11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
கரிம வேதியியலின் அடிப்படைகள்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கரிமச் சேர்மங்கள் பின்வரும் எவற்றில் கரையும்?
நீர்
HCL
முனைவுள்ள கரைப்பான்கள்
முனைவற்ற கரைப்பான்கள்
2.
சோடியம் நைட்ரோபுருசைடு, சல்பைடு அயனியுடன் வினைப்பட்டு ஊதா நிறத்தை தோற்றுவிப்பதற்கான காரணம்.
[Fe(CN)5 NO]3-
[Fe(NO)5 CN]+
[Fe(CN)5NOS]4-
[Fe (CN)5 NOS]3-
3.
ஆர்தோ மற்றும் பாரா நைட்ரோபீனால் கலவையை பிரித்தெடுக்க பயன்படும் முறை
கொதிநிலைமாறா வாலை வடித்தல்
சிதைத்து வடித்தல்
நீராவி வாலை வடித்தல்
பிரிக்க முடியாதது
4.
பின்வருவனவற்றுள் எது ஒளிசுழற்றும் பண்புடையது?
3 – குளோரோபென்டேன்
2 குளோரோ புரோப்பேன்
மீசோ டார்டாரிக் அமிலம்
குளூக்கோஸ்
5.
ன் IUPAC பெயர்
2 – புரோமோ -3 – மெத்தில் பியூட்டனோயிக் அமிலம்
2 - மெ த்தில் - 3- புரோமோ பியூட்டனோயிக் அமிலம்
3 - புரோமோ - 2 -மெத்தில் பியூட்யிக் அமிலம்
3 - புரோமோ- 2, 3 - டைமெத்தில் புரோப்பனோயிக் அமிலம்
6.
ஆல்காடையீன்களின் பொதுவான வாய்பாடு
CnH2n
CnH2n-1
CnH2n-2
CnHn-2
7.
டுமாஸ் முறையை பயன்படுத்தி நைட்ரஜனை அளவிடும்போது, 0.35g கரிமச்சேர்மமானது 150oC மற்றும் 760mm Hg அழுத்தத்தில் 20.7mL நைட்ரஜனை தருகிறது. அச்சேர்மத்தில் காணப்படும் நைட்ரஜனின் சதவீதத்தினைக் காண்க.
8.
காரியஸ் முறையில், 0.24g கரிமச்சேர்ம்ம் 0.287g சில்வர்குளோரைடைத் தருகிறது. அச்சேர்ம த்தில் உள்ள குளோரினின் சதவீத்த்தினைக் காண்க.
9.
தாள் வண்ணப்பிரிகை முறையினை விளக்குக.
10.
லாசிகன் முறையில் கரிமச்சேர்மங்களில் காணப்படும் நைட்ரஜனைக் கண்டறிவதில் நடைபெ றும் வேதிவினைகளை விளக்குக.
11.
நைட்ரோ ஆல்கேன் படி வரிசையில் உள்ள முதல் ஆறு சேர்மங்களின் மூலக்கூறு வாய்ப்பாட்டினை எழுதுக.
12.
ஒரினவரிசை (அ) படிவரிசை பற்றி குறிப்பெழுதுக.
13.
கரிம சேர்மங்களின் பொதுபண்புகளைத் தருக.
14.
பதங்கமாதல் என்றால் என்ன? பதங்கமாதல் எதற்குப் பயன்படுகிறது?
15.
வடிவ மாற்றியங்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு ஏற்படுகின்றன?
16.
பாஸ்பரஸை கொண்டுள்ள 0.33 எடையுள்ள கரிமச் சேர்மம் 0.397g Mg2P2O7யை தந்தது. அச்சேர்மத்தில் உள்ள P இன் சதவீதத்தினைக் கணக்கிடுக.
17.
0.284 எடையுள்ள கரிமச்சேர்மம் 0.287எடையுள்ள AgClயை காரியஸ் முறைப்படி அளந்தறியபடுகிறது எனில், Clன் சதவீதத்தைக் காண்க.
18.
பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக
i. சைக்ளோ ஹெக்ஸா-1,4-டையீன்
ii. எத்தைனைல் சைக்ளோ ஹெக்ஸேன்
19.
மெல்லிய அடுக்கு வண்ணப்பிரிகை முறையை விளக்கு.
20.
சல்பரை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.
21.
0.26g நிறையுள்ள கரிமசேர்மம் 0.039g நீரிரனையும், 0.245g கார்பன் டை ஆக்சைடினையும் எரிதலின் மூலம் தருகிறது. C மற்றும் H ன் சதவீதத்தினை கணக்கிடுக.
1.
(d)
முனைவற்ற கரைப்பான்கள்
2.
(c)
[Fe(CN)5NOS]4-
3.
(c)
நீராவி வாலை வடித்தல்
4.
(d)
குளூக்கோஸ்
5.
(c)
3 - புரோமோ - 2 -மெத்தில் பியூட்யிக் அமிலம்
6.
(c)
CnH2n-2
7.
கரிமச் சேர்மத்தின் எடை = 0.35
நைட்ரஜனின் கன அளவு = 20 ml
= 20. 7 x 10-3 L
வெப்ப நிலை = 1500C
= 150 + 273 = 423 k
நைட்ரஜனின் அழுத்தம் = 760 mm Hg
நிர்ம அழுத்தம் = 12 mm Hg
உலர் நைட்ரஜனின் அழுத்தம் = 760 - 12
\(\frac { { P }_{ 1 }{ V }_{ 1 } }{ { T }_{ 1 } } =\frac { { P }_{ 0 }{ v }_{ 0 } }{ T_{ 0 } } \)
\({ V }_{ 0 }=\frac { 748\times 20.7\times { 10 }^{ -3 } }{ 423 } \times \frac { 273 }{ 760 } \)
= 19.37 x 10-3
நைட்ரஜனின் சதவீதம் = \(\left( \frac { 28 }{ 22.4 } \times \frac { { v }_{ 0 } }{ w } \right) \times 100\)
= \(\frac { 28 }{ 22.4 } \times \frac { 19.37\times { 10 }^{ -3 } }{ 0.35 } \times 100\)
= 69.18%
8.
குளோரினின் சதவீதம்

= \(\frac { 35.5 }{ 143.5 } \times \frac { 0.287 }{ 0.24 } \times 100\)
= 29.58%
9.
(i) பங்கிட்டு வண்ணப் பிரிகை தாள் வண்ணப் பிரிகையானது பங்கிட்டு வண்ணப் பிரிகை முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
(ii) மெல்லிய அடுக்கு வண்ணப் பிரிகை முறையில் பின்பற்றப்படும் அதே செயல்முறை இங்கும் பின்பற்றப்படுகிறது.
(iii) ஆனால் இங்கு ஒரு காகிதத் துண்டு பரப்புக்கவர் பொருளாக செய்லபடுகிறது.
(iv) இம்முறையில் நிலையான மற்றும் நகரும் நிலைமைகளுக்கிடையே வெவ்வேறு விகிதங்களில் பகுதி பொருள்கள் பங்கிடப்படுகின்றன.
(v) இம்முறையில் வண்ணப்பிரிகை காகிதம் எனப்படும் தனித்துவமிக்க காகிதம் நிலையான நிலைமையாக பயன்படுத்தப்படுகிறது.
(vi) ஒரு வண்ணப் பிரிகை தாள் துண்டின் அடிப்பகுதியில் கலவை கரைசல் ஒரு புள்ளியாக வைக்கப்படுகிறது
(vii) இது தகுந்த கரைப்பானில் தொட்டுக் கொண்டிருக்குமாறு தொங்கவிடப்படும் போது நகரும் நிலைமையாக செயல்படும் கரைப்பான் மேல்நோக்கி கலவையின் வழியே நகர்கிறது.
(viii ) வண்ணப் பிரிகைகளுக்கு பயன்படுத்தப்படும் நிலையான மற்றும் நகரும் நிலைமைகளுக்கிடையே பகுதிப் பொருள்கள் பங்கிடப்படுவதன் அடிப்படையில் காகிதமானது குறிப்பிட்ட சில பகுதி பொருள்களை தேங்கியிருக்கச் செய்கிறது.
(xi) வண்ணப் பிரிகையில் துவக்கத்தில் புள்ளி இடப்பட்ட இடத்திலுருந்து வெவ்வேறு பகுதிப்பொருள்கள் நிலை வெவ்வேறு தூரங்களில் அமையும்.
(x) நிறமற்ற பகுதிப்பொருள்களை uv ஒளிக் கொண்டோ அல்லது தகுந்த தெளிப்புக் காரணியைக் கொண்டோ அறிந்துணர முடியும்.
10.
1.லாசிகன்ஸ் உறுக்குசாறு சோதனை எல்லா வகையான நைட்ரஜன் சேர்மங்களிலுள்ள நைட்ரஜனை கண்டறிய உதவும் மிகச்சிறந்த ஆய்வாகும்.
2.சேர்மத்திலுள்ள நைட்ரஜன் சோடியம் சயனைடாக மாற்றப்பட்டு பின் புதிதாக தயாரிக்கப்பட்ட பெர்ஸ்சல்பேட் கரைசல் மற்றும் பெர்ரிக் அயனி மற்றும் அடர் HCL வுடன் பிரஷ்யன் நீல நிறம் (அ) பச்சை நிறம் (அ) வீழ்ப்படிவினைத் தருகிறது.
3.இதனால் நைட்ரஜன் உள்ளது உறுதிப்படுத்தப்படுகிறது.
4. மேற்கண்ட வினையில் உண்டான பச்சை நிற வீழ்படிவினை கரைக்க HCL சேர்க்கப்படுகிறது.
இப்பச்சை நிற வீழ்படிவான பெர்ரஸ் ஹைடிராக்ஸைடு அதிக அளவு NaOH மற்றும் FeSO4 னால் உண்டாக்கப்படுகிறது.
5. பிரஷ்யன் நீளம் உருவாதலில் பின்வரும் வினைகள் நடைபெறுகின்றன.

FeSO4+2NaOH⟶Fe(OH)2+Na2SO4
(அதிக சோடியத்திலிருந்து
6NaOH+Fe(OH)2 ⟶Na4[Fe(CN)6]+2NaOH
சோடியம் பெர்ரோசயனைடு
3Na4[Fe(CN)6]+FeCl3⟶Fe4[Fe(CN)6]3+12NaCl
ஃபெரிக் பெர்ரோசயனைடு பிரஷ்யன் நீலம் அல்லது பச்சைநிற வீழ்படிவு
6. N மற்றும் S சேர்ந்து காணப்பட்டால் நீலம் (அ) பச்சை நிறத்திற்கு பதிலாக இரத்த சிவப்பு நிறம் தோன்றும்.
7. இதற்கு பின்வரும் வினைகள் காரணமாகின்றன.
NaCNS+FeCl3 ⟶Fe(CNS)3+3NaCl
ஃபெரிக் சல்போசயனைடு (இரத்த சிவப்பு நிறம்)
11.
(i) CH3NO2
(ii) C2H5NO2
(iii) C3H7NO2
(iv) C4H9NO2
(v) C5H11NO2
(vi) C6H13NO2
12.
ஒரு தனித்த வினை செயல் தொகுதியினைப் பெற்றுள்ள இரு அடுத்தடுத்த சேர்மங்களின் மூலக்கூறு வாய்பாடு CH2 என்ற தொகுதியால் தொடர்ச்சியான கரிமச் சேர்மங்கள் படிவரிசைச் சேர்மங்கள் எனப்படும்.
படிவரிசைச் சேர்மங்கள் ஒரு பொதுவான வாய்ப்பாட்டால் குறிப்பிடப்படுகின்றன.
(i) ஆல்கேன்கள் -C n H2n+2
(ii) ஆல்கீன்கள் -C n H2n
(iiii) ஆல்கைன்கள் - C n H2n-2
13.
இவைகள் கார்பனின் சகப்பிணைப்புச் சேர்மங்களாகும். நீரில் கரைவதில்லை. பென்சீன் டொலுவின் ஈதர், குளோரோபார்ம் போன்ற கரிமக்கரைப்பான்களில் எளிதில் கரைகின்றன.
பெரும்பாலான கரிமச் சேர்மங்கள் தீப்பற்றி எறியக்கூடியவை. (CCl4 தவிர). இவைகளின் சகப்பிணைப்புத் தன்மையினை குறைவான உருகுநிலை மற்றும் கொதிநிலையினைப் பெற்றுள்ளன.
கரிமச் சேர்மங்கள் அவற்றின் வினை செயல் தொகுதியால் இயல்பு அறியப்படுகின்றன.
14.
1. பென்சோயிக் அமிலம், நாப்தலீன் மற்றும் கற்பூரம் போன்ற சேர்மங்களை சூடுபடுத்தும் போது திண்ம நிலையிலிருந்து உருகாமல் (நீர்ம நிலை அடையாமல்) நேரடியாக ஆவி நிலைக்கு மாறுகிறது.
2. ஆவியை குளிரச் செய்யும்போது திண்மப் பொருள் மீண்டும் பெறப்படுகிறது.
3. இத்தகைய செய்முறை பதங்கமாக்கல் எனப்படும். எளிதில் ஆவியாகும் மற்றும் எளிதில் ஆவியாகாத திடப்பொருள்களை பிரித்தெடுக்க மிகச்சிறந்த முறையாகும்.
4. இம்முறை குறைந்த அளவே பயன்படுகிறது. ஏனெனில் சில சேர்மங்கள் மட்டுமே பதங்கமாகும்.
15.
1. கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பு அமைப்பினை சுழல் இயலாத் தன்மையினால் புறவெளியில் வெவ்வேறு வடிவமைப்புகளை பெற்றுள்ள புறவெளி மாற்றியன்கள் வடிவ மாற்றியன்கள் எனப்படுகின்றன.
2. கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பின் வழியே சுழற்ச்சித் தடையின் காரணமாகவோ அல்லது வளையச் சேர்மங்களில் ஒன்றைப் பிணைப்பின் வழியே ஏற்படும் சுழற்ச்சித் தடையினாலோ இவ்வகை மாற்றியன்கள் ஏற்படுகின்றன.
16.
17.
கரிமச் சேர்மத்தின் எடை=0.284 g
AgCl ன் எடை=0.287 g
143.5 g AgCl ல் உள்ள
குளோரின் எடை=35.5 g
0.287 g AgCl ல் உள்ள
குளோரின் எடை =\({35.5\over 143.5}\times {0.287\over 0.284}\)
Clன் சதவீதம்=\({35.5\over 143.5}\times {0.287\over 0.284}\times 100=24.98\)
18.
19.
1.இம்முறை மற்றுமொரு பரப்புக்கவர் வண்ணப்பிரிகை முறையாகும்.
2. மிகச்சிறிதளவு பகுதிப்பொருள்கள் உள்ள இம்முறையினை பயன்படுத்தி பிரித்தெடுக்கலாம்.
3.ஒரு கண்ணாடித் தகட்டின் மீது செல்லுலோஸ், சிலிக்காக் களி அல்லது அலுமினா போன்ற பரப்புக்கவர் பொருளால் மெல்லிய அடுக்கு உருவாக்கப்படுகிறது.
4.இத்தட்டான வண்ணத்தட்டு அல்லது மெல்லிய அடுக்கு வண்ணப்பிரிகைத்தட்டு என அழைக்கப்படுகிறது.
5.இத்தட்டினை உலர்த்திய பின்னர், அதன் ஒரு முனைக்கு அருகில் மேற்புறத்தில் ஒரு தூள் கலவை வைக்கப்படுகிறது. மேலும் இந்த தட்டானது நகரும் நிலைமை (கரைப்பான்) அடங்கிய மூடிய கலனில் வைக்கப்படுகிறது.
6.நகரும் நிலையானது, நுண்புழை ஏற்றத்தின் விளைவாக மேல்நோக்கி நகர்கிறது.
7.கலவையில் உள்ள ஒவ்வொரு பகுதிப்பொருள்களின் எந்த அளவிற்கு பரப்புக்கவரப்பட்டுள்ளதோ, அதற்கேற்றவாறு மேல் நோக்கி நகர்ந்து செல்லும் நகரும் நிலைமையுடன் (கரைப்பானுடன்) சேர்ந்து வெவ்வேறு தூரங்களில் நகர்கிறது.
8. இதனை தேக்கிவைத்திருத்தல் காரணி (Rf) மதிப்பின் மூலம் அறியலாம்.

9.நிறமுள்ள பகுதிப்பொருள்கள் TLC தட்டில் அவற்றின் நிறமுள்ள புள்ளிகளாக காண இயலும்.
10. நிறமற்ற சேர்மங்களை uv ஒளி அல்லது அயோடின் படிகங்களை பயன்படுத்துதல் அல்லது தகுந்த வினைப்பொருளை பயன்படுத்துதல் மூலம் கண்டுணரலாம்.
20.
காரியஸ் முறை:
1. எடை அறிந்த கரிமச்சேர்மம் புகையும் HNO3 யுடன் நன்கு வெப்பப்படுத்தப்படுகிறது.
2. C மற்றும் H ஆக்சிஜனேற்றம் அடைந்து CO2 மற்றும் H2O மேலும் சல்பர் சல்பியூரிக் அமிலமாக கீழ்க்கண்ட வினையின் படி நிகழ்கிறது.

3.கிடைக்கபெற்ற கரைசலின் அதிக அளவு BaCl2 கரைசல் சேர்க்கப்படுகிறது.
4.கரைசலில் உள்ள H2SO4, BaSO4, டாக மாற்றப்படுகிறது.
5.BaSO4 ன், ன் ஏரியிலிருந்து, சல்பரின் எடை மற்றும் அதன் சதவீதம் கணக்கிடப்படுகிறது.
செய்முறை:
1.எடை தெரிந்த கரிமச்சேர்மம், சில துளிகள் புகையும் HNO3 யுடன் சேர்க்கப்பட்டு தூய காரியஸ் குழாயில் எடுத்து சீல் வைக்கப்பட்டு, பின்னர் இரும்பு குழாயில் 5 மணி நேரம் சூடுபடுத்தப்படுகிறது.
2.பின்னர் இக்குழாய் குளிர்விக்கப்பட்டு சிறு துளையிடப்படுகிறது. இத்துளையின் வழியே குழாயின் உள்ளே உருவான வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.
3.பின்பு காரியஸ் குழாய் உடைக்கப்பட்டு அதில் உள்ளவை பீக்கரில் சேகரிக்கப்படுகின்றது அதனுடன் அதிக அளவு BaCl2 பீக்கரில் செலுத்தப்படுகிறது.
4. இவ்விலையில் உருவான H2SO4 அமிலம் BaSO4.BaSO4 வடிகட்டி, கழுவப்பட்டு, உலர்த்தி எடையறியப்படுகிறது BaSO4, எடையிலிருந்து, S ன் சதவீதம் கணக்கிடப்படுகிறது.
கரிம சேர்மத்தின் எடை =w g
உருவான BaSO4 ன் எடை =x g
233 g BaSO4 ன் சல்பரின் எடை= 32 g
x g BaSO4 ல் உள்ள சல்பரின் Sன் %=\((\frac{32}{233}\times \frac{x}{w}\times100)\)%
21.
கரிம சேர்மத்தின் எடை=0.26 கி g
நீரின் எடை=0.039g
CO2 ன் எடை=0.245g
ஹைட்ரஜனின் சதவீதம்
18 g நீரில் உள்ள ஹைட்ரஜனின் எடை=2g
0.039 நீரில் உள்ள ஹைட்ரஜனின் எடை=\({2\over 18}\times {0.039\over 0.26}\)
ஹைட்ரஜனின் சதவீதம்=\({0.039\over 0.26}\times {2\over 18}\times 100=1.66\%\)
கார்பனின் சதவீதம்
44g CO2ல் உள்ள Cன் எடை=12
0.245 g of CO2 ல் உள்ள ன் எடை
\({12\over 44}\times {0.245\over 0.26}\)g
C ன் சதவீம்=\({12\over 44}\times {0.245\over 0.26}\times 100=25.69\%\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards