத்தில் இதன் அளவு பராமரிக்கப்படுகிறது.
3.இரத்தத்தில் கால்சியத்தின் குறைபாட்டினால் இரத்தம் உறைய அதிக நேரம் ஆகிறது.
4.மேலும் இது தசைச் சுருக்கத்திற்கும் முக்கிய காரணமாகிறது.
மெக்னீசியத்தின் உயிரியியல் முக்கியத்துவம்:
1.நொதிகள் வினையூக்கிகளாகச் செயல்படும் உயிர் வேதி வினைகளில் மெக்னீசியம் முக்கிய பங்காற்றுகிறது.
2.பாஸ்பேட் பரிமாற்றம் மற்றும் ஆற்றல் வெளிப்படுத்துவதால் ATP யை பயன்படுத்தும் நொதிகளில் இது இணைக்காரணியாகவும் செயல்படுகிறது.
3.இது DNA தொகுத்தலுக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் மிக முக்கியமானதாகும்.
4.நம் உடலில் மின் பகுதிகளை சமன்படுத்தும் பனியிலும் இது பயன் படுகிறது.
5.இதன் குறைபாடு வலிப்பு மற்றும் நரம்புத்தசை இணைப்பில் எரிச்சல் உருவாக காரணமாக அமைகிறது.
6.ஒளிச்சேர்க்கையில் முக்கியப்பங்கு வகிக்கும் முக்கிய நிறமியான குளோரோபில் மெக்னீசியத்தைக் கொண்டுள்ளது.
23.
1.பெரிலியமும், அலுமினியமும் மூலைவிட்டத் தொடர்பினைக் கொண்டுள்ளது.இந்நேர்வில், இந்த அயனிகளின் உருவளவு.
\(r_{Be^{2+}}=0.45 \overset{0}{A}\)
\(r_{Al^{3+}}=0.54 \overset{0}{A}\)
2.ஓரலகு பரப்பில் அவைகளின் அடர்த்தியானது நெருக்கமான மதிப்புகளை பெற்றுள்ளன.
Be2+ = 2.36
Al3+ = 2.50
3. இவைகளின் எலக்ட்ரான் கவர்தன்மை மதிப்புகளும் சமம்.
Be=1.5
Al=1.5
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards