11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 17/01/2020
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
மாற்றியம் என்ற சொற்கூறு யாரால் அறிமுகப்டுத்தபட்டது?
கெருலே
பிஷர்
லூயிஸ்
பெர்சீலியஸ்
2.
விசையினை, விசை செலுத்தப்படும் பரப்பினால் வகுக்கக் கிடைப்பது.
வெப்பநிலை
அழுத்தம்
கன அளவு
இவற்றுள் எதுவுமில்லை
3.
குடிநீரில் காணப்படும் எதன் குறைவால் பற்சிதைவு தோன்றுகிறது ?
குளோரைடு
புளூரைடு
கால்சியம்
மெக்னீசியம்
4.
நீர் மூலக்கூறில் உள்ள OH பிணைப்புகளின் பிணைப்பு ஆற்றல்களின் சராசரி மதிப்பு
502 KJ mol-1
427 KJ mol-1
546.8 KJ mol-1
464.5 KJ mol-1
5.
பென்சீனை நைட்ரோ ஏற்றம் செய்யும்போது அடர் H2SO4 ஜ சேர்ப்பதால் வெளிப்படுவது
NO2
\({ NO }_{ 2 }^{ - }\)
\({ NO }_{ 2 }^{ + }\)
\({ NO }_{ 3 }^{ - }\)
6.
'q' அளவு வெப்பத்தை உறிஞ்சி 'W' அளவு வேலையைச் செய்தால் அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம்
H
P\(\triangle\)V
V
E
7.
பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையில் அதிக வினைபுரிவது எது?




8.
2A(g) ⇌ 2B(g) + C2(g) என்ற சமநிலையில், 400K வெப்பநிலையில் A, B மற்றும் C2வின்
சமநிலைச் செறிவுகள் முறையே 1 \(\times\) 10–4 M, 2.0 \(\times\) 10–3 M, 1.5 \(\times\) 10–4 M. 400K, வெப்பநிலையில் சமநிலையின் KC மதிப்பு யாது?
0.06
0.09
0.62
3 \(\times\) 10-2
9.
கரைசலின் சவ்வூடு பரவல் அழுத்தத்தை (π) தரும் சமன்பாடு
\(\pi \) = nRT
\(\pi \)V = nRT
\(\pi \)RT = n
இவற்றில் ஏதுமில்லை
10.
பின்வருவனவற்றுள் மீசோமெரிக் விளைவிற்கு உட்படாத சேர்மம் எது?
C6H5OH
C6H5Cl
C6H5NH2
C6H5\(\stackrel{+}{N}\)H3
11.
பெரிலியத்தின் சூழலைப் பொருத்து , பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
நைட்ரிக் அமிலம் இதை செயலற்றதாக்குகிறது
Be2C ஐ உருவாக்குகிறது
இதன் உப்புகள் அரிதாக நீராற்பகுக்கப்டுகின்றன.
இதன் ஹைட்ரைடு எலக்ட்ரான் குறைவுள்ளது,மற்றும் பலபடி அமைப்புடையது.
12.
கூற்று (A): இரு மோல் குளுக்கோஸில் 12.044 × 1023 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.
காரணம் (R): ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02x1022
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்க
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R)ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்கமல்ல
கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு
13.
ஹைட்ரஜன் அணுவின் மூன்றாம் வட்டப்பாதையின் (orbit) ஆற்றல் மதிப்பு –E அதன் முதல் வட்டப்பாதையின் (orbit) ஆற்றல் மதிப்பு
-3E
-E/3
-E/9
-9E
14.
H3PO2 + D2O → H2DPO2 + HDO என்ற வினையிலிருந்து ஹைப்போ பாஸ்பரஸ் அமிலம் ஒரு
முக்காரத்துவ அமிலம்
இருகாரத்துவ அமிலம்
ஒரு காரத்துவ அமிலம்
இவற்றுள் ஏதுமில்லை
15.
பின்வரும் வாய்ப்புகளில், கொடுக்கப்பட்ட வரிசைகளுக்கு அவற்றிற்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள பண்பினைப் பொருத்து சரியாக அமைந்திருக்காத வரிசை இடம்பெற்றுள்ள வாய்ப்பு எது?
I< Br < Cl < F (எலக்ட்ரான் நாட்டம் அதிகரிக்கும்)
Li < Na < K < Rb (உலோக ஆரம் அதிகரிக்கும்)
Al3+ < Mg2+
B < C < O < N (முதல் அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கும்)
16.
அமில குளோரைடுகள் கிரிக்னார்டு வினைபொருளுடன் வினைப்பட்டு எவற்றைத் தருகின்றன?
17.
ஒரு படித்தான கலவைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
18.
பெரிலியம் ஹைட்ராக்சைடின் ஈரியல்புத் தன்மைக்கான சமன்பாடுகளை எழுது.
19.
வாண்ட் ஹாப் சமன்பாடு பற்றி எழுதுக.
20.
ஜூல் தாம்சன் விளைவை எழுதுக.
21.
அயனி ஆரம் கணக்கிட உதவும் பாலிங்கின் இரு கூற்றுகள் யாவை?
22.
மோல் - வரையறு
23.
லாசிகன் முறையில் கரிமச்சேர்மங்களில் காணப்படும் நைட்ரஜனைக் கண்டறிவதில் நடைபெ றும் வேதிவினைகளை விளக்குக.
24.
HCl மற்றும் NaH ஆகியனவற்றுள் எந்த ஹைட்ரைடு திடப்பொருள் மீதான வாயு. உனது விடைக்கான காரணத்தினைக் கூறு.
25.
கார உலோகங்களின் வேதிப் பண்புகள் சிறு குறிப்பு வரைக.
26.
டி-சான்கோர்டாய்ஸ் வகைப்பாட்டினை எழுது.
27.
கார்பன் அனுவின் ஒரு மோல் பொருளில் காணப்படும் உட்பொருள் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
28.
N2O2(g) \(\rightleftharpoons \) 2NO2(g)
373Kல், மேற்கண்டுள்ள வினைக்கு KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0.125 mol dm-3 மற்றும் 0.5 mol dm-3 என கண்டறியப்பட்டது. இவ் விவரங்களிலிருந்து வினை நிகழும் திசையினை நாம் பின்வருமாறு தீர்மானிக்க இயலும்.
29.
ஆர்கான் ஒரு மந்தவாயு. இது மின்விளக்குகளில் டங்ஸ்டன் இழை ஆவியாவதைத் தடுக்க பயன்படுகிறது. மாறா கனஅளவில் உள்ள ஒரு மின் விளக்கில் 180C யில் 1.2atmல் உள்ள ஆர்கான் வாயு 850C க்கு வெப்பப்படுத்தப்படுகிறது. அதன் இறுதி அழுத்தத்தினை (atmல்) கணக்கிடுக.
30.
தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?
31.
O-அணுவில் உள்ள 8வது எலக்ட்ரான் மற்றும் Cl – அணுவில் உள்ள 15வது எலக்ட்ரான் குரோமியத்தின் கடைசி எலக்ட்ரான் ஆகியனவற்றிற்கான நான்கு குவாண்டம் எண்களின் மதிப்புகளையும் தீர்மானிக்கவும்.
32.
குவாண்டம் எண்களை அடிப்படையாகக் கொண்டு தனிம வரிசை அட்டவணையின் 5வது வரிசையில் 18 தனிமங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதை நிறுவுக.
33.
கீழ்க்கண்ட வேதி வினைகளை பூர்த்தி செய்து.
(அ) நீராற் பகுத்தல் (ஆ) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள் (இ) நீரேற்ற வினைகள் என வகைப்படுத்துக
(i) KMnO4 + H2O2 →
(ii) CrCl3 + H2O →
(iii) CaO + H2O →
34.
கார உலோகங்களின் பின்வரும் வேதிப் பண்புகளை எழுது.
(i) ஆக்சிஜனுடன் வினை
(ii) ஹைட்ரஜனுடன் வினை
(iii) ஹேலஜன்களுடன் வினை
(iv) ஒடுக்கும் செயல்
(v) கார்பனுடன் வினை
35.
மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கையின் முக்கிய அம்சங்களை எழுதுக.
36.
ஹாலஜன்களை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.
37.
எதிர் - மார்கோனிகாப் விதி (அ) பெராக்சைடு விளைவு (அ) கேராஸ் விதியின் வினை வழிமுறைய எழுது.
38.
1atm NO மற்றும் 1atm O2 ஐ தொடக்க செறிவுகளாகக் கொண்ட NOன் வளிமண்டல ஆக்சிஜனேற்ற வினை.
2NO(g) + O2(g) ⇌ 2NO2(g)
ஆய்ந்தறியப்படுகிறது. சமநிலையில், ஆக்சிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனில் இவ்வினைக்கான Kpன் மதிப்பைக் காண்க.
39.
ஹைட்ரஜனின் பயன்களை விவரி.
40.
பின்வருவனவற்றை விவரிக்க:
(i) முதன்மை குவாண்டம் எண்
(ii) கோண குவாண்டம் எண்
(iii) காந்த குவாண்டம் எண்
(iv) தற்சுழற்சி குவாண்டம் எண்
41.
உராய்வற்ற அழுத்தி பொருத்தப்பட்ட கலனில் உள்ள ஒரு வாயுவானது 1 atm வெளி அழுத்தத்திற்கு எதிராக 5 லிட்டர் கன அளவிலிருந்து 10 லிட்டருக்கு விரிவடைகிறது .இவ்வாறு நிகழும்போது அது 400J வெப்ப ஆற்றலை அதன்சூழலில் இருந்து உட்கவர்க்கிறது. அமைப்பின் அகஆற்றல் மாற்றத்தை கணக்கிடுக.
42.
பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது
ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது
இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது
43.
தொகுதிகள் மற்றும் வரிசைகளில் எலக்ட்ரான் கவர்தன்மையில் ஏற்படும் ஆவர்த்தன மாற்றங்களை கூறுக.
1.
(d)
பெர்சீலியஸ்
2.
(b)
அழுத்தம்
3.
(b)
புளூரைடு
4.
(d)
464.5 KJ mol-1
5.
(c)
\({ NO }_{ 2 }^{ + }\)
6.
(d)
E
7.
(d)

8.
(a)
0.06
9.
(b)
\(\pi \)V = nRT
10.
(d)
C6H5\(\stackrel{+}{N}\)H3
11.
(c)
இதன் உப்புகள் அரிதாக நீராற்பகுக்கப்டுகின்றன.
12.
(c)
கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு
13.
(d)
-9E
14.
(c)
ஒரு காரத்துவ அமிலம்
15.
(a)
I< Br < Cl < F (எலக்ட்ரான் நாட்டம் அதிகரிக்கும்)
16.
கீட்டோன்கள்
17.
கரைசல்கள்
18.
1. அமிலம் மற்றும் காரம் ஆகிய இரண்டுடனும் வினைபுரிகின்றது. எனவே இது ஈரியல்புத் தன்மை உடையது.
2. Be(OH)2 2NaOH ⟶ Na2BeO2 + 2H2O
3. Be(OH)2 + 2HCl ⟶ BeCl2 + 2H2O
19.
சமநிலை மாறிலியின் மதிப்பு வெப்பநிலையினைப் பொறுத்து அமைவதற்கான அளவியல் தொடர்பினை வாண்ட் ஹாப் சமன்பாடு தருகிறது.
\(log\frac { { K }_{ 2 } }{ { K }_{ 1 } } =\frac { \triangle H^{ O } }{ 2.303R } \left[ \frac { { T }_{ 2 }-{ T }_{ 1 } }{ { T }_{ 2 }{ T }_{ 1 } } \right] \)
20.
வெப்பமாறாச் செயல்முறையில் ஒரு வாயுவானது அதிக அழுத்தப்பகுதியிலிருந்து , குறைந்த அழுத்தப்பகுதிக்கு விரிவடையச் செய்யும் போது, வெப்பநிலையானது குறையும் இந்நிகழ்வு ஜூல் தாம்சன் விளைவு எனப்படுகிறது.
21.
(i) ஓர் அயனிப் படிகத்தில் உள்ள நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் ஒன்றையொன்றுதொட்டுக்கொண்டிருக்குமாறு கருதும்போது அவற்றின் அயனி ஆரங்களின் கூடுதல் ஆனது அவற்றிற்கிடையேயான அணுக்கருக்களின் தொலைவிற்கு சமமாக இருக்கும்.(ii) ஓர் அயனியின் அபாரமானது அதன் அணுக்கருவின் நிகர மின்சுமைக்கு எதிர்விகிதத்தில் இருக்கும்.
22.
12g கார்பன் -12 ஐசோடோப்பில் காணப்படும் கார்பன் அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமமான அடிப்படைத் துகள்களைப் பெற்றுள்ள ஒரு அமைப்பில் உள்ள பொருளின் அளவு ஒரு மோல் எனப்படும்.
23.
1.லாசிகன்ஸ் உறுக்குசாறு சோதனை எல்லா வகையான நைட்ரஜன் சேர்மங்களிலுள்ள நைட்ரஜனை கண்டறிய உதவும் மிகச்சிறந்த ஆய்வாகும்.
2.சேர்மத்திலுள்ள நைட்ரஜன் சோடியம் சயனைடாக மாற்றப்பட்டு பின் புதிதாக தயாரிக்கப்பட்ட பெர்ஸ்சல்பேட் கரைசல் மற்றும் பெர்ரிக் அயனி மற்றும் அடர் HCL வுடன் பிரஷ்யன் நீல நிறம் (அ) பச்சை நிறம் (அ) வீழ்ப்படிவினைத் தருகிறது.
3.இதனால் நைட்ரஜன் உள்ளது உறுதிப்படுத்தப்படுகிறது.
4. மேற்கண்ட வினையில் உண்டான பச்சை நிற வீழ்படிவினை கரைக்க HCL சேர்க்கப்படுகிறது.
இப்பச்சை நிற வீழ்படிவான பெர்ரஸ் ஹைடிராக்ஸைடு அதிக அளவு NaOH மற்றும் FeSO4 னால் உண்டாக்கப்படுகிறது.
5. பிரஷ்யன் நீளம் உருவாதலில் பின்வரும் வினைகள் நடைபெறுகின்றன.

FeSO4+2NaOH⟶Fe(OH)2+Na2SO4
(அதிக சோடியத்திலிருந்து
6NaOH+Fe(OH)2 ⟶Na4[Fe(CN)6]+2NaOH
சோடியம் பெர்ரோசயனைடு
3Na4[Fe(CN)6]+FeCl3⟶Fe4[Fe(CN)6]3+12NaCl
ஃபெரிக் பெர்ரோசயனைடு பிரஷ்யன் நீலம் அல்லது பச்சைநிற வீழ்படிவு
6. N மற்றும் S சேர்ந்து காணப்பட்டால் நீலம் (அ) பச்சை நிறத்திற்கு பதிலாக இரத்த சிவப்பு நிறம் தோன்றும்.
7. இதற்கு பின்வரும் வினைகள் காரணமாகின்றன.
NaCNS+FeCl3 ⟶Fe(CNS)3+3NaCl
ஃபெரிக் சல்போசயனைடு (இரத்த சிவப்பு நிறம்)
24.
(அ) வாயு:
1. மூலக்கூறுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பு காணப்படாததால் வாயுவாக உள்ளது.
(ஆ) திண்மம்:
1. NaH அனது ஒரு அயனி ஹைட்ரைடாகும்
2. இது சோடியம் உலோகத்தில் இருந்து ஒரு எலக்ட்ரானை ஹைட்ரஜனுக்கு இடப்பெயர்ச்சி செய்வதால் உருவாகிறது.
25.
1. கார உலோகங்கள் அதிக வினைதிறன் கொண்டுள்ளன.
2. இந்த வினைதிறன் Li லிருந்து Cs வரை அதிகரிக்கிறது.
3. ஏனெனில் தொகுதியில் மேலிருந்து கீழாக அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.
4. அனைத்து கார உலோகங்களும், அதிக எலக்ட்ரான் கவர் தன்மை கொண்ட தனிமங்களான ஆக்சிஜன் மற்றும் ஹேலஜன்களுடன் மிக அதிக வீரியத்துடன் வினைபுரிகின்றன.
26.
1. தனிமங்களின் பண்புகள், அவற்றின் அணுநிறையோடு கொண்டுள்ள ஒரு தொடர்பினை டி-சான்கோர்டாய்ஸ் எடுத்துக் கூறினார்.
2. அவரது கூற்றுப்படி, பொருட்களின் பண்புகள் அவற்றின் எண்களின் பண்புகளோடு தொடர்புடையது.
3. இவர் அணு நிறையினை குறிப்பிட 'எண்கள்' என்ற வார்த்தையினைப் பயன்படுத்தினார்.
27.
பொருளின் பெயர்: கார்பன் - 12
எடுத்துக்கொள்ளப்பட்ட பொருளின் நிறை : 12 கிராம்
ஒரு தனித்த அணு (அ) மூலக்கூறின் நிறை): 1.9926 x 10-23
அணு (அ) மூலக்கூறுகளின் எண்ணிக்கை:
(பொருளின் நிறை) \(\div \) (தனித்த அணு (அ) மூலக்கூறின் நிறை)
=\(\frac { 12 }{ 1.9926\times 10^{ -23 } } \) =6.022 x 1023
28.
\(Q={[NO_2]^2\over [N_2O_4]}={0.5\times 0.5\over 0.125}=2\)
Qன் மதிப்பானது KCன் மதிப்பினை விட அதிகம் எனவே Qன் மதிப்பு 0.21 ஆகும் வரை வினையானது பின்னோக்கிய திசையில், நிகழும்.
29.
P1=1.2 atm
T1=180C+273=291K
T2=850C+273=358K
P2=?
\(\frac{P_1}{T_1}=\frac{P_2}{T_2}\)
\(\Rightarrow P_2=(\frac{P_1}{T_1})\times T_2\)
=\(\frac{1.2atm}{291 ̶K̶}\times358 ̶K̶\)
P2=1.48 atm
30.
1.எந்த ஒரு செயல் முறையின் தன்னிச்சை தன்மையும் மூன்று வெவ்வேறு காரணிகளை பொறுத்து அமைகிறது.
2.ஒரு செயல்முறையின் என்தால்பி மாற்றம் எதிர்குறி மதிப்பை பெற்றிருந்தால், அச்செயல் முறையானது வெப்பம் உமிழ் செயல்முறையாகும், மேலும் தன்னிச்சையாக நிகழலாம்.(\(\triangle\)H எதிர்குறிஉடையது)
3.ஒரு செயல்முறையின் என்ட்ரோபி மாற்றம் நேர்குறி மதிப்பை பெற்றிருந்தால், அச்செயல் முறையானது தன்னிச்சையாக நிகழலாம்.(\(\triangle\)S நேர்குறிஉடையது)
4. ஒரு வினை தன்னிச்சையாக நிகழ, மேற்கூறிய இரண்டின் தொகுப்பான கட்டிலா ஆற்றல் மதிப்பு கண்டிப்பாக எதிர்குரியை பெற்ரறிருக்க வேண்டும். அதாவது ஒரு வினை தன்னிச்சையாக நிகழ்வதற்கு தேவையான நிபந்தனை \(\triangle\)H-T\(\triangle\)S<0 என்பதாகும்.
31.
ஆக்ஸிஜனின் எலக்ட்ரான் அமைப்பு

∴ 8- வது எலக்ட்ரான் 2px ஆர்பிட்டாலில் உள்ளது மற்றும் குவாண்டம் எண்கள்
n = 2, l = 1, ml = +1 அல்லது -1 ஆக இருக்கலாம்
s = –1/2
குளோரினின் எலக்ட்ரான் அமைப்பு =

15th எலக்ட்ரான் 3PZ ஆர்பிட்டாலில் உள்ளது n = 3, l = 1,
ml = 0 மற்றும் ms = +1/2
32.
(i) ஆஃபா தத்துவத்தின்படி 5வது வரிசையில் ஒன்பது ஆர்பிட்டால்கள் நிரப்பப்படலாம். (ஒரு 5s, ஐந்து 4d மற்றும் மூன்று 6p ஆர்பிட்டால்கள்)
(ii) ஒன்பது ஆர்பிட்டால்கள் அதிகபட்சமாக 18 எலக்ட்ரான்களை அடைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
(iii) எனவே 5வது வரிசையில் ருபிடியம் (z=37) முதல் செனான் (z=54) வரை 18 தனிமங்கள் உள்ளன.
33.
(i) 2KMnO4 + 5H2O2 + 3H2SO4 \(\rightarrow\) K2SO4 + 2MnSO4 + 5O2+8H2O
(ii) CrCI3 + 6H2O \(\rightarrow\) CrCI3.6H2O
(iii) CaO + H2O \(\rightarrow\) Ca(OH)2
இவற்றுள்
(அ) நீராற் பகுத்தல்
(iii) CaO + H2O \(\rightarrow\) Ca(OH)2
(ஆ) ஆக்ஸிஜனேற்ற வினை
(i) 2KMnO4 + 5H2O2 + 3H2SO4 \(\rightarrow\) K2SO4 + 2MnSO4 + 5O2 (அமில ஊடகத்தில்) + 8H2O
(இ) நீரேற்ற வினை -
(ii) CrCI3 + 6H2O \(\rightarrow\) CrCI3.6H2O
34.
(i) ஆக்சிஜனுடன் வினை:
1. Li காற்றுடன் மோனாக்சைடை மட்டுமே உருவாக்குகிறது.
2. Na காற்றுடன் மோனாக்சைடு மற்றும் பெராக்சைடை உருவாக்குகிறது.
3. மற்ற தனிமங்கள் காற்றுடன் மோனாக்சைடு பெராக்சைடு மற்றும் சூப்பர் ஆக்சைடுகளை உருவாக்குகின்றன.
4Li+O2 ⟶ 2Li2O (மோனாக்சைடு)
2Na+O2 ⟶ Na2O2 (பெராக்சைடு)
K+O2 ⟶ KO2 (சூப்பர் ஆக்சைடு)
(ii) ஹைட்ரஜனுடன் வினை:
அனைத்து கார உலோகங்களும் ஹைட்ரஜனுடன் சுமார் 673 K (லித்தியம் 1073 K) வெப்பநிலையில் ஹைட்ரஜனுடன் வினைபுரிந்து அவற்றின் அயனி ஹைட்ரைடுகளை உருவாக்குகின்றன.
2M+H2 ⟶ 2M+ H-
(M=Li, Na, K, Rb, Cs)
(iii) ஹேலஜன்களுடன் வினை:
கார உலோகங்கள் ஹேலஜன்களுடன் உடனடியாக வினைபுரிந்து MX என்ற அயன் ஹேலைடுகளைத் தருகின்றன.
2M+X2 ⟶ 2MX
(M=Li, Na, K, Rb, Cs)(X=F, Cl, Br, I)
(iv) ஒடுக்கும் செயல்:
கார உலோகங்கள், தங்களின் இணைதிறன் எலக்ட்ரான்களை எளிதில் இழக்க முடியும், இதனால் அவை சிறந்த ஒடுக்கும் வினைபொருட்களாகச் செயல்படுகின்றன.
M(s) ⟶ M+(g)+e-
(v) கார்பனுடன் வினை:
1. Li நேரடியாக கார்பனுடன் வினைப்பட்டு லித்தியம் கார்பைடு என்ற அயனிச் சேர்மத்தை உருவாக்குகிறது.
2. மற்ற உலோகங்கள் கார்பனுடன் நேரடியாக வினை புரிவதில்லை. எனினும், வற்றை அசிட்டிலீன் போன்ற கார்பன் சேர்மங்களுடன் வினைப்படுத்தும் போது, அவை அசிட்டிலைடுகளை உருவாக்குகின்றன.
2Li+2C ⟶ Li2 C2
35.
மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கையின் முக்கிய அம்சங்கள்
1. அணுக்கள் இணைந்து மூலக்கூறினை உருவாக்கும் போது, அவைகளின் அணு ஆர்பிட்டால்கள் தங்களது தனித்தன்மையை இழக்கின்றன. மேலும் மூலக்கூறு ஆர்பிட்டால்கள் என்றழைக்கப்படும் புதிய ஆர்பிட்டால்கள் உருவாகின்றன.
2. இணையும் அணு ஆர்பிட்டால்களின் வடிவத்தினைப் பொறுத்து. உருவாகும் மூலக்கூறு ஆர்பிட்டால்களின் வடிவங்கள் அமைகின்றன.
3.இணைகின்ற அணு ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையும் உருவான மூலக்கூறு ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையும் சமம். உருவான மூலக்கூறு ஆர்பிட்டால்கள் தொடர்புடைய அணு ஆர்பிட்டால்களின் ஆற்றலைவிட குறைவான ஆற்றலையும் மற்ற பாதியளவு எண்ணிக்கையுடைய மூலக்கூறு ஆர்பிட்டால்கள் அதிக ஆற்றலையும் கொண்டுள்ளது. குறைவான ஆற்றலைப் பெற்றிருக்கும் மூலக்கூறு ஆர்பிட்டால்கள் எத்திப்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால்கள் எனவும் அழைக்கப்படுகின்றது. பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால்கள் சிக்மா (\(\sigma \)), பை (\(\pi \))டெல்டா (\(\delta \)) எனவும், எதிர் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால்கள் \(\sigma \)* \(\pi \)*மற்றும் \(\delta \)*எனவும் அழைக்கப்படுகின்றன.
4.மூலக்கூறில் உள்ள எலக்ட்ரான்கள் புதிதாக உருவான மூலக்கூறு ஆர்பிட்டால்களின் நிரப்பப்படுகின்றன. இந்த ஆர்பிட்டால்களின் எலக்ட்ரான்கள் நிரப்பப்படுதல், அணு ஆர்பிட்டால்களின் எலக்ட்ரான்கள் நிரப்பப்படுவது போன்றே ஆஃபா தத்துவம் , பெளலி தவிர்க்கைத் தத்துவம் மற்றும் ஹீண்ட் விதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமையும்.
5.இணையும் இரு அணுக்களுக்கிடையே காணப்படும் பிணைப்புகளின் எண்ணிக்கை பிணைப்புத்தரம் எனப்படுகிறது. ஒரு மூலக்கூறின் பிணைப்புத் தரத்தினை பின்வரும் சமன்பாட்டால் கண்டறியலாம்,
பிணைப்புத்தரம் =\(\frac { { N }_{ b }-{ N }_{ a } }{ 2 } \)
இங்கு,
Nb- என்பது பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால்களில் காணப்படும் மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை.
Na - என்பது எதிர்ப்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டால்களில் காணப்படும் மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை.
மேலும் ஒரு மூலக்கூறின் பிணைப்புத் தரம் பூஜ்ஜியம் எனில் அத்தகைய மூலக்கூறு உருவாவதில்லை என அறியலாம்.
36.
1.எடை அறிந்த கரிமச்சேர்மம், புகையும் HNO3 மற்றும் AgNO3 வுடன் சேர்த்து வெப்பப்படுத்தப்படுகிறது. C, H மற்றும் S முறையே CO2, H2O மற்றும் SO2 ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது. ஹாலஜன்கள் AgNO3 வுடன் சேர்ந்து வெள்ளிஹாலைடுகளாக வீழ்படிவாகின்றன.

2.AgX வீழ்படிவு வடிகட்டப்பட்டு, கழுவி, உலர்த்தி எடையறியப்படுகிறது. AgX ன் மற்றும் கரிமச்சேர்மத்தின் எடை ஆகியவற்றில் இருந்து ஹாலஜன்களின் சதவீதம் கணக்கிடப்படுகிறது.
3. ஒரு தூய்மையான கேரியஸ் குழாயில் துல்லியமாக எடையறியப்பட்ட சேர்மம் புகையும் HNO3 மற்றும் AgNO3 ஆகியவனவற்றுடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
4.குழாயின் திறந்த முனை மூடப்பட்டு இரும்பு குழாயினுள் 530-540 K வெப்பநிலையில் வைக்கப்படுகிறது.
5. பின்னர் குழாயானது குளிர்விக்கப்படுகிறது. இக்குழாயில் சிறிய துளையிடப்பட்டு உருவான வாயுக்கள் வெளியேற்றப்படுகிறது.
6.அதன் பின்னர் குழாய் உடைக்கப்பட்டு வீழ்படிவு வடிகட்டப்பட்டு, கழுவப்பட்டு, உலர்த்தப்பட்டு எடை கண்டறியப்படுகிறது.
7. உருவான AgX ன் நிறையிலிருந்து, கரிமச் சேர்மத்திலுள்ள ஹாலஜனின் சதவீதம் கணக்கிடப்படுகிறது.
கரிமசேர்மத்தின் எடை : w g
AgCl வீழ்ப்படிவின் எடை : a g
143.5 AgCl ல் உள்ள குளோரினின் எடை =35.5 g
a g AgCl ல் உள்ள குளோரினின் எடை= \(\frac{35.5}{143.5}\)x a
W g கரிமச் சேர்மம் a g AgCl யை தருகிறது.
w g கரிமச் சேர்மத்திலுள்ள குளோரினின் சதவீதம்
=\((\frac{35.5}{143.5}\times \frac{a}{w}\times100)\)%
சில்வர் புரோமைடின்எடை 'b' g என கருத்துக.
188 g AgBr ல் 80 g Br உள்ளது.
W g கரிமச் சேர்மம் b g AgBr யை தருகிறது.
கரிமச் சேர்மத்தில்
Br ன் சதவீதம் =\((\frac{80}{188}\times \frac{b}{w}\times 100)\)%
சில்வர் ஐயோடைடு எடை 'c' g என கருத்துக.
235g Agl ல் 127 g I.
C g Agl ல்\((\frac{127}{235}\times \frac{c}{w})\) g I உள்ளது.
W g கரிமச் சேர்மத்தில் c g AgI யை தருகிறது.
கரிமச் சேர்மத்தில்
I ன் சதவீதம் =\((\frac{127}{235}\times \frac{c}{w}\times 100)\)%
37.
கரிம பெராக்ஸைடு முன்னிலையில் ஆல்கின்கள் HBr -உடன் சேர்க்கை வினைப் புரியும் போது மார்கோனிகாப் விதி எதிரான விளைப் பொருட்களைத் தருகின்றன.

வினை வழிமுறை : இவ்விணையானது தனி உறுப்பு வினை வழி முறையினை பின்பற்றுகின்றது.
படி 1:
பெராக்சைடில் உள்ள , வலிமை குறைந்த 0 - 0 ஒற்றை பிணைப்பு சீர்மையற் ற பிளப்பிற்கு உற்பட்டு தனி உறுப்புகளை உண்டாக்குகின்றது.

படி 2:
தனி உறுப்பானது . HBr -யில் உள்ள ஹைட்ரஜனை கவர்ந்து புரோமின் தனி உறுப்பினைத் தருகின்றது.

படி 3:
வலிமை மிகுந்த ஆல்கைல் தனி உறுப்பினை உருவாகும் வகையில் புரோமின் தனி உறுப்பானது கார்பன் - கார்பன் இரட்டைப் பிணைப்பில் சேர்கின்றது -

படி 4 :

ஈரிணைய தனி உறுப்புகள் HBr சேர்த்தால் H -C1 பிணைப்பானது (430.5 Kj /மோல் ) H - Br பிணைப்பை விட (363.7 kj ) அதிக வலிமை மிகுந்தது
எனவே H -C1 பிணைப்பானது தனி உறுப்புகளால் பிளவு படுவதில்லை H -I பிணைப்பானது (296.8 kj .மோல் ) H -C1 விட வலிமை குறைந்தது
எனவே H - I பிணைப்பு எளிதாக பிளக்கப்பட்டு ஐயோடின் தனி உறுப்புகள் உருவானாலும் அவை இரட்டை பிணைப்புடன் சேராமல் தமக்குள்ளேயே இணைந்து ஐயோடின் மூலக்கூறுகளைத் தருகின்றன .
எனவே HC1 மற்றும் HI யில் பெராக்சைடு விளைவினைக் காண முடியாது.
38.
39.
1. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜனில் 90% மேல், அத்தொழிற்சாலைகளிலேயே தொகுப்பு முறை பயன்பாட்டிற்கு வினைபொருளாகப் பயன்படுகிறது. அம்மோனியாவை பெருமளவில் தயாரிக்க பயன்படும் ஹேபர்முறை இதற்கு ஒரு உதாரணமாகும். நைட்ரிக் அமிலம், உரங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட வேதிச் சேர்மங்களை பெருமளவில் தயாரிப்பதில் அம்மோனியா பயன்படுகிறது.
380-450°C
N2+ 3H2 \(\rightleftharpoons \) 2NH3
200 atm/ இரும்பு(Fe)
2. தொழிற்சாலைகளில் பெருமளவு கரைப்பானாகப் பயன்படுத்தப்படும் மெத்தனாலை, கார்பன் மோனாக்சைடிலிருந்து தாமிரத்தை (Cu) வினையூக்கியாகக் கொண்டு தயாரிக்கப் பயன்படுகிறது.
CO+2H2 \(\overset { Cu }{ \rightarrow } \) CH3 OH
3. Pt/H2 ஐப் பயன்படுத்தி, நிறைவுறாத கொழுப்பு எண்ணெய்களை வனஸ்பதி என்றழைக்கப்படும் நிறைவுற்ற கொழுப்புகளாக (Margarine) மாற்றலாம்.
4. உலோகவியலில் உலோக ஆக்சைடுகளை அதிக வெப்பநிலையில் உலோகமாக ஒடுக்க ஹைட்ரஜன் பயன்படுகிறது.
CuO + H2 \(\rightarrow\) Cu + H2O
WO3 + 3H2 \(\rightarrow\) W + 3H2 O
5. அணுநிலை ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆக்சிஜன் கலவையானது உலோகங்களை ஒட்டவும், வெட்டவும் பயன்படுகிறது.
6. ராக்கெட்டுகளை உந்தித்தள்ளும் எரிபொருளாக நீர்ம ஹைட்ரஜன் பயன்படுகிறது.
7. எரிமின்கலங்களில், மின் ஆற்றலை உற்பத்தி செய்ய ஹைட்ரஜன் பயன்படுகிறது. உலோகங்கள் ஹைட்ரஜனை மீள் முறையில் ஏற்றுக்கொள்ளும் தன்மையானது. மறு மின்னூட்டம் செய்யும் வகையிலான உலோக ஹைட்ரைடு மின்கலங்கள் தயாரிப்பதில் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
40.
(i) முதன்மை குவாண்டம் எண்
அணுக்கருவினைச் சுற்றி எலக்ட்ரான்கள் சுழன்று வரும் ஆற்றல் மட்டத்தினை இக்குவாண்டம் எண் குறிப்பிடப்படுகிறது. இது 'n' என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது.
1. முதன்மைக் குவாண்டம் எண் (n) ன் மதிப்புகள் 1,2,3...
n =1 என்பது K கூட்டினையும் (Shell) n =2 என்பது L கூட்டினையும் n =3,4,5 என்பன முறையே M, N, O ஆகிய கூடுகளையும் குறிப்பிடுகின்றன.
2. ஒரு குறிப்பிட்ட கூட்டில் இடம் பெறும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினை 2n2 என்ற வாய்பாட்டின் மூலம் பெறலாம்.
3. 'n' ஆனது எலக்ட்ரானின் ஆற்றல் மதிப்பினைத் தருகிறது. En=\(\frac{(-1312.8)Z^2}{n^2}kJ mol^{-1}\)
மேலும் அணுக்கருவிலிருந்து எலக்ட்ரான் அமைந்துள்ள தூரமானது \(r_n=\frac{(0.529)n^2}{z}\mathring { A } \) என்ற சமன்பாட்டால் தரப்படுகிறது.
(ii) கோண குவாண்டம் எண்:
1. இது 'l' என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. இது பூஜ்யம் முதல் (n-1) வரையிலான மதிப்புகளைப் பெறுகிறது. இங்கு n என்பது முதன்மைக் குவாண்டம் எண்னைக் குறிப்பிடுகிறது.
2. ஒவ்வொரு l மதிப்பும் ஒரு துணைக்கூட்டினைக் (sub-shell or orbital) ஐக் குறிப்பிடுகிறது. l = 0,1,2,3 மற்றும் 4 ஆகியன முறையே s, p, d, f மற்றும் g ஆர்பிட்டால்களைக் குறிப்பிடுகின்றன.
3. ஒரு துணைக் கூட்டில் (ஆர்பிட்டாலில்) இடம் பெறும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினை 2(2l+1) என்ற வாய்பாட்டினைப் பயன்படுத்திக் கணக்கிடலாம்.
4. ஆர்பிட்டால் கோண உந்தத்தினை கணக்கிட இக்குவாண்டம் எண் பயன்படுகிறது.
ஆர்பிட்டால் கோண உந்தம் =\(\sqrt{l(l+1)}\frac{h}{2\pi}\)
(iii) காந்த குவாண்டம் எண்:
1. இது 'm1' என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இக்குவாண்டம் எண் -1 முதல் பூஜ்ஜியத்தினை உள்ளடக்கி +1 வரையிலான முழுக்களின் மதிப்பினைப் பெறுகிறது.
2. ஒருகுறிப் 'l' மதிப்பிற்கு உரிய 'm' -ன் வெவ்வேறு மதிப்புகளானது. முப்பரிமாண வெளியில் ஆர்பிட்டால்களின் திசையமைப்பினைக் குறிப்பிடுகிறது.
3. இக்குவாண்டம் எண்ணிற்கான ஆய்வு அடிப்படையிலான நியாயப்படுத்துதலை காந்தப்புலத்தில் நிறமாலை வரிகள் பிரியும் நிகழ்வான சீமன்விளைவு, தருகிறது.
4. குவாண்டம் எண் 'l' ஆனது கோண உந்தத்தின் எண் மதிப்பினைத் தரும் நிலையில், காந்தக் குவாண்டம் எண் (m1) அதன் திசையினைத் தருகிறது.
(iv) தற்சுழற்சி குவாண்டம் எண்:
1. இக்குவாண்டம் எண் எலக்ட்ரான்களின் தற்சுழற்சியினைக் குறிப்பிடுகிறது. இது 'ms ' என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது.
2. எலக்ட்ரானானது அணுவின் அணுக்கருவினை சுற்றிவருவதோடு இல்லாமல் தனக்குத்தானே சுழன்று வருகிறது. இதனை, எலக்ட்ரானது தனது சுய அச்சில் தனக்குத்தானே கடிகாரமுள் சுழலும் திசையிலேயோ அல்லது அதற்கு எதிர் திசையிலேயோ சுழல்கிறது எனக் குறிப்பிடுவது வழக்கம். இதனை காட்சிப் படுத்தல் உண்மையல்ல எனினும் தற்சுழற்சியினை, காந்தப் புலத்தில் உணரப்படும் ஒரு பண்பினைக் குறிப்பிடுவதாக நம்மால் புரிந்து கொள்ளமுடியும்.
3. கடிகார முள் சுழலும் திசை அல்லது கடிகார முள் சுழலுவதற்கு எதிர்திசையில் எலக்ட்ரான்களின் தற்சுழற்சியினைப் பொறுத்து, அதிகபட்சமாக இரு மதிப்புகளை இக்குவாண்டம் பெற வாய்ப்புள்ளது.
4. ms ன் மதிப்புகள் +1/2 மற்றும் -1/2 ஆகும்.
41.
கொடுக்கப்பட்ட தரவுகள் q=400J,V 1=5L,V2=10L
\(\Delta u=q-w\) (வெப்பமானது அமைப்பிற்கு கொடுக்கப்படுகிறது (+q):வேலையானது அமைப்பினால் செய்யப்படுகிறது(-w))
\(\Delta u=q-PdV\)
=400J -1 atm(10-5)L
=400J -5atm L
[1L atm =101.33J]
=400J -5\(\times \)101.33J
=400J-506.5J
=-106.5J
42.
43.
வரிசையில் எலக்ட்ரான் கவர்தன்மையில் ஏற்படும் மாறுபாடு:
(i) இடமிருந்து வலமாக செல்லும்போது பொதுவாக எலக்ட்ரான் கவர்தன்மை மதிப்பு அதிகரிக்கின்றது.
(ii) ஒரு வரிசையில் அணுக்கருவிற்கும், இணைகிற எலக்ட்ரான்களுக்கும் இடையேயான கவர்ச்சி விசை அதிகரிப்பதால் அணு ஆரம் குறைகிறது.
(iii) எனவே, பங்கிடப்பட்டுள்ள எலக்ட்ரான்களை கவரும் தன்மை அதிகரிக்கிறது.
(iv) இதன் காரணமாக ஒரு வரிசையில் எலக்ட்ரான் கவர்தன்மை அதிகரிக்கின்றது.
தொகுதியில் எலக்ட்ரான் கவர்தன்மையில் ஏற்படும் மாறுபாடுகள்:
(i) ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக வரும்போது எலக்ட்ரான் கவர்தன்மை மதிப்பு பொதுவாக குறைகிறது.
(ii) தொகுதியில் மேலிருந்து கீழே வரும்போது அணு ஆரம் அதிகரிக்கின்றது.
(iv) இணைதிற எலக்ட்ரான்கள் மீது அணுக்கரு செலுத்தும் கவர்ச்சி விசை குறைகிறது. எனவே, எலக்ட்ரான் கவர்தன்மையும் குறைகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards