11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
ஒப்பந்த நிறைவேற்றம்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
மூன்றாம் நபர் என்று யாரை கூறுகின்றோம்?
வாக்குறுதி அளிப்பவர்
வாக்குறுதி பெறுபவர்
முகவர்
சட்டரீதியான பிரதிநிதி
2.
இவர்களில் யார் வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் கோர முடியாது?
வாக்குறுதி பெறுபவர்
கூட்டு வாக்குறுதி அளித்தவர்கள்
ஒரு வாக்குறுதி பெறுபவர் மரணத்தின் போது, அவரது சட்ட பிரதிநிதி
ஒப்பந்தத்திற்கு மூன்றாம் நபர்
3.
4.
5.
செல்லத்தக்க நிறைவேற்றம் ஒப்பந்த நபர்கள் தங்களுடைய கடமையை செய்வது, அந்த ஒப்பந்தம்
ஒப்பந்த நிறைவேற்றம்
நடைமுறைப்படுத்தப்படும்
செல்லாதது
இவை எதுவும் இல்லை
6.
ஒப்பந்தத்தை யார் நிறைவேற்ற வேண்டும்?
7.
முகவர் என்பவர் யார்?
8.
சட்டரீதியான பிரதிநிதி என்பவர் யார்?
9.
கூட்டு வாக்குறுதி அளித்தவர் என்பவர் யார்?
10.
இருதரப்பு வாக்குறுதி பற்றிக் கூறுக.
11.
ஒப்பந்தத்தை யார் நிறைவேற்றலாம்?
12.
செலுத்துதல்களை ஒதுக்கி வைத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் கூறு.
13.
நிறைவேற்றதின் நேரமும்,காலமும் பற்றிய விதிகளை விளக்குக.
1.
(c)
முகவர்
2.
(d)
ஒப்பந்தத்திற்கு மூன்றாம் நபர்
3.
(b)
4.
(d)
5.
(a)
ஒப்பந்த நிறைவேற்றம்
6.
ஒப்பந்தத்தை பின் வருபவர்களின் எவரேனும் ஒருவர் நிறைவேற்றுவர்:
(i) வாக்குறுதி அளித்தவர்
(ii) முகவர்
(iii) சட்டரீதியான பிரதிநிதி.
7.
வாக்குறுதி அளித்தவரின் தனிப்பட்ட ஆற்றலை நம்பி ஒப்பந்தம் உருவாக்கபபடவில்லை எனில், அத்தகைய ஒப்பந்தத்தில் வாக்குறுதி அளித்தவரின் முகவரும் நிறைவேற்றலாம்.
8.
தனிப்பட்ட ஆற்றல் சார்ந்த ஒப்பந்தங்களில் வாக்குறுதி அளித்தார்.ஒப்பந்தத்தை தனிப்பட்ட முறையில் நிறைவேற்ற வேண்டும்.இந்நிலையில் வாக்குறுதி அளித்தவர் இறந்து விட்டால், அந்த ஒப்பந்தம் முடிவடைகிறது.ஆயினும் தனிப்பட்ட ஆற்றலை நம்பி இல்லாத ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை, வாக்குறுதி அளித்தவரின் சட்ட ரீதியான வாரிசுதாரர் அவரது மறைவிற்குப் பிறகு நிறைவேற்றலாம்.
9.
(i) கூட்டு பொறுப்புகளின் ஒப்படைப்பு (பிரிவு 42):
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூட்டாக வாக்குறுதிகளை அளித்திருந்தால் , அனைவருமே இணைந்து நிறைவேற்ற வேண்டும்.ஏதேனும் ஒரு கூட்டு வாக்குறுதி அளித்தவர் இறந்துவிட்டால் , அவரது வாரிசுதாரரும் பிற உயிருள்ள கூட்டு வாக்குறுதி அளித்தவரும் சேர்ந்து ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்.எல்லா வாக்குறுதி அளித்தவர் இறந்துவிட்டால், ஒவ்வொருவருடைய வாரிசுதாரரும் சேர்ந்து வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
(ii) கூட்டு உரிமைகளின் ஒப்படைப்பு (பிரிவு 45):
பல நபர்கள் கூட்டாக ஒரு நபரிடமிருந்து வாக்குறுதி ஒன்றைப் பெறும் பொழுது, அனைவருமே இணைந்து அவ்வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரும் உரிமை உண்டு.ஏதேனும் ஒரு கூட்டு வாக்குறுதி பெற்றவர் இறந்துவிட்டால் அவரது வாரிசுதாரரும் பிற உயிருள்ள கூட்டு வாக்குறுதி இறந்துவிட்டால் அவரது வாரிசுதாரரும் பிற உயிருள்ள கூட்டு வாக்குறுதி பெற்றவரும் சேர்ந்து ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரலாம்.கூட்டாக வாக்குறுதி பெற்ற அனைவரும் இறந்துவிட்டால், ஒவ்வொருவருடைய வாரிசுதாரரும் சேர்ந்து வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கோரலாம்.
10.
ஒரு நபர் தமது வாக்குறுதியை மற்றவரின் வாக்குறுதிக்கு மனுபயனாக அளிக்கும் பொழுது அவ்விரு வாக்குறுதிகளும் இருதரப்பு வாக்குறுதிகள் என அழைக்கப்படுகின்றன.(எ.கா) X என்பவர் தனது வீட்டை ரூ.50,00,000 க்கு Y என்பவருக்கு விற்பனை செய்வதாக வாக்களிக்கிறார்.இதில் வாக்குறுதிகள் பரஸ்பரமாக உள்ளன.X வீட்டை ரூ 50,00,000 க்கு Y என்பவருக்கு வழங்குவதாக வாக்குறுதியை அளிக்கிறார்.அதே போல் Y என்பவர் ரூ 50,00,000 பணத்தை கொடுத்து வீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான உறுதிமொழி அளிக்கிறார்.
(i) இருதரப்பு வாக்குறுதிகளின் வகைகள் :
இருதரப்பு மற்றும் தன்னிசையான வாக்குறுதி ஒவ்வொருவரும் மற்றவர் அவருடனுய வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரா என காத்திராமல் அவரவர் தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.இந்த வாக்குறுதி இருதரப்பு மற்றும் தன்னிசையான வாக்குறுதி எனப்படுகின்றது.எடுத்துக்காட்டாக X என்பவர் ஜூன் 10 அன்று அரிசி வழங்குவதற்கு உண்டான பணத்தை வழங்குவதற்கு y ஒப்பிக்கொள்கிறார்.அதே போல Y என்பவர் ஜூனர் 18ம் தேதி அரிசி வழங்க சம்மதித்தார்.
(ii) இருதரப்பு மற்றும் சார்ந்திருக்கின்ற வாக்குறுதிகள்: இவ்வித வாக்குறுதிகளில் ஒரு நபரின் நிறைவேற்றம் ,மற்றவர் தம்முடைய வாக்குறுதியை முன் கூட்டியே நிறைவேற்றுவதை பொறுத்து அமைகின்றது.இது பரஸ்பரமான மற்றும் சார்ந்திருக்கின்ற வாக்குறுதிகள் எனப்படும்.உதாரணமாக A என்பவர் கட்டிடம் கட்ட B என்பவரிடம் ஒப்புக்கொள்கிறார்.அதே போல B என்பவர் கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்ட் வழங்க A யிடம் ஒப்புக்கொள்கிறார்.அதே போல B என்பவர் கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்ட் வழங்க A யிடம் ஒப்புக்கொள்கிறார்.எனவே A வாக்குறுதி B வாக்குறுதியை நிறைவேற்றுவதை பொறுத்தது.
(iii) இருதரப்பு மற்றும் ஒரே சமயத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள்: இரண்டு வாக்குறுதிகளும் ஒரே சமயத்தில் நிறைவேற்றப்படும் பொழுது, அவை பரஸ்பர மற்றும் ஒரே சமயத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள் கூறப்படும்.
11.
(i) வாக்குறுதி அளித்தவரால்(Promisor himself) (பிரிவு 40): ஒப்பந்தம் வாக்குறுதி அளித்தவராலோ அல்லது அவருடைய சட்டரீதியான பிரதிநிதியாலோ அல்லது அவரால் பணியமர்த்தபட்ட தகுதியுடைய ஏதேனும் வேறு நபராலோ நிறைவேற்றப்பட வேண்டும்.தனிப்பட்ட ஆற்றல் சார்ந்த ஒப்பந்தங்களில் அவை வாக்குறுதி அளித்தவராலேயே நிறைவேற்றப்பட வேண்டும்.எடுத்துக்காட்டு - X என்பவர் ஓவியம் ஒன்றை வரைந்து தருவதாக Y என்பவருக்கு வாக்குறுதி அளிக்கிறார்.X இவ்வாக்குறுதியை தானே நிறைவேற்ற வேண்டும்.ஏனெனில்,இதில் X என்பவரின் தனிப்பட்ட ஆற்றல் அடங்கியுள்ளது.
(ii) முகவரி (பிரிவு 40): வாக்குறுதி அளித்தவரின் தனிப்பட்ட ஆற்றலை நம்பி ஒப்பந்தம் உருவாக்கப்படவில்லையெனில் அத்தகைய ஒப்பந்தத்தில் வாக்குறுதி அளித்தவரின் முகவரும் நிறைவேற்றலாம் .
(iii) சட்டரீதியான பிரிதிநிதி : தனிப்பட்ட ஆற்றல் சார்ந்த ஒப்பந்தங்களில் வாக்குறுதி அளித்தவர் ஒப்பந்தத்தைத் தனிப்பட்ட முறையில் நிறைவேற்ற வேண்டும்.அந்நிலையில் வாக்குறுதி அளித்தவர் இறந்துவிட்டால் அந்த ஒப்பந்தம் முடிவடைகிறது.ஆயினும் தனிப்பட்ட ஆற்றலை நம்பி இல்லாத ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை, வாக்குறுதி அளித்தவரின் சட்ட ரீதியான வாரிசுதாரர் அவரது மறைவிற்குப் பிறகு நிறைவேற்றலாம். உதாரணம் M என்பவர் தனது மகிழ்வுந்தை ஒரு வாரம் கழித்து ரூ.1,00,000 க்கு N என்பவருக்கு விற்க உறுதியளிக்கிறார்.ஆனால் ஒப்பந்தத்தின் 5 நாட்களுக்கு பிறகு M இறந்து விடுகிறார் எனினும் M என்பவரின் சட்டரீதியான பிரிதிநிதிக்கு இதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்.M-ன் பிரதிநிதிக்கு ரூ.1,00,000 செலுத்தி N என்பவர் மகிழ்வுந்தை பெற்றுக் கொள்ளலாம்.
(iv) மூன்றாவது நபர் : வாக்குறுதி பெறுபவர் மூன்றாம் தரப்பினர் ஒப்பந்தம் நிறைவேற்றுவதை ஒப்புக்கொண்டால், வாக்குறுதி அளித்தவரே அதனை நிறைவேற்ற வேண்டும் என வற்புறுத்த இயலாது.
12.
(i) செலுத்தல் (Appropriation of payments)(பிரிவு 59-6) : கடனாளி ஒருவர் மற்றவரிடமிருந்து பல்வேறு கடன்களைப் பெற்றிருந்தது, அக்கடன்கள் முழுவதையும் தீர்க்கப் போதுமான அளவை விடக் குறைந்த ஓர் தொகையை செலுத்தும் பொழுது, அத்தொகையை அவருடைய எந்தக் கடனைத் தீர்க்கப் பயன்படுத்த வேண்டும் என ஓர் பிரச்சனை ஏற்படுகின்றது. கடனாளி ஒருவர் ஒரு கடனீந்தோரிடம் பல தனித் தனித் கடன்களைச் செலுத்த வேண்டிய நிலையில், அனுப்பிய தொகை அனைத்துக் கடன்களையும் தீர்ப்பதற்கு போதுமானதாக இல்லையெனில் குறிப்பிட்ட ஒரு கடனுக்கு அத்தொகையைப் பயன்படுத்தல் செலுத்தல் பகிர்வு என்று பெயர். செலுத்தல்களை ஒதுக்கி வைத்தல் தொடர்பான விதிகள் 59 முதல் 61 வரையிலான சட்ட பிரிவுகளில் சொல்லப்பட்டுள்ளன. அவை:
(ii) தீர்க்கப்பட வேண்டிய கடன் சுட்டிக் கட்டப்பட்டிருக்கும் பொழுது: குறிப்பிட்ட கடனைத் தீர்க்க தான் அனுப்பும் தொகையைப் பயன்படுத்துமாறு கடனாளி வேண்டுகோள் விடுக்க முடியும். அத்தொகை கடன் அளித்தவர்
ஏற்றுக்கொண்டால், அவர் அவ்வாறே அக்கடனைத் தீர்க்க பயன்படுத்த வேண்டும். உதாரணமாக X என்பவர் ரூ.20,000, ரூ.30,000 மற்றும் ரூ.50,000 என ய என்பரிடம் மூன்று விதமான கடன்களைப் பெற்றுள்ளார். X என்பவர் ரூ. 50,000 y க்கு அனுப்புகிறார். X மூன்றாம் கடனுக்கு எதிராக பணம் செலுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. மூன்றாவது கடனுக்கு எதிராக மட்டுமே கடனை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
(iii) தீர்க்கப்பட வேண்டிய கடன் சுட்டிக் காட்டாத பொழுது கடன் அளித்தவரின் விருப்பத்திற்கு ஏற்ப அத்தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணம் P என்பவர் Q என்பவரிடம் பல கடன்களை பெற்றுள்ளார் இருப்பினும், P பெற்ற கடன்களில் ஒன்றான ரூ.10,000 அடைக்குமாறு Q என்பவர் கேட்கும் பொழுதும், P என்பவர் கோரிய பணத்தை செலுத்துகிறார்.
(iv) கடனாளி சுட்டிக் காட்டவும், கடனளித்தவர் ஒதுக்கீடு செய்யும் தவறும் பொழுது (61): ஒப்பந்த நபர்கள் எக்கடனுக்கு என ஒதுக்கீடு செய்யவில்லை எனில், கால வரிசைப்படி முதன்முதலில் பெறப்பட்ட கடனைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும். ஒரு வேளை, கடன் அனைத்தும் ஒரே நிலையில் இருப்பின், விகிதாச்சார அடிப்படையில் அவை தீர்க்கப்படும்.
13.
வாக்குறுதி நிறைவேற்றத்தின் நேரமும் மற்றும் இடமும் (பிரிவு 46 முதல் 50): ஒப்பந்தக்காரர்களுக்கு இடையேயான உடன்படிக்கையைப் பொறுத்து ஒப்பந்தத்திறனுடைய நிறைவேற்றத்தின் நேரமும் அமைகின்றன.
எடுத்துக்காட்டு : A என்பவர் C என்பவருக்கு 10,000 தருவதாக B என்பவரிடம் வாக்குறுதி அளிக்கிறார்.ஆனால் A என்பவர் C க்கு அத்தொகையை அளிக்க தவறி விட்டார்.இதற்கு அத்தொகையை அளிக்குமாறு கோர வேண்டியவர் Bயே அன்றி C அல்ல சாதாரணமாக மூன்றாம் நபர் ஒருவரின் பயனுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பினும், அம்மூன்றாம் நபர் ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு கோரமுடியாது.ஆனால் சில சூழ்நிலைகளில் ஒப்பந்தத்திற்கு அயலார் கூட அதனை நிறைவேற்றக் கோரும் உரிமையைப் பெறுகிறார்.வாக்குறுதி வழங்குபவர் இறந்து விட்டால் ஒப்பந்ததை நிறைவேற்ற அவரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியிடம் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரலாம்.ஒரு ஒப்பந்தத்தின் நிறைவேற்றத்தின் நேரம், இடம் மற்றும் விதம் பற்றிய சட்ட விதிகள் ஆகியவை ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.இது தொடர்பாக ஒப்பந்த சட்டத்தில் 46 முதல் 50 வரை பல்வேறு சட்ட விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.இது தொடர்பான சட்ட விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(i) நேரம் நிர்ணயிக்கப்படாமை (பிரிவு 46): நிறைவேற்றிவதற்குரிய நேரம் நிர்ணயிக்கப்படவில்லை எனில், ஒரு வாக்குறுதி அளித்தவர் ஒரு நியாயமான காலத்திற்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்.நியாயமான காலம் எது என்பது ஒப்பந்தத்தையும் அல்லது ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்களின் எண்ணம் ஆகியவற்றை பொறுத்து அமையும்.
(ii) நிறைவேற்றுக்குரிய காலமும் இடமும் குறிப்பிட்டப்பட்டிருந்தால் (பிரிவு 47): சில சமயங்களில், நிறைவேற்றுவதற்குரிய காலமும் இடமும் குறிக்கப்பட்டிருந்தும் , வாக்குறுதி பெற்றவர் அதை நிறைவேற்றுமாறு கேட்காமல் இருக்கின்றார்.இவ்வித சமயங்களில் வாக்குறுதி அளிப்பவர் தனது வாக்குறுதியை குறிப்பிட்ட நாளில், வணிக நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
(iii) ஒரு குறிப்பிட்ட நாளில் நிறைவேற்றம் (பிரிவு 48): ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கான நாள் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் வாக்குறுதி பெறுபவர் கேட்கும் பொழுது தான் வாக்குறுதி அளிப்பவர் தனது வாக்குறுதியை செய்து முடிக்க வேண்டும்.
(iv) இடம் குறிப்பிடாமலும், விண்ணப்பிக்காமல் இருக்கும்போது (பிரிவு 49): சில சமயங்களில், ஒப்பந்தத்தில் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டிய இடம் குறிப்பிடப்பட்டிருக்காது.மேலும் வாக்குறுதியும்,வாக்குறுதி பெற்றவரின் விண்ணப்பம் இன்றி நிறைவேற்றப்படக் கூடியதாக இருக்கும் .இவ்வித சமயங்களில், வாக்குறுதியை அளித்தவர் வாக்குறுதியை பெற்றவரிடம், நிறைவேற்றம் எங்கு செய்யப்பட வேண்டும் என்று கேட்டு, அவர் நியமித்த இடத்தில் அதை நிறைவேற்ற வேண்டும்.(எ.கா: A என்பவர் B என்பவருக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நாளில் 1,000 கிலோஅரிசியை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறார். B என்பவர் அதை பெறுவதற்கான ஒரு குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்த இடத்தில் அரிசியை வழங்க வேண்டும்.)
(v) நிறைவேற்றும் விதம் மற்றும் காலம் (பிரிவு 50):
வாக்குறுதி பெற்றவர், வாக்குறுதி நிறைவேற்றும் விதமும் மற்றும் காலமும் நிர்ணயித்து பிறகு அதன்படி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும்.(எ.கா) A என்பவரும் B என்பவரும் பரஸ்பரம் ஒருவர் மற்றொருவருக்கு கடன் பட்டுள்ளனர்.அதாவது A என்பவர் B யிடம் ரூ 1,000 கடன் வாங்கியுள்ளார்.அதுபோல B என்பவர் A யிடம் ரூ 1,500 கடன் வாங்கியுள்ளார்.B தாம் அதிகமாக பெற்ற ரூ 500 ஐ A க்கு அளித்துவிட்டார்.இதோடு A க்கும் B க்கும் இடையே உள்ள கணக்கு விடுகின்றது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards