11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
66.26x10-28 kgms-1 உந்தத்தை உடைய துகள் ஒன்றின் டி - பிராக்ளி அலைநீளத்தை கணக்கிடு.
2.
ஆஃபா தத்துவத்தின் வரம்புகள் யாவை?
3.
ஹைட்ரஜனின் 2s ஆர்பிட்டாலின் ஆற்றலானது லித்தியத்தின் 2s ஆர்பிட்டாலின் ஆற்றலை விட அதிகம் ஏன்?
4.
ஹைட்ரஜன் அணுவின் போர் வட்டப்பாதையின் சுற்றளவானது, அணுக்கருவினைச் சுற்றி வரும் எலக்ட்ரானுக்கான டிபிராக்ளி அலைநீளத்தின் முழு எண் மடங்கிற்குச் சமம் எனக் காட்டுக.
5.
ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.
6.
குவாண்டம் இயக்கவியலின் அடிப்படையில் ஹைட்ரஜன் அணுவின் ஆற்றல் மதிப்பு
\(E_n=\frac{-13.6}{n^{2}}\)eV atom-1
i) இதனைப் னைப் பயன்படுத்தி n = 3 மற்றும் n = 4க்கு இடையேயான ஆற்றல் வேறுபாடு ΔE யைக் கண்டறிக.
ii) மேற்கண்டுள்ள பரிமாற்றத்திற்கு உரிய அலைநீளத்தினைக் கணக்கிடுக.
7.
O-அணுவில் உள்ள 8வது எலக்ட்ரான் மற்றும் Cl – அணுவில் உள்ள 15வது எலக்ட்ரான் குரோமியத்தின் கடைசி எலக்ட்ரான் ஆகியனவற்றிற்கான நான்கு குவாண்டம் எண்களின் மதிப்புகளையும் தீர்மானிக்கவும்.
8.
Δv = 0.1% மற்றும் V = 2.2 ×106 ms-1 ஆக உள்ள எலக்ட்ரான் ஒன்றின் நிலையை அளவிடுவதில் உள்ள நிச்சயமற்றத் தன்மையினைக் கணக்கிடுக.
9.
காலத்தைச் சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச்சமன்பாட்டினை சுருக்கமாக விளக்குக.
10.
பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு
1.
\(\lambda=\frac{h}{p}=\frac{6.626\times10^{-34}}{66.26\times10^{-28}}\)
λ=1x10-7 m
2.
1. ஆஃபா தத்துவம் பல்வேறு ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் எவ்வாறு நிரப்பப்படுகிறது என்பதை விளக்குகிறது.
2. ஆனால் px, py, pz போன்ற சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் நிரப்பப்படுவது பற்றி அறிவியல் ஏதும் குறிப்பிடவில்லை.
3.
1. அணு எண் அதிகரிக்கும்போது அணு எண் அதிகமாக உள்ள அணுவின் ஆர்பிட்டாலின் ஆற்றல் குறையும்.
2. எனவே தான் ஹைட்ரஜனின் 2s ஆர்பிட்டாலின் ஆற்றலானது லித்தியத்தின் 2s ஆர்பிட்டாலின் ஆற்றலை விட அதிகம்.
4.
1. டி -பிராக்ளி கொள்கைப்படி, அணுக்கருவினை சுற்றி வரும் எலக்ட்ரானானது, துகள் மற்றும் அலைப்பண்பு ஆகிய இரு பண்புகளையும் பெற்றுள்ளது.
2. எலக்ட்ரான் அலையானது தொடர்ச்சியாக அமைய வேண்டுமெனில், எலக்ட்ரான் சுற்றி வரும் வட்டப்பாதையின் சுற்றளவானது, அதன் அலை நீளத்தின் முழு எண் மடங்காக இருக்க வேண்டும்.
3. அவ்வாறு இல்லாத நிலையில் எலக்ட்ரான் அலையானது தொடர்ச்சியற்றதாக இருக்கும்.
வட்டப்பாதையில் சுற்றளவு =\(n\lambda \)
\(2\pi r=n\lambda \)...(1)
இங்கு,
\(\lambda =\frac { h }{ mv } \)
\(\lambda \)-வின், மதிப்பை (1) ல் பிரதியிட,
\(2\pi r=\frac { nh }{ mv } \)...(2)
சமன்பாடு (2) ஐ மாற்றியமைக்க,
\(mvr=\frac { nh }{ 2\pi } \)...(3)
கோண உந்தம் =\(\frac { nh }{ 2\pi } \)
4. மேற்கண்ட சமன்பாடு ஏற்கனவே போர் என்பவரால் யூகித்தறியப்பட்ட ஒன்றாகும். எனவே போர் கொள்கையும், டி -பிராக்ளி கொள்கையும் ஒன்றுக்கொன்று உடன்படுகின்றன.
5.
1. ஜெர்மன் மொழியில் ஆஃபா என்ற சொல்லுக்கு கட்டமைத்தல் என்பது பொருளாகும்.
2. அடி ஆற்றல் நிலையில் உள்ள அனுவின், ஆர்பிட்டால்கள் அவற்றின் ஆற்றலின் ஏறுவரிசையில் நிரப்பப்படுகின்றன.
3. அதாவது, எலக்ட்ரான்கள், அவை நிரப்பப்படுவதற்கு வாய்ப்புள்ள ஆர்பிட்டால்களில், எந்த ஆர்பிட்டால் குறைந்த ஆற்றலுடையதோ அந்த ஆர்பிட்டாலில் முதலில் நிரம்பும்.
4. குறைவான ஆற்றலுடைய ஆர்பிட்டால் முழுமையாக நிரப்பப்பட்ட பின்னரே, எலக்ட்ரானானது அடுத்த உயர் ஆற்றலுடைய ஆர்பிட்டாலினுள் நுழையும்.

5. மேலே உள்ள படம் ஆஃபா தத்துவத்தின் அடிப்படையில், பல்வேறு ஆர்பிட்டால்களின் நிரப்பப்படும் வரிசை தரப்பட்டுள்ளது.
6. இவ்வரிசை (n+1) விதிப்படி அமைந்துள்ளது.
6.
\(E_n=\frac{-13.6}{n^{2}}\)eV atom-1
n=3 \(E_3=\frac{-13.6}{3^{2}}=\frac{-13.6}{9} \)=-1.51 eV atom-1
n=4 \(E_4=\frac{-13.6}{4^{2}}=\frac{-13.6}{16} \)= -0.85 eV atom-1
△E=(E4-E3)=(-0.85)-(-1.51)eV atom-1
=(-0.85+1.51)=0.66 eV atom-1
(1eV = 1.6 × 10–19 J)
ΔE=0.66 × 1.6 × 10–19 J
ΔE=1.06 × 10–19 J
hv = 1.06 × 10–19 J
\(\frac{hc}{\lambda}=1.06\times10^{-19}J\)
\(\therefore \lambda=\frac{hc}{1.06\times10^{-19}J}\)
\(=\frac{6.626\times10^{-34}JS\times3\times10^{8}ms^{-1}}{1.06\times10^{-19}J}\)
λ=1.875х10-6m
7.
ஆக்ஸிஜனின் எலக்ட்ரான் அமைப்பு

∴ 8- வது எலக்ட்ரான் 2px ஆர்பிட்டாலில் உள்ளது மற்றும் குவாண்டம் எண்கள்
n = 2, l = 1, ml = +1 அல்லது -1 ஆக இருக்கலாம்
s = –1/2
குளோரினின் எலக்ட்ரான் அமைப்பு =

15th எலக்ட்ரான் 3PZ ஆர்பிட்டாலில் உள்ளது n = 3, l = 1,
ml = 0 மற்றும் ms = +1/2
8.
\(\Delta x.\Delta P\ge\frac{h}{4\pi}\)
\(\Delta x.\Delta p\ge 5.28\times10^{-35}Kgm^{2}s^{-1}\)
\(\Delta x.(m\Delta v)\ge5.28\times 10^{-35}Kgm^{2}s^{-1} \)
கொடுக்கப்பட்டுள்ளவை \(\Delta\)v = 0.1%
v = 2.2 × 106 ms–1
m = 9.1 × 10–31 Kg
Δv=\(\frac{1}{100}\times2.2\times10^{6}ms^{-1}\)
=2.2x103ms-1
\(\therefore\) \(\Delta x\ge\frac{5.28\times10^{-35}Kgm^{2}s^{-1}}{9.1\times10^{-31}kg\times2.2\times10^{3}ms^{-1}}\)
\(\Delta x\ge2.64\times10^{-8}m\)
9.
1. எர்வின் ஷ்ரோடிங்கர் எலக்ட்ரானின் அலைப்பண்பினை, ஒரு வகைக்கெழுச் சமன்பாட்டின் அடிப்படையில் குறிப்பிட்டார்.
2. எலக்ட்ரான் இயங்கக்கூடிய விசையின் புலத்தினை பொறுத்து புறவெளியில் அலைச் சார்பில் ஏற்படும் மாறுபாட்டினை இச்சமன்பாடு தீர்மானிக்கிறது.
3. காலத்தினை சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாட்டினை பின்வருமாறு குறிப்பிடலாம்.
\(\widehat { H } \psi =E\psi \)...(1)
இங்கு,
\(\widehat { H } \)=ஹாமில்டோனியன் செயலி
\(\psi \)=அலைச் சார்பு. இது துகளின் நிலை அச்சுகளின் சார்பாகும். இது \(\psi \left( x,y,z \right) \) என குறிப்பிடப்படுகிறது.
\(\widehat { H } =\left[ \frac { -{ h }^{ 2 } }{ 8{ \pi }^{ 2 }m } \left( \frac { { \partial }^{ 2 } }{ \partial { x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 } }{ \partial { y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 } }{ \partial { z }^{ 2 } } \right) +V\psi \right] \)...(2)
சமன்பாடு (2) ஐ (1) ல் பிரிதியிட,
\(\left[ \frac { -{ h }^{ 2 } }{ 8{ \pi }^{ 2 }m } \left( \frac { { \partial }^{ 2 } }{ \partial { x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 } }{ \partial { y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 } }{ \partial { z }^{ 2 } } \right) +V\psi \right] =E\psi \)...(3)
சமன்பாடு (3) ஐ \(-\frac { 8{ \pi }^{ 2 }m }{ { h }^{ 2 } } \) ஆல் பெருக்கி, மாற்றியமைக்க.
\(\frac { { \partial }^{ 2 }\psi }{ \partial { x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\psi }{ \partial { y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\psi }{ \partial { z }^{ 2 } } +\frac { 8{ \pi }^{ 2 }m }{ { h }^{ 2 } } \left( E-V \right) \psi =0\)...(4)
4. மேற்கண்ட ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாட்டில், காலம் (t) ஒரு சார்பாக இடம் பெறவில்லை என்பதால் இச்சமன்பாடு காலத்தைப் பொறுத்து அமையாத ஷ்ரோடிங்கரின் அலைச் சமன்பாடு என அழைக்கப்படுகிறது.
5. மொத்த ஆற்றலின் (E) குறிப்பிட்ட சில மதிப்புகளுக்கு மட்டும் இச்சமன்பாட்டிற்கு தீர்வுகாண இயலும்.
10.
கொடுக்கப்பட்ட ஒரு ஆர்பிட்டாலில் அதிகபட்சமாக இரு எலக்ட்ரான்கள் மட்டுமே நிரப்ப முடியும். அவை இரண்டும் எதிரெதிர் சுழற்சியுடையவை.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards