11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/01/2020
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
கீழ்க்கண்டவற்றில் எது உலக வங்கியின் கூட்டு நிறுவனம் அல்ல?
பன்னாட்டு வளர்ச்சி சங்கம்
உலக வர்த்தக அமைப்பு
சர்வதேச நிதி நிறுவனம்
பன்னாட்டு முதலீட்டு உத்திரவாத நிறுவனம்
2.
கூட்டாண்மை பதிவுச் சட்டம்
1956
1952
1932
1955
3.
இந்தியா மைய வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு
1932
1935
1947
1949
4.
நிலப் போக்குவரத்தில் அல்லாத ஒன்று
பொதி விலக்கு
டிராம் வண்டிகள்
மாட்டு வண்டிகள்
டிராம் வண்டிகள்
5.
தனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.
விரைவாக
தாமதமாக
கலந்து ஆலோசித்து
எதுவுமில்லை
6.
ஒரு குறிப்பிட்ட வகை பொருட்களை மட்டும் விற்கும் சில்லறை கடைகள் ________ என அழைக்கப்படுகிறது.
சந்தை வியாபாரிகள்
ஒரே வகை பண்டக சாலைகள்
பொது பண்டக சாலைகள்
தெருக்கடை வியாபாரிகள்
7.
பன்னாட்டு நிறுமம் என்பது
எந்த ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது
உலகில் முதல் 200 நிறுவனங்களின் ஒன்றாகும்
ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்டில் நிறுவனங்களை கொண்டுள்ளது
இவை அனைத்தும்
8.
எந்த ஒரு வகையான சேவைகள் வணிக வங்கியால் வழங்கப்படுவது இல்லை.
வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்
வங்கி மேல்வரைப்பற்று
ரொக்கக் கடன்
உண்டியல்களைத் தள்ளுபடி செய்தல்
9.
ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தவர்
ராபர்ட் ஓவென்
H ,C கால்வெர்ட்
டால்மாக்கி
லம்பேர்ட்
10.
உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது
கிராம சேமிப்பு
வணிகச் சேமிப்பு
தொழிற்துறை வளர்ச்சி
விவசாய வளர்ச்சி
11.
இறக்குமதியாளரால் தயாரிக்கப்பட்டு சரக்கை வாங்குவதற்கு ஏற்றுமதியாளருக்கு அனுப்பப்படும் ஆவணம் ________ ஆகும்.
இடாப்பு
சரக்காணை
விசாரணை
கப்பல் வாடகை முறி
12.
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, ____________ ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது.
1936
1935
1934
1933
13.
உள்நாட்டூ வியாபாரத்தை வகைகளாக பிரிக்காலம்
மூன்று
நான்கு
இரண்டு
ஐந்து
14.
உள் நாட்டிலிருந்து பொருட்கள் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _________ எனப்படும்.
உள்நாட்டு வியாபாரம்
ஏற்றுமதி
அயல் நாட்டு வியாபாரம்
இணைவினை
15.
கணக்கீட்டு ஆண்டு என்பது
ஏப்ரல் 2 முதல் மார்ச் 31 வரை
ஏப்ரல் 3 முதல் பிப்ரவரி 28 வரை
சூலை 1 முதல் சூன் 30 வரை
சனவரி 2 முதல் டிசம்பர் 31 வரை
16.
உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது
10
20
25
50
17.
கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.
பங்காதாயம்
இலாபம்
வட்டி
இவை எதுவும் இல்லை
18.
19.
அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன பண்டகக் காப்பக நிறுவனம் _____
பிணைய காப்பு பண்டகக் காப்பகங்கள்
பொதுக் பண்டகக் காப்பகங்கள்
இந்திய உணவுக் கழகம்
தானியங்கி பண்டகக் காப்பகங்கள்
20.
வியாபாரம் மற்றும் வணிகம் _____ பேரரசில் பொதுவானவையாக இருந்தது
பல்லவர்
சோழர்
பாண்டியர்
சேரர்
21.
பன்னாட்டு வணிகம் நாட்டின் கலாச்சாரத்தை எவ்வாறு பாதிக்கிறது?
22.
அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் ஏதேனும் இரண்டை குறிப்பிடுக.
23.
பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் வியாபாரம் செய்யப்பட்ட பொருட்கள் யாவை ?
24.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் என்பது குறித்து நீ அறிவது யாது?
25.
தனியார் மூலதனத்தின் உள்ளடக்கம் யாது?
26.
வருமான வரி என்றால் என்ன?
27.
பல்வேறு வகையான பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
28.
29.
எந்த வகையில் தொழில் செயல்முறை புற ஒப்படைப்பு முக்கியமென நினைக்கிறாய்?
30.
நெறிமுறை நடத்தைகள் பாதிக்கும் காரணிகளில் இரண்டைக் கூறு.
31.
32.
உலக வங்கியின் நோக்கங்கள் (Objectives of World Bank) யாவை?
33.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காஞ்சிப் பகுதியில் பொருட்கள் விற்குமிடத்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்
34.
சிறப்பங்காடிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
35.
வணிக வங்கிகளின் பலதரப்பட்ட வங்கி சேவைகளைச் சுருக்கமாக விளக்குக.
36.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் யாவை?
37.
தனியாள் வணிகம் -வரைவிலக்கணம் தருக
38.
ஒப்பந்த நிறைவேற்றம் என்றால் என்ன?
39.
இந்தியக் காப்பீட்டு ஒழுங்கமைப்பு ஆணையம் (IRDAI) என்றால் என்ன?
40.
தொழிலின் கருத்துக்களை விவரி
41.
சிறுகுறிப்பு வரைக. 1) இறக்குமதி உரிமம் பெறுதல். 2) வியாபார தகவல் வினவல்.
42.
இந்திய ரிசர்வ் வங்கியின் பாரம்பரியப் பணிகள் யாவை?
43.
பன்னாட்டு நிதியின் முக்கியத்துவத்தை விவரி?
44.
சரக்கு மற்றும் சேவை வரியின் நன்மைகள் விளக்குக.
45.
வாணிபச் சமநிலையின் சிறப்புக்கூறுகளை விளக்குக.
46.
பன்னாட்டு நிறுவனம் என்றால் என்ன?
47.
வருமான வரியின் ஐந்து சிறப்பு கூறுகளை விளக்கி எழுதுக.
48.
துறைவாரி நிறுமத்தின் சிறப்பியல்புகள் யாவை?
49.
குறு சிறு மற்றும் நடூத்தர தொழில் நிறுவனங்கள் -வரையறை தருக
50.
51.
இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் பற்றி சர்வதேச தர நிர்ணயத்தின் பங்கு பற்றி விவாதிக்கவும்.
52.
53.
தொழிலின் சமூகப் பொறுப்புணர்வின் மூலம் நன்மை பெறும் குழுக்களை விவரி?
54.
போக்குவரத்தின் நன்மைகளை விவாதிக்க.
1.
(b)
உலக வர்த்தக அமைப்பு
2.
(c)
1932
3.
(d)
1949
4.
(d)
டிராம் வண்டிகள்
5.
(a)
விரைவாக
6.
(b)
ஒரே வகை பண்டக சாலைகள்
7.
(c)
ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்டில் நிறுவனங்களை கொண்டுள்ளது
8.
(a)
வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்
9.
(a)
ராபர்ட் ஓவென்
10.
(a)
கிராம சேமிப்பு
11.
(a)
இடாப்பு
12.
(b)
1935
13.
(c)
இரண்டு
14.
(b)
ஏற்றுமதி
15.
(a)
ஏப்ரல் 2 முதல் மார்ச் 31 வரை
16.
(c)
25
17.
(c)
வட்டி
18.
(a)
19.
(c)
இந்திய உணவுக் கழகம்
20.
(c)
பாண்டியர்
21.
பன்னாட்டு வணிகம் நாட்டின் கலாச்சார சீரழிவிற்கு காரணமாக அமைகிறது. இளைய தலைமுறையினர் அன்னிய நாட்டு மோகத்தில் தங்கள் வாங்கும் சக்தியையும் மீறி தங்களை சமுதாயத்தில் மேம்பட்டவர்களாக காட்ட முற்படுகின்றனர். இது பழைமையான நமது கலாச்சாரத்தை அழிக்க முற்படுகிறது.
22.
அஞ்சலக சேமிப்பு கணக்கு, அஞ்சலக தொடர் வைப்புக் கணக்கு, அஞ்சலக நிலை வைப்புக் கணக்கு, அஞ்சலக மாதாந்திர வருவாய் கணக்கு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு, கிசான் விகாஸ் பத்திரங்கள், சுகன்யா சமரித்தி கணக்கு.
23.
தாமிரம், துணி, உப்பு, பூக்கள், சந்தனம், மீன், நெல், தானியங்கள், முத்துக்கள்
24.
ஒரு தனிப்பட்ட முதலீட்டு நிறுவனம், முதலீட்டு நிதி, ஓய்வு கால நிதி ஆகியவை, வேறு நாட்டின் நிதிச் சந்தையில் முதலீடு செய்வதே, அயல்நாட்டு நிறுவன முதலீடு ஆகும். இது குறுகிய காலத்தில் திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ள முதலீடு ஆகும்.
25.
(i) அயல் நாட்டு முதலீடுகள்
(ii) நீண்டகாலக் கடன்கள்
(iii) அயல்நாட்டு நாணய வைப்பு
26.
ஒரு நபரின் வருமானத்தின் மீது சமத்தப்படும் வரி வருமான வரி எனப்படும். எது ஒரு நேர்முக வரி ஆகும். இவ்வரியில் வரிச் சுமையினை மற்றொருவர் மீது மாற்ற இயலாது.
27.
(i) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்.
(ii) இந்தியன் ஏர்லைன்ஸ்
(iii) ஏர் இந்தியா
(iv) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC).
28.
29.
வெளி நிறுவனங்களிடமிருந்து அடிப்படையில் சிறப்பு வேலைகளை (அ) செயல்களை பெறுவதற்கு தொழில் செயல்முறை புற திறனீட்டல் என்று பெயர்.வாடிக்கையாளரின் சேவையோ மையம் மற்றும் புள்ளி விவரங்களை கணினிமயமாக்குதல் போன்ற செயல்களை முக்கியமென நினைக்கின்றேன்.இதனால் நிறுவனங்களின் செலவும் குறைகின்றது.
30.
(i) நியாயமற்ற முறையில் பொருட்களை விற்றல்.
(ii) தமற்ற பொருட்களை விற்றல்.
(iii) நுகர்வோர்களின் குறைகளை தீர்ப்பதில்லை.
31.
32.
(i) முதல் உலகப்போரால் பாதிக்கப்பட்ட நாடுகளை புனரமைத்தல்,வளர்ச்சியடையச் செய்தல் மற்றும் உறுப்பு நாடுகளை முன்னேற்றுவதற்கு நீண்ட கால மூலதனத்தை வழங்குதல்
(ii) உறுப்பினர் நாடுகளில் மூலதன முதலீட்டை ஊக்குவித்தல்
(iii) உறுப்பினர் நாடுகளில் உள்ள சிறிய மற்றும் பெரிய அலகுகள் மற்றும் அந்நாடுகளில் துவங்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கான உத்தரவாதங்களை வழங்குதல்
(iv) போரால் பாதிக்கப்பட்ட நாடுகளை வளர்ச்சியடைந் நாடுகளாக மற்றும் வகையில் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவதை உறுதி செய்தல்.
(v) நீண்ட கால மூலதனத்தை வழங்குவதின் மூலம் வணிக செலுத்து நிலையில் பன்னாட்டு வணிகத்திலும் சமமான வளர்ச்சியை உறுதி செய்தல்.
33.
பல பொருள்கள் விற்குமிடம் அங்காடி என அழைக்கப்பட்டுள்ளது.
பகலில் நடப்பதை நாளங்காடி எனவும்
இரவில் நடப்பதை அல்லங்காடி எனவும் குறிப்பிடுகிறார்.
அவர் மேலும் மதுரை ஒரு இரு பெரு நியாமத் எனப்படும் தூங்காநகரம் எனக் குறிப்பிடுகிறார்.
அதாவது இடைவெளியின்றி 24 மணி நேரமும் வியாபாரம் நடந்ததாகக் கூறுகிறார்.
34.
சிறப்பங்காடிகளின் சிறப்பியல்புகள் பின்வருமாறு:
(i) சிறப்பங்காடிகள் பெரும்பாலும் நகரின் மையமாக அங்காடிப் பகுதிகளில் அமைந்திருக்கும்.
(ii) பொருள்கள் யாவும் விலை, தரம் மற்றும் ரகம் வாரியாக அறைகலன்கள் மீது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
(iii) வாடிக்கையாளர்கள் தேவையானப் பொருட்களை தாமே எடுத்து வந்து, காசாளரிடம் உரிய தொகையை செலுத்தி வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.
(iv) இங்கு ரொக்க விற்பனை மட்டுமே உண்டு. கடன் விற்பனை கிடையாது.
(v) சிறப்பங்காடிகள் பல துறைகளாக அமைக்கப்பட்டுள்ளது.
(vi) இதை அமைக்க அதிக முதலீடு தேவைப்படுகிறது.
35.
முதன்மை செயல்பாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.வைப்புகளை ஏற்றல்,கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல், கடனை உருவாக்குதல்.
வைப்புக்களை ஏற்றல்:
இன்றைய தினம் வங்கிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுகொண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து ஈர்ப்பதற்காகக் கூடுதல் வசதிகளை வைப்புக் கணக்குகளுக்கு வழங்குகின்றன.பெரிய அளவிலான வைப்பு கணக்குகளை கேட்பு வைப்புகள் மற்றும் கால வைப்புகளாக வகைப்படுத்தலாம்.
(i) கேட்பு வைப்புகள்: இந்த வைப்புகள் எந்த நாளிலும் கேட்கும்போது திருப்பி அளிக்கப்பட வேண்டும்.இது சேமிப்பு வைப்புக்கள் மற்றும் நடப்பு வைப்புகளை உள்ளடக்கியது.
(ii) சேமிப்பு வைப்புகள்: பொதுமக்கள் இந்தக் கணக்கில் தங்கள் சேமிப்புகளை வைப்புகள் செய்யலாம்.ஒரு தனிநபரின் பெயரிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் இந்தக் கணக்கினைத் தொடங்கலாம்.
(iii) நடப்பு வைப்புகள்: நடப்பு வைப்பு கணக்கு வணிக நிறுவனங்களுக்கு ஏற்றது.தனிநபர்கள் கூட இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.|
(iv) கால வைப்புகள்: ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் திருப்புச் செலுத்துகின்ற வகையில் உள்ள நிலையான வைப்புகள்,தொடர் வைப்புகள் அடங்கும்.
(v) நிலையான வைப்புகள்: ஒரு தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வட்டிக்கு வைப்பு செய்வதைக் குறிக்கும்.நிலையான வைப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
(vi) தொடர் வைப்புகள்: ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு வருடத்திற்கோ அல்லது இந்து வருடங்களுக்கோ அல்லது ஒப்பு கொள்ளப்பட்ட காலத்திற்கோ வைப்பு செய்வதைக் குறிக்கும்.
கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல் முன் பணம்:
வங்கி மேல் வரைப் பற்று,ரொக்கக் கடன், மாற்றுச் சீட்டுகளை தள்ளுபடி செய்தல்.
கடன்கள்: குறுகிய கால மற்றும் நடுத்தரக் காலக் கடன்களை வணிக வங்கிகள் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்குகின்றது.வீட்டுக் கடன், நுகர்வோர் கடன், வாகனக் கடன், கல்விக் கடன்,நகைக் கடன்,இரண்டாம் நிலை பணிகள், முகமைப் பணிகள்,பொதுப்பயன்பாட்டுப் பணிகள்.
36.
(i) ஓர் ஆளுநர் மற்றும் நான்கு துணைநிலை ஆளுநர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பதவி வகிக்கும் வகையில் நியமிக்கப்படுவார்கள்.
(ii) பல்வேறு துறைகளில் இருந்து பத்து இயக்குநர்கள்.
(iii) இரண்டு அரசு அதிகாரிகள்.
(iv) நான்கு இயக்குநர்கள் (வட்டார வாரியங்களில் இருந்து ஒவ்வொருவர்).
37.
தனியாள் வணிகம் என்பது வியாபார அலகின் ஒரு வகையாகும். அதில் ஒரு நபர் தனது சொந்த பொறுப்பில் மூலதனத்தை ஏற்படுத்தி நிறுவனத்தின் இடர்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு வியாபாரத்தை மேலாண்மை செய்வதாகும்.
38.
ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்கள் தமது கடமையை நிறைவேற்றிவிட்டால் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும். பிரிவு 37 படி நிறைவேற்றும் ஒப்பந்த சட்டம் அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் செயல்படுத்த முடியவில்லை எனில், ஒப்பந்தத்தில் ஒவ்வொரு நபரும் தாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக முனைவு செய்வதன் மூலமோ நிறைவேற்றலாம்.ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட இரண்டு வழிகள் உள்ளன அவை, உண்மையான நிறைவேற்றம், நிறைவேற்றிவதற்கான முனைவு.
(i) உண்மையான நிறைவேற்றம் : ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் தங்கள் கடமைகளை செய்தால் அது உண்மையான நிறைவேற்றம் ஆகும்.இதில் ஒப்பந்தப்படி நபர்கள் அவர்கள் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.
(ii) நிறைவேற்றுவதற்கான முனைவு : வாக்குறுதி அளித்தவர் ஒப்பந்தத்தின் கீழ், தன ஆற்ற வேண்டிய கடமையை நிறைவேற்ற முன்வந்தும் அதை வாக்குறுதி பெற்றவர் ஏற்க மறுக்கிறார்.இது நிறைவேற்றுவதற்கான முனைவு அல்லது முயற்சி செய்த நிறைவேற்றம் என்கிறோம் .எனவே இது உண்மையான நிறைவேற்றம் கிடையாது.ஆனால் நிறைவேற்றத்திற்கு சமமாகக் கருதப்படும்.
39.
(i) இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் Insurance Regulatory Development Authority of India): இந்தியாவிலுள்ள காப்பீட்டு நிலையங்கள் யாவும் மேற்பார்வை செய்து ஒழுங்குபடுத்த ஓர் உயரிய தலைமை அமைப்பாக தனித்துச் செயல்படும் சட்டப்படியான ஆணையம் இந்தியக் காப்பீட்டு வளர்ச்சி ஒழுங்கமைப்பு ஆணையம் ஆகும்.
(ii) இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட(IRDAI Act 1999) சட்டத்தின் படி 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.இதன் தலைமை அலுவலகம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் உள்ளது.
(iii) IRDAI அமைப்பு முறை : இந்தியக் காப்பீடு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் அமைப்பு முறையில் பத்து பேர் கொண்ட குழுவில்,
1.நடுவண் அரசால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவர் (ஐந்து ஆண்டுகளுக்கு,உயர்ந்தபட்ச வயது 60).
2.ஐந்து முழு நேர உறுப்பினர்கள் (உயர்ந்த பட்ச வயது 62).
3.நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் (5 ஆண்டுகளுக்கு மிகாமல் என்ற அடிப்படையில்) உருவாக்கப்பட்டது.
40.
தொழில் நடவடிக்கைகள் பொருட்களை உற்பத்தி செய்வது அல்லது தயாரிப்பு நிலைகள் வழியே செலுத்துவதுடன் தொடர்புடையது ஆகும். உற்பத்தி தொழில் மூலம் நுகர்வு பொருட்களுக்கு மூலப் பொருட்களை வாங்குவது மூலம் பயன்பாடு உருவாகிறது. இறுதியாக நுகர்வோரை சென்றடைகிறது.
41.
1. இறக்குமதி உரிமம் பெறுவதனால் (Obtaining Import License): இறக்குமதியாளர் இறக்குமதி உரிமத்தை அயல்நாட்டு வணிக பொது இயக்குனரிடமிருந்தோ அல்லது அனுமதி பெட்ரா மண்டல அதிகாரியிடமிருந்தோ (Regional Anthority) பெற வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் கட்டப்படுத்தப்பட்ட பொருள் (Prohibited goods) மற்றும் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் (Canalised Goods) என மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட வகையை சாராத பொருட்களை இறக்குமதி செய்ய எவ்வித தடையும் இல்லை. எதற்கு இறக்குமதி உரிமம் தேவை இல்லை. இறக்குமதி உரிமம் மூலதளப் பொருட்களுக்கு 24 மாதமும் மற்ற பொருட்களுக்கு 18 மாதமும் செல்லுபடியாகும். இறக்குமதி உரிமத்தை சரக்கை அகற்றீடு செய்வதற்கும் அன்னிய செலாவணி பெறுவதற்கும் பயன்படுத்தவேண்டும். இறக்குமதியாளர் இணையதளத்தின் படிவம் ANF-IA மற்றும் பிற ஆவணங்களையும் பதிவு செய்து மின்னணு குறியீட்டு எண் (e-IE CODE) பெற்றுக்கொள்ளலாம்.
2. வியாபார தகவல் வினவல் (Receiving Trade Enuiry):
ஏற்றுமதியாளர் இறக்குமதியாளரிடமிருந்தோ அல்லது அவரின் முகவரிடமிருந்தோ பொருட்களை இறக்குமதி செய்வதற்கான எழுத்து மூலமான விசாரணையை பெறுகிறார். இதன் முதற்கட்டமாக கீழ்க்கண்ட தகவல்களை தருமாறு ஏற்றுமதியாளரிடம் கோருகிறார்.
1. பொருட்களின் அளவு, வடிவம், தரம், வணிகக்குறி பெயர் குறித்த விவரம்.
2. தயாராக உள்ள பொருட்களின் அளவு
3. பொருள்களின் விலை
4. கப்பலில் பொருட்களை அனுப்புவதற்கான நிபந்தனைகள்
5. பணம் செலுத்துவதற்கான நிபந்தனைகள்
6. பொருட்கள் விநியோகிக்கப்படும் கால அளவு
7. இறக்குமதி விசாரணை செல்லுபடியாகும் கால அளவு.
42.
(i) அரசின் வங்கியர் மற்றும் நிதி ஆலோசகராகச் செயல்படுதல்.
(ii) ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு வெளியிடுவதில் முற்றுரிமை.
(iii) வங்கியர்களின் வங்கி.
(iv) கடன் மற்றும் பணப்புழக்கத்தின் கட்டுப்பாட்டாளர். ரொக்க இருப்புவீதம், சட்டப்படியான நீர்மைத் தன்மை விகிதம், திறந்த சந்தை செயல்பாடுகள், கடன் தரத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.
(v) இறுதிநிலைக் கடன் ஈட்டுவோர்.
(vi) தீர்வக அமைப்பு சேவைகள்
(vii) அந்நியச் செலாவணிகளின் பாதுகாப்பாளர்.
(viii) அந்நிய செலாவணி விகிதத்தின் பராமரிப்பு.
(ix) நம்பகத் தன்மையுள்ள தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீடு.
43.
(i) பன்னாட்டு நிதியில் பல்வேறு நாடுகளின் நாணய ஒப்பிட்டு மதிப்புகளை மற்றும் அதன் மாற்று விகிதங்களையும் நிர்ணயிப்பதில் உதவி புரிகிறது.
(ii) இது பல்வேறு நாடுகளின் பணவீக்க வீதங்களை ஒப்பிட்டு, எந்த நாட்டுப் பாத்திரங்களில் முதலீடு செய்வது என்ற முடிவுகளை முதலீட்டாளர்கள் எடுக்க உதவுகிறது.
(iii) இது பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலைமைகளை அறிந்து கொள்வதற்கும் மற்றும் சந்தை நிலவரங்களை தெரிந்து கொள்வதற்கும் உதவுகிறது.
(iv) பன்னாட்டு நிதி அறிக்கை அமைப்பின் (IFRS) மூலம் பல்வேறு நாடுகளின் நிதி அறிக்கையை ஒப்பாய்வு செய்ய உதவுகிறது.
(v) இது பன்னாட்டு நிதி அமைப்புகளின் அடிப்படை கட்டமைப்புகளைப் அறிந்து கொள்ளவும் மற்றும் அவற்றிடையே சீர் நிலையைப் பராமரிப்பதற்கும் உதவுகிறது.
(vi) பன்னாட்டு பணவியல் நிதியம், உலக வங்கி போன்ற நிதி அமைப்புகள், பல்வேறு நாடுகளிடையே எழும் நிதி சார்ந்த பிரச்சனைகளில் தலையிட்டு அவற்றை சுமூகமாக தீர்க்க உதவுகின்றன.
44.
சமூகம் மற்றும் நாட்டிற்கு:
(i) சீரான தேசிய சந்தை அந்நிய முதலீட்டினை ஈர்க்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொருளாதாரத்தினை GST ஒன்றினைக்கிறது.
(ii) இறக்குமதி சரக்குகள் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்த சரக்குகள் இடையேயான வரிவிதிப்பில் சமநிலையை கொண்டு வருகிறது.
(iii) உற்பத்தி, ஏற்றுமதியினை ஊக்குவிக்கிறது.
(iv) அதே நேரத்தில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதன் முலம் வறுமையை ஒழிக்கிறது.
(v) வரி இணக்கத்தினை அதிகரிக்கிறது. அரசாங்கத்திற்கு வருவாயையும் அதிகரிக்கிறது.
(vi) இது வெளிப்படையானது மற்றும் உலக அளவில் வியாபார எளிமையில் இந்தியாவின் தரத்தை மேம்படுத்துகிறது.
(vii) சீரான வரி வீதங்கள் வரி ஏய்ப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வரி வீத வேற்றுமையை குறைக்கிறது.
வியாபார சமூகத்திற்கு:
(i) பதினேழு வரிகள் நீக்கப்பட்டு அவை அனைத்தும் ஒரே விதமான வரி அமைப்பாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது சில வரி விலக்குகளைக் எளிமையான வரி முறை ஆகும்.
(ii) உள்ளிட்டு வரி, வரியின் விழுதொடராக்கவிளைவினை குறைகிறது சராசரி வரிச் சுமை குறைவதன் மூலம் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கிறது அதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி என்ற திட்டத்திற்கு உதவுகிறது.
(iii) பொதுவான வழிமுறைகள் சரக்கு என்ற திட்டத்திற்கு உதவுகிறது.
(iv) GST பல்வேறு பதிவேடுகள் பராமரிப்பை குறைகிறது. மனித சக்தி மற்றும் வளங்களில் குறைவதன் மூலம் திறன் மேம்பாடு அடைகிறது.
(v) அனைத்து நடவடிக்கைகளும் GSTN மூலம் நடைபெறுவதால், ஊழலற்ற நிர்வாகத்திற்கு உறுதி செய்கிறது.
(vi) நாடு முழுவதும் ஒரே சீரான விலையை தருகிறது. அனைத்து மாநிலங்களிலும் வியாபார விருவாக்கத்தினை எளிதாக்குகிறது.
நுகர்வோருக்கான பயன்கள்:
(i) உள்ளீட்டு வரி நுகர்வோருக்கான விலையை குறைக்கிறது.
(ii) அனைத்து சிறு சில்லறை வணிகர்கள் வரிவிலக்கு பெறுகின்றனர். அதன் மூலம் நுகர்வோர்களின் செலவு குறைகிறது.
45.
46.
பன்னாட்டு நிறுமங்கள் என்பது (MNC) மிகப்பெரிய தொழிலமைப்பாகும். அவ்வமைப்பு பின்வருமாறு செயல்படும்.
(i) இதன் செய்ல்பாடுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட வேண்டும்.
(ii) பல நாடுகளில் இதன் உற்பத்தி, சந்தையியல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கை என உலகளவில் நடைபெறுகிறது.
(iii) தனது இலாபத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து ஈட்டுகின்றது. எ.கா. மைக்ரோ சாப்ட் நிறுவனம், நோக்கிய நிறுவனம், நெஸ்ட்லே, கோகோகோலா, IBM பெப்சிக்கோ, சோனி கார்ப்பரேஷன்.
47.
வருமானங்கள் வருமான வரிச் சட்டத்தின்படி தனித்தனியாக கணக்கிடப்படும். இத்தலைப்புகளின் கீழ் பெறப்படும் வருமானத்தின் கூட்டுத் தொகையிலிருந்து நட்டங்கள் ஏதேனும் இருப்பின் அவை கழிக்கப்பட்டு கிடைக்கும் தொகையே முழு மொத்த வருமானம் என அழைக்கப்படுகிறது.
(i) சம்பள வருமானம்
(ii) வீட்டு சொத்திலிருந்து வருமானம்
(iii) வாணிகம் மற்றும் அலுவல் சார்ந்த தொழிலின் வருமானம்
(iv) மூலதன ஆதாயங்கள்
(v) ஏனைய ஆதாரங்களிலிருந்து வருமானம் முழு மொத்த வருமானம்.
48.
சிறப்பியல்புகள்:
(i) இறுதியான பொறுப்புகள்: துறைவாரி நிறுவனங்களின் பொறுப்பு என்பது அத்துறையின் அமைச்சகத்துடன் தொடர்புடையது. பாராளுமன்றத்துக்கோ அல்லது மாநில அரசின் சட்டசபை பொறுப்புடையது ஆகும். துறைவாரி நிறுவனங்களுக்கு அத்துறையின் அமைச்சரிடமிருந்து அதிகாரம் கீழ்நோக்கியவாறு செல்கிறது.
(ii) அரசின் நிதியுதவி: பாராளுமன்றம் அல்லது சட்டசபையின் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் படி நிதியுதவி கிடைக்கிறது. அரசின் கருவூலத்திலிருந்து நிறுவனத்திற்கு செல்கிறது.
(iii) கணக்கியலும் தணிக்கையும்: துறைவாரி நிறுவனங்கள் சாதாரண வரவு செலவுத் திட்டமிடுதல் கணக்கியல் மற்றும் தணிக்கை நடைமுறைகள் அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.
(iv) மேலாண்மை: துறைவாரி நிறுவனங்களை அரசு அலுவலர்களே மேலாண்மைச் செய்கின்றன. அரசு அலுவலர்களுக்கு மணிச்சூழல் எவ்வாறு உள்ளதோ அதை ஒத்த பணிச்சூழல் இங்கும் நிலவுகிறது.
(v) சட்ட விலக்களிப்பு: அரசின் ஒப்புதலின்றி இந்நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க இயலாது.
49.
(i) குறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில்துறையில் ரூ 25. இலட்சத்திரகுள்ளும் சேவைத்தொழில் துறையில் ரூ 10 இலட்சத்திரகுள்ளும் முதலீடு செய்திருந்தால் அது குறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(ii) சிறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 25 இலட்சத்துக்கு மேல் 5 கோடிக்கு மிகாமல் சேவைத் தொழில் துறை உபகரணங்கலில் ரூ 10 இலட்சத்துக்கு மேல் ரூ 2 கோடிக்கு மிகாமல் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(iii ) நடுத்ததர தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 10 கோடிக்கு மிக்காமலும் சேவை தொழில் துறையில் உபகரணங்களில் ரூ 2 கோடிக்கு மேல் ரூ 5 கோடிக்கு மிகாமலும் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனம் என்று அழைக்கப்டும்
50.
51.
ஆசியா:
(i) அனைத்து ஆசிய நாடுகளில் இயங்கி வரும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு, தன்னிசையுடன் செயல்பட்டு இயக்குநர்கள் தேவைப்படுகின்றனர்.
(ii) குறைந்த பட்ச நிர்வாகக் குழுவில் மூன்றில் ஒரு பங்கு இயக்குனர்கள் தன்னிசையுடன் செயல்படும் நபர்களாக இருக்க வேண்டும்.2012 ல் சிங்கப்பூர் ஆளுகை குறியீடு அமைப்பு தன்னிசையாக செயல்படும் இயக்குனர்களை பரிந்துரை செய்கிறது.
(iii) இருப்பினும் குழுவின் தலைவருக்கு போதிய சுதந்திரம் அளிப்பதில்லை. வியட்நாம் நாட்டை தவிர்த்து மற்ற அனைத்து ஆசிய நாடுகளிலும் பொருளாதாரத்தில் தணிக்கை மற்றும் ஊதியம் போன்றவற்றில் குழுக்களின் பரிந்துரை தேவைப்படுகிறது.சீனாவில் தணிக்கை குழுவின் மூலமே தன்னிசையாக செயல்படும் இயக்குநர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்:
(i) நிறுவனங்களின் முதலீட்டாளர்களின் குழுவால் சி.ஐ.ஐ.(CII) நிறுவனங்களின் ஆளுமைக்கான கொள்கை குறைந்தபட்சம் 2/3 பங்கு இயக்குனர்கள் சுதந்திரத்தன்மை கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் எனக் கூறுகிறது.
(ii) ஒரு நியமனக் குழு மற்றும் நிறுவன ஆளுமைக்குழு ஆகியவை மூன்று தரநிலைக் குழுக்களில் ஓன்றாகும் மேலும் என் ஓய் எஸ் இ (NYSE) தணிக்கைக்குழு மற்றும் இழப்பிட்டுக் குழுவோடு சேர்த்து முற்றிலும் சுதந்திரமான இயக்குனர்கள் உருவாக்கப்பட வேண்டும்.
(iii) ஜீ 20, ஒ.இ.பி.டி கோட்பாடுகள் நியமனம்குழு உருவாக்கம் இணக்கமான முறையில் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை ஊக்கப்படுகிறது.
(iv) சீரான மற்றும் தகுதியான குழுக்கள் தேடலை ஒருங்கிணைக்கவும் வசதியளிக்கிறது.
52.
53.
பல்வேறு ஆர்வ குழுக்கள் , தொழில் சார்ந்த பொறுப்புணர்வுகள் :
(i) உரிமையாளர்கள் மீதான பொறுப்புணர்வு : எவர் ஒருவர் சொந்த மூலதனம் கொண்டு ஒரு தொழிலைத் தொடங்கி அதில் ஏற்படும் இடர்களை ஏற்கின்றாறோ அவரே தொழிலின் உரிமையாளராவார்.அத்தகைய உரிமையாளர்கள் ஏற்கும் தொழில் தொடர்பான பொறுப்புணர்வுகள் கீழ்வருமாறு.
1. தொழிலை சிறப்பாக இயக்குதல்
2. மூலதனம் மற்றும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தலாம்.
3. மூலதனத்தின் மீதான வளர்ச்சியை வரவேற்கும் வகையில் இருத்தல்.
4. நியாயமான வருமானம் தொடர்ந்து அளிக்கத்தக்க வகையில் மூலதனத்தை முறையாக முதலீடு செய்து கொள்வதாகும்.
(i) முதலீட்டாளர்கள் மீதான பொறுப்புணர்வு : தொழிலுக்கு தேவையான நிதியினை மூலதனமாக கீழ்க்கண்ட வழிகளில் எவர் ஒருவர் அளிக்கின்றாரோ அவரே முதலீட்டாளர்கள் என அழைக்கப்படுகின்றார்.அதாவது, பங்குகள் ,பத்திரங்கள்,வைப்புகள் மற்றும் பிற, மேலும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களும் இத்தகைய பிரிவில் உள்ளடக்குவார்கள் முதலீட்டாளர்களின் பொறுப்புகள் பின்வருமாறு: மூலதனத்தின் பாதுகாப்பை உறுதி செய்தல், முதலீட்டின் மீதான வட்டியை தொடந்து செலுத்துதல்.
(iii) குறித்த காலத்திற்குள் மூலதனத்தொகையை திருப்புச் செலுத்துதல் போன்றவைகளாகும்.
(iv) பணியாளர்கள் மீதான பொறுப்புகள் பின்வருமாறு : எந்த ஒரு தொழில் அமைப்பிற்கும் பணியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் மிகவும் அவசியமாகும்.இத்தகைய பணியாளர்கள் நிறுவனத்தின் நலன் கருதி தங்களுடைய திறனை முழுமையாக செலவிடுகின்றனர்.இந்நிலையில் தொழில் அமைப்புகள் அவர்களின் நளனின் அக்கறை கொள்வது மிக முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும்.பணியாளர்கள் மனநிறைவு பெறுவதன் மூலம் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் வெற்றி பெறுகின்றன.
1.பணியாளர்களின் கூலி மற்றும் ஊதியத்தை குறித்த காலத்தில் தொடர்ந்து வழங்குதல்.
2. பணியாற்றுவதற்கு ஏற்ற இணக்கமான சூழ்நிலைகளை உருவாக்குதல் மற்றும் இதர வசதி வாய்ப்புகளை நல்குதல்.
3. நல்ல தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல்.
4. பணிப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பினை உருவாக்குதல் ,அதாவது வருங்கால வைப்பு நிதி குழுக்காப்பீடு,ஓய்வூதியம் மற்றும் பணிவு ஓய்வு பயன்பாடு போன்ற வசதிகள்.
5. அவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல் அதாவது வீட்டுவசதி,போக்குவரத்து வசதி, சிற்றுண்டி சாலை வசதி குழந்தை காப்பகங்கள் மற்றும் பிற வசதிகள்.
6. குறித்த காலத்தில் பயிற்சி அளித்து அவர்களின் செயல்திறனை தரம் உயர்த்துதல்.
(v) பொருள் அளிப்பார்கள் தொடர்பான பொறுப்புணர்வு.உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான கச்சாப் பொருட்களை யார் வழங்குகின்றாரோ அவரே பொருள் வழங்குநர் எனப்படுவார்.நுகர்வோர்களுக்குத் தேவையான முடிவுப் பொருட்களை வழங்கும் சிலரை பதிவாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
1. பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான தொடர் ஆணையை வழங்குதல்.
2. நியாயமான விதிமுறைகள் மற்றும் பொறுப்புறுதிகளை வழங்குதல்.
3.கடனுக்கான காலக்கெடுவினை நியாயமான முறையில் அளித்தல்.
4. கடன் கடன் தொகையை தவணைக் காலத்திற்குள் திருப்புச் செலுத்துதல்.
(vi) வாடிக்கையாளர் தொடர்பான பொறுப்புகள் : வாடிக்கையாளரின் ஆதரவு இல்லாமல் எந்த தொழிலும் செய்லபடுவதில்லை.தொழிலின் சமூகப் பொறுப்புணர்விலும் வாடிக்கையாளர்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர்.
1.பொருட்கள் மற்றும் சேவைகள் வாடிக்கையாளரின் தேவையை நிறைவேற்றும் வகையில் இருக்க வகை செய்ய வேண்டும்.
2. பொருட்கள் மற்றும் சேவைகள் தரத்தில் மேம்பட்டு இருத்தல் வேண்டும்.
3. பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
54.
(i) இடப் பயன்பாட்டையும் காலப் பயன்பாட்டையும் உருவாக்குகிறது.
(ii) உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது.பொருளின் உற்பத்தி நோக்கம் நுகர்வு ஆகும்.பயனுள்ள போக்குவரத்து முறை காலம் மற்றும் இட வசதியுள்ள உருவாக்குவதன் மூலம் பொருட்களின் தேவை மற்றும் பொருட்களின் மதிப்பு ஆகியவற்றில் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.
(iii) அதிகமான பொருட்களுக்கான தேவை மற்றும் பல்வேறு நுகர்வுப் பொருள் களின் தேவையைத் தூண்டுகிறது.பொருந்தாத இயற்கை நிலைமைகள் உள்ள அல்லது ஒரு பிராந்தியத்தில் உற்பத்தி செய்ய முடியாத நுகர்வுப் பொருள்களைப் பெற இது உதவுகிறது.
(iv) சந்தையை மேம்படுத்துகிறது மற்றும் வளர்ந்து விரிவடையச் செய்கிறது.போக்குவரத்தின் முதன்மையான செயல்பாடானது உலகளாவிய பொருட்களின் உட்புற விநியோகத்தை செயல்படுத்துவதாகும்.
(v) இது நாடு முழுவதும் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் விலை உறுதிப்பாட்டிற்கு உதவுகிறது.
(vi) இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.மூலப் பொருட்கள், எரிபொருள் உழைப்பு மற்றும் முடிந்த தயாரிப்புகள் மற்றும் மூலதன பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது ஆகியன அனைத்துத் தொழில் துறையின் வளர்ச்சியில் வேளாண்மையிலிருந்து உற்பத்திக்கான ஒரு குறிப்பிடத்தக்க பங்கிணைனப் போக்குவரத்து வகிக்கிறது.
(vii) இது விசேசப்படுத்தி அதிக அளவு உற்பத்திக்கு உதவுகிறது.விசேஷப்படுத்தல் என்பது, சிக்கலான உற்பத்தி செயல்முறையினைப் பகுத்து தனித்தனி எண்ணிக்கையிலான செயல்முறைகளின் பிரிவாகப் பிரித்து, ஒவ்வொரு செயல்முறையாலும் ஒவ்வொரு தனிநபரும் அல்லது குழுவினரும் நிபுணத்துவம் பெறுகின்றனர்.
(viii) உற்பத்தி தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் புதுமைகளை ஊக்கு விக்கிறது.உற்பத்தியாளர்களுக்கு புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான வழிகளில் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கும், பரந்த சந்தைகளைப் பிடிக்கவும் மற்றும் அதிக லாபம் ஈட்டுவதற்கும் ஏராளமான வாய்ப்பை வழங்குகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards