11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
கரைசல்கள்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
வாண்ட் ஹா ஃப் காரணி மதிப்பு 0.54 கொண்ட பென்சீனில், பீனால் மூலக்கூறுகள் இரட்டையாகின்றன. இணைதல் வீதம் என்ன
0.46
92
46
0.92
2.
10% w/w செறிவுடைய சோடியம் ஹைட்ராக்சைடு நீர்க்கரைசலின் மோலாலிட்டி என்ன?
2.778
2.5
10
0.4
3.
இரண்டு திரவங்கள் X மற்றும் Y ஆகியன கலக்கப்படும்போது வெதுவெதுப்பான கரைசலைத் தருகின்றன. அந்தக் கரைசலானது
நல்லியல்புக் கரைசல்
நல்லியல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து நேர்க்குறி விலக்கத்தை காட்டுகிறது.
நல்லியல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.
இயல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.
4.
ரெளல்ட் விதிப்படி, ஒரு கரைசலின் ஒப்பு ஆவிஅழுத்தக்குறைவானது _____ க்கு சமம்.
கரைப்பானின் மோல் பின்னம்
கரைபொருளின் மோல் பின்னம்
கரைபொருளின் மோல் எண்ணிக்கை
கரைப்பானின் மோல் எண்ணிக்கை
5.
பின்வரும் இருகூறு திரவ கலவைகளில் எது, ரெளல்ட் விதியிலிருந்து நேர்குறி விலக்கத்தை காட்டுகிறது?
அசிட்டோன் + குளோரோஃபார்ம்
நீர் + நைட்ரிக் அமிலம்
HCl + நீர்
எத்தனால் + நீர்
6.
ஒரு இருகூறு நல்லியல்புக் கரைசலில், தூய திரவக் கூறுகள் 1 மற்றும் 2 இன் ஆவிஅழுத்தங்கள் முறையே P1 மற்றும் P2 ஆகும். x1 என்பது கூறு 1 இன் மோல் பின்னம் எனில், 1 மற்றும் 2 ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கரைசலின் மொத்த அழுத்தம்
P1 + x1 (P2 – P1)
P2 – x1 (P2 + P1)
P1 – x2 (P1 – P2)
P1 + x2 (P1 - P2)
7.
பின்வரும் செறிவு அலகுகளில், வெப்பநிலையை சார்ந்து அமையாதவை எவை ?
மோலாலிட்டி
மோலாரிட்டி
மோல் பின்னம்
(அ) மற்றும் (இ)
8.
250 கிராம் நீரில் 1.8 கிராம் குளுக்கோஸ் கரைக்கப்பட்டுள்ள கரைசலின் மோலாலிட்டி
0.2 M
0.01 M
0.02 M
0.04 M
9.
500 g நீரில் 7.5 g கிளைசீன் (NH2-CH2 -COOH) கரைந்துள்ள கரைசலின் மோலாலிட்டியை கணக்கிடுக.
10.
”ஐசோடானிக் கரைசல்கள்” எனும் சொற்பதத்தை வரையறு.
11.
சவ்வூடுபரவல் என்றால் என்ன?
12.
ரெளல்ட் விதியைக் கூறு மேலும் எளிதில் ஆவியாகாத கரைபொருளை கரைப்பானில் கரைக்கும்போது ஏற்படும் ஆவிஅழுத்தக்குறைவிற்கான சமன்பாட்டைத் தருவி.
13.
ஹென்றி விதியைக் கூறி விளக்குக
14.
வரையறு (i) மோலாலிட்டி (ii) நார்மாலிட்டி
15.
இயல்புக் கரைசல்கள் - ரெளல்ட் வீதியிலிருந்து எவ்வாறு நேர்விலக்கம் பெற்றுள்ளன என்பதை வரைபடத்துடன் விளக்கு.
16.
ஹென்றி விதியை கூறி. அதை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
17.
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், பென்சீனில் மீத்தேன் வாயு கரைதலுக்கு ஹென்றி விதி மாறிலி மதிப்பு 4.2 X 10-5 mm Hg. இந்த வெ ப்பநிலையில் மீத்தேனின் கரைதிறனை i) 750 mm Hg ii) 840 mm Hg ஆகிய அழுத்தங்களில் கணக்கிடுக.
18.
சவ்வுடு பரவல் அழுத்தத்திலிருந்து மோலார் நிறையை கணக்கிடும் முறையை தருவி.
19.
வாண்ட் ஹாஃப் காரணி 'i' எனும் சொற் கூற்றை வரையறு.
20.
வாண்ட் ஹாஃப் சமன்பாட்டை எழுதி விளக்குக.
21.
திட்டக் கரைசலை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிடுக.
22.
தூய கரைபொருள் மற்றும் கரைப்பானிலிருந்து பின்வரும் கரைசல்களை நீ எவ்வாறு தயாரிப்பாய் என்பதை விளக்குக.
(அ) 1L கனஅளவுடையடைய 1.5 M CoCl2 இன் நீர்க்கரைசல்.
(b) 500 mL கனஅளவுடைய 6.0 % (V/V) நீர்ம மெத்தனால் கரைசல்.
1.
(d)
0.92
2.
(b)
2.5
3.
(d)
இயல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.
4.
(b)
கரைபொருளின் மோல் பின்னம்
5.
(d)
எத்தனால் + நீர்
6.
(c)
P1 – x2 (P1 – P2)
7.
(d)
(அ) மற்றும் (இ)
8.
(d)
0.04 M
9.
=\(\frac{7.5}{75}\)=0.1
மோலாலிட்டி=\(\frac{0.1}{0.5 kg}\)=0.2 m
10.
(i) கொடுக்கப்பட்ட வெப்பநிலையில், ஒத்த சவ்வூடுபரவல் அழுத்தங்களைக் கொண்ட கரைசல்கள், ஐசோடானிக் கரைசல்கள் என்றழைக்கப்படுகின்றன.
(ii) இத்தகைய கரைசல்களை ஒருகூறு புகவிடும் சவ்வைக் கொண்டு பிரித்து வைக்கும்போது, ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கான, கரப்பான் நகர்வு இரண்டு திசைகளிலும் சமமாக இருக்கும்.
(iii) அதாவது, இரண்டு ஐசோடானிக் கரைசல்களுக்கிடையே, நிகர கரைப்பான் நகர்வானது பூஜ்ஜியம் ஆகும்.
11.
சவ்வூடு பரவல் என்பது ஒரு கூறு புகவிடும் சவ்வின் வழியாக, கரைப்பான் மூலக்கூறுகள் செறிவு குறைந்த கரைசலிலிருந்து, செறிவு மிகுந்த கரைசலுக்கு விரவிச் செல்லும் தன்னிச்சையான நிகழ்வு ஆகும்.
12.
ரெளல்ட் விதிப்படி, எளிதில் ஆவியாகும் திரவங்களைக் கொண்ட கரைசல்களில், கரைசல்களிலுள்ள ஒவ்வொரு கூறின் (A & B ) பகுதி ஆவி அழுத்தமும், அதன் மோல் பின்னத்துடன் நேர்விகிதத்திலிருக்கும்.
எளிதில் ஆவியாகாத கரைபொருளை கரைப்பானில் கரைக்கும் போது ஏற்படும் ஆவி அழுத்தக் குறைவிற்கான சமன்பாடு:
ஒரு தூய கரைப்பானில், எளிதில் ஆவியாகாத கரைபொருளை கரைக்கும் போது தூய கரைப்பானின் ஆவி அழுத்தம் குறையும்.
Pகரைசல் ∝XA ....(1)
Pகரைசல் =KXA ....(2)
XA=1, எனும்போது K=Poகரைசல்
இங்கு
XA=கரைப்பானின் மோல் பின்னம்
Poகரைசல் =தூய கரைப்பானின் ஆவி அழுத்தம்
Pகரைசல் =Poகரைசல் ....(3)



XB=கரைப்பானின் மோல் பின்னம்
இங்கு
∵ XA+XB=1
XB=1-XA
13.
இவ்விதிப்படி, குறைவான செறிவு கொண்ட கரைசல்களில் உள்ள "ஆவி நிலையிலுள்ள வாயுவின் பகுதி அழுத்தமானது செறிவு குறைந்த கரைசலிலுள்ள வாயுக் கரைபொருளின் மோல் பின்னத்திற்கு (x), நேர் விகிதத்திலிருக்கும்."
Pகரைபொருள் ∝ X கரைசலில் உள்ள கரைபொருள்
Pகரைபொருள் = KHXகரைசலில் உள்ள கரைபொருள்
14.
(i) மோலாலிட்டி (m):
(1) ஒரு கரைசலின் மொலாலிட்டி (m) என்பது 1000 கிராம் (அ) 1kg. கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் மோல் எண்ணிக்கை ஆகும்.
(2) 
(ii) நார்மாலிட்டி (N):
(1) ஒரு கரைசலின் (அ) 1000ml கரைசலின் கரைந்துள்ள கரைபொருளின் கிராம்-சமான நிறையின் எண்ணிக்கை ஆகும்.
(2) 
15.
(i) ரெளல்ட் வீதியிலிருந்து விலக்கலடையும் தன்மையை, கரைபொருள் (A) மற்றும் (B) ஆகியவற்றின் மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட இடையீடுகளின் அடிப்படையில் விளக்க முடியும்.
(ii) A ன் மூலக்கூறுகள் மற்றும் Bன் மூலக்கூறுகள் ஆகியவற்றில் காணப்படும் கவர்ச்சி விசைகள் (A-A). மற்றும் (B-B) ஆகியன A மற்றும் Bஆகிய மூலக்கூறுகளுக்கு இடையே காணப்படும்.
(iii) கவர்ச்சி விசையினை (A - B) விட குறைவாக உள்ள ஒரு நீர்வை கருதுவோம்.
(iv) A மற்றும் B ஆகியனவற்றால் உருவாகும் நல்லியல்புக் கரைசலைக் காட்டிலும் மேற்கொண்டுள்ள நேர்வில் உருவாகும் கரைசலில் உள்ள மூலக்கூறுகளின் தப்பிச்செல்லும் தன்மையானது அதிகமாக இருக்கும்.
(v) இதன் விளைவாக, இத்தகைய இயல்புக்கரைசல்களின் ஆவிஅழுத்தம் அதிகரிக்கிறது. மேலும் இது, ரெளல்ட் விதியின் மூலம் கணிக்கப்பட்ட A மற்றும் B ஆகியவற்றின் ஆவிஅழுத்தங்களின் கூடுதலை விட அதிகமாக உள்ளது.
(vi) இந்த வகை விளக்கமானது நேரக்குறி விளக்கம் என்றழைக்கப்படுகிறது.
இங்கு
pA > p0A xA மற்றும் pB > p0B xB.
எனவே pமொத்தம் > p0A xA + p0B xB
(vii) எத்தில் ஆல்கஹால் மற்றும் நீர் அடங்கிய கரைசலை நாம் கருத்திற்கொண்டு மூலம் நேர் விளக்கத்தை புரிந்து கொள்வோம்.
(viii) இந்த கரைசலிலி எத்தனால் மற்றும் நீர் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஹைட்ரஜன் பிணைப்பானது அந்தந்த மூலக்கூறுகளுக்கிடையே (எத்தில் ஆல்கஹால் - எத்தில் ஆல்கஹால் மற்றும் நீர் -நீர்) உள்ள ஹைட்ரஜன் பிணைப்பு இடையீடுகளை விட குறைவு.
(ix) இதன் விளைவாக, நீர்த்த எத்தனால் கரைசலில் உள்ள இரண்டு கூறுகளின் ஆவியாகும் தன்மையையும் அதிகரிக்கிறது.
(x)எனவே, கரைசலின் ஆவிஅழுத்தமானது, ரெளல்ட் விதியின் மூலம் கணிக்கப்பட்ட ஆவிஅழுத்தத்தைவிட அதிகமாக உள்ளது. இங்கு, காலத்தல் செயல்முறையானது வெப்பம்கொள் செயல்முறையாகும்.
(xi) அதாவது ΔHகலத்தல் > 0 மேலும் இங்கு சிறிய அளவில் கனஅளவு அதிகரிப்பு ஏற்படுகிறது.(ΔVகலத்தல் > 0).
நேர் விலக்கம் காட்டும் இயல்புக்கரசைகளுக்கு எடுத்துக்காட்டுகள்:
(i) எத்தில் ஆல்கஹால் & வளைய ஹெக்சேன், பென்சீன் & அசிட்டோன், கார்பன் டெட்ரா குளோரைடு & குளோரோஃபார்ம், அசிட்டோன் & எத்தில் ஆல்கஹால், எத்தில் ஆல்கஹால் & நீர்.

16.
(i) வில்லியம் ஹென்றி என்பவர், அழுத்தம் மற்றும் குறிப்பிட்ட கரைப்பானில், வாயுநிலைக் கரைபொருளின் கரைதிறன் ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்தார்.
(i) அவரின் கூற்றுப்படி குறைவான செறிவு கொண்ட கரைசல்களில் உள்ள ஆவி நிலையிலுள்ள வாயுவின் பகுதி அழுத்தமானது (கரைபொருளின் ஆவி அழுத்தம்) செறிவு குறைந்த கரைசலிலுள்ள வாயுக் கரைபொருளின் மோல் பின்னத்திற்கு (x), நேர் விகிதத்திலிருக்கும். இக்கூற்று ஹென்றி விதி என அறியப்படுகிறது.
(ii) ஹென்றி விதியை பின்வருமாறு எழுத முடியும்.
Pகரைபொருள் ∝ xகரைசலில் உள்ள கரைபொருள்
Pகரைபொருள் = KH xகரைசலில் உள்ள கரைபொருள்
(iii) இங்கு, Pகரைபொருள் என்பது ஆவிநிலைலயுள்ள வாயுவின் பகுதி அழுத்தத்தைக் குறிக்கிறது. இது பொதுவாக ஆவி அழுத்தம் என்றழைக்கப்படுகிறது.
(iv) Xகரைபொருள் என்பது, கரைசலில் உள்ள கரைபொருளின் மோல் பின்னத்தை குறிக்கிறது. KH என்பது அழுத்தத்தின் பரிமாணத்தை உடைய சோதனை முடிவின் அடிப்படையிலான மாறிலி.
(v) 'KH' ன் மதிப்பானது, வாயுநிலை கரைபொருள் மற்றும் கறைபானின் தன்மையை பொறுத்து அமைகிறது.
(vi) மேற்காண் சமன்பாடானது y = mx + c வடிவில் அமைந்த நேர்க்கோட்டின் சமன்பாடாகும்.
(vii) படத்தில் கட்டப்பட்டுள்ளவாறு, கரைசலில் மோல் பின்னத்திற்கு எதிரான வாயுவின் பகுதி அழுத்தத்தின் வரைபடம் ஆனது ஒரு நேர் கோட்டினை தருகிறது. இந்த நேர்கோட்டின் சாய்வு, KH மதிப்பை தருகிறது.

17.
(kH)பென்சீன் = 4.2 × 10–5 mm Hg
மீத்தே னின் கரைதிறன் = ?
P = 750mm Hg P = 840 mm Hg
ஹென்றி விதிப்படி,
P = KH . xகரைசலில்.
750mm Hg = 4.2 × 10–5 mm Hg . xகரைசலில்
xகரைசலில்=\(\frac{750}{4.2\times 10-5}\)
கரைதிறன் = 178.5 × 105
இதைப்போலவே P = 840 mm Hg
கரைதிறன் =\(\frac{840}{4.2\times10-5}\)
=200 x 10-5
18.
வாண்ட் ஹாஃப் சமன்பாட்டின் படி
\(\pi \) = CRT
C = \(\frac { n }{ V } \)
இங்கு n = 'V' லிட்டர் கரைசலில் கரைக்கப்பட்டுள்ள கரைபொருளின் மோல் எண்ணிக்கை.
எனவே , \(\pi =\frac { n }{ V } RT\) or \(\pi \)V = nRT ........(1)
wA கிராம் கரைப்பானில் , wB கிராம் எளிதில் ஆவியாகாத கரைபொருளை கரைத்து , கரைசல் தயாரிக்கப்பட்டால் , அதன் மோல் எண்ணிக்கை n என்பது
n = wB /MB
ஏனெனில் MB - கரை பொருளின் மோலார் நிறை இந்த 'n' மதிப்பை சமன்பாடு (1) ல் பிரதியிட, நமக்கு கிடைப்பது
\(\pi =\frac { { w }_{ B } }{ V } \frac { RT }{ { M }_{ B } } \)
\({ M }_{ B }=\frac { w_{ B } }{ V } \frac { RT }{ \pi } \) ........(2)
சமன்பாடு (2) ஐ பயன்படுத்தி , கரைபொருளின் மோலார் நிறையை கணக்கிட முடியும்
19.
(i) வாண்ட் ஹாஃப் காரணி 'i' என்பது, கரைபொருளின் உண்மையான மோலார் நிறைக்கும், அசாதாரண மோலார் நிறைக்கும் இடையே உள்ள விகிதம் என வரையறுக்கப்படுகிறது.
(ii) 
20.
(i)சவ்வூடு பரவல் அழுத்தமானது கரைபொருளின் மோலார் செறிவு மற்றும் கரைசலின் வெப்பநிலை ஆகியவற்றிக்கு நேர்விகிதத்திலிருக்கும்.
(ii) வாண்ட் ஹாஃப் சமன்பாடு.
π = CRT
இங்கு
C = கரைசலின் மோலார் செறிவு
R = வெப்பநிலை
T = வாயு மாறிலி
21.
(i) அதிக அளவிலான கறைப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் செறிவு மிகுந்த திட்டக் கரைசலை பயன்படுத்துவதால், கரைபொருளை எடையறியும் போது ஏற்படும் பிழைகளை குறைக்கமுடியும்.
(ii) இருப்புக்கரைசலை நீர்க்கச் செய்து வெவ்வேறு செறிவுகளைக் கொண்ட பயன்பாட்டுக் கரைசல்களை நாம் தயாரிக்க முடியும். இம்முறையில் நிலைத்தன்மை பராமரிக்கப்படுவதால் அதிக பயனுடையது.
(iii) சில செறிவு மிகுந்த கரைசல்கள் அதிக நிலைப்புத்தன்மை கொண்டவை, மேலும், சோதனைகளில் பயன்படுத்தப்படும் பயன்பாட்டு திட்டக்கரைசல்கள் போல் அல்லாமல், அவை நுண்ணுயிர் வளர்ச்சிக்கு குறைந்தளவே ஊக்கமளிக்கின்றன.
22.
(i) 1.5 மோல் CoCl2 ன் நிறை = 1.5 x 129.9
= 194.85 கி
∴ 194.85 கி நீரற்ற கோபால்ட் குளோரைடு நீரில் கரைக்கப்பட்டு லிட்டர் திட்டக்குடுவையில் பயன்படுத்தி கரைசல் தயாரிக்கப்பட்ட வேண்டும்.
(ii) 6% \(\frac { v }{ v } \) கரைசலானது கரைசலில் 6g மெத்தனாலைக் கொண்டுள்ளது.
∴ 500 ml 6% \(\frac { v }{ v } \) மெத்தனால் கரைசலைத் தயாரிக்க 500ml திட்டக்குடுவையில் 30g மெத்தனால் எடுத்துக்கொள்ளப்பட்டு போதுமான அளவு நீர் சேர்க்கப்பட்டு 500ml கரைசல் தயாரிக்கப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards