11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கார்பன் நேர் அயனியில், நேர்மின்சுமை கொண்ட கார்பனின் இகைகலப் பாதல்
SP2
SP3
SP3 d
இவற்றுள் எதுவுமில்லை
2.
கரிம வேதி வினைகளில் C-C பிணைப்பின் சீரான பிளவினால் உருவாவது
அல்கீன் தனி உறுப்புகள்
ஆல்கேன் தனி உறுப்புகள்
ஆல்கைல் தனி உறுப்புகள்
ஆல்கைன் தனி உறுப்புகள்
3.
கார்பன் நேர் அயனியின் வடிவமைப்பு
நேர் கோடு
நான்முகி
தள அமைப்பு
பிரமிடு
4.
பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருளாக செயல்படாதது எது?
ROH
ROR
PCl3
BF3
5.
C-C பிணைப்பின் சீரற்ற பிளவினால் உருவாவது
தனி உறுப்பு
கார்பன் எதிரயனி
கார்பன் நேர் அயனி
கார்பன் நேர் அயனி மற்றும் கார்பன் எதிரயனி
6.
பின்வருவனவற்றுள் அதிக நிலைப்புத் தன்மையைப் பெற்றுள்ள கார்பன் நேரயனி எது?
Ph3C-+
CH3-CH2-
(CH3)2-CH
CH2= CH - CH2
7.
-I விளைவினை காட்டுவது
-Cl
-Br
both (a) and (b)
-CH3
8.
பின்வருவனவற்றுள் மீசோமெரிக் விளைவிற்கு உட்படாத சேர்மம் எது?
C6H5OH
C6H5Cl
C6H5NH2
C6H5\(\stackrel{+}{N}\)H3
9.
அதிக +I விளைவினை பெற்றுள்ள தொகுதி எது?
CH3-
CH3-CH2-
(CH3)2-CH-
(CH3)3-C-
10.
ஒரு சகப்பிணைப்பின் சீரான ஒரே மாதிரியான பிளவினால் உருவாவது
எலக்ட்ரான் கவர் பொருள்
கருக்கவர் பொருள்
கார்பன் நேர் அயனி
தனி உறுப்பு
11.
கருக்கவர் திறனின் இறங்கு வரிசை
OH- > NH2- > -OCH3 > RNH2
NH2- > OH- > -OCH3 > RNH2
NH2- > CH3O- > OH- > RNH2
CH3O- > NH2- > OH- > RNH2
12.
பென்சைல் கார்பன் நேர் அயனியின் இனக்கலப்பாதல் என்ன?
sp2
spd2
sp3
sp2d
13.
எலக்ட்ரோமெரிக் விளைவினை விளக்குக.
14.
தூண்டல் விளைளைவினை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
15.
கருக்கவர் பொருள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள் என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் தகுந்த உதாரணம் தருக
16.
பின்வருவன பற்றி சிறு குறிப்பு வரைக
(அ) உடனிசைவு
(ஆ) பிணைப்பில்லா உடனிசைவு
17.
பிணைப்பில்லா உடனிசைவு ஒரு உதாரணத்துடன் விளக்கு.
18.
உடனிசைவு அல்லது மீசோமெரிக் விளைவை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.
19.
தூண்டல் விளைவின் காரணமாக கரிம சேர்மத்தின் பின்வரும் பண்புகளில் ஏற்படும் மாற்றத்தினை விளக்குக.
(i) வினைதிறன்
(ii) கார்பாக்சிலிக் அமிலங்களின் அமிலத்தன்மை.
20.
ஒரே மாதிரியான பிளைவு பற்றி விளக்குக.
1.
(a)
SP2
2.
(c)
ஆல்கைல் தனி உறுப்புகள்
3.
(c)
தள அமைப்பு
4.
(d)
BF3
5.
(c)
கார்பன் நேர் அயனி
6.
(a)
Ph3C-+
7.
(c)
both (a) and (b)
8.
(d)
C6H5\(\stackrel{+}{N}\)H3
9.
(d)
(CH3)3-C-
10.
(d)
தனி உறுப்பு
11.
(b)
NH2- > OH- > -OCH3 > RNH2
12.
(a)
sp2
13.
1. நிறைவுறா சேர்மங்களில் (>C=C<, >C=O, போனறவற்றை பெற்றுள்ள சேரமங்ககளில்) தாக்கும் வினைபொருள் முன்னிலையில் நடைபெறும் ஒரு தற்காலிகமான விளைவு எலக்ட்ரோமெரிக் விளைவு எனப்படும்.
2. கார்பனைல் (>C=O) தொகுதியைக் கொண்டுள்ள ஒரு சேர்மம் மற்றும் ஆல்கீன்களைப் போன்ற (>C=C<) நிறைவுறாத் தன்மையைப் பெற்றுள்ள ஒரு சேர்மம் ஆகிய இரண்டு எடுத்துக்கட்டுகளைக் கருதுவோம்
3. கருக்கவர் பொருள், கார்பனைல் சேர்மத்தை அணுகும் போது, C மற்றும் 'O' அணுக்களுக்கிடையே காணப்படும் எலக்ட்ரான்கள் அக்கணத்தில் அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய 'O' அணுவிற்கு மாற்றப்படுகிறது.
4. இதன் விளைவாக கார்ப்பனானது எலக்ட்ரான் பற்றாக்குறையுடைய தன்மையினைப் பெறுகிறது.
5. எனவே, உள்வரும் கருக்கவர் பொருள் கார்பனைல் கார்பனுடன் புதிய பிணைப்பு ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழல் உருவாகிறது.

6. மாறாக H+ போன்ற \(\pi \) எலக்ட்ரான் கவர் பொருள் ஆல்கீனை அணுகும் போது, எலக்ட்ரான்கள் அக்கணத்தில் எலக்ட்ரான் கவர் பொருளுக்கு மாற்றப்பட்டு கார்பனுக்கும் ஹைட்ரஜனுக்கும் இடையே புதிய பிணைப்பு உருவாகிறது.
7. இதன் விளைவாக மற்றொரு கார்பன் நேர்மின் சுமையுடையதாகிறது.

14.
1. ஒரு மூலக்கூறில், அருகாமையில் உள்ள பிணைப்பு, அணு அல்லது தொகுதியினால் அம் மூலக்கூறில் உள்ள ஒரு சகப்பிணைப்பின் முனைவாதலில் ஏற்படும் மாற்றம் தூண்டல் விளைவு என வரையறுக்கப்படுகிறது
2. இது ஒரு நிலையான நிகழ்வாகும்.
3. ஈத்தேன் மற்றும் எத்தில் குளோரைடினை எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு தூண்டல் விளைவினை நாம் விளக்கலாம்.
4. ஈத்தேனில் காணப்படும் C - C பிணைப்பு முனைவற்றது ஆனால் எத்தில் குளோரைடில் காணப்படும் C - C பிணைப்பு முனைவுத்தன்மை உடையது.
5. கார்பனைக் காட்டிலும் குளோரினானது அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடையது.
6. எனவே, C - CI பிணைப்பில் உள்ள சகப்பிணைப்பு எலக்ட்ரான்களை குளோரின் தன்னை நோக்கி ஈர்க்கும் பண்பினைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக CI ன் மீது சிறிய எதிர்மின் தன்மையும் அதோடு இணைக்கப்பட்டுள்ள C ன் மீது சிறிய நேர்மின் தன்மையும் ஏற்படும்.
7. இதனை ஈடு செய்யும் பொருட்டு, C1 ஆனது அதற்கும் C2 விற்கும் இடைப்பட்ட எலக்ட்ரான் இணையினை தன்னை நோக்கிக் கவர்கிறது.
8. இத்தகைய முனைவாதல் தூண்டல் விளைவு என அழைக்கப்படுகின்றது.
9. இவ்விளைவானது அருகாமை பிணைப்புகளில் அதிகளவு உணரப்படுகிறது.
10. எனினும் மின்சுமை பிரிப்பான் அளவானது C1 லிருந்து நகர்ந்து செல்லச் செல்ல குறைகிறது.
11. மேலும் இவ்விளைவு அதிகபட்சமாக இருகார்பன் அணுக்கள் வரை உணரப்படுகிறது.
12. தூண்டல் விளைவிற்கு காரணமான தொகுதியிலிருந்து நான்கு பிணைப்புகளுக்கு அப்பால் இவ்விளைவு மிக குறைவாதலால் முக்கியத்துவமற்றதாகிறது.

15.
கருக்கவர் பொருள்:
1. நேர்மின் தன்மையுடைய மையத்தின் மீது அதிக நாட்டமுடைய வினைக் காரணிகள் கருக்கவர் பொருள்கள் எனப்படும்.
2. இக்கருக்கவர் பொருள்கள் பிணைப்பில் ஈடுபடா எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள அணுக்களைப் பெற்றிருப்பதால் நேர்மின் தன்மையுடைய பகுதியினைப் பெற்றுள்ள அணுவின் மீது நாட்டத்தினைப் பெற்றிருப்பதுடன் அதனுடன் எலக்ட்ரானைப் பங்கீடு செய்து சகப்பிணைப்பினை உருவாக்குவதன் மூலம் நிலைப்புத்தன்மையைப் பெறுகின்றன.
3. மேலும் இவைகள் வழக்கமாக எதிர் மின் சுமையுடைய அயனிகளாகவோ அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனித்த எலக்ட்ரான் இரட்டையினைக் கொண்டுள்ள நடுநிலை மூலக்கூறுகளாகவோ இருக்கும்.
3. அனைத்து லூயி காரங்களும் கருக்கவர் பொருளாக செயல்படும் தன்மையுடையவை.
| வகைகள் | உதாரணம் | எலக்ட்ரான் அடர்த்தி மிகுந்த பகுதி |
|---|---|---|
| பங்கிப்படாத எலக்ட்ரான் இரட்டையினைப் பெற்றுள்ள நடுநிலை மூலக்கூறுகள் | NH3 மற்றும் RNH2 | N: |
| H2O, ROH R-O-R | :O: | |
| H2S, RSH | :S: | |
| எதிர்மின்சுமை பெற்றுள்ள கருக்கவர் பொருள்கள் | CI-, Br-, I- | X- |
| OH-, RO-, RCOO- | O- | |
| CN- | N- |
எலக்ட்ரான் கவர் பொருள்:
1. எலக்ட்ரான் அடர்வுமிகு மையத்தினை நோக்கியோ அல்லது எதிர்மின் சுமையை நோக்கியோ கவரப்படும் வினைப் பொருள்கள் எலக்ட்ரான் கவர் பொருள்கள் எனப்படும்.
2. இவைகள் நேர்மின் சுமையுடைய அயனிகளாகவோ அல்லது எலக்ட்ரான் பற்றாக்குறை உடைய நடுநிலை மூலக்கூறுகளாகவோ இருக்கலாம்.
3. அனைத்து லூயி அமிலங்களும் எலக்ட்ரான் கவர் பொருளாக செயல்படும் தன்மையுடையவை.
4. SnCI4 போன்ற மற்றவைகளிலிருந்து பெறும் எலக்ட்ரானை ஏற்கும் காலியான d-ஆர்பிட்டால்களைக் கொண்டுள்ள நடுநிலை மூலக்கூறுகளும் எலக்ட்ரான் கவர் பொருளாக செயல்படும் தன்மையுடையவை.
| வகை | எடுத்துக்காட்டு | எலக்ட்ரான் பற்றாக்குறை பகுதி |
|---|---|---|
| நடுநிலை எலக்ட்ரான் கவர்பொருள் | CO2, : CCI2 | C |
| AICI3, BF3, FeCI3 | உலோகம் (M) | |
| நேர்மின் சுமையுடைய எலக்ட்ரான் கவர்பொருள் | R+ (கார்பன் நேர் அயனி) | C+ |
| ஆல்கைல் ஹாலைடுகள் (RX) | X+ | |
| புரோட்டான் (H+) | H+ | |
| H3O+, NO+ | O+ | |
| +NO2 | N+ |
16.
அ) உடனிசைவு:
1. சில கரிமச் சேர்மங்களில் இரட்டைப் பிணைப்பு தகுந்த இடங்களில் காணப்படும் நிலையில் இவ்விளைவு உணரப்படுகிறது.
2. பிணைப்பு மற்றும் தனித்த இரட்டை ஏலக்ட்ரான்களின் இட அமைப்பில் மட்டுமே மாறுபடும் ஒன்றிற்கும் மேற்பட்ட வடிவமைப்புகளின் மூலம் குறிப்பிட்ட சில கரிமச் சேர்மங்களைக் குறிப்பிட இயலும்.
3. அத்தகைய அமைப்புகள் உடனிசைவு அமைப்புகள் எனவும். இந்நிகழ்வு உடனிசைவு எனவும் அழைக்கப்படுகிறது.
(ஆ) பிணைப்பில்லா உடனிசைவு:
1. \(\sigma \) - பிணைப்பு எலக்ட்ரான்களின் உள்ளடங்காத தன்மை பிணைப்பில்லா உடனிசைவு என அழைக்கப்படுகிறது.
2. \(\sigma \) - பிணைப்பில் உள்ள எலக்ட்ரான்கள் அதன் அருகாமையில் உள்ள பிணைப்பில் ஈடுபடா P ஆர்பிட்டால் அல்லது \(\sigma \)*, \(\pi\)* போன்ற எதிர்பிணைப்பு ஆர்பிட்டால்களுடன் இடைவினை புரிவதால் ஏற்படும் ஒரு தனித்த நிலைப்புத்தன்மை பெறச் செய்யும் விளைவு பிணைப்பில்லா உடனிசைவு எனப்படும்.
3. எலக்ட்ரோமெரிக் விளைவைக் போன்று அல்லாமல் இவ்விளைவு நிலையான ஒன்றாகும்.
17.
1. \(\sigma \) - பிணைப்பு எலக்ட்ரான்களின் உள்ளடங்காத தன்மை Hyper Conjucation என அழைக்கப்படுகிறது.
2. \(\sigma \) - பிணைப்பில் உள்ள எலக்ட்ரான்கள் (வழக்கமாக C - H (அல்லது) C - C பிணைப்பு எலக்ட்ரான்கள்) அதன் அருகாமையில் உள்ள பிணைப்பில் ஈடுபடா p ஆர்பிட்டல் அல்லது \(\sigma \)*, \(\pi\)* போன்ற எதிர்பிணைப்பு ஆர்பிட்டால்களுடன் இடைவினை புரிவதால் ஏற்படும் ஒரு தனித்த நிலைப்புத்தன்மை பெறச் செய்யும் விளைவு Hyper Conjucation எனப்படும்.
3. எலக்ட்ரோமெரிக் விளைவைப் போன்று அல்லாமல் இவ்விளைவு நிலையான ஒன்றாகும்.
4. இவ்விளைவு நிகழ \(\alpha \) C - H தொகுதி அல்லது அணுக்களின் மீதுள்ள தனித்த எலக்ட்ரான்களைப் பெற்றுள்ள N, O போன்றவை \(\pi\) பிணைப்பிற்கு அருகாமையில் (sp2 இனக்கலப்பு கார்பனுக்கு) அமைய வேண்டும்.
5. - பிணைப்பு ஆர்பிட்டால் அல்லது தனித்த இரட்டை எலக்ட்ரான்களில் பெற்றுள்ள ஆர்பிட்டால் ஆனது அருகாமையில் உள்ள ஆர்பிட்டால் அல்லது P- அர்ப்பிட்டாலுடன் மேற்பொருத்துவதால் இவ்விளைவு நிகழ்கிறது.
6. எடுத்துக்காட்டு 1:
7. புரப்பீனில்,மெத்தில் தொகுதியின் (C-H) '\(\sigma \)' பிணைப்பு எலக்ட்ரான்கள் இரட்டைப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள கார்பனின் \(\pi\) -ஆர்பிட்டாலுக்கு கீழே குறிப்பிட்டுள்ளவாறு இசைவுற இயலும்.

8. மேற்கட்டுள்ள அமைப்புகளில், '\(\sigma \)' பிணைப்பு எலக்ட்ரான்கள் உடனிசைவில் ஈடுபடுகின்றன மேலும் இத்தகைய உடனிசைவு நிகழ பிணைப்பு பிளவுறுகிறது.
9. இதன் விளைவாக மூன்று உடனிசைவு வடிவங்களில் புரப்பீனைக் குறிப்பிட இயலும் (வடிவம் (II), (III) மற்றும் (IV) இவ்வடிவங்களால், \(\alpha\) - கார்பன் மற்றும் ஒரு ஹைட்ரஜனுக்கிடையே எத்தகைய பிணைப்பும் காணப்படுவதில்லை.
10. எனவே இவ்விளைவு பிணைப்பில்லா உடனிசைவு விளைவு (no bond resonance) அல்லது பேக்கர் - நாதன் விளைவு புரப்பீனின் பிணைப் பில்லா உடனிசைவு வடிவங்கள் என அழைக்கப்படுகிறது. வடிவம் (II), (III) மற்றும் (IV) ஆகியன முனைவுத் தன்மை உடையவை.
18.
1. எடுத்துக்காட்டாக, பென்சீன் மற்றும் ஒன்று விட்டு ஒன்று இரட்டைப் பிணைப்பை பெற்றுள்ள 1, 3 - பியூட்டா டையீன் போன்றவற்றின் வடிவங்களை ஒரே ஒரு வடிவமைப்பினைக் கொண்டு குறிப்பிட இயலாது.
2. அச்சேர்மங்களின் கண்டறியப்பட்ட பண்புகளை ஒரு உடனிசைவு கலப்பு (rosonance hybrid) அமைப்பின் மூலம் விளக்க முடியும்.
3. 1., 3 பியூட்டா டையீனில் C2 - C3 பிணைப்பிற்கு இடைப்பட்ட தொலைவினைக் காட்டிலும்
4. C1 - C2 மற்றும் C3 - C4 ஆகிய பிணைப்புகளுக்கு இடைப்பட்ட தொலைவானது. குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
5. ஆனால் மேற்கண்டுள்ள அனைத்து பிணைப்புகளின் பிணைப்பு நீளமும் சமமாக உள்ளது.
6. C1-C2 மற்றும் C3-C4 ஆகியவற்றிற்கிடையே உள்ளடங்கியுள்ள \(\pi\) பிணைப்புகள் காணப்படும் ஒரு எளிய அமைப்பின் மூலம் மேற்கண்டுள்ள பண்பினை விளக்க இயலாது.
7. உண்மையில் \(\pi\) எலக்ட்ரான்கள் கீழ்க்கொண்டுள்ளவாறு உள்ளடங்காத் தன்மையின்மைப் பெற்றுள்ளன.

8. மேற்கண்டுள்ள வடிவங்கள் உடனிசைவு அமைப்புகள் என அழைக்கப்படுகின்றன.
9. உண்மையான வடிவமைப்பு மேற்கண்டுள்ள மூன்று உடனிசைவு அமைப்புகளுக்கு இடைப்பட்டதாக அமையும் அது உடனிசைவு கலப்பு என அழைக்கப்படுகிறது அதனை பின்வருமாறு குறிப்பிடலாம்.

19.
(i) வினைதிறன்:
1. ஹாலஜன்களைப் போன்ற அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடைய அணு ஒரு கார்பனுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது அது C-X பிணைப்பினை முனைவுள்ளதாக்குகிறது.
2. இத்தகைய நேர்வுகளில் வினையின் போது உள்வரும் கருக்கவர் பொருளானது முனைவுற்ற கார்பனை தாக்குவதற்கு சாதகமான சூழலை ஹாலஜனின் - I விளைவு ஏற்படுத்துகிறது.
3. எனவே வினைத்திறன் அதிகரிக்கின்றது.

4. கார்பனைல் கார்பனுக்கு அருகில் - I தொகுதி இணைக்கப்பட்டுருப்பின், அத்தொகுதி, கார்பனைல் கார்பன் மீதான எலக்ட்ரான் அடர்த்தியினைக் குறைக்கிறது.
5. எனவே கருக்கவர் சேர்க்கைவினையின் வேகம் அதிகரிக்கின்றது.
(ii) கார்பாக்சிலிக் அமிலங்களின் அமிலத்தன்மை:
1. கார்பாக்சிலிக் அமிலத் தொகுதிக்கு அருகில் உள்ள கார்பனுடன் ஹாலஜன் இணைக்கப்படும் போது, ஹாலஜனின் - I விளைவின் காரணமாக பிணைப்பு எலக்ட்ரான்களை தன்னை நோக்கி கவர்வதால் H+ அயனியாதல் எளிதாகிறது.
2. குளோரோ அசிட்டிக் அமிலங்களின் வலிமையின் வரிசை.
3. CCI3 COOH > CHCI2 COOH > CH2 CICOOH > CH3 COOH என அமைகிறது.

4. கார்பாக்சில் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள தொகுதியின் - I விளைவு அதிகரிக்க, அதிகரிக்க அமிலத்தின் வலிமையும் அதிகரிக்கின்றது.
20.
1. இத்தகையச் செயல்முறையில், சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரு அணுக்கள் தலா ஒரு எலக்ட்ரானை பெறும் வகையில் சகப்பிணைப்பு சீராக பிளக்கப்படுகிறது. இப்பிளவு செயல்முறை ஒரு முனை அம்புக்குறியால் (மீன்முள் அம்புக்குறி) குறிப்பிடப்படுகிறது.
2. அதிக வெப்ப நிலை அல்லது uv ஒளி போன்றவற்றின் முன்னிலையில், ஏறத்தாழ சமமான எலக்ட்ரான் கவர்தன்மை கொண்டுள்ள அணுக்களுக்கிடையேயான முனைவற்ற சகப்பிணைப்பைக் கொண்டுள்ள சேர்மங்களில் இவ்வகை பிளவு ஏற்படுகின்றது.
3. இத்தகைய மூலக்கூறுகளில், பிணைப்பு பிளவானது தனி உறுப்புகளை (free radicals) உருவாக்குகிறது.
4. இவற்றின் ஆயுட்காலம் மிகவும் குறைவு மேலும் இவைகள் அதிக வினைத்திறன் உடையவை.
5. வினைக்கு உட்படும் பொருளில் ஒரே மாதிரியான சீரான பிணைப்பு பிளவினை ஊக்குவிக்கும் வினைப் பொருள்கள் தனிஉறுப்பு துவக்கி (free radical initiator) என அழைக்கப்படுகின்றன.
6. எடுத்துக்காட்டாக, பலபடியாக்கல் வினைகளில், அசோபிஸ் ஐசோபியூட்ரோ நைட்ரைல் (AIBN) மற்றும் பென்சாயில் பெராக்ஸைடு போன்ற தனிஉறுப்பு துவக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

7. நடுநிலைத் தன்மை உடைய ஒற்றை தனித்த இணையாகாத எலக்ட்ரானைக் கொண்டுள்ள தனி உறுப்பானது அதிக நிலைப்புத்தன்மை அற்றது.
8. ஒரு எலக்ட்ரானை ஏற்றுக் கொண்டு நிலைப்புத் தன்மை பெறும் இயல்பினைக் கொண்டுள்ளது.
9. கரிம வேதி வினைகளில் C-C பிணைப்பின் சீரான பிளவினால் ஆல்கைல் தனிஉறுப்புகள் உருவாகின்றன.
10. ஆல்கைல் தனி உறுப்புகளின் நிலைப்புத் தன்மை வரிசை பின்வருமாறு அமையும்.
11. C(CH3)3 > CH(CH3)2 > CH2CH3 > CH2CH3 > CH3
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards