11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
போக்குவரத்து
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?
தொடர்வண்டி
சாலை
கடல்
விமானம்
2.
______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.
வழிச் சீட்டு
சரக்கு குறிப்பு
சார்ட்டர்
ஒப்பந்த இரசீது
3.
வான்வழி அனுப்பீட்டு ரசீது __________அசல் பாகங்களில் தயாரிக்கப்படுகிறது
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
4.
போக்குவரத்து ______ தடையை நீக்குகிறது.
நேரம்
இடம்
ஆள்சார்
அறிவு
5.
நிலப் போக்குவரத்தின் ஏதேனும் இரண்டு நன்மைகள் எழுதுக.
6.
போக்குவரத்து மூலம் வழங்கப்படும் ஏதேனும் இரண்டு சேவைகளைப் பற்றிக் கூறுக.
7.
போக்குவரத்து -வரையறு.
8.
சார்ட்டர் நபர் என்றால் என்ன?
9.
ஒப்பந்த இரசீது என்றால் என்ன?
10.
போக்குவரத்தின் நன்மைகளை விவாதிக்க.
11.
போக்குவரத்தின் பல்வேறு வகைகளை விவரிக்க.
1.
(d)
விமானம்
2.
(a)
வழிச் சீட்டு
3.
(c)
மூன்று
4.
(b)
இடம்
5.
(i) பல்வேறு இடங்களில் சாலைகள் இணைப்பதன் மூலம் நாட்டிலுள்ள பிரதான தேசிய வழியில் இணையாமல் தொலைதூரத்தில் உள்ள கிராப்புறங்களில் வாழும் பெரும்பாலான மக்களை இணைத்து அடிப்படை உள்கட்டமைப்புகளை வழங்கியது.
(ii) இந்திய சரக்கேற்றிகள் மற்றும் பேருந்துகள் சாலை போக்குவரத்தின் பரிணாம வளர்ச்சியின் வரவாக கிடைத்துள்ளன.
6.
(i) உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது : பொருளின் உற்பத்தி நோக்கம் நுகர்வு ஆகும்.பயனுள்ள போக்குவரத்து முறை காலம் மற்றும் இட வசதிகளை உருவாக்குவதன் மூலம் பொருட்களின் தேவை மற்றும் பொருட்களின் மதிப்பு குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.
(ii) பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது : மூலப் பொருட்கள்,எரிபொருள்,உழைப்பு மற்றும் முடிந்த தயாரிப்புகள் மற்றும் மூலதன பயன்பாடு மற்றும் தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது போன்றவைகளுக்கு உதவுகிறது.
7.
கே.கே.செக்சேனா அவர்கள் "ஒரு இருட்டறையில் மெழுகுவர்த்தியின் ஒளிபரவுவது போல் போக்குவரத்து அந்தந்த பகுதிகளில் தனது பணியைச் செய்கிறது" என்று வரைவிலக்கணம் தந்துள்ளார்.
8.
(i) கப்பல் இரசீது என்பது ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உள்ளடக்கிய ஒரு ஆவணமாகும்.இது கப்பல் நிறுவனத்தால் வழங்கப்படுவது மற்றும் கப்பலின் மாலுமியால் கையெழுத்திடப்பட்டிருக்கும்.
(ii) கப்பலில் வைத்துள்ள பொருட்களைத் திரும்பி பெற்றுக் கொள்வதற்காக விவரிக்கப்பட்ட ஒப்புக் கொள்ளும் இரசீதை இது குறிக்கிறது.இது பொருட்களின் உத்தியோகபூர்வ ரசீதுகளாகவும் செயல்படுகிறது.இது ஒரு மாற்றுமுறை ஆவணமாகும்.
(iii) முக்கிய உள்ளடக்கங்கள் : ஏற்றும் இடம்,கப்பலில் ஏற்றப்பட்ட பொருள்களின் விவரங்கள்,இறக்க வேண்டிய துறைமுகத்தின் பெயர்,சரக்குகள் வழங்கப்படும் அல்லது செலுத்தப்பட வேண்டிய பொருட்கள்,யாருக்காக ஏற்றப்பட்டதோ தேதி வாரியாக ஒப்படைத்தல் போன்றவை இதில் இடம் பெற்றிருக்கும்.
9.
(i) சரக்குகள் பெரிய அளவிலான பொருள்கள் ஒதுக்கப்படும் போது கப்பல் முழுவதையும் அல்லது கணிசமான பகுதியை வாடகைக்கு எடுத்துக் கொள்வது நல்லது.
(ii) எந்த வகையான ஆவணத்தின் மூலம் ஒப்பந்தம் உருவாக்கப்படுகிறதோ அது கப்பல் வாடகை ஒப்பாவணம் என்றும் அழைக்கப்படும்.
(iii) மேலும் இது பயண ஒப்பந்தம் அல்லது கால ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும்.எந்த ஒரு நபர் கப்பலை வாடகைக்கு எடுக்கிறாரோ அவர் ஒப்பந்தக்காரர் என்று அழைக்கப்படுகிறார்.
10.
(i) இடப் பயன்பாட்டையும் காலப் பயன்பாட்டையும் உருவாக்குகிறது.
(ii) உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது.பொருளின் உற்பத்தி நோக்கம் நுகர்வு ஆகும்.பயனுள்ள போக்குவரத்து முறை காலம் மற்றும் இட வசதியுள்ள உருவாக்குவதன் மூலம் பொருட்களின் தேவை மற்றும் பொருட்களின் மதிப்பு ஆகியவற்றில் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.
(iii) அதிகமான பொருட்களுக்கான தேவை மற்றும் பல்வேறு நுகர்வுப் பொருள் களின் தேவையைத் தூண்டுகிறது.பொருந்தாத இயற்கை நிலைமைகள் உள்ள அல்லது ஒரு பிராந்தியத்தில் உற்பத்தி செய்ய முடியாத நுகர்வுப் பொருள்களைப் பெற இது உதவுகிறது.
(iv) சந்தையை மேம்படுத்துகிறது மற்றும் வளர்ந்து விரிவடையச் செய்கிறது.போக்குவரத்தின் முதன்மையான செயல்பாடானது உலகளாவிய பொருட்களின் உட்புற விநியோகத்தை செயல்படுத்துவதாகும்.
(v) இது நாடு முழுவதும் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் விலை உறுதிப்பாட்டிற்கு உதவுகிறது.
(vi) இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.மூலப் பொருட்கள், எரிபொருள் உழைப்பு மற்றும் முடிந்த தயாரிப்புகள் மற்றும் மூலதன பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது ஆகியன அனைத்துத் தொழில் துறையின் வளர்ச்சியில் வேளாண்மையிலிருந்து உற்பத்திக்கான ஒரு குறிப்பிடத்தக்க பங்கிணைனப் போக்குவரத்து வகிக்கிறது.
(vii) இது விசேசப்படுத்தி அதிக அளவு உற்பத்திக்கு உதவுகிறது.விசேஷப்படுத்தல் என்பது, சிக்கலான உற்பத்தி செயல்முறையினைப் பகுத்து தனித்தனி எண்ணிக்கையிலான செயல்முறைகளின் பிரிவாகப் பிரித்து, ஒவ்வொரு செயல்முறையாலும் ஒவ்வொரு தனிநபரும் அல்லது குழுவினரும் நிபுணத்துவம் பெறுகின்றனர்.
(viii) உற்பத்தி தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் புதுமைகளை ஊக்கு விக்கிறது.உற்பத்தியாளர்களுக்கு புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான வழிகளில் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கும், பரந்த சந்தைகளைப் பிடிக்கவும் மற்றும் அதிக லாபம் ஈட்டுவதற்கும் ஏராளமான வாய்ப்பை வழங்குகிறது.
11.
போக்குவரத்து வகைகள் - நிலப் போக்குவரத்து , நீர் போக்குவரத்து , விமான போக்குவரத்து.
நிலப் போக்குவரத்து :
(i) நில வாகனப் போக்குவரத்து மூலம் மக்கள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை நிலப் போக்குவரத்து என்றழைக்கிறோம்.
(ii) பொதி விலங்குகள் : மலை , காடு மற்றும் பாலைவனம் போன்ற பின் தங்கிய பகுதிகளிலும் சிறு சிறு சுமைகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும்.
(iii) குதிரை கோவேறு கழுதை, கழுதை ஒட்டகம் மற்றும் யானை போன்ற விலங்குகளை பொதி விலங்குகள் என்றழைக்கின்றோம்.
(iv) மாட்டு வண்டிகள்: இந்தியாவில் பொருள் மற்றும் மக்களை ஏற்றிச் செல்வதற்குக் கிராமப் பகுதிகளில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் சாலைப் போக்குவரத்து மாட்டு வண்டிகளே ஆகும்.
(v) சாலை போக்குவரத்து : சாலை போக்குவரத்து என்பது குறுகிய மற்றும் நடுத்தர தூரத்திற்கு ஏற்றதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது.பல்வேறு இடங்களில் சாலைகள் அமைப்பதன் மூலம் நாட்டிலுள்ள பிரதான தேசிய வழியில் இணையாமல் தொலை தூரத்தில் உள்ள கிராமப் புறங்களில் வாழும் பெரும்பாலான மக்களை இணைத்து அடிப்படை உள் கட்டமைப்புகளை இது வழங்குகிறது.
(vi) இயந்திர சரக்கேற்றிகள் மற்றும் பேருந்துகள்: நகரத்தின் தொடக்கத்தில் இருந்தே மக்களை சாலைகள் அமைத்தும் சக்கரம் பூட்டிய வண்டிகளைப் பயன்படுத்தியும் பொருள்கள் மற்றும் மக்களை ஏற்றிச் சென்று போக்குவரத்தினை எளிமைப்படுத்தியுள்ளனர்.
(vii) டிராம் வண்டிகள் : =டிராம் வண்டிகள் முதலில் குதிரைகளாலும் பின்னர் நீராவி சக்தியாலும் இப்போது மின்சாரத்தினாலும் இயக்கப்படுகிறது.
(viii) தொடர் வண்டிப் போக்குவரத்து : ஜேம்ஸ் வாட் அவர்களின் கண்டுபிடிப்பான நீராவி இயந்திரம் உலகெங்கிலும் உள்ள போக்குவரத்து முறையில் மாபெரும் புரட்சியினை ஏற்படுத்தியது.நீண்ட தூரத்திற்கு மேல் கனரக சரக்குகளைச் சுமந்து செல்வதற்குத் தொடர் வண்டிகள் மலிவான மற்றும் விரைவான வழிவகைகளாக இருக்கின்றன.
நீர் போக்குவரத்து :
(i) நீர் இயற்கை கொடுத்த வெகுமதி ஆகும்.மனித நாகரீகம்,அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் படிப்படியான பயன்பாடு மூலம் பொருளாதார அரசியல் மற்றும்இராணுவ நடவடிக்கைகளுக்கு தண்ணீர் வளங்களைப் பயன்படுத்துகிறது.
(ii) நீர் போக்குவரத்து இரண்டு வகைகள் : உள்நாட்டு நீர் வழி, பெருங்கடல் நீர் வழி.
விமான போக்குவரத்து :
(i) விமான போக்குவரத்து வேகமான மற்றும் விலையுயர்ந்த போக்குவரத்து முறை ஆகும்.
(ii) உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள்.
போக்குவரத்து சமீபத்திய வளர்ச்சிகள்:
மெட்ரோ இரயில் , மோனோ இரயில், புல்லட் இரயில், குழாய் போக்குவரத்து ,கன்வேயர் போக்குவரத்து , கயிறு வழிப் போக்குவரத்து , உயர் சுழற்சி வளையப் போக்குவரத்து.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards