11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பொட்டாசியம் குளோரைடில் அயனிப்பிணைப்பு உருவாதலை விளக்குக.
2.
மாறாத அழுத்தத்தில், வெப்பநிலை மாற்றத்தால் கனஅளவில் ஏற்படும் மாற்றம் குறித்து எழுதுக.
3.
கார உலோகங்களின் வேதிப் பண்புகள் சிறு குறிப்பு வரைக.
4.
டி-சான்கோர்டாய்ஸ் வகைப்பாட்டினை எழுது.
5.
n-வது வட்டப்பாதையில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றல் En=\(\frac { (-1312.8){ Z }^{ 2 } }{ { n }^{ 2 } } \) KJ mol-1 இச்சமன்பாட்டிலிருந்து நீ அறிவதென்ன?
6.
KOH கிராம் சமான நிறையை கணக்கிடுக.
7.
தூர்ந்துபோதல் என்று அறியப்படுவது எது? ஏன் ?
8.
சவ்வுடு பரவல் அழுத்தத்திலிருந்து மோலார் நிறையை கணக்கிடும் முறையை தருவி.
9.
0.16 g எடையுள்ள கரிமச் சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaC2 சேர்த்து வீழ்ப்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35 g சல்பரின் சதவீதத்தை கான்(30.04).
10.
Q ன் மதிப்பை KC உடன் ஒப்பிட்டு வினையின் திசையினைத் எவ்வாறு தீர்மானிப்பாய்?
11.
அசிட்டால்டிஹைடு PCI5 உடன் புரியும் வினை யாது?
12.
0.24 g வாயுவானது 1.5 atm அழுத்தத்தில் 1 லிட்டர் நீரில் கரைகிறது. மாறாத வெப்பநிலையில், அழுத்தத்தை 6 atm க்கு அதிகரிக்கும்போது கரைக்கப்படும் வாயுவின் எடையை கணக்கிடுக.
13.
250 C வெப்பநிலையில் ஒரு சமநிலை வினைக்கு Kp=0.0260 மற்றும் ΔH= 32.4KJmol-1 370 C வெப்பநிலையில் KPன் மதிப்பினைக் கண்டறிக.
14.
தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?
15.
பின்வருவனவற்றிற்கான சமன்பாடுகளை எழுதுக
(i) உலோக இடப்பெயர்ச்சி வினை
(ii) அலோக இடப்பெயர்ச்சி வினை
16.
சம ஆற்றல் ஆர்பிட்டால்கள் என்றால் என்ன? இந்த சம ஆற்றல் பண்பு எவ்வாறு இழக்கப்படுகிறது. உதாரணத்துடன் கூறுக.
17.
C3H6 என்ற (A) ஹைட்ரோ கார்பன் HBr உடன் வினைபுரிந்து (B) ஐத் தருகிறது. (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C3H6O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. (A), (B) மற்றும் (C) ஐக் கண்டறிக. வினைகளை விளக்குக.
18.
ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.
19.
ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு ஆக்சிஜனேற்றியாகவும், ஆக்சிஜன் ஒடுக்கியாகவும் செயல்படுகிறது. இக்கூற்றினை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் நிரூபிக்க
20.
திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 50 g கால்சியம் கார்பனேட்டை முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன் டைஆக்ஸைடின் கனஅளவு எவ்வளவு?
1.
1. பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு:
2. குளோரின் எலக்ட்ரான் அமைப்பு:
3. பொட்டாசியம் தனது இணைத்திறன் கூட்டில் ஒரு எலக்ட்ரானையும், குளோரின் தனது இணைதிறன் எலக்ட்ரானையும், குளோரின் தனது இணைதிறன் கூட்டில் ஏழு எலக்ட்ரானையும் பெற்றுள்ளது.
4. பொட்டாசியம் அணு ஒரு எலக்ட்ரானை இழப்பதால் ஆர்கானின் நிலையான எல்கட்ரான் அமைப்பினை பெற்று K+ அயனியாக மாறுகிறது.
2.
ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்விற்கான கனஅளவில் ஏற்படும் ஒப்பீட்டு அதிகரிப்பு (∝) என்பது \(\frac { 1 }{ { V }_{ e } } \left( \frac { \triangle V }{ \triangle T } \right) \) க்குச் சமம்
எனவே,
V=\(\left( \frac { \triangle V }{ \triangle T } \right) \)T+V0
V=V0(∝T+1).
3.
1. கார உலோகங்கள் அதிக வினைதிறன் கொண்டுள்ளன.
2. இந்த வினைதிறன் Li லிருந்து Cs வரை அதிகரிக்கிறது.
3. ஏனெனில் தொகுதியில் மேலிருந்து கீழாக அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.
4. அனைத்து கார உலோகங்களும், அதிக எலக்ட்ரான் கவர் தன்மை கொண்ட தனிமங்களான ஆக்சிஜன் மற்றும் ஹேலஜன்களுடன் மிக அதிக வீரியத்துடன் வினைபுரிகின்றன.
4.
1. தனிமங்களின் பண்புகள், அவற்றின் அணுநிறையோடு கொண்டுள்ள ஒரு தொடர்பினை டி-சான்கோர்டாய்ஸ் எடுத்துக் கூறினார்.
2. அவரது கூற்றுப்படி, பொருட்களின் பண்புகள் அவற்றின் எண்களின் பண்புகளோடு தொடர்புடையது.
3. இவர் அணு நிறையினை குறிப்பிட 'எண்கள்' என்ற வார்த்தையினைப் பயன்படுத்தினார்.
5.
1. மேற்கண்ட சமன்பாட்டி, ஆற்றலானது முதன்மைக் குவாண்டம் எண்ணை மட்டுமே பொருத்து அமைகிறது.
2. n-ன் மதிப்பு அதிகரிக்கும் போது, ஆர்பிட்டாலின் ஆற்றலின் மதிப்பும் அதிகரிக்கும்.
6.
KOH ன் அமிலத்துவம் =1 eq mol-1
KOH ன் மோலார் நிறை = (1 x 39) + (1 x 16) + (1 x 1)
=56 g mol-1
KOH கிராம் சமான நிறை =56 கி mol-1
________
1 eq mol-1
= 56 g eq-1
7.
அதீத பசி வளர்ச்சியின் காரணமாக, நீரின் மேற்பரப்பு மூடப்பட்டு நீரில் உள்ள ஆக்சஸிஜன் செறிவு குறைக்கப்படுகிறது.
அதாவது பாசிபடர்ந்த நீரானது, நீர் நிலைகளில் வாழும் மற்ற உயிரினங்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
ஊட்டச்சத்து மிகுந்த நீர், நிலைகள், தாவர பெருக்கத்தை ஆதரிப்பதால், ஆக்ஸிஜன் மறுக்கப்பட்டு மற்ற விலங்குகளின் வாழ்க்கை அழிக்கப்படும் செயல் முறையின் காரணமாக ஏற்படும் பல்லுயிர் இழப்பு, தூர்ந்து போதல் என் அறியப்படுகிறது.
8.
வாண்ட் ஹாஃப் சமன்பாட்டின் படி
\(\pi \) = CRT
C = \(\frac { n }{ V } \)
இங்கு n = 'V' லிட்டர் கரைசலில் கரைக்கப்பட்டுள்ள கரைபொருளின் மோல் எண்ணிக்கை.
எனவே , \(\pi =\frac { n }{ V } RT\) or \(\pi \)V = nRT ........(1)
wA கிராம் கரைப்பானில் , wB கிராம் எளிதில் ஆவியாகாத கரைபொருளை கரைத்து , கரைசல் தயாரிக்கப்பட்டால் , அதன் மோல் எண்ணிக்கை n என்பது
n = wB /MB
ஏனெனில் MB - கரை பொருளின் மோலார் நிறை இந்த 'n' மதிப்பை சமன்பாடு (1) ல் பிரதியிட, நமக்கு கிடைப்பது
\(\pi =\frac { { w }_{ B } }{ V } \frac { RT }{ { M }_{ B } } \)
\({ M }_{ B }=\frac { w_{ B } }{ V } \frac { RT }{ \pi } \) ........(2)
சமன்பாடு (2) ஐ பயன்படுத்தி , கரைபொருளின் மோலார் நிறையை கணக்கிட முடியும்
9.
கரிமச் சேர்மத்தின் நிறை (w)=0.16 g
பேரியம் சல்பேட்டின் நிறை (x)=0.35 g
சல்பரின் சதவீதம் =\(\frac{32}{233}\times \frac{x}{w}\times100\)
=\(\frac{32}{233}\times \frac{0.35}{0.16}\times100\)
=30.04%
10.
Q = KC, எனும்போது வினை சமநிலையில் உள்ளது.
Q > KC, எனும்போது வினையானது பின்னோக்கிய திசையில் நிகழ்கிறது.
Q < KC, எனும்போது வினையானது முன்னோக்கிய திசையில் நிகழ்கிறது.
11.

12.
Pகரைபொருள்=KH xகரைபொருள்
1.5 atm அழுத்தத்தில்
p1 = KH x1-----------(1)
6 atm அழுத்தத்தில்
p2 = KH x2------------(2)
சமன்பாடு (1) ஐ (2) ஆல் வகுக்க
p1/p2 = x1/x2
1.5/6.0 = 0.24/x2
எனவே x2 = 0.24 x 6.0/1.5 = 0.96 g/L.
13.
T1 = 25 + 273 = 298 K
T2 = 37 + 273 = 310 K
ΔH = 32.4 KJmol-1 = 32400 Jmol-1
R = 8.314 JK-1 mol-1
KP1= 0.0260
Kp2 = ?
\(\log {K_2\over K_1}={\Delta H^o\over 2.303R}[{T_2-T_1\over T_2T_1}]\)
\(\log {K_2\over K_1}={32400\over 2.303\times 8.314}({310-298\over 310\times 298})\)
\(={32400\times 10\over 2.303\times 8.314\times 310\times 298}\)
= 0.2198
\({K_2\over K_1}=\) antilog 0.2198 = 1.6588
K2 = 1.6588 x 0.026 = 0.0431
14.
1.எந்த ஒரு செயல் முறையின் தன்னிச்சை தன்மையும் மூன்று வெவ்வேறு காரணிகளை பொறுத்து அமைகிறது.
2.ஒரு செயல்முறையின் என்தால்பி மாற்றம் எதிர்குறி மதிப்பை பெற்றிருந்தால், அச்செயல் முறையானது வெப்பம் உமிழ் செயல்முறையாகும், மேலும் தன்னிச்சையாக நிகழலாம்.(\(\triangle\)H எதிர்குறிஉடையது)
3.ஒரு செயல்முறையின் என்ட்ரோபி மாற்றம் நேர்குறி மதிப்பை பெற்றிருந்தால், அச்செயல் முறையானது தன்னிச்சையாக நிகழலாம்.(\(\triangle\)S நேர்குறிஉடையது)
4. ஒரு வினை தன்னிச்சையாக நிகழ, மேற்கூறிய இரண்டின் தொகுப்பான கட்டிலா ஆற்றல் மதிப்பு கண்டிப்பாக எதிர்குரியை பெற்ரறிருக்க வேண்டும். அதாவது ஒரு வினை தன்னிச்சையாக நிகழ்வதற்கு தேவையான நிபந்தனை \(\triangle\)H-T\(\triangle\)S<0 என்பதாகும்.
15.
(i) உலோக இடப்பெயர்ச்சி வினை

(ii) அலோக இடப்பெயர்ச்சி வினை

16.
சம ஆற்றல் ஆர்பிட்டால்கள்:
1. ஒரு p ஆர்பிட்டாலுக்கு மூன்று வகையான திசையமைப்புகள் உள்ளன.
2. அதாவது px, py, pz இம்மூன்றும் சமமான ஆற்றலைப் பெற்றுள்ளன. எனவே, இவை சம ஆற்றல் ஆர்பிட்டால்கள் என அழைக்கப்படுகின்றன.
சம ஆற்றல் பண்பு இழத்தல்:
1. மின்புலம் மற்றும்
2. காந்தப்புலம்
இவற்றினால் சம ஆற்றல் பண்பு இழக்கப்படுகிறது.
17.

| பெயர் | வாய்பாடு | பெயர் |
| A | \({ CH }_{ 3 }-CH={ CH }_{ 2 }\) | புரப்பீன் |
| B | \({ CH }_{ 3 }-{ CH }_{ 2 }-{ CH }_{ 2 }-Br\) | n-புரப்பைல் புரோமைடு |
| C | \({ CH }_{ 3 }-{ CH }_{ 2 }-{ CH }_{ 2 }OH\) | n-புரப்பைல் ஆல்கஹால் |
18.
1. ஜெர்மன் மொழியில் ஆஃபா என்ற சொல்லுக்கு கட்டமைத்தல் என்பது பொருளாகும்.
2. அடி ஆற்றல் நிலையில் உள்ள அனுவின், ஆர்பிட்டால்கள் அவற்றின் ஆற்றலின் ஏறுவரிசையில் நிரப்பப்படுகின்றன.
3. அதாவது, எலக்ட்ரான்கள், அவை நிரப்பப்படுவதற்கு வாய்ப்புள்ள ஆர்பிட்டால்களில், எந்த ஆர்பிட்டால் குறைந்த ஆற்றலுடையதோ அந்த ஆர்பிட்டாலில் முதலில் நிரம்பும்.
4. குறைவான ஆற்றலுடைய ஆர்பிட்டால் முழுமையாக நிரப்பப்பட்ட பின்னரே, எலக்ட்ரானானது அடுத்த உயர் ஆற்றலுடைய ஆர்பிட்டாலினுள் நுழையும்.

5. மேலே உள்ள படம் ஆஃபா தத்துவத்தின் அடிப்படையில், பல்வேறு ஆர்பிட்டால்களின் நிரப்பப்படும் வரிசை தரப்பட்டுள்ளது.
6. இவ்வரிசை (n+1) விதிப்படி அமைந்துள்ளது.
19.
1. ஹைட்ரஜன் பெராக்சைடு, ஆக்ஸிஜனேற்றி மற்றும் ஆக்ஸிஜன் ஒடுக்கி ஆகிய இரண்டு வினைபொருட்களாகவும் செயல்படும் தன்மையுடையது.
2. வழக்கமாக ஆக்ஸிஜன் ஒடுக்க வினைகள் கார ஊடகத்திலும் நிகழ்த்தப்படுகின்றன.
ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதற்கு எடுத்துக்காட்டு:
அமில ஊடகத்தில்,
H2O2 + 2H+ + 2e- \(\rightarrow\) 2H2 O (E° = + 1.77v)
எடுத்துக்காட்டு:
2FeSO4 + H2SO4 + H2O2 \(\rightarrow\) Fe2(SO4)3 + 2H2O
ஒடுக்கியாக செயல்படுவதற்கு எடுத்துக்காட்டு:
கார ஊடகத்தில்,
\({ HO }_{ 2 }^{ - }\) + OH- \(\rightarrow\) O2 + H2 O + 2e- (E° = +0.08v)
எடுத்துக்காட்டு:
2KMnO4(aq) + 3H2O2(aq) \(\rightarrow\) 2MnO2 + 2KOH + 2H2O + 3O2(g)
20.
சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
CaCO3 (s) \(\overset { \Delta }{ \longrightarrow } \) CaO(s) + CO2 (g)
மேற்கண்டுள்ள சமன்பாட்டின்படி
1 மோல் (100g) CaCO3 ஐ வெப்பப்படுத்தும் போது 1 மோல் CO2 உருவாகிறது

திட்ட வெப்ப அழுத்த நிலைகளில், 1 மோல் CO2 ஆனது 22.7 லிட்டர் கனஅளவை அடைத்துக் கொள்ளும்.
திட்ட வெப்ப அழுத்த நிலைகளில், 50 g CaCO3 ஐ வெப்பப்படுத்தும் போது

= 11.35 லிட்டர் of CO2 வைத் தருகிறது
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards