11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
சில்லறை வியாபாரம் செய்தல்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
நிரந்தர இடமின்றி வெவ்வெறு இடங்களுக்கு சென்று குறைந்த விலையுள்ள பொருட்களை வியாபாரம் செய்வோரை ______ என்பர்.
மடங்கு கடைகள்
முகவர்கள்
தெருக்கடை வியாபாரிகள்
சுற்றாடும் வியாபாரிகள்
2.
ஒரு குறிப்பிட்ட வகை பொருட்களை மட்டும் விற்கும் சில்லறை கடைகள் ________ என அழைக்கப்படுகிறது.
சந்தை வியாபாரிகள்
ஒரே வகை பண்டக சாலைகள்
பொது பண்டக சாலைகள்
தெருக்கடை வியாபாரிகள்
3.
சில்லறை வியாபாரிகள் _______ அளவில் பொருட்களை வைத்திருப்பர்
சிறிய
பெரிய
நடுத்தர
அளவான
4.
அஞ்சல் வழி வியாபாரத்தை பற்றி விளக்குக.
5.
சிறப்பங்காடிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
6.
வாடகை கொள்முதல் முறைக்கும் தவணை விற்பனை முறைக்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.
7.
சிறப்புப் பண்டக சாலைகள் என்றால் என்ன?
8.
விற்பனை எந்திரத்தின் இரண்டூ நன்மைகளை கூறுக.
9.
மடங்குக் கடையின் பொருள் யாது?
10.
சில்லறை வியாபாரம் செய்தல் என்றால் என்ன?
11.
உள்நாட்டு வியாபாரத்தில் தொழில் வர்த்தகச் சங்கங்களின் பங்கினை விவரி.
12.
நுகர்வோர் கூட்டூறவுப் பண்டகசாலை என்றால் என்ன?அதன் நன்மைகள் யாவை?
1.
(d)
சுற்றாடும் வியாபாரிகள்
2.
(b)
ஒரே வகை பண்டக சாலைகள்
3.
(a)
சிறிய
4.
வாடிக்கையாளர்களிடமிருந்து ஆணைகளைப் பெற்று பொருட்களை அஞ்சல் வாயாக அவர்களின் வீட்டிற்கே அனுப்பி வியாபாரம் செய்வதை அஞ்சல் வழி வியாபாரம் என்கிறோம்.
செயல் முறை:
(i) விளம்பரம் செய்தல்: விற்கப்படும் பொருட்களைப் பற்றிய விவரம் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, கைபேசி போன்றவைகள் மூலம் விளம்பரம் செய்யப்படுகிறது.
(ii) ஆணைகளைப் பெற்று சரக்கு அனுப்புதல்: சரக்குகளை அனுப்பக் ஆணைகளைப் பெற்றவுடன், தபால் நிலையம் மூலமாக மதிப்பு செலுத்தத்தக்க அஞ்சல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு சரக்குகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
(iii) உரிய தொகையைப் பெறுதல்: வாடிக்கையாளர் பொருட்களின் விலையை முன்கூட்டியே முழுவதுமாகவோ அல்லது சரக்கை பெட்ரா உடனேயே செலுத்தலாம்.
5.
சிறப்பங்காடிகளின் சிறப்பியல்புகள் பின்வருமாறு:
(i) சிறப்பங்காடிகள் பெரும்பாலும் நகரின் மையமாக அங்காடிப் பகுதிகளில் அமைந்திருக்கும்.
(ii) பொருள்கள் யாவும் விலை, தரம் மற்றும் ரகம் வாரியாக அறைகலன்கள் மீது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
(iii) வாடிக்கையாளர்கள் தேவையானப் பொருட்களை தாமே எடுத்து வந்து, காசாளரிடம் உரிய தொகையை செலுத்தி வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.
(iv) இங்கு ரொக்க விற்பனை மட்டுமே உண்டு. கடன் விற்பனை கிடையாது.
(v) சிறப்பங்காடிகள் பல துறைகளாக அமைக்கப்பட்டுள்ளது.
(vi) இதை அமைக்க அதிக முதலீடு தேவைப்படுகிறது.
6.
| வாடகைக் கொள்முதல் முறை | தவணை முறை விற்பனை |
| (i) இறுதித் தவணை செலுத்தும் வரை பொருளின் உரிமை விற்பனையாளரிடமே இருக்கும். |
முதல் தவணை செலுத்திய உடனேயே வாங்குபவர் உரிமையாளர் ஆகிறார். |
| (ii) பொருளை வாங்கியவர் அதனை வாடகைக்கோ அல்லது விற்கவோஅல்லது அடகு வைக்கவோ முடியாது. |
பொருளை வாங்கியவர் அப்பொருளை எதுவும் செய்யலாம். |
| (iii) தவணைத் தொகையை செலுத்தத் தவறினால் வாங்கியவர்களிடம் இருந்து பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொள்ளலாம். |
தவணைத் தொகையை செலுத்தத் தவறினால் வாங்கியவர்களிடம் இருந்து பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. |
| (iv) வாராக் கடன் போன்ற நட்டங்கள் இதில் அதிகம் ஏற்படுவதில்லை. |
வாராக் கடன் போன்ற இதில் அதிகம் ஏற்ப வாய்ப்பு உண்டு. |
7.
ஒரு வகைப் பொருட்களில் ஒரு குறிப்பிட்ட வழி பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் சில்லறைக் கடைகள் சிறப்புப் பண்டக சாலைகள் எஅல்வர் மட்டும் விற்போர், துணைக்கடையில் குழந்தைகள் ஆடைகளை மட்டும் விற்போர் ஆகியோர் அடங்குவர்.
8.
(i) இது வடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை அளிக்கிறது.
(ii) இது முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டு எந்த நேரத்திலும் பொருட்களை வாங்கி கொள்ளும் வசதியை அளிக்கிறது.
(iii) வியாபாரத்தின் அளவு அதிகரிக்கிறது.
9.
தயாரிப்பாளர்கள் அல்லது இடைநிலையர்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ஒரே மாதிரியான கடைகளை அமைத்து தரமான பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை கடைகள் மடங்கு கடைகள் எனபப்டும். இவற்றை அமெரிக்காவில் தொடர் பண்டகசாலைகள் என்றும், ஐரோப்பாவில் மடங்குக் கடைகள் என்றும் அழைப்பர்.
10.
நுகர்வோருக்கு நேரடியாக பொருட்களையும் சேவைகளையும் சிறிய அளவில் விற்பனை செய்யும் நடைமுறை சில்லறை வியாபாரம் செய்தல் ஆகும்.
11.
(i) இச்சங்கமானது நாட்டிலுள்ள வியாபார, வர்த்தக மற்றும் தொழிற்சாலைகளுக்கு பாதுகாவலாகச் செயல்படுகிறது.
(ii) நாட்டின் உள்நாட்டு வியாபார பெருக்கத்திற்கு செயல் ஊக்கியாகத் திகழ்கிறது.
(iii) வியாபாரம், தொழில் மற்றும் தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதிலும் மற்றும் நடைமுறைப்படுத்துவதிலும் அரசுடன் இணைந்து செயல்படுகிறது.
(iv) மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து விதிமுறைகள், மாநில சரக்குகள் பரிமாற்றத்திற்கான வசதிகளை உருவாக்குகிறது.
(v) மத்திய சரக்கு மற்றும் சேவை வரிகள், மணிலா சரக்கு மற்றும் சேவை வரிகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது.
(vi) வேளாண் பொருட்கள் மற்றும் வேளாண்மை சம்பந்தப்பட்ட பொருள்களை விற்பனைக்கு திட்டமிட்டு அரசுக்கு ஆலோசனைகள் வழங்குகிறது.
(vii) சரியான அளவுகள் மற்றும் எடை போடுதல் கலப்படம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது.
(viii) அரசுகளுடன் பேசி மின்சாரம் சாலை வசதி, தொடர் வண்டி வசதி மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றை விரிவாக்கம் செய்கிறது.
(ix) தொழிலாளர் சட்டங்கள் வேலைவாய்ப்பு, வேலைக்குறைப்பு, ஈடுகட்டுதல் போன்றவை பற்றி அரசுடன் பேசி சரியான முடிவுகள் எடுக்கிறது.
12.
நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை ஒரு சில்லறை விற்பனை நிலையமாகும். நுகர்வோர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்களுக்காவே தொடங்கி, தாமாகவே நடத்தி தங்களின் உறுப்பினர்களுக்கே, பொருட்களையும் சேவைகளையும் குறைந்த விலையில் விற்பனை செய்து பயனடைகிறார்கள். இது குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் ஒன்று சேர்ந்து, குறைந்த பட்சம் 25 நபர்களைக் கொண்டு கூட்டுறவு சட்டத்தின்படி பதிவு செய்து நடத்தப்படும் ஒரு அமைப்பு ஆகும்.
நுகர்வோர் கூட்டூறவுப் பண்டகசாலையின் நன்மைகள்:
(i) கூட்டுறவு பண்டக சாலையின் பங்குகள் குறைந்த மதிப்பில் இருப்பதால் சமுதாயத்தின் நலிந்த பிரிவினரும் அதன் உறுப்பினராகி அதன் பயனைப் பெற முடிகிறது.
(ii) 'ஒருவருக்கு ஒரு வாக்கு' என்ற கோட்பாடு பின்பற்றப்படுவதால் மக்களாட்சி முறையில் இது இயங்குகிறது.
(iii) கலப்படமற்ற பொருட்கள் வழங்கப்படுவதால், உறுப்பினர்கள் பெரிதும் பயன்பெறுகின்றனர்.
(iv) குறைவாக எடை போடுதல், தவறான எடைக்கல்களைப் பயன்படுத்துதல், குறைவான அளவு போன்ற நேர்மையற்ற வணிக முறைகள் கூட்டுறவு நிறுவனத்தில் இல்லை.
(v) பொதுவாக ரொக்கத்தின் அடிப்படையிலேயே விற்பனை நிகழ்வதால், வாராக் கடனால் ஏற்படும் நட்டம் தவிர்க்கப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards