11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
வங்கிகளின் வகைகள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு?
1978
1979
1980
1981
2.
உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது
கிராம சேமிப்பு
வணிகச் சேமிப்பு
தொழிற்துறை வளர்ச்சி
விவசாய வளர்ச்சி
3.
கீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல?
ICICI
HSBC
SIDBI
IDBI
4.
வெளிநாட்டு வங்கிகள் என்றால் என்ன?
5.
வணிக வங்கி தொடர்பாளர்கள் பற்றிச் சுருக்கமாக விளக்குக.
6.
தொழிற்துறை வங்கிகள் பற்றி நீவீர் அறிவது யாது?
7.
வணிக வங்கிகளின் பொருள் தருக.
8.
விவசாய மற்றும் கூட்டுறவு வங்கிகளின் பயன்களைக் குறிப்பிடுக.
9.
வட்டாரக் கிராமிய வங்கிகளின் நோக்கங்கள் யாவை?
10.
உள்ளூர் பகுதி வங்கிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.இரண்டு உதாரணங்களைத் தருக.
11.
உரிமையாளர்கள் முறை அடிப்படையில் வங்கிகளை வகைப்படுத்துக.
12.
பல்வேறு வகையான வங்கிகளைச் செயல்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.உதாரணம் தருக.
1.
(c)
1980
2.
(a)
கிராம சேமிப்பு
3.
(b)
HSBC
4.
(i) வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தையும் இந்தியாவில் கிளை அலுவலகத்தையும் கொண்ட வங்கிகள் வெளிநாட்டு வங்கிகள் என்று அழைக்கப்படுகின்றன.
(ii) (எ.கா)பாங்க் ஆப் அமெரிக்கா -அமெரிக்கா.
5.
(i)வங்கி தொடர்பாளர்கள் மாதிரி முறையானது 2006 இல் வங்கி மூலம் சேவைகளை ஒவ்வொரு இல்லந்தோறும் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
(ii) அரசு சார்பற்ற நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் அல்லது தனிநபர்கள் முன்னாள் இராணுவத்தினர் போன்றோர் வங்கி தொடர்பாளர்களாக விண்ணப்பிக்க முடியும்.
6.
தொழில்களுக்கான நிதிகளைப் பெரிய அளவில் வழங்குவது , அவைகளின் விரிவாக்கம் நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு நிதி அளிப்பது போன்ற சேவைகளைச் செய்வது வளர்ச்சி வங்கிகள் எனும் தனி வகை வங்கிகள் ஆகும்.மேலும் அவை தொழில்முறை வங்கிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
7.
வணிக வங்கிகள் பொதுமக்களிடமிருந்து வைப்புக்களைப் பெற்று, இலாபம் சம்பாதிப்பதற்கு வர்த்தகர்கள், தனிநபர்கள் ஆகியோருக்கும் விவசாயம், தொழிற்சாலைகள்,போக்குவரத்து போன்ற துறைகளுக்கும் கடன்களை வழங்குகின்றன.
8.
(i) உறுப்பினர்களுக்கான சேவையைக் கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்காக வழங்குவது கூட்டுறவுச் சங்கங்களின் முக்கிய நோக்கமாகும்.
(ii) கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதியளிப்பதற்காக மாநில அரசாங்களுக்கு நிதிகள் மற்றும் மானியங்களை வழங்குகிறது.
(iii) நீர்ப்பாசனம் சேமிப்பு, நீர்ப்பாசன முறை, வேளாண்மை காப்பீடு, கிராமப்புற துப்புரவு போன்ற திட்டங்களில் NCDC கவனம் செலுத்துகிறது.
9.
(i) கூட்டுறவு சங்கங்களோடு சேர்ந்து கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தச் செய்வதாகும்.
(ii) கிராமப்புற பொதுமக்களிடமிருந்து வைப்புக்களைத் திரட்டி கிராமப்புற கைவினைஞர்களுக்கும்,சிறிய தொழில் முனைவோருக்கு விவசாயிகளுக்கும் கடனுதவி அளிக்கிறது.
(iii) இவ்வங்கிகள் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கிகளால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
10.
(i) உள்ளூர் பகுதி வங்கி (LAB) திட்டம் ஆகஸ்ட் 1996 இல் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
(ii) கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புறப் பகுதிகளில் சிறிய தனியார் வங்கிகளாக உள்ளூர் பகுதி வங்கிகள் அமைக்கப்படுகின்றன.
(iii) ஒவ்வொரு வங்கியும் அருகில் உள்ள இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களை இணைத்துச் சேவை செய்கிறது.
(iv) கரையோர உள்ளூர் பகுதி வங்கி, விஜயவாடா ஆந்திரப்பிரதேசம்.
(v) கிருஷ்ணா பீமா ஸ்ம்ருதி உள்ளூர் பகுதி வங்கி மஹபூப் நகர், ஆந்திரப்பிரதேசம்.
11.
(i) எந்த ஒரு வங்கியின் பகுதிகளில் 51 சதவிகிதத்திற்கும் குறைவில்லாத பங்குகளைஅரசு பெற்றிருந்தால் அது அரசு வங்கிகள் அல்லது பொதுத்துறை வணிக வங்கிகள் (மொத்தம் 21) என்று அழைக்கப்படுகின்றன.
(ii) அனைத்து தேசியமாக்கப்பட்ட வங்கிகள்(19 வங்கிகள்,2017ல்). பாரத ஸ்டெட் வங்கி மற்றும் இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி மற்றும் இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி ஆகியன பொதுத்துறை வணிக வங்கிகள் ஆகும்.
(iii) அவை அனைத்தும் கூற்றுப் பங்கு நிறும வகை வங்கிகள் ஆகும்.பொதுக் கூட்டுரு வகை வங்கிகளும் உள்ளன.
(iv) பொதுக் கூட்டுரு வங்கியும் பாராளுமன்றத்தின் தனிச் சட்டத்தால் உருவாக்கப்பட்டு, இந்திய அரசுக்கு முழு சொந்தமானதாக உள்ளன.(எ.கா) IFCI, SIDBI, EXIM.வங்கி முதலியன.
12.
வங்கிகளின் வகைகள் :
வங்கிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
(i) செயல்பாடுகளின் அடிப்படையில்
(ii) இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட தகுதி அடிப்படையில்
(iii) உரிமையாளர் முறை அடிப்படையில்
செயல்பாடுகளின் அடிப்படையில் வங்கிகளை வகைப்படுத்தல்:
(i) மைய வங்கி : ஒரு நாட்டின் பண மற்றும் வங்கிக் கட்டமைப்பின் உச்சநிலைமையாகவும், தேசிய பொருளாதார நலனுக்காகவும்சிறந்த முறையில் செயல்படும் வங்கி அந்த நாட்டின் மைய வங்கி எனப்படும்.என டிகாக் அவர்கள் இலக்கணம் வகுத்துள்ளார்.
(ii) வணிக வங்கிகள்: இவ்வகை வங்கிகள் பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்று இலாபம் சம்பாதிப்பதற்காக வர்த்தகர்கள்,தனிநபர்கள் ஆகியோருக்கும் விவசாயம்,தொழிற்சாலைகள் போக்குவரத்து போன்ற துறைகளுக்கும் கடன்களை வழங்குகின்றன.(எ.கா) ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கரூர் வைஸ்யா வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டடு வங்கி.
(iii) வளர்ச்சி வங்கிகள்: தொழில்களுக்கான நிதிகளைப் பெரிய அளவில் வழங்குவது,அவைகளின் விரிவாக்கம் நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு நொய்தி அளிப்பது போன்ற சேவைகளைச் செய்வது வளர்ச்சி வங்கிகள் எனும் தனி வகை வங்கிகள் ஆகும்.(எ.கா) இந்தியத் தொழில் நிதிக் கழகம் IFCI, இந்தியச் சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி SIDBI,முத்ரா வங்கி(குறுந்தொழில் வளர்ச்ச்சிக்காக)
(iv) கூட்டுறவு வங்கிகள்: இந்தியாவில் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும் அதன் வாடிக்கையாளர்கள் அல்லது அதன் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் சிறிய வர்த்தகர்கள் போன்றவர்களுக்குச் சொந்தமானது.இந்தியக் கூட்டுறவு வங்கிகள் நகரப்புறங்களை அல்லது கிராமப்புறங்களை அடிப்படையாக கொண்டவை.(எ.கா) தேசிய வேளாண் கூட்டுறவு சந்ததைப்படுத்தல் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி - தலைமை அலுவலகம் சென்னை.
(v) வெளிநாட்டு வங்கிகள் : வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தையும் இந்தியவில் கிளை அலுவலகத்தையும் கொண்ட வங்கிகள் வெளிநாட்டு வங்கிகள் என்று அழைக்கப்படுகின்றன.(எ.கா) பாங்க் ஆஃப் அமெரிக்கா - அமெரிக்கா , பார்க்லேஸ் பாங்க் - இங்கிலாந்து).
(vi) வட்டராக் கிராமிய வங்கிகள்: வட்டார கிராமிய வங்கிச் சட்டம் 1976 இன் படி மத்திய அரசு , மாநில அரசு மற்றும் ஒரு பங்களிப்பு வங்கி ஆகியோர் கூட்டாக இணைந்து இது அமைக்கப்படுகிறது.50:15:35 என்ற விகிதத்தில் இவர்கள் பங்கு மூலதனம் வழங்குகின்றனர்.(எ.கா) பாண்டியன் கிராம வங்கி - மதுரை,பல்லவன் கிராம வங்கி - சேலம்.
(vii) சிறப்பு வங்கிகள்: அரசாங்கத்தில் சிறப்பு நோக்கங்களுக்காகச் சில வங்கிகள் உருவாக்கப்படுகின்றன.1982-ல் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி உருவாக்கப்பட்டது.அதன் முக்கிய நோக்கம் இந்திய வணிகர்களின் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதாகும்.(எ.கா) இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி EXIM வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி(NHB).
(viii) உள்ளூர் பகுதி வங்கிகள்: உள்ளூர் பகுதி வங்கி LAB திட்டம் ஆக்ஸ்ட் 1996 இந்திய ரிசர்வ் மற்றும் சிறு நகரப்புறப் பகுதிகளில் சிறிய தனியார் வங்கிகளாக உள்ளூர் பகுதி வங்கிகள் அமைக்கப்படுகின்றன.(எ.கா) கரையோர உள்ளூர் பகுதி விஜயவாடா, ஆந்திரப்பிரதேசம்.
(ix) சிறிய நிதி வங்கிகள்: சிறிய நிதி வங்கிகள் SFB, வங்கிகள் இல்லாத பகுதிகளிலும் வங்கி சேவை குறைவாக உள்ள பகுதிகளிலும் நிதி உதவி வழங்க ஏற்படுத்தப்பட்ட தனியார் வங்கிகள் ஆகும்.(எ.கா)
ESAF SFB திருவனந்தபுரம், கேரளா.
(x) செலுத்தல் வங்கிகள்: சிறுதொழில்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கும் பணம் செலுத்தல் மற்றும் நிதி சேவைகள் பரவலாக்கப்படுவதை விரிவுப்படுத்துவதற்காகச் செலுத்தல் வங்கி அமைக்கப்பட்டன.(எ.கா) ஏர்டெல் செலுத்தல் வங்கி லிமிடெட்.
(xi) பன்முகத்தன்மை கொண்ட மேம்பட்ட வங்கிகள் : பன்முகத்தன்மை கொண்ட மேம்பட்ட வங்கிகள் பல நாடுகளைச் சார்ந்தஅரசாகங்களாலால் உருவாக்கப்பட்டுள்ளது.(எ.கா) உலக வங்கி , ஆசிய வளர்ச்சி வங்கி.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards