11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
பண்டகக் காப்பு
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன பண்டகக் காப்பக நிறுவனம் _____
பிணைய காப்பு பண்டகக் காப்பகங்கள்
பொதுக் பண்டகக் காப்பகங்கள்
இந்திய உணவுக் கழகம்
தானியங்கி பண்டகக் காப்பகங்கள்
2.
சரக்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் ஆவணம் ______
பண்டக சான்றாணை
துறைமுக இரசீது
துறைமுக சான்றாணை
மேற்கூறிய அனைத்தும்
3.
பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆவணம்
தனியார்
குளிர் சேமிப்பு
கூட்டுறவு
4.
பிணைய அடிப்படையில் பொருட்கள் பாதுகாப்பதற்காக அரசால் உரிமம் வழங்கப்பட்ட பண்டகக் காப்பகங்கள் _______ ஆகும்.
பிணைய பண்டகக் காப்பகங்கள்
குளிர் சேமிப்பு
பொது
மேற்கூறிய அனைத்தும்
5.
______ வங்கியில் இருந்து நிதியுதவி பெறுவதற்காக இணைப்பாக வழங்கப்பட்டது.
துறைமுகச் சான்றாணை
பண்டகக் காப்பாளர் இரசீது
துறைமுக இரசீது
பண்டக சான்றாணை
6.
பண்டகக் காப்பகம் ______ தடையை நீக்குகிறது.
ஆள்சார்
காலத் தடை
இடர்ப்பாட்டு தடை
அறிவுத் தடை
7.
இந்திய உணவுக் கழகம் பற்றி குறிப்பு வரைக.
8.
பண்டக சான்றாணை மற்றும் பண்டக இரசீது இடையே மூன்று வேறுபாடுகளைக் கூறுக.
9.
பண்டக் காப்பகங்களின் இரண்டு பணிகள் குறிப்பிடுக.
10.
பண்டகக் காப்பகங்கள் என்றால் என்ன?
11.
குளிர் சாதன பண்டகக் காப்பு என்றால் என்ன?
12.
பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.
13.
இந்தியாவில் உள்ள பண்டகக் காப்பகங்களை விளக்குக.
14.
பல்வேறு வகையான பண்டகக் காப்பகங்கள் யாவை?
1.
(c)
இந்திய உணவுக் கழகம்
2.
(c)
துறைமுக சான்றாணை
3.
(c)
குளிர் சேமிப்பு
4.
(a)
பிணைய பண்டகக் காப்பகங்கள்
5.
(d)
பண்டக சான்றாணை
6.
(b)
காலத் தடை
7.
(i) உணவு தானியங்களைப் பாதுகாக்கும் வசதியை வழங்குகிறது.
(ii) இந்நிறுவனம் பொருட்களை பாதுகாக்கும் வசதியை மாநில, மத்திய பண்டக காப்பகங்கள், மாநில அரசுகள் மற்றும் தனியார்களிடமிருந்து வாடகைக்கு எடுத்துக் கொள்கிறது.
(iii) 1964 ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகம் அமைக்கப்பட்டது.
8.
| பண்டக சான்றாணை | பண்டக காப்பாளர் இரசீது |
|---|---|
| (i) உரிமை மாற்றம் ஏற்படுத்தும் ஆவணம். | உரிமை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆவணமல்ல. |
| (ii) மற்றவருக்கு இதை மாற்ற இயலும். | இதை மாற்றி தர இயலாது. |
| (iii) இதை பிணையமாக வைக்க முடியும். | இதை பிணையமாக வைக்க முடியாது. |
9.
(i) பொருட்களை பாதுகாத்தல்
(ii) விலைகளை நிலைப்படுத்தல்
(iii) தேவை மற்றும் வழங்கலையும் சமன்படுத்தல்.
10.
(i) எதிர்கால பயன்பாட்டிற்காகவேப் பொருட்களை சேமித்து வைத்து இடமாகவும் மற்றும் வழங்கல் மையமாகவும் செயல்படுகிறது.
(ii) பண்டக காப்பகங்கள் சேமிக்கப்படும் பொருட்களின் தன்மையைப் பொறுத்து வடிவமைக்கப்படுகின்றன.
11.
(i) பொருட்கள் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் குளிரூட்டப்பட்ட பண்டக சாலைகளில் சேமிக்கப்படுகின்றன.
(ii) பழங்கள், காய்கறிகள்,முட்டை,வெண்ணெய்,மீன் மற்றும் இறைச்சி போன்ற விரைவில் அழுக்கக்கூடிய பொருட்களை சேமித்து வைப்பதற்காக இந்த பண்டக சாலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
(iii)சரியான தரத்தில் குளிரூட்டப்பட்டு சேமிக்கப்படும் பொருட்கள் ஆண்டு முழுவதும் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
12.
| பண்டக சான்றாணை | பண்டக காப்பாளர் இரசீது |
|---|---|
| (i) உரிமை மாற்றம் ஏற்படுத்தும் ஆவணம். | உரிமை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆவணமல்ல. |
| (ii) சரக்கை பெற்று கொண்டதற்கான ஒரு அத்தாட்சி மட்டுமல்லாது சரக்கை பெறுவதற்கான அதிகாரத்தை தரும் ஆவணமாகும். | சரக்கை பெற்று கொண்டவதற்கான ஒரு அத்தாட்சி ஆகும். |
| (iii) மற்றவருக்கு இதை மாற்ற இயலும். | இதை மாற்றி தர இயலாது. |
| (iv) இதை பிணையமாக வைக்க முடியும். | இதை பிணையமாக வைக்க முடியாது. |
| (v) பண்டகச் சான்ராணையை மேலெழுதி கொடுப்பதன் மூலம் பொருட்களை பண்டக காப்பிலிருந்து பெற்று கொள்ளலாம். | இந்த இரசீதையும் பொருட்களின் உரிமையாளர் கடிதத்தையும் இணைத்தால் மட்டுமே பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். |
13.
(i) இந்தியா ஒரு விவசாய நாடு என்றாலும் 1950 ஆண்டு வரை பண்டக காப்பகத்தின் முக்கியத்துவத்தை உணரவில்லை.
(ii) அகில இந்திய கிராமப்புற கடன் கணக்கீட்டு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விவசாய பண்டக (வளர்ச்சி மற்றும் பண்டககாப்பு) கழகச் சட்டம் 1956,தேசிய கூட்டுறவு வளர்ச்சி மற்றும் பண்டகசாலை வாரியம் அமைக்க அரசுக்கு அதிகாரம் வழங்கியது.பொதுத்துறையில் பேரளவு பண்டக காப்பக வசதிகளை நடத்திவரும் மூன்று பெரிய முகமைகளாவன:
இந்திய உணவுக் கழகம் FCI:
(i) இது உணவு தானியங்களைப் பாதுகாக்கும் வசதிகளை வழங்கியது.இந்நிறுவனம் பொருட்களை பாதுகாக்கும் வசதியை மாநில அரசுகள் மற்றும் தணியாளர்களிடமிருந்து வாடகைக்கு எடுத்துக் கொள்கிறது.
(ii) இந்திய உணவுக் கழகம் 746 மில்லியன் டன்கள் சரக்குகளை சேமிக்கும் திறன் பெற்றுள்ளது.
(iii) விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் குறைந்த வாடகையில் பொருட்களை பாதுகாத்தல்.
மத்திய பண்டக காப்பக கழகம் CWC :
(i) இது 1957 ஆண்டு நிறுவப்பட்டது.
(ii) மத்திய பண்டக காப்பக கழகத்தின் மொத்த சேமிப்புத் திறன் 11.17 மில்லியன் டன்கள் ஆகும்.
மத்திய பண்டக காப்பகத்தின் பணிகள்:
(i) வேளாண் பொருட்கள்,விதைகள்,உரங்கள் விவசாய கருவிகள் மற்றும் பிற பொருட்களின் சேமிப்பிற்கான முகமைகள் ஏற்படுத்துவது.
(ii) பொருட்களின் உரிமையாளர்களிடம் கடன் வாங்குவதற்கான மாற்றத்தக்க பண்டக இரசீதுகள் வழங்குதல்.
(iii) தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்களை கவனமாக பாதுகாத்து எலிகள்.பூச்சிகள் மற்றும் ஈரத்தன்மை மழை இவற்றிலிருந்து பாதுகாப்பது.
(iv) கொள்முதல் மற்றும் விற்பனை,சேமித்து வைத்தல் விநியோகத்தல் மற்றும் பொருட்களின் போக்குவரத்து ஆகியவற்றிற்கும் அரசாங்கத்திற்கும் ஒரு முகவராக செயல்படும்.
(v) முறையாக பொருட்களை தரவரிசைப்படுத்துவதன் மூலம் சேமித்தல் சந்தையிடுதல் செலவினங்களைக் குறைக்கிறது.
மாநில பண்டக காப்பக கழகம் SWC :
(i) மத்திய பண்டக காப்பக கழகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு ஒவ்வொரு மாநில அரசும் அதன் சொந்த பண்டக காப்பக கழகத்தை நிறுவ முடியும்.
(ii) இதை நிறுவுவதற்கான நிதியை 50 விழுக்காடு மாநில அரசும் தருகிறது.
தமிழ்நாடு பண்டக காப்பக கழகங்கள் TNWC:
(i) 1959-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட்டது.தற்போது பண்டக காப்பக கழகத்தின் சேமிப்பு திறன் 6.83 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.7 பிராந்திய அலுவலங்கள் மற்றும் 256 கோட்டங்கள் உள்ளன.இது மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
14.
உரிமையின் அடிப்படையில்:
தனியார் பண்டக சாலைகள் , அரசுப் பண்டக சாலைகள் , பொதுப் பண்டக சாலைகள், கூட்டுறவு பண்டக சாலைகள், பிணைய காப்பு களஞ்சியங்கள் ,நிறுவன முறை பண்டகசாலைகள், விநியோக மையப் பண்டக சாலைகள் என வகைப்படுத்தலாம்.
(i) தனியார் பண்டக சாலைகள்: இவ்வகை பண்டக சாலைகள் தனியார் தொழில் மற்றும் நிறுவனங்கள் அவை உற்பத்தி செய்யும் பொருட்களை பாதுகாக்க உருவாக்கப்படுபவை.
(ii) அரசுப் பண்டக சாலைகள்: அரசின் திட்டங்களை அமல்படுத்துவதற்காக அரசு இந்த பண்டகசாலைகளை உருவாக்கி நடத்தி வருகிறது.இதன் சேவை பெரும்பாலும் அரசு துறைகளுக்கு மட்டுமே கிடைக்கின்றன.
(iii) பொதுப் பண்டக சாலைகள்: இது பெரிய அளவில் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது.சிறிய மற்றும் நடுத்தர வகை நிறுவனங்கள் பெரிய அளவிலான பண்டக சாலைகளை சொந்தமாக அமைக்க முடியாது.
(iv) கூட்டுறவு பண்டக சாலைகள் : இந்த பண்டக காப்பகத்தை ஏற்படுத்தி நிர்வகிக்கும் பொறுப்பை கூட்டுறவு சங்கங்கள் அல்லது விவசாய கூட்டுறவு சங்கங்கள் மேற்கொள்கின்றன.
(v) பிணைய காப்பு பண்டக சாலை: இவ்வகை பண்டக சாலைகள் அரசிடம் உரிமை பெற்று இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளை சுங்கவரி செலுத்தும் வரை பண்டக காப்பகத்தில் வைத்திருக்கப் பயன்படுகின்றன.
(vi) நிறுவன முறை பண்டக சாலை : ஒவ்வொரு நிறுவனமும் செய்யும் வேலையின் தன்மையைப் பொறுத்து அந்நிறுவனங்கள் பண்டக சாலைகளை வைத்திருக்கின்றன.
(vii) விநியோக மையப் பண்டக சாலைகள்: விநியோக மையப் பண்டக சாலை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அதாவது தற்காலிகமாக சரக்குகளை வைப்பதற்கும் அங்கிருந்து வைப்பதற்கும் அங்கிருந்து சரக்குகளை பகிர்ந்தளிக்கவும் பயன்படுகின்றன.
பண்டகங்களின் தன்மை அடிப்படையில்:
(i) பொது பண்டக சாலை : இது உலர்ந்த தானியங்கி, உரங்கள் முதலியவற்றை பேரளவில் சேமித்து வைப்பதற்கான ஒரு பயனுள்ள பொது பண்டக சாலை ஆகும்.
(ii) சிறப்பு பொருட்கள் பண்டக சாலை : புகையிலை பருத்தி கம்பளி போன்ற குறிப்பிட்ட வகைப்பொருட்களை பாதுகாப்பதற்காக இவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
(iii) குளிர்சாதன பண்டக சாலை (அ) குளிரூட்டப்பட்ட பண்டக சாலை : பொருட்கள் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் குளிரூட்டப்பட்ட பண்டக சாலைகளில் சேமிக்கப்படுகின்றன.
(iv) தட்ப வெப்பநிலை கட்டுப்பாடு பண்டகசாலை :
தட்ப வெப்பநிலை கட்டுப்பாட்டில் உள்ள பண்டக காப்பகங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளின் வளர்சிதை மாற்றத்தை குறைக்க பயன்படுகின்றன.
(v) தானியங்கி பண்டக சாலை: ஒரே நேரத்தில் பல நூறு கிலோ எடையுள்ள சரக்குகளை கையாளக் கூடிய திறன் கொண்ட வசதிகள் இங்கு உண்டு.இந்த பண்டக சாலையை வளாகத்திற்குள் உட்புற விநியோகப்பிற்கான செயல்கள் தயாரிப்பு கட்டுமம் செய்தல் ஆகிய செயல்கள் தானியங்கி படைகளில் எடுத்துச் செல்லப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards