11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
வழங்கல் வழிகள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
வணிக முகவர்கள் என்பவர் யார்?
2.
வியாபாரத் இடைநிலையரின் வகைகள் யாவை?
3.
சில்லறை வியாபாரி வரைவிலக்கனம் தருக.
4.
உற்பத்தியாளர்களுக்கு மொத்த வியாபரிகள் ஆற்றிடும் சேவைகள் யாது?
5.
வணிக முகவர்களின் வகைகள் யாவை?
6.
தன் பொறுப்பு முகவர் இவர் யார்?
7.
சில்லறை வியாபாரிகளுக்கு மொத்த வியாபாரிகள் ஆற்றிடூம் பணிகள் யாவை?
8.
சில்லறை வியாபாரிகளின் பணிகள் யாவை?
9.
_____ வகை வணிக முகவர்கள் முதல்வரால் விற்பனைக்காக அனுப்பப்படும் பொருட்களின் உடைமை உரிமையை பெருவதில்லை
தரகர்
தன் பொறுப்பு முகவர்
பண்டகசாலை வைத்திருப்பவர்
கழிவு முகவர்
10.
மொத்த வியாபாரிகள் _____ பொருட்களை வாங்கி விற்பவர்
சிறிய அளவில்
பெரிய அளவில்
நடூத்தர அளவில்
11.
வாங்குபவரையும் விற்பவரையும் ஒருங்கினைக்கும் பனியினை மேற்கொள்வர்
தரகர்
கழிவு முகவர்
விற்பனை முகவர்
இருப்பு வைத்திருப்பவர்
12.
உற்பத்தியாளரிடம் பொருட்களை வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செயபவர்
உற்பத்தியாளர்
மொத்த வியாபாரி
சில்லறை வியாபாரி
நுகர்வோர்
13.
மொத்த வியாபாரியையும் நுகர்வோரையும் இணைக்கும் இணைப்புச் சங்கிலியாக செயல்படும் வணிக இடைநிலையர் _____ ஆவார்
உற்பத்தியாளர்
தரகர்
சில்லறை வியாபாரி
வாடிக்கையாளர்
1.
வணிக முகவர்கள் பணிவழி இடைநிலையர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஒரு வியாபாரி தம் சார்பாக பொருட்களை வாங்கவும் விற்கவும் இவரை நியமிக்கிறார். இவருக்கு பொருட்களை அடமானம் வைத்து கடன் பெறவும் உரிமை உண்டு. ஆனால், பொருட்களுக்கு உரிமையாளராக இருக்க வாய்ப்பில்லை. இவர் செய்யும் வியாபாரத்தின் அடிப்படையில் இவர் 'கழிவு பெறுகிறார்.
2.
வியாபார இடைநிலையர்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. வணிக முகவர்கள்
2. வியாபார இடைநிலை இடைநிலையர்கள்
3.
ஈஸ்ஸின் தாமஸ் என்பவரது கூற்றின்படி" நுகர்வோரின் தேவைகள் செய்வனே பூர்த்தி செய்யும் பொருளாதார சங்கிலியில் இறுதியாக இருப்பவர் சில்லறை வியாபாரி" ஆவார்.
4.
(i) பேரளவு நடவடிக்கையின் மூலம் சிக்கனம்: மொத்த வியாபாரி உற்பத்தியாளர் செய்த பொருட்களைப் பெருமளவில் வாங்கிக் கொள்வதால் உற்பத்தியாளர் பேரளவு உற்பத்தியில் ஈடுபட முடிகிறது. பேரளவு உற்பத்தியினால் பொருட்களின் உற்பத்திச் செலவு வெகுவாகக் குறைகிறது.
(ii) சீரான விநியோகத்திற்கு உதவுதல்: மொத்த வியாபாரி நாடெங்கிலும் உள்ள சில்லறை வியாபாரிகள் அனுப்பும் ஆணைகளைப் பெற்றுக் கொண்டு, அவற்றிற்கு பொருட்களை அனுப்பி வைத்து விநியோகத்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக்கும்படி செய்கிறார். எனவே உற்பத்தியாளர் தனது முழுக்கவனத்தையும் பொருட்களின் உற்பத்தியில் செலுத்த முடிகிறது.
(iii) பண்டகக் காப்பு வசதி அளித்தல்: மொத்த வியாபாரிகள் உற்பத்தியானப் பொருட்களை, இருப்பு வைத்துக் கொள்ளும் பணியை மேற்கொள்வதால், உற்பத்தியாளர்கள் பண்டகக் காப்பிடுதல் என்ற முக்கிய பணியிலிருந்து விடுவிக்கப் பெறுகிறார்.
(iv) தேவை முன் கணிப்பு: மொத்த வியாபாரி சந்தையில் ஏற்படும் மாற்றம் போன்ற தகவல்களை சில்லறை வியாபாரிகள் மூலம் பெற்று, அவற்றை உற்பத்தியாளருக்கு அனுப்பி வைத்து, அதற்கேற்ப பொருட்களை உற்பத்தி செய்ய உதவுகிறார்.
(v) விளம்பரம் செய்தல்: மொத்த வியாபாரி உற்பத்தியாளருக்கு விளம்பரத்திற்கான செலவு குறைகிறது.
(vi) நிதி வசதி நல்குதல்:மொத்த வியாபாரி உற்பத்தியாளருக்கு முன்பணம் வழங்குகிறார். எனவே உற்பத்தியாளர் தந்து முதலீட்டினை உற்பத்தி செய்த பொருட்களை இருப்பு வைப்பதில் முடக்குவது இல்லை.
(vii) இடர் ஏற்பாளர்: உற்பத்தியாளர் பொருட்களை உற்பத்தி செய்தவுடன் மொத்த வியாபாரி வாங்கிக் கொள்வதால், பொருட்களை இருப்பு வைத்தல், பொருட்களின் தேவையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றில் இருந்து உற்பத்தியாளர் விடுவிக்கப்படுகிறார்.
(ix) இணைப்புச் சங்கிலி: உற்பத்தியாளருக்கும் சில்லறை வியாபாரிக்கு இடையே இடையீட்டாளராக செயல்பட்டு அவர்களை இணைக்கிறார்.
5.
வணிக முகவர்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம் .
(i ) தரகர்கள்
(ii ) தன பொறுப்பு முகவர்கள்
(iii ) கழிவு முகவர்கள்
(iv ) பிணை முகவர்கள்
(v ) ஏலமிடுநர்
(vi ) பண்டகக் காப்பாளர்கள்
6.
(i) உற்பத்தியாளர் தம் பொருளை விற்பனை செய்யப் பொருட்களை ஒப்படைத்து நியமனம் செய்யப்படும் வணிக முகவர், தன பொறுப்பு முகவர் ஆவார். பொருட்களின் உரிமையைப் பெறாமல் பொருட்களைப் பெற்று இருப்பு வைத்துக் கொண்டு செயல்படுவார்.
(ii) இவர் பொருளின் உரிமையாளர் பெயரை வெளியிடாமல் தன் பொறுப்பில் பொருட்களை தனது பெயரிலிலேயே விற்பனை செய்வார். இவர் தாம் விற்கும் பொருளுக்குரிய பணத்தை தாமே பெற்றுக் கொண்டு இரசீது வழங்கும் உரிமையையும் உடையவர்.
(iii) இவரது நடவடிக்கைகளுக்கு இவரே பொறுப்பாவார். இவரது நடவடிக்கைகளுக்காக, எவர் மற்றவர் மீதும், மற்றவர்கள் எவர் மீதும் வழக்குத் தொடுக்க முடியும். தனக்கு சேரவேண்டிய கழிவு முதலான தொகைக்காக தன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொருள் மீது பற்றுரிமை உள்ளவர்.
7.
சில்லறை வியாபாரிகளுக்கு மொத்த வியாபாரிகள் ஆற்றிடும் சேவைகள் பின்வருமாறு:
(i) நிதிவசதி அளித்தல்: மொத்த வியாபாரி சில்லறை வியாபாரிகளுக்கு கடன் விற்பனை செய்வதன் மூலம் நிதி வசதி நல்குகிறார். சில்லறை வியாபாரிகள் மொத்த வியாபாரியிடம் கடன் கொள்முதல் செய்து அவற்றை நுகர்வோருக்கு விற்று அவரிடமிருந்து பணத்தைப் பெற்று மொத்த வியாபாரிகளுக்கு செலுத்தும் வண்ணம் நிதி வசதி அளிக்கிறார்.
(ii) தேவையை பூர்த்தி செய்தல்: சில்லறை வியாபாரிகள் சிறு முதலுடனும் மற்றும் சிறிய அளவு இடவசதிகளுடனும் வியாபாரத்தை நடத்துவதால், அவர்களால் பெருமளவில் பல்வேறு வகையான சரக்குகளை வாங்கி இருப்பு வைக்க இயலாது. மொத்த வியாபாரி சில்லறை வியாபாரிக்கு அவரின் தேவைக்கு ஏற்ப சிறிய அளவில் பொருட்களை விற்று அவரின் இந்த இடர்பாட்டை போக்குகிறார்.
(iii) புதிய பொருட்களை அறிமுகம் செய்தல்: மொத்த வியாபாரி புதிய பொருட்கள், மற்றும் அவற்றின் உபயோகம் குறித்த தகவல்களை சில்லறை வியாபாரியின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார். எனவே பொருளைப்பற்றிய சிறப்பறிவு மற்றும் ஆலோசனைகளை சில்லறை வியாபாரி பெறுகிறார்.
(iv) விலை நிலைப்பாடு: மொத்த வியாபாரிகள் சந்தையின் தேவையை அறிந்து அதற்கேற்ப பொருள்களின் அளிப்பினைக் கட்டுப்படுத்துவதால், விலை வேறுபாடுகள் மூலம் ஏற்படும் நட்டத்திலிருந்து சில்லறை வியாபாரிகளைப் பாதுகாக்கிறார்.
(v) போக்குவரத்து சிக்கனம்: மொத்த வியாபாரி சில்லறை வியாபாரியின் இடத்திற்கே சென்று பொருட்களை வழங்குவதன் மூலம், சில்லறை வியாபாரியின் நேரத்தையும் போக்குவரத்துச் செலவையும் மிச்சப்படுத்துகிறார்.
(vi0 முறையான விநியோகம்: மொத்த வியாபாரி பெருமளவில் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு முறையாக, சீராக சில்லறை வியாபாரியின் தேவைக்கு ஏற்ப பொருட்களை வழங்குகிறார்.
8.
சில்லறை வியாபாரியின் பணிகள் பின்வருமாறு:
(i) சில்லறை வியாபாரிகள் நுகர்வோரின் தேவையை, மதிப்பிட்டு பல்வேறு மொத்த வியாபாரிகளிடமிருந்து பல்வேறு வகையானபி பொருட்களை வாங்கி தமது கடைகளில் விற்பனைக்கு வைக்கின்றனர். ஒவ்வொரு மொத்த வியாபாரியிடமிருந்தும், அவரிடமுள்ள மிகச்சிறந்த பொருட்களை வாங்கி வைத்து அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி செய்கின்றனர். ஆகவே, அவர்கள் கொள்முதல் செய்தல், ஒன்று திரட்டல் ஆகிய இரட்டைப் பணிகளையும் செய்கின்றனர்.
(ii) மொத்தவியாபாரிகளிடமிருந்தும் பெற்ற பொருட்களை, சில்லறை வியாபாரிகள் தம் பண்டகக் காப்பில் விற்பனைக்கு தயார் நிலையில் சேமித்து வைக்கின்றனர்.
(iii) விற்பனை செய்தல்: சில்லறை வியாபாரி நுகர்வோர்களுக்கு அவரது தேவைகள், சுவை, விருப்பம், மற்றும் முன்னுரிமைக்கு ஏற்ப சிறு அளவுகளில் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் விற்பனையின் அளவு அதிகரிக்கின்றது.
(iv) வகைப்படுத்துதல் மற்றும் கட்டுமம் செய்தல்: உற்பத்தியாளர் மற்றும் மொத்த வியாபாரிகளால் வகைப்படுத்தப்படாத பொருட்களை அவற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தி, அவற்றை கட்டுமம் செய்கின்றனர்.
(v) இடர் ஏற்றுதல்: சில்லறை வியாபாரி நுகர்வோரின் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்கி இருப்பு வைக்கிறார். இதனால் தீயினால் அழிவு, திருட்டு, தரக்குறைவு, கேட்டுப் போதல், மற்றும் விலை ஏற்றத் தாழ்வுகள் போன்றவற்றால் ஏற்படும் இடர்களை எவர் ஏற்றுக் கொள்கிறார்.
(vi) போக்குவரத்து செய்தல்: சில்லறை வியாபாரி உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை தமது சில்லறை விற்பனையகங்களுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் போக்குவரத்துப் பணியினை மேற்கொள்கிறார்.
(vii) நிதியளிப்பு: சில சில்லறை வியாபாரிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடன் விற்பனை மூலம் நிதி வசதி அளிக்கின்றனர்.
(viii) இதர சேவைகள்: விற்பனைக்குப்பின் குறைபாடுகளுடைய பொருட்களை மாற்றித்தருதல் போன்ற பணிகளை இவர் செய்கிறார். மேலும் விற்பனைக்கு, பின் சேவை மற்றும் வீட்டுக்கே பொருட்களை கொண்டு சென்று விநியோகம் செய்தல் போன்ற பணிகளையும் அளிக்கிறார்.
9.
(b)
தன் பொறுப்பு முகவர்
10.
(b)
பெரிய அளவில்
11.
(a)
தரகர்
12.
(b)
மொத்த வியாபாரி
13.
(c)
சில்லறை வியாபாரி
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards