11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/09/2019
இந்திய ரிசர்வ் வங்கி
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
கீழ்க்கண்டவற்றில் எது மைய வங்கியின் பணி அல்ல?
ஒரு நாட்டின் வங்கி அமைப்புகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வங்கி அமைப்பு முறைகளை ஒழுங்குபடுத்துதல்.
பொது மக்களுடன் தொடர்பு கொள்ளுதல்
அரசாங்க வங்கியாளராக நடத்தல்
மற்ற வங்கிகளின் வைப்பு கணக்குகளைப் பராமரித்தல்
2.
வங்கியர்கள் பணத்தை கையாள்பவர்கள் மட்டுமல்ல, __________ க்கு வழிகாட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
பொருளாதார வளர்ச்சி
வர்த்தக வளர்ச்சி
தொழில் வளர்ச்சி
சேவை வளர்ச்சி
3.
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, ____________ ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது.
1936
1935
1934
1933
4.
இந்திய மைய வங்கி என்பது யாது?
பி.என்.பி
எஸ்.பி.ஐ
ஐ.சி.ஐ.சி.ஐ
ஆர்.பி.ஐ
5.
ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கு எந்த வங்கிக்கு அதிகாரம் உள்ளது.
மைய வங்கி
வணிக வங்கி
கூட்டுறவு வங்கிகள்
வெளிநாட்டு வங்கிகள்
6.
மைய வங்கி பற்றிச் சுருக்கமாக விளக்குக.
7.
வங்கியின் பொருளை எழுதுக.
8.
சேவை தொழில்களில் உள்ள சேவைகள் யாவை?
9.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் யாவை?
10.
இந்திய ரிசர்வ் வங்கியின் தோற்றம் பற்றிக் கூறுக.
11.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள் யாவை?
12.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிறுவனக் கட்டமைப்பு பற்றி விரிவாக விளக்குக.
13.
இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு பணிகளை விரிவாக வகைப்படுத்துக.
1.
(b)
பொது மக்களுடன் தொடர்பு கொள்ளுதல்
2.
(a)
பொருளாதார வளர்ச்சி
3.
(b)
1935
4.
(d)
ஆர்.பி.ஐ
5.
(a)
மைய வங்கி
6.
ஒரு நாட்டின் பண மற்றும் வங்கிக் கட்டமைப்பின் உச்சநிலையாகவும், தேசிய பொருளாதார நலனுக்காகவும் சிறந்த முறையில் செயல்படும் வங்கி அந்த நாட்டின் மைய வங்கி எனப்படும். என டிகாக் அவர்கள் இலக்கணம் வகுத்துள்ளார்.
7.
1949 ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, முதலீடு செய்வதற்கோ, கடன் வழங்குவதற்கோ, கேட்ட உடன் அல்லது காசோலை, வரையோலை அல்லது பணவிடை மற்றுமுள்ள முறைகளில் திரும்பக் கொடுப்பதற்கோ பொதுமக்களிடமிருந்து வைப்பு தொகைகளை பெற்றுக் கொள்ளும் செயல் வங்கியியல் எனப்படும்.
8.
(i) கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சேவைத் தொழில்கள் பல நூற்றாண்டாக இருந்து வருகின்றன.
(ii) உலக வர்த்தகத்தில் சேவைத் தொழில்கள் 1970 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.
(iii) உலகப் பொருளாதாரத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த துறையாகச் சேவைத் துறை உருவாகியுள்ளது.
9.
(i) ஓர் ஆளுநர் மற்றும் நான்கு துணைநிலை ஆளுநர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பதவி வகிக்கும் வகையில் நியமிக்கப்படுவார்கள்.
(ii) பல்வேறு துறைகளில் இருந்து பத்து இயக்குநர்கள்.
(iii) இரண்டு அரசு அதிகாரிகள்.
(iv) நான்கு இயக்குநர்கள் (வட்டார வாரியங்களில் இருந்து ஒவ்வொருவர்).
10.
(i) இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா பண வெளியீடு மற்றும் மைய வங்கிக்கான பிற கடமைகளை ஆற்றி வந்தது.
(ii) 1926 ஆம் ஆண்டில் ஹில்டன் யங் ஆணையம் அல்லது இந்திய நாணய மற்றும் நிதியில் தொடர்பான இராயல் ஆணையம் ஒரு மைய வாங்கி உருவாக்க பரிந்துரைத்தது.
(iii) அதன் விளைவாக இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-இல் உருவாக்கப்பட்டு இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1 1935 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. ஆனால் நாட்டுடைமையாக்கப்பட்டது. ஏப்ரல் 1 1949 ஆம் ஆண்டு ஆகும்.
11.
(i) ஒரு நாட்டின் வர்த்தகம், வாணிகம் மற்றும் தொழில்களின் நரம்பு மண்டலமாக வங்கிக் கருதப்படுவகிறது.
(ii) இது நாட்டின் வழக்கமான செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டுக்கான பணத்தேவைகளைச் சந்திப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மைய வங்கி உள்ளது.
(iii) இது நாட்டின் அரசாங்கத்திற்குச் சொந்தமானது. ஒரு நாட்டின் அனைத்து வங்கிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்த உச்ச வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
12.
இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் இந்த மத்திய தலைமை அலுவலகம் 33 துறைகளைக் கொண்டுள்ளது. மும்பை, டில்லி மற்றும் கொல்கத்தா சென்னை ஆகிய நான்கு மண்டல அலுவலகங்கள் துணைநிலை ஆளுநர்களின் தலைமையில் செயல்படும் வட்டார வாரியங்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன. 19 பிராந்திய அலுவலகங்களும் 11 துணை அலுவலகங்களும் ரிசர்வ் வங்கி மத்திய இயக்குநர்கள் வாரியத்தால் 21 உறுப்பினர்களும் இந்திய அரசால் நியமிக்கப்படுவார்கள். அதில் உள்ளவர்கள்.
(i) ஒரு ஆளுநர் மற்றும் நான்கு துணைநிலை ஆளுநர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பதவி வகிக்கும் வகையில் நியமிக்கப்படுவார்கள்.
(ii) போல்வேறு துறைகளில் இருந்து பத்து இயக்குநர்கள்.
(iii) இரண்டு அரசு அதிகாரிகள்.
(iv) நான்கு இயக்குநர்கள் (வட்டார வாரியங்களில் இருந்து ஒவ்வொருவர்).
13.
(i) உலக நிதி நிறுவனங்களில் இந்தியாவின் பிரதிநிதி: சர்வதேச வங்கியில் தரநிலைகளுக்கிணங்க நல்லிணக்கம் மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்காக இந்திய ரிசர்வ் பேலஸ் குழுவுடன் 1997-ஆம் ஆண்டு முதல் இணைந்து செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) டிசம்பர் 27, 1945 இந்திய அரசின் பிரதிநிதியாக இந்திய ரிசர்வ் வங்கி இருந்து வருகிறது.
(ii) இந்திய வங்கிகளின் கட்டமைப்பினை ஒருங்குப்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடுதல்:
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒழுங்குபடுத்த விரிவான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்து வழங்கி வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 மற்றும் வணிக வங்கிகளின் ஒழுங்கு முறைச் சட்டம் 1949 ஆகியவற்றின் கீழ் வணிக வங்கிகளுக்கு உரிமம் வழங்குதல், கட்டுப்படுத்தல் மற்றும் மேற்பார்வையிடுதல் போன்ற அதிகாரங்களை ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது.
(iii) பணவியல் உச்சநிலை அதிகாரி: விலைவாசி நிலைத்தன்மையையும் பணவீக்கப் போக்குகளையும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் நாட்டின் பணவியல் கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி நிர்மாணிக்கிறது. இது விவசாயத்திற்கான நிதிகளை வழங்குதல், திட்டங்களை அமல்படுத்துவதற்கான ஆதாரங்களை திரட்டுதல் வாங்கி கடன் மற்றும் சர்வதேச நிதி சம்பந்தமான சட்டங்களை இயற்றுதல் பற்றிய ஆலோசனைகளை அரசுக்கு வழங்குகிறது.
(iv) பொருளாதார அளவுருக்களை கூர்ந்து கண்காணித்தல்:
பொருளாதாரத்தின் பரந்த அளவுருக்களான வேலைவாய்ப்பு நிலை, அளவுகள் மற்றும் உற்பத்தி அளவு வர்த்தகச் சுழற்சிகள் அயல்நாடுகளின் முதலீட்டு உள்ளீடுகள் மற்றும் செலுத்துதல் சமநிலை போன்றவைகள் இந்திய ரிசர்வ் வங்கி கூர்ந்து கண்காணித்துப் பொருளாதார உறுதித்தன்மை மற்றும் வளர்ச்சியை அடைவதற்கு உதவுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி மேற்பார்வை வல்லுநர் குழு குறைந்தபட்சம் மதத்திற்கு ஒரு முறையாவது கூடிநாடு முழுவதும் நடப்பு நிகழ்வுகள் அனைத்தையும் கவனமாகக் கண்காணித்து முடிவெடுக்கிறது.
(v) புதிய சவால்களுக்கு உடனடியாக பதிலளிப்பது: இந்திய வங்கி அமைப்புக்கு எதிராக எப்பொழுதும் புதிய சவால்கள் எழுந்தாலும், இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாக ஒரு குழுவினை ஏற்படுத்தி ஆய்வு செய்தல் மற்றும் தலைமை சுற்றறிக்கைகளை வெளியிடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு இந்திய வங்கிகளை வலுப்படுத்துகிறது. ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைகள் மற்றும் வல்லுநர் குழு அறிக்கைகளில் வளம் சேர்க்கும் பல தகவல்களை காணலாம். (எ.கா) கோபால் கிருஷ்ணன் குழு தகவல் பாதுகாப்பு, மின்னணு வங்கி ஏப்ரல் 2010.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards