11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 06/11/2019
HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
உள் இணைப்புகளை உருவாக்க பின்வருவனவற்றுள் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது?
link
name
local
Inter
2.
ஒரு பட்டியல் தொகுதியானது மற்றொரு பட்டியல் தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டால் அது :
Inner List
Nested List
Outer List
Listing List
3.
வரையறுக்கப்பட்டியலானது எத்தனை பகுதிகளை கொண்டுள்ளது?
5
4
3
2
4.
5.
குறிப்பிட்ட எழுத்து மற்றும் எண்களின் வகையினை கொண்ட தொகுதியானது
Style
Character
Font
List
6.
ஒட்டுகளில் பயன்பாடானது:
Subject and Super
Subscript and Super
Subject and Superscript
Subscript and Superscript
7.
மைய ஒட்டின் (< center > Tag பயன் யாது?
8.
HTML-ல் உள்ள பட்டியலின் வகைகள் யாவை?
9.
புள்ளிகள் என்றால் என்ன?
10.
கருப்பொருள் இடைவெளி என்றால் என்ன?
11.
font ஒட்டின் ஏதேனும் இரண்டு பண்புக்கூறுகளை பற்றி எழுதுக
12.
(i) < strong > (ii) < em > ஒட்டுகள் பற்றி குறிப்பு வரைக
13.
HTML உரைப்பகுதியில் சேர்த்தல் மற்றும் நீக்குதல் எவ்வாறு குறிப்பாய்?எ.கா. தருக.
14.
< UL > மற்றும் < OL > ஒட்டுகளை வேறுபடுத்துக
15.
அட்டவணையை உருவாக்க பயன்படும் இணை ஒட்டுகள் யாவை?
16.
< hr > ஒட்டின் பண்புக்கூறுகளை பற்றி விளக்கமாக எழுதுக.
17.
தகுந்த HTML நிரலுடன் பட்டியலின் வகைகளை பற்றி விளக்குக
18.
அட்டவணையை < table > ஒட்டுடன் பயன்படும் பண்புக்கூறுகளை பற்றி விளக்குக
1.
(b)
name
2.
(b)
Nested List
3.
(d)
2
4.
(c)
5.
(b)
Character
6.
(d)
Subscript and Superscript
7.
மைய ஒட்டு :
(The center Tag )
பத்தி ஒட்டில் < p > உள்ள Align பண்புக்கூறு மூலம் பத்தியை மைய இசைவுபடுத்த முடியும்.ஆனால் பத்தி அல்லாத உரை உள்ளடக்கத்தை மைய இசைவுப்படுத்த < center > ஒட்டானது ஒரு உரைப்பகுதியை மைய இசைவுப்படுத்த உதவுகிறது. இது ஒரு அடைவு ஒட்டாகும். அதாவது < center > மற்றும் < /center > ஒட்டுகளுக்குள் தரப்படும் உரையானது உளவியல் மைய இசைவுடன் வெளிப்படுத்தப்படும்.
உரையை மைய இசைவுப்படுத்தல் (Centralize தி text)
< html >
< head >
< tittle > Center the text < /tittle >
< /head >
< body >
< h1 align = center > Thiruvallur < /h1 >
< center > thiruvallur was originally known as Thiruvallur which of the holy lord < b > " Balaji < b >, in the < b >, < u > Veeragava swamy temple of Thhiruvallur. < /b > < /u > < /center >
< body >
< /html >

8.
HTML ஆனது மூன்று வகையான பட்டியல்களை உடையது. அவை முறையே:
1. வரிசை புகுத்தப்பட்ட பட்டியல்கள்
2. வரிசை புகுத்தப்படாத பட்டியல்கள்
3. வரையறை பட்டியல்கள்
9.
தடிமன் அளவானது புள்ளிகளில் தரப்படும் பிக்சல் (Pixels) என்பது கணிப்பொறி திரையில் காட்சிகளை தோற்றுவிக்கும். புள்ளிகளுக்குள் ஒரு சிறிய புள்ளியாகும். பொதுவாக ஒரு அங்குலத்திற்கு 72 புள்ளிகள் ஆகும்.
எ.கா :
< hr size = 72 > கிடைமட்ட வரியானது 1 அங்குல தடிமனுடன் தோன்றும், கொடாநிலை தடிமன் அளவு 3 புள்ளிகள் ஆகும்.
10.
< hr > (Horizontal Rules) ஒட்டானது, கருப்பொருள் இடைவெளி என வலைஉலாவியின் அகலத்திற்கு இணையாக ஒரு கிடைமட்ட வரியை உருவாக்குகிறது. இது காலி ஒட்டாகும்.
11.
1. face என்ற பண்புக்கூறானது பல்வேறு வகையான எழுத்துருக்களை அமைக்கப் பயன்படுகிறது. எழுத்துருக்களின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைப் கொண்டிருந்தால் அது இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படுதல் வேண்டும்.
2. size பண்புக்கூறானது பல்வேறு வகையான எழுத்து அளவுகளை அமைக்கப் பயன்படுகிறது. எழுத்தின் அளவானது 1 முதல் 7 வரை உள்ள எண்கள் ஒரு முழு எண்ணை கொண்டதாக இருக்க முடியும். முன் கூட்டியே வரையறுக்கப்பட்ட அளவுகளானது மெய் நிகர் அளவு எனப்படும். ஒவ்வொரு மெய் நிகர் அளவும், உள்ள எழுத்துரு அளவை விட 20% பெரிதாக அமைந்திருக்கும்.
3. color என்ற பண்புக்கூறானது உரைக்கு வண்ணத்தை அமைக்கப் பயன்படுகிறது. color என்ற பண்புக்கூறின் மதிப்பாக வண்ணத்தின் பெயரோ அல்லது வண்ணத்துகான குறியீடோ பயன்படுத்தலாம்.
12.
(i) < strong > முக்கியமான உரை
< strong > ஒட்டானது சொற்களுக்குரிய அல்லது சொற்றொடர்களுக்குரிய ஒட்டாகும். இது முக்கிய உரைகளை குறிப்பிட உதவுகின்றது. இந்த ஒட்டானது உரையை தடித்த எழுத்துக்களில் வெளிப்படுத்தும்.
(ii) < em > - Emphasized text
< em > ஒட்டானது உரையை வலியுறுத்த பயன்படுகிறது. இவ்வொட்டைப் பயன்படுத்தும் போது உரையானது சாய்ந்த (Italics) எழுத்துகளில் வெளிப்படும்.
இவ்விரண்டு ஒட்டுகளும் உரையை வெளிப்படுத்துவதில் முறையை < b > மற்றும் < i >
ஒட்டுகளை ஒத்திருக்கின்றன. ஆனால் தொழில் நுட்ப ரீதியாக < strong > மற்றும் < em > ஒட்டுகள். முக்கியமான உரையை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. தடித்த மற்றும் சாய்வு எழுத்துகளை குறிப்பது இல்லை.
13.
சேர்த்தல் மற்றும் நீக்குதல் : (Inserting and Deleting )
உலாவியில் மேலும் உரையை சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியாது. ஆனால் நீக்கப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட உரையை நாம் குறிப்பிட்டு காண்பிக்க முடியும். நீக்கப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட உரைப்பகுதியை குறிப்பதற்கு முறையே < del > மற்றும் < ins > ஒட்டுகளானது பயன்படுகிறது. இந்த இரண்டு ஒட்டுகளும் அடைவு ஓட்டுகளாகும்.
< del > மற்றும் < /del > ஒட்டுகளுக்குள் குறிப்பிடப்படும் உரையானது, உலாவியில் அடிக்கோட்டுடன் வெளிப்படுத்தப்படும்.
< del > மற்றும் < ins >
< html >
< head >
< title > Inserting and Deleting text < /title >
< /head >
< body >
I am coming from < del > Madras < / del >
< ins > Chennai
< ins >

14.
< OL > ஒட்டு:
எண் வரிசைப்பட்டியானது < OL > ...< /OL > என்ற இணை ஒட்டுகளால் உருவாக்கப்படுகின்றன.பட்டியலில் ஒரு உருப்படியை சேர்க்க < LI > ஒட்டானது பயன்படுகிறது. எண் வரிசைப்பட்டியலானது உருப்படிகளை எண் வரிசைப்படியோ அல்லது அகல வரிசைப்படியோ பட்டியலிட்டு காட்டும்.
UL ஒட்டு:
வரிசைப்படுத்தப்படாத பட்டியிலானது புல்லட் பட்டியல்கள் எனவும் அழைக்கப்படுகிறது. எண்களுக்கு பதிலாக சிறப்பு புல்லட் குறியீடுகளை முன்னதாக கொண்டிருக்கும். வரிசைப்படுத்தப்படாத பட்டியல் ஆனது < UL > ...< /UL > என்ற இணை ஒட்டுகளுக்குள் வரையறுக்கப்பட்டிருக்கும்.
15.
அட்டவணையை உருவாக்க இந்து முக்கிய ஒட்டுகள் பயன்படுகின்றன. அவை
1. < table > ஒட்டானது அட்டவணையை உருவாக்க உதவுகிறது.
2. < tr > ஒட்டானது அட்டவணையில் வரிசையை வரையறுக்க உதவுகிறது.
3. < th > ஒட்டானது அட்டவணையில் நெடுவரிசையை வரையறுக்க உதவுகிறது.
4. < td > ஒட்டானது அட்டவணை தரவினை உருவாக்கப் பயன்படுகிறது.
5. < caption > ஒட்டானது அட்டவணையில் தலைப்பினை வரையறுக்க உதவுகிறது.
16.
< hr > ஒட்டானது size, width, noshade மற்றும் color என்ற நான்கு பண்புக்கூறுகளை கொண்டுள்ளது. இப்பண்புக்கூறுகளானது முறையே கிடைமட்ட வரியின் அளவு, அகலம் , முப்பரிமாணத் தோற்றம் மற்றும் வண்ணம் போன்றவற்றை அமைக்கப் பயன்படுகிறது.
< hr > ஒட்டிற்கான தொடரியல் அதன் பண்புக் கூறுகளுடன் :
அளவு (Size): கிடைமட்ட வரியின் தடிமன் அளவை நிர்ணயம் செய்ய size பண்புக்கூறு பயன்படுகிறது. தடிமன் அளவானது புள்ளிகளில் தரப்படும் பிக்சல் (pixels) என்பது கணிப்பொறி திரையில் காட்சிகளை தோற்றுவிக்கும். புள்ளிகளுள் ஒரு சிறிய புள்ளியாகும். பொதுவாக ஒரு அங்குலத்திற்கு 72 புள்ளிகள் ஆகும். பொதுவாக புள்ளிகள் எனப்படும். எடுத்துக்காட்டு < hr size = 72 >
கிடைமட்ட வரியானது 1 அங்குலதடிமனுடன் தோன்றும். கொடாநிலை தடிமன் அளவு 3 புள்ளிகள் ஆகும்.
அகலம் (Width): கிடைமட்ட வரியின் அகலத்தை குறிப்பதற்கு அகலம் பண்புக்கூறானது பயன்படுகிறது. கொடாநிலையாக கிடைமட்ட வரியானது வலை உலாவியின் அகலம் முழுமைக்கும் வரையப்படும். Width பண்புக் கூறின் மதிப்பானது, வரியின் சரியாக அகல மதிப்பாக புள்ளிகளையோ அல்லது சதவீதத்திலோ கொடுக்கப்படலாம். பொதுவாக Width பண்புக் கூறின் மதிப்பானது சதவிதத்திலேயே கொடுக்கப்படும். கொடாநிலை அகல அளவானது 100%ஆகும்.
எடுத்துக்காட்டு: < hr width = 50% > வலை உலாவியின் ஜன்னல் திரையின் அகலத்தில் பாதி அளவிற்கு கிடைமட்ட வரியானது வரையப்பட்டிருக்கும்.
Noshade: கிடைமட்ட வரியின் கொடாநிலை தோற்ற அமைப்பானது 3D ஆகும். ஆகையால் “noshade” பண்புக்கூறானது < hr > ஒட்டுடன் குறிப்பிட வேண்டிய தேவை இல்லை. நீங்கள் “noshade” என்ற பண்புக்கூறை < hr > ஒட்டினுள் குறிப்பிட்டால் கிடைமட்ட வரியின் தோற்றமானது முப்பரிமாணத்திலிருந்து இருபரிமாண முறைக்கு மாறும். “noshade” என்ற பண்புக்கூறானது பூலியன் வகை பண்புக்கூறாகும்.
Color: கிடைமட்ட வரியானது கொடாநிலையாக சாம்பல் நிறத்தில் தோன்றும். Color பண்புக்கூறானது கிடைமட்ட வரியின் கொடாநிலை வண்ணத்தை விரும்பிய வண்ணத்தில் மாற்றியமைக்க உதவுகிறது, முன்பே பயின்றது போல Color பண்புக்கூறின் மதிப்பானது பெயராகவோ அல்லது வண்ணத்தின் குறியீடாகவோ இருக்கலாம்.
குறிப்பு: < hr > ஒட்டின் அனைத்து பண்புக் கூறுகளையும் HTML5 ஆனது ஆதரிக்காது.
வெளியீடு:
17.
(i) எண் வரிசைப்பட்டியல் / வரிசைப்படுத்தப்பட்ட பட்டியல் (Numbered List / Order List) :
எண் வரிசைப்பட்டியலானது < OL > ...< /OL > என்ற இணை ஒட்டுகளால் உருவாக்கப்படுகின்றன. பட்டியலில் ஒரு உருப்படியை சேர்க்க < LI > ஒட்டானது பயன்படுகின்றது. எண் வரிசைப் பட்டியலானது உருப்படிகளை எண்வரிசைப்படியே அல்லது அகர வரிசைப்படியோ பட்டியலிட்டு காட்டும். < OL > மற்றும் < LI > என்ற இரண்டு ஒட்டுகளும் அடைவு ஒட்டுகளாகும். ஆனால் வழக்கமான நடைமுறையில் < LI > என்ற முடிவு ஒட்டானது பயன்படுத்தப்படுவதில்லை,
நிரல் :
< html >
< head > < title > Number List< /title >
< /head >
< body >
< OL >
< LI >
Tamil
< LI >
Telugu
< LI > English <
< LI > Computer Application
< LI > Commerce
< LI > Accountancy
< LI > Economics
< /OL >
< /body >
< /html >
வெளியீடு :
1. Tamil
2. Telugu
3. English
18.
< table > ஒட்டானது அடைவு ஒட்டாகும். அட்டவணையின் வடிமைப்பை மேம்படுத்த பல்வேறு பண்புக்கூறுகள் உள்ளன. அவை பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:
(i) Cell spacing:
அட்டவணையில் உள்ள சிற்றறைகளுக்கு இடையே இடைவெளியை அமைக்கப் பயன்படுகின்றது. அதனுடைய மதிப்பானது புள்ளிகளில் கொடுக்கப்ட வேண்டும்.
(ii) Cell padding:
அட்டவணையில் சிற்றறை களுக்குள் உள்ள பொருளடக்கத்திற்கும் சிற்றறையின் எல்லைகளுக்கும் இடையேயான இடைவெளியை அமைக்கப் பயன்படுகிறது. இதன் மதிப்பானது புள்ளிகளில் கொடுக்கப்ட வேண்டும்.
(iii) Border:
< table > ஒட்டுடன் பயன்படுத்தப்படும் border பண்புக்கூறானது, சுற்றியுள்ள எல்லைக்கோடுகளின் தடிமனளவை குறிக்க பயன்படுகின்றது. Border பண்புக்கூறின் மதிப்பானது பூஜ்யம் அல்லாத மதிப்பாக புள்ளிகளில் கொடுக்கப்ட வேண்டும். Border பண்புக்கூறின் மதிப்பு பூஜ்யமாக இருந்தால், HTML ஆனது அட்டவணையை எல்லைக் கோடுகளின்றி வெளிப்படுத்தும். பெரும்பாலான வலை உலாவிகளில் கொடாநிலையாக இதன் மதிப்பு பூஜ்யமாக இருக்கும்.
(iv) Border color:
அட்டவணையின் எல்லைக் கோடுகளுக்கு வண்ணத்தினை அமைக்க பயன்படுகின்றது.
(v) Align: Align)
பண்புக்கூறானது உலாவியின் ஜன்னல் திரையில் அட்டவணையை ஒழுங்குப்படுத்துகிறது.
(vi) BGcolor:
அட்டவணையின் பின்புற வண்ணத்தை . அமைக்க பயன்படுகின்றது.
(vii) Height and Width:
அட்டவணையின் அகலத்தையும், உயரத்தையும் குறிக்க Width மற்றும் Height பண்புக்கூறுகளானது பயன்படுகிறது. அதன் மதிப்புகளானது புள்ளிகள் அல்லது சதவீதத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards