11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/09/2019
வேதிப் பிணைப்புகள்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம்.
NH4Cl
NH3
NaCl
இவற்றில் ஏதுமில்லை
2.
பின்வரும் மூலக்கூறுகளில் எது கார்பன்டையாக்சைடின் வடிவத்தை ஒத்துள்ளது?
SnCl2
NO2
C2 H2
இவை அனைத்தும்
3.
மீத்தேன், ஈத்தேன், ஈத்தீன் மற்றும் ஈத்தைன் ஆகியவற்றில் உள்ள இனக்கலப்பு ஆர்பிட்டால்களின் s- பண்பு சதவீதங்கள் முறையே
25, 25,33.3,50
50,50,33.3,25
50,25,33.3,50
50,25,25,50
4.
Xe F2 ஆனது ______ உடன் ஒத்த வடிவமுடையது.
SbCl2
BaCl2
TeF2
ICl2 –
5.
ஒத்த இனக்கலப்பு, வடிவம் மற்றும் தனித்த எலக்ட்ரான் இரட்டை எண்ணிக்கையை கொண்ட மூலக்கூறுகள்
SeF4, XeO2 F2
SF4, Xe F2
XeOF4, TeF4
SeCl4, XeF4
6.
IF5 மூலக்கூறின் வடிவம் மற்றும் இனக்கலப்பு
முக்கோண இருபிரமிடு வடிவம், Sp3d2
முக்கோண இருபிரமிடு வடிவம், Sp3d
சதுரபிரமிடு வடிவம், Sp3d2
எண்முகி வடிவம், Sp3d2
7.
பின்வருவற்றில் எந்த ஒன்றுடையா காந்தத்தன்மை கொண்டது?
O2
O22-
O2+
இவற்றில் ஏதுமில்லை.
8.
ஹைட்ரஜன் பெராக்சைடு, ஓசோன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றில் O-O பிணைப்பு நீளத்தின் சரியான வரிசை
H2O2 > O3 >O2
O2 > O3 > H2 O2
O2 > H2 O2 > O3
O3 > O2 > H2 O2
9.
பின்வருவனவற்றுள் எது, அவற்றின் பிணைப்புத்தரங்களின் ஏறுவரிசையில் அமைந்தசரியான வரிசையை குறிப்பிடுகிறது.
C2 < C22- < O22- < O2
C22- < C2+ < O2 < O22-
O22- < O2 < C22- < C2+
O22- < C2 +< O2 < C22+
10.
ClF3 ,NF3 மற்றும் BF3 மூலக்கூறுகளில் உள்ள குளோரின், நைட்ரஜன் மற்றும் போரான் அணுக்கள் ஆகியன
sp3 இனக்கலப்பிலுள்ளன.
முறையே sp3 ,sp3 மற்றும் sp2 இனக்கலப்பிலுள்ளன.
sp2 இனக்கலப்பிலுள்ளன.
முறையே sp3d, sp3 மற்றும் sp2 இனக்கலப்படைந்துள்ளன.
11.
இணைதிற பிணைப்புக் கொள்கையின்படி, இரண்டு அணுக்களுக்கிடையே எந்நிலையில் பிணைப்பு உருவாவது
முழுவதும் நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போதும்போது
சரிபாதி நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
பிணைப்பில் ஈடுபடாதஅணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
காலியான அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
12.
பின்வருவனவற்றுள், சல்பர்டெட்ராபுளூரைடு மூலக்கூறின் பிணைப்புக்கோணங்களாக இருக்க வாய்ப்புள்ளவை எவை?
1200,800
1090.28
900
890,1170
13.
OA=C=OB,மூலக்கூறில், OA, C மற்றும் OB ஆகியவற்றினுடைய முறைசார்மின்சுமைகள் முறையே
-1, 0, + 1
+1, 0,-1
-2,0,+2
0,0,0
14.
பின்வருவனவற்றுள் எண்ம விதிப்படி அமையும் மைய அணுவைப் பெற்றுள்ளது எது?
XeF4
AlCl3
SF6
SCl2
15.
ஃபஜான் விதியை விளக்குக.
16.
அயனிப் பிணைப்பிலுள்ள சகப்பிணைப்புத் தன்மையை விளக்குக.
17.
CO2 மற்றும் H2O ஆகிய இரண்டும் மூவணு மூலக்கூறுகளாகும் ஆனால் அவற்றின் இருமுனை திருப்புத் திறன் மதிப்புகள் வெவ்வேறாக உள்ளன. ஏன்?
18.
பின்வரும் வடிவங்களில், என்னவகை இனக்கலப்புகள் நிகழசாத்தியப்படும்?
அ)எண்முகி
ஆ)நான்முகி
இ)சதுரதளம்
19.
எத்திலீன் மற்றும் அசிட்டிலீனில் பிணைப்புகள் உருவாதலை விளக்குக.
20.
x- அச்சை மூலக்கூறு அச்சாகக் கருதினால், பின்வருவனவற்றுள் எவை சிக்மா பிணைப்பை உருவாக்கக்கூடும்?
i) 1s மற்றும் 2py
ii) 2Px மற்றும் 2Px
iii) 2px மற்றும் 2pz
iv) 1s மற்றும் 2pz
21.
மூலக்கூறு ஆர்பிட்டால் (MO) கொள்கையில், அணு ஆர்பிட்டால்களின் நேர்க்கோட்டு மேற்பொதிதல் என்பதிலிருந்து நீவிர்புரிந்து கொண்டது என்ன?
22.
CO இன் மூலக்கூறு ஆர்பிட்டாட்டால் MO வரைபடத்தை வரைக, மேலும் அதன் பிணைப்புத் தரத்தை கணக்கிடுக.
1.
(a)
NH4Cl
2.
(c)
C2 H2
3.
(a)
25, 25,33.3,50
4.
(d)
ICl2 –
5.
(a)
SeF4, XeO2 F2
6.
(c)
சதுரபிரமிடு வடிவம், Sp3d2
7.
(b)
O22-
8.
(b)
O2 > O3 > H2 O2
9.
(b)
C22- < C2+ < O2 < O22-
10.
(d)
முறையே sp3d, sp3 மற்றும் sp2 இனக்கலப்படைந்துள்ளன.
11.
(b)
சரிபாதி நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
12.
(d)
890,1170
13.
(d)
0,0,0
14.
(d)
SCl2
15.
(i) அதிக சகப்பிணைப்புத் தன்மையினை பெற்றிருக்க வேண்டும்மெனில் நேர் அயனி மற்றும் எதிர் அயனி ஆகிய இரண்டின் மின்சுமைகளும் அதிகமாக இருக்க வேண்டும். நேர்அயனியின் மீதுள்ள மின்சுமை அதிகமாக இருப்பின், எதிர் அயனியின் எலக்ட்ரான் மேகத்தின் மீது செலுத்தும் கவர்ச்சி விசையும் அதிகமாக இருக்கும். இதைப் போலவே எதிர் அயனியின் மீதுள்ள எதிர் மின்சுமையின் எண்மதிப்பு அதிகம் எனில் அதன் முனைவாகும் திறன் அதிகம். எனவே, நேர் அயனி அல்லது எதிர் அயனியின் மின்சுமை அதிகமாக இருப்பின் சகபிணைப்புத் தன்மை அதிகரிக்கும்.
(ii) அலுமினியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு மற்றும் சோடியம் குளோரைடு ஆகிய மூன்று வகை அயனிச் சேர்மங்களை நாம் கருதுவோம். நேர் அயனியின் மீதுள்ள மின்சுமை Na+ < Mg2+ < Al3+ என்ற வரிசையில் அதிகரிப்பதால் சகப்பிணைப்பு தன்மையும் NaCl < MgCl2 < AlCl3 என்ற அதே வரிசையில் அதிகரிக்கின்றது.
(iii) நேர் அயனியின் உருவளவு சிறியதாகவும், எதிரியனியின் உருவளவு பெரியதாகவும் இருப்பின் முனைவுறுத்தும் திறன் அதிகமாக இருக்கும். மேலும் சகப்பிணைப்பு தன்மை அதிகமாக அமையும்.
(iv) சோடியம் குளோரைடைக் காட்டிலும் லித்தியம் குளோரைடு அதிக சகப்பிணைப்பு தன்மை உடையது. Na+ அயனியைக் காட்டிலும் Li+ ன் உருவளவு சிறியது. எனவே Li+ ன் முனைவுறுத்தும் திறன் அதிகம். லித்தியம் குளோரைடைக் காட்டிலும் லித்தியம் அயோடைடு அதிக சகப்பிணைப்பு தன்மை உடையது. ஏனெனில் Cl- ஐக் காட்டிலும் I-ன் உருவளவு பெரியது. எனவே Li+ நேர் அயனியால், Cl- ஐக் காட்டிலும் I- அயனியானது அதிகமாக முனைவுறுகின்றது.
(v) ns2 np6 nd10 எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ள நேர் அயனிகள் ns2 np6 எலக்ட்ரான் அமைப்பினை பெற்றுள்ள நேர் அயனிகளைக் காட்டிலும் அதிக முனைவுறுத்தும் திறனைப் பெற்றுள்ளன. எனவே அதிக சகப்பிணைப்பு தன்மையினைப் பெற்றுள்ளன.
(vi) CuCl ஆனது NaCl ஐக் காட்டிலும் அதிக சகப்பிணைப்புத் தன்மையினைப் பெற்றுள்ளது. Na+ அயனியோடு ஒப்பிடும்போது (1.13Å), Cu+ (0.6 Å) அயனியானது உருவளவில் சிறியது. மேலும் 3s2 3p6 3d10 எலக்ட்ரான் அமைப்பிணைப் பெற்றுள்ளது.
(vii) Cu+ ன் எலக்ட்ரான் அமைப்பு:[Ar]3d10
(viii) Na+ எலக்ட்ரான் அமைப்பு: [He] 2s2, 2p6.
16.
(i) சகபிணைப்பு சேர்மங்களில் பகுதி அயனித் தன்மை கணபப்டுவது போன்று, அயனிச் சேர்மங்கள் பகுதி சகப்பிணைப்புத் தன்மையினை பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக அயனிச் சேர்மமான லித்தியம் குளோரைடானது சகபிணைப்புத் தன்மையினை பெற்றிருப்பதால் எத்தனால் போன்ற கரிமக் கரைப்பான்களில் கரைகிறது.
(ii) அயனிச் சேர்மங்களில் காணப்படும் பகுதி சகபிணைப்புத் தன்மையினை முனைவுறுதல் என்ற நிகழ்வின் மூலம் விளக்கலாம். அயனிச் சேர்மங்களில் நேர் அயனிக்கும், எதிர் அயனிக்கும் இடையில் நிலை மின்னியல் கவர்ச்சி விசை காணப்படுகிறது என்பதை நாம் அறிவோம். நேர்மின்சுமை உடைய நேர் அயனியானது எதிர் அயனியின் இணைதிறன் எலக்ட்ரான்களைக் கவருகிறது. அதே நேரத்தில் அதன் அணுக்கருவினை விலக்குகிறது. இதன் விளைவாக எதிர் அயனியின் எலக்ட்ரான் மேகம் உருக்குலைவுற்று அதன் எலக்ட்ரான் அடர்த்தியானது நேர்மின் அயனியை நோக்கி நகர்கிறது. இதன் விளைவாக இவ்விரு அயனிகளுக்கிடையே சிறிது எலக்ட்ரான் பங்கீடு ஏற்படுகிறது. எனவே அவைகளுக்கிடையே பகுதி சகபிணைப்புத் தன்மை ஏற்படுகிறது. இந்நிகழ்வு முனைவுறுதல் எனப்படும்.
(iii) ஒரு எதிர் அயனியை முனைவுறச் செய்யும் நேர் அயனியின் திறன் அதன் முனைவுறுத்தும் திறன் எனப்படும். மேலும் எதிர் அயனியின் முனைவுறும் தன்மை அதன் முனைவுறும் திறன் எனப்படும்.
(iv) அயனிச் சேர்மங்களில் எந்த அளவிற்கு முனைவாக்கம் நிகழ்கிறது என்பதனை பெஜான்ஸ் விதி மூலம் அறியலாம்.
17.
(i) முனைவுற்ற பிணைப்புகளைப் பெற்றுள்ள மூவண மூலக்கூறுகள் அனைத்தும் ஒரே மாதிரியான இருமுனை திருப்புத் திறன்களைப் பெற்றிருப்பதற்கான அவசியம் இல்லை.
(ii) CO2 ஆனது இரண்டு முனைவுற்ற (C-O) பிணைப்புகளைப் பெற்றிருந்த போதிலும் பூஜ்ய இருமுனை திருப்புத் திறனை பெற்றுள்ளது.
(iii) CO2 ஆனது சம மதிப்புடைய எதிரெதிர் திசையிலான இருமுனை திருப்புத் திறன்களைப் பெற்றுள்ளதால், CO2 ன் நிகர இருமுனை திருப்புத்திறன் பூஜ்யம்.
μ=μ1+μ2=μ1+(-μ1)=0

(iv) ஆனால், நீர் மூலக்கூறை பொறுத்த வரையில், நிகர இருமுனை திருப்புத்திறன் எனப்து μ1 மற்றும் μ2 ஆகியவற்றின் வெக்டர் கூடுதலாகும்.
இங்கு μ=\(\vec { { \mu }_{ 1 } } +\vec { { \mu }_{ 2 } } \)
=\(\vec { { \mu }_{ 1 } } +(-\vec { { \mu }_{ 1 }) } \)=0
(v) நீர், மூலக்கூறை பொறுத்த வரையில், நிகர இருமுனை திருப்புத்திறன் எனப்து ஆகியவற்றின் வெக்டர் கூடுதலாகும்.

(vi) நீரின் இருமுனை திருப்புத்திறன் மதிப்பு =1.85 D.
18.
| வடிவம் | இனக்கலப்பு | உதாரணம் |
| அ) எண்முகி | sp3d2 | SF6 |
| ஆ) நான்முகி | sp3 | CH4 |
| இ) சதுரதளம் | dsp2 | [Ni(CN)4 |
19.
எத்திலீனில் காணப்படும் பிணைப்பு
(i) எத்திலீனில் பிணைப்பு உருவாதலை இனக் கலப்பதால் கோட்பாட்டினைப் பயன்படுத்தி விளக்கலாம். எத்திலீனின் மூலக்கூறு வாய்பாடு C2H4. கார்பனின் இணைதிறன் 4 ஆகும். அதன் இணைதிற கூட்டு எலட்ரான் அமைப்பு 1 அடி ஆற்றல் நிலையில் [He] 2s2 2px1 2py1 2pz0 . கார்பனின் நான்கு இணை திறனை நிறைவு செய்யும் பொருட்டு, 2s ஆர்பிட்டலிலிருந்து ஒரு எலக்ட்ரானை 2pz ஆர்பிட்டலுக்கு கிளர்வுறச் செய்க.

(ii) எத்திலீனில் இரு கார்பன் அணுக்களும் அவற்றின் 2s, 2px மற்றும் 2py ஆர்பிட்டால்கள் ஒன்றோடொன்று கலந்து sp2 இனக்கலப்பாதலுக்கு உட்படுகின்றன. இதன் விளைவாக மூன்று சமமான sp2 இனக்கலப்படைந்த ஆர்பிட்டால்கள் உருவாகின்றன. இந்த ஆர்பிட்டால்கள் ஒன்றக்கொன்று 1200 கோண இடைவெளியில் XY தளத்தில் அமைகின்றன. இனக்கலப்படையாத 2Pz ஆர்பிட்டால் இந்த XY தளத்திற்கு செங்குத்தான திசையில் அமைகின்றது.

சிக்மா பிணைப்பு உருவாதல்:
(i) மூலக்கூறு அச்சில் (x-அச்சு) அமைந்த ஒவ்வொரு கார்பன் அணுவின் ஒரு sp2 இனக்கலப்பு அடைந்த ஆர்பிட்டால்கள் ஒன்றோடொன்று நேர்கோட்டில் மேற்பொருந்தி C-C சிக்மா பிணைப்பினை உருவாக்குகிறது. இரண்டு கார்பன் அணுக்களின் மற்ற இரு sp2 இனக்கலப்படைந்த ஆர்பிட்டால்களும் நேர்கோட்டில் மேற்பொருந்துவதால், ஒவ்வொரு கார்பனும், ஹைட்ரஜனுடன் இரு C-H சிக்மா பிணைப்புகளை உருவாக்குகின்றன.

π-பிணைப்பு உருவாதல்:
இரு கார்பன் அணுக்களின் இனக்கலப்பாதலுக்கு உட்படாத இரு 2pz ஆர்பிட்டால்களும் மூலக்கூறு அச்சில் அமையாததால் பக்கவாட்டின் வழியாக மட்டுமே மேற்பொருந்த இயலும். இத்தகைய பக்கவாட்டு மேற்பொருந்துதலால் இரு கார்பன் அணுக்களுக்கும் இடையே படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு π பிணைப்பு உருவாகின்றது.

20.
(i) 1s ஆர்பிட்டலானது, 2py ஆர்பிட்டாலுடன் நேர்க்கோட்டில் மேற்பொருந்துவாதல் σ பிணைப்பு உருவாகிறது.
(ii) 2px மற்றும் 2px ஆர்பிட்டால்கள் பக்கவாட்டில் மேற்பொருந்துவதால் π பிணைப்பு உருவாகிறது.
(iii) 2px மற்றும் 2pz ஆர்பிட்டால்கள் பக்கவாட்டில் மேற்பொருந்துவதால் π பிணைப்பு உண்டாகிறது.
(iv) 1s மற்றும் 2pz நேர்க்கோட்டில் மேற்பொருந்துவதால் σ பிணைப்பு உருவாகிறது.
21.
(i) ஒரு மூலக்கூறிற்கான ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாட்டிற்கு தீர்வு கண்டறிவதன் மூலம் அதன் மூலக்கூறு ஆர்பிட்டால்களுக்கான அலைச் சார்பினைக் கண்டறிய இயலும்.
(ii) மூலக்கூறுகளின் ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாட்டினை தீர்த்தல் என்பது மிகவும் சிக்கலானது என்பதால், மூலக்கூறு ஆர்பிட்டால்களுக்கான அலைச்சார்பினைக் கண்டறிய தோராய முறைகள் பயன்படுகின்றன. அணு ஆர்பிட்டால்கள் நேரிய இணைவு (LCAO) முறை மிகவும் பொதுவான ஒரு முறையாகும்.
(iii) அணு ஆர்பிட்டால்களின் அலைச்சார்பு (\(\psi \)) என குறிக்கப்படுகிறது.
(iv) ஒப்பிடத்தக்க ஆற்றலுடைய \(\psi \)A மற்றும் \(\psi \)B ஆகிய இரு அலைச்சார்புகளால் குறிப்பிடப்படும் இரு அணு ஆர்பிட்டால்கள் இணைந்து இரு மூலக்கூறு ஆர்பிட்டால்கள் தருவதாக கருதுவோம்.
(v) \(\psi \)பிணைப்பு =\(\psi \)A + \(\psi \)B
(vi) \(\psi \)எதிர் பிணைப்பு = \(\psi \)A - \(\psi \)B
22.
கார்பன் மோனாக்ஸைடு (CO) மூலக்கூறு ஆர்பிட்டால் வரைபடம்:

(i) வெவ்வேறு அணுக்களைக் கொண்ட இரு அணு மூலக்கூறுகளில் காணும் பிணைப்புகள்.
(ii) கார்பன் மோனாக்ஸைடு (CO) மூலக்கூறின் மூலக்கூறு ஆர்பிட்டாட்டால் வரைபடம்.
(iii) கார்பன் அணுவின் எலக்ட்ரான் அமைப்பு =1s2 2s2 2p2
(iv) ஆக்சிஜன் அணுவின் எலக்ட்ரான் அமைப்பு =1s2 2s2 2p4
(v) கார்பன் மோனாக்ஸைடு (CO)
மூலக்கூறின் எலக்ட்ரான் அமைப்பு
\({ \sigma }_{ 1s }^{ 2 },{ \sigma }_{ 1s }^{ *2 },{ \sigma }_{ 2s }^{ 2 },{ \sigma }_{ 2_{ x } }^{ *2 },{ \pi }_{ 2p_{ y } }^{ 2 },{ \pi }_{ 2p_{ z } }^{ 2 },{ \pi }_{ 2p_{ x } }^{ 2 }\)
(vi) பிணைப்பு தரம்=\(\frac { { N }_{ b }-{ N }_{ a } }{ 2 } =\frac { 10-4 }{ 2 } \)=3
(vii) மூலக்கூறில் தனித்த எலக்ட்ரான்கள் இல்லை. எனவே இது டையா காந்தப் பண்புடையடையது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards