11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 15/12/2018
11th chemistry-important 3 marks
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
மண் மாசுபாடு என்பது என்ன? மண் மாசுபாடு எவற்றை பாதிக்கிறது?
2.
மொத்த கரைந்த திண்மங்கள் உள்ளடக்கியவை எவை? அவற்றின் தீய விளைவுகள் யாவை?
3.
வேதி நேர் மாசுபடுதிகளின் தீய விளைவுகள் படியிலிடு.
4.
தூர்ந்துபோதல் என்று அறியப்படுவது எது? ஏன் ?
5.
நீர் மாசுபடுதல் என்றால் என்ன?
6.
சுற்றுச்சூழல் மீதான ஓசோன் படல சிதைவின் தாக்கங்கள் யாவை?
7.
தீவிர பனிப்புகையின் விளைவுகள் எழுதுக.
8.
துகள் மாசுபடுத்திகளை குறைக்கும் உத்திகள் படியிலிடு.
9.
ஹைட்ரோகார்பன்கள் என்பவை யாவை? அவற்றுடன் இணைந்த ஆபத்துகளை குறிப்பிடு.
10.
கார்பன்டையாக்சைடு எவ்வாறு உருவாகிறது? அதன் தீய விளைவுகள் யாவை?
11.
காற்று மாசுபாடு என்றால் என்ன? அது எவ்வாறு உண்டாகிறது?
12.
மக்காத மாசுபடுதிகளைக் கூறி, அவற்றின் விளைவுகளை எழுதுக.
13.
6 கிராம் லி-1 செறிவு கொண்ட யூரியா (NH2CONH2 ) கரைசலுடன் ஐசோடானிக் கரைசலாக உள்ள குளுக்கோஸ் கரைசலில் , ஒரு லிட்டரில் கரைந்துள்ள குளுக்கோசின் (C6H12O6) நிறை என்ன?
14.
சவ்வுடு பரவல் அழுத்தத்திலிருந்து மோலார் நிறையை கணக்கிடும் முறையை தருவி.
15.
சமநிலையின் மீது வினைவேக மாற்றியின் விளைவை எழுதுக.
16.
1 atm NO மற்றும் 1 atm O2 ஐ தொடக்க செறிவுகளாகக் கொண்டு NO ன் வளிமண்டல ஆக்ஸிஐனேற்ற வினை
\(2NO(g)+{ O }_{ 2 }(g)\rightleftharpoons 2NO_{ 2 }(g)\)
ஆய்ந்தறியப்படுகிறது. சமநிலையில், ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம் 0.52 atm எனில் இவ்வினைக்கான Kp ன் மதிப்பை காண்க.
17.
முறைசார் மின்சுமையினை கொண்டு லூயிஸ் அமைப்பில் சிறந்த வடிவமைப்பை குறிக்கும் வடிவத்தினை தெரிவு செய்யும் வழிமுறைகளை எழுதுக.
18.
அணு ஆர்பிட்டால்களின் ஆக்கக் குறுக்கீட்டு விளைவு மற்றும் அழித்தல் குறுக்கீட்டு விளைவு -இவற்றை விளக்குக.
19.
HF மூலக்கூறு உருவாதலை விளக்குக
20.
பின்வரும் வினையினைக் கருதுக.
\(Fe_{ (aq) }^{ 3+ }+SCN_{ (aq) }^{ - }\rightleftharpoons \left[ Fe(SCN) \right] _{ (aq) }^{ 2+ }\)
Fe3+ மற்றும் SCN- ஆகியன முறையே 1x 10-3 M என்ற துவக்க மோலார் செறிவினை பெற்றுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது. சமநிலையில் [Fe(SCN)]2+ ன் செறிவு 2 x 10-4 M சமநிலை மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக.
21.
0.3 g எடையுள்ள கரிமச் சேர்மம், கெல்டால் முறையில் 30 ml 0.1 N H2SO4 த்தால் NH3 நடுநிலை செய்யப்பட்டது எனில், நைட்ரஜனின் சதவீதத்தினைக் காண்க.
22.
0.185 g எடையுள்ள கரிமச்சேர்மம், அடர் HNO3 மற்றும் சில்வர் நைட்ரேட்டுடன் சேர்ந்து 0.320 g வெள்ளி புரோமைடை தந்தது எனில், அதில் உள்ள புரோமினின் % காண்க(Ag=108, Br=80).
23.
0.16 g எடையுள்ள கரிமச் சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaC2 சேர்த்து வீழ்ப்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35 g சல்பரின் சதவீதத்தை கான்(30.04).
24.
பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக.
i. m-டைநைட்ரோ பென்சீன்
ii.p-டைகுளோரோ பென்சீன்
iii.1, 3, 5-ட்ரைமீத்தைல் பென்சீன்
25.
பின்வரும் கரிமச் சேர்மம் வகைகளுக்கு ஒவ்வொன்றிற்கும் இரு எ.கா.தருக.
i. பென்சீன் வளைய அமைப்பை பெற்றிருக்காத அரோமேட்டிக் சேர்மம்.
ii.அரோமேட்டிக் பல் இன வளையச்சேர்மம்
iii. அலிசைக்ளிக் மற்றும் அலிபாட்டிக் திறந்த அமைப்புடையவை.
26.
வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு பல்வேறு கரைபொருளுக்கு எவ்வாறு மாறுபடுகிறது என விளக்கு.
27.
வாண்ட் ஹாஃப் காரணி 'i' எனும் சொற் கூற்றை வரையறு.
28.
வாண்ட் ஹாஃப் சமன்பாட்டை எழுதி விளக்குக.
29.
2 கிராம் மின்பகுளி அல்லாத கரைபொருளை 75 கிராம் பென்சீனில் கரைக்கும்போது, பென்சீனின் உறைநிலையானது 0.20 K குறைகிறது. பென்சீனின் உறை நிலைத்தாழ்வு மாறிலி 5.12 K Kg mol-1. கரைபொருளின் மோலார் நிறையை காண்க.
30.
கொதிநிலை ஏற்றம் என்றால் என்ன?
31.
பதங்கமாதல் என்றால் என்ன? பதங்கமாதல் எதற்குப் பயன்படுகிறது?
32.
கைரல் மூலக்கூறு என்பது என்ன? கைரல் தன்மைக்கும் ஒளிசுழற்றும் தன்மைக்கும் உள்ள தொடர்பு என்ன?
33.
வடிவ மாற்றியன்கள் எந்த நிலையில் மட்டும் சாத்தியமாகிறது? ஏன்?
34.
சிஸ், டிரான்ஸ் மாற்றியம் இவற்றில் அதிக நிலைப்புத்தன்மை உடையது எது? ஏன்?
35.
பின்வரும் சமநிலை வினைகளின் சமநிலை மாறிலிகளைத் தொடர்புபடுத்துக.
\((i){ N }_{ 2 }+{ O }_{ 2 }\rightleftharpoons { 2NO;K }_{ 1 }\\ (ii)2NO+{ O }_{ 2 }\rightleftharpoons 2NO_{ 2 };{ K }_{ 2 }\\ (iii){ N }_{ 2 }+2O_{ 2 }\rightleftharpoons { 2NO }_{ 2 };{ K }_{ 3 }\)
36.
புரப்பீனின் ஓசோனேற்ற வினையை எழுதுக
37.
ஈத்தின் பேயரின் காரணியுடன் எவ்வாறு வினைபுரிகிறது?
38.
n-ஹெக்சேனில் இருந்து பென்சீன் எவ்வாறு உருவாகிறது?
39.
இயல்புக் கரைசல்கள் என்பன யாவை? அதன் விலகல் தன்மை குறித்து எழுதுக.
40.
ஒரு நல்லியல்புக் கரைசலின் திறன்களை பட்டியலிடு.
41.
நல்லியல்புக் கரைசல்கள் என்பவை யாவை?
42.
Q ன் மதிப்பை KC உடன் ஒப்பிட்டு வினையின் திசையினைத் எவ்வாறு தீர்மானிப்பாய்?
43.
சமநிலை மாறிலியின் பயன்பாடுகள் யாவை?
44.
வடிவ மாற்றியங்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு ஏற்படுகின்றன?
45.
இயங்கு சமநிலை மாற்றியம் (அ) டாட்டாமெரிசம் எவ்வாறு ஏற்படுகின்றன?
46.
மூலக்கூறு மாதிரிகள் என்பவை யாவை? அவை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
47.
கார்பன் அயனிப் பிணைப்பை உருவாக்காமல் சகப்பிணைப்பை உருவாக்குவதேன்?
48.
மீளும் வினைகளின் சமநிலை மாறிலிகளுக்கிடையேயானத் தொடர்பை எழுதுக.
49.
சமநிலை மாறிலி எனப்படுவது எது?
50.
கரைத்திறனைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
51.
திட்டக் கரைசலை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிடுக.
52.
திட்டக் கரைசல் அல்லது இருப்புக் கரைசல் என்பது யாது? அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
53.
குளோரோ பென்சீன் பின்வரும் வினைகளை எழுதுக
அ. ஹலேஜனேற்றம்
ஆ. நைட்ரோ ஏற்றம்
இ.சல்போனேற்றம்
ஈ.ஃபிரீடல்கிராஃப்ட் வினை
54.
பின்வரும் Zn தூளுடன் புரியும் வினையை எழுதுக.
(i) எத்திலின் குளோரைடு
(ii) எத்திலிடின் டைகுளோரைடு
55.
அசிட்டிலுடனான HCIன் வினையை எழுதுக.
56.
அசிட்டால்டிஹைடு PCI5 உடன் புரியும் வினை யாது?
57.
உர்ட்ஸ் ஃபிட்டிக் வினையை எழுதுக.
58.
பால்ஸ்கீமன் வினையை எழுதுக.
59.
பென்சீன் டையசோனியம் குளோரைடு பொட்டாசியம் அயோடைடுடன் புரியும் வினை யாது?
60.
காட்டர்மான் வினையை எழுதுக.
61.
பாஸ்பரஸை கொண்டுள்ள 0.33 எடையுள்ள கரிமச் சேர்மம் 0.397g Mg2P2O7யை தந்தது. அச்சேர்மத்தில் உள்ள P இன் சதவீதத்தினைக் கணக்கிடுக.
62.
0.24 g எடையுள்ள பாஸ்பரஸை கொண்டுள்ள கரிமச் சேர்மம் 0.66g Mg2P2O7யை தந்தது. இச்சேர்மத்தில் உள்ள பாஸ்பரஸின் சதவீதத்தினை கணக்கிடுக.
63.
0.40g எடையுள்ள அயோடின் பதிலீடு செய்யப்பட்ட கரிம சேர்மம் 0.125g AgIயை காரியஸ் முறைப்படி தருகிறது எனில், அயோடினின் சதவீதத்தைக் காண்க.
64.
0.284 எடையுள்ள கரிமச்சேர்மம் 0.287எடையுள்ள AgClயை காரியஸ் முறைப்படி அளந்தறியபடுகிறது எனில், Clன் சதவீதத்தைக் காண்க.
65.
0.16g எடையுள்ள கரிம சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaCl2 சேர்த்து வீழ்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35g சல்பரின் சதவீதத்தை காண் (30.04)
66.
0.2175 g நிறையுள்ள, சல்பரை கொண்டுள்ள கரிமச் சேர்மம், காரியஸ் முறைப்படி அளந்தறியப்பட்டு 0.5825g BaSO4 யைக் கொடுக்கிறது எனில் அச்சேர்மத்தில் உள்ள S ன் சதவீதத்தினை கணக்கிடுக.
67.
C4H10O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ள சாத்தியமான மாற்றியங்கள் அனைத்தையும் எழுதுக அவைகளில் காணப்படும் மாற்றியங்களைக் கண்டறிக.
68.
பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்பாடுகளை எழுதுக.
i. m-டைநைட்ரோ பென்சீன்
ii. p-டைகுளோரோ பென்சீன்
iii. 1,3,5-ட்ரைமீத்தைல் பென்சீன்
69.
பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக
i. சைக்ளோ ஹெக்ஸா-1,4-டையீன்
ii. எத்தைனைல் சைக்ளோ ஹெக்ஸேன்
70.
200 கிராம் நீரில் 1 கிராம் NaCl ஐ கரைப்பதன்மூலம், 0.24 K உறைநிலைத் தாழ்வு ஏற்படுத்தப்பட்டது. வாண்ட் ஹாஃப் காரனியை கணக்கிடுக. மோலால் உறைநிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol-1
71.
குளிர்ப்பிரதேசங்களில் பயணிக்கும் கார்களின் ரேடியேட்டர்களில், உறைதடுப்பானாக எத்திலீன் கிளைக்காலை (C2H2O2) பயன்படுத்த முடியும். கார் ரேடியேட்டர்களில், பயன்படுத்தப்பட்டுள்ள, 20 நிறை சதவீத கிளைக்காலின் நீர்க் கரைசலிலிருந்து பனிக்கட்டி படிகங்கள் உருவாகி பிரியும்போது உள்ள வெப்பநிலையை கணக்கிடுக. நீரின் Kf = 1.86 K Kg mol-1 மதிப்பு மற்றும் எத்திலீன் கிளைக்காலின் மோலார் நிறை 62 g mol-1.
72.
0.75 கிராம் எடையுடைய பெயர் தெரியாத சேர்மமானது 200 கிராம் நீரில் கரைக்கப்படுகிறது. கொதிநிலை ஏற்ற மதிப்பு 0.15 K மற்றும் மோலால் கொதிநிலை ஏற்ற மாறிலி மதிப்பு 7.5 K Kg mol-1 எனில், அச்சேர்மத்தின் மோலார் நிறையை கணக்கிடுக.
73.
2% எளிதில் ஆவியாகாத கரைபொருளை கொண்டுள்ள நீர்க் கரைசலானது, கரைப்பானின் கொதிநிலையில், 1.004 bar அழுத்தத்தை கொண்டுள்ளது. PA 0 மதிப்பு 1.013 bar ஆக இருக்கும்போது கரைபொருளின் மோலார் நிறை என்ன?
74.
0.24 g வாயுவானது 1.5 atm அழுத்தத்தில் 1 லிட்டர் நீரில் கரைகிறது. மாறாத வெப்பநிலையில், அழுத்தத்தை 6 atm க்கு அதிகரிக்கும்போது கரைக்கப்படும் வாயுவின் எடையை கணக்கிடுக.
75.
500 மி.லி 2.5 M HCl கரைசலைப் பெறுவதற்கு, 4M HCl மற்றும் 2M HCl கரைசல்களை எந்த கன அளவுகளில் கலக்க வேண்டும்?
76.
6gகிராம்லி-1 செறிவு கொண்ட யூரியா (NH2CONH2) கரைசலுடன் ஐசோடானிக் கரைசலாக உள்ள குளுக்கோஸ் கரைசலில், ஒரு லிட்டரில் கரைந்துள்ள குளுக்கோசின் (C6H12O6) நிறை என்ன?
77.
2 கிராம் மின்பகுளி அல்லாத கரைபொருளை 75 கிராம் பென்சீனில் கரைக்கும்போது, பென்சீனின் உறைநிலையானது 0.20 K குறைகிறது. பென்சீனின் உறைநிலைத் தாழ்வு மாறிலி 5.12 K Kg mol-1. கரைபொருளின் மோலார் நிறையைக்காண்க.
78.
27°C வெப்பநிலையில் A எனும் தூய திரவத்தின் ஆவிஅழுத்தம் 10.0 torr. 20 கிராம் A இல் 1 கிராம் B ஐ கரைப்பதன்மூலம் ஆவிஅழுத்தம் 9.0 torr க்கு குறைக்கப்படுகிறது. A யின் மோலார் நிறை 200 எனில், B யின் மோலார் நிறையை கணக்கிடுக.
79.
தூய கரைபொருள் மற்றும் கரைப்பானிலிருந்து பின்வரும் கரைசல்களை நீ எவ்வாறு தயாரிப்பாய் என்பதை விளக்குக.
(அ) 1L கனஅளவுடையடைய 1.5 M CoCl2 இன் நீர்க்கரைசல்.
(b) 500 mL கனஅளவுடைய 6.0 % (V/V) நீர்ம மெத்தனால் கரைசல்.
80.
2.82 கிராம் குளுக்கோஸ் ஆனது 30 கிராம் நீரில் கரைக்கப்பட்டள்ளது. குளுக்கோஸ் மற்றும் நீரின் மோல் பின்னங்களை கணக்கிடுக.
81.
(அ) 300 மி.லி மற்றும் (ஆ) 1 லிட்டர் கரைசலில் 5.6 கிராம் KOH கரைந்துள்ளது எனில், அக்கரைசல்கள் ஒவ்வொன்றின் மோலாரிட்டியைக் கணக்கிடுக.
82.
250 C வெப்பநிலையில் ஒரு சமநிலை வினைக்கு Kp=0.0260 மற்றும் ΔH= 32.4KJmol-1 370 C வெப்பநிலையில் KPன் மதிப்பினைக் கண்டறிக.
83.
NH3, N2 மற்றும் H2 ஆகியனவற்றின் சமநிலைச் செறிவுகள் முறையே 1.8x10-2M, 1.2x10-2M மற்றும் 3x10-2M. N2 மற்றும் H2விலிருந்து NH3 உருவாகும் வினைக்கு சமநிலை மாறிலியின் மதிப்பினைக் காண்க.
84.
ஒரு மோல் ஹைட்ரஜன் மற்றும் ஒரு மோல் அயோடின் கலக்கப்பட்டு சமநிலை அடைய 0.4 மோல் HI காணப்படுகிறது. சமநிலை மாறிலியைக் கணக்கிடுக.
கொடுக்கப்பட்ட தரவுகள்
[H2] = 1 மோல்
[I2] = 1 மோல்
சமநிலையில், [HI] = 0.4 மோல் Kc= ?
85.
N2O2(g) \(\rightleftharpoons \) 2NO2(g)
373Kல், மேற்கண்டுள்ள வினைக்கு KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0.125 mol dm-3 மற்றும் 0.5 mol dm-3 என கண்டறியப்பட்டது. இவ் விவரங்களிலிருந்து வினை நிகழும் திசையினை நாம் பின்வருமாறு தீர்மானிக்க இயலும்.
86.
717K வெப்பநிலையில் பின்வரும் வினைக்கு Kcன் மதிப்பு 48.
H2(g) + I2(g) ⇌⇌ 2HI(g)
87.
வாயுக்களை திரவமாக்கப் பயன்படும் பல்வேறு முறைகளை எழுதுக.
88.
தனிமவரிசை அட்டவணையின் முதல் தொகுதியில் காணப்படும் தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படுகின்றன.அவற்றின் வேதிப்பண்புகளை பட்டியலிடு.
89.
பின்வருவனவற்றை குறித்து சிறு குறிப்பு எழுதுக.
(i) கார உலோகங்களின் எலக்ட்ரான் அமைப்பு
(ii) கார உலோகங்களின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற
90.
என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல் (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின் \(\triangle H^o _f\) கணக்கிடு.
91.
தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?
92.
வரையறு : கட்டுப்படுத்தும் காரணி.
93.
கூற்று 1: இரு மோல் குளுகோஸில் 12.044 x 1023குளுகோஸிஸ் மூலக்கூறுகள் உள்ளன.
கூற்று 2: ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 x 1022.
மேற்கண்ட இருகூற்றுகளும் உண்மையா? இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்ப்பு உள்ளதா?
94.
பின்வருவனவற்றிற்கான சமன்பாடுகளை எழுதுக
(i) உலோக இடப்பெயர்ச்சி வினை
(ii) அலோக இடப்பெயர்ச்சி வினை
95.
சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.
96.
NO2ன் தொடக்க அழுத்தம் 1atm மற்றும் O2ன் தொடக்க அழுத்தம் 1atm ஐ கொண்ட 2000C வெ ப்பநிலையில், NOன் ஆக்ஸிஜனேற்ற வினை ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. சமநிலையில் ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனஅறியப்படுகிறது. KPன் மதிப்பினை கணக்கிடு.
97.
HI சிதைவடைதலை அறிந்து கொள்ள , ஒரு மாணவன் காற்று நீக்கப்பட்ட 3L குடுவையில் 0.3 மோல் HI வாயுவினை நிரப்புகிறான் , 500oC ல் வினையினை நிகழ்த்துகிறான். சமநிலையில் HIன் செறிவு 0.05M என அவன் அறிந்துகொள்கிறான். இவ்வினைக்கு Kp மற்றும் Kc மதிப்புகளை கணக்கிடுக.
98.
SrCO3 (s) ⇌ SrO (s) + CO2(g), என்ற வினையில், 1002K ல் சமநிலை மாறிலி மதிப்பு KP = 2.2 \(\times \) 10–4.வினைக்கான KC மதிப்பினைக் கணக்கிடுக.
99.
ஒரு மூடிய ஒரு லிட்டர் கலனில், ஒரு மோல் PCl5 வெப்பப்படுத்தப்படுகிறது. சமநிலையில் 0.6 மோல் குளோரின் இருந்தால் சமநிலைமாறிலி மதிப்பினைகணக்கிடுக.
100.
(A) மற்றும் (B) ஆகியன C2H4Cl2 என்ற வாய்ப்பாடுடைய இரு மாற்றியங்கள். சேர்மம் (A) ஆனது நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C2H4O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. சேர்மம் (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C2H6O2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய (D) ஐத் தருகிறது. A, B, C மற்றும் D ஐக் கண்டறிக, வினைகளை விளக்குக.
101.
C3H6 என்ற (A) ஹைட்ரோ கார்பன் HBr உடன் வினைபுரிந்து (B) ஐத் தருகிறது. (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C3H6O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. (A), (B) மற்றும் (C) ஐக் கண்டறிக. வினைகளை விளக்குக.
102.
A என்ற எளிய ஆல்கீன் HCl உடன் வினைபுரிந்து சேர்மம் (B) ஐத் தருகிறது. மேலும் (B) ஆனது அம்மோனியாவுடன் வினைபுரிந்து C2H7N என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய (C)ஐத் தருகிறது. (C)யானது கார்பைலமின் வினைக்கு உட்படுகிறது. (A), (B) மற்றும் (C)ஐக் கண்டறிக.
103.
C2H5Cl என்ற மூலக்கூறு வாய்ப்பாடு உடைய (A) என்ற சேர்மம் KOH உடன் வினைபுரிந்து (B) என்ற சேர்மத்தையும் ஆல்கஹால் கலந்த KOH உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தையும் தருகின்றன. (A), (B), (C)ஐக் கண்டறிக.
104.
ஒரு குறிப்பிட்ட கரைசலுக்கு, உறைநிலையில் ஏற்படும் தாழ்வு 0.093oC என கண்டறியப்பட்டுள்ளது. கரைசலின் செறிவை மோலாலிட்டியில் கணக்கிடுக. நீரின் மோலால் உறை நிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol -1
105.
A2(g) + B2(g) ⇌ 2AB(g); \(\Delta\)H -எதிர்குறி என்ற வினையில் கொடுக்கப்பட்டுள்ள மூலக்கூறு சாட்சிகள் பல்வேறு வினைக்கலவைகளை பிரதிபலிக்கிறது.(A – பச்சை , B – நீலம்) மூடிய அமைப்பு

i) KP மற்றும் KC சமநிலை மாறிலியினை கணக்கிடுக.
ii) காட்சி (X), (Y)ல் குறிப்பிட்டுள்ள வினைக்கலவையில், வினையானது எந்த திசையில் நடைபெறும்?
iii). சமநிலையில் உள்ள கலவையில், அழுத்தத்தை அதிகரித்தால் என்ன விளைவுநிகழும்?
106.
4.1 வளிமண்டல அழுத்தம்,மற்றும் குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ள 1 மோல் நல்லியல்பு வாயு,3710J ஆற்றலை உறிஞ்சி,2L விரிவடைகிறது.இந்த விரிவடைதலின்போது நிகழும் என்ட்ரோபி மாற்றத்தைக் கணக்கிடுக .
107.
பின்வரும் தரவுகளிலிருந்து CaCl2 படிகத்தின் படிக கூடு ஆற்றலை கணக்கிடுக
Ca (s)+Cl2(g) → CaCl2(s) ΔHf0 = − 795 kJ mol−1
பதங்கமாதல் Ca(s) → Ca(g) ΔH10 = + 121 kJ mol−1
அயனியாதல் Ca(g) → Ca2+(g) + 2e− ΔH02 = + 2422 kJ mol−1
பிளத்தல் Cl2(g) → 2Cl(g) ΔH03 = + 242.8 kJ mol−1
எலக்ட்ரான் நாட்டம் Cl (g) + e− → Cl− (g) ΔH40 = −355 kJ mol−1
108.
ஒரு வாயு 15oCயில் 1atm அழுத்தத்தில் பெற்றுள்ள கனஅளவு 2.58 dm3வெப்பநிலை 38oCயாக
1atm அழுத்தத்தில் உயர்ந்தால் அதன் கனஅளவு அதிகரிக்குமா? எனில் அதன் இறுதி
கனஅளவைக் கணக்கிடு
109.
பின்வரும் வேதி வினைகளுக்கு சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளை எழுதுக.
(i) நைட்ரஜன் வாயு உடன் லித்தியம் வினைபுரிதல்
(ii) திட சோடியம் பைகார்பனேட்டை வெப்பப்படுத்துதல்
(iii) ஆக்சிஜன் வாயு உடன் ருபீடியம் வினைபுரிதல்
(iv) CO2 உடன் திண்ம பொட்டாசியம் ஹைட்ராக்சைடு வினைபுரிதல்
(v) கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்துதல்
(vi) ஆக்சிஜன் வாயு உடன் கால்சியம் சேர்த்து வெப்பப்படுத்துதல்.
110.
கீழ்க்கண்ட வேதி வினைகளை பூர்த்தி செய்து.
(அ) நீராற் பகுத்தல் (ஆ) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள் (இ) நீரேற்ற வினைகள் என வகைப்படுத்துக
(i) KMnO4 + H2O2 →
(ii) CrCl3 + H2O →
(iii) CaO + H2O →
111.
திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 50 g கால்சியம் கார்பனேட்டை முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன் டைஆக்ஸைடின் கனஅளவு எவ்வளவு?
1.
1.தாவர வளர்ச்சி மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நச்சுப் பொருள்கள், கதீர்வீச்சுப் பொருள்கள், வேதி உப்புகள் மற்றும் நோயுண்டாக்கும் காரணிகள் விடாப்பிடியாக, மண்ணில் உருவாக்கப்படும் நிகழ்ச்சி, மண் மாசுபாடு என வரையறுக்கப்படுகிறது.
2.மண் மாசுபாடானது, மண்ணின் அமைப்பு, மண் வளம், நிலத்தடி நீரின் தரம் மற்றும் உயிர்ச் சூழல் அமைப்பில் காணப்படும் உணவுச் சங்கிலி ஆகியவற்றை பாதிக்கின்றன.
2.
1.கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, ஆகிய நேரயனிகளையும்,
2.கார்பனேட், பய் கார்பனேட், குளோரைடு, சல்பேட், பாஸ்பேட், நைட்ரேட் போன்ற எதிரயனி களையும் உள்ளடிக்கியவை.
3.மொத்த கரைந்த திண்மங்களின் செறிவு 500 ppm க்கு அதிகமாக உள்ள குடிநீரை பயன்படுத்துவதால் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் எரிச்சல் உண்டாவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
3.
1.காட்மியம் மற்றும் மெர்குரி ஆகியவற்றால் சிறுநீரக சேதத்தை ஏற்படுத்த முடியும்.
2.லெட் நச்சால் சிறுநீரகம், கல்லீரல், மூளை போன்ற உறுப்புகளில் தீவிர பாதிப்புகளை உண்டாக்க முடியும். மேலும் இது மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது.
3.பாலிகுளோரினேற்றம் செய்யப்பட பைபீனைல்கள் (PCB) தோல் நோய்களை உருவாக்குகின்றன. மேலும் இவை புற்று நோய்க்காரணியாகவும் செயல்படுகின்றன.
4.
அதீத பசி வளர்ச்சியின் காரணமாக, நீரின் மேற்பரப்பு மூடப்பட்டு நீரில் உள்ள ஆக்சஸிஜன் செறிவு குறைக்கப்படுகிறது.
அதாவது பாசிபடர்ந்த நீரானது, நீர் நிலைகளில் வாழும் மற்ற உயிரினங்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
ஊட்டச்சத்து மிகுந்த நீர், நிலைகள், தாவர பெருக்கத்தை ஆதரிப்பதால், ஆக்ஸிஜன் மறுக்கப்பட்டு மற்ற விலங்குகளின் வாழ்க்கை அழிக்கப்படும் செயல் முறையின் காரணமாக ஏற்படும் பல்லுயிர் இழப்பு, தூர்ந்து போதல் என் அறியப்படுகிறது.
5.
1. நீரின் தரத்தை குறைக்கக்கூடிய வகையில் அந்நிய பொருள்களோ அல்லது வெப்பம் போன்ற காரணிகளோ சேர்க்கப்படுதல், நீர்மாசுபடுதல் என வரையறுக்கப்படுகிறது.
2. இதனால் நீர் ஆரோக்கியமற்றதாக அல்லது பயன்படுத்த தகுதியற்றதாக மாறுகிறது.
6.
1.ஓசோன் படலம் உருவதாலும், சிதைத்தலும் தொடர்ந்து இயற்கை செயல் முறையாகும்.இது ஒருபொழுதும் அடுக்குமண்டலத்தில் உள்ள ஓசோன் சமநிலையை பாதிப்பில்லை. வளிமண்டலத்தில் ஓசோன் சமநிலையில் நிகழும் எந்த மாற்றமும், பின்வரும் வழிகளில் உயிர்கோளத்தில் கடுமையான பாதிப்புகளை எற்படுத்தும்.
(i).ஓசோன் பாடலை சிதைவானது,அதிகளவு UV கதிர்கள் புவிப்பரப்பை அடைய அனுமதிக்கும். ஓசோன் படல சிதைவு தோல் புற்றுநோயை உருவாக்கும். மேலும் மனிதர்களில் நோய் எதிர்ப்பு நிலையை குறைக்கிறது.
(ii)UV கதிர்வீச்சு தாவர மிதவையுரிகளின் வளர்ச்சியை பாதிக்கின்றன. இதனால் கடல்வாழ் உணவுச்சங்கிலி பாதிக்கப்படுகிறது.
(iii) UV கதிர்வீச்சு தாவர புரதங்களை பாதிக்கின்றன, இது அபாயகரணமான செல்பிறழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.
7.
1. பனிப்புகையானது அமில மழைக்கு காரணமாகிறது.
2. பார்வைத்திறன் குறைவை ஏற்படுத்துகிறது.
3. மூச்சுக்குழல் எரிச்சலை உருவாக்குகிறது.
8.
1. நிலை மின்னியல் வீழ்ப்படிவாக்கிகள்
2. புவி ஈர்ப்பு படிவு கலன்கள்
3. ஈர துப்புரவாக்கிகள் (அ) சூழல் தூசி சேகரிப்பான்கள்.
9.
1.கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களால் மட்டுமே ஆக்கப்பட்ட சேர்மங்கள் ஹட்ரோகார்பன்கள் என்றழைக்கப்படுகின்றன.
2. இவை இயற்க்கையாகவும் (சதுப்புநிலவாயு), வாகன எரி பொருள்கள் முற்றிலுமாக எறியாததாலும் உருவாக்கப்படுகின்றன.
3. இவை வலிமை மிகுந்த புற்றுநோய் உருவாக்கம் காரணிகளாகும். எடுத்துக்காட்டாக பல்லணு அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAH) புற்றுநோய் காரணிகளாகும். இவை கண் மற்றும் மூக்கு ஆகியவற்றின் எரிச்சலை உருவாக்குகின்றன.
10.
1.சுவாசித்தல், புதைப்படிம ஏறி பொருள்களை எரித்தல், காட்டுத் தீ, சிமெண்ட் தொழிற்ச்சாலைகளில் சுண்ணாம்புக் கற்கள் சிதைக்கப்படுதல் போன்ற செயல் முறைகளினால் காற்றுமண்டலத்தில் கார்பன் டையாக்சைடு வாயு வெளியேற்றப்படுகிறது.
2.ஒளிர்ச்சேர்க்கை எனும் செயல் முறையின் மூலம், காற்று மணடலத்திலுள்ள CO2 வாயுவை கார்போஹைட்ரேட் மற்றும் ஆக்ஸிஜன் வாயுவாக பச்சைத் தாவரங்களால் மாற்ற முடியும்.
3.காற்று மண்டலத்தில் உருவாகும் அதிகரிக்கப்பட்ட CO2 அளவானது உலக வெப்ப மயமாதலுக்கு காரணமாகிறது. இது தலைவலி மற்றும் குமட்டலை உருவாக்குகிறது.
11.
1.உயிரினங்களின் மீது தீங்கு விளைவுகளை உருவாக்கும் வகையில், காற்றில் நிகழும் விரும்பத்தகாத மாற்றங்கள் கற்று மாசுபாடு என்றழைக்கப்படுகிறது.
2.காற்று மாசுபாடு என்பது அடிவெளி மண்டலம் மற்றும் அடுக்கு மணடலத்துடன் வரையறுக்கப்பட்டுள்ளது. முதன்மையாக வளிமண்டலக் காற்றில் அதிக அளவில் வெளிவிடப்படும் விரும்பத்தகாத பொருள்களால் காற்று மாசுபாடு உருவாகிறது.
12.
1.Hg, Pb, DDT, நெகிழிகள், கதிர்வீச்சுக் கழிவுகள் போன்றவை மக்காத மாசுபடுதிகள் எனப்படுகின்றன.
2.இத்தகைய மாசுபடுதிகள் சிறிய அளவில் இருப்பினும், உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை.
3. அவை இயற்க்கையாகக் சிதைவடையாமல் நம் சுற்றுச்சூழலிருந்து நீக்குவது கடினம்.
13.
யூரியா கரைசல் சவ்வூடு = CRT
பரவல் அழுத்தம் \(\left( { \pi }_{ 1 } \right) \)
= \(\frac { { w }_{ 2 } }{ { M }_{ 2 }V } RT=\frac { 6 }{ 60\times 1 } RT\)
குளுக்கோஸ் கரைசலின் = \(\frac { { w }_{ 2 } }{ 180\times 1 } \times RT\)
சவ்வூடு பரவல் அழுத்தம் \(\left( { \pi }_{ 2 } \right) \)
ஐசோடோனிக் கரைசலுக்கு ,
\({ \pi }_{ 1 }={ \pi }_{ 2 }\)
\(\frac { 6 }{ 60 } RT=\frac { { w }_{ 2 } }{ 180 } RT\)
\(\Rightarrow \) w2 = \(\frac { 6 }{ 60 } \times 180\) = 18g
14.
வாண்ட் ஹாஃப் சமன்பாட்டின் படி
\(\pi \) = CRT
C = \(\frac { n }{ V } \)
இங்கு n = 'V' லிட்டர் கரைசலில் கரைக்கப்பட்டுள்ள கரைபொருளின் மோல் எண்ணிக்கை.
எனவே , \(\pi =\frac { n }{ V } RT\) or \(\pi \)V = nRT ........(1)
wA கிராம் கரைப்பானில் , wB கிராம் எளிதில் ஆவியாகாத கரைபொருளை கரைத்து , கரைசல் தயாரிக்கப்பட்டால் , அதன் மோல் எண்ணிக்கை n என்பது
n = wB /MB
ஏனெனில் MB - கரை பொருளின் மோலார் நிறை இந்த 'n' மதிப்பை சமன்பாடு (1) ல் பிரதியிட, நமக்கு கிடைப்பது
\(\pi =\frac { { w }_{ B } }{ V } \frac { RT }{ { M }_{ B } } \)
\({ M }_{ B }=\frac { w_{ B } }{ V } \frac { RT }{ \pi } \) ........(2)
சமன்பாடு (2) ஐ பயன்படுத்தி , கரைபொருளின் மோலார் நிறையை கணக்கிட முடியும்
15.
வினைவேக மாற்றியை சேர்ப்பதன் மூலம் சமநிலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
வினைவேக மாற்றியானது முன்னோக்கிய வினையையும் பின்னோக்கிய வினையையும் ஒரே அளவிற்கு பாதிக்கிறது.
எனவே, இது சமநிலைக் கலவையின் இயைபினை மாற்றியமைப்பதில்லை.
எனினும் குறைவான கிளர்வு ஆற்றல் உடைய வினை வழியினை உருவாக்குவதன் மூலம் வினைவேக மாற்றியானது சமநிலை விரைவாக எய்துவதற்கு காரணமாக அமைகிறது.
16.
\(2NO(g)+{ O }_{ 2 }(g)\rightleftharpoons 2NO_{ 2 }(g)\)
| NO2 | O2 | NO2 | |
| ஆரம்ப பகுதி அழுத்தம் | 1 | 1 | - |
| வினைப்பட்டது | 0.96 | 0.48 | - |
| சமநிலை அழுத்தம் | 0.04 | 0.54 | 0.96 |
\({ K }_{ p }=\frac { { P }_{ NO_{ 2 } }^{ 2 } }{ { P }_{ NO }^{ 2 }.{ P }_{ { O }_{ 2 } } } \)
\(=\frac { 0.96\times 0.96 }{ 0.04\times 0.04\times 0.52 } \)
\({ K }_{ P }=11.07\times { 10 }^{ 2 }(atm)^{ -1 }.\)
17.
(i) முறைசார் மின்சுமையினைப் பெற்றுள்ள வடிவமைப்பினைக் காட்டிலும் அனைத்தும் முறைசார் மின்சுமைகளும் பூஜ்ஜியமாக உள்ள வடிவமைப்பு முன்னுரிமை பெறும்.
(ii) குறைவான முறைசார் மின்சுமை கொண்டுள்ள வடிவமைப்பானது, அதிகமான முறைசார் மின்சுமை கொண்டுள்ள வடிவமைப்பைவிட முன்னுரிமை பெறும்.
(iii) எந்த வடிவமைப்பில், எதிர்மறை முறைசார் மின்சுமை அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடைய அணுவின் மீது காணப்படுகிறதோ அந்த அமைப்பு முன்னுரிமையுடையது.
18.
(i) அணு ஆர்பிட்டால்களின் அலைச்சார்பு \(\psi \) என குறிக்கப்படுகிறது. ஒப்பிடத்தக்க ஆற்றலுடைய \(\psi \)A மற்றும் \(\psi \)B ஆகிய இரு அலைச்சார்புகளால் குறிப்பிடப்படும் இரு அணு ஆர்பிட்டால்கள் இணைந்து இரு அணு ஆர்பிட்டால்கள் இணைந்து இரு மூலக்கூறு ஆர்பிட்டால்களை தருகிறது.
(ii) அவைகளுள் ஒன்று பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால் (\(\psi \) பிணைப்பு) மற்றொன்று எதிர்ப்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால் (\(\psi \) எதிர் பிணைப்பு) ஆகும். இவ்விரு மூலக்கூறு ஆர்பிட்டால்களுக்கான அலைசார்பிணை அணு ஆர்பிட்டால்களுக்கான \(\psi \)A மற்றும் \(\psi \)B நேரிய இணைவின் மூலம் பெறலாம்.
\(\psi \)பிணைப்பு =\(\psi \)A +\(\psi \)B
\(\psi \)எதிர் பிணைப்பு =\(\psi \)A -\(\psi \)B
(iii) அணு ஆர்பிட்டால்களின் ஆக்கக் குறுக்கீட்டு விளைவால், பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால் உருவாவதாகவும், அணு ஆர்பிட்டால்களின் அழித்தல் குறுகீட்டு விளைவின் காரணமாக எதிர் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால் உருவாவதாகவும் கருதலாம். இரு 1s ஆர்பிட்டால்களில் இருந்து சம மூலக்கூறு ஆர்பிட்டால்கள் உருவாவது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
(iv) ஆக்கக் குறுக்கீட்டு விளைவு: இரண்டு 1s ஆர்பிட்டால்கள் ஒரே கட்டத்தில் உள்ளன. மற்றும் ஒரே குறிகளை பெற்றுள்ளன.



19.
(i) ஹைட்ரஜன் அணுவின் எலக்ட்ரான் அமைப்பு: 1s1
(ii) புளூரின் அணுவின் இணைத்திற கூட்டின் எலக்ட்ரான் அமைப்பு : 2s2 29x2, 2py2, 2pz1

(iii) ஹைட்ரஜனின் சரிபாதி நிரப்பப்பட்ட 1s ஆர்பிட்டாலானது, புளுரினின் பாதி நிரப்பப்பட்ட 2pz ஆர்பிட்டாலுடன் நேர்கோட்டில் மேற்பொருந்தும் போது ஹைட்ரஜனுடன் புளூரினுக்கு இடையே ஒரு σ-சகப்பிணைப்பு உருவாகிறது.
20.
| Fe3+ | SCN- | [Fe(SCN)]2+ | |
| ஆரம்ப செறிவு (M) | 1x 10-3 (10 x 10-4) |
8 x 10-4 | - |
| வினைப்பட்டது | 2 x 10-4 | 2 x 10-4 | - |
| சமநிலை செறிவு | 8 x 10-4 | 6 x 10-4 | 2 x 10-4 |
\({ K }_{ eq }=\frac { \left[ Fe(SCN) \right] ^{ 2+ } }{ \left[ { Fe }^{ 34 } \right] \left[ SCN^{ - } \right] } \)
\(=\frac { 2\times { 10 }^{ -4 }M }{ 8\times { 10 }^{ -4 }M\times 6\times 10^{ -4 }M } \)
\(=0.0146\times 10^{ 4 }\)
\({ K }_{ eq }=4.16\times 10^{ 2 }M^{ -1 }\)
21.
கரிமச் சேர்மத்தின் நிறை (w)=0.3 g
சல்ப்யூரிக் அமிலத்தின் திறன் (N)=0.1 N
சல்ப்யூரிக் அமிலம் =30 mL
30 ml 0.1 N சல்ப்யூரிக் அமிலம் =30 ml 0.1 N
அம்மோனியா
நைட்ரஜனின் சதவீதம் =\((\frac{14\times NV}{1000\times w})\times 100\)
=\((\frac{14\times 0.1\times 30}{1000\times 0.3})\times 100\)
=14%
22.
கரிமச் சேர்மத்தின் நிறை(w) =0.185 g
சில்வர் புரோமைடின் நிறை(x)=0.320 g
புரோமினின் சதவீதம் =\(\frac{80}{188}\times \frac{x}{w}\times 100\)
=\(\frac{80}{188}\times \frac{0.32}{0.185}\times 100\)
=73.6%
23.
கரிமச் சேர்மத்தின் நிறை (w)=0.16 g
பேரியம் சல்பேட்டின் நிறை (x)=0.35 g
சல்பரின் சதவீதம் =\(\frac{32}{233}\times \frac{x}{w}\times100\)
=\(\frac{32}{233}\times \frac{0.35}{0.16}\times100\)
=30.04%
24.

25.
i) 
ii) 
iii) 
26.
(i) பிரிகையடைதல் அல்லது இணைதல் நிகழாத கரைபொருளுக்கு வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு 1.மேலும், அதன் கண்டறியப்பட்ட மோலார் நிறையானது, உண்மையான மோலார் நிறைக்கு அருகாமை மதிப்பை பெற்றிருக்கும்.
(ii) கரைசலில், இணைந்து உயிர்படி ஒலிகோமரைத் தரும் கரைபொருள்களின் வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு ஒன்றை விடக் குறைவு (i < 1). மேலும், அளவிடப்பட்ட மோலார் நிறையைவிட அதிகமாக இருக்கும்.
(iii) பிரிகையடைந்து அவற்றின் உட்கூறு அயனிகளை உருவாக்கும் கரைபொருளின் வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு ஒன்றை விடக் அதிகம் (i > 1) மேலும், அளவிடப்பட்ட மோலார் நிறையானது. உண்மையான மோலார் நிறையைவிட குறைவாக இருக்கும்.
27.
(i) வாண்ட் ஹாஃப் காரணி 'i' என்பது, கரைபொருளின் உண்மையான மோலார் நிறைக்கும், அசாதாரண மோலார் நிறைக்கும் இடையே உள்ள விகிதம் என வரையறுக்கப்படுகிறது.
(ii) 
28.
(i)சவ்வூடு பரவல் அழுத்தமானது கரைபொருளின் மோலார் செறிவு மற்றும் கரைசலின் வெப்பநிலை ஆகியவற்றிக்கு நேர்விகிதத்திலிருக்கும்.
(ii) வாண்ட் ஹாஃப் சமன்பாடு.
π = CRT
இங்கு
C = கரைசலின் மோலார் செறிவு
R = வெப்பநிலை
T = வாயு மாறிலி
29.
W1 = 75 g
W2 = 2 g
ΔTf = 0.2 K
Kf = 5.12 K Kg mol-1
M2 = \(\frac { { K }_{ f }\times { W }_{ 2 }\times 1000 }{ \Delta { T }_{ f }\times { W }_{ 1 } } \)
= \(\frac { 5.12\times 2\times 1000 }{ 0.2\times 75 } \)
= 682.66 g mol-1.
30.
(i) எளிதில் ஆவியாகாத கரைபொருளை தூய கரைப்பானுடன், அதன் ஆவிஅழுத்தம் 1 atm க்கு கீழாக குறைகிறது.
(ii) மீண்டும் ஆவிஅழுத்தத்தை 1 atm க்கு கொண்டு வர வேண்டுமெனில், கரைசலின் வெப்பநிலை உயர்த்தப்பட வேண்டும் .
(ii) இதன் விளைவாக, கரைசலானது, தூய கறைபானின் கொதிநிலைவிட (T0b) அதிக கொதிநிலை (Tb) கொதிக்கிறது.
(iii) வெப்பநிலையில் ஏற்படும் இந்த உயர்வானது, கொதிநிலை ஏற்றம் என அழைக்கப்படுகிறது.
31.
1. பென்சோயிக் அமிலம், நாப்தலீன் மற்றும் கற்பூரம் போன்ற சேர்மங்களை சூடுபடுத்தும் போது திண்ம நிலையிலிருந்து உருகாமல் (நீர்ம நிலை அடையாமல்) நேரடியாக ஆவி நிலைக்கு மாறுகிறது.
2. ஆவியை குளிரச் செய்யும்போது திண்மப் பொருள் மீண்டும் பெறப்படுகிறது.
3. இத்தகைய செய்முறை பதங்கமாக்கல் எனப்படும். எளிதில் ஆவியாகும் மற்றும் எளிதில் ஆவியாகாத திடப்பொருள்களை பிரித்தெடுக்க மிகச்சிறந்த முறையாகும்.
4. இம்முறை குறைந்த அளவே பயன்படுகிறது. ஏனெனில் சில சேர்மங்கள் மட்டுமே பதங்கமாகும்.
32.
1. ஒரு கார்பனின் நான்கு இணை திறன்களும் வெவ்வேறு பதிலிகளால் (அணுக்கள் /தொகுதிகள்) நிறைவு செய்யப்படின் அத்தகைய கார்பன் சீர்மையற்ற கார்பன் (அ) கைரல்கார்பன் C* என அழைக்கப்படும்.
2. ஒரு மூலக்கூறானது சீர்மையற்ற கார்பனைப் பெற்றிருந்தது அதன் ஆடி பிம்பத்துடன் மேற்பொருந்தாத் தன்மையினைப் பெற்றிருப்பின் அம்மூலக்கூறு கைரல் மூலக்கூறு அல்லது சீர்மையற்றத் தன்மை என அழைக்கப்படுகிறது.
3.இப்பண்பு கைராலிட்டி அல்லது சீர்மையற்றத் தன்மை என அழைக்கப்படுகிறது.
4.இதுவே ஒளி சுழற்றும் தன்மைக்கான மிக முக்கியமான நிபந்தனையாகும்.
33.
1.அல்கீன்களில் காணப்படும் தொகுதிகள் ஒரே மாதிரியாக இருப்பின் அவை வடிவமாற்றியங்களைக் கொண்டிருப்பதில்லை.
2. இரட்டைப் பிணைப்பில் பிணைக்கப்பட்டுள்ள கார்பனுடன் இரு வேறுபட்ட அணுக்கள் அல்லது தொகுதிகள் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் மட்டுமே வடிவமாற்றியம் சாத்தியமானது.
3.எ.கா:
(i) புரப்பீனிக்கு வடிவமாற்றியங்கள் ஏதும் இல்லை.
(ii) ஏனெனில் இரட்டைப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள கார்பனுடன் ஒரே மாதிரியான இரு ஹைட்ரஜன் அணுக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
34.
1 பொதுவாக சிஸ் மாற்றியத்தினைக் காட்டிலும் டிரான்ஸ் மாற்றியமானது அதிக நிலைப்புத் தன்மை உடையது.
2.ஏனெனில் சிஸ் மாற்றியத்தில், பெரிய உருவளவு உள்ள தொகுதிகள் இரட்டைப்பிணைப்பின் ஒரே பக்கத்தில் காணப்படுகிறது.
3. இத்தொகுதிகளின் கொள்ளிட விலக்கி விளைவினால் சிஸ் மாற்றியமானது டிரான்ஸ் மாற்றியத்தைக் காட்டியிலும் குறைவான நிலைப்புத் தன்மையைக் கொண்டுள்ளது.
4.டிரான்ஸ் மாற்றியத்தில் பெரிய உருவளவு உள்ள தொகுதிகள் எதிரெதிர் பக்கத்தில் அமைகின்றன.
35.
\((i)\quad { K }_{ 1 }=\frac { \left[ NO \right] ^{ 2 } }{ \left[ { N }_{ 2 } \right] \left[ { O }_{ 2 } \right] } \)
\((ii){ K }_{ 2 }=\frac { \left[ NO_{ 2 } \right] ^{ 2 } }{ \left[ { N }O \right] ^{ 2 }\left[ { O }_{ 2 } \right] } \)
\(\Rightarrow { K }_{ 1 }\times { K }_{ 2 }={ K }_{ 1 }=\frac { \left[ NO \right] ^{ 2 } }{ \left[ { N }_{ 2 } \right] \left[ { O }_{ 2 } \right] } \times \frac { \left[ NO_{ 2 } \right] ^{ 2 } }{ \left[ { N }O \right] ^{ 2 }\left[ { O }_{ 2 } \right] } \)
\(=\frac { \left[ NO_{ 2 } \right] ^{ 2 } }{ \left[ { N } \right] ^{ 2 }\left[ { O }_{ 2 } \right] } ={ K }_{ 3 }\\ \therefore { K }_{ 3 }={ K }_{ 1 }\times { K }_{ 2 }\)
36.

37.

38.

39.
(i) செறிவு எல்லை முழுமைக்கும், ரெளல்ட் விதிக்கு உட்படாத கரைசல்கள் இயல்புக் கரைசல்கள் என்றழைக்கப்படுகின்றன.
(ii) ஒரு இயல்புக் கரைசலுக்கு, காலத்தலின் போது கனஅளவு மற்றும் என்தால்பி மற்றும் நிகழ்கிறது. அதாவது ΔHகலத்தல் ≠ 0 மற்றும் ΔVகலத்தல் ≠ 0.
(iii) ரெளல்ட் வீதியிலிருந்து இயல்புக்கரசைல்கள் விலக்கமடைதலானது நேர்விளக்கமாகவோ அல்லது எதிர்விழக்கமாகவோ இருக்கும்.
40.
(i) இரண்டு கூறுகளை கலக்கும்போது, கனஅள்வில் மாற்றம் இருப்பத்தில்லை (ΔVகலத்தல் = 0)
(ii) கரைபொருளை கரைப்பானில் கரைக்கும் போது, வெப்பப் பரிமாற்றம் நிகழ்வதில்லை.
(ΔHகலத்தல் = 0)
(iii) தூய திரவங்களில் உள்ளதைப் போன்றே, கரைச்சலிலுள்ள கரைபொருள் மற்றும் கரைப்பான் ஆகியவற்றின் தப்பிச்செல்லும் திறன், இருக்க வேண்டும்.
41.
(i) கரைசளலில் உள்ள கறைபொருள் மற்றும் கரைப்பான் போன்ற ஒவ்வொரு உட்கூறும், செறிவு எல்லை முழுமைக்கும் ரெளல்ட் விதிக்கு கீழ்ப்படிந்தால் அக்கரைசலானது நல்லியல்புக் கரைசல் என்றழைக்கப்படுகிறது.
(ii) நடைமுறையில், எந்த கரைசலும், செறிவு எல்லை முழுமைக்கும், நல்லியல்புத் தன்மை கொண்டிருப்பத்தில்லை.
(iii) எனினும், கரைபொருளின் செறிவு மிகக்குறைவாக இருக்கும்போது, நீர்த்த கரைசல்கள் நல்லியல்பை பெற்றுள்ளன.
42.
Q = KC, எனும்போது வினை சமநிலையில் உள்ளது.
Q > KC, எனும்போது வினையானது பின்னோக்கிய திசையில் நிகழ்கிறது.
Q < KC, எனும்போது வினையானது முன்னோக்கிய திசையில் நிகழ்கிறது.
43.
நிகர வினை எத்திசையில் நிகழும் என்பதனை கணிக்க இயலும்.
வினை நிகழும் அளவினைத் தீர்மானிக்க இயலும்.
சமநிலையில் உள்ள வினைபடுபொருட்கள் மற்றும் வினை விளைப்பொருட்கள் செறிவுகளைக் கண்டறிய இயலும்.
44.
1. கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பு அமைப்பினை சுழல் இயலாத் தன்மையினால் புறவெளியில் வெவ்வேறு வடிவமைப்புகளை பெற்றுள்ள புறவெளி மாற்றியன்கள் வடிவ மாற்றியன்கள் எனப்படுகின்றன.
2. கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பின் வழியே சுழற்ச்சித் தடையின் காரணமாகவோ அல்லது வளையச் சேர்மங்களில் ஒன்றைப் பிணைப்பின் வழியே ஏற்படும் சுழற்ச்சித் தடையினாலோ இவ்வகை மாற்றியன்கள் ஏற்படுகின்றன.
45.
1.இது ஒரு சிறப்புவகை வினைச்செயல் தொகுதி மாற்றியமாகும். இதில் ஒரு சேர்மம், எளிதில் ஒன்றுக்கொன்று மாற்றமடையும் இரு வேறு வடிவமைப்புகளைப் பெற்றிருக்கும்.
2.இதன் வடிவமைப்புகளில் குறைந்தபட்சம் ஒரு அணு, பொதுவாக ஹைட்ரஜனின் அமைவிடம் மாற்றமடைந்திருக்கும்.
3.இவ்விரு வடிவங்களும் டாடாமெர்கள் எனப்படுகின்றன.
46.
1.கரிம மூலக்கூறுகளின் முப்பரிமான வடிவமைப்புகளை சிறந்த முறையில் புலக்காட்சிப்படுத்த பயன்படும் இயல் உபகரண அமைப்புகளை மூலக்கூறு மாதிரிகள் எனப்படுகின்றன.
2.இவைகள் மரம், பிளாஸ்டிக், உலோகம் அல்லது வணிக ரீதியில் கிடைக்கக் கூடிய பொருள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
47.
1.கார்பனைப் பொறுத்த வகையில், அதற்கு அருகே உள்ள மந்த வாயுவின் எலக்ட்ரான் அமைப்பினைப் பெற, நான்கு எலக்ட்ரான்களை ஏற்றறோ அல்லது இழந்தோ C4- அல்லது C4+ அயனியை உருவாக்க வேண்டும்.
2. ஆனால் இச்செயல்முறை நிகழ தேவையான ஆற்றல் மிக அதிகம் என்பதால் இந்நிகழ்வு நிகழ்வதற்கான சாத்தியம் இல்லை.
3. இதிலிருந்து கார்பனானது அயனிப் பிணைப்பை உருவாக்க வாய்ப்பில்லை என அறிய முடிகிறது.
4. ஏற்றத்தாழ அனைத்து கார்பன் சேர்மங்களிலும் கார்பனானது நான்கு சகப்பிணைப்புகளைப் பெற்றுள்ளது.
48.
| மீளும் வினை | சமநிலை மாறிலி |
| முன்னோக்கு வினைக்கு \(xA+yB\rightleftharpoons lC+mD\) |
KC என்க |
| வினையை மருதிசையில் மாற்றி எழுதும்போது,\(lC+mB\rightleftharpoons xA+yB\) | \({ K }_{ C }^{ 1 }=\frac { 1 }{ { K }_{ C } } \) |
| \(\begin{matrix} A\overset { { K }_{ 1 } }{ \rightleftharpoons B } & B\overset { { K }_{ 2 } }{ \rightleftharpoons C } \\ C\overset { { K }_{ 3 } }{ \rightleftharpoons D } & A\overset { { K }_{ 4 } }{ \rightleftharpoons D } \end{matrix}\) எனில் |
\({ K }_{ 4 }={ K }_{ 1 }{ K }_{ 2 }K_{ 3 }\) |
49.
கொடுக்கப்பட்ட ஒரு வெப்பநிலையில், ஒரு வினையின் சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டில் உள்ள வினை விளைப் பொருட்களின் மோலார் செறியுகளை அவைகளின் வேதிவினைக் கூறு விகிதப்படிக்கு உயர்த்தப்பட்டதன் பெருக்கற்பலனுக்கும்வினைப்படும் பொருள்களின் மோலார் செறிவுகளின் வேதிவினைக்கூறு விகிதப்படிக்கு உயர்த்தப்பட்டதன் பெருக்கற்பலனுக்கும் இடையேயான விகிதம் ஒரு மாறிலி
இம்மாறிலி சமநிலை மாறிலி எனப்படுகிறது.
50.
(i) பொதுவாக ஒரு கரைபொருளின் கரைதிறனானது, அந்த கரைபொருளின் தன்மை மற்றும் அது கரைக்கப்படும் கரைப்பானின் தன்மை ஆகியவற்றை பொறுத்தது.
(ii) மேலும் இது,
(1) கரைசலின் வெப்பநிலை
(2) அழுத்தம்
ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.
51.
(i) அதிக அளவிலான கறைப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் செறிவு மிகுந்த திட்டக் கரைசலை பயன்படுத்துவதால், கரைபொருளை எடையறியும் போது ஏற்படும் பிழைகளை குறைக்கமுடியும்.
(ii) இருப்புக்கரைசலை நீர்க்கச் செய்து வெவ்வேறு செறிவுகளைக் கொண்ட பயன்பாட்டுக் கரைசல்களை நாம் தயாரிக்க முடியும். இம்முறையில் நிலைத்தன்மை பராமரிக்கப்படுவதால் அதிக பயனுடையது.
(iii) சில செறிவு மிகுந்த கரைசல்கள் அதிக நிலைப்புத்தன்மை கொண்டவை, மேலும், சோதனைகளில் பயன்படுத்தப்படும் பயன்பாட்டு திட்டக்கரைசல்கள் போல் அல்லாமல், அவை நுண்ணுயிர் வளர்ச்சிக்கு குறைந்தளவே ஊக்கமளிக்கின்றன.
52.
(i) திட்டக் கரைசல் அல்லது இருப்புக் கரைசல் என்பது, துல்லியமாக திறன் தெரிந்த கரைசலாகும்.
(ii) தேவையான அளவு கரைபொருளைக் கொண்டுள்ள, குறிப்பிட்ட அளவு கரைப்பானில் கரைப்பதன் மூலம், தேவையான செறிவுடைய திட்டக்கரைசைலை தயாரிக்க முடியும்.
53.

54.


55.

56.

57.

58.

59.

60.

61.
62.
கரிம சேர்மத்தின் எடை=0.24 g
Mg2P2O7 ன் எடை=0.66 g
222 g Mg2P2O7 ல் 62 g P உள்ள
0.66 ல் உள்ள \({62\over 222}\times {0.66\over 0.24}\)
P ன் சதவீதம் \({62\over 222}\times {0.66\over 0.24}\times 100=76.80\%\)
63.
64.
கரிமச் சேர்மத்தின் எடை=0.284 g
AgCl ன் எடை=0.287 g
143.5 g AgCl ல் உள்ள
குளோரின் எடை=35.5 g
0.287 g AgCl ல் உள்ள
குளோரின் எடை =\({35.5\over 143.5}\times {0.287\over 0.284}\)
Clன் சதவீதம்=\({35.5\over 143.5}\times {0.287\over 0.284}\times 100=24.98\)
65.
66.
கரிம சேர்மத்தின் எடை=0.2175 g
BaSO4ன் எடை=0.5825 g
233 g BaSO4 ல் உள்ள S ன் எடை=32 g
0.5825 g BaSO4 ல் உள்ள
S ன் எடை=\({32\over 233}\times {0.5825\over 0.2175}\)
Sன் %=\({32\over 233}\times {0.5825\over 0.2175}\times 100\)
=36.78 %
67.
68.
69.
70.
கரைபொருளின் மோலார் நிறை

\(={1000\times 1.86\times 1\over 0.24\times 200}\)
= 38.75 g mol-1
= 38.75 g mol
NaCl யின் கருத்தியலான மோலார் நிறை = 58.5

=1.50
71.
கரைசலின் 20 நிறை சதவீதம் என்பதற்க்கு 20 கிராம் எத்திலீன் கிளைக்கால் 100 கிராம் கரைசலில் உள்ளது எனப்பொருள்.
கரைபொருளின் எடை (W2) = 20கி
கரைப்பானின் எடை (நீர்) W1 = 100 -20 = 80கி
ΔTf = Kf m
\(={K_f\times W_2\times 1000\over M_2\times W_1}\)
\(={1.86\times 20\times 1000\over 62\times 80}\)
= 7.5 K
எந்த வெப்பநிலையில், பனிக்கட்டி படிகங்கள் உருவாகி பிரிகின்றனவோ அதுவே, கரைபொருளை சேர்த்த பின்னர் நீரின் உறைநிலை ஆகும். அதாவது, சாதாரண உறைநிலையை விட 7.5 K குறைவு. (273-7.5K) = 265.5 K
72.
ΔTb = Kb m
= Kb x W2 x 1000 / M2 x W1
M2 = Kb x W2 x 1000 / ΔTb x W1
= 7.5 x 0.75 x 1000 / 0.15 x 200
= 187.5 g mol-1
73.
\({\Delta P\over P_A^o}={W_B\times M_A\over M_B\times W_A}\)
2 % கரைசலில் கரைபொருளின் எடை 2 கிராம், மற்றும் கரைப்பானின் எடை 98 கி.
ΔP = PA - Psolution = 1.013 - 1.004 bar = 0.009 bar
\(M_B={P_A^o\times W_B\times M_A\over \Delta P\times W_A}\)
MB = 2 x 18 x 1.013/(98 x 0.009)
= 41.3 g mol-1.
74.
Pகரைபொருள்=KH xகரைபொருள்
1.5 atm அழுத்தத்தில்
p1 = KH x1-----------(1)
6 atm அழுத்தத்தில்
p2 = KH x2------------(2)
சமன்பாடு (1) ஐ (2) ஆல் வகுக்க
p1/p2 = x1/x2
1.5/6.0 = 0.24/x2
எனவே x2 = 0.24 x 6.0/1.5 = 0.96 g/L.
75.
500 மி.லி 2.5 M HCl கரைசலை தயாரிக்க தேவைப்படும், 4M HCl இன் கன அளவு = x மி.லி. என்க.
எனவே தேவைப்படும் தேவைப்படும், 2M HCl இன் கன அளவு = (500 - x) மி.லி.
C1V1+ C2V2 = C3V3
(4x) + 2(500 - x) = 2.5 × 500
4x + 1000 - 2x = 1250
2x = 1250 - 1000
\(x={250\over 2}\)
= 125 ml
எனவே, தேவைப்படும் 4M HCl இன் கனஅளவு = 125 மி.லி.
தேவைப்படும் 2M HCl இன் கனஅளவு = (500 - 125) மி.லி.= 375 மி.லி.
76.
77.
78.
PoA = 10 torr
Psolution = 9 torr
WA = 20g
WB = 1 g
MA = 200 g mol-1
MB = ?
\(\frac { \Delta P }{ { P }_{ A }^{ 0 } } =\frac { { W }_{ B }\times { M }_{ A } }{ { M }_{ B }\times { W }_{ A } } \)
\(\frac { 10-9 }{ 10 } =\frac { 1\times 200 }{ { M }_{ B }\times 20 } \)
\({ M }_{ B }=\frac { 200 }{ 20 } \times 10\)
WB = 100 g mol-1
79.
(i) 1.5 மோல் CoCl2 ன் நிறை = 1.5 x 129.9
= 194.85 கி
∴ 194.85 கி நீரற்ற கோபால்ட் குளோரைடு நீரில் கரைக்கப்பட்டு லிட்டர் திட்டக்குடுவையில் பயன்படுத்தி கரைசல் தயாரிக்கப்பட்ட வேண்டும்.
(ii) 6% \(\frac { v }{ v } \) கரைசலானது கரைசலில் 6g மெத்தனாலைக் கொண்டுள்ளது.
∴ 500 ml 6% \(\frac { v }{ v } \) மெத்தனால் கரைசலைத் தயாரிக்க 500ml திட்டக்குடுவையில் 30g மெத்தனால் எடுத்துக்கொள்ளப்பட்டு போதுமான அளவு நீர் சேர்க்கப்பட்டு 500ml கரைசல் தயாரிக்கப்படுகிறது.
80.
குளுக்கோஸின் நிறை = 2.82 g
குளுக்கோஸின் மோல்களின் எண்ணிக்கை = \(\frac { 2.82 }{ 180 } \)
நீரின் நிறை = 30g
= \(\frac { 30 }{ 18 } \)
= 1.67
XH2O = \(\frac { 1.67 }{ 1.67+0.016 } \)
= \(\frac { 1.67 }{ 1.686 } \)
= 0.99
∴ XH2O + Xகுளுக்கோஸ் = 1
0.99 + Xகுளுக்கோஸ் = 1
Xகுளுக்கோஸ் = 1 - 0.99
= 0.01.
81.
KOH ன் நிறை =5.6g
மோல்களின் எண்ணிக்கை =\(\frac {5.6}{56}\)
=0.1 மோல்
அ) கரைசலின் அளவு =500 ml =0.5L

\(=\frac { 0.1 }{ 0.5 } \)
=0.2M
ஆ) கரைசலின் கன அளவு =1L
மோலாரிட்டி =\(\frac { 0.1 }{ 1 } \)
=0.1 M
82.
T1 = 25 + 273 = 298 K
T2 = 37 + 273 = 310 K
ΔH = 32.4 KJmol-1 = 32400 Jmol-1
R = 8.314 JK-1 mol-1
KP1= 0.0260
Kp2 = ?
\(\log {K_2\over K_1}={\Delta H^o\over 2.303R}[{T_2-T_1\over T_2T_1}]\)
\(\log {K_2\over K_1}={32400\over 2.303\times 8.314}({310-298\over 310\times 298})\)
\(={32400\times 10\over 2.303\times 8.314\times 310\times 298}\)
= 0.2198
\({K_2\over K_1}=\) antilog 0.2198 = 1.6588
K2 = 1.6588 x 0.026 = 0.0431
83.
கொடுக்கப்பட்டவை
[NH3] = 1.8 x 10-2 M
[N2] = 1.2 x 10-2 M
[H2] = 3 x 10-2 M
Kc = ?
தீர்வு:
N2(g) + 3H2(g) \(\rightleftharpoons \) 2NH3(g)
\(K_c={[NH_3]^2\over[N_2][H_2]^3}={1.8\times 10^{-2}\times 1.8\times 10^{-2}\over 1.2\times 10^{-2}\times 3\times 10^{-2}\times 3\times 10^{-2}\times 3\times 10^{-2}}\)
= 1 x 103l2mol-2
84.
H2(g) + I2(g) \(\rightleftharpoons \) 2HI(g)
| H2 | I2 | HI | |
|---|---|---|---|
| ஆரம்பத்தில் உள்ள மோல்கள் | 1 | 1 | - |
| சமநிலையில் உள்ள மோல்கள் | 1-x | 1-x | 2x = 0.4 x = 0.2 |
| 0.8 | 0.8 | 0.4 |
\(\therefore K_c={[HI]^2\over [H_2[I_2]]}={0.4\times 0.4\over 0.8\times 0.8}=0.25\)
85.
\(Q={[NO_2]^2\over [N_2O_4]}={0.5\times 0.5\over 0.125}=2\)
Qன் மதிப்பானது KCன் மதிப்பினை விட அதிகம் எனவே Qன் மதிப்பு 0.21 ஆகும் வரை வினையானது பின்னோக்கிய திசையில், நிகழும்.
86.
ஒரு குறிப்பிட்ட நிலையில், H2, I2, மற்றும் HIன் செறிவுகள் முறையே 0.2mol L-1, 0.2 mol L-1 மற்றும் 0.6 mol L-1 என கண்டறியப்படுகிறது. மேற்கண்டுள்ள தகவல் மூலம் நாம் வினை நிகழும் திசையினை பின்வருமாறு கண்டறிய இயலும்
\(Q={[HI]^2\over[H_2][I_2]}={0.6\times 0.6\over 0.2\times 0.2}=9\)
Q<KC என்பதால், வினையானது முன்னோக்கிய திசையில் நிகழும்.
87.
வாயுக்களை திரவமாக்கப்பல்வேறு முறைகள் பயன்படுகின்றன.
1) லின்டே முறையில், காற்று அல்லது பிறவாயுக்கள் ஜூல் தாம்சன் விளைவை பயன்படுத்தி திரவமாக்கப்படுகின்றன.
2) கிளாட் முறையில், ஜூல் தாம்சன் விளைவுடன்,வாயுவானது எந்திரவியல் வேலைக்கும் உட்படுத்தப்படுகிறதன் மூலம் அதிக குளிரிச்சியடைந்த நிலை உருவாக்கப்படுகிறது.
3) வெப்பமாறாச் செயல் முறையில்,கடோலினியம் சல்பேட் போன்ற காந்தத் தன்மையுடைய பொருளின் காந்தத் தன்மையை இழக்கச் செய்வதன் மூலம், குளிரிச்சியடைச் செய்தல் நிகழ்த்தப்படுகிறது. இம்முறையில் 0K யை விடகுறைவான வெப்பநிலையான 10-4 K
அளவில் வெப்பநிலையினை அடைய இயலும்.
88.
i.கார உலோகங்கள் அதிக வினைதிறனைக் கொண்டுள்ளன.
ii.இந்த வினையின் Li லிருந்து Cs வரை அதிகரிக்கிறது.
iii.தொகுதியில் மேலிருந்து கீழாக அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.
iv.அனைத்து கார உலோகங்களும்,அதிக எலக்ட்ரான் கவர் தன்மை கொண்ட தனிமங்களான ஆக்ஸிஜன் மற்றும் ஹேலஜன்களுடன் மிக அதிக வீரியத்துடன் வினைபுரிகின்றன.
89.
(i)
| தனிமம் | குறியீடு | அணு எண் | எலக்ட்ரான் அமைப்பு |
|---|---|---|---|
| லித்தியம் | Li | 3 | [He]2s1 |
| சோடியம் | Na | 11 | [Ne]3s1 |
| பொட்டாசியம் | K | 19 | [Ar]4s1 |
| ரூபீடியம் | Rb | 37 | [Kr]5s1 |
| சீசியம் | Cs | 55 | [Xe]6s1 |
| ஃபிரான்ஷியம் | Fr | 87 | [Rn]7s1 |
(ii) பொதுவான ஆக்ஸிஐனேற்ற நிலை:இந்த தனிமங்கள் அனைத்தும் அதிக நேரமின்தன்மை கொண்டவையாக உள்ளன.இவைகள் எளிதில் தங்களின் இணைதிறன் கூட்டு எலக்ட்ரானை இழந்து ஒற்றை மின்சுமையுடைய நேர்மின் அயனிகளை (M+) உருவாக்குகின்றன.கார உலோகங்கள் +1 என்ற ஒரே ஒரு ஆக்ஸினேற்ற நிலையை மட்டுமே கொண்டுள்ளன.
90.
H=U+PV
H,U,V ஆகியவற்றின் ஆரம்ப மற்றும் இறுதி நிலைகள் H1,U1,V1 மற்றும் H2,U2,V2 ஆகும்.
என்தால்பி மாற்றம்
(H2-H1)=(U2-U1)+P(V2-V1)
\(\triangle H=\triangle U+ P\triangle V\)
91.
1.எந்த ஒரு செயல் முறையின் தன்னிச்சை தன்மையும் மூன்று வெவ்வேறு காரணிகளை பொறுத்து அமைகிறது.
2.ஒரு செயல்முறையின் என்தால்பி மாற்றம் எதிர்குறி மதிப்பை பெற்றிருந்தால், அச்செயல் முறையானது வெப்பம் உமிழ் செயல்முறையாகும், மேலும் தன்னிச்சையாக நிகழலாம்.(\(\triangle\)H எதிர்குறிஉடையது)
3.ஒரு செயல்முறையின் என்ட்ரோபி மாற்றம் நேர்குறி மதிப்பை பெற்றிருந்தால், அச்செயல் முறையானது தன்னிச்சையாக நிகழலாம்.(\(\triangle\)S நேர்குறிஉடையது)
4. ஒரு வினை தன்னிச்சையாக நிகழ, மேற்கூறிய இரண்டின் தொகுப்பான கட்டிலா ஆற்றல் மதிப்பு கண்டிப்பாக எதிர்குரியை பெற்ரறிருக்க வேண்டும். அதாவது ஒரு வினை தன்னிச்சையாக நிகழ்வதற்கு தேவையான நிபந்தனை \(\triangle\)H-T\(\triangle\)S<0 என்பதாகும்.
92.
மாறாக வேதிவினைக் கூறு விகித அடிப்படையில் அமையாத அளவினைக் கொண்ட வினைபடு பொருட்களைக் கொண்டு, வினை நிகழ்த்தப்படும் போது, உருவாகும் விளை பொருளின் அளவானது, எந்த வினைபடுபொருள் முதலில் முழுவதும் வினைப்படுகிறதோ, அந்த வினைபொருளைச் சார்ந்து அமையும். இவ்வினைப்பாடு பொருள் வினை தொடர்ந்து நிகழ்வதைக் கட்டுப்படுத்துகிறது. இது வினை கட்டுப்பாட்டுக் காரணி என அழைக்கப்படுகிறது.
93.
கூற்று 1 மற்றும் கூற்று 2 உண்மையான கூற்றுகளாகும். ஆனால் இவ்விரண்டிற்க்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை.
94.
(i) உலோக இடப்பெயர்ச்சி வினை

(ii) அலோக இடப்பெயர்ச்சி வினை

95.
1. ஒரு சேர்மம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளாக பிரிகையடையும் வினைகள் சிதைவடையும் வினைகள் என அழைக்கப்படுகின்றன.
3. இவ்வகை வினைகளில், ஒரு சேர்மத்தில் உள்ள இரண்டு வெவ்வேறான தனிமங்களின் ஆக்சிஜனேற்ற எண்களில் மாற்றம் ஏற்படுகிறது.
எடுத்துக்காட்டு:

96.
2NO (g) + O2(g) ⇌ 2NO2(g)
| NO | O2 | NO2 | |
| ஆரம்ப அழுத்தம் | 1 | 1 | - |
| வினைப்பட்டது | 0.96 | 0.48 | - |
| சமநிலை பகுதி அழுத்தம் | 0.04 | 0.52 | 0.96 |
Kp =\(\frac { { ({ P }_{ N{ O }_{ 2 } }) }^{ 2 } }{ { ({ P }_{ N{ O } }) }^{ 2 }({ P }_{ { O }_{ 2 } }) } =\frac { 0.96\times 0.96 }{ 0.04\times 0.04\times 0.52 } \)
Kp =1.017 x 103
97.
V = 3L
[HI]initial = \(\frac { 0.3\ mol }{ 3L } =0.1\ M\)
[HI]eq = 0.05 M
2HI(g) ⇌ H2(g) + I2(g)
| HI(g) | H2(g) | I2(g) | |
| ஆரம்ப செறிவு | 0.1 | - | - |
| வினைப்பட்டது | 0.05 | - | - |
| சமநிலை செறிவு | 0.05 | 0.025 | 0.025 |
\({ K }_{ c }=\frac { { [H }_{ 2 }][{ I }_{ 2 }] }{ { [HI }]^{ 2 } } \)
\(=\frac { 0.025\times 0.025 }{ 0.05\times 0.05 } \)Kc = 0.25
KP = KC (RT)Δng
Δng = 2 – 2 = 0
KP = 0.25 (RT)o
KP = 0.25
98.
SrCO3 (S) ⇌ SrO(S) + CO2(S)
என்ற வினைக்கு
Δng = 1 – 0 = 1
\(\therefore \) KP = KC (RT)
2.2 × 10–4 = KC (0.0821) (1002)
\({ K }_{ C }=\frac { 2.2\times { 10 }^{ -4 } }{ 0.0821\times 1002 } \)
= 2.674 \(\times \) 10-6
99.
Given that [PCI5]initial=\(\frac { 1mole }{ 1{ dm }^{ 3 } } \)
[C12]eq =0.6 mole dm-3
PCI5 \(\rightleftharpoons \) PCI3 + CI2
[PCI3]eq = 0.6 மோல் dm-3
[PCI5]eq=0.4 மோல் dm-3
\(\therefore \) \({ K }_{ c }=\frac { [{ PCI }_{ 3 }][CI_{ 2 }] }{ [PCI_{ 5 }] } =\frac { 0.6\times 0.6 }{ 0.4 } \)
Kc = 0.9
100.

| பெயர் | வாய்ப்பாடு | பெயர் |
| A | \({ CH }_{ 3 }CH{ Cl }_{ 2 }\) | எத்திலிடின் டை குளோரைடு |
| B | \(\underset { \overset { | }{ CI } }{ { CH }_{ 2 } } -\underset { \overset { | }{ CI } }{ { CH }_{ 2 } } \) | எத்திலின் டை குளோரைடு |
| C | \({ CH }_{ 3 }CHO\) | அசிட்டால்டிஹைடு |
| D | \(\underset { \overset { | }{ OH } }{ { CH }_{ 2 } } -\underset { \overset { | }{ OH } }{ { CH }_{ 2 } } \) | எத்திலீன் கிளைக்கால் |
101.

| பெயர் | வாய்பாடு | பெயர் |
| A | \({ CH }_{ 3 }-CH={ CH }_{ 2 }\) | புரப்பீன் |
| B | \({ CH }_{ 3 }-{ CH }_{ 2 }-{ CH }_{ 2 }-Br\) | n-புரப்பைல் புரோமைடு |
| C | \({ CH }_{ 3 }-{ CH }_{ 2 }-{ CH }_{ 2 }OH\) | n-புரப்பைல் ஆல்கஹால் |
102.

| பெயர் | வாய்பாடு | பெயர் |
| A | \({ CH }_{ 2}={ CH }_{ 2 }\) | எத்திலீன் |
| B | \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }{ CI }\) | ஈத்தைல் குளோரைடு |
| C | \({ C }_{ 2 }{ H }_{ 5 }NH_{ 2 }\) | ஈத்தைல் அமீன் |
103.

| பெயர் | வாய்பாடு | பெயர் |
| A | \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }{ CI }\) | குளோரோ ஈத்தேன் |
| B | \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }{ OH }\) | எத்தனால் |
| C | \({ CH }_{ 2 }{ =CH }_{ 2 }\) | எத்திலீன் |
104.
\(\triangle \)Tf = 0.093oC = 0.093K
m = ?
Kf = 1.86K Kg mol–1
\(\triangle \)Tf = Kf . m
\(\therefore \)m=\(\frac { { \triangle T }_{ f } }{ { k }_{ f } } \)
\(=\frac { 0.093K }{ 1.86KKg{ mol }^{ -1 } } \)
=0.05 mol Kg-1
=0.05
105.
\({ K }_{ c }=\frac { { [AB] }^{ 2 } }{ [{ A }_{ 2 }][{ B }_{ 2 }] } \) A - green
B - blue
கொடுக்கப்பட்டவை 'V' மாறிலி (மூடிய அமைப்பு) சமநிலையில்
\({ K }_{ c }=\frac { { \left( \frac { 4 }{ V } \right) }^{ 2 } }{ \left( \frac { 2 }{ V } \right) \left( \frac { 2 }{ V } \right) } =\frac { 16 }{ 4 } =4\)
KP = KC (RT)Δn
KP = 4(RT)o = 4
'x' நிலையில்
\(Q=\frac { { \left( \frac { 6 }{ V } \right) }^{ 2 } }{ \left( \frac { 2 }{ V } \right) \left( \frac { 1 }{ V } \right) } =\frac { 36 }{ 2 } =18\)
Q > KC அதாவது பின்னோக்கிய வினைஆதரிக்கப்படுகிறது.
'y' நிலையில்
\(Q=\frac { { \left( \frac { 3 }{ V } \right) }^{ 2 } }{ \left( \frac { 3 }{ V } \right) \left( \frac { 3 }{ V } \right) } =\frac { 9 }{ 3\times 3 } =1\)
Kc > Q அதாவது முன்னோக்கிய வினை ஆதரிக்கப்படுகிறது.
106.
கொடுக்கப்பட்டவை
n=1mol
P=4.1 atm
V=2 Lit
T =?
q=3710J
\(\triangle S=\frac { q }{ T } \)
\(\triangle S=\frac { q }{ \left( \frac { PV }{ nR } \right) } \)
\(\triangle S=\frac { nRq }{ PV } \quad \)
\(\triangle S=\frac { 1\times 0.082litatm{ K }^{ -1 }\times 3710J }{ 4.1atm\times 2lit } \)
\(\triangle S=37.10J{ K }^{ -1 }\)
107.

ΔHf = ΔH1 + ΔH2 + ΔH3 + 2 ΔH4 + u
−795 = 121 + 2422 + 242.8+ (2 ×−355) + u
−795 = 2785.8 − 710 + u
−795 = 2075.8 + u
u = −795 − 2075.8
u = −2870.8 kJ mol−1
108.
T1 = 150 C + 273 T2 = 38 + 273
T1 = 288 K T2 = 311 K
V1 = 2.58 dm3 V2 = ?
(P = 1 atm மாறிலி)
\({V_1\over T_1}={V_2\over T_2}\)
\(V_2=\left(V_1\over T_1\right)\times T_2\)

V2 = 2.78 dm3 அதாவது கனஅளவு 2.58 dm3 லிருந்து 2.78 dm3 ஆக அதிகரிக்கிறது.
109.
(i) \(6Ni_{(s)}+N_{2(g)}\rightarrow 2Li_{3}N_{(s)}\)
(ii) \(2NaHCO_{3} \overset{\Delta}{\rightarrow}Na_{2}CO_{3}+CO_{2}+H_{2}O \)
(iii) \(Rb+O_{2} \rightarrow RbO_{2}\)
(iv) \(KOH+CO_{2} \rightarrow KHCO_{3}\)
(v) \(CaCO_{3} \rightleftharpoons CaO+CO_+{2}\)
(vi) \(2Ca+O_{2} \rightarrow 2CaO\)
110.
(i) 2KMnO4 + 5H2O2 + 3H2SO4 \(\rightarrow\) K2SO4 + 2MnSO4 + 5O2+8H2O
(ii) CrCI3 + 6H2O \(\rightarrow\) CrCI3.6H2O
(iii) CaO + H2O \(\rightarrow\) Ca(OH)2
இவற்றுள்
(அ) நீராற் பகுத்தல்
(iii) CaO + H2O \(\rightarrow\) Ca(OH)2
(ஆ) ஆக்ஸிஜனேற்ற வினை
(i) 2KMnO4 + 5H2O2 + 3H2SO4 \(\rightarrow\) K2SO4 + 2MnSO4 + 5O2 (அமில ஊடகத்தில்) + 8H2O
(இ) நீரேற்ற வினை -
(ii) CrCI3 + 6H2O \(\rightarrow\) CrCI3.6H2O
111.
சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
CaCO3 (s) \(\overset { \Delta }{ \longrightarrow } \) CaO(s) + CO2 (g)
மேற்கண்டுள்ள சமன்பாட்டின்படி
1 மோல் (100g) CaCO3 ஐ வெப்பப்படுத்தும் போது 1 மோல் CO2 உருவாகிறது

திட்ட வெப்ப அழுத்த நிலைகளில், 1 மோல் CO2 ஆனது 22.7 லிட்டர் கனஅளவை அடைத்துக் கொள்ளும்.
திட்ட வெப்ப அழுத்த நிலைகளில், 50 g CaCO3 ஐ வெப்பப்படுத்தும் போது

= 11.35 லிட்டர் of CO2 வைத் தருகிறது
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards