11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
தொழில் நன்நெறிகள் மற்றும் நிறுவன ஆளுகை
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
நிலையான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் பணியாளர்களின் நெறிமுறை நடத்தை என்பது ________
நன் நடத்தை
நெறிமுறை நடத்தை
மோசமான நடத்தை
சரியாக முடிவெடுத்தல்
2.
தலைமை நிர்வாகத்தின் பங்கு என்பது, அதன் முழு அமைப்பு எதை நோக்கி வழிநடத்த வேண்டும்.
பொது நடத்தை
அமைப்பு நடத்தை
நேர்மையான நன்னெறி நடத்தை
தனிநபர் நடத்தை
3.
பின்வருவனவற்றில் எது ஒரு தொழில் நிறுவனத்தில் பயனுள்ள நன்னெறி நடைமுறைகளை உறுதி செய்யவில்லை
ஒரு வெளியீட்டின் குறியீடு
பணியாளர்களின் ஈடுபாடு
இணக்க வழிமுறைகளை நிறுவுதல்
இவற்றில் எதுவும் இல்லை.
4.
நெறிமுறைகளுக்கான தேவைகள் ______
உயர்மட்ட மேலாண்மை
நடுத்தர அளவிலான மேலாளர்கள்
மேலாண்மையில் இல்லாத தொழிலாளர்கள்
மேற்கண்ட அனைத்தும்
5.
பின்வருவனவற்றில் எது சமுதாயத்திற்கு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க செய்ய உதவுகிறது?
வணிகத்தின் வெற்றி
விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்
ஒழுக்கவியல்
தொழில்முறை நிர்வாகம்
6.
பெருநிறுவன ஆளுகை இலக்கணம் தருக .
7.
நெறிமுறை நடத்தைகள் பாதிக்கும் காரணிகளில் இரண்டைக் கூறு.
8.
நன்நெறி என்றால் என்ன?
9.
பன்னாட்டு நிறுவனத்தின் வேலை வாய்ப்பு பற்றி ஒரு உதாரணத்துடன் விளக்குக.
10.
வணிகத்தில் நெறிமுறைகள் ஏன் அவசியம்?
11.
12.
இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் பற்றி சர்வதேச தர நிர்ணயத்தின் பங்கு பற்றி விவாதிக்கவும்.
13.
அதிகரித்து வரும் பன்னாட்டு நிறுவனங்களின் பலன்களை விவரி.
14.
தொழில் நெறிமுறையின் குறியீடு பற்றி விவரிக்கவும்.
15.
தொழில் நெறிமுறைகளின் அடிப்படை கூறுகளை விளக்கவும்.
1.
(d)
சரியாக முடிவெடுத்தல்
2.
(c)
நேர்மையான நன்னெறி நடத்தை
3.
(a)
ஒரு வெளியீட்டின் குறியீடு
4.
(d)
மேற்கண்ட அனைத்தும்
5.
(c)
ஒழுக்கவியல்
6.
பெருநிறுவன ஆளுமை தத்துவத்தின் ஒரு முக்கிய கூறான வெளிப்படைத்தன்மையான மேலாண்மையின் மூலம் எந்த ஒரு நாட்டிலும் சமச்சீரான பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளது பெருநிறுவன ஆளுகை கோட்பாட்டின் மூலம் அனைத்து பங்குதாரர்களின் நலம் மற்றும் பாதுகாப்பு பெருமளவு பேணிக் காக்கப்படுகிறது.
7.
(i) நியாயமற்ற முறையில் பொருட்களை விற்றல்.
(ii) தமற்ற பொருட்களை விற்றல்.
(iii) நுகர்வோர்களின் குறைகளை தீர்ப்பதில்லை.
8.
நெறிமுறை என்பது ஆவணம் நன்னெறி நடத்தைகள், கொள்கைகள் , மதிப்புகள் மற்றும் அதன் நோக்கங்களை வரையறுக்கிறது.ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய தரம் பற்றி தெளிவான கருத்தை இது தெரிவிக்கிறது.அவர்கள் முடிவெடுப்பதற்கு இது வழிகாட்டியாகவும் விளங்கிறது.
9.
(i) உலக அளவில் இந்தியா தொழிற்சாலை உற்பத்தியில் 10-வது இடத்தில் உள்ளது.
(ii) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் GDP 27.6% உற்பத்தி துறையில் உள்ளது.
(iii) (எ.கா) 1BM ஐ.பி.எம். மைக்ரோசாப்ட் நிறுவனம்,பெப்சிகோ, சோனி, வோடபோன், ரிபோக், நோக்கியா.
(iv) இந்தியாவில் பன்னாட்டு நிறுமங்களின் ஊடுருவல் அதன் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மிகவும் பயன் உள்ளதாகவும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு வேலைவாய்ப்புகளையும் அளித்து வருகிறது.
10.
(i) நன்னெறி செயல்கள் எப்போதும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் தன்மை கொண்டது.
(ii) வாழ்க்கைத் தரம் மற்றும் தொழிலின் தரத்தையும் மேம்படுத்துகிறது.
(iii) தனிப்பட்ட நோக்கத்தையும் மற்றும் சமூக நோக்கத்தையும் இணைக்கும் பாலமாக வியாபார நன்னெறி முறைகள் விதிகள் செயல்படுகின்றன.அதனால் வணிகத்தில் நன்னெறி முறைகள் அவசியமாகியது.
11.
12.
ஆசியா:
(i) அனைத்து ஆசிய நாடுகளில் இயங்கி வரும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு, தன்னிசையுடன் செயல்பட்டு இயக்குநர்கள் தேவைப்படுகின்றனர்.
(ii) குறைந்த பட்ச நிர்வாகக் குழுவில் மூன்றில் ஒரு பங்கு இயக்குனர்கள் தன்னிசையுடன் செயல்படும் நபர்களாக இருக்க வேண்டும்.2012 ல் சிங்கப்பூர் ஆளுகை குறியீடு அமைப்பு தன்னிசையாக செயல்படும் இயக்குனர்களை பரிந்துரை செய்கிறது.
(iii) இருப்பினும் குழுவின் தலைவருக்கு போதிய சுதந்திரம் அளிப்பதில்லை. வியட்நாம் நாட்டை தவிர்த்து மற்ற அனைத்து ஆசிய நாடுகளிலும் பொருளாதாரத்தில் தணிக்கை மற்றும் ஊதியம் போன்றவற்றில் குழுக்களின் பரிந்துரை தேவைப்படுகிறது.சீனாவில் தணிக்கை குழுவின் மூலமே தன்னிசையாக செயல்படும் இயக்குநர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்:
(i) நிறுவனங்களின் முதலீட்டாளர்களின் குழுவால் சி.ஐ.ஐ.(CII) நிறுவனங்களின் ஆளுமைக்கான கொள்கை குறைந்தபட்சம் 2/3 பங்கு இயக்குனர்கள் சுதந்திரத்தன்மை கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் எனக் கூறுகிறது.
(ii) ஒரு நியமனக் குழு மற்றும் நிறுவன ஆளுமைக்குழு ஆகியவை மூன்று தரநிலைக் குழுக்களில் ஓன்றாகும் மேலும் என் ஓய் எஸ் இ (NYSE) தணிக்கைக்குழு மற்றும் இழப்பிட்டுக் குழுவோடு சேர்த்து முற்றிலும் சுதந்திரமான இயக்குனர்கள் உருவாக்கப்பட வேண்டும்.
(iii) ஜீ 20, ஒ.இ.பி.டி கோட்பாடுகள் நியமனம்குழு உருவாக்கம் இணக்கமான முறையில் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை ஊக்கப்படுகிறது.
(iv) சீரான மற்றும் தகுதியான குழுக்கள் தேடலை ஒருங்கிணைக்கவும் வசதியளிக்கிறது.
13.
(i) உலகளாவிய வாய்ப்புகள் இருப்பதாக கருதினாலும் சில நாடுகளில் மட்டுமே இந்நிறுவனங்களில் தொழிலை நடத்துகிறது.
(ii) பன்னாட்டு அளவில் தங்கள் சொத்துக்களில் ஒரு கணிசமான பகுதியை முதலீடு செய்கிறது.
(iii) இவ்வகை நிறுவனங்கள், மிகப்பெரிய நிறுவனங்கள் / தொழில் அமைப்புகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
(iv) இந்நிறுவனங்கள் பன்னாட்டு அளவில் உற்பத்தியை மேற்கொள்கிறது, மற்றும் பல நாடுகளில் தொழிற் கூடங்களையும் இயக்கி வருகிறது.
(v) உலகளாவிய கண்ணோட்டத்தில் நிர்வாக முடிவுகளை மேற்கொள்ள பன்னாட்டு நிறுமங்கள் வகை செய்கின்றது.
(vi) பன்னாட்டு நிறுமங்கள் ஒரு சில நாடுகளில் மட்டும் உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளில் விற்பனையை மேற்கொள்கிறது.
(vii) பன்னாட்டு நிறுமங்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக பெருநிறுவனங்களில் தொழிலில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
14.
(i) தொழில் நடைமுறைகள் மற்றும் அதன் செயல்திறன் பொண்டேயா அளவீடுகளை நிறுமம் தன்மை மற்ற நிறுவனங்கள் பின்பற்றி வரும் சிறந்த நடைமுறைகளுடன் ஒப்பிட்டு பார்க்க வகை செய்கிறது.நான்கு வகையான அடிப்படை தரக்குறியீடுகள் நடைமுறையில் உள்ளன.
(ii) அவைகள் உள்நாட்டு தரக்குறியீடு,போட்டிக்குரிய தரக்குறியீடு,செயல்பாட்டு தரக்குறியீடு எனப்படும்.உள்நாட்டு தரக்குறியீடு ஒரு தொழிலின் செயல் மற்றும் அதன் அமைப்பில் உள்ள செயல்முறைகளையும் ஒப்பிடப்படுகிறது.போட்டி தரக்குறியீடு ஒரு போட்டியாளரின் மற்றும் ஒரு போட்டியாளருடன் நேரடியாக போட்டியிடுவதை ஒப்பிடப்படுகிறது.
(iii) ஒரு பொருள் சேவை அல்லது அதன் நடைமுறை போன்றவற்றை தரக் தரக்குறியீட்டுக்கு தேர்வு செய்யப்படுகிறது.
(iv) முக்கிய செயலாக்கத்தின் அடிப்படை அளவீட்டை அடையாளம் காணல்.
(v) நிறுமம் தேர்ந்தெடுக்கும் இடம் அதன் உட்புற பகுதியே தரக்குறியீடு ஆகும்.
(vi) செயலாக்கம் மற்றும் நடைமுறை மீதான தகவல் சேகரிப்பு.
(vii) உலகின் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்புகள் பற்றி கண்டறிதல் மற்றும் தகவல் பகுப்பாய்வு. உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தரக்குறியீடுகள் : அனைத்து ஆசிய நாடுகளில் இயங்கி வரும் பட்டியலில் இடப்பட்ட நிறுவனங்களுக்கு, தன்னிசையுடன் செயல்படும் இயக்குனர்கள் தேவைப்படுகின்றனர்.குறைந்த பட்சம் நிர்வாகக் குழுவில்,மூன்றில் ஒரு பங்கு இயக்குனர்கள் தன்னிசையுடன் செயல்படும் நபர்களாக இருக்க வேண்டும்.2012-ல் சிங்கப்பூர் ஆளுகை குறியீடு அமைப்பு தன்னிசையாக செய்லபடும் இயக்குனர்களை பரிந்துரை செய்கிறது.இருப்பினும் குழுவின் தலைவருக்கு போதிய சுதந்திரம் மற்ற அனைத்து ஆசிய நாடுகளிலும் பொருளாதாரத்தில் தணிக்கை மற்றும் ஊதியம் போன்றவற்றில் குழுக்களின் பரிந்துரை தேவைப்படுகிறது.
15.
தொழில் அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதற்கு சில அடிப்படைத் தொழில் நெறிமுறைகள் அவசியமாகிறது.
(i) உயர்நிலை மேலாண்மையின் ஆய்வு / ஆதரவு நன்னெறி விதிகளை ஏற்படுத்துவது : ஒவ்வொரு தொழிலமைப்பின் அடிப்படைக் கடமையாகும்.அப்படி நன்னெறி விதிமுறைகளை உருவாக்குவதிலும் உயர்மட்ட மேலாண்மையின் தார்மீக ஆதரவு இன்றிமையாதது தார்மீக நன்னெறி விதிமுறைகளை உருவாக்க ஒவ்வொரு தொழிலமைப்பும் ஒரு குழுவை அமர்த்தி அதில் அனைத்து ஊழியர்களின் பிரதிநிதிகளும் இடம்பெறச் செய்ய வேண்டும்.
(ii) நன்னெறி நடத்தை விதிகளை உருவாக்குதல் மற்றும் பரப்புதல்: தொழில் அமைப்புகள் நன்னெறி விதிகளை உருவாக்கி,அதை எழுத்து வடிவில் பணிபுரியும் அனைவருக்கும் புரியும்படி தெரிவிக்க வேண்டும்.இந்த நன்னெறி விதிகளை உருவாக்கி அதை எழுத்து வடிவில் பணிபுரியும்படி தெரிவிக்க வேண்டும்.இந்த நன்னெறி விதிகள் தொழில் அமைப்பில் இயங்கும் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே உருவாக்கிட வேண்டும்.(எ.கா) உற்பத்தி விற்பனை,ஆள் சேர்த்தல், தரக்கட்டுப்பாடு நிதி திரட்டுதல்,நிதியை முதலீடு செய்தல்,பணியாளர் நலன், திறன் மதிப்பீடு, வளங்களை சேமித்தல், பொருள் வடிவமைப்பு,நல்வாழ்வு திட்டங்கள் செயலாக்கம் போன்றவை.
(iii) நன்னெறி விதிமுறைகளை கடைபிடிப்பதைக் கண்காணித்தல்: மேற்கூறிய நன்னெறி விதிமுறைகளை ஒவ்வொரு பிரிவும் அல்லது துறையும் முறையாகக் கடைபிடிக்கின்றனவா என ஆய்வு செய்யக் கண்காணிப்பு அவசியம்.இதனை நன்னெறி கண்காணிப்பு என்று அழைப்பர்.அதாவது தொழில் அமைப்பின் ஒவ்வொரு துறையும் எந்த அளவிற்கு நன்னெறியை நடைமுறையில் கடைப்படுகின்றன என கண்காணிக்க ஒரு வித கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும்.
(iv) அனைத்து ஊழியர்களையும் ஈடுபடுத்துதல் : நன்னெறி விதிகளுக்கு பணியாளர்களின் முழு ஆதரவைத் திரட்ட நன்னெறி விதிகளை உருவாகுவதற்கு முன்பாக அதைப்பற்றி சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் பல்வேறு மட்டங்களில் விவாதம் நடத்தி அவர்களின் எண்ணப்போக்கை அறிந்து அதற்கு ஏற்றப்படி பணியாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு முழு மூலம் நன்னெறி விதிகள் உருவாக்க பட வேண்டும்.
(v) நன்னெறிப் பலனை அளித்தல்: நன்னெறி விதிகளினால் விளைந்திட்ட பணிகளை பலனை ஆய்வு செய்ய நன்னெறி தணிக்கை அவசியம் .ஆனால் சில வகைச் செயல்களை என்ன ரீதியாக வெளிப்படுத்துவது கடினம்.(எ.கா) ஊழியர்களின் ஆற்றல், ஒழுக்கம், பொருளின் தரம், கவனம் போன்றவைகள், இருப்பினும் அவைகளுக்கும் எண் வடிவம் அளித்து தொழிலமைப்பின் ஒவ்வொரு செயலையும் நன்னெறி விதிகள் என்ற தர அளவுகோல்களைத் கொண்டு அளத்தல் அவசியம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards