11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
11th Commerce - Public Model Question Paper 2019 - 2020
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
கட்டிடங்கள், பாலங்கள் அணைகள் கட்டத் தேவையான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ________ என்று பெயர்
கட்டுமானத் தொழில்கள்
தயாரிப்புத் தொழில்கள்
உற்பத்தித் தொழில்கள்
சேவைத் தொழில்கள்
2.
கீழ்க்கண்டவற்றில் எது உலக வங்கியின் கூட்டு நிறுவனம் அல்ல?
பன்னாட்டு வளர்ச்சி சங்கம்
உலக வர்த்தக அமைப்பு
சர்வதேச நிதி நிறுவனம்
பன்னாட்டு முதலீட்டு உத்திரவாத நிறுவனம்
3.
கூட்டாண்மையில் வங்கித் தொழில் அல்லாத மற்ற தொழிலும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை.
2
10
20
15
4.
இந்தியாவில் மேலும் 6 வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு
1939
1935
1949
1980
5.
நிலப் போக்குவரத்தில் அல்லாத ஒன்று
பொதி விலக்கு
டிராம் வண்டிகள்
மாட்டு வண்டிகள்
டிராம் வண்டிகள்
6.
நிரந்தர இடமின்றி வெவ்வெறு இடங்களுக்கு சென்று குறைந்த விலையுள்ள பொருட்களை வியாபாரம் செய்வோரை ______ என்பர்.
மடங்கு கடைகள்
முகவர்கள்
தெருக்கடை வியாபாரிகள்
சுற்றாடும் வியாபாரிகள்
7.
பன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன
கிளைகள்
அதன் துணை நிறுவனங்கள்
தலைமையகம்
நாடாளுமன்றம்
8.
எந்த ஒரு வகையான சேவைகள் வணிக வங்கியால் வழங்கப்படுவது இல்லை.
வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்
வங்கி மேல்வரைப்பற்று
ரொக்கக் கடன்
உண்டியல்களைத் தள்ளுபடி செய்தல்
9.
நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது
இங்கிலாந்து
அமெரிக்கா
சுவிஸ்
இந்தியா
10.
உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது
கிராம சேமிப்பு
வணிகச் சேமிப்பு
தொழிற்துறை வளர்ச்சி
விவசாய வளர்ச்சி
11.
12.
இந்திய மைய வங்கி என்பது யாது?
பி.என்.பி
எஸ்.பி.ஐ
ஐ.சி.ஐ.சி.ஐ
ஆர்.பி.ஐ
13.
உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது
அத்தியாவசியப் பொருட்களையும் சேவைகளையும் சிக்கன விலையில் வழங்குவது
தேசிய வருமானத்தை உயர்த்துவது
அனைத்து பொருட்களையும் கிடைக்கச்செய்தல்
14.
நாடுகளுக்கிடையே சரக்கு சேவை, அறிவுசார் உரிமைகள், தொழில் நுட்பம், மற்றும் மனித உழைப்பு ஆகியவை இடம்பெயருவது
பன்னாட்டு வியாபாரம்
பன்னாட்டு வணிகம்
மறு ஏற்றுமதி வியாபாரம்
உள் நாட்டு வியாபாரம்
15.
வருமானம் ஈட்டப்பட்ட ஆண்டு என்பது
கணக்கீட்டு ஆண்டு
முந்தைய ஆண்டு
ஒளி ஆண்டு
நாட்காட்டி ஆண்டு
16.
சுய உதவிக் குழுக்கள் தங்கள் சேமிப்புத் தொகையைவசூலித்து ______ ஏற்படுத்த வேண்டும்
பொது நிதி
குழு தொகுப்பு நிதி
குழு நிதி
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
17.
நிலைசொத்துக்களை வாங்க ______ ஐ பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.
கடனீந்தோர்
நீண்ட கால கடன்கள்
வங்கி மேல்வரைபற்று
உண்டியலை வட்டம் செய்தல்
18.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது
கூட்டூப் பங்கு நீறுமம்
தனியாள் வணிகம்
அரசு நீறும்ம்
கூட்டூறவு
19.
பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆவணம்
தனியார்
குளிர் சேமிப்பு
கூட்டுறவு
20.
இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது
போக்குவரத்து
பண்டகசாலை
விற்பனையாளர்
காப்பிடூ
21.
பன்னாட்டு வணிகத்தின் வகைகளை கூறுக.
22.
ஆலம்பறை பற்றி கூறுக
23.
அமெரிக்க வைப்பு இரசீதுஎன்றால் என்ன?
24.
வங்கி மூலதனத்தின் உள்ளடக்கம் யாது?
25.
மதிப்பீடு செய்யப்படும் நபர் என்பவர் யார்?
26.
பல்வேறு வகையான பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
27.
கூட்டாண்மைக் கலைப்பு எத்தனை வகைப்படும்?
28.
புற ஒப்படைப்பின் தேவைகள் என்ன?
29.
குறியீடு என்பதன் பொருள் என்ன?
30.
தொழில் என்றால் என்ன?
31.
உலக வங்கியின் நோக்கங்கள் (Objectives of World Bank) யாவை?
32.
மாற்றுச் சீட்டு தள்ளுபடி செய்தல் என்றால் என்ன?
33.
வணிக நடவடிக்கைகள் பண்டைய காலத்திலிருந்து தற்போது வரை எவ்வாறு உருமாறி வந்துள்ளது?
34.
வாடகை கொள்முதல் முறைக்கும் தவணை விற்பனை முறைக்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.
35.
மின்னணு வங்கியியல் என்றால் என்ன?
36.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் யாவை?
37.
தனியாள் வணிகத்தின் மூன்று பண்புகளை விவரி
38.
கூட்டு வாக்குறுதி அளித்தவர் என்பவர் யார்?
39.
காப்பீட்டின் வரைவிலக்கணம் தருக.
40.
மனிதச் செயல்பாடுகள் என்றால் என்ன?
41.
ஏற்றுமதி வணிகத்தின் முக்கிய இடைநிலையர்கள் பற்றி எழுதுக.
42.
இந்திய ரிசர்வ் வங்கியின் மேம்பாட்டு பணிகள் யாவை?
43.
அந்நிய செலாவணி மாற்று பத்திரத்தின் ஏதேனும் 5 சிறப்புக்கூறுகளை விவரி
44.
மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மட்டும் சேவை வரிகளை வேறுபடுத்துக.
45.
46.
தகவலறிக்கை என்றால் என்ன?
47.
நேரடி மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக.
48.
துறைவாரி நிறுவனங்களின் நன்மைகள் விவரி.
49.
குறு சிறு மற்றும் நடூத்தர தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை விளக்குக
50.
ஒப்பந்த விடுவிப்பு வழிகளை விளக்குக.
51.
தொழில் நெறிமுறையின் குறியீடு பற்றி விவரிக்கவும்.
52.
உற்பத்தித் தொழில் வணிகம் மற்றும் வியாபாரம் ஓர் ஒப்பிடூ செய்க
53.
சமூகப் பொறுப்புணர்வின் தேவைகள் விளக்குக?
54.
போக்குவரத்தின் பல்வேறு வகைகளை விவரிக்க.
1.
(a)
கட்டுமானத் தொழில்கள்
2.
(b)
உலக வர்த்தக அமைப்பு
3.
(c)
20
4.
(d)
1980
5.
(d)
டிராம் வண்டிகள்
6.
(d)
சுற்றாடும் வியாபாரிகள்
7.
(c)
தலைமையகம்
8.
(a)
வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்
9.
(a)
இங்கிலாந்து
10.
(a)
கிராம சேமிப்பு
11.
(b)
12.
(d)
ஆர்.பி.ஐ
13.
(b)
அத்தியாவசியப் பொருட்களையும் சேவைகளையும் சிக்கன விலையில் வழங்குவது
14.
(b)
பன்னாட்டு வணிகம்
15.
(b)
முந்தைய ஆண்டு
16.
(b)
குழு தொகுப்பு நிதி
17.
(b)
நீண்ட கால கடன்கள்
18.
(b)
தனியாள் வணிகம்
19.
(c)
குளிர் சேமிப்பு
20.
(a)
போக்குவரத்து
21.
பன்னாட்டு வணிகத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன:
(i) ஏற்றுமதி வியாபாரம்
(ii) இறக்குமதி வியாபாரம்
(iii) மறு ஏற்றுமதி வியாபாரம்
22.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தெற்கே 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முக்கியத்துவம்: இது வர்த்தகத்திற்குரிய ஒரு வளமான இடமாக இருந்தது.
23.
அமெரிக்க வைப்பு ரசீது என்பது, அமெரிக்காவைச் சார்ந்த ஒரு நிறுமம், அமெரிக்க நிதிச் சந்தையில் கலந்து கொள்ளும் பொருட்டு அமெரிக்க குடிமக்கள் அந்நியப் பிணையங்களில் முதலீடு செய்யும் வகையிலும், டாலரில் மதிப்பிடப்பட்டிருக்கும் மாற்றத்தக்க பிணையமாகும்.
24.
அந்நியச் செலாவணியைக் கையாள அதிகாரம் கொண்டு வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளின் வெளிப்புற நிதி சார்ந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அளவு வங்கி மூலதனத்தில் அடங்குகிறது.
25.
சட்டத்தின் கீழ் யாரால் வருமான வரி அல்லது ஏதேனும் பிறப் பணத்தொகை செலுத்தப்பட தக்கதாக உள்ளதோ அந்நபர் மதிப்பீடிற்குரியவர் ஆவார். மேலும் தன்னுடைய வருமானம் அல்லது நட்டம் அல்லது தனக்கு வரவேண்டிய பாக்கிதொகை ஆகியவற்றிற்காக வருமானவரி சட்டத்தின் கீழ் வருமானவரி மதிப்பீட்டு நடவடிக்கைக்கு உட்பட்ட ஒவ்வொரு நபரும் மதிப்பீட்ற்குரியவர் என்ற சொல்லில் அடங்குவர்.
26.
(i) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்.
(ii) இந்தியன் ஏர்லைன்ஸ்
(iii) ஏர் இந்தியா
(iv) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC).
27.
(i) உடன்பாட்டால் கலைப்பு
(ii) கட்டாய கலைப்பு
(iii) சில நிகழ்ச்சிகள் நிகழ்வுறுவதால் கலைப்பு
(iv) அறிக்கையால் கலைப்பு
(v) நீதி மன்றத்தால் கலைப்பு என வகைப்படும்.
28.
(i) முதன்மை செயல்பாடுகளில் கவனம் செலுத்துதல்.
(ii) திறனை உயர்த்திக்கொள்ளுதல் மேலும் நிபுணத்துவம் பெறுதல்.
(iii) செலவுகளைக் குறைத்தல்.
(iv) பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு அடைதல்.
(v) அதிக இலாபம் ஈட்டுதல்.
(vi) வளர்ந்து வரும் தேவைக்கேற்ப சேவைகளை பரிமாற்றம் செய்து கொள்ளுதல்.
29.
பெருநிறுவன ஆளுகை என்பது சம்பந்தப்பட்ட தொழில் அமைப்பில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புத் தன்மை போன்றவற்றை மேம்படுத்தும் ஒரு பெயர் - உலக வங்கி, பெருநிறுவன ஆளுகை என்பது எந்த ஒரு நிறுமத்தையும் திறம்பட செம்மையாக இயக்கி, வழிநடத்தி கட்டுப்படுத்த உதவும் ஒரு அமைப்பு ஆகும்.
30.
தொழில் என்பது "இலாபம் பெறும் நோக்குடன் வழக்கமாக பொருள்களையும் பணிகளையும் விற்பனை செய்யும், பரிமாற்றம் செய்யும் நடவடிக்கையாகும்" என வரையரறுக்கப்படுகிறது".
31.
(i) முதல் உலகப்போரால் பாதிக்கப்பட்ட நாடுகளை புனரமைத்தல்,வளர்ச்சியடையச் செய்தல் மற்றும் உறுப்பு நாடுகளை முன்னேற்றுவதற்கு நீண்ட கால மூலதனத்தை வழங்குதல்
(ii) உறுப்பினர் நாடுகளில் மூலதன முதலீட்டை ஊக்குவித்தல்
(iii) உறுப்பினர் நாடுகளில் உள்ள சிறிய மற்றும் பெரிய அலகுகள் மற்றும் அந்நாடுகளில் துவங்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கான உத்தரவாதங்களை வழங்குதல்
(iv) போரால் பாதிக்கப்பட்ட நாடுகளை வளர்ச்சியடைந் நாடுகளாக மற்றும் வகையில் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவதை உறுதி செய்தல்.
(v) நீண்ட கால மூலதனத்தை வழங்குவதின் மூலம் வணிக செலுத்து நிலையில் பன்னாட்டு வணிகத்திலும் சமமான வளர்ச்சியை உறுதி செய்தல்.
32.
மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல் என்பது, அதன் முதிர்வு காலத்திற்கு முன்பாக வங்கிகளிடம் தள்ளுபடியில் விற்றுப் பணம் பெறும் ஒரு நடவடிக்கையைக் குறிப்பதாகும்.
33.
வணிக நடவடிக்கைகள் பண்டைய காலத்துப் பண்டமாற்று முறையிலிருந்து நாணயமுறை, அஞ்சல் வழி வணிகம், வாடகைக் கடன் கொள்முதல் முறை, தவணை விற்பனை முறை போன்ற பன்முகத் தன்மையில் உருமாறி வளர்ந்துள்ளது.
34.
| வாடகைக் கொள்முதல் முறை | தவணை முறை விற்பனை |
| (i) இறுதித் தவணை செலுத்தும் வரை பொருளின் உரிமை விற்பனையாளரிடமே இருக்கும். |
முதல் தவணை செலுத்திய உடனேயே வாங்குபவர் உரிமையாளர் ஆகிறார். |
| (ii) பொருளை வாங்கியவர் அதனை வாடகைக்கோ அல்லது விற்கவோஅல்லது அடகு வைக்கவோ முடியாது. |
பொருளை வாங்கியவர் அப்பொருளை எதுவும் செய்யலாம். |
| (iii) தவணைத் தொகையை செலுத்தத் தவறினால் வாங்கியவர்களிடம் இருந்து பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொள்ளலாம். |
தவணைத் தொகையை செலுத்தத் தவறினால் வாங்கியவர்களிடம் இருந்து பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. |
| (iv) வாராக் கடன் போன்ற நட்டங்கள் இதில் அதிகம் ஏற்படுவதில்லை. |
வாராக் கடன் போன்ற இதில் அதிகம் ஏற்ப வாய்ப்பு உண்டு. |
35.
தற்போது அனைத்து வங்கிகளும் வங்கி பரிவார்த்தைக்கான நேரம் மற்றும் செலவை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை இணையம் மூலம் வழங்குகின்றன.
(i) தேசிய மின்னணு நிதி [பரிமாற்றம் (NEFT)
(ii) உண்மை நேர மொத்தத் தீர்வக அமைப்புகள் (RTGS)
(iii) மின்னணு தீர்வக சேவைகள் (Electronic Clearing System)
(iv) கூட்டிணைப்பு வங்கியியல் தீர்வுகள்.
(v) இணைய வங்கியியல்
(vi) கைபேசி வங்கியியல்
(vii) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்.
36.
(i) ஓர் ஆளுநர் மற்றும் நான்கு துணைநிலை ஆளுநர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பதவி வகிக்கும் வகையில் நியமிக்கப்படுவார்கள்.
(ii) பல்வேறு துறைகளில் இருந்து பத்து இயக்குநர்கள்.
(iii) இரண்டு அரசு அதிகாரிகள்.
(iv) நான்கு இயக்குநர்கள் (வட்டார வாரியங்களில் இருந்து ஒவ்வொருவர்).
37.
(i) தனிநபர் உரிமை : இது தனி நபரால் நடத்தக் கூடிய அமைப்பாகும். தனியாள் வணிகர் ஒருவரே தேவையான மூலதனத்தை செலுத்துகிறார். தனியாள் வணிகத்தில் அவர் ஒருவரே உரிமையாளராக செயல்படுகிறார்.
(ii) தலையீடற்ற செயல்பாடு மற்றும் விரைவான முடிவு: தனியாள் வணிகர் தனது வியாபாரத்தில் தலையீடின்றிச் செயல்படுகிறார். அதனால் அவர் வணிகம் சார்ந்த முடிவுகளை விரைவாக எடுக்கிறார்.
(iii) குறைந்த மூலதனம்: தனியாள் வணிகத்தில் அவர் குறைந்த முதலீடு செய்தால் போதுமானது. தொழிலை தொடங்கலாம்.
38.
(i) கூட்டு பொறுப்புகளின் ஒப்படைப்பு (பிரிவு 42):
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூட்டாக வாக்குறுதிகளை அளித்திருந்தால் , அனைவருமே இணைந்து நிறைவேற்ற வேண்டும்.ஏதேனும் ஒரு கூட்டு வாக்குறுதி அளித்தவர் இறந்துவிட்டால் , அவரது வாரிசுதாரரும் பிற உயிருள்ள கூட்டு வாக்குறுதி அளித்தவரும் சேர்ந்து ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்.எல்லா வாக்குறுதி அளித்தவர் இறந்துவிட்டால், ஒவ்வொருவருடைய வாரிசுதாரரும் சேர்ந்து வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
(ii) கூட்டு உரிமைகளின் ஒப்படைப்பு (பிரிவு 45):
பல நபர்கள் கூட்டாக ஒரு நபரிடமிருந்து வாக்குறுதி ஒன்றைப் பெறும் பொழுது, அனைவருமே இணைந்து அவ்வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரும் உரிமை உண்டு.ஏதேனும் ஒரு கூட்டு வாக்குறுதி பெற்றவர் இறந்துவிட்டால் அவரது வாரிசுதாரரும் பிற உயிருள்ள கூட்டு வாக்குறுதி இறந்துவிட்டால் அவரது வாரிசுதாரரும் பிற உயிருள்ள கூட்டு வாக்குறுதி பெற்றவரும் சேர்ந்து ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரலாம்.கூட்டாக வாக்குறுதி பெற்ற அனைவரும் இறந்துவிட்டால், ஒவ்வொருவருடைய வாரிசுதாரரும் சேர்ந்து வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கோரலாம்.
39.
ஜான் மெர்ஜ் என்பவரது வரைவிலக்கணப்படி தனி ஒருவருக்கு ஏற்படும் இடரை பலர் ஒன்றிணைந்து தங்களது தோள்களில் பகிர்ந்து கொள்ளும் திட்டமே காப்பீடு ஆகும்.
40.
மனிதன் தனது தனிப்பட்ட விருப்பங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மனிதச் செயல்பாடுகள் என்று கூறலாம்.
41.
கிழ்கண்ட இடைநிலையர்கள் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபடுகிறார்கள். அனுப்புகை ((Forwarding Agent), கழிவு முகவர் (Commission Agent), ஏற்றுமதி வணிக இல்லம் (Export Trading House)
(i) அனுப்புகை முகவர் (Forwarding Agent):
ஏற்றுமதியாளர் சரக்கை அனுப்புவது தொடர்பான சுங்க நடைமுறைகளை பின்பற்ற அனுப்புகை முகவரை நியமிக்கிறார். அனுப்புகை முகவர் ஏற்றுமதியாளருக்கு கீழ்கண்ட வழிகளில் உதவுகிறார்.
1. ஏற்றுமதியாளருக்கு ஏற்றுமதி தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளையும் தெரிவிக்கிறார்.
2. ஏற்றுமதியாளருக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளுதல் தொடர்பான செலவுகள் பற்றிய தகவல் தருகிறார்.
3. சரக்கை கட்டுமம் செய்தல், குறியீடு செய்தல் போன்ற பணிகளில் ஏற்றுமதியாளருக்கு உதவுகிறார்.
4. ஏற்றுமதியாளர் சரக்கை அனுப்ப போக்குவரத்து வசதி செய்து உதவுகிறார்.
5. சுங்க நடைமுறைகளை பின்பற்றுவதில் உதவுகிறார்.
6. ஆவணங்களை தயாரித்தல் மற்றும் பெறுதல் ஆகியவற்றில் உதவுகிறார்.
7. போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சி குறித்த தகவலை ஏற்றுமதியாளருக்கு தருகிறார்.
(ii) கழிவு முகவர் (Commission Agent): கழிவு முகவர் அடிப்படையில் செயல்படும் பண்பாட்டு முகவர் ஆவார். எவர் தன் சொந்த பெயரில் செயல்படுகிறார். இவரின் சிறப்பு, விலை நிலவரம் பற்றிய தேர்ந்த அறிவு பெற்றிருப்பது இவரின் சிறப்பு ஆகும். இவர் தன்னுடைய இறக்குமதி வாடிக்கையாளருக்கு சரக்கை குறிப்பிட்ட விலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்றுமதியாளர் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுப்பி வைக்கிறார். சரக்கை அனுப்பியதும் அவருக்கும் ஏற்றுமதியாளர்க்கும் உள்ள உறவு முடிந்து விடுகிறது. இது தற்காலிக உறவு முறை ஆகும். இந்த வியாபார நடவடிக்கை நிறைவு பெற்றதும் தனக்குரிய கழிவை பெற்றுக்கொள்கிறார்.
(iii) ஏற்றுமதி ஆணை நிலையம் (Export Indent Houses): இந்தியாவில் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உலக சந்தையை வலுவூட்டவும் ஏற்றுமதி வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு உதவிகளை செய்யவும், ஏற்றுமதி ஆணை நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், வணிக நிறுவனங்கள், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் ஏற்றுமதி தொழில் மண்டலம் (எஸ்பியர்ட் Processing Zone) மின்னணு தொழில் பூங்கா ஆகியவை அடங்கும்.
42.
(i) பொது மக்களிடையே வங்கி பழக்கங்களை வளர்ப்பது.
(ii) குறை தீர்வு நடவடிக்கைகள்
(iii) வேளாண்மை வளர்ச்சி
(iv) சிறிய அளவிலான தொழிற்சாலைகளை ஊக்குவித்தல்.
43.
அந்நியச் செலாவணி மாற்று பாத்திரத்தின் சிறப்பம்சங்கள்:
(i) அந்நியச் செலாவணி மாற்று பத்திரம் என்பது இந்திய நிறுமங்கள் அயல்நாட்டு செலாவணியில் வெளியிடும் ஒரு வகை பத்திரம் ஆகும்.
(ii) இவை கடனீட்டுப்பத்திரங்களைப் போல பட்டியலிடப்பட்டு அயல்நாட்டு பங்கு மாற்றங்களில் வியாபாரம் செய்யப்படுகின்றன.
(iii) இது மாற்றத்தக்க கடன் ஆவணமாகும். எதனுடன் வட்டிக்கான அனுமதி உரிமை ஆணை இணைந்திருக்கும்.
(iv) இதனை வைத்திருப்பவர்களுக்கு முன் குறித்த விலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்குகளாக மாற்றிக்கொள்ளவும் உரிமை தரப்படுகிறது.
(v) குறிப்பிட்ட காலத்திற்குபின் இவைகளை நேர்மை பங்குகளாகவோ அல்லது வைப்பு ரெசீதாகவோ மாற்றிக்கொள்ள முடியும்.
(vi) இந்தப் பத்திரம் மூலம் பெறப்படும் நிதியை, வெளிப்புற வணிகக் கடன் (External Commercial Borrowing) தொடர்பாக இயற்றப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைப்படியே பயன்படுத்தப்பட வேண்டும்.
44.
| வேறுபாடுகள் | மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) |
மாநில சரக்கு மற்றும் சேவை (SGST) |
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் வரி (IGST) |
| பொருள் |
மத்திய அரசால் சுமத்தப்படுகிறது, |
மாநில அரசால் சுமத்தப்படுகிறது, விற்பனைவரி, ஆடம்பரவரி மற்றும் நுழைவு வரிகளுக்கு மாற்றாக உள்ளது. |
மத்திய அரசால் சுமத்தப்படுகிறது. IGST என்பது ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ஆகும். CGST), SGST இணைந்த முறை ஆகும். |
| வரி வசூலிப்பவர் | மத்திய அரசு | மாநில அரசு | மத்திய அரசு |
| பொருந்துதல் | மாநிலங்களுக்குள் நடைபெறும் அளிப்பு | மாநிலங்களுக்குள் நடைபெறும் அளிப்பு | மாநிலகளுக்கு இடையேயான அளிப்பு |
| பதிவு செய்தல் | விற்பனை ரூ.20 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் பதிவு செய்ய தேவையில்லை (வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 10 லட்சம்) |
விற்பனை ரூ.20 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் பதிவு செய்ய தேவையில்லை (வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 10 லட்சம்) |
பதிவு செய்தல் கட்டாயம் |
| தொகுப்பு | வணிகர்கள் ரூ.75 லட்ச வரை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயனடையலாம். |
வணிகர்கள் ரூ.75 லட்ச வரை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயனடையலாம். |
தொகுப்பு திட்டம் மாநிலங்களுக்கு இடையேயான அளிப்புக்கு பொருந்தாது. |
45.
46.
நிறுமச் சட்டம் பிரிவு 2(26) தகவலறிக்கைக்கு பின் வருமாறு வரைவிலக்கணம் வழங்குகிறது. ஒரு பொது வரையறை நிறுமம் தான் வெளியிடும் பங்குகளையும் கடனீட்டுப்பத்திரங்களையும் வாங்குமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு ஆவணம் தகவலறிக்கை எனப்படும். பொது மக்களிடமிருந்து தகவலறிக்கை எனப்படும். பொது மக்களிடமிருந்து வைப்புகளைப் பெறுவதற்காக வெளியிடப்படும் விளம்பரம் தகவலறிக்கையாகவே கருதப்படும்.
47.
(i) எந்த விதமான பயனையும் நேரடியாக திரும்பப் பெறும் எதிர்பார்ப்பற்ற, அரசால் சமுத்தப்படும் ஓர் கட்டாயக் கட்டணமே வாரியாக. அதாவது, மக்களால் அரசுக்கு அளிக்கப்படும் ஓர் கட்டாயக் கட்டணம் அல்லது பங்களிப்பே வரியாகும்.
(iiஒரு நபர் வரிக் கட்ட வேண்டிய நிலையில் இருப்பார் எனில், அவ்வரியைக் கட்ட வேண்டியது அவரது சட்டக் கடமையாகும்.
(iii) அரசனுடைய மிக முக்கிய வருவாய் வரியின் மூலமாகவே ஈட்டப்படுகிறது. இவ்வரி வருவாயானது குடிமக்களின் நலதிட்டங்களுக்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும், கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
(iv) சிறந்த ஓர் வரைமுறை, மக்களின் பணிபுரிதல் சேமித்தல் மற்றும் முதலீடு செய்தல் ஆகியவற்றில் உள்ள வர்களின் விருப்பம் தகுதி போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. இல்லையெனில், அது வணிகம், தொழில் மற்றும் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தின் வளர்ச்சியையே பாதித்து விடும்.
வரிகளின் வகைகள்:
இந்தியாவில் வரிகள் பின்வரும் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பபட்டுள்ளது.
நேர்முக வரி:
(i) வருமான வரி
(ii) நிறும வரி
(iii) சொத்து வரி
(iv) அன்பளிப்பு வரி (நன்கொடை வரி)
(v) பண்ணை வரி
(vi) பயன்கள் வரி
நேர்முக வரிகள்:
நேர்முக வரிகள் என்பது யார் மீது விதிக்கப்படுகிறது அவரே அவ்வரியைச் செலுத்துவதாகும். அதாவது நேர்முக வரியில் வரிதாக்கமும் , வரி நிலைப்பாடும் ஒருவர் மீதே விழுகின்றன. இவ்வாறு, வரித் தாக்கமும், வரி நிலைப்பாடும் ஒருவர் மீதே விழும் வகையைகி சார்ந்த வரிகள் நேர்முக வரிகள் எனப்படும் அதாவது தனி நபரின் வருமானம் அல்லது அவரின் செல்வத்தின் மீது விதிக்கப்பட்டு அவரால் செலுத்தப்படும் வரியாகும் இந்தியாவில் அனைத்து நேரடி வரிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மறைமுக வரிகள்:
(i) மறைமுக வரிகளின் கீழ், வரித்தாக்கமும், வரிநிலைப்பாடும் வேறுபட்ட நபர்களின் மீது விழுகின்றன. இவை யார் மீது விதிக்கப்படுகின்றனவோ அவர்களால் சுமக்கப்படுவதில்லை. இவை மற்றவர்களுக்கு மாற்றி அளிக்கப்படுகின்றன.
(ii) அதாவது சரக்கு மற்றும் சேவைகளை வழங்கும் விற்பனையாளர் மீது வரி விதிக்கப்பட்டு அவற்றை வாங்குபவரால் செலுத்தப்படும் வரியே மறைமுக வரியாகும். உதாரணம் சரக்கு சேவை வரி (GST).
48.
நன்மைகள்:
(i) எளிமையான அமைப்பு: துறைவாரி நிறுவனங்களை அமைப்பது எளிது. இவ்வமைப்புகளை நிர்வாக முடிவெடுத்து அரசு அமைப்பது எளிய முறையாகும்.
(ii) பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாடு: துறைவாரி நிறுவனங்களின் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் மூலமாக மட்டுமே நேரடியாக கட்டுப்படுத்தப்படும். அதற்கு அத்துறை அமைச்சரே பொறுப்பாவார்.
(iii) இரகசியம் காத்தல்: பாதுகாப்பு மற்றும் அணுசக்தி துறைகள் போன்றவை அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அத்துறைகளில் பணியாளர்கள் தங்களது பணிகள் கொள்கைகள் மற்றும் செயல்பாட்டினைப் பற்றிய இரகசியங்களை பாதுகாத்து வைக்க இயலும்.
(iv) பொதுமக்களுக்கு வரிச்சுமை குறைவு: இத்தொழில் நிறுவனங்கள் தங்களது வருமானத்தை அரசு கருவூலங்கள் மூலம் செலுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு குறைந்த வரியே விதிக்கப்படும்.
(v) சமூக மாற்றத்திற்கான கருவி: அரசாங்கம் பொருளாதாரம் மற்றும் சமூக நீதியை அரசுத் துறை நிறுவனங்கள் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும்.
(vi) பொதுமக்களின் நிதியை தவறாகப் பயன்படுத்துவதினால் ஏற்படும் இடர்ப்பாடு குறைவு.
(vii) அமைச்சகத்தின் விதிகள் மற்றும் செயல்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படும்.
குறைகள்:
(i) தாமதமும், சிகப்பு நாடா போக்கும்: அரசின் நெகிழ்வற்ற நடைமுறைகளையும் மரபுகளையும் வழுவாது பின்பற்றுவதும் காலதாமதமும் மிகப்பிபெரிய குறைபாடாகும். வணிக நிறுவனங்கள் காலதாமாக முடிவெடிப்பது ஏற்கத்தக்கது அல்ல.
(ii) கூடுதல் வரிச்சுமை: துறைவாரி நிறுவனங்களில் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட அரசின் கருவூலத்திலிருந்து தொகையை வழங்க வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மீது மேலும் வரியை சுமத்தி வரிச்சுமை கூட்டுகிறது.
(iii) போட்டியின்மை: வணிக அனுபவமோ அல்லது வியாபார வெளிப்பார்வையோ இல்லாத அரசு அலுவலர்கள் துறைவாரி நிறுவனங்களை நிர்வாகம் செய்வதினால் அவர்களால் துறைவாரி நிறுமங்களை செய்வதினால் அவ்ர்களால் துறைவாரி நிறுமங்களை முறையாக கட்டுப்படுத்த முடிவதில்லை.
(iv) பணியில் சராசரி அணுகுமுறை: அரசு அலுவலர்கள் தங்களது பணியில் சராசரி அணுகுமுறை போன்றே இந்நிறுவன பணியிலும் ஈடுபடுகிறார்கள்.
(v) அரசின் தலையீடு: துறைவாரி நிறுவனங்களின் மீது அளவுக்கு அதிகமான கட்டுப்பாடு விதிகள் ஆகியவற்றை அரசு சுமத்துகிறது. இத்துறைவாரி நிறுவனங்கள் தன்னாட்சியுடன் செயல்பட விடுவதில்லை.
(vi) மேலாண்மைத் திறமைக்குறைவு என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகும் அச்சம். துறைவாரி அமைப்பின் மேலாளர்கள் அரசு அலுவலராக இருப்பதால் அவர்களின் மெத்தனப்போக்கு அவர்களை சிறப்பாக செயல்பட வைப்பதில்லை.
(vii) நிதி சார்பு: துறைவாரி நிறுவனங்கள் பொருளாதார ரீதியாகவும் மற்றும் அரசின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டை சார்ந்தும் இருக்க வேண்டும்.
49.
(i) அதிக வேலை வாய்ப்புகள் : பெரிய வர்த்தக நிறுவனங்களை காட்டிலும் இந்நிறுமங்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன.இத்தகைய நிறுமங்கள், பெரும்பாலும் உள்ளரில் கிடைக்கும் உழைப்பாற்றலை நம்பி இருப்பதால் நாட்டில் உள்ள ஏராளமனா மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிறது
(ii) குறைந்த உற்பத்தி செலவு : இம்மாதிரியான நிறுமங்களைநடத்தப்பயிற்சி பெற்ற அல்லது அதிக ஆற்றல் படைத்த தொழிலாளார்களா அல்லது தொழில் கல்வி பயின்ற உழைப்பாளர்களோ தேவைப்படுதில்லை,இன்
நீருவனங்கள் குறைந்த ஊதியத்தில் பணியாளர்களை நியமிப்பாதல் உற்பத்தி செலவுகள் வெகுவான குறைகிறது.இதன் விளைவாக பெரிய அளவிலான நிர்வனங்களை விட இவற்றால் குறைந்த செல்வில் உற்பத்தியை மேற்கொள்ள முடிகிறது
(iii) குறைந்த முதலிடு : இவற்றைக் தொடங்குவதற்கு பேரளவு முதல் தேவைப்படுவதில்லை.இவைகளின் உரிமையாளைர்கள் உள்ளரில் இருப்பதால் தனக்கு அருகாமையில் உள்ள உள்ளரில் வளங்களை பயன்படுத்திக் கொள்கின்றார்.கைவினை பொருட்கள் மற்றும் பரம்பரியத் குடும்பத் தொழில்களை ஊக்குகின்றன.இந்த நிறுவனங்கள் சிற்று மற்றும் பேரூரில் உள்ள உள்ளூர் தொலைமுனைவோர் மற்றும் சுயதொழில் செய்பர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன
(iv) விரைந்து முடிவெடுத்தல்: இவற்றின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொழில் படிப்பு பயின்ற மேலார்களைப் பணியமரத்த வேண்டிய அவசியம் இல்லை.பெருபாலும் இந்த நிறுவன அவற்றின் உரிமை யாளர்களே நிர்வாகம் செய்கினற்னர்.
பங்களிப்பு உதவி: பெரிய உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உதரி பாகங்கள் மற்றும் பிற பொருட்களை தயாரித்து கொடுத்து பேரளவு உற்பத்திக்கு துணை புரிவதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன
(vi) சமுதாயத்தில் பொருளாதார சமநிலைய உருவாகுதல்: வருமானம் மற்றும் வளங்கள்ஒரு சிலரிடம் குவிவதைத் தடுத்து அவற்றைப் பரவலகுவதன் மூலம் சமுத்தியதில் பின்திங்கிய நிலையில் இருப்போரையும் இலாபம் மகிந்த தொழில் துறையில் பங்கு பெறச் செய்வதன் மூலம் சீரான பொருளாதாரப் பகிர்வுக்கு வலி வகை செய்கிறது
(vii) அனைத்து பகுதிகளிலும் சமமான வளர்ச்சி:இந்நிறுவனங்களின் வளிர்ச்சிய ஊக்குவிப்பதன் மூலம், இந்தியாவில் தொழில் ரீதியாக பின்தங்கியுள்ள பகுதிகளை வளர்ச்சி அடையச் செய்யலாம்.இதன் மூலம் நாடு முழுவதும் , சீரான தொழில் வளர்ச்சியை பெற இயலும்.இவை உள்ளுர்களிலேய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதால் மற்றும் பேரூர்களில் வசிக்கும் மக்கள் நகர்ப்புறம் நோக்கி வேலைக்காக இடம் பெயர்வது தடுக்கப்படுகிறது
(viii)சுய வேலைவாய்ப்பு உருவாக்கி , சுய சார்பு மேம்படுத்துதல்: இத்துறையானது தொழில் முனைவோர்கலை உருவாக்குவதில் பெரும் பங்குகாற்றுகின்றன. இது சமுதாயத்தில் சுயவேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் சுயசார்பை ஊக்குவிக்கிறது. தன் மூலம் தனிநபர் வருமானம் வெகுவான உயர்ந்து நாட்டின் பொருளாதர வளர்ச்சி அதிகரிக்கிறது
50.
ஒப்பந்த விடுவிக்கப்படும் வழிகள்:
(i) நிறைவேற்றதின் மூலம் விடுவிப்பு (Discharge by Performance): ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் தமது கடமைகளைச் செய்தால் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும். நிறைவேற்றம் என்பது உடன்பாட்டின்படி இருக்க வேண்டும். வாக்குறுதி அளித்தப்படி குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட முறையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். நிறைவேற்றம் இரண்டு வகைப்படும் (அ) உண்மையான நிறைவேற்றம் (ஆ) நிறை வேற்றுவதாக முனைவு செய்தல்.
(ii) பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் விடுவிப்பு:
ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்களின் உடன்படிக்கை, பரஸ்பரம் ஒத்துகொள்வதன் மூலம் உடன்பாட்டை முடிக்கலாம். உடன்பாட்டின் விளைவாக ஒப்பந்தம் ஏற்படுவது போல, அதில் ஈடுபட்டுள்ள நபர்கள் ஒன்றிணைந்து உடன்பாட்டை ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம். பரஸ்பர உடன் படிக்கையின் மூலம் விடுவிப்பு பின்வரும் ஏதேனும் வழிகளில் இருக்கலாம். அவை ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள், வெளிப்படையாகவோ அல்லது உட்கிடையாகவோ ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வரலாம். பரஸ்பர விடுவிப்பு பின்வரும் ஏதேனும் செய்யப்படலாம், அவை பரிமாற்றம், திருத்தம், தள்ளுபடி, ரத்து செய்தல், தளர்த்துதல், இணைப்பு.
(iii) இயலாது போதலால் விடுவிப்பு (By Impossibility of Performance): சில நிகழ்ச்சிகளால் ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் போனால், அது இயலாது போதனால் விடுவிப்பு எனப்படும். அதனால் ஒப்பந்த நபர்கள் தமது கடமைகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். நிறைவேற்றம் இயலாது போதல் இரண்டு வகைப்படும் (பிரிவு 56) அவை (அ) உடன்படிக்கை ஏற்படும் பொழுதே நிறைவேற்ற இயலாமை, (ஆ) ஒப்பந்தம் உருவாகிய பின்னர் பொழுதே அது நிறைவேற்றப்பட முடியாது என்பது (1) ஒப்பந்த நபர்களுக்கு தெரிந்து இருக்கலாம் (2) ஒப்பந்த நபர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதேபோல ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிய பின்னர் ஏற்படும் இயலாமை அல்லது இடையில் இயலாமல் போதலில் விடுவிப்பு போன்றவை. ஒப்பந்த நபர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில நிகழ்வுகள் அல்லது வாக்குறுதி அளித்தவர் அல்லது வாக்குறுதி பெறுபவர் சில செயல்களால் ஏற்படலாம்.
(iv) கால கடந்து போவதால் விடுவிப்பு (By Lapse of Time) :
வரையறை சட்டம் 1963 படி ஒப்பந்தம் ஒன்று குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும். ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதனால் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்ட காலத்திற்குள் சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரும் உரிமையை இழந்து விடுகிறார்.
(v) சட்டத்தினால் விடுவிப்பு (By Operation of Law) : சட்டத்தினால் விடுவிப்பு என்பது சட்டத்தின் தலையீட்டினால் ஒப்பந்தம் ஒன்று விடுவிக்கப்படுவதை இது குறிக்கும். இது பின்வரும் ஏதேனும் வழிகளில் செய்யப்படலாம்.
1. இறப்பு: தனிப்பட்ட ஆற்றலை நம்பியுள்ள ஒப்பந்தங்களில் வாக்குறுதி அளித்தவர் இறந்தவுடன் அவ்வொப்பந்தம் முடிவுக்கு வந்துவிடும்.
2. இணைப்பு: ஒரு நபரின் குறைந்த அளவு உரிமையானது அவருக்கு வந்துசேரும் உயர்ந்த அளவு உரிமையுடன் இணைப்பதை குறிக்கும். இதில் குறைந்த அளவு உரிமையுடன் இணைப்பதை குறிக்கும். இதில் குறைந்த அளவு உரிமையுள்ள ஒப்பந்தம் விடுவிக்கப்படும்.
3. நொடிப்பு நிலை: ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் நொடிப்பு நிலை அடைந்துவிட்டால் அவருடைய அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்.
4. முக்கியமான திருத்தம்: ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒரு நபர் அடுத்தவரின் அனுமதியின்றி ஒப்பந்தத்தில் நிபந்தனைகளில் திருத்தம் செய்வாரேயெனில் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வரலாம்.
51.
(i) தொழில் நடைமுறைகள் மற்றும் அதன் செயல்திறன் பொண்டேயா அளவீடுகளை நிறுமம் தன்மை மற்ற நிறுவனங்கள் பின்பற்றி வரும் சிறந்த நடைமுறைகளுடன் ஒப்பிட்டு பார்க்க வகை செய்கிறது.நான்கு வகையான அடிப்படை தரக்குறியீடுகள் நடைமுறையில் உள்ளன.
(ii) அவைகள் உள்நாட்டு தரக்குறியீடு,போட்டிக்குரிய தரக்குறியீடு,செயல்பாட்டு தரக்குறியீடு எனப்படும்.உள்நாட்டு தரக்குறியீடு ஒரு தொழிலின் செயல் மற்றும் அதன் அமைப்பில் உள்ள செயல்முறைகளையும் ஒப்பிடப்படுகிறது.போட்டி தரக்குறியீடு ஒரு போட்டியாளரின் மற்றும் ஒரு போட்டியாளருடன் நேரடியாக போட்டியிடுவதை ஒப்பிடப்படுகிறது.
(iii) ஒரு பொருள் சேவை அல்லது அதன் நடைமுறை போன்றவற்றை தரக் தரக்குறியீட்டுக்கு தேர்வு செய்யப்படுகிறது.
(iv) முக்கிய செயலாக்கத்தின் அடிப்படை அளவீட்டை அடையாளம் காணல்.
(v) நிறுமம் தேர்ந்தெடுக்கும் இடம் அதன் உட்புற பகுதியே தரக்குறியீடு ஆகும்.
(vi) செயலாக்கம் மற்றும் நடைமுறை மீதான தகவல் சேகரிப்பு.
(vii) உலகின் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்புகள் பற்றி கண்டறிதல் மற்றும் தகவல் பகுப்பாய்வு. உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தரக்குறியீடுகள் : அனைத்து ஆசிய நாடுகளில் இயங்கி வரும் பட்டியலில் இடப்பட்ட நிறுவனங்களுக்கு, தன்னிசையுடன் செயல்படும் இயக்குனர்கள் தேவைப்படுகின்றனர்.குறைந்த பட்சம் நிர்வாகக் குழுவில்,மூன்றில் ஒரு பங்கு இயக்குனர்கள் தன்னிசையுடன் செயல்படும் நபர்களாக இருக்க வேண்டும்.2012-ல் சிங்கப்பூர் ஆளுகை குறியீடு அமைப்பு தன்னிசையாக செய்லபடும் இயக்குனர்களை பரிந்துரை செய்கிறது.இருப்பினும் குழுவின் தலைவருக்கு போதிய சுதந்திரம் மற்ற அனைத்து ஆசிய நாடுகளிலும் பொருளாதாரத்தில் தணிக்கை மற்றும் ஊதியம் போன்றவற்றில் குழுக்களின் பரிந்துரை தேவைப்படுகிறது.
52.
| உற்பத்தி தொழில் | வணிகம் | வியாபாரம் |
| 1. பொருள்: உற்பத்தி தொழில் என்ற சொல் பிரித்து எடுத்தல், மறு உற்பத்தி மாற்றுதல் பயனுள்ள பொருட்களை தயாரித்தல் போன்ற செயல்களைக் குறிக்கின்றது. |
வணிகம் என்ற சொல் பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குவதை குறிக்கின்றது. | வியாபாரம் என்ற சொல் பொருட்கள் மற்றும் சேவைகள் கொள்முதல் மற்றும் விற்பனையைக் குறிக்கின்றது. |
| 2.உள்ளடக்கம்: கச்சா பொருட்கள் பகுதியாக முடிவுற்ற பொருட்களை முழு இறுதிப் பொருளாக மாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. | வியாபாரம் மற்றும் அதன் தொடர்புடயவற்றை உள்ளடக்கிறது. | பொருட்கள் மற்றும் சேவை பரிமாற்றம் இவற்றை உள்ளடக்கியது. |
| 3.முதல்: பொதுவாக உற்பத்தி தொழிலுக்கு அதிக முதலீடு என்பது தேவைப்படுகிறது. | வணிகத்திற்கு முதல் குறைந்த அளவே தேவைப்படுகிறது. | போதுமான சரக்கிருப்பை வைத்திருக்கவும் கடன் அளிக்கவும் போதுமான முதல் தேவைப்படும். |
| 4. இடர்பாடு: அதிக இடர்பாட்டைக் கொண்டது. | குறைவான இடர்பாட்டை கொண்டது. | குறைவான இடர்பாட்டை கொண்டது |
| 5. பரிமாணம்: பொருட்கள் மற்றும் சேவையின் வழங்கல் அளிப்பு பக்கத்தை பிரதிபலிக்கிறது. | பொருட்கள் மற்றும் சேவையின் தேவை பக்கத்தை பிரதிபலிக்கிறது. | இது அளிப்பு மற்றும் தேவை பக்கத்தை பிரதிபலிக்கிறது. |
| 6. பயன்பாடு உருவாக்கம் : பொருட்களின் உருவத்தையும் வடிவத்தையும் மாற்றி அமைப்பதால் இது உருவப்பயன்பாட்டை உருவாக்குகிறது. | பொருட்களைத் தயாரிப்பாளரிடமிருந்து நுகர்வோருக்கு செல்வதன் மூலம் இடர் பயன்பாட்டை உருவாக்குகிறது. | பரிவர்த்தனை மூலம் உடைமைப் பயன்பாட்டை உருவாக்குகிறது. |
53.
சமூகப் பொறுப்புணர்வு குறித்த பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.ஒவ்வொரு தொழில் உரிமையாளர்களும் தங்கள், தொழில் மூலம் பெறும் இலாபத்தில் ஒரு பகுதியை சமுதாய மேம்பாட்டிற்காக செலவழிகின்றனர்.இத்தகைய பயன்பாட்டிற்கு தோழில் ஒழுங்குணர்வு பொறுப்பாகும்.
(i) சுய ஆர்வம் : தொழில் அமைப்புகள் சந்தையில் நிலைத்து செயல்படுவதற்கு சமுதாய எதிர்ப்புக்களை நிறைவு செய்வதன் மூலம்,தொழில் உரிமையாளர்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.(எ.கா) அதிக ஊதியம் வழங்குதல், சாதகமான பணிச் சூழலை ஏற்படுத்துதல்,தொழிலாளர்களை ஊக்குவித்தல்,உற்பத்தியை அதிகரித்தல்,பணியாளர் சுழற்சி மற்றும் வருகைப் பதிவு இன்மையை குறைத்தல்.
(ii) சமுதாய உருவாக்குதல் : நாட்டின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் தொழில் நிறுமங்கள் ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்றன.எனவே தொழில் நிறுமங்கள், மக்களின் எதிர்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும்.தொழில் செய்பவர்கள், சமுதாய தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களின் நலன் கருதி நாட்டின் வளங்களை பயன்படுத்த வேண்டும்.
(iii) சமூக அதிகாரம்: தொழில் செய்பவர்களிடம் கணிசமான அளவு சமுதாயம் அதிகாரம் உள்ளது.அவர்கள் மேற்கொள்ளும் செயல் நடவடிக்கைகள் மக்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதாக அமைகிறது.நாட்டின் மேம்பாடு கருதி வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்ற அளவு மற்றும் அனைத்து தரப்பினருக்கும் வருமானத்தை பகிர்ந்தளித்தலாகும்.
(iv) சமுதாயத்தின் உருவகம்: சமூக எதிர்பார்ப்புகளை தொழில் நிறுமங்களால் நிறைவேற்ற முடியும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.ஒரு வெற்றிகரமான தொழில் மூலம் தொழிலாளர் மத்தியில் நல்ல உறவுமுறை ஏற்படுத்துதல்,நுகர்வோர் மற்றும் பொருள் பகர்வாளர்களுக்கும் உதவி புரிய இயலும்.
(v) பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு :தற்போது தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்களின் உரிமைகள் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.நுகர்வோர்கள் தரமான பொருட்களுக்குச் சரியான விலையைக் கொடுக்கவும் மற்றும் தொழிலாளர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறவும் விரும்புகின்றனர்.
(vi) சட்டம் மற்றும் ஒழுங்கு, நாட்டின் சட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதன் மூலம் தொழில் அமைப்புக்கள் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட இயலும்.
(vii) தார்மீக பொறுப்புணர்வு : பெரும்பாலான பெரிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசால் மட்டுமே தீர்வு காண இயலாது.நிதி மற்றும் மனிதவளம் போன்றவற்றின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இயலும்.
54.
போக்குவரத்து வகைகள் - நிலப் போக்குவரத்து , நீர் போக்குவரத்து , விமான போக்குவரத்து.
நிலப் போக்குவரத்து :
(i) நில வாகனப் போக்குவரத்து மூலம் மக்கள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை நிலப் போக்குவரத்து என்றழைக்கிறோம்.
(ii) பொதி விலங்குகள் : மலை , காடு மற்றும் பாலைவனம் போன்ற பின் தங்கிய பகுதிகளிலும் சிறு சிறு சுமைகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும்.
(iii) குதிரை கோவேறு கழுதை, கழுதை ஒட்டகம் மற்றும் யானை போன்ற விலங்குகளை பொதி விலங்குகள் என்றழைக்கின்றோம்.
(iv) மாட்டு வண்டிகள்: இந்தியாவில் பொருள் மற்றும் மக்களை ஏற்றிச் செல்வதற்குக் கிராமப் பகுதிகளில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் சாலைப் போக்குவரத்து மாட்டு வண்டிகளே ஆகும்.
(v) சாலை போக்குவரத்து : சாலை போக்குவரத்து என்பது குறுகிய மற்றும் நடுத்தர தூரத்திற்கு ஏற்றதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது.பல்வேறு இடங்களில் சாலைகள் அமைப்பதன் மூலம் நாட்டிலுள்ள பிரதான தேசிய வழியில் இணையாமல் தொலை தூரத்தில் உள்ள கிராமப் புறங்களில் வாழும் பெரும்பாலான மக்களை இணைத்து அடிப்படை உள் கட்டமைப்புகளை இது வழங்குகிறது.
(vi) இயந்திர சரக்கேற்றிகள் மற்றும் பேருந்துகள்: நகரத்தின் தொடக்கத்தில் இருந்தே மக்களை சாலைகள் அமைத்தும் சக்கரம் பூட்டிய வண்டிகளைப் பயன்படுத்தியும் பொருள்கள் மற்றும் மக்களை ஏற்றிச் சென்று போக்குவரத்தினை எளிமைப்படுத்தியுள்ளனர்.
(vii) டிராம் வண்டிகள் : =டிராம் வண்டிகள் முதலில் குதிரைகளாலும் பின்னர் நீராவி சக்தியாலும் இப்போது மின்சாரத்தினாலும் இயக்கப்படுகிறது.
(viii) தொடர் வண்டிப் போக்குவரத்து : ஜேம்ஸ் வாட் அவர்களின் கண்டுபிடிப்பான நீராவி இயந்திரம் உலகெங்கிலும் உள்ள போக்குவரத்து முறையில் மாபெரும் புரட்சியினை ஏற்படுத்தியது.நீண்ட தூரத்திற்கு மேல் கனரக சரக்குகளைச் சுமந்து செல்வதற்குத் தொடர் வண்டிகள் மலிவான மற்றும் விரைவான வழிவகைகளாக இருக்கின்றன.
நீர் போக்குவரத்து :
(i) நீர் இயற்கை கொடுத்த வெகுமதி ஆகும்.மனித நாகரீகம்,அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் படிப்படியான பயன்பாடு மூலம் பொருளாதார அரசியல் மற்றும்இராணுவ நடவடிக்கைகளுக்கு தண்ணீர் வளங்களைப் பயன்படுத்துகிறது.
(ii) நீர் போக்குவரத்து இரண்டு வகைகள் : உள்நாட்டு நீர் வழி, பெருங்கடல் நீர் வழி.
விமான போக்குவரத்து :
(i) விமான போக்குவரத்து வேகமான மற்றும் விலையுயர்ந்த போக்குவரத்து முறை ஆகும்.
(ii) உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள்.
போக்குவரத்து சமீபத்திய வளர்ச்சிகள்:
மெட்ரோ இரயில் , மோனோ இரயில், புல்லட் இரயில், குழாய் போக்குவரத்து ,கன்வேயர் போக்குவரத்து , கயிறு வழிப் போக்குவரத்து , உயர் சுழற்சி வளையப் போக்குவரத்து.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards