11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
மறைமுக வரிகள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்?
ஏப்ரல் 1,2017
சனவரி 1,2017
சூலை 1,2017
மார்ச்சு 1,2017
2.
IGST என்பது
ஒருங்கிணைந்து மற்றும் சேவை வரி
இந்திய சரக்கு மற்றும் சேவை வரி
ஆரம்ப சரக்கு மற்றும் சேவை வரி
மேற்கூறிய அனைத்தும்
3.
4.
GST யின் விரிவாக்கம்
சரக்கு மற்றும் அளிப்பு வரி
அரசு விற்பனை வரி
சரக்கு மற்றும் சேவை வரி
பொது விற்பனை வரி
5.
சரக்கு மற்றும் சேவை வரி குழுமத்தின் தலைவர் யார்?
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர்
நிதி அமைச்சர்
பிரதம மந்திரி
இந்திய குடியரசு தலைவர்
6.
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன?
7.
மாநில சரக்கு மற்றும் சேவை வரி பற்றிக் குறிப்பு வரைக.
8.
மறைமுக வரியின் பொருள் தருக.
9.
சரக்கு மற்றும் சேவை வரியின் குறைபாடுகள் மூன்றினை எழுதுக.
10.
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியை உதாரணத்துடன் விளக்குக.
11.
சரக்கு மற்றும் சேவை வரி குழுமத்தின் பணிகளை விளக்குக.
12.
சரக்கு மற்றும் சேவை வரியின் வகைகளை விளக்குக.
13.
நேரடி வரியையும் மறைமுக வரியையும் வேறுபடுத்துக
1.
(d)
மார்ச்சு 1,2017
2.
(a)
ஒருங்கிணைந்து மற்றும் சேவை வரி
3.
(b)
4.
(c)
சரக்கு மற்றும் சேவை வரி
5.
(b)
நிதி அமைச்சர்
6.
மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் 2017ன் கீழ் ஒரு மாநிலத்திற்குள்ளே அளிக்கபப்டும் சரக்குகள் மீது மத்திய அரசால் சுமத்தப்பட்டு வசூலிக்கப்படும் வரியாகும்.
7.
மாநில சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் (தமிழ்நாடு) 2017-ன் கீழ் மாநில அரசால் சுமர்த்தப்பட்டு வசூலிக்கப்படும் வரியாகும்.
8.
சரக்குகள் மற்றும் சேவைகளின் மீது வரிவிதிக்கப்பட்டு விற்பனையனரால் வாங்குபவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு பின்னர் அரசுக்கு செலுத்தப்படும் வரியே மறைமுக வரி என அழைக்கப்படுகிறது.
9.
(i) பல்வேறு பொருளாதார நிபுணர்கள் GST இந்தியாவில் நிலைச் சொத்து சந்தையில் எதிர்மறை தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என சொல்லுகின்றனர்.
(ii) மற்றொரு திறனாய்வு CGST, SGST என்பது மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் மத்திய விற்பனை வரிகள் போன்றவற்றின் மற்றொரு பெயர் என கூறுகிறது.
(iii) சில்லறை பொருள்கள் மீது தற்பொழுது 4% வரி மட்டும் சமுத்தப்படுகிறது. இதனால், GST க்கு பின்பு ஜவுளி பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.
(iv) வான் பயணித்தை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வான் பயண கட்டணங்கள் மீதான சேவை வரி 6 முதல் 9% சதவீதமாக உள்ளது. தற்பொழுது GSTன் காரணத்தால் இக்கட்டணம் இரண்டு மடங்காக உள்ளது.
(v) GST ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் இடம் பெயர்தல் இடர்பாடுகளை கொண்டுள்ளது.
10.
சரக்கு மற்றும் சேவை வரி(GST) பொருள்:
(i) சரக்கு மற்றும் சேவை வரி என்பது சரக்கு மற்றும் சேவைகள் நகரும்போது விதிக்கபப்டும் வரி ஆகும். இது ஒரு சேருமிடம் சார்ந்து நுகர்வு வரி மற்றும் அழிப்பு சங்கிலியின் ஒவ்வொரு படி நிலையிலும் காட்டப்பட்ட மதிப்பின் மீது வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாளர் எங்கு உற்பத்தி செய்தாலும் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த தேவையில்லை. சரக்கு மற்றும் சேவை வரி, எரி சாராயம் மற்றும் குறிப்பிட்ட எரி பொருட்கள் தவிர மற்ற எல்லா பொருட்களுக்கும் மற்றும் சேவைகளுக்கு பொருந்தும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நான்கு விதமான வரி வீதங்களை முன் மொழிந்துள்ளது. அதாவது 5%, 12%, 18% மற்றும் 28%.
(ii) ஒரு மாநில எல்லைக்குள் ரூபாய் இருப்பது இலட்சத்திற்கு குறைவான விற்பனை செய்கின்ற வணிகர்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விளக்கு பெறுகின்றனர். இச்சிறு வணிகர்கள் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பதிவு செய்ய தேவையில்லை.
(iii) ஆனால், மாநிலங்களுக்கு இடையே வியாபாரம் செய்ய வணிகர்கள், விற்பனை ரூபாய் இருப்பது இலட்சத்திற்கு கீழ் இருந்தாலும் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பதிவு செய்து வரி செலுத்த வேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் (8). இமாச்சரல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு மற்றும் சேவை வரி சட்டத்தில் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்படுள்ளன.
11.
சரக்கு மற்றும் சேவை வரி குழுமம்: சரக்கு மற்றும் சேவை வரிக் குழுமம் GSTயை நடைமுறைப்படுத்துவதை மேற்பார்வை செய்யும். ஆனால், GST மற்றும் IGST சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்திடம் உள்ளது. இக்குழுமமானது GST வரி வீதங்களில், GST பகிர்த்தளித்தல், வரி விலக்கு போன்றவற்றிற்கும் பரிந்துரை செய்கிறது. அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மாநில அமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய அரசு 1/3 பங்கு வாக்களிக்கும் உரிமை மாறக மாநில அரசுகள் 2/3 பங்கு வாக்களிக்கும் உரிமையையும் பெற்றுள்ளன. குழுமத்தின் அனைத்து முடிவுகளும் மொத்த வாக்குகளில் 3/4 பங்குகள் இருந்தால் மட்டும் இயற்றப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு வாக்கு பெற்றுள்ளன. GST முழுமம் தவிர, IGST செயலகம் பின்வரும் அலுவலர்களால் தோற்றுவிக்கப்படும்.
(i) GST குழுமத்தின் பதவிகள் செயலராக செயலர் நியமிக்கப்படுவர்.
(ii)மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தின் தலைவர் நிரந்தர அழைப்பாளாராக இருப்பர்.
(iii) GST ன் கூடுதல் செயலர்.
(iv) GST குழுமத்தின் செயலகத்தில் நான்கு ஆணையர்களுக்கான பணிகளும் தோற்றுவிக்கப்படும்.
12.
சரக்கு மற்றும் சேவை வரி ஆனது மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் உள்நாட்டு சரக்கு மற்றும் சேவை வரி என மூன்று வகைப்படும்.
(i) மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST): சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017ன் கீழ் ஒரு மாநிலத்திற்குள்ளே அளிக்கப்படும் சரக்குகள் மீது மத்திய அரசால் சுமத்தப்பட்டு வசூலிக்கப்படும் வரி ஆகும்.
(ii) மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST): (SGST) சட்டம் (தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017) 2017ன் கீழ் மாநில அரசால் சுமத்தப்பட்டு வசூலிக்கப்படும் வரி ஆகும்.
(iii) யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி (UGST): (UGST) சட்டம் 2017-ன் கீழ் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களால் சுமத்தப்பட்டு வசூலிக்கப்படும் வரி ஆகும்.
(iv) ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST): (IGST) சட்டம் 2017ன் கீழ் மத்திய அரசால் சுமத்தப்பட்டு மற்றும் வசூலிக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு இடையே வருவாய் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
(v) ஏற்றுமதி மீதான ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST): சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் அனைத்து ஏற்றுமதிகளும் மாநிலங்களுக்கிடையேயான அளிப்பாக கருதப்படுகிறது. ஏற்றுமதிகள் பூஜ்ஜியம் வீத வரி என்பதால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து சரக்கு மற்றும் சேவைகளின் மீது சரக்கு மற்றும் சேவை வரி சுமத்தப்படுவதில்லை. ஏற்றுமதி மீது செலுத்தப்படும் அனைத்து உள்ளீட்டு வரிகளும் திருப்பிக் கொடுக்கப்படுகிறது.
13.
| அடிப்படை | நேர்முகவரி | மறைமுக வரி |
| பொருள் | நேர்முக வரி என்பது நபரின் வருமானம் மற்றும் சொத்துக்கள் மீது விதிக்கப்பட்டு அரசிடம் நேரடியாக செலுத்தப்படுகிறது. |
மறைமுக வரி என்பது சரக்குகள் மற்றும் சேவைகளை நுகரும் நபர்கள் மீது விதிக்கப்பட்டு அரசிடம் மறைமுகமாக செலுத்தப்படுகிறது. |
| இயல்பு | வளர்வீத வரி | பிற்போக்கு வரி |
| வரி நிலைப்பாடு மற்றும் வரித்தாக்கம் |
ஒரே நபரையே சென்றடைகிறது. | பல்வேறு நபர்கள் மீது விழுகின்றன. |
| வகைகள் | சொத்து வரி, வருமானவரி நிறம வரி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகள் |
மத்திய விற்பனை வரிகள், மதிப்பு கூட்டு வரி, சேவை வரி, உள் நாட்டுவரி சுங்க வரி. |
| ஏய்ப்பு | வரி ஏய்ப்புக்கான வாய்ப்புகள் உண்டு. | வரி ஏய்ப்புக்கான வாய்ப்புகள் குறைவு. |
| பணவீக்கம் | நேர்முக வரி பண வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. | மறைமுக வரி பணவீக்கத்தை ஊக்குவிக்கிறது. |
| விதித்தல் மற்றும் வசூலித்தல் | மதிப்பீட்டிற்குரியவர் மீது சுமத்தப்பட்டு மற்றும் வசூலிக்கப்படுகிறது. |
நுகர்வோர் மீது சுமத்தப்பட்டு மற்றும் வசூலிக்கப்பட்டு ஆனால் மதிப்பீட்டிற்குரியவரால் செலுத்தப்படுகிறது. |
| சுமை | மாற்ற முடியாது. | மாற்ற முடியும் |
| நிகழ்வு | மதிப்பீட்டிற்குரியவரின் வரிக்குரிய வருமானம் மற்றும் செல்வத்தை சார்ந்தது. |
சரக்குகளை கொள் முதல் விற்பனை உற்பத்தி செய்தல் மற்றும் சேவை வழங்குதல் ஆகியவற்று சார்ந்தது. |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards