11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
76.6% கார்பன் 6.38 % ஹைட்ரஜன், மீத சதவீதம் ஆக்ஸிஜனையும் கொண்ட சேர்மத்தின் எளிய விகித வாய்பாடு, மூலக்கூறு வாய்பாடு ஆகியவற்றைக் காண்க. சேர்மத்தின் ஆவி அழுத்தம் 47
2.
ஈத்தேன் எரிதல் வினையின் முடிவில் 44 கிராம் CO2 (g) வாயுவை உருவாக்கத் தேவைப்படும் ஈத்தேனின் மோல் எண்ணிகையைக் கணக்கிடுக
3.
பின்வருவனவற்றின் எளிய விகித வாய்ப்பாடுகள் என்ன?
i) தேனில் உள்ள ஃபிரக்டோஸ்(C6H12O6)
ii) தேனீர் மற்றும் குளம்பியில் உள்ள காஃபின் (C8H10N4O2)
4.
மூலக்கூறு நிறைக்கும்,மோலார் நிறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை? கார்பன் மோனாக்ஸைடின் மூலக்கூறு நிறை, மோலார் நிறைகளைக் காண்க
5.
ஒரு தனிம அணுவின் நிறை 6.645 x 10-23 g ஆகும். 0.320 kgல் உள்ள அத்தனிமத்தின் மோல் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
6.
பின்வரும் வினைக்கலவைகளைக் கொண்டு நிகழ்த்தப்படும் வினை x + y + z2 → xyz2 இல் கட்டுப்படுத்தும் காரணிகளைக் காண்க.
அ. 200 x அணுக்கள் + 200 y அணுக்கள் + 50 Z2 மூலக்கூறுகள்
ஆ. 1 மோல் x + 1 மோல்கள் y + 3 மோல்கள் Z2
இ. 50 x அணுக்கள் + 25 y அணுக்கள் + 50 Z2 மூலக்கூறுகள்
ஈ. 2.5 மோல்கள் x + 5 மோல்கள் y + 5 மோல்கள் Z2
7.
273 K மற்றும் 1 atm அழுத்தத்தில், 11.2 L லிட்டர் HCl ஐ உருவாக்கத் தேவையான குளோரினின் கன அளவைக் கண்டறிக.
8.
திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 50 g கால்சியம் கார்பனேட்டை முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன் டைஆக்ஸைடின் கனஅளவு எவ்வளவு?
9.
32 g மீத்தேன் எரிக்கப்படும் போது உருவாகும் நீரின் அளவினைக் கணக்கிடுக
10.
10 மோல் அம்மோனியாவை உருவாக்க எத்தனை மோல் ஹைட்ரஜன் தேவை?
1.
| தனிமம் | சதவீதம் | அணு நிறை | ஒப்பு அணுக்களின் எண்ணிக்கை | எளிய விகிதம் | முழு எண் |
| C | 76.6 | 12 | \(\frac{76.6}{12}=6.38\) | \(\frac{6.38}{1.06}=6\) | 6 |
| H | 6.38 | 1 | \(\frac{6.38}{1}=6.38\) | \(\frac{6.38}{1.06}=6\) | 6 |
| O | 17.02 | 16 | \(\frac{17.02}{16}=1.06\) | \(\frac{1.06}{1.06}=1\) | 1 |
எளிய விகித வாய்ப்பாடு=C6H6O


=\(\frac{2\times47}{94}\)
= 1
மூலக்கூறு வாய்ப்பாடு=(C6H6O) × 1 = C6H6O
2.
ஈத்தேனின் எரிதல் வினைக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
C2H6 + 7/2O2 → 2CO2 + 3H2O
⇒ 2C2H6 + 7O2 → 4CO2 + 6 H2O
4 மோல்கள் CO2 - ஐ உருவாக்க 2 மோல் ஈத்தேன் தேவைப்படுகிறது.
1 மோல் (44 g) CO2 - ஐ உருவாக்க தேவைப்படும் ஈத்தேனின் மோல்களின் எண்ணிக்கை

=1/2 மோல் ஈத்தேன்
=0.5 மோல் ஈத்தேன்
3.
எளிய விகித வாய்ப்பாடுகள்
| சேர்மம் | மூலக்கூறு வாய்ப்பாடு | விகித வாய்ப்பாடு |
|---|---|---|
| ஃபிரக்டோஸ் | C6 H12 O6 | CH2O |
| காஃபின் | C8 H10 N4 O2 | C4 H5 N2 O |
4.
| மூலக்கூறு நிறை | மோலார் நிறை | |
| (i) | ஒரு மூலக்கூறு நிறையானது, ஒரு மூலக்கூறின் நிறைக்கும் ஒருமைப்படுத்தப்பட்ட அணு நிறைக்கும் இடையேயான விகிதம் என வரையறுக்கப்படுகிறது. | 1 மோல் அளவுள்ள ஒரு பொருளின் நிறையானது அதன் மோலார் நிறை என வரையறுக்கப்படுகிறது. |
| (ii) | ஒரு சேர்மத்தின் ஒப்பு மூலக்கூறு நிறையினை அதில் அடங்கியுள்ள அணுக்களின் ஒப்பு அணு நிரைகளின் கூடுதல் மூலம் கணக்கிட இயலும் | ஒரு சேர்மத்தின் மோலார் நிறை என்பது அதில் அடங்கியுள்ள தனிமங்களின் ஒப்பு அணு நிறைகளின் கூடுதலை g mol-1 என்ற அலகில் குறிப்பிடுவதாகும். |
| (iii) | இதன் அலகு u அல்லது amu | இதன் அலகு g mol-1 |
| CO ன் மூலக்கூறு நிறை (1 x C ன் அணுநிறை) + (1 x O ன் அணுநிறை) C = 1 x 12.01 amu = 12.01amu O = 1 x 16.00amu = 16.00 amu = 28.01amu |
CO ன் மோலார் நிறை C = 1 x 12.01 = 12.01 O = 1 x 16.00 = 16.00 = 28.01 g mol-1 |
5.
கொடுக்கப்பட்டவை: ஒரு அணுவின் நிறை= 6.645 × 10–23 g
\(\therefore\)1 மோல் அணுவின் நிறை = 6.645 × 10–23 g × 6.022 × 1023
=40 g
0.320 kg -ல் உள்ள தனிமத்தின் மோல்களின் எண்ணிக்கை = \(\frac{1 mole}{40 g}\times0.320 kg\)
=\(\frac{1 mol\times320g}{40g}\)
=8 mol
6.
x + y + z2 → xyz2
| வினா | வினைபுரிய அனுமதிக்கப்பட்ட வினைபடு பொருட்களின் மோல்களின் எண்ணிக்கை | வினையின் பொழுது வினைப்பட்ட மோல்களின் எண்ணிக்கை | வினை கட்டுப்பாட்டுக் காரணி | ||||
| x | y | z2 | x | y | z2 | ||
| 200 அணுக்கள் | 200 அணுக்கள் | 50 மூலக்கூறுகள் | 50 அணுக்கள் | 50 அணுக்கள் | 50 மூலக்கூறுகள் | z2 | |
| 1 மோல் | 1 மோல் | 3 மோல் | 1 மோல் | 1 மோல் | 1 மோல் | x and y | |
| 50 அணுக்கள் | 25 அணுக்கள் | 50 மூலக்கூறுகள் | 25 அணுக்கள் | 25 அணுக்கள் | 25 மூலக்கூறுகள் | y | |
| 2.5 மோல் | 5 மோல் |
5 மோல் |
2.5 மோல் | 2.5 மோல் | 2.5 மோல் | x | |
7.
HCl உருவாவதற்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடு,
H2 (g) + Cl2 (g) → 2 HCl (g)
கொடுக்கப்பட்ட வெப்ப அழுத்த நிலையில்,
2 மோல் HCl ஐ உருவாக்க, 1 மோல் குளோரின் வாயு தேவைப்படுகிறது.
அதாவது 44.8 லிட்டர் HCl ஐ உருவாக்க, 22.4 லிட்டர் குளோரின் வாயு தேவைப்படுகிறது.
11.2 லிட்டர் HCl ஐ உருவாக்க

= 5.6 லிட்டர் குளோரின் வாயு தேவைப்படும்.
8.
சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
CaCO3 (s) \(\overset { \Delta }{ \longrightarrow } \) CaO(s) + CO2 (g)
மேற்கண்டுள்ள சமன்பாட்டின்படி
1 மோல் (100g) CaCO3 ஐ வெப்பப்படுத்தும் போது 1 மோல் CO2 உருவாகிறது

திட்ட வெப்ப அழுத்த நிலைகளில், 1 மோல் CO2 ஆனது 22.7 லிட்டர் கனஅளவை அடைத்துக் கொள்ளும்.
திட்ட வெப்ப அழுத்த நிலைகளில், 50 g CaCO3 ஐ வெப்பப்படுத்தும் போது

= 11.35 லிட்டர் of CO2 வைத் தருகிறது
9.
CH4(g) + 2O2(g) → CO2(g) + 2H2O(g)
சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டின் அடிப்படையில், 1 மோல் (16 g) CH4 எரிதலின் போது 2 மோல் (2 x 18 = 36 g) நீரினைத் தருகிறது.

32 g மீத்தேன் எரிதலின் போது

= 72 g நீரைத் தருகிறது.
10.
அம்மோனியா உருவாதலுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
N2(g) + 3 H2 (g) → 2 NH3 (g)
மேற்கண்டுள்ள சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டின் அடிப்படையில்,
2 மோல் அம்மோனியாவை உருவாக்க 3 மோல் ஹைட்ரஜன் தேவைப்படுகிறது.
10 மோல் அம்மோனியாவை உருவாக்க

= 15 மோல் ஹைட்ரஜன் தேவை
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards