11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
தொழிலின் சமூக பொறுப்புணர்வுகள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
பின்வருவனவற்றில் எது ஊழியர்களின் சமூக பொறுப்புணர்வு ஆகாது
நியாமான ஊதியம்
சரியான வசதிகள்
சமூக பாதுகாப்பு
சுரண்டல்
2.
சமூகப் பொறுப்புணர்வு வணிகத்தில் பண்டங்களை வழங்குகிறது
அதிக விலை
குறைந்த விலை
நியாமான விலை
மிதமான விலை
3.
தொழிலின் சமூகப் பொறுப்புணர்வு என்பது நிறுவனத்திற்கு எவ்வாறு உதவுகிறது?
இலாபத்தை அதிகரித்தல்
இலாபம்
நிலைத்தன்மை
சமநிலை
4.
சமூகப் பொறுப்புணர்வு தொழில் நிறுவனங்களின் பங்குதாரர்களை தவிர _____ க்கும் உண்டு.
பங்குதாரர்கள்
பணியாளர்கள்
அரசு
நிறுவனம்
5.
எந்த வகையான பொறுப்புணர்வு சமுதாயத்திற்கு நன்மை தரத்தக்கதாக உள்ளது.
சட்டம்
நெறிமுறை
ஒழுங்குணர்வு
பொருளாதாரம்
6.
தொழில் முறை நன்னெறி பொறுப்புணர்வு என்றால் என்ன?
7.
தடையற்ற நிறுவனம் என்றால் என்ன?
8.
சமூகப் பொறுப்புணர்வு என்பதன் பொருள் யாது?
9.
சமூகப் பொறுப்புணர்வின் வகைகளை வரிசைப்படுத்துக?
10.
சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த தொழில் நிறுவனங்கள் மூலம் பணியாளர்கள் பெறும் நன்மைகள் யாவை?
11.
சமூகப் பொறுப்புணர்வு என்பதன் பொருளுக்கான இலக்கணம் தருக
12.
சமூகப் பொறுப்புணர்வை நீங்கள் எவ்வாறு வகைப்படுத்துவீர்கள்?
13.
தொழிலின் சமூகப் பொறுப்புணர்வின் மூலம் நன்மை பெறும் குழுக்களை விவரி?
14.
சமூகப் பொறுப்புணர்வுக்கு எதிரான விவாதங்கள் யாவை?
15.
சமூகப் பொறுப்புணர்வின் தேவைகள் விளக்குக?
1.
(d)
சுரண்டல்
2.
(c)
நியாமான விலை
3.
(c)
நிலைத்தன்மை
4.
(d)
நிறுவனம்
5.
(c)
ஒழுங்குணர்வு
6.
இது சமுதாயத்தால் எதிர்க்கப்படும் ஒரு வகை பொறுப்பாகும்.ஆனால் இப்படிப்பட்ட பொறுப்புகள் சட்டத்தில் குறிப்பிடப்படாதவையாகும்.(எ.கா) ஒரு நிறுவனம் தனது பொருட்கள் குறித்த விளம்பரம் மேற்கொள்ளும்போது,அத்தகைய விளம்பரம் மத உணர்வுகள் மற்றும் மக்களின் கண்ணியம் மதிக்கத்தக்க வகையில் இருத்தல் வேண்டும்.இத்தகைய பொறுப்புகளை தொழில் அமைப்புகள் தானே விருப்பப்பட்டு கடைபிடிக்க வேண்டும்.
7.
தொழில் நிறுவனங்கள் சமூக உரிமைகளை மறுத்து அதிக பயன் அடைந்து வருகின்றனர்.எ.கா. அரசு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் கலப்படம்,கள்ளச் சந்தை மற்றும் சமூகத்திற்கு எதிரான நடைமுறைகள் போன்றவற்றை கட்டுப்படுத்துகின்றது.இருந்த போதிலும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பின்பற்றுவது சமூகப் பொறுப்புணர்வின் அவசியமான ஒன்றாகும்.அத்தகைய செயல்பாடுகள் தொழிலில் தடையற்ற முடிவெடுக்கும் உரிமையை பாதிக்கிறது.
8.
சமுதாய பொதுநலன் மேம்பாடு கருதி(செயல்படத்தக்க) உரிய நபர், சமுதாய நம்பிக்கைக்குரிய அடிப்படை மேன்மை,சமுதாய ஒற்றுமை,உறுதித்தன்மை மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றில் பங்களிப்பை ஏற்படுத்துவது ஆகும்.பீட்டர் எஃப் டிரக்கர்.
9.
(i) பொருளாதார பொறுப்புணர்வு
(ii) சட்டப் பொறுப்புணர்வு
(iii) தொழில் நன்னெறிமுறை பொறுப்புணர்வு
(iv) தன் விருப்ப பொறுப்புணர்வு
10.
(i) பணியாளர்களின் கூலி மற்றும் ஊதியத்தை குறித்த காலத்தில் தொடர்ந்து வழங்குதல்.
(ii) பணியாற்றுவதற்கு ஏற்ற இணக்கமான சூழ்நிலையை உருவாக்குதல் மற்றும் இதர வசதி வாய்ப்புகளை நல்குதல்.
(iii) நல்ல தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல்.
(iv) பணிப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பினை உருவாக்குதல் அதாவது வருங்கால வைப்பு நிதி குழுக் காப்பீடு , ஓய்வூதியம் மற்றும் பணிஓய்வு பயன்பாடு போன்ற வசதிகள்.
(v) அவர்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல் அதாவது வீட்டு வசதி, போக்குவரத்து வசதி, சிற்றுண்டி சாலை வசதி குழந்தை காப்பகங்கள் மற்றும் பிற வசதிகள்.
(vi) குறித்த காலத்தில் பயிற்சி அளித்து அவர்களின் செயல்திறனை தரம் உயர்த்துதல்.
11.
சமுதாய பொதுநலன் மேம்பாடு கருதி, உரிய நபர், சமுதாய நம்பிக்கைக்குரிய அடிப்படை மேன்மை, சமுதாய ஒற்றுமை உறுதித்தன்மை, மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றில் பங்களிப்பை ஏற்படுத்துவது ஆகும்.பீட்டர் எஃப் டிரக்கர்.
12.
(i) பொருளாதார பொறுப்புணர்வு : அடிப்படையில் தொழில் அமைப்புகள் அனைத்தும் தங்களின் பொருளாதார நலனை மேம்படுத்திக் கொள்ள இயங்கி வரும் அமைப்புகளாகும் அப்படி பொருளாதார நலனை அடைய முனையும் பொழுது சமூகப் பொறுப்புகளும் நிறைவேற்றப்படுகின்றன என்பதில் ஐயமில்லை(எ.கா) மக்களுக்கு தேவைப்படும் பொருள்களை தரமாக வழங்குதல் ,நியாயமான இலாபம் ஈட்டல் நுகர்வோரின் புகார்களை தீர்த்தல் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் போன்ற பல சமூகப் பொறுப்புகளும் நிறைவேற்றப்படுகின்றன.
(ii) சட்டப் பொறுப்புணர்வு: ஒவ்வொரு தொழில் அமைப்புகளும் செயல்படுத்தவதற்கான வடிவமைப்பை ஏற்படுத்த வேண்டும்.அத்தகைய சட்ட திட்டங்கள்,சமுதாய நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது எனவே, எந்த ஒரு வியாபார அமைப்பும் ஒரு சமூக பொறுப்புணர்வை உள்ளுணர்வாகக் கொண்டு செயல்படும் அமைப்பாக இருக்குமாறு எதிப்பார்க்கபடுகிறது.
(iii) தொழில் நன்னெறிமுறை பொறுப்புணர்வு: இது சமுதாயத்தால் எதிர்பார்க்கப்படும் ஒரு வகை பொறுப்பாகும்.ஆனால் இப்படிப்பட்ட பொறுப்புகள் சட்டத்தில் குறிப்பிடப்படாதவையாகும்.(எ.கா) ஒரு நிறுவனம் தனது பொருட்கள் குறித்து விளம்பரம் மேற்கொள்ளும்போது,அத்தகைய விளம்பர மத உணர்வுகள் மற்றும் மக்களின் கண்ணியம் மதிக்கத்தக்க வகையில் இருத்தல் வேண்டும்.இத்தகைய பொறுப்புகளை தொழில் அமைப்புகள்,தானே விருப்பப்பட்டு கடைபிடிக்க வேண்டும்.
(iv) தன் விருப்ப பொறுப்புணர்வு: இத்தகைய பொறுப்பு, ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் தன்னார்வ நடவடிக்கைகளைக் குறிக்கின்றது.(எ.கா) கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தல், அல்லது வெள்ளம் மற்றும் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவி செய்தல், மேலும் தொழில் அமைப்புகள் தங்கள் மூலதனத்தை ஊக வாணிபத்தில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, ஒரு நல்ல பலன் தரத்தக்க வகையில் நிறுவனத்தில் முதலீடு செய்வது முதலீட்டார்கள்ன் வருமானத்தை உயர்த்துதல் போன்ற பொறுப்புகள் தன் விருப்ப பொறுப்புகளாகும்.
13.
பல்வேறு ஆர்வ குழுக்கள் , தொழில் சார்ந்த பொறுப்புணர்வுகள் :
(i) உரிமையாளர்கள் மீதான பொறுப்புணர்வு : எவர் ஒருவர் சொந்த மூலதனம் கொண்டு ஒரு தொழிலைத் தொடங்கி அதில் ஏற்படும் இடர்களை ஏற்கின்றாறோ அவரே தொழிலின் உரிமையாளராவார்.அத்தகைய உரிமையாளர்கள் ஏற்கும் தொழில் தொடர்பான பொறுப்புணர்வுகள் கீழ்வருமாறு.
1. தொழிலை சிறப்பாக இயக்குதல்
2. மூலதனம் மற்றும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தலாம்.
3. மூலதனத்தின் மீதான வளர்ச்சியை வரவேற்கும் வகையில் இருத்தல்.
4. நியாயமான வருமானம் தொடர்ந்து அளிக்கத்தக்க வகையில் மூலதனத்தை முறையாக முதலீடு செய்து கொள்வதாகும்.
(i) முதலீட்டாளர்கள் மீதான பொறுப்புணர்வு : தொழிலுக்கு தேவையான நிதியினை மூலதனமாக கீழ்க்கண்ட வழிகளில் எவர் ஒருவர் அளிக்கின்றாரோ அவரே முதலீட்டாளர்கள் என அழைக்கப்படுகின்றார்.அதாவது, பங்குகள் ,பத்திரங்கள்,வைப்புகள் மற்றும் பிற, மேலும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களும் இத்தகைய பிரிவில் உள்ளடக்குவார்கள் முதலீட்டாளர்களின் பொறுப்புகள் பின்வருமாறு: மூலதனத்தின் பாதுகாப்பை உறுதி செய்தல், முதலீட்டின் மீதான வட்டியை தொடந்து செலுத்துதல்.
(iii) குறித்த காலத்திற்குள் மூலதனத்தொகையை திருப்புச் செலுத்துதல் போன்றவைகளாகும்.
(iv) பணியாளர்கள் மீதான பொறுப்புகள் பின்வருமாறு : எந்த ஒரு தொழில் அமைப்பிற்கும் பணியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் மிகவும் அவசியமாகும்.இத்தகைய பணியாளர்கள் நிறுவனத்தின் நலன் கருதி தங்களுடைய திறனை முழுமையாக செலவிடுகின்றனர்.இந்நிலையில் தொழில் அமைப்புகள் அவர்களின் நளனின் அக்கறை கொள்வது மிக முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும்.பணியாளர்கள் மனநிறைவு பெறுவதன் மூலம் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் வெற்றி பெறுகின்றன.
1.பணியாளர்களின் கூலி மற்றும் ஊதியத்தை குறித்த காலத்தில் தொடர்ந்து வழங்குதல்.
2. பணியாற்றுவதற்கு ஏற்ற இணக்கமான சூழ்நிலைகளை உருவாக்குதல் மற்றும் இதர வசதி வாய்ப்புகளை நல்குதல்.
3. நல்ல தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல்.
4. பணிப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பினை உருவாக்குதல் ,அதாவது வருங்கால வைப்பு நிதி குழுக்காப்பீடு,ஓய்வூதியம் மற்றும் பணிவு ஓய்வு பயன்பாடு போன்ற வசதிகள்.
5. அவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல் அதாவது வீட்டுவசதி,போக்குவரத்து வசதி, சிற்றுண்டி சாலை வசதி குழந்தை காப்பகங்கள் மற்றும் பிற வசதிகள்.
6. குறித்த காலத்தில் பயிற்சி அளித்து அவர்களின் செயல்திறனை தரம் உயர்த்துதல்.
(v) பொருள் அளிப்பார்கள் தொடர்பான பொறுப்புணர்வு.உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான கச்சாப் பொருட்களை யார் வழங்குகின்றாரோ அவரே பொருள் வழங்குநர் எனப்படுவார்.நுகர்வோர்களுக்குத் தேவையான முடிவுப் பொருட்களை வழங்கும் சிலரை பதிவாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
1. பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான தொடர் ஆணையை வழங்குதல்.
2. நியாயமான விதிமுறைகள் மற்றும் பொறுப்புறுதிகளை வழங்குதல்.
3.கடனுக்கான காலக்கெடுவினை நியாயமான முறையில் அளித்தல்.
4. கடன் கடன் தொகையை தவணைக் காலத்திற்குள் திருப்புச் செலுத்துதல்.
(vi) வாடிக்கையாளர் தொடர்பான பொறுப்புகள் : வாடிக்கையாளரின் ஆதரவு இல்லாமல் எந்த தொழிலும் செய்லபடுவதில்லை.தொழிலின் சமூகப் பொறுப்புணர்விலும் வாடிக்கையாளர்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர்.
1.பொருட்கள் மற்றும் சேவைகள் வாடிக்கையாளரின் தேவையை நிறைவேற்றும் வகையில் இருக்க வகை செய்ய வேண்டும்.
2. பொருட்கள் மற்றும் சேவைகள் தரத்தில் மேம்பட்டு இருத்தல் வேண்டும்.
3. பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
14.
(i) கருத்துத் தெளிவின்மை : சமூகப் பொறுப்புணர்வு என்பதன் பொருள் தெளிவாக வரையறுக்கப்படாமல் உள்ளது.இத்தகைய சூழ்நிலையில் சமூக பொறுப்புணர்வு கோட்பாட்டை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
(ii) பொருளாதார இலக்குகளை தளர்த்தல் : சமூகப் பொறுப்புணர்வை ஏற்றுக்கொள்வதன் மூலம் ,வணிக பொருளாதார இலக்குகளையும் சமரசம் செய்கின்றன.தொழில் என்பது ஒரு பொருளாதாரம் சார்ந்த நிறுவனமாகும்.மேலும் அதன் உரிமையாளருக்கு , அதிகபட்சம் இலாபம் ஈட்டுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன.
(iii)சமூகத்திறன் இன்மை : தொழில் அமைப்புகள் மற்றும் அதன் மேலாளர்கள் சமூகம் சார்ந்த கடமைகள் பற்றி நன்கு அறிவதில்லை.இதனால் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம் போன்ற சிறப்பு சமூக சேவை நிறுமங்கள்,சமூகப் பிரச்சனைகளை அல்லது சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
(iv) நுகர்வோர் மீதான சாலை : தொழில் அமைப்புகள் , சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் ஈடுபடுகின்ற போது அதற்கான செலவு அதிகரிக்கின்றது.அத்தகைய செலவினங்களை ஈடுகட்ட தொழில் நிறுவனங்கள் பொருளின் விலையை உயர்த்தி, அந்த சுமையை நுகர்வோர்களுக்கு மாற்றிவிடுகின்றன.
(v) அதிகாரமற்ற பொறுப்பு : தொழில் அமைப்புகள் பொருளாதாரம் சார்ந்த அதிகாரங்களை மட்டுமே கொண்டுள்ளது.ஆனால் அது சமூகம் சார்ந்த அதிகாரங்கள் கொண்டவை அல்ல.சமூக அதிகாரத்தை சமூகப் பொறுப்புணர்வுடன் திணிப்பது நியாயமற்றதாகும்.
(vi) பொறுப்புகளைத் தவறாகப் பயன்படுத்துதல் : சமூகப் பொறுப்புகளை ஏற்பதன் மூலம் நிறுமத்தின் திட்டங்களை நிறைவேற்றுவதன் நேரம் மற்றும் வளங்கள் குறைகின்றன.இதனால் தொழில் அமைப்புகள் மேலும் நலிவடைய வாய்ப்பு உள்ளது.
(vii) அளவுகோல் இன்மை : வணிகத்தில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு இலாபம் ஒரு பொதுவான அளவுகோலாக விளங்குகிறது.வியாபார அமைப்புகளின் மீது சமுதாய பொறுப்பை திணிப்பதன் மூலம் வியாபார முடிவு எடுக்கும் துல்லியமாக இலாபம் என்ற பொது அளவுகோலால் சரியாக அளக்க முடியவில்லை.
(viii) முறையற்ற பங்கு : வளங்கள் மற்றும் ஆற்றல்களை முறையாக பயன்படுத்துவது ஒரு தொழிலின் முக்கிய பங்காகும்.மேலும் சட்டம் மற்றும் தொழில் நன்னெறிக்கு உட்பட்டு முதலீடு செய்து, அதன் மூலம் ஈட்டும் வருவாயை பெறுதல் வேண்டும்.
15.
சமூகப் பொறுப்புணர்வு குறித்த பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.ஒவ்வொரு தொழில் உரிமையாளர்களும் தங்கள், தொழில் மூலம் பெறும் இலாபத்தில் ஒரு பகுதியை சமுதாய மேம்பாட்டிற்காக செலவழிகின்றனர்.இத்தகைய பயன்பாட்டிற்கு தோழில் ஒழுங்குணர்வு பொறுப்பாகும்.
(i) சுய ஆர்வம் : தொழில் அமைப்புகள் சந்தையில் நிலைத்து செயல்படுவதற்கு சமுதாய எதிர்ப்புக்களை நிறைவு செய்வதன் மூலம்,தொழில் உரிமையாளர்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.(எ.கா) அதிக ஊதியம் வழங்குதல், சாதகமான பணிச் சூழலை ஏற்படுத்துதல்,தொழிலாளர்களை ஊக்குவித்தல்,உற்பத்தியை அதிகரித்தல்,பணியாளர் சுழற்சி மற்றும் வருகைப் பதிவு இன்மையை குறைத்தல்.
(ii) சமுதாய உருவாக்குதல் : நாட்டின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் தொழில் நிறுமங்கள் ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்றன.எனவே தொழில் நிறுமங்கள், மக்களின் எதிர்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும்.தொழில் செய்பவர்கள், சமுதாய தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களின் நலன் கருதி நாட்டின் வளங்களை பயன்படுத்த வேண்டும்.
(iii) சமூக அதிகாரம்: தொழில் செய்பவர்களிடம் கணிசமான அளவு சமுதாயம் அதிகாரம் உள்ளது.அவர்கள் மேற்கொள்ளும் செயல் நடவடிக்கைகள் மக்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதாக அமைகிறது.நாட்டின் மேம்பாடு கருதி வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்ற அளவு மற்றும் அனைத்து தரப்பினருக்கும் வருமானத்தை பகிர்ந்தளித்தலாகும்.
(iv) சமுதாயத்தின் உருவகம்: சமூக எதிர்பார்ப்புகளை தொழில் நிறுமங்களால் நிறைவேற்ற முடியும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.ஒரு வெற்றிகரமான தொழில் மூலம் தொழிலாளர் மத்தியில் நல்ல உறவுமுறை ஏற்படுத்துதல்,நுகர்வோர் மற்றும் பொருள் பகர்வாளர்களுக்கும் உதவி புரிய இயலும்.
(v) பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு :தற்போது தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்களின் உரிமைகள் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.நுகர்வோர்கள் தரமான பொருட்களுக்குச் சரியான விலையைக் கொடுக்கவும் மற்றும் தொழிலாளர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறவும் விரும்புகின்றனர்.
(vi) சட்டம் மற்றும் ஒழுங்கு, நாட்டின் சட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதன் மூலம் தொழில் அமைப்புக்கள் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட இயலும்.
(vii) தார்மீக பொறுப்புணர்வு : பெரும்பாலான பெரிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசால் மட்டுமே தீர்வு காண இயலாது.நிதி மற்றும் மனிதவளம் போன்றவற்றின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இயலும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards