11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
வணிக வங்கிகளின் பணிகள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
எந்த ஒரு வகையான சேவைகள் வணிக வங்கியால் வழங்கப்படுவது இல்லை.
வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்
வங்கி மேல்வரைப்பற்று
ரொக்கக் கடன்
உண்டியல்களைத் தள்ளுபடி செய்தல்
2.
எந்த வகையான கணக்கு,குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சில தொகையைச் செலுத்த வேண்டியது கட்டாயம்?
சேமிப்பு வைப்பு
நிலையான வைப்பு
நடப்பு வைப்புத்தொகை
தொடர் வைப்பு
3.
இந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி
ஐசிஐசிஐ
எஸ்.பி.ஐ
பிஎன்பி
ஆர்பிஐ
4.
RTGS மூலம் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்ய முடியும்?
எவ்வளவு தொகை வேண்டுமானாலும்
50,000
2 லட்சம்
5 லட்சம்
5.
மின்னணு வங்கியினை __________ மூலம் செயல்படுத்தலாம்.
கணினிகள்
கைபேசிகள்
ATM அட்டை
மேலே உள்ள அனைத்தும்
6.
மின்னணு தீர்வகச் சேவைகள் பற்றி ஒரு குறிப்பு எழுதுக.
7.
தானியங்கி பணம் வழங்கும் அட்டை (ATM) பற்றி நீவீர் அறிவது யாது?
8.
கடன் அட்டை(credit card) - சிறு குறிப்பு வரைக
9.
கூட்டிணைப்பு வங்கியியல் தீர்வுகள் என்பது பற்றி நீவீர் அறிவது யாது?
10.
தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம் (NEFT) -விளக்குக.
11.
வணிக வங்கிகளின் பலதரப்பட்ட வங்கி சேவைகளைச் சுருக்கமாக விளக்குக.
12.
வணிக வங்கிகளின் பல்வேறு வகையான இரண்டாம் நிலை செயல்பாடுகளை விளக்குக.
13.
வணிக வங்கிகளால் நிகழ்த்தப்படும் பல்வேறு வகையான முதன்மை செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்க.
1.
(a)
வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்
2.
(d)
தொடர் வைப்பு
3.
(b)
எஸ்.பி.ஐ
4.
(c)
2 லட்சம்
5.
(d)
மேலே உள்ள அனைத்தும்
6.
(i) 1995 இல் ரிசர்வ் வங்கியால் மின்னணு தீர்வக சேவைகள் தொடங்கப்பட்டது.இது ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு நிதி பரிமாற்றம் செய்யப்படும்.
(ii) ECS வரவு முறையானது சம்பளம் பங்காதாயம், வட்டி, ஓய்வூதியம் போன்றவற்றை அனுப்புவதற்கு பயன்படுகிறது.
7.
(i) தானியங்கி பணம் வழங்கும் அட்டையைப் பயன்படுத்தி இந்தியாவில் எங்கிருந்தும் எந்தவொரு நேரத்திலும் பணத்தை எடுக்க முடியும்.
(ii) இயந்திரம் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் மீதி இருப்பு தொகையும் காட்டுகின்றன.
8.
(i) வடிக்கையாளர்கள் மற்றும் பிற தகுதியுள்ள நபர்களுக்குக் கடன் அட்டைகளை வங்கிகள் வழக்குகின்றன.
(ii) இந்த அட்டை மூலம் இந்தியாவில் எந்த கடையிலும் பொருள்கள் மற்றும் சேவைகளை முன் பணம் செலுத்தாம் கடனாக வாங்க முடியும்.
9.
(i) CORE என்பது மையப்படுத்தப்பட்ட உண்மை நேர இணையப் பரிமாற்றம் ஆகும்.
(ii) மையப்படுத்தப்பட்ட இணையப் பரிமாற்றம் உள்ள வங்கிகள் அனைத்துக் கணக்குகளின் விபரங்களையும் அனைத்து வங்கிகளின் கிளை விபரங்களையும் கொண்டுள்ளது.
(iii) ஒரு வாடிக்கையாளர் காசோலை மூலம் உலகெங்கிலும் உள்ள வங்கியின் எந்தக் கிளை அலுவலகத்திலும் பணத்தை எடுக்க முடியும்.
(iv) இதே போல் யார் வேண்டுமானாலும் இந்தக் கணக்கில் எந்த கிளையிலும் பணத்தை வைப்பு செய்ய முடியும் .
(v) பரிவர்த்தன நடவடிக்கைகள், உண்மையான நேரத்தில் மையப்படுத்தப்பட்ட இணையப் பரிமாற்றத்தில் பதிவு செய்யப்படுகிறது.
10.
(i) இது 2005 இல் இந்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்டது.இந்த மின்னணு நிதி பரிமாற்றத்தின் கீழ் மொத்த நிதி பரிமாற்ற நேரங்களில் இந்தியா முழுவதும் தீர்க்கப்படுகின்றன.
(ii) NEFT செயல்படுத்தப்பட்ட கிளை வங்கிகளில் கணக்குகளைப் பராமரிக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் NEFT முறையைப் பயன்படுத்தத் தகுதியுடையவையாகும்.
(iii) பரிவர்த்தனைகள் உண்மையான நேர அடிப்படையில் நடைபெறுவது இல்லை.
(iv) ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும், காலை 8.00 மணியிலிருந்து இரவு 7.30 மணி முடிய 23 தீர்வுகள் மட்டுமே ஒரு நாளில் அனுமதிக்கப்படுகின்றன.
(v) NEFT பரிமாற்றங்கள் ஞாற்றுக்கிழமைகளில் மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் அனுமதிக்கப்படுவதில்லை.
11.
முதன்மை செயல்பாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.வைப்புகளை ஏற்றல்,கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல், கடனை உருவாக்குதல்.
வைப்புக்களை ஏற்றல்:
இன்றைய தினம் வங்கிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுகொண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து ஈர்ப்பதற்காகக் கூடுதல் வசதிகளை வைப்புக் கணக்குகளுக்கு வழங்குகின்றன.பெரிய அளவிலான வைப்பு கணக்குகளை கேட்பு வைப்புகள் மற்றும் கால வைப்புகளாக வகைப்படுத்தலாம்.
(i) கேட்பு வைப்புகள்: இந்த வைப்புகள் எந்த நாளிலும் கேட்கும்போது திருப்பி அளிக்கப்பட வேண்டும்.இது சேமிப்பு வைப்புக்கள் மற்றும் நடப்பு வைப்புகளை உள்ளடக்கியது.
(ii) சேமிப்பு வைப்புகள்: பொதுமக்கள் இந்தக் கணக்கில் தங்கள் சேமிப்புகளை வைப்புகள் செய்யலாம்.ஒரு தனிநபரின் பெயரிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் இந்தக் கணக்கினைத் தொடங்கலாம்.
(iii) நடப்பு வைப்புகள்: நடப்பு வைப்பு கணக்கு வணிக நிறுவனங்களுக்கு ஏற்றது.தனிநபர்கள் கூட இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.|
(iv) கால வைப்புகள்: ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் திருப்புச் செலுத்துகின்ற வகையில் உள்ள நிலையான வைப்புகள்,தொடர் வைப்புகள் அடங்கும்.
(v) நிலையான வைப்புகள்: ஒரு தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வட்டிக்கு வைப்பு செய்வதைக் குறிக்கும்.நிலையான வைப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
(vi) தொடர் வைப்புகள்: ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு வருடத்திற்கோ அல்லது இந்து வருடங்களுக்கோ அல்லது ஒப்பு கொள்ளப்பட்ட காலத்திற்கோ வைப்பு செய்வதைக் குறிக்கும்.
கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல் முன் பணம்:
வங்கி மேல் வரைப் பற்று,ரொக்கக் கடன், மாற்றுச் சீட்டுகளை தள்ளுபடி செய்தல்.
கடன்கள்: குறுகிய கால மற்றும் நடுத்தரக் காலக் கடன்களை வணிக வங்கிகள் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்குகின்றது.வீட்டுக் கடன், நுகர்வோர் கடன், வாகனக் கடன், கல்விக் கடன்,நகைக் கடன்,இரண்டாம் நிலை பணிகள், முகமைப் பணிகள்,பொதுப்பயன்பாட்டுப் பணிகள்.
12.
அடிப்படை அல்லது முதன்மை செயல்பாடுகளைத் தவிர வணிக வங்கிகள் பல்வேறு வகையான பிற சேவைகளையும் வழங்குகின்றன.அவை இரண்டாம் நிலை செயல்பாடுகள் எனப்படுகின்றன.இந்தச் சேவைகளைப் பொதுவாக முகமை செயல்பாடுகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு செயல்பாடுகள் என வகைப்படுத்தலாம்.
முகமைகள் பணிகள்:
(i) நிதிப் பரிமாற்றம்: வங்கிகள் கேட்பு வரைவோலைகள் காசோலைகள் பயணிகள் காசோலைகள் போன்றவைகளை வெளியிடுவதுடன் ஒரு இடத்திலிருந்த இன்னொரு இடத்திற்கு நிதிகளை மாற்ற உதவுகிறது.
(ii) காலமுறையில் செலுத்தும் முனைமம் வாடகை முதலியன:
வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் அறிவுறுத்தலின்படி காப்பீட்டு முனைமம் வாடகை தொலைபேசி கட்டணம் போன்றவை.
(iii) காசோலைகள் பெறுதல் மற்றும் செலுத்தல்: வாடிக்கையாளர்களின் சார்பாக வங்கிகள் மற்ற வங்கிகளின் காசோலைகளை வசூலித்து வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கிறது.
(iv) பங்கு சந்தை பரிவர்த்தனைகள் நடத்துதல்: ஒரு டீமேட் மின்னணு கணக்கு வைப்பாளரால் தொடங்கப்பட வேண்டடும்.
(v) வருமான வரிக் கணக்கைத் தயாரித்தல்: வாடிக்கையாளர்களின் சார்பில் வங்கிகள் வருமானக் கணக்கினை ஆண்டு தோறும் தயாரிக்கின்றன.
(vi) அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ஈடுபடுதல்: வாடிக்கையாளர்களின் சார்பில் வங்கிகள் வெளிநாட்டு நாணய மதிப்பை வாங்குதல் மற்றும் விற்றல் பணியை செய்கிறது.
(vii) தொடர்பாளராகச் செயல்படுதல்: வாடிக்கையாளர்களுக்கு தொடர்பாளராக செயல்பட்டு பயணசீட்டு, கடவுச்சீட்டு போன்றவைகளைப் பெறுகிறது.
13.
ஒரு வங்கியின் முதன்மை செயல்பாடுகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
(i) வைப்புகளை ஏற்றல்
(ii) கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல்
(iii) கடனை உருவாக்குதல்
வைப்புகளை ஏற்றல் :
(i) வணிக வங்கிகள் வழங்கும் அடிப்படை வைப்பு கணக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
(ii) இன்றைய தினம் வங்கிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து ஈர்ப்பதற்காகக் கூடுதல் வசதிகளை வைப்புக் கணக்குகளுக்கு வழங்குகின்றன.
கேட்பு வைப்புகள் :
பொதுமக்கள் இந்த கணக்கில் தங்கள் சேமிப்புகளை வைப்புகள் செய்யலாம்.ஒரு நபரின் பெயரிலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களின் இந்த கணக்கினைத் தொடங்கலாம்.
நடப்பு வைப்புகள் :
நடப்பு வைப்பு கணக்கு வணிக நிறுவனங்களுக்கு ஏற்றது.தனிநபர்கள் கூட இந்த கணக்கை தொடங்க முடியும்.
கால வைப்புகள் :
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் திருப்பிச் செலுத்துகின்ற வகையில் உள்ள 1.நிலையான வைப்புகள் 2.தொடர் வைப்புகள் இதில் அடங்கும்.
1.நிலையான வைப்புகள் :
(i) ஒரு தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வட்டிக்கு வைப்பு செய்வதை குறிக்கும்.
(ii) நிலையான வைப்புச் சான்றிதழ் வைப்பாளருக்கு வழங்கப்படுகிறது.
2.தொடர் வைப்புகள் :
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு வருடத்திற்கோ அல்லது ஐந்து வருடங்களுக்கோ அல்லது ஒப்பு கொள்ளப்பட்ட காலத்திற்கோ வைப்பு செய்து வருவதைக் குறிக்கும்
கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல் :
வணிக வங்கிகளின் இரண்டாவது முக்கியச் செயல்பாடு வட்டி வருமானம் பெறுவதற்காகக் கடன் கொடுப்பதாகும்
முன்பணம்,வங்கி மேல் வரைப் பற்று,ரொக்கக் கடன்,மாற்று சீட்டுகளை தள்ளுபடி செய்தல்
கடன்கள் :
(i) வீட்டுக் கடன்
(ii) நுகர்வோர் கடன்
(iii) வாகனக் கடன்
(iv) கல்விக் கடன்
(v) நகைக் கடன்
வங்கி மேல்வரைப் பற்று :
இந்தக் கடன் வசதி பெரும்பாலும் நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வணிக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
ரொக்க கடன் :
இது தொழில் நிறுவனங்கள் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகையான பிணையக் கடன் ஆகும்.சரக்கிருப்பு,மூலப்பொருட்கள்,இதர அசையா சொத்துக்கள் போன்றவற்றை பிணையமாக பெற்று கடன் வழங்கப்படுகிறது.
கடன்கள் :
குறுகிய காலம் மற்றும் நடுத்தரக் கால கடன்களை வணிக வங்கிகள் தகுதி வாய்ந்த பிணையங்களைப் பெற்றுக் கொண்டு தொழில் நிறுவனங்களுக்கு வழங்குகின்றது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards