11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/10/2019
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ClF3 இன் வடிவம்
முக்கோணசமதளம்
பிரமிடுவடிவம்
'T' வடிவம்
இவற்றில் ஏதுமில்லை
2.
ஒரு மூலக்கூறின் பிணைப்புத்தரம் 2.5 மற்றும் அதன் மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 என கண்டறியப்பட்டுள்ளது எனில், எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
மூன்று
நான்கு
பூஜ்ஜியம்
கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கண்டறிய முடியாது
3.
பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் பற்றாக்குறைச் சேர்மம்?
PH3
(CH3)2
BH3
NH3
4.
பின்வருவனவற்றுள் எது வெப்ப இயக்கவியல் சார்பு அல்ல?
அகஆற்றல்
என்தால்பி
என்ட்ரோபி
உராய்வு ஆற்றல்
5.
இயற்கையில் நிகழும் அனைத்து செயல்முறைகளை _________ திசையில் நடக்கின்றன.
என்ட்ரோபி குறையும்
என்தால்பி அதிகரிக்கும்
கட்டிலா ஆற்றல் அதிகரிக்கும்
கட்டிலா ஆற்றல் குறையும்
6.
P,Q, R மற்றும் S என்ற நான்கு வாயுக்களின் b யின் மதிப்பு சமம் ஆனால் a யின் மதிப்பு Q < R < S < P a மற்றும் b வாண்டர் வால்ஸ் மாறிலிகள் குறிப்பிட்ட வெப்பநிலையில் நான்கு வாயுக்களுள் எளிதில் ஆவியாகும் வாயு
P
Q
R
S
7.
1000 மீ3 கனஅளவுள்ள மூடிய அறையில் ஒரு வாசனை திரவியபுட்டி திறக்கப்பட்டது. அறையில் நறுமணம் உண்டாகிறது.இதற்கு வாயுக்களின் எந்த பண்பு காரணமாக அமைகிறது?
பாகுத்தன்மை
அடர்த்தி
விரவுதல்
எதுவுமில்லை
8.
பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டது
K2CO3
Na2CO3
BaCO3
Li2CO3
9.
லித்தியம் எதனுடன் மூலைவிட்ட தொடர்பு உடையது?
சோடியம்
மெக்னீசியம்
கால்சியம்
அலுமினியம்
10.
பின்வருவனவற்றுள் எத்திலீனில் (C2H4) காணப்படும் கார்பன் சதவீதத்திற்கு சமமான கார்பன் சதவீதத்தை பெற்றுள்ளது எது?
புரப்பீன்
ஈத்தைன்
பென்சீன்
ஈத்தேன்
11.
பின்வருவனவற்றுள், 180 g நீரில் உள்ளது எது?
5 மோல்கள் நீர்
90 மோல்கள் நீர்
\(\frac{6.022\times10^{23}}{180}\) நீர் மூலக்கூறுகள்
6.022×1024 நீர் மூலக்கூறுகள்
12.
இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை
102 g
27 g
270 g
78 g
13.
மின்புலத்தில் நிறமாலைக் கோடுகள் பிரிகையடையும் விளைவு
சீமன் விளைவு
மறைத்தல் விளைவு
காம்ப்டன் விளைவு
ஸ்டார்க் விளைவு
14.
கனநீர் பயன்படுவது
அணுக்கரு வினைகளில் மட்டுப்படுத்தி
அணுக்கரு வினைகளின் குளிர்விப்பான்
(அ) மற்றும் (ஆ)
எதுவும் இல்லை
15.
பின்வரும் தனிமங்களுள் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?
குளோரின்
நைட்ரஜன்
சீசியம்
புளூரின்
16.
பாயிலின் விதியினை தருக.
17.
பாரீஸ் சாந்தின் பயன்களைக் குறிப்பிடுக
18.
பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு
19.
நீர்வாயு மாற்ற வினை என்றால் என்ன?
20.
இரண்டாம் வரிசை தனிமங்களின் முரண்பட்ட பண்புகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
21.
10 மோல் அம்மோனியாவை உருவாக்க எத்தனை மோல் ஹைட்ரஜன் தேவை?
22.
பை (π) பிணைப்பு என்றால் என்ன?
23.
எரிதல் என்தால்பியை வரையறு
24.
வெப்ப இயக்கவியலின் முதல் விதியை கூறு.
25.
தூள் பூத்தல் (efflorescence) என்பதை விளக்கு
26.
ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.
27.
செயலுறு அணுக்கரு மின்சுமை என்றால் என்ன?
28.
கிப்ஸ் கட்டிலா ஆற்றலின் சிறப்பியல்புகளை விளக்குக
29.
ஜிப்சத்தின் பயன்களைத் தருக
30.
திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?
31.
தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜனின் இடத்தை நியாயப்படுத்துக
32.
அயனி ஆரத்தினை கண்டறியும் பாலிங் முறையினை விவரி.
1.
(c)
'T' வடிவம்
2.
(a)
மூன்று
3.
(c)
BH3
4.
(d)
உராய்வு ஆற்றல்
5.
(d)
கட்டிலா ஆற்றல் குறையும்
6.
(a)
P
7.
(c)
விரவுதல்
8.
(d)
Li2CO3
9.
(b)
மெக்னீசியம்
10.
(a)
புரப்பீன்
11.
(d)
6.022×1024 நீர் மூலக்கூறுகள்
12.
(a)
102 g
13.
(d)
ஸ்டார்க் விளைவு
14.
(c)
(அ) மற்றும் (ஆ)
15.
(d)
புளூரின்
16.
1. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் , குறிப்பட்ட நிறையுள்ள வாயு அடைத்துக்கொள்ளும் கன அளவானது அதன் அழுத்திற்கு எதிர்விகித தொடர்புடையது.
2. கணிதவியல் முறைப்படி, பாயில் விதி
\(V\alpha \frac { 1 }{ p } \) (T மற்றும் n மாறிலிகள் ) அல்லது \(V=K\frac { 1 }{ P } \)
3. K = விகித மாறிலி
17.
1.கட்டுமானத் தொழிலில் அதிக அளவில் பயன்படுகிறது.
2.ஒரு உறுப்பில் எலும்பு அல்லது சுளுக்கு பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நகராமல் இருந்தி வைக்கப் பயன்படுகிறது.
3.பற்சீராக்கும் துறை, அணிகலன்கள் உருவாக்கும் தொழில்,சிலைகள் மற்றும் வார்ப்புகள் உருவாக்குவதில் இது பயன்படுகிறது.
18.
கொடுக்கப்பட்ட ஒரு ஆர்பிட்டாலில் அதிகபட்சமாக இரு எலக்ட்ரான்கள் மட்டுமே நிரப்ப முடியும். அவை இரண்டும் எதிரெதிர் சுழற்சியுடையவை.
19.
1. நீர்வாயுக் கலவையுடன், அதிக அளவு நீராவியினைச் சேர்த்து 4000°c வெப்ப நிலையில், இரும்பு / தாமிரம் வினைவேக மாற்றியைக் கொண்டுள்ள மாற்று உலையின் வழியாகச் செலுத்துவதன் மூலம் நீர்வாயுக் கலவையில் உள்ள கார்பன் மோனாக்சைடு, கார்பன்டை ஆக்ஸைடாக மாற்றலாம்.
CO + H2O \(\rightarrow\) CO2 + H2
2. மேற்கண்டுள்ள முறையில் உருவான CO2 வாயுவானது, பொட்டாசியம் கார்பனேட் கரைசலால் உறிஞ்சப்படுகிறது.
CO2 + K2 CO3 + H2O \(\rightarrow\) 2KHCO3
20.
(i) பெரிலியத்தைக் காட்டிலும் போரான் அதிகமான அணுக்கரு மின்சுமையினைப் பெற்றிருப்பதால் போரானின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு அதிகம் என எதிர்பார்த்தலுக்கு முரணாக பெரிலியம் அதிக அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
(ii) நைட்ரஜன் அயனியாக்கும் ஆற்றல் (1402 Kmol-1) ஆக்ஸிஜனின் அயனியாக்கும் ஆற்றல் (1314 Kmol-1) மதிப்பைக் காட்டிலும் அதிகம்.
21.
அம்மோனியா உருவாதலுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
N2(g) + 3 H2 (g) → 2 NH3 (g)
மேற்கண்டுள்ள சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டின் அடிப்படையில்,
2 மோல் அம்மோனியாவை உருவாக்க 3 மோல் ஹைட்ரஜன் தேவைப்படுகிறது.
10 மோல் அம்மோனியாவை உருவாக்க

= 15 மோல் ஹைட்ரஜன் தேவை
22.
இரு அணு ஆர்பிட்டால்கள் பக்கவாட்டில் மேற்பொருந்தும்போது சகபிணைப்பு பை பிணைப்பு (π) எனப்படும். x-அச்சு மூலக்கூறு அச்சாக கருதும் நேர்வில் py-py மற்றும் pz-pz ஆகிய ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துதலால் π பிணைப்பு உருவாகிறது.
23.
ஒரு மோல் சேர்மமானது அதிக அளவு காற்று அல்லது ஆக்ஸிஜனில் முழுமையாக எரிக்கப்படும்போது ஏற்படும் என்தால்பி மாற்றல் எரிதல் என்தால்பி (அ) எரிதல் வெப்பம் என வரையறுக்கப்படுகிறது.
24.
1. ஒரு வகையான ஆற்றல் மற்றொரு வகை ஆற்றலாக மாறினாலும் ஒரு தனித்த அமைப்பின் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி ஆகும்.
2. இது " ஆற்றல் அழிவின்மை விதி" என அறியப்படுகிறது.
25.
படிகம் தன் நீரை இழப்பதனால் உப்பு உண்பதால் தூள் பூத்தல் எனப்படும்.
எ.கா: எப்சம் உப்பு MgSO4.7H2O
26.
| ஆக்சிஜனேற்றம் | ஒடுக்கம் | |
|---|---|---|
| (i) | ஆக்சிஜனேற்ற சேர்த்தல் மற்றும் ஹைட்ரஜனை நீக்குதல் | ஹைட்ரஜனை சேர்த்தால் மற்றும் ஆக்சிஜனை நீக்குதல் |
| (ii) | எலக்ட்ரானை இழத்தல் \(Fe^{2+}\to Fe^{3+}+e^-\) |
எலக்ட்ரானை ஏற்றல் \(Cu^{2+}+2e^-\to Cu\) |
| (iii) | ஆக்சிஜனேற்ற எண் அதிகரித்தல் | ஆக்சிஜனேற்ற எண் குறைத்தல் |
27.
வெளிக்கூட்டில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களால் உணரப்படும் நிகர அணுக்கரு மின்சுமை செயலுறு அணுக்கர மின்சுமை என்றழைக்கப்படுகிறது.
Zசெயலுறு =Z -S
28.
1. G=H-TS, H, Sஆகியவை நிலைச்சார்புகளை அடைவதால் G யும் ஒரு நிலைச்சார்பு
2. G என்பது ஒரு அளவு சார்ந்த பண்பாகும். ஆனால் தொடக்கநிலை மற்றும் இறுதிநிலையின் நிறை மாறாமலிருக்கும்போது இது ஒரு உள்ளார்ந்த பண்பாகும்.
3. G அல்லது அமைப்பின் ஒற்றை மதிப்புடைய வெப்ப இயக்கவியல் பண்பாகும்.
4. G மற்றும் \(\triangle\)Gமதிப்புகள் அமைப்பை மட்டுமே சார்ந்தவை
5. \(\triangle\)Gகுறியீடு
| செயல் | தன்னிச்சை செயல் | சமநிலை |
தன்னிச்சையற்ற |
| \(\triangle\)G | -ve | O | +ve |
6. கட்டிலா ஆற்றல் மாற்றக்குறைவு மாறாத வெப்பம் மாறாத அழுத்தத்தில் விரிவடையும் வேலையைத் தவிரத அமைப்பு செய்யும் அதிகபட்ச வேலையைக் குறிக்கிறது.
7. U=-788 KJ mol -1
8. \(\triangle\)G =\(\triangle\)H -T\(\triangle\)S ....(1)
9. வெப்ப இயக்கவியல் முதல் விதிப்படி
H =\(\triangle\)E-P\(\triangle\)V ........(2)
10. இங்கு
E=q - w ........(3)
11. சமன்பாடு (3)ஐ (2) ல் பிரதியிட
\(\triangle\) H =q-w-P\(\triangle\)V .......(4)
12. சமன்பாடு (4)ஐ (1)ல் பிரதியிட
\(\triangle\) G=q-w-P\(\triangle\)V-T\(\triangle\)S.......(5)
13. வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதிப்படி
\(\triangle\)S=\({q \over T}\)
q=T\(\triangle\)S ......(6)
14. சமன்பாடு (6)ஐ (5)ல் பிரதியிட

=-w +P\(\triangle\)V
G=w-P\(\triangle\)V
15.அதாவது கட்டிலா ஆற்றல் மாற்றம் குறைவது அமைப்பின் விரிவடையும் வேலையைத் தவிர அமைப்பு செய்யும் அதிகபட்ச வேலையைக் குறிக்கிறது.
29.
1.பண்டைய எகிப்து மற்றும் மெசபடோமியாவில் ஜிப்சத்தின் ஒரு வகையான அலபாஸ்டர் சிற்பிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஜிப்சத்தினை, எவ்வாறு பாரீஸ்சாந்தாக மாற்றுவது என்பதை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்களால் அறியப்பட்டுள்ளது.தற்போது மனித சமுதாயத்தில் ஜிப்சம் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.அவற்றின் சில பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2.உலர்பலகைகள், பூச்சுப் பலகைகள் தயாரிப்பதில் ஜிப்சம் பயன்படுகிறது.சுவர்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கவும், மேற்கூரைகள் மற்றும் அறைகளை பகுதிகளாக பிரிக்கவும் பூச்சிப் பலகைகள் [பயன்படுகிறது.
3.ஜிப்சத்தின் மற்றுமொறு பயன்பாடு பர்ரீஸ் சாந்து தயாரிக்கப்பதாகும்.ஜிப்சத்தினை 300 டிகிரி பாரன்ஹீட்டில் சூடுபடுத்தி பாரீஸ்சாந்து தயாரிக்கப்படுகிறது.இது ஜிப்சம் பூச்சு எனவும் அழைக்கப்படுகிறது.முக்கியமாக இது சிற்பங்களை வடிப்பதில் பயன்படுகிறது.
4.வேளாண்மைத் துறையில் மண்ணுடன் சேர்க்கப்படும் பொருளாகவும்,கட்டுப்படுத்தியாகவும்,உரமாகவும் பயன்படுகிறது.களிமண் மற்றும் இறுக்கமான மண்ணை நெகிழச் செய்வதுடன், தாவர வளர்ச்சிக்கு முக்கியமாக பயன்படும் கால்சியம் மற்றும் சல்பரை தரும் பொருளாக உள்ளது.மண்ணிற்கு அதிக உப்புத் தன்மையைத் தரும்.Na+ அயனிகளை நீக்கவும் பயன்படுகிறது.
5.ஜிப்சம் முக்கியமாக இணைத்தல் மற்றும் கெட்டியாக்கும் பண்புகளைப் பெற்றுள்ளதால் பற்பசை, ஷாம்புகள் மற்றும் முடித் தொடர்பான பொருட்களில் பயன்படுகிறது.
6.போர்ட்லாண்டு சிமெண்டுகளில்,ஜிப்சம் ஒரு முக்கியப் பகுதிப் பகுதிப் பொருளாகும்.இது கடினமாதலை தாமப்படுத்தும் காரணியாக செயல்படும் தன்மையைப் பெற்றிருப்பதால் கான்கிரீட்டுகள் கடினமாகும் வேகத்தினைக் கட்டுப்படுத்துகிறது.
7.அதிக அளவில் கிடைக்கும் தாதுப் பொருட்களின் முக்கியமானது ஜிப்சமாகம்.இது கணக்கற்ற ஜிப்சமாகும்.இத்துணை கணக்கற்ற பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.இத்தாதுவானது புவி மேற்பரப்பிற்கருகில் அதிக அளவில் கிடைப்பதால் இதன் வெட்டி எடுப்பது ஜிப்சம் வெட்டி எடுத்தால் சுற்றுச் சூழலில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் ஜிப்சத்தினை மறுசுழற்சி செய்ய முடியும்.ஆனால் இத்தாது அதிக அளவில் கிடைப்பதால், இதன் மறுசுழற்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
30.
(i) ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது உட்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
(ii) இதன் காரணமாக உட்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களுக்கு இணைதிற எலக்ட்ரான்களுக்கும் இடையேயான விலக்கு விசையும் அதிகரிக்கின்றது.
(iii) அதாவது உள்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் மறைத்தல் விளைவு அதிகரிப்பதனால், அணுக்கருவினால் இணைதிற எலக்ட்ரான்கள் மீது செலுத்தப்படும் கவர்ச்சி விசை குறைகிறது.
(iii) இவ்விளைவையே திரைமறைப்பு விளைவு என்கிறோம்.
31.
1. ஹைட்ரஜனின் எலக்ட்ரான் அமைப்பு 1S1 ஆகும்.
2. இதுகார உலோகங்களின் பொதுவான இணைதிறன் கூட்டு எலக்ட்ரான் அமைப்பான nS1 ஐ ஓத்திருக்கிறது.
3. மேலும், ஹைட்ரஜன் கார உலோகங்களின் பண்புகளையும் ஒத்துள்ளது.
(i) கார உலோகங்களைப் போன்றே ஒற்றை நோமின்சமை உடைய அயனியை (H+) உருவாக்குகிறது.
(ii) கார உலோகங்களைப் போன்றே ஹைட்ரஜனும் ஹேலைடு ஆக்சைடுகள் (H2O), பெராக்சைடுகள் (H2O2) மற்றும் சல்பைடுகளை (H2S) உருவாக்குகின்றன.
(iii) கார உலோகங்களைப் போன்றே, ஹைட்ரஜனும் ஒடுக்க வினைபொருளாகச் செயல்படுகிறது.
4. எனவே ஹைட்ரஜன் தனிம வரிசை அட்டவணையின் முதல் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
32.
(i) பாலிங் முறைப்படி ஒற்றை மின்சுமையுடைய படிகங்களின் அயனி ஆரங்களை கணக்கிடலாம்.
(ii) படிக அலகுக்கூட்டில் காணப்படும் அயனிகள் கோளவடிவமுடையவை என பாலிங் கருதினார். மேலும் அவைகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருப்பதாகவும் கருதினார். எனவே,
d=r(C+)+r(A-) .........(1)
இங்கு,
d=நேர் அயனி C+ அணுவிற்கும், எதிர்அயனி
A- ன் அணுவிற்கும் இடையேயானத்தொடர்பு
r(C+)= நேர் அயனியின் ஆரம்
r(A-)=எதிர் அயனியின் ஆரம்
(iii) மேலும், மந்த வாயுக்களின் எலக்ட்ரான் அமைப்பினை பெற்றுள்ள அயனிகளின் ஆரமானது, அவ்வயனிகள் மீது அணுக்கருவால் செலுத்தப்படும் செயலுறு அணுக்கரு மின்சுமைக்கு எதிர்விகிதத்தில் அமையும்.
(iii) அதாவது,

11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards