11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
வெப்ப இயக்கவியல்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பாம் கலோரி மீட்டரின் பயன்களை பட்டியலிடுக.
2.
வேலையின் சிறப்பியல்புகள் யாவை?
3.
வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதியை கூறு.
4.
படிகக்கூடு ஆற்றல் என்றால் என்ன?
5.
எரிதல் என்தால்பியை வரையறு
6.
கிப்ஸ் கட்டிலா ஆற்றலை வரையறு
7.
பொருண்மைசாரா பண்பை இரண்டு எடுத்துக் காட்டுகளுடன் விளக்குக.
8.
வெப்ப இயக்கவியலின் முதல் விதியை கூறு.
9.
தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?
10.
வெப்ப இயக்கவியலின் பூஜ்ஜிய விதியை கூறுக.
11.
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் பல்வேறு கூற்றுகளை கூறு.
12.
ஒரு வலிமைமிகு அமிலம் வலிமைமிகு காரத்தால் நடுநிலையாக்கப்படும்போது நடுநிலையாக்கல் வெப்பம் ஒரு மாறிலி கூற்று காரணம் தருக.
13.
நிலைச்சார்புகள் மற்றும் வழிச்சார்புகள் என்றால் என்ன?இரு எடுத்துக்காட்டுகள் தருக.
14.
கிப்ஸ் கட்டிலா ஆற்றலின் சிறப்பியல்புகளை விளக்குக
15.
அகஆற்றலின் சிறப்பியல்புகளை விளக்குக.
16.
பொதுவாக தன்னிச்சையான செயல் முறையின் ஒழுங்கற்ற தன்மை
பொதுவாக அதிகரிக்கும்
பொதுவாக குறையும்
பூஜ்ஜியம்
முடிவிலி
17.
q=0 என்பது
வெப்பமாறா செயல்முறை
வெப்பநிலை மாறா செயல்முறை
திறந்த அமைப்பு
மூடிய அமைப்பு
18.
பின்வருவனவற்றுள் எது வெப்ப இயக்கவியல் சார்பு அல்ல?
அகஆற்றல்
என்தால்பி
என்ட்ரோபி
உராய்வு ஆற்றல்
19.
பின்வரும் அளவீடுகளில் பொருண்மைசாரா பண்பு
நிறை
கனஅளவு
என்தால்பி
நிறை/கனஅளவு
20.
ஒரு குறிப்பிட்ட வினையின் ΔH மற்றும் ΔS மதிப்புகள் முறையே 30 kJ mol-1 மற்றும் 100 JK-1mol-1 எனில் , எந்த வெப்பநிலைக்கு மேல் வினையானது தன்னிச்சையாக நிகழும்.
300 K
30 K
100 K
200 C
21.
ஒரு திரவத்தின் மோலார் ஆவியாதல் வெப்பம் 4.8 kJ mol-1. அதன் என்ட்ரோபி மாற்ற மதிப்பு 16 J K–1 mol–1 எனில் அந்த திரவத்தின் கொதிநிலை
323 K
270 C
164 K
0.3 K
22.
ஒரு அமைப்பின் வெப்பநிலை பின்வரும் _________ ல் குறைகிறது
வெப்பநிலை மாறா விரிவடைதல்
வெப்பநிலை மாறா சுருங்குதல்
வெப்பம் மாறா விரிவடைதல்
வெப்பம் மாறா சுருங்குதல்
23.
0°C வெப்பநிலை மற்றும் 1atm அழுத்தத்தில் 15.68L மீத்தேன் மற்றும் புரப்பேன் கலந்த வாயுக்கலவையை முற்றிலுமாக எரிக்க, அதேவெப்ப அழுத்தநிலையில் 32L ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது, எனில் இந்த எரிதல் வினையில் வெளிப்படும் வெப்பத்தின் அளவு kJ அலகில்
– 889 kJ
– 1390 kJ
– 3180 kJ
– 635.66 kJ
24.
2 மோல்கள் நல்லியல்பு ஓரணு வாயுவை மாறா அழுத்தத்தில் 125°C லிருந்து 25°C க்கு குளிர்விக்கும்போது ΔHன் மதிப்பு
-250R
-500R
500R
+250R
1.
1.எரிதல் வினைகளில் வெளிப்படும் வெப்பத்தை அளவிட பாம்கலோரி மீட்டர பயன்படுகிறது.
2.உணவுப் பொருட்களின் கலோரி மதிப்பினை நிர்ணயித்திட இது பயன்படுகிறது.
3.வளர்சிதை மாற்ற ஆய்வுகள், உணவு பதப்படுத்துதல், செடி பொருட்களை சோதித்தறிதல் போன்ற பல்வேறு தொழிற்துறைகளில் பாம்கலோரி மீட்டர் பயன்படுகிறது.
2.
வேலையின் சிறப்பியல்புகள்
1.ஒருவழிசார்ப்பு ஆகும்.
2.அமைப்பின் எல்லையில் மட்டும் வெளிப்படுகிறது.
3.அமைப்பின் நிலையில் மாற்றல் ஏற்படும்போது வெளிப்படுகிறது.
வெப்ப இயக்கவியலில் சுழலானது மிகப் பெரியது என்பதால், பேரளவு மாற்றங்கள் சூழலில் நிகழ்வதில்லை.
3.
1. வெப்ப இயக்கவியல் மூன்றாம் விதிப்படி தனி பூஜ்ஜிய வெப்பநிலை ஒரு குறைபாடற்ற படிகத்தின் என்ட்ரோபி மதிப்பு பூஜ்ஜியம்.
2. மாறாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படிகளில் ஒரு பொருளின் வெப்பநிலையை தனி பூஜ்ஜிய வெப்பநிலையை குறைக்க முடியாது எனவும் இதனைக் கூறலாம்.
3. ஒரு மிகச் சரியாக அமைந்துள்ள படிகநிலைக்கு.
\(^{lim}_{T\rightarrow 0}S=0\)
4.
1. ஒரு படிகத்தில் உள்ள அயனிகளை அதன் படிக அணிக்கோவை புள்ளிகளிலிருந்து முடிவிலா தொலைவிற்கு நீக்குவதற்கு தேவைப்படும் ஆற்றலின் அளவு அப்படிகத்தின் படிகக்கூடு ஆற்றல் என வரையறுக்கப்படுகிறது.
2. இது படிகக்கூடு என்தால்பி எனவும் அழைக்கப்படுகிறது.
5.
ஒரு மோல் சேர்மமானது அதிக அளவு காற்று அல்லது ஆக்ஸிஜனில் முழுமையாக எரிக்கப்படும்போது ஏற்படும் என்தால்பி மாற்றல் எரிதல் என்தால்பி (அ) எரிதல் வெப்பம் என வரையறுக்கப்படுகிறது.
6.
1. கிப்ஸ் கட்டிலா ஆற்றலை பின்வருமாறு வரையறுக்கலாம்.
\(\boxed{G=H-TS}\)
2. G ஒரு பொண்மை சார் பண்பாகும். மேலும் G என்பது ஒற்றை மதிப்புடைய நிலைச்சார்பாகும்.
7.
ஒரு பண்பானது அமைப்பின் நிலை அல்லது அளவினை பொறுத்து அமையாதிருந்தால் அப்பண்பு பொருண்மைசாரா பண்பு என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
1. ஒளி விலகல் எண்
2. பரப்பு இழுவிசை
3. அடர்த்தி
4. வெப்பநிலை
5. கொதிநிலை
6. உறைநிலை
7. மோலார் கனஅளவு
8.
1. ஒரு வகையான ஆற்றல் மற்றொரு வகை ஆற்றலாக மாறினாலும் ஒரு தனித்த அமைப்பின் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி ஆகும்.
2. இது " ஆற்றல் அழிவின்மை விதி" என அறியப்படுகிறது.
9.
1.எந்த ஒரு செயல் முறையின் தன்னிச்சை தன்மையும் மூன்று வெவ்வேறு காரணிகளை பொறுத்து அமைகிறது.
2.ஒரு செயல்முறையின் என்தால்பி மாற்றம் எதிர்குறி மதிப்பை பெற்றிருந்தால், அச்செயல் முறையானது வெப்பம் உமிழ் செயல்முறையாகும், மேலும் தன்னிச்சையாக நிகழலாம்.(\(\triangle\)H எதிர்குறிஉடையது)
3.ஒரு செயல்முறையின் என்ட்ரோபி மாற்றம் நேர்குறி மதிப்பை பெற்றிருந்தால், அச்செயல் முறையானது தன்னிச்சையாக நிகழலாம்.(\(\triangle\)S நேர்குறிஉடையது)
4. ஒரு வினை தன்னிச்சையாக நிகழ, மேற்கூறிய இரண்டின் தொகுப்பான கட்டிலா ஆற்றல் மதிப்பு கண்டிப்பாக எதிர்குரியை பெற்ரறிருக்க வேண்டும். அதாவது ஒரு வினை தன்னிச்சையாக நிகழ்வதற்கு தேவையான நிபந்தனை \(\triangle\)H-T\(\triangle\)S<0 என்பதாகும்.
10.
1.வெப்ப இயக்கவியலின் பூஜ்ஜிய விதியானது வெப்பச் சமநிலைவிதி எனவும் அழைக்கப்படுகிறது. வெப்ப இயக்கவியலின் முதல் மற்றும் இரண்டாம் விதிகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின்னரே புஜ்ஜியவிதி முன்மொன்மொழியப்பட்டது.
2.வெப்ப இயக்கவியலின் பூஜ்ஜியவிதிப்படி இரண்டு வெவ்வேறு வெப்ப நிலைகளிலுள்ள அமைப்புகள் தனித்தனியாக மூன்றாம் அமைப்புடன் வெப்ப சமநிலையில் இருந்தால் அந்த இரு அமைப்புகளும் தங்களுக்குள் வெப்ப சமநிலையில் இருக்கும்.

11.
(i) என்ட்ரோபி கூற்று:
1. ஒரு தன்னிச்சை செயல்முறை நிகழும்போது ஒரு தனித்த அமைப்பின் என்ட்ரோபி அதிகரிக்கிறது.
2. என்ட்ரோபி என்பது ஒரு அமைப்பின் மூலக்கூறுகளின் ஒழுங்கற்ற தன்மையை அளவிடும் வெப்ப இயக்கவியல் நிலைச்சார்பு.
(ii) கெல்வின்-பிளாங்க் கூற்று
1.ஒரு சுற்றுச்செயல் முறையில் சூடான வெப்ப மூலத்திலிருந்து வெப்பத்தை உறிஞ்சி அவ்வெப்பத்தின் ஒரு பகுதியை குளிர்ந்த நிலையிலுள்ள மூலத்திற்கு மாற்றாமல் முழுவதும் வேலையாக மாற்றக்கூடிய இயந்திரத்தினை வடிவமைக்க இயலாது.
(iii) கிளாசியஸ் கூற்று
எந்த ஒரு வேலையும் செய்யாமல் குளிர்ந்த வெப்ப மூலத்திலிருந்து சூடான வெப்ப மூலத்திற்கு வெப்பத்தை மாற்ற முடியாது.
12.
1. எந்த ஒரு வலிமை மிக அமிலம் மற்றும் வலிமை மிக காரம் ஆகியவற்றின் நடுநிலையாக்கள் வெப்ப மதிப்பு ஏறக்குறைய-57.32 KJ.
2.அமிலம் அல்லது காரத்தின் தன்மையைப் பொறுத்து இம்மதிப்பு மாறுவதில்லை.
சான்று:
(i) \(HCl_{(aq)}+KOH_{(aq)} \rightarrow KCl_{(aq)}+H_2O_{(l)}[ \)
\(\triangle H \simeq -57.32 kJ\)
(ii) \(HNO_{3_{(aq)}}+KOH_{(aq)} \rightarrow KNO_{3_{(aq)}}+H_2O_{(l)}\)
\(\triangle H \simeq -57.32 kJ\)
(iii) \(H_2SO_{_4{(aq)}}+2KOH_{(aq)}\rightarrow K_2SO_{4_{(aq)}}+2H_2O_{l}\)
\(\triangle H \simeq -57.32 kJ\)
காரணம்:
1. அமில கரங்கள் பற்றிய அர்ஹீனியஸ் கொள்கை மூலம் இதற்கான காரணத்தினை விளக்க முடியும்.
2. இக்கொள்கைபடி ""வலிமை மிக அமிலங்கள் மற்றும் வலிமை மிகு அமிலங்கள் மற்றும் வலிமைமிகு காரங்கள் அவற்றின் நீர்க்கரைசல்களில் முற்றிலும் அயனிகளாக பிரிகையுற்று முறையே மற்றும் அயனிகளைத் தருகின்றன.
3.நடுநிலையாக்கல் வினை
\(H^{+}_{(aq)}+OH^+_{(aq)} \rightarrow H_2O_{(l)}\) \(\triangle H = -57.32 kJ\)
13.
நிலைச்சார்பு:
நிலைச்சார்பு என்பது அமைப்பின் ஒரு வெப்ப இயக்கவியல் பண்பாகும். இது அமைப்பின் கொடுக்கப்பட்ட ஒரு நிலைக்கு ஒரு குறிப்பிட்ட நிலையை அடைய பின்பற்றப்பட்ட விதியினை பொறுத்து அமைகின்றன.
எடுத்துக்காட்டு:
1. அழுத்தம் (P)
2. கனஅளவு (V)
3. வெப்பநிலை (T)
4. அகஆற்றல் (U)
5. என்தால்பி(H)
6. கட்டியா ஆற்றல்(G)
வழிச்சார்பு:
வழிச்சார்பு என்பது ஒரு வெப்ப இயக்கவியல் பண்பாகும். அமைப்பானது ஆரம்ப நிலையிலிருந்து இறுதி நிலைக்கு மாற்றமடையும் வழியினைப் பொறுத்து இதன் மதிப்பு அமையும்.
எடுத்துக்காட்டு:
1. வேலை (W)
2. வெப்பம் (q)
14.
1. G=H-TS, H, Sஆகியவை நிலைச்சார்புகளை அடைவதால் G யும் ஒரு நிலைச்சார்பு
2. G என்பது ஒரு அளவு சார்ந்த பண்பாகும். ஆனால் தொடக்கநிலை மற்றும் இறுதிநிலையின் நிறை மாறாமலிருக்கும்போது இது ஒரு உள்ளார்ந்த பண்பாகும்.
3. G அல்லது அமைப்பின் ஒற்றை மதிப்புடைய வெப்ப இயக்கவியல் பண்பாகும்.
4. G மற்றும் \(\triangle\)Gமதிப்புகள் அமைப்பை மட்டுமே சார்ந்தவை
5. \(\triangle\)Gகுறியீடு
| செயல் | தன்னிச்சை செயல் | சமநிலை |
தன்னிச்சையற்ற |
| \(\triangle\)G | -ve | O | +ve |
6. கட்டிலா ஆற்றல் மாற்றக்குறைவு மாறாத வெப்பம் மாறாத அழுத்தத்தில் விரிவடையும் வேலையைத் தவிரத அமைப்பு செய்யும் அதிகபட்ச வேலையைக் குறிக்கிறது.
7. U=-788 KJ mol -1
8. \(\triangle\)G =\(\triangle\)H -T\(\triangle\)S ....(1)
9. வெப்ப இயக்கவியல் முதல் விதிப்படி
H =\(\triangle\)E-P\(\triangle\)V ........(2)
10. இங்கு
E=q - w ........(3)
11. சமன்பாடு (3)ஐ (2) ல் பிரதியிட
\(\triangle\) H =q-w-P\(\triangle\)V .......(4)
12. சமன்பாடு (4)ஐ (1)ல் பிரதியிட
\(\triangle\) G=q-w-P\(\triangle\)V-T\(\triangle\)S.......(5)
13. வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதிப்படி
\(\triangle\)S=\({q \over T}\)
q=T\(\triangle\)S ......(6)
14. சமன்பாடு (6)ஐ (5)ல் பிரதியிட

=-w +P\(\triangle\)V
G=w-P\(\triangle\)V
15.அதாவது கட்டிலா ஆற்றல் மாற்றம் குறைவது அமைப்பின் விரிவடையும் வேலையைத் தவிர அமைப்பு செய்யும் அதிகபட்ச வேலையைக் குறிக்கிறது.
15.
அக ஆற்றலின் சிறப்பியல்புகள்:
1. ஒரு அமைப்பின் அக ஆற்றலானது ஒரு பொருண்மை சார்பண்பாகும். ஒரு அமைப்பிலுள்ள பொருளின் அளவை பொறுத்து இது அமைகிறது.
2. அமைப்பிலுள்ள பொருளின் அளவை இரு மடங்காக்கும் போது, அக ஆற்றலும் இரு மடங்காகிறது.
3. ஒரு அமைப்பின் அக ஆற்றல் ஒரு நிலைச்சார்பு. இது அமைப்பின் நிலை மாறிகளை (T,P,V,K மற்றும் n )மட்டுமே சார்ந்து அமைகிறது.
4. அக ஆற்றல் மாற்றமானது, இறுதிநிலையையை அடைய எந்த வழிமுறை பின்பற்றப்பட்டது என்பதை பொறுத்து அமையாது.
5.அமைப்பின் அக ஆற்றல் மாற்றமானது \(\triangle U=U_f-U_i\) எனகுறிப்பிடப்படுகிறது.
6.சுற்று செயல்முறைகளில், அக ஆற்றலில் எவ்வித மாற்றமும் நிகழ்வதில்லை.
\(\triangle U=0\)
7. ஒரு அமைப்பின் இறுதிநிலை அக ஆற்றலானது அதன் ஆரம்பநிலைஅக ஆற்றலைவிட குறைவாக இருக்கும் நிலையில்\(\triangle U\) ஆனது எதிர்குறி மதிப்பை பெறும்.
\(\triangle U=U_f-U_i=ve(U_f
8. ஒரு அமைப்பின் இறுதிநிலை அக ஆற்றலானது (Uf),அதன் ஆரம்பநிலை (Ui)அக ஆற்றலை விட அதிகமாக இருக்கும் நிலையில் ஆனது நேர்குறி மதிப்பை பெறும்.
\(\triangle U=U_f-U_i=+ve(U_f
16.
(a)
பொதுவாக அதிகரிக்கும்
17.
(a)
வெப்பமாறா செயல்முறை
18.
(d)
உராய்வு ஆற்றல்
19.
(d)
நிறை/கனஅளவு
20.
(a)
300 K
21.
(b)
270 C
22.
(c)
வெப்பம் மாறா விரிவடைதல்
23.
(d)
– 635.66 kJ
24.
(b)
-500R
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards