11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
வியாபாரத்தின் வகைகள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
உள்நாட்டூ வியாபாரத்தை வகைகளாக பிரிக்காலம்
மூன்று
நான்கு
இரண்டு
ஐந்து
2.
உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது
அத்தியாவசியப் பொருட்களையும் சேவைகளையும் சிக்கன விலையில் வழங்குவது
தேசிய வருமானத்தை உயர்த்துவது
அனைத்து பொருட்களையும் கிடைக்கச்செய்தல்
3.
உற்பத்தியாளருக்கும் , நுகர்வோருக்கும் இடைய இணைப்புச் சங்கிலியாக இருப்பது
வியாபாரம்
தொழிற்ச்சாலை வணிகம் வர்த்தகம்
உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது
4.
மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்வது
வெளிநாட்டு வியாபாரம்
உள்நாட்டு வியாபாரம்
மறு ஏற்றுமதி வியாபாரம்
வியாபாரம்
5.
வெளிநாட்டில் இருந்து சரக்குகள் வாங்கப்படுவது ______ என அழைக்கப்படும்
இறக்குமதி
ஏற்றுமதி
மறு ஏற்றுமதி
மீண்டும் ஏற்றுமதி
6.
வியாபாரத்தின் முக்கியக் குறிக்கோள் யாது?
7.
மொத்த வியாபாரம் என்றால் என்ன?
8.
ஏற்றுமதி என்றால் என்ன?
9.
உள்நாட்டு வியாபாரத்தின் வகைகள் யாவை?விளக்குக.
10.
பன்னாட்டூ வணிகத்தில் இந்தியாவில் உபயோகிகப்படும் பணமதிப்பின் பெயர் என்ன?
11.
இறக்குமதி என்றால் என்ன?
12.
வெளிநாட்டு வியாபாரத்தின் பல்வேறு வகைகளை விவரி?
13.
உள்நாட்டு வியாபாரத்தின் இயல்புகள் யாவை?
1.
(c)
இரண்டு
2.
(b)
அத்தியாவசியப் பொருட்களையும் சேவைகளையும் சிக்கன விலையில் வழங்குவது
3.
(a)
வியாபாரம்
4.
(c)
மறு ஏற்றுமதி வியாபாரம்
5.
(a)
இறக்குமதி
6.
வியாபாரம் என்பது பொருட்களை வாங்குவதும் விற்பதும் ஆகும். ஒரு வியாபாரி பொருட்களைத் தன் சொந்த உபயோகத்திற்காக வாங்கமால், பிற வியாபாரிகளுக்கு விற்கும் நோக்கோடு அப்பொருட்களை வாங்குகிறார். உற்பத்தியாளர்களிடமிருந்து மொத்த வியாபாரிகள் பொருட்களைப் பெறுகின்றனர். மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லறை வியாபாரிகள் அந்தப் பொருட்களைப் பெறுகின்றனர். நுகர்வோர் தத்தம் தேவைகளுக்கு ஏற்ப பொருட்களை சில்லறை வியாபாரிகளிடமிருந்து வாங்கி கொள்கின்றனர். இத்துடன் நுகர்வோருக்கு லாபத்தோடு விற்கும் நடைமுறைப் பணியையும் மேற்கொள்வது வியாபாரத்தின் நோக்கமாகும்.
7.
(i) மொத்த வியாபாரம் என்பது பொருட்களை உற்பத்தி செய்பவரிடமிருந்து மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு குறைந்த அளவில் விற்கும் நடைமுறை வணிகச் செயலாகும். பொருட்களை மிகப்பெரிய அளவிலும், மொத்தமாகவும் வாங்கி-விற்கும் வியாபாரம் மொத்த வியாபாரம் எனப்படும்.
(ii) மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோரை மொத்த வியாபாரிகள் பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக மொத்தமாக வாங்கி அவற்றைச் சிறிய அளவில் சில்லறை வியாபாரிகளுக்கோ அல்லது தொழிற்சாலை உபயோகிப்பாளருக்கோ விற்பனை செய்கிறார். மொத்த வியாபாரி என்பவர் முதல் இடை நிலையர் ஆவார். எவர் உற்பத்தியாளரையும் சில்லறை வியாபாரிகளையும் இணைக்கிறார்.
8.
உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்பது ஏற்றுமதி வியாபாரம் ஆகும்.
உதாரணம்:
(i) இந்தியா இரும்பு, எஃகு போன்றவற்றை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது.
(ii) இந்தியா ஜெர்மனி நாட்டிற்கு தேயிலை ஏற்றுமதி செய்கிறது.
(iii) மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு மல்லிகைப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
9.
உள்நாட்டு வியாபாரத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை
(i) மொத்த வியாபாரம்
(ii) சில்லறை வியாபாரம்
(i) மொத்த வியாபாரம்
மொத்த வியாபாரம் என்பது பொருட்களை உற்பத்தி செய்பவரிடம் மொத்தமாக வாங்கிச் சில்லறை வியாபாரிகளுக்கு குறைந்த அளவில் விற்கும் நடைமுறை வணிகச் செயலாகும்.
(ii) சில்லறை வியாபாரம்
சில்லறை வியாபாரம் என்பது மொத்த வியாபாரியிடம் பொருட்களை வாங்கி நுகர்வோருக்கு சிறிய அளவில் பொருட்களை வழங்கும் நடைமுறை வணிகச் செயலாகும்.
10.
பன்னாட்டு வணிகத்தில் இந்தியா, உபயோகப்படுத்தும் பணத்தின் பெயர் இந்திய ரூபாய் என்பதாகும்.
11.
உள்நாட்டுத் தேவைக்காக வெளிநாட்டிலிருந்து பொருட்களை வாங்குவதே இறக்குமதி வியாபாரம் ஆகும். உதாரணமாக, இந்தியா வளைகுடா நாடுகளிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதைக் கூறலாம்.
12.
வெளிநாட்டு வியாபாரம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி, ஏற்றுமதி, மறு ஏற்றுமதி வியாபாரம்.
(i) இறக்குமதி: உள்நாட்டுத் தேவைக்காக வெளிநாட்டிலிருந்து பொருட்களை வாங்குவதே இறக்குமதி வியாபாரம் ஆகும். உதாரணமாக, இந்தியா வளைகுடா நாடுகளிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதைக் கூறலாம். இந்தியா இயந்திர சாதனங்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. விரைவான இயந்திரமயமாக்களுக் காகவும், நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இறக்குமதி வணிகம் தவிர்க்க செய்யவும்.
(ii) ஏற்றுமதி: உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்பது ஏற்றுமதி வியாபாரம் ஆகும்.
(iii) உதாரணம்:
1. இந்தியா, இரும்பு மற்றும் எஃகு போன்றவற்றை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது.
2. இந்தியா ஜெர்மனி நாட்டிற்கு தேயிலை ஏற்றுமதி செய்கிறது.
3. மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு மல்லிகைப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
4. உள்நாட்டில் தேவைக்கு மிகுதியாக உள்ள பொருட்களை விற்பதற்கும், உள்நாட்டு இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், அந்நியச் செலாவணி ஈட்டுவதற்கும், தேசிய வருமானத்தை உயர்த்துவதற்கும், நிறை வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும், அரசு வருவாயை மிகவும் அவசியமானதாகும்.
(iv) மறு ஏற்றுமதி வியாபாரம்: ஒரு நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து அவற்றை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி மூலம் விற்பனை செய்வது மறு ஏற்றுமதி வியாபாரம் ஆகும்.
(v) உதாரணம்:
1. இந்தியாவில் சூரத் நகரில் உள்ள வைர வியாபாரிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து துண்டாக்கப்படாத வைரங்களை இறக்குமதி செய்து, அவற்றைத் துண்டாக்கி, பட்டை தீட்டி, மீண்டும் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பன்னாட்டு வைரச் சந்தைக்கு மறு ஏற்றுமதி செய்கிறார்கள்.
2. சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், லண்டன் ஆம்ஸ்டர்டாம் ஆகிய நாடுகள் மிகப்பெரிய மறு ஏற்றுமதி மையங்களாக செயல்படுகின்றன.
3. இறக்குமதி செய்யும் நாட்டில் போதுமான அளவுவங்கி வசதிகள் இருக்கும் போதும், தொடர்ந்து அயல் நாட்டு வணிகம் செய்யும் அளவிற்கு சரக்குகள் இல்லாதிருக்கும் போதும், ஏற்றுமதி செய்யும் நாட்டிற்கும், பொருட்களை நுகரும் நாட்டிற்குமிடையே நேரடித் தொடர்பு ஏற்படுத்துவது சிக்கலாக இருக்கும் போதும் மறு ஏற்றுமதி வணிகம் அவசியமாகிறது.
13.
உள்நாட்டு வியாபாரத்தின் இயல்புகள் பின்வருமாறு:
(i) ஒரு நாட்டின் எல்லைக்கு உட்பட்டே வாங்குதல் மற்றும் விற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும்.
(ii) உள்நாட்டு பண மதிப்பு அடிப்படையில் பணபரிமாற்றம் நடைபெறும்.
(iii) உள்நாட்டு உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் இடை நிலையங்களுக்கு இடையேயான நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
(iv) உள் வியாபார இடைநிலையர்கள், மற்றும் முகமை அமைப்புகளின் பொருட்கள் மற்றும் சேவைகள் விநியோகத்தை உள்ளடக்கிறது.
(v) இதில் போக்குவரத்து இடர்பாடு பன்னாட்டு வணிகத்தைவிட குறைவாகவே உள்ளது.
(vi) இதில் உள்நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் மட்டுமே பின்பற்றபப்டும்.
(vii) இதன் நோக்கம் அத்தியாவசியப் பொருட்களை சிக்கனமாக வழங்குவதாகும்.
(viii) உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமே இடம் பெறும்.
(ix) ஒரே நாட்டுக்குள் தோற்றுவிக்கப்பட்ட வியாபார அமைப்புகள் மற்றும் தனி நபர்களிடமிருந்த பொருட்களை வாங்கப்படுகிறது.
(x) உள்நாட்டுப் போக்குவரத்துச் சாதனங்கள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
(xi) இதில் சுங்கவரி மற்றும் இறக்குமதி வரி போன்றவை இடம் பெறுவதில்லை.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards