11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
கூட்டுறவு அமைப்பு
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தவர்
ராபர்ட் ஓவென்
H ,C கால்வெர்ட்
டால்மாக்கி
லம்பேர்ட்
2.
நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது
இங்கிலாந்து
அமெரிக்கா
சுவிஸ்
இந்தியா
3.
அனைத்து கூட்டுறவுகளும் நிறுவப்படுவதற்கு
தொண்டு நிறுவன நோக்கம்
சேவை நோக்கம்
இலாப நோக்கம்
சீர்திருத்த நோக்கம்
4.
கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம்
வரம்பற்ற உறுப்பினர்
ரொக்க வியாபாரம்
தவறான நிர்வாகம்
இழப்பு ஏற்படுவதால்
5.
கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்கள்
யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
யார் வேண்டுமானாலும் இருக்கலாம்
மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
6.
இராக்டேல் முன்னோடிகள் என்பவர் யார்?
7.
கூட்டுறவுச் சங்கத்தில் குறைந்த வரி செலுத்த முடியுமா?
8.
கூட்டுறவு வரையறு
9.
கூட்டுறவு அமைப்பு என்றால் என்ன?
10.
தொழில்துறை கூட்டுறவு பற்றிச் சிறு குறிப்பு வரைக
11.
கூட்டுறவு உழவுச் சங்கம் பற்றிச் சிறு குறிப்பு வரைக
12.
தயாரிப்பாளர்கள் கூட்டுறவுச் சங்கம் என்றால் என்ன?
13.
கூட்டுறவுகளின் குறைபாடுகளை விவரி? (எவையேனும் மூன்று)
14.
கூட்டுறவுச் சங்கத்தின் வகைகளைக் கூறுக
15.
கூட்டுறவுச் சங்கத்தின் நன்மைகள் யாவை?
16.
கூட்டுறவின் கொள்கைகள் என்ன?(ஏதேனும் 5)
1.
(a)
ராபர்ட் ஓவென்
2.
(a)
இங்கிலாந்து
3.
(b)
சேவை நோக்கம்
4.
(c)
தவறான நிர்வாகம்
5.
(c)
யார் வேண்டுமானாலும் இருக்கலாம்
6.
முதலில் கூட்டுறவு இயக்கம் 1844-ஆம் ஆண்டு ராபர்ட் ஓவன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இங்கிலாந்தில் 28 நெசவாளர் உறுப்பினர்களைக் கொண்ட நுகர்வோர் கூட்டுறவு சமுதாயத்தை உருவாக்கி, ராக்டேல் சமமான முன்னோடிகளின் சொசைட்டி என்று அவர் அழைத்தார்.
7.
செலுத்த முடியும். ஏனெனில் அரசும் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிக்க பலவகை வரிச்சலுகைகளை வழங்கி வருகிறது.
8.
"கூட்டுறவு சங்கம் என்பது, உறுப்பினர்களின் பொருளாதார நலனைப் பெருக்கி கொள்வதற்காக, மனிதர்கள் என்ற முறையில் சமத்துவ அடிப்படையில் மக்கள் அவர்களாகவே ஒன்றுபடும் அமைப்பே கூட்டுறவு. H.C கால்வெர்ட் "கூட்டுறவு என்பது. சிறந்த விவசாயம். சிறந்த வணிகம் மற்றும் சிறந்த வாழ்க்கை முறையாகும். சர் ஹெரேஸ் ப்ளங்கெட்.
9.
உறுப்பினர்களால், உறுப்பினர்களுக்காக தாங்களாகவே இணைந்து நடத்தப்படும் வணிக அமைப்பே கூட்டுறவு ஆகும். இதில் லாபத்தை விட சேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.
10.
(i) தொழில்துறை கூட்டுறவுச் சங்கம் சிறுதொழில் செய்யும் உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது.
(ii) சிறுதொழில் செய்யும் உற்பத்தியாளர்களால் நடத்தப்படுகிறது.
(iii) கூட்டுறவு முறையில் சிறுதொழில், மற்றும் குடிசைத் தொழில் அமைக்க இந்த சங்கம் மிகுந்த உதவி புரிகிறது.
11.
உள்ளுரில் இருக்கும் வேளாண்குடிகள் தங்களின் நிலங்களை தனித்தனியே பயித்திடுவதற்கு பதிலாக அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தங்களின் நிலங்களை ஒன்றாக திரட்டி பேரளவில் விவசாயம் செய்ய உதவும் சங்கமே கூட்டுறவு உழவுச் சங்கம் எனப் பெயர். அனைத்து விவசாயிகள் நிலத்தை ஒன்று திரட்டி சங்கமாக செயல்பட்டாலும் அவர்களின் நிலா உரிமை பாதிக்கப்படாது. அவர்கள் அனைவரும் சங்கம் அமைத்து அவர்களே நிர்வாககக் குழுவை தேர்ந்தெடுத்து உழவுச் சங்கத்தை நிர்வாகிக்க வேண்டும். கூட்டாக பயிரிட வேண்டும். நிலத்தை பங்காக கொடுத்த விவசாயிக்கு வாடகையும் நிலத்தில் உழைத்ததிற்கு கூலியும் பெறுவார்கள். இம்முறை இரஷ்யாவில் மிகவும் வெற்றி கண்டது.
12.
உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒரு மைய இடத்திற்கு வந்து உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அல்லது அவரவர் இடத்தில் உற்பத்தி செய்து முடிவுற்ற பொருளை சங்கத்திடம் ஒப்படைக்கலாம். உற்பத்தி செய்யப்பட்ட பொருளை மையமாகத் திரட்டி ஒட்டு மொத்தமாக சந்தையில் இடுகின்றன. கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம், கூட்டுறவு தீப்பெட்டி கூட்டுறவு தயாரிப்பாளர் சங்கம் தச்சு தொழிலாளர் கூட்டுறவு சங்கம் போன்ற சங்கங்களாகும்.
13.
(i) அளவான நிதி ஆதாரங்கள் : கூட்டுறவு சங்கங்களின் நிதி ஆதாரம் பிற அமைப்புகளை காட்டிலும் குறைவு. உறுப்பினர் கட்டணம் குறைவு மேலும் உறுப்பினர்களின் பங்கு முதல் குறைவாக இருப்பதால் கூட்டுறவு சங்கங்களினால் பெரும் முதல் திரட்டி பேரளவு வியாபாரத்தில் ஈடுபட முடிவதில்லை.
(ii) அரசின் நிதி ஆதாரங்களை பெரிதும் நம்பியிருத்தல் : கூட்டுறவு சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தங்களின் நிதி ஆதாரங்களை பெருக்கி கொள்ள முடியாமல் அரசின் நிதி ஆதரவை செயல்பட்டு வருகின்றன.
(iii) அரசால் துவக்கப்பட்ட சங்கங்கள் : மேற்கத்திய நாடுகளில் கூட்டுறவு அமைப்புகள் ஏழை எளியவர்களால் தானாக முன் வந்து பெரும்பாலான சங்கங்கள் அரசின் வற்புறுத்தினால் துவக்கப்பட்ட சங்கங்கள் என கூறப்படுகின்றன.
14.
(i) நுகர்வோர் கூட்டுறவு
(ii) உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (அ) தயாரிப்பாளர் கூட்டுறவுச் சங்கம்
(iii) கூட்டுறவு கடன் சங்கங்கள்
(iv) வீட்டுவசதி கடன் சங்கம்
(v) உழவர் கூட்டுறவுச் சங்கம்.
15.
(i) தன்னார்வு நிறுமம் : கூட்டுறவு சங்கங்களில் யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம் பொதுவான நோக்கமுள்ள எவரும் இதன் உறுப்பினர் ஆகலாம். உறுப்பினர் தொகையும் மிகவும் குறைவாக இருப்பதனால் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் முதல் முன்னேறியவர் வரை யாரும் உறுப்பினராக முடியும்.
(ii) எளிமையான தோற்றுவிப்பு: குறைந்தபட்சம் இளவர் அல்லாத 25 உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுறவு சங்கத்தினை ஆரம்பிக்கலாம். சங்கத்தை ஆரம்பிக்க சட்ட சடங்குகள் அதிகம் இல்லை.
(iii)மக்களாட்சி: கூட்டுறவு சங்கங்கள் ஒரு நபர் ஒருவாக்கு என்ற கோட்பாட்டில் எவ்வளவு பங்கு வைத்திருந்தாலும் ஒரு வாக்கு மட்டுமே செலுத்த முடியும்.
(iv) சமத்துவ அடிப்படையில் இலாபத்தை பகிர்தல்: கூட்டுறவு சங்கங்கள் ஈட்டும் உபரி சமத்துவமாக அனைவர்க்கும் பங்கீட்டு தரப்படுகிறது. இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களின் அனைத்து உறுப்பினர்களும் பயன்பெறுவர். ஈட்டும் உபரியில் 10% சங்கம் செயல்பட்டு வரும் பகுதி மக்கள் நலனுக்கு செலவிட வேண்டும்.
(v) வரையறுக்கப்பட்ட பொறுப்பு : கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த நபர்களின் பொறுப்புகள் அவர்கள் வாங்கிய பங்கு முதலுடன் அடங்கி விடுகிறது. கூட்டுறவு சங்கங்களை கலைக்கும் போது அந்நிறுவனத்தின் நிதி பொறுப்புகளை தீர்க்க உறுப்பினர்களின் சொந்த சொத்துக்களை ஈடுபடுத்த முடியாது.
(vi) சட்ட உரு: கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தினால் வழங்கப்பட்ட தனித்தன்மை கொண்டது. எனவே உறுப்ப்பினர்களின் இறப்பு, துறப்பு, நொடிப்பு, மனநிலை, சமனின்மை திறனிழப்பு போன்ற நிகழ்வுகள் சங்கங்களின் ஆயிலை பாதிப்பதில்லை.
(vii) பொதுநலன் : கூட்டுறவு சங்கங்கள் சுய உதவி மற்றும் ஒருவருக்கொருவர் உதவி புரிதல் என்ற கோட்பாட்டில் ஆரம்பிக்கப்படுவதால் சங்க உறுப்பினர்கள் பொது நலனை எட்ட அனைவரும் பங்களிக்கின்றனர்.
(viii) சிறப்பான நிர்வாகம், அரசின் ஆதரவு இடைநிலையை தவிர்த்தல், வரிச்சலுகை, ஊரகக்கடன்.
16.
(i) தன்னார்வ மற்றும் உறுப்பினராகுவதற்குத் தடையில்லா வாய்ப்பு : கூட்டுறவு என்பது தன்னார்வ அமைப்புகளாகும். அதன் சேவைகளைப் பாலினம், சமூக, இன, அரசியல் அல்லது மதபாகுபாடு இல்லாமல் அனைவரும் பெற்று பயன் அடையலாம்.
(ii) மக்களாட்சி முறையில் உறுப்பினர் கட்டுப்பாடு: கூட்டுறவு மக்களாட்சி முறையில் அதன் உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. உறுப்பினர்கள் கூட்டுறவின் சேவைகளை பயன்படுத்துவதற்காகவோ, கொள்கைகளை அமைப்பதிலும் முடிவுகளை எடுப்பதிலும் தீவிரமாக தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
(iii) உறுப்பினர்கள் பொருளாதார பங்களிப்பு : உறுப்பினர்கள் கூட்டுறவு மூலதனத்தை சமமாக ஜனநாயக முறையில் பங்களித்து கட்டுப்படுத்துகின்றனர், இந்த நன்மைகள் உறுப்பினர்கள் மூலதனத்தில் முதலீடு செய்வதை விட ஒத்துழைப்புடன் நடத்தும் வியாபார விகிதத்தில் இருக்கும்.
(iv) தன்னாட்சி மற்றும் சுதந்திரம்: கூட்டுறவு நிறுவனங்கள் தங்கள் உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்படும் தன்னாட்சி சுய உதவி அமைப்புகள் ஆகும். கூட்டுறவு அமைப்புகள் மற்ற அமைப்புகளுடன் ஒப்பந்தங்களில் நுழைந்தால் அல்லது மூல ஆதாரங்களில் இருந்து மூலதனத்தை உயர்த்தினாள் உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதோடு கூட்டுறவு சுயாட்சியைத் தக்க வைத்துக்கொள்வதன் அடிப்படையில் இது செய்யப்படுகிறது.
(v) கல்வி, பயிற்சி, மற்றும் தகவல் : உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மேலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கல்வி மற்றும் பயிற்சியளிப்பை கூட்டுறவில் வழங்குகிறார்கள். அதனால் அவர்கள் கூட்டுறவு அபிவிருத்திக்கு திறம்பட பங்களிக்க முடியும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards