11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
பன்னாட்டு வணிகம்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
உள் நாட்டிலிருந்து பொருட்கள் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _________ எனப்படும்.
உள்நாட்டு வியாபாரம்
ஏற்றுமதி
அயல் நாட்டு வியாபாரம்
இணைவினை
2.
நாடுகளுக்கிடையே சரக்குகள் மற்றும் சேவைகள் மட்டும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டால் அது _______ எனப்படும்.
பன்னாட்டு வியாபாரம்
பன்னாட்டு வணிகம்
மறு ஏற்றுமதி வியாபாரம்
உள்நாட்டு வியாபாரம்
3.
சரக்கு இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _______ எனப்படும்.
இறக்குமதி
ஏற்றுமதி
மறு ஏற்றுமதி வியாபாரம்
பன்னாட்டு வியாபாரம்
4.
பன்னாட்டு வணிகத்திற்கான இரண்டு காரணங்களைக் கூறுக.
5.
மறு ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன?
6.
இறக்குமதி வியாபாரம் என்றால் என்ன?
7.
பன்னாட்டு வணிகம் என்பதன் பொருள் யாது?
8.
பன்னாட்டு வணிகத்தின் வரையறைகள் யாவை?
9.
மறு ஏற்றுமதி வியாபாரத்தின் தேவை என்ன?
10.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி வணிகத்தின் முக்கியத்துவத்தை விளக்குக.
11.
உள் நாட்டு வணிகத்திற்கும் பன்னாட்டு வணிகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
12.
பன்னாட்டு வணிகத்தின் குறைபாடுகள் யாவை?
1.
(b)
ஏற்றுமதி
2.
(a)
பன்னாட்டு வியாபாரம்
3.
(c)
மறு ஏற்றுமதி வியாபாரம்
4.
(i) உபரியான வளங்களைக் கொண்டுள்ள நாடுகள் அந்த வளங்களை பற்றாக்குறையாக உள்ள நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு பன்னாட்டு வணிகம் அவசியமாகிறது.
(ii) வளர்ந்த நாடுகள் மேம்பட்ட தொழில் நுட்பத்தின் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளை குறைவான விலைக்கு உற்பத்தி செய்கின்றன. வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளினால் அவ்வாறு உற்பத்தி செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக அயல் நாட்டு வணிகம் அவசியமாகிறது.
5.
ஒரு நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தால் அது மறு ஏற்றுமதி வணிகம் எனப்படும். எடுத்துக்காட்டாக இந்திய வியாபார நிறுவனம் ஒன்று, ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து மீண்டும் அதை நேபாள நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது மாரு ஏற்றுமதி வணிகம் ஆகும்.
6.
ஒரு நாட்டினுடைய வியாபார நிறுவனம் சரக்கு மற்றும் சேவைகளை மற்ற நாட்டிலுள்ள வியாபார நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் அதுவே ஏற்றுமதி வியாபாரம் எனப்படும். ஏற்றுமதி வியாபாரம் என்பது உள்நாட்டிலிருந்து சரக்கு மற்றும் சேவைகளை அயல்நாட்டிற்கு விற்பனை செய்வதாகும்.
7.
பன்னாட்டு வணிகம் என்பது நாடுகளின் புவியியல் எல்லைகளை கடந்து நடைபெறும் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் குறிக்கும். இது சரக்கு மற்றும் சேவைகளின் பரிமாற்றம் மட்டுமல்லாமல் மூலதனம், பணியாளர்கள், தொழில்நுட்பம், காப்புரிமை, வணிகக் குறி, அறிவுசார் உரிமை மற்றும் பதிப்புரிமைகளை உள்ளடக்கியது.
8.
பன்னாட்டு வணிகத்தின் குறைபாடுகள் பின்வருமாறு:
(i) பொருளாதார சார்பு
(ii) உள்நாட்டு தொழில்களின் வளர்ச்சி பாதிப்பு
(iii) ஆபத்து விளைவிக்கும் பொருட்களை இறக்குமதி செய்தல்.
(iv) உள்நாட்டில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு.
(v) இயற்கை வளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்.
(vi) அரசியல் சுரண்டல்.
(vii) நாடுகளுக்கிடையே போட்டி.
(vii) கலாச்சார சீரழிவு.
9.
பின்வரும் சூழ்நிலைகளில் மறு ஏற்றுமதி வணிகம் தேவையாகிறது.
(i) ஒரு நாடு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடோடு எந்தவித வணிகத் தொடர்பும் இல்லாதபோது,
(ii) இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தாலும் அல்லது முடிவுப் பொருளாக மாற்ற வேண்டி இருந்தாலும் மற்றும் அந்த வசதிகள் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யும் நாடுகளில் இல்லாமலிருந்தால்,
(iii) இரண்டு நாடுகளிக்கிடையே வணிக ஒப்பந்தங்கள் ஏதும் இல்லாமலிருந்தால், மற்றும்
(iv) ஏற்றுமதியாளருக்கும் மற்றும் இறக்குமதியாளருக்கும் இடையே சரியான பொருளாதார உறவு இல்லாமலிருந்தால்.
10.
(i) வளங்களின் சமனற்ற பகிர்வு: இயற்கை வளங்கள் பல்வேறு நாடுகளிலும் சமனற்ற அளவில் பரவிக்கிடக்கின்றன. இதன் விளைவாக, இயற்கை வளங்களை உபரியாகக் கொண்டுள்ள நாடுகள் தங்கள் நாட்டில் கிடைக்காத பற்றாக்குறையான வளங்களை பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. இயற்கை வளங்களின் இந்த சமச்சீரற்ற பகிர்வால் உலக நாடுகள் பன்னாட்டு வணிகத்தின் மூலம் பொருட்களை பரிமாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
(ii) உற்பத்திக் காரணிகளின் சீரற்ற கிடைப்புத் தன்மை: நிலம், உழைப்பு, முதல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற உற்பத்திக் காரணிகளின் கிடைப்புத்தன்மையும் மற்றும் பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பமும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஒரு நாட்டில் கூடுதலாக உள்ள உற்பத்திக் காரணிகளை மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு பன்னாட்டு வணிகம் அவசியமாகிறது.
(iii) சிறப்புத் தேர்ச்சி: குறிப்பிட்ட நாடுகள் அல்லது அக்குறிப்பிட்ட நாடுகளின் ஒரு சில பகுதிகளில் திறமையான உழைப்பாளிகள், சாதகமான பருவநிலை, இயற்கை வளங்களின் கிடைப்புத் தன்மை மற்றும் தொழில் நுட்ப அறிவு ஆகியவை இயற்கையிலேயே அதிக அளவு பொருட்களையும் சேவைகளையும் தயாரிக்க கூடிய சிறப்புத் தேர்ச்சியைப் பெற்றிருக்கிறது. உதாரணமாக, கோயம்புத்தூர் பருத்தி ஆடைகளுக்கும், திருப்பூர் பின்னலாடைகளுக்கும் சிறப்பு பெற்றிருக்கிறது.
(iv) அடக்க விலை குறைவு: நாடுகளுக்கிடையே நிலவும் சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் புவியியல் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவற்றினால் பொருளின் உற்பத்தி விழி வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக நல்லநிலையில் உள்ள நாடுகள் மற்ற நாடுகளைவிட சிக்கனமாகவும் மற்றும் திறமையாகவும் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இதன் மூலம் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்து மற்ற நாடுகளுக்கு இலாபகரமான விலையில் ஏற்றுமதி செய்கின்றன.
11.
| அடிப்படை | உள்நாட்டு வணிகம் | பன்னாட்டு வணிகம் |
| 1. பொருள் | உள்நாட்டு வணிகம் ஒரு நாட்டின் எல்லைக்குள்ளே நடைபெறும் வியாபார நடவடிக்கையாகும். |
பன்னாட்டு வணிகம் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி நடைபெறும் வியாபார நடவடிக்கை ஆகும். |
| 2. வியாபாரத்தில் பங்கு பெறுவோர் |
ஒரு நாட்டில் உள்ள மக்களும் நிறுவனங்களும் வியாபார நடவடிக்கைகளில்பங்கேற்கின்றனர். |
ஒரு நாட்டின் எல்லையைத் தாண்டி உள்ள மக்களும் நிறுவனங்களும் வியாபார நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர். |
| 3. உற்பத்திக் காரணிகள் இடம் பெயர்தல் |
மூலப் பொருள், உழைப்பு, முதல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற உற்பத்திக் காரணிகள் தடைஇன்றி நாட்டின் எல்லைக்குள் இடம் பெயர முடியும். |
மூலப் பொருள், உழைப்பு, முதல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற உற்பத்திக் காரணிகள் ஒரு நாட்டின் எல்லையைத் தாண்டி இடம் பெயர முடியாது. |
| 4. நுகர்வோரின் தன்மை | உள்நாட்டு வணிகத்தில் கலாச்சாரம், நடத்தை சுவை விருப்பம், சட்டமுறை, பழக்கவழக்கங்கள் ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கும். |
பன்னாட்டு வணிகத்தில் கலாச்சாரம், நடத்தை சுவை விருப்பம், சட்டமுறை, பழக்கவழக்கங்கள் ஆகியவை வேறுபட்டதாக இருக்கும். |
| 5. வியாபார முறை | உள்நாட்டு வணிகத்தை ஒரே நாட்டினுடைய விதிகள், சட்டங்கள், கொள்கைகள், வரிவிதிப்பு முறை ஆகியவை நெறிப்படுத்துகின்றன. |
பன்னாட்டு வணிகத்தை பல நாடுகளின் விதிகள், சட்டங்கள் வரிவிதிப்புகள் மற்றும் அளவு ஆகியவை நெறிப்படுத்துகின்றன. |
| 6. பயன்படுத்தும் நாணயம் | உள் நாட்டு வணிகத்தில் உள்ளூர் நாணய மதிப்பில் வியாபார நடவடிக்கைகள் தீர்க்கப்படுகின்றன. | பன்னாட்டு வணிகத்தில் அயல்நாட்டு நாணய மதிப்பில் வியாபார நடவடிக்கைகள் தீர்க்கப் படுகின்றன. |
| 7. போக்குவரத்து முறை | உள்நாட்டு வணிகத்தில் சாலை மற்றும் இரயில் போக்குவரத்து மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. |
பன்னாட்டு வணிகத்தில் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது. |
| 8. இடர் காப்பின்மை | இடரின் அளவு குறைவு. | இடரின் அளவு அதிகம். |
| 9. சந்தையின் அளவு | நாட்டின் எல்லைக்கு உட்பட்டது. | நாட்டின் எல்லையைத் தாண்டி பரந்த அளவு செல்கிறது. |
| 10. சுங்கத் தீர்வை செலுத்துதல் | சுங்கத் தீர்வையும் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டிய நடைமுறைகளும் மிகவும் குறைவு. |
சுங்கத் தீர்வையும் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டிய நடைமுறைகளும் அதிகமானவை மற்றும் சிக்கலானவை. |
12.
பொருளாதார சார்பு: பன்னாட்டு வணிகத்தில் ஒரு நாடு இறக்குமதிக்காக மற்ற நாடுகளை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் இறக்குமதி செய்யும் நாடு தானாகவே ஏற்றுமதி செய்யும் நாட்டிற்கு அடிமையாகும். சுழல் ஏற்படுகிறது.
(ii) உள்நாட்டு தொழில்களின் வளர்ச்சி பாதிப்பு: பன்னாட்டு வணிகம் உள்நாட்டுத் தொழில்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. அயல் நாட்டு நிறுவனங்கள் உள்நாட்டில் சந்தையைக் கைப்பற்றும் நயவஞ்சக நோக்குடன் தங்கள் பொருட்களை உற்பத்தி விலைக்கும் குறைவாகவே விற்கின்றன. மேலும் கட்டுபாடற்ற இறக்குமதியும் அயல்நாட்டு நிறுவனங்களின் கடுமையான போட்டியும் உள்நாட்டுத் தொழில்களை முற்றிலும் அழிக்கக்கூடும்.
(iii) ஆபத்து விளைவிக்கும் பொருட்களை இறக்குமதி செய்தல்: பன்னாட்டு வணிகம் ஆடம்பரப் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்ய வழிவகுக்கிறது. இது மக்கள் நலனைப் பாதிக்கிறது.
(iv) உள்நாட்டில் அத்தியவாசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு: அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டுவதற்காக அத்தியவாசியப் பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்வதன் மூலம் உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் மக்கள் அப்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
(v) இயற்கை வளங்களை தவறாகப் பயன்படுத்துதல்: அரிய இயற்கை வளங்களை அதிகமாக ஏற்றுமதி செய்வதன் மூலம் அவை வெகு விரைவாக வெறுமையாகி விடுகின்றன. இதனால் ஏற்றுமதி செய்யப்படும் நாட்டில் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படுகிறது.
(vi) அரசியல் சுரண்டல்: பன்னாட்டு வணிகம் உலக நாடுகளிடையே பொருளாதார சார்பு நிலையை உருவாக்குகிறது. இது நாட்டின் அரசியல் சுதந்திரதிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
(vii) நாடுகளிக்கிடையே போட்டி: ஏற்றுமதி செய்வதில் ஏற்படும் நாடுகளுக்கிடையே போட்டியாக உருவெடுக்கிறது. இது நாடுகளுக்கிடையே சச்சரவுகளை உருவாக்கி போர் ஏற்படக்கூடிய சூழலை ஏற்படுத்துகிறது.
(viii)கலாச்சார சீரழிவு: பன்னாட்டு வணிகம் நாட்டின் கலாச்சார சீரழிவிற்கு காரணமாக அமைகிறது. இளைய தலைமுறையினர் அன்னிய நாட்டு மோகத்தில் தங்கள் வாங்கும் சக்தியையும் மீறி தங்களை சமுதாயத்தில் மேம்பட்டவரகளாக காட்ட முற்படுகின்றனர். இது பழமையான வாழ்வியல் முறையை அழிக்கிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards