11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
சுற்றுச்சூழல் வேதியியல்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
குடிநீரில் உள்ள லெட் மாசுக்களின் அளவு எவ்வளவு இருப்பின் அது கல்லீரலை பாதிக்கிறது?
500 ppm க்கு மேல்
500 ppm க்கு மேல்
45 ppm க்கு மேல்
450 ppm க்கு மேல்
2.
குடிநீரில் காணப்படும் எதன் குறைவால் பற்சிதைவு தோன்றுகிறது ?
குளோரைடு
புளூரைடு
கால்சியம்
மெக்னீசியம்
3.
பின்வருவனவற்றுள் எடு தாவர ஊட்டச்சத்து மாசுபடுத்திகள்?
வீட்டுக் கழிவு நீர்
சாணக்குவியல்
வேதி உரங்கள்
இவை அனைத்தும்
4.
பின்வருவனவற்றுள் எவை கரும்புகை துகள்களை உருவாக்குகின்றன?
கரிம கரைப்பான்கள்
உலோகங்கள்
உலோக ஆக்சைடுகள்
இவை அனைத்தும்
5.
பசுமைக்குடில் விளைவு இல்ல நிலையில் பூமியின் புறப்பரப்பு வெப்பநிலை
-220C
-320C
-180C
00C
6.
உயிர்வேதி ஆக்சிஜன் தேவைஅளவு 5 ppm க்கு குறைவாக கொண்டுள்ள நீர் மாதிரி குறிப்பிடுவது
அதிகளவில் மாசுபட்டுள்ளது
குறைந்தளவு கரைந்த ஆக்ஸிஜன்
அதிகளவில் கரைந்த ஆக்ஸிஜன் உள்ளது
குறைந்த COD
7.
CO சூழலில் வாழ்தல் அபாயகரமானது , ஏனெனில்
உள்ளே உள்ள O2 உடன் சேர்ந்து CO2 ஐ உருவாக்குகிறது.
திசுக்களிலுள்ள கரிம பொருள்களை ஒடுக்குகிறது
ஹீமோகுளோபினுடன் இணைந்து அதை ஆக்சிஜன் உறிஞ்ச தகுதியற்றதாக ஆக்குகிறது.
இரத்தத்தை உலரவைக்கிறது
8.
பின்வருவனவற்றுள் தவறான கூற்றை கண்டறிக.
தூய நீர் 5 ppm க்கும் குறைவான BOD மதிப்பை பெற்றிருக்கும்.
பசுமைக்குடில் விளைவு ஆனது உலக வெப்பமயமாதல் எனவும் அழைக்கப்படுகிறது
காற்றிலுள்ள நுண்ணிய திண்ம துகள்கள், துகள் மாசுபடுத்திகள் எனப்படுகின்றன
உயிர்க்கோளம் ஆனது பூமியை சூழ்ந்துள்ள பாதுகாப்பு ப�ோர்வையாகும்.
9.
ஓசோன் படல சிதைவு உருவாக்குவது
காட்டுத்தீ
தூர்ந்து போதல்
உயிர் பெருக்கம்
உலக வெப்பமயமாதல்
10.
மழைநீரின் pH மதிப்பு
6.5
7.5
5.6
4.6
11.
பசுமைக்குடில் வாயுக்களின் தொடர்வரிசைகளில் எது GWP இன் அடிப்படையில் அமைந்துள்ளது?
CFC > N2O > CO2> CH4
CFC > CO2> N2O > CH4
CFC > N2O > CH4> CO2
CFC > CH4> N2O > CO2
12.
போபால் வாயு துயரம் என்பது ________ இன் விளைவு ஆகும்.
வெப்ப மாசுபாடு
காற்று மாசுபாடு
கதிர்வீச்சு மாசுபாடு
நில மாசுபாடு
13.
பின்வருவனவற்றுள் எது இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் சூழலியல் இடையூறு?
காட்டுத் தீ
வெள்ளம்
அமில மழை
பசுமைக்குடில் விளைவு
14.
பூமியைச் சுற்றியுள்ள வாயுக்களால் ஆன உறை வளிமண்டலம் என அறியப்படுகிறது. உயரம் 11 முதல் 50 கி.மீ க்கு இடைப்பட்ட பகுதி
அடிவெளிப்பகுதி
மத்திய அடுக்கு
வெப்ப அடுக்கு
அடுக்கு மண்டலம்
15.
நம் இரத்தத்தில் கார்பன் மோனாக்சைடால் உருவாக்கப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையை விளக்குக. அதன் விளைவுகளை எழுதுக.
16.
பின்வருவனவற்றை வேறுபடுத்துக:
(i) BOD மற்றும் COD
(ii) உயிருள்ள மற்றும் உயிரற்ற துகள் பொருள் மாசுபடுத்திகள்
17.
அமில மழை எவ்வாறு உருவாகிறது? அதன் விளைவுகளை விளக்குக.
18.
CFC மூலக்கூறுகள், அடுக்குமண்டலத்தில் ஓசோன் படல சிதைவை எவ்வாறு உண்டாக்குகின்றன என்பதை நிகழும் வினைகளின் அடிப்படையில் விளக்குக.
19.
பனிப்புகை என்றால் என்ன? தீவிர பனிப்புகை எவ்வாறு ஒளிவேதிப் பனிப்புகையிலிருந்து வேறுபடுகிறது?
20.
பசுமை வேதியியல் என்றால் என்ன?
21.
ஒளிவேதி பனிப்புகையில் உள்ள ஓசோன் எங்கிருந்து வந்தது?
22.
பனிப்புகை வரையறு.
23.
மண் மாசுபாடு என்பது என்ன? மண் மாசுபாடு எவற்றை பாதிக்கிறது?
24.
நீர் மாசுபடுதல் என்றால் என்ன?
25.
தீவிர பனிப்புகையின் விளைவுகள் எழுதுக.
26.
ஹைட்ரோகார்பன்கள் என்பவை யாவை? அவற்றுடன் இணைந்த ஆபத்துகளை குறிப்பிடு.
27.
காற்று மாசுபாடு என்றால் என்ன? அது எவ்வாறு உண்டாகிறது?
28.
ஒளிவேதிப் புகையின் விளைவுகள் குறித்து எழுதுக.
29.
நைட்ரஜன் ஆக்சைடுகள் பற்றிய குறிப்பைத் தருக.
30.
ஒளிவேதிப் பனிப்புகை எவ்வாறு உருவாகிறது? அதன் தன்மைகள் மற்றும் விளைவுகளை விளக்குக.
1.
(a)
500 ppm க்கு மேல்
2.
(b)
புளூரைடு
3.
(c)
வேதி உரங்கள்
4.
(d)
இவை அனைத்தும்
5.
(c)
-180C
6.
(c)
அதிகளவில் கரைந்த ஆக்ஸிஜன் உள்ளது
7.
(c)
ஹீமோகுளோபினுடன் இணைந்து அதை ஆக்சிஜன் உறிஞ்ச தகுதியற்றதாக ஆக்குகிறது.
8.
(a)
தூய நீர் 5 ppm க்கும் குறைவான BOD மதிப்பை பெற்றிருக்கும்.
9.
(c)
உயிர் பெருக்கம்
10.
(c)
5.6
11.
(c)
CFC > N2O > CH4> CO2
12.
(b)
காற்று மாசுபாடு
13.
(a)
காட்டுத் தீ
14.
(d)
அடுக்கு மண்டலம்
15.
1.முழுமையாக எரிக்கப்படாத நிலக்கரி மற்றும் விறகு ஆகியவற்றால் கார்பன் மோனாக்சைடு உருவாக்கப்படுகிறது.
2.கார்பன் மோனாக்சைடு முதன்மையாக வாகனப்புகையின் மூலம் காற்றில் வெளியிடப்படுகிறது.
3. கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மை கொண்டது.
4. இது ஹீமோகுளோபினுடன் பிணைந்து கார்பக்ஸி ஹீமோ குளோபினை உருவாக்குகிறது.
5. இது இரத்தத்தின் ஆக்ஸிஜன் கடத்தும் திறனை பாதிக்கிறது.
விளைவுகள்:
1.இந்த ஆக்ஸிஜன் குறைபாடு,
(i) தலைவலி
(ii) தலைசுற்றல்
(iii) சுய நினைவிழத்தல்
(iv)பதற்றம்
(v) கண்பார்வை மங்குதல்
(vi) மாரடைப்பு
16.
| (i) | BOD | COD |
| 1. | 200 சி வெப்பநிலையில் 5 நாள்கள் கால இடைவெளியில், ஒரு லிட்டர் நீரில் உள்ள கரிம கழிவுகளை சிதைக்க நுண்ணியிர்களால் நுகரப்படும் மொத்த ஆக்சிஜனின் மில்லிகிராம் அளவு உயிர்வேதி ஆக்சிஜன் தேவை (BOD) என்றழைக்கப்படுகிறது. | குறிப்பிட்ட நீர் மாதிரியுள்ள கரிம பொருட்களை, அமில ஊடகத்தில், 2 மணிநேர கால இடைவெளியில் K2Cr2O7 போன்ற வலிமையான ஆக்ஸிஜனேற்றம் செய்ய தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவானது வேதி ஆக்ஸிஜன் தேவை (COD) |
| (ii) | உயிருள்ள துகள் பொருள்கள் | உயிரற்ற துகள் பொருள்கள் |
| 1. | காற்றில் விரவியுள்ள பாக்டீரியா, பூஞ்சை, நுண்பூஞ்சை, பாசி போன்ற நுண்ணுயிர்களாகும். | சிறிய திண்ம துகள்கள் மற்றும் காற்றில் நிலை பெற்றுள்ள திரவ மூலக்கூறுகளாகும். |
| 2. | சில பூஞ்சைகள் மனிதர்களுக்கு ஒவ்வாமையும் தாவரங்களில் நோய்களையும் உண்டாக்குகின்றன. | தூசி, மூடுபனி, கரும்புகை போன்றவை மனித ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிப்பவை. |
17.
1.வளிமண்டலத்தில் உள்ள CO2 மழை நீரில் கரைந்திருப்பின் காரணத்தால் சாதாரணமாக மழை நீரின் pH மதிப்பு 5.6 ஆக உள்ளது.
2.மழை நீரின் pH மதிப்பு 5.6 க்கு கீழ் குறையும்போது, அது அமில மழை என்றழைக்கப்படுகிறது.
3.காற்று மண்டலத்தில் உள்ள சல்பர் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள், மேகங்களில் உலா நீர்த்திவலைகளால் உறிஞ்சப்பட்டு முறையே கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலமாக மாற்றப்படுவதால் இது அமில மழை என அறியப்படுகிறது.
அமில மழையின் தீய விளைவுகள்:
1.அமில மழையானது, கட்டிடங்கள் மற்றும் பளிங்கு கட்டமைப்பு பொருளின்மீது அதிகமான பாதிப்பை உருவாக்குகிறது. பளிங்குக்கற்களின் மீது நிகழும் இந்தத்தாக்குதல் "கல்குஷ்டம்" எனப் பெயரிடப்படுகிறது.
\(CaCO_{ 3 }+{ H }_{ 2 }{ { { SO }_{ 4 } } }\longrightarrow CaSO_{ 4 }+{ H }_{ 2 }O+{ CO }_{ 2 }\uparrow \)
2.அமில மழையானது,நீர்ச் சூழலில் உள்ள தாவர மற்றும் விலங்குகளின் வாழ்க்கையை பாதிக்கிறது.
3.தாவர வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அமில மழை கரைத்து நீக்குவதன் மூலம் இது விவசாயம், மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு கேடு விளைவிக்கின்றன.
4.இது தண்ணீர் குழாய்களை அரித்து, இரும்பு, லெட் மற்றும் காப்பர் போன்ற கன உலோகங்களை குடிநீரில் கரைகிறது. இவை நச்சுவிளைவுகளை உருவாக்கும் தன்மை கொண்டவை.
5.இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளில் சுவாசக் கோளாறுகளை உருவாக்குகிறது.
18.
மீத்தேன் மற்றும் ஈத்தேனில் குளோரோபுளூரோ பெறுதிகளானவை ஃபிரியான்கள் எனும் வணிகப் பெயரில் குறிக்கப்படுகின்றன.
இந்த CFC சேர்மங்கள் நிலைத்தன்மை அகற்றவை,அரிக்கும் தன்மையற்றவை, எளிதில் தீப்பற்றாதவை மற்றும் எளிதில் திரவமாகும் வாயுக்கள்.
மேலும் இவை குளிர்ப்பதனப் பெட்டிகள், குளூரூட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் நுரைப்புகள் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகின்றன.
உயிர்வளி மண்டல அடுக்குகளில் பயணிக்கும் சூப்பர்சானிக் ஜெட்விமானங்கள் மற்றும் ஜம்போஜெட்களிலிருந்து CFC வாயுக்கள் வெளிப்படுகின்றன.
இவை அடிவெளிப்பகுதியிலிருந்து மெதுவாக அடுக்கு மண்டலத்திற்கு செல்கின்றன.
அவைகள் 50 முதல் 100 ஆண்டுகள் வரை மிக நீண்ட களத்திற்கு நிலைத்து உள்ளன.
uv கதீரவேசின் முன்னிலையில் CFC வாயுக்கள் தனி உறுப்புகளாக சிதைக்கின்றன.
வினைச் சங்கிலியில் குளோரின் தனி உறுப்புகள் மீண்டும் உருவாகின்றன.குளோரின் தனி உறுப்புகளின் இந்தத்தொடர் தாக்குதலின் காரணமாக ஓசோன் படலம் மெலிந்து, ஓசோன் துளைகள் உருவாகின்றன.
19.
பனிப்புகை என்பது புகை மற்றும் மூடுபனி ஆகியவற்றின் சேர்க்கை ஆகும்.
| வ.எண் | தீவிர பனிப்புகை | ஒளிவேதி பனிப்புகை |
| 1. | குளிர்ந்த, ஈரப்பதம் நிறைந்த காலநிலையில் உருவாகிறது. | சூடான, உலர்ந்த மற்றும் சூரிய ஒளி நிறைந்த காலநிலையில் உருவாகிறது. |
| 2. | பொதுவாக காலையில் நிகழ்கிறது, சூரிய உதயத்திற்கு பிறகு மிகவும் மோசமடைகிறது. | உச்சிவேளையில் உருவாகி, பிற்பகலில் மிகவும் மோசமடைகிறது.. |
| 3. | SO2 ஆனது தூண்டப்பட்ட ஆக்சிஜனேற்றத்தால் SO3 ஆக மாற்றமடைந்து ஈரப்பதத்துடன் வினைப்பட்டு, கந்தக அமில கற்றுக்கரைசலை தருவதன் காரணமாக இது உருவாகிறது. | புகை, தூசி, மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள், ஹைட்ரோகார்பன்கள் போன்ற காற்று மாசுபடுத்திகள் நிரம்பிய மூடுபனி ஆகியவற்றின் சேர்க்கையால் சூரிய ஒளி முன்னிலையில் உண்டாகிறது. |
20.
பசுமை வேதியல் என்பது, அபாயகரமான பொருள்களின் பயன்பாடு அல்லது நீக்கும் உருவாக்கத்தை குறைக்கும் அல்லது நீக்கும் வகையில் விளைபொருள்கள் மற்றும் செயல்முறைகள் ஆகியவற்றை திட்டமிடுதலை ஊக்குவிக்கும் தத்துவம் ஆகும்.
21.
ஒளிவேதி பனிப்புகையில் உள்ள ஓசோன் காற்று மாசுபடுத்திகள் நிரம்பிய மூடுபனி ஆகியவற்றின் சேர்க்கையால் சூரிய ஒளி முன்னிலையில் உண்டாகிறது.
22.
1. பனிப்புகை என்பது புகை மற்றும் மூடுபனி ஆகியவற்றின் சேர்க்கை ஆகும்.
2. இது காற்றில் விரவியுள்ள திரவதுளிகளை உருவாக்குகிறது.
23.
1.தாவர வளர்ச்சி மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நச்சுப் பொருள்கள், கதீர்வீச்சுப் பொருள்கள், வேதி உப்புகள் மற்றும் நோயுண்டாக்கும் காரணிகள் விடாப்பிடியாக, மண்ணில் உருவாக்கப்படும் நிகழ்ச்சி, மண் மாசுபாடு என வரையறுக்கப்படுகிறது.
2.மண் மாசுபாடானது, மண்ணின் அமைப்பு, மண் வளம், நிலத்தடி நீரின் தரம் மற்றும் உயிர்ச் சூழல் அமைப்பில் காணப்படும் உணவுச் சங்கிலி ஆகியவற்றை பாதிக்கின்றன.
24.
1. நீரின் தரத்தை குறைக்கக்கூடிய வகையில் அந்நிய பொருள்களோ அல்லது வெப்பம் போன்ற காரணிகளோ சேர்க்கப்படுதல், நீர்மாசுபடுதல் என வரையறுக்கப்படுகிறது.
2. இதனால் நீர் ஆரோக்கியமற்றதாக அல்லது பயன்படுத்த தகுதியற்றதாக மாறுகிறது.
25.
1. பனிப்புகையானது அமில மழைக்கு காரணமாகிறது.
2. பார்வைத்திறன் குறைவை ஏற்படுத்துகிறது.
3. மூச்சுக்குழல் எரிச்சலை உருவாக்குகிறது.
26.
1.கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களால் மட்டுமே ஆக்கப்பட்ட சேர்மங்கள் ஹட்ரோகார்பன்கள் என்றழைக்கப்படுகின்றன.
2. இவை இயற்க்கையாகவும் (சதுப்புநிலவாயு), வாகன எரி பொருள்கள் முற்றிலுமாக எறியாததாலும் உருவாக்கப்படுகின்றன.
3. இவை வலிமை மிகுந்த புற்றுநோய் உருவாக்கம் காரணிகளாகும். எடுத்துக்காட்டாக பல்லணு அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAH) புற்றுநோய் காரணிகளாகும். இவை கண் மற்றும் மூக்கு ஆகியவற்றின் எரிச்சலை உருவாக்குகின்றன.
27.
1.உயிரினங்களின் மீது தீங்கு விளைவுகளை உருவாக்கும் வகையில், காற்றில் நிகழும் விரும்பத்தகாத மாற்றங்கள் கற்று மாசுபாடு என்றழைக்கப்படுகிறது.
2.காற்று மாசுபாடு என்பது அடிவெளி மண்டலம் மற்றும் அடுக்கு மணடலத்துடன் வரையறுக்கப்பட்டுள்ளது. முதன்மையாக வளிமண்டலக் காற்றில் அதிக அளவில் வெளிவிடப்படும் விரும்பத்தகாத பொருள்களால் காற்று மாசுபாடு உருவாகிறது.
28.
1. கண், தோல் மற்றும் நுரையீரலில் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. மேலும் ஆஸ்துமா நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
2. இரப்பர் பொருள்கள், ஓசோன் கவர்ச்சி கொண்டவையாகும், மேலும் இவை பனிப்புகையால் வெடிப்பு மற்றும் மங்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றன.
3. அதிக செறிவில் உள்ள ஓசோன் மற்றும் NO போன்றவை மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், மார்வலி, சுவாச அடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.
4. PAN ஒரு தாவர நச்சாகும், இவை தளிர் இலைகளை தாக்குகின்றன. இதனால் இலைகளின் மேற்பரப்பு பழுப்பு நிறமாகவும், பளபளப்பாகவும் மாறுகிறது.
5. இது, உலோகங்கள், கற்கள், கட்டிட பொருள்கள் மற்றும் வர்ணம் பூசப்பட்ட பரப்புகளை அரிக்கிறது.
29.
உருவாதல்:
உயர் வெப்பநிலை எரிதல் செயல் முறைகள்,காற்றில் நைட்ரஜன் ஆக்ஸிஜனேற்றமடைதல் மற்றும் எரிபொருள்கள் எரித்தல் ஆகியவற்றின் போது நைட்ரஜன் ஆக்ஸைடுகள் வெளியேற்றப்படுகின்றன.

விளைவுகள்:
1. இந்த வாயுக்கள் அனைத்தும் நைட்ரிக் அமிலமாக மாற்றப்பட்டு அமில மழையாக பொழிகின்றன.
2. கடுமையான போக்குவரத்து நெரிசலில், நைட்ரஜன் ஆக்சைடுகள் செம்பழுப்பு நிற தூசிப் பனி மூட்டத்தை உருவாக்குகின்றன.
3. நைட்ரஜன் டையாக்சைடானது தாவர இலைகளை வெகுவாக பாதித்து ஒளிர்ச்சேர்க்கையை தடுக்கிறது.
4. NO2 ஆனது சுவாசப்படி எரிச்சலூட்டி
5. NO2 ஆனது ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பாதிப்பை உருவாக்குகிறது.
6. NO2 ஆனது பல்வேறு துணி இழைகள் மற்றும் உலோகங்களும் தீங்கு விளைவிக்கக்கூடியது.
30.
உருவாதல்:
1. இது சூடான, உலர்ந்த மற்றும் சூரியஒளி நிறைந்த காலநிலையில் உருவாகிறது.
2. இவ்வகை பனிப்புகையானது புகை, தூசி மற்றும் பனிப்புகையானது புகை, தூசி, மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள், ஹைட்ரோகார்பன்கள் போன்ற காற்று மாசுபடுத்திகள் நிரம்பிய மூடுபனி ஆகியவற்றின் சேர்க்கையால் உண்டாகிறது.
தன்மைகள் மற்றும் விளைவுகள்:
1. இது உச்சிவேளையில் உருவாகிய, பிற்பகலில் மிகவும் மோசமடைகிறது.
2. NO2 மற்றும் O3 போன்ற ஆக்சிஜனேற்றிகள் அதிக செறிவில் காணப்படுவதால் இவை ஆக்சிஜனேற்றம் தன்மையுடையவை.
3. எனவே இது ஆக்சிஜனேற்ற பனிப்புகை எனவும் அழைக்கப்படுகிறது.
ஒளிவேதிப் புகை உருவாதல் தொடர் வினைகள்:
N2 + O2 \(\rightarrow\) 2NO
2NO + O2 \(\rightarrow\) 2NO2

(O) + O2 \(\rightarrow\) O3
O3 + NO \(\rightarrow\) NO2 + O2

1. NO மற்றும் O3 ஆகியன வலிமைமிக்க ஆக்சிஜனேற்றிகளாகும், மேலும் இவை, மாசுபட்ட காற்றில் உள்ள எரிக்கப்படாத ஹைட்ரோகார்பன்களுடன் வினைபுரிந்து ஃபார்மால்டிஹைடு, அக்ரோலின் மற்றும் பெராக்ஸி அசிட்டைல் நைட்ரேட் (PAN) ஆகியவற்றை உருவாக்க முடியும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards