11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
வேதிப் பிணைப்புகள்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
எண்ம விதி உருவாக காரணமாக அமைந்தது
வேதிப்பிணைப்பு பற்றிய கோசல்-லூயிஸ் அணுகுமுறை
வேதிப்பிணைப்பு பற்றிய ஹைய்ட்லர் -லண்டன் அணுகுமுறை
வேதிப்பிணைப்பு பற்றிய பாலிங் -ஸ்லேட்டர் அணுகுமுறை
மேற்கண்ட எதுவுமில்லை
2.
பின்வருவனவற்றுள் எது கார்பனின் சரியான லூயிஸ் அமைப்பு?
\(\overset { .. }{ \underset { .. }{ C } } \)
\(:\overset { . }{ \underset { . }{ C } } \)
\({ .\overset { . }{ \underset { . }{ C } } { . } }\)
\({ .\overset { . }{ C } { : } }\)
3.
வேதிப்பிணைப்பு மற்றும் அணுக்களின் வெளிக்கூட்டில் காணப்படும் எலக்ட்ரான்கள் குறிப்பிட்டுக் காட்ட ஒரு எளிய முறையினை அறிமுகப்படுத்தியவர்
கோசல்
பெளலி
பெஜான்ஸி
லூயிஸ்
4.
ClF3 இன் வடிவம்
முக்கோணசமதளம்
பிரமிடுவடிவம்
'T' வடிவம்
இவற்றில் ஏதுமில்லை
5.
இரண்டு அயனிகள் NO3- மற்றும் H3O+ ஆகியவற்றின் சில பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எந்த ஒன்று சரியானது
வெவ்வேறு வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் வேறுபடுகின்றன
ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் ஒத்துள்ளன.
ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பில் வேறுபடுகின்றன.
இவற்றில் எதுவுமில்லை
6.
IF5 மூலக்கூறின் வடிவம் மற்றும் இனக்கலப்பு
முக்கோண இருபிரமிடு வடிவம், Sp3d2
முக்கோண இருபிரமிடு வடிவம், Sp3d
சதுரபிரமிடு வடிவம், Sp3d2
எண்முகி வடிவம், Sp3d2
7.
ஹைட்ரஜன் பெராக்சைடு, ஓசோன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றில் O-O பிணைப்பு நீளத்தின் சரியான வரிசை
H2O2 > O3 >O2
O2 > O3 > H2 O2
O2 > H2 O2 > O3
O3 > O2 > H2 O2
8.
பின்வருவனவற்றுள் எது, அவற்றின் பிணைப்புத்தரங்களின் ஏறுவரிசையில் அமைந்தசரியான வரிசையை குறிப்பிடுகிறது.
C2 < C22- < O22- < O2
C22- < C2+ < O2 < O22-
O22- < O2 < C22- < C2+
O22- < C2 +< O2 < C22+
9.
பின்வருவனவற்றுள், சல்பர்டெட்ராபுளூரைடு மூலக்கூறின் பிணைப்புக்கோணங்களாக இருக்க வாய்ப்புள்ளவை எவை?
1200,800
1090.28
900
890,1170
10.
பின்வருவனவற்றுள் எண்ம விதிப்படி அமையும் மைய அணுவைப் பெற்றுள்ளது எது?
XeF4
AlCl3
SF6
SCl2
11.
பிணைப்பு நீளம் என்பதை வரையறு.
12.
அயனிப் பிணைப்பை வரையறு.
13.
ஃபஜான் விதியை விளக்குக.
14.
CO2 மற்றும் H2O ஆகிய இரண்டும் மூவணு மூலக்கூறுகளாகும் ஆனால் அவற்றின் இருமுனை திருப்புத் திறன் மதிப்புகள் வெவ்வேறாக உள்ளன. ஏன்?
15.
பிணைப்பு ஆற்றல் வரையறு.
16.
BF3 மூலக்கூறில் காணப்படும் Sp2 இனக்கலப்பை விளக்குக.
17.
பை (π) பிணைப்பு என்றால் என்ன?
18.
அணு ஆர்பிட்டால்களின் ஆக்கக் குறுக்கீட்டு விளைவு மற்றும் அழித்தல் குறுக்கீட்டு விளைவு -இவற்றை விளக்குக.
19.
HF மூலக்கூறு உருவாதலை விளக்குக
20.
மீத்தேனின் இனக்கலப்பை விவரி.
21.
VB கொள்கையின் முக்கிய அம்சங்கள் கூறுக.
1.
(a)
வேதிப்பிணைப்பு பற்றிய கோசல்-லூயிஸ் அணுகுமுறை
2.
(c)
\({ .\overset { . }{ \underset { . }{ C } } { . } }\)
3.
(d)
லூயிஸ்
4.
(c)
'T' வடிவம்
5.
(a)
வெவ்வேறு வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் வேறுபடுகின்றன
6.
(c)
சதுரபிரமிடு வடிவம், Sp3d2
7.
(b)
O2 > O3 > H2 O2
8.
(b)
C22- < C2+ < O2 < O22-
9.
(d)
890,1170
10.
(d)
SCl2
11.
சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரு அணுக்களின் அணுக்களுக்கு இடைப்பட்ட தொலைவு பிணைப்பு நீளம் என வரையறுக்கப்படுகிறது.
12.
ஓர் அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு எலக்ட்ரான் பரிமாற்றம் அடைவதால் உருவாகும் நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகளுக்கிடையே உள்ள நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக உருவாகும் பிணைப்பு அயனிப் பிணைப்பு எனப்படும்.
13.
(i) அதிக சகப்பிணைப்புத் தன்மையினை பெற்றிருக்க வேண்டும்மெனில் நேர் அயனி மற்றும் எதிர் அயனி ஆகிய இரண்டின் மின்சுமைகளும் அதிகமாக இருக்க வேண்டும். நேர்அயனியின் மீதுள்ள மின்சுமை அதிகமாக இருப்பின், எதிர் அயனியின் எலக்ட்ரான் மேகத்தின் மீது செலுத்தும் கவர்ச்சி விசையும் அதிகமாக இருக்கும். இதைப் போலவே எதிர் அயனியின் மீதுள்ள எதிர் மின்சுமையின் எண்மதிப்பு அதிகம் எனில் அதன் முனைவாகும் திறன் அதிகம். எனவே, நேர் அயனி அல்லது எதிர் அயனியின் மின்சுமை அதிகமாக இருப்பின் சகபிணைப்புத் தன்மை அதிகரிக்கும்.
(ii) அலுமினியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு மற்றும் சோடியம் குளோரைடு ஆகிய மூன்று வகை அயனிச் சேர்மங்களை நாம் கருதுவோம். நேர் அயனியின் மீதுள்ள மின்சுமை Na+ < Mg2+ < Al3+ என்ற வரிசையில் அதிகரிப்பதால் சகப்பிணைப்பு தன்மையும் NaCl < MgCl2 < AlCl3 என்ற அதே வரிசையில் அதிகரிக்கின்றது.
(iii) நேர் அயனியின் உருவளவு சிறியதாகவும், எதிரியனியின் உருவளவு பெரியதாகவும் இருப்பின் முனைவுறுத்தும் திறன் அதிகமாக இருக்கும். மேலும் சகப்பிணைப்பு தன்மை அதிகமாக அமையும்.
(iv) சோடியம் குளோரைடைக் காட்டிலும் லித்தியம் குளோரைடு அதிக சகப்பிணைப்பு தன்மை உடையது. Na+ அயனியைக் காட்டிலும் Li+ ன் உருவளவு சிறியது. எனவே Li+ ன் முனைவுறுத்தும் திறன் அதிகம். லித்தியம் குளோரைடைக் காட்டிலும் லித்தியம் அயோடைடு அதிக சகப்பிணைப்பு தன்மை உடையது. ஏனெனில் Cl- ஐக் காட்டிலும் I-ன் உருவளவு பெரியது. எனவே Li+ நேர் அயனியால், Cl- ஐக் காட்டிலும் I- அயனியானது அதிகமாக முனைவுறுகின்றது.
(v) ns2 np6 nd10 எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ள நேர் அயனிகள் ns2 np6 எலக்ட்ரான் அமைப்பினை பெற்றுள்ள நேர் அயனிகளைக் காட்டிலும் அதிக முனைவுறுத்தும் திறனைப் பெற்றுள்ளன. எனவே அதிக சகப்பிணைப்பு தன்மையினைப் பெற்றுள்ளன.
(vi) CuCl ஆனது NaCl ஐக் காட்டிலும் அதிக சகப்பிணைப்புத் தன்மையினைப் பெற்றுள்ளது. Na+ அயனியோடு ஒப்பிடும்போது (1.13Å), Cu+ (0.6 Å) அயனியானது உருவளவில் சிறியது. மேலும் 3s2 3p6 3d10 எலக்ட்ரான் அமைப்பிணைப் பெற்றுள்ளது.
(vii) Cu+ ன் எலக்ட்ரான் அமைப்பு:[Ar]3d10
(viii) Na+ எலக்ட்ரான் அமைப்பு: [He] 2s2, 2p6.
14.
(i) முனைவுற்ற பிணைப்புகளைப் பெற்றுள்ள மூவண மூலக்கூறுகள் அனைத்தும் ஒரே மாதிரியான இருமுனை திருப்புத் திறன்களைப் பெற்றிருப்பதற்கான அவசியம் இல்லை.
(ii) CO2 ஆனது இரண்டு முனைவுற்ற (C-O) பிணைப்புகளைப் பெற்றிருந்த போதிலும் பூஜ்ய இருமுனை திருப்புத் திறனை பெற்றுள்ளது.
(iii) CO2 ஆனது சம மதிப்புடைய எதிரெதிர் திசையிலான இருமுனை திருப்புத் திறன்களைப் பெற்றுள்ளதால், CO2 ன் நிகர இருமுனை திருப்புத்திறன் பூஜ்யம்.
μ=μ1+μ2=μ1+(-μ1)=0

(iv) ஆனால், நீர் மூலக்கூறை பொறுத்த வரையில், நிகர இருமுனை திருப்புத்திறன் எனப்து μ1 மற்றும் μ2 ஆகியவற்றின் வெக்டர் கூடுதலாகும்.
இங்கு μ=\(\vec { { \mu }_{ 1 } } +\vec { { \mu }_{ 2 } } \)
=\(\vec { { \mu }_{ 1 } } +(-\vec { { \mu }_{ 1 }) } \)=0
(v) நீர், மூலக்கூறை பொறுத்த வரையில், நிகர இருமுனை திருப்புத்திறன் எனப்து ஆகியவற்றின் வெக்டர் கூடுதலாகும்.

(vi) நீரின் இருமுனை திருப்புத்திறன் மதிப்பு =1.85 D.
15.
(i) வாயு நிலையில் உள்ள மூலக்கூறின் ஒரு மோல் குறிப்பிட்ட பிணைப்பை பிளக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றலின் அளவு பிணைப்பு ஆற்றல் என வரையறுக்கப்படுகிறது.
(ii) பிணைப்பு ஆற்றலின் அலகு KJ mol-1
16.
Sp2 இனக்கலப்பு:
(i) போரான் ட்ரை புளுரைடு மூலக்கூறில் பிணைப்பு உருவாதலை கருதுக.

(ii) போரான் அணுவின் இணைதிற கூட்டு எலக்ட்ரான் அமைப்பு [He]2s2 2p1 அடி ஆற்றல் நிலையில் போரான் அணுவின் இணைதிறன் கூட்டில் ஒரே ஒரு இணையுறா எலக்ட்ரான் உள்ளது.
(iii) புளுரினுடன் மூன்று சகப்பிணைப்பை ஏற்படுத்த மேலும் மூன்று இணையுறா எலக்ட்ரான்கள் தேவையாக உள்ளது. இதனை பெறும் பொருட்டு, போரனின் 2s ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ரான்களில் ஒரு எலக்ட்ரானானது 2py ஆர்பிட்டாலுக்கு கிளர்வுற்று இனக்கலப்பாதலுக்கு உட்பட்டு, படத்தில் கட்டியுள்ளவாறு மூன்று சமமான sp2 இனக்கலப்படைந்த ஆர்பிட்டால்களைத் தருகின்றன.
(iv) இம்மூன்று ஆர்பிட்டால்களும் xy என்ற சம தளத்தில் அமைகின்றன. மேலும் இரு ஆர்பிட்டால்களுக்கு இடையே பிணைப்புக் கோணம் 1200.


(v) போரனின் மூன்று sp2 இனக்கலப்படைந்த ஆர்பிட்டால்களுடன் புளுரினின் 2pz ஆர்பிட்டால் (மூன்று அணுக்கள்) நேர்கோட்டில் மேற்பொருந்துவதால் படத்தில் காட்டியுள்ளவாறு B மற்றும் Fக்கு இடையே சகப்பிணைப்பு உருவாகின்றது.
17.
இரு அணு ஆர்பிட்டால்கள் பக்கவாட்டில் மேற்பொருந்தும்போது சகபிணைப்பு பை பிணைப்பு (π) எனப்படும். x-அச்சு மூலக்கூறு அச்சாக கருதும் நேர்வில் py-py மற்றும் pz-pz ஆகிய ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துதலால் π பிணைப்பு உருவாகிறது.
18.
(i) அணு ஆர்பிட்டால்களின் அலைச்சார்பு \(\psi \) என குறிக்கப்படுகிறது. ஒப்பிடத்தக்க ஆற்றலுடைய \(\psi \)A மற்றும் \(\psi \)B ஆகிய இரு அலைச்சார்புகளால் குறிப்பிடப்படும் இரு அணு ஆர்பிட்டால்கள் இணைந்து இரு அணு ஆர்பிட்டால்கள் இணைந்து இரு மூலக்கூறு ஆர்பிட்டால்களை தருகிறது.
(ii) அவைகளுள் ஒன்று பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால் (\(\psi \) பிணைப்பு) மற்றொன்று எதிர்ப்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால் (\(\psi \) எதிர் பிணைப்பு) ஆகும். இவ்விரு மூலக்கூறு ஆர்பிட்டால்களுக்கான அலைசார்பிணை அணு ஆர்பிட்டால்களுக்கான \(\psi \)A மற்றும் \(\psi \)B நேரிய இணைவின் மூலம் பெறலாம்.
\(\psi \)பிணைப்பு =\(\psi \)A +\(\psi \)B
\(\psi \)எதிர் பிணைப்பு =\(\psi \)A -\(\psi \)B
(iii) அணு ஆர்பிட்டால்களின் ஆக்கக் குறுக்கீட்டு விளைவால், பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால் உருவாவதாகவும், அணு ஆர்பிட்டால்களின் அழித்தல் குறுகீட்டு விளைவின் காரணமாக எதிர் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால் உருவாவதாகவும் கருதலாம். இரு 1s ஆர்பிட்டால்களில் இருந்து சம மூலக்கூறு ஆர்பிட்டால்கள் உருவாவது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
(iv) ஆக்கக் குறுக்கீட்டு விளைவு: இரண்டு 1s ஆர்பிட்டால்கள் ஒரே கட்டத்தில் உள்ளன. மற்றும் ஒரே குறிகளை பெற்றுள்ளன.



19.
(i) ஹைட்ரஜன் அணுவின் எலக்ட்ரான் அமைப்பு: 1s1
(ii) புளூரின் அணுவின் இணைத்திற கூட்டின் எலக்ட்ரான் அமைப்பு : 2s2 29x2, 2py2, 2pz1

(iii) ஹைட்ரஜனின் சரிபாதி நிரப்பப்பட்ட 1s ஆர்பிட்டாலானது, புளுரினின் பாதி நிரப்பப்பட்ட 2pz ஆர்பிட்டாலுடன் நேர்கோட்டில் மேற்பொருந்தும் போது ஹைட்ரஜனுடன் புளூரினுக்கு இடையே ஒரு σ-சகப்பிணைப்பு உருவாகிறது.
20.
1. மீத்தேன் மூலக்கூறை எடுத்துக்காட்டாகக் கொண்டு sp3 இனக்கலப்பினை விளக்கலாம். மீத்தேன் மூலக்கூறில் மைய கார்பன் அணு நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கார்பன் அணுவின் இணைதிற கூட்டு எலக்ட்ராட்ரான் அமைப்பு அடி ஆற்றல் நிலையில் [He]2s22px12py12pz0.

2.நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் நான்கு சகப்பிணைப்பினை ஏற்படுத்த கார்பனின் 2s ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ரான்களில் ஒரு எலக்ட்ரானானது 2pz ஆர்பிட்டாலுக்கு கிளர்வுறுகிறது.கார்பனின் ஒரு 2s ஆர்பிட்டாலும் மற்றும் ஒரு மூன்று 2p ஆர்பிட்டால்களும் இனக்கலப்பு அடைந்து நான்கு சமமான sp3 இனக்கலப்பு ஆர்பிட்டால்களைத் தருகின்றன. இரு sp3 ஆர்பிட்டால்களைத் இடையேயுள்ள பிணைப்புக் கோணம் 109o 28'.
ஹைட்ரஜனின் 1s ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துதல்:
நான்கு ஹைட்ரஜன் அணுக்களின் 1s ஆர்பிட்டால்களுடன் கார்பன் அணுவின் நான்கு sp3 இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் நேர்கோட்டில் மேற்பொருந்தி மீத்தேன் மூலக்கூறினில் 4C-H \(\sigma \)-பிணைப்பினை படத்தில் காட்டியுள்ளவாறு ஏற்படுத்துகின்றன.

21.
VB கொள்கையின் முக்கிய அம்சங்கள் :
1. இரு அணுக்களின் சரிபாதி அளவு நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்கள் ஒன்றோடொன்று மேற்பொருந்தும் பொழுது அவைகளுக்கிடையே சகப்பிணைப்பு உருவாகின்றது.
2.உருவான மேற்பொருந்திய ஆர்பிட்டாலில் எதிரெதிர் சுழற்சியினைப் பெற்றுள்ள இரு எலக்ட்ரான்களும் நிரப்பப்படுகின்றன.எடுத்துக்காட்டாக, H2 மூலக்கூறு உருவாகும்போது இரு ஹைட்ரஜன் அணுக்களின் 1s எலக்ட்ரான்களும் இரட்டை ஆகிறது. மேலும் அவைகள் மேற்பொருந்திய ஆர்பிட்டாலில் இடம் பெறுகின்றன.
3. அணு ஆர்பிட்டால்கள் எந்த அளவிற்கு மேற்பொருந்துகிறதோ அதைப் பொருத்து சகப் பிணைப்பின் வலிமை அமைகிறது. மேற்பொருந்துதல் அதிகமாக இருக்கும் போது,வெளியிடப்படும் ஆற்றல் அதிகமாகும். மேலும் உருவாகும் பிணைப்பு வலிமையுடையதாக இருக்கும்.
4. ஒவ்வொரு அணு ஆர்பிட்டாலும் குறிப்பிட்ட திசையில் அமைந்துள்ளன (s-ஆர்பிட்டால் மட்டும் சீர்மைக்கோள் வடிவம் பெற்றுள்ளது) எனவே, மேற்பொருந்துதல் அதிகபட்சமாக அமையும் திசையில் அணு ஆர்பிட்டால் மேற்பொருந்துதல் நிகழ்கிறது.
5. ஹைட்ரஜன், புளுரின் மற்றும் ஹைட்ரஜன் புளூரைடில் சகப்பிணைப்பு உருவாதலை VB கொள்கையினைப் பயன்படுத்தி விளக்கலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards