11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
அயனியாக்கும் ஆற்றலுக்கு கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் வரையறை சரியானது? ஏன்?
"ஒரு அணுவின் இணைதிற கூட்டில் இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானை நீக்க தேவையான ஆற்றல் அயனியாக்கும் ஆற்றல்"
2.
முதலாம் தொகுதியில் சீசியம் மட்டுமே ஒளிமின் விளைவை ஏற்படுத்தும். காரணம் கூறு.
3.
அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் எவ்வாறு அமையும்? உன் விடைக்கான காரணத்தை கூறு.
4.
சோடியம் மற்றும் மெக்னீசியத்தின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளை ஒப்பிட்டால், சோடியத்தை விட மெக்னீசியத்தின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு அதிகம். இதற்கான காரணங்களை பட்டியலிடுக.
5.
அயனி ஆரம் கணக்கிட உதவும் பாலிங்கின் இரு கூற்றுகள் யாவை?
6.
லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினை தருக.
7.
முதல் அயனியாக்கும் ஆற்றலை விட இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் எப்பொழுதும் அதிகம் எனும் கூற்றிலுள்ள உண்மையை எவ்வாறு விளக்குவாய்?
8.
மெக்னீசியம் அடுத்தடுத்து எலக்ட்ரான்களை இழந்து Mg+, Mg2+ மற்றும் Mg3+ அயனிகளை தருகிறது.இதில் அதிக அயனியாக்கும் ஆற்றல் தேவைப்படும் படி எது? ஏன்?
9.
ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் என்றால் என்ன? உதாரணங்கள் கொடு.
10.
நவீன ஆவர்த்தன விதியை வரையறு.
1.
கொடுக்கப்பட்டுள்ள அயனியாக்கும் ஆற்றலின் வரையறை தவறானதாகும்.
காரணம்: (சரியான வரையறை) அடி ஆற்றல் நிலையில் உள்ள நடுநிலைதன்மை உடைய தனித்த வாயு நிலை அணு ஒன்றின் இணைதிற கூட்டிலிருந்து இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள ஒரு எலக்ட்ரானை நீக்குவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் அயனியாக்கும் ஆற்றல் எனப்படும்.
2.
(i) முதலாம் தொகுதியில் சீசியத்தின் உருவளவு அதிகம்.
(ii) எனவே அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு குறைவு.
(iii) அதன் மீது குறிப்பிட்ட அலைநீள முள்ள ஒளிபடும்போது எலக்ட்ரானை வெளிப்படுத்துகிறது.
3.
(i) ஒவ்வொரு அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றலும் முன்னர் உள்ள அயனியாக்கும் ஆற்றலை விட அதிகமாக இருக்கும்.
(ii) ஏனெனில், அவனியில் உள்ள மொத்த நேர்மின்சுமைக்கு எதிராக எலக்ட்ரான் நீக்கப்படுகிறது.
4.
(i) மெக்னீசியத்தின் உட்கரு மின்சுமை (z=12) சோடியத்தின் உட்கரு மின்சுமையை (z=12) விட அதிகம்.
(ii) சோடியத்தை விட மெக்னீசியம் சிறிய அணு பருமன் கொண்டது.
(iii) Na ன் எலக்ட்ரான் அமைப்பு: 1s22s22p63s1 இது எளிதில் 3s1 எலக்ட்ரானை இழந்து நிலையான Ne எலக்ட்ரான் அமைப்பை பெறுகிறது.
(iv) Mg ன் எலக்ட்ரான் அமைப்பு: 1s22s22p63s2 இது முழுவதும் நிரம்பிய 3s ஆர்பிட்டாலை பெற்று இருப்பதால் நிலைத்தன்மை அடைகிறது.
5.
(i) ஓர் அயனிப் படிகத்தில் உள்ள நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் ஒன்றையொன்றுதொட்டுக்கொண்டிருக்குமாறு கருதும்போது அவற்றின் அயனி ஆரங்களின் கூடுதல் ஆனது அவற்றிற்கிடையேயான அணுக்கருக்களின் தொலைவிற்கு சமமாக இருக்கும்.(ii) ஓர் அயனியின் அபாரமானது அதன் அணுக்கருவின் நிகர மின்சுமைக்கு எதிர்விகிதத்தில் இருக்கும்.
6.
(i) லாந்தனைடுகள்: [54Xe] 4f1-145d1 6s2
(ii) ஆக்டினைடுகள்: [86Rn] 5f0-14 6d0-2 7s2
7.
(i) தனிமங்களின் இயற் மற்றும் வேதிப்பண்புகள் அவற்றின் அணு எண்களின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன. ஒரு நேர்மின்சுமையுடைய அயனியில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையானது, அதன் நடுநிலை அணுவில் காணப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தபோதிலும் அவைகளின் அணுக்கரு மின்சுமை சமமாக இருக்கும்.
(ii) எனவே, நேர்மின்சுமையுடைய அயனியின் செயலுறு அணுக்கவர்ச்சி விசையானது, தொடர்புடைய நடுநிலை அணுவின் செயலுறு கவர்ச்சி விசையினை விட அதிகம்.
(iii) எனவே, தொடர்ச்சியான அயனியாக்கும் ஆற்றலின் மதிப்புகள் எப்போதும் பின்வரும் ஏறுவரிசையில் அமைகின்றன.
IE1 < IE2 < IE3 ..........
8.
Mg+ முதல் அயனியாக்கும் ஆற்றல் ⟶ Mg + 1e- ........(1)
Mg+ + இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் ⟶ Mg2+ + 1e- ......(2)
Mg2+ + மூன்றாம் அயனியாக்கும் ஆற்றல் ⟶ Mg3+ + 1e- ......(3)
(i) மேற்கண்ட மூன்று படிகளிலும், 3வது அதிக அயனியாக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
(ii) Mg2+ -ல் 10 எலக்ட்ரான்கள் உள்ளன. இது (2,8) என்ற நிலையான ஆர்கான மந்தவாயு (z=10)-ன் எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளது.
(ii) முழுவம் நிரம்பிய ஆற்றல் மட்டத்திலிருந்து எலக்ட்ரானை நீக்குவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.
9.
வெவ்வேறு தனிமங்களின் அயனிகள் ஒரே எலக்ட்ரான் எண்ணிக்கையை கொண்டிருப்பது ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் எனபப்டும்.
உதாரணம்:
| வெவ்வேறு தனிம அயனிகள் | Na+ | Mg2+ | AI3+ | F- | O2- | N3- |
| எலக்ட்ரான்கள் எண்ணிக்கை | 10 | 10 | 10 | 10 | 10 | 10 |
10.
(i) தனிமங்களின் இயற் மற்றும் வேதிப்பண்புகள் அவற்றின் அணு எண்களின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன.
(ii) இக்கூற்று நவீன ஆவர்த்தன விதி என்றழைக்கப்படுகிறது.
(iii) இவ்விதியின் அடிப்படையில், தனிமங்கள் அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையில் வரிசைபடுத்தப்பட்டன.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards