11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/09/2019
இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
2.
யுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்?
Data Card
Pen Drive
Dongles
Memory Card
3.
பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது?
LAN
PAN
WLAN
CAN
4.
W3C என்பதன் விரிவாக்கம் _______.
World Wide Web Consortium
Wide World Web Consortium
World Web Wide Consortium
World Wide Web Consortum
5.
இணையம்_____ஆல் நிர்வகிக்கப்படுகிறது?
ICANM
ICANN
ICMA
ICNNA
6.
ஃபிஷிங் (Phishing) என்றால் என்ன?
7.
மின் – அரசாண்மையின் நன்மைகள் யாவை?
8.
மாறக்கூடிய வலைப்பக்கம் என்றால் என்ன?
9.
மின்னஞ்சலின் நன்மைகள் யாவை?
10.
W3C (உலகளாவிய இணைய கூட்டமைப்பு) பற்றி குறிப்பு எழுதுக
11.
நிலையான வலைப்பக்கத்திற்கும், மாறும் வலைபக்கத்திற்கும் உள்ள வேறுபாடு யாது
12.
இணைய உலாவுதலிள் செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாததும் பற்றி விவரி
13.
மின் – வணிகத்தில் உள்ள ஏதேனும் 5 முறைகள் பற்றி தகுந்த எடுத்துக் காட்டுடன் விவரி
1.
(b)
2.
(c)
Dongles
3.
(c)
WLAN
4.
(a)
World Wide Web Consortium
5.
(b)
ICANN
6.
ஃபிஷிங் (Phishing): தனியார் பற்றிய தகவல்களை பெற சைபர் குற்றவாளிகளின் மோசடி முயற்சிகள் ஆகும். இவை மின்னஞ்சல் போன்ற வடிவமைக்கப்பட்டிருக்கும், மேலும், சட்டப்பூர்வமான இடத்திலிருந்து வந்தது போல் முகப்பில் தோற்றமளிக்கும்.
எ.கா: ஃபிஷிங் செய்திகள் உங்கள் வங்கி அல்லது மின்னஞ்சல் சேவை வாங்குபவரின் வலைத்தளத்தைப் புதுப்பிக்கவும், உங்கள் கணக்கர் தகவலை துல்லியப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு மின்னஞ்சலில் உள்ள இணைப்பை Click செய்து உங்கள் தனிப்பட்ட தகவலை வழங்குமாறு உங்களை கவரக்கூடிய செய்தியாகும்.
7.
மின் - அரசாண்மையின் நன்மைகள்:
1. ஊழல் குறைக்கப்படும்
2. அதிக வெளிப்படை தன்மை
3. வசதிகள் அதிகரிப்பு
4. அனைத்து செலவீனங்களும் குறையும்
5. அரசாங்கத்தை அணுகும் முறைகள் விரிவாக்கம் பெரும்.
8.
பொதுத் தேர்வு முடிவுகள், நுழைவுத் தேர்வு முடிவுகள் போன்றவற்றை வெளியிடும் வலைதளமானது பயனர் உள்ளிடும் பதிவெண்ணிற்கு ஏற்ப வலைப்பக்கம் மாறும். இதுபோன்ற வலைதளங்கள் மாறக்கூடியவை எனப்படும்.
எ.கா:
அரசினுடைய வலைதளம், நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் வலைதளம்.
9.
மின்னஞ்சலின் முக்கியமான நன்மைகள்:
1. இலவச விநியோகம் (Free delivery):
மின்னஞ்சல் அனுப்புவது இணைய செலவை தவிர்த்து கிட்டத்தட்ட இலவசமாகவே உள்ளது. கடிதத்தை அனுப்புவதை போல அஞ்சல் வில்லைகள் வாங்க வேண்டிய தேவை இல்லை.
2. உலகளாவிய விநியோகம் (Global delivery):
மின்னஞ்சலானது உலகின் எந்தப் பகுதியில் உள்ள எந்த நாட்டிற்கும் அனுப்பப்படும்.
3. உடனடி விநியோகம் (Instant delivery):
மின்னஞ்சலானது இணையத்தின் மூலமாக உடனடியாக அனுப்பப்பட்டு பயனரால் பெறப்படும்.
4. கோப்புகளை இணைத்தல் (File attachment):
மின்னஞ்சலானது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட இணைப்புகளை கொண்டிருக்கலாம். ஆவணங்கள், படங்கள் அல்லது மற்ற கோப்புகளை இணைத்து அனுப்ப வகை செய்கிறது.
5. நீண்ட கால சேமிப்பு (Long - term storage)
மின்னஞ்சலானது மின்னணு முறையில் சேமிக்கப்படுவதால் நீண்ட காலத்திற்கு தகவல்கள் தேக்கி வைக்கவும், பாதுகாக்கவும் அனுமதிக்கிறது.
6. சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் (Environmentally friendly):
மின்னஞ்சல் அனுப்புவதற்கு காகிதம் தேவையில்லை. அட்டைகளோ அல்லது பேக்கிங் டோப்புகளோ தேவையில்லை. காகித வளத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
10.
WORLD WIDE WEB CONSORTIUM (உலகளாவிய வலை கூட்டமைப்பு) என்பதே W3C என்பதாகும் W3C அமைப்பானது முழுநேர பணியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், பல்வேறு உறுப்பினர் அமைப்புகள் கொண்ட சர்வதேச அமைப்பாகும். இந்த அமைப்பானது உலகலாவிய வலைக்கான நெறிமுறைகள் உருவாக்குகிறது.
உலகலாவிய வலை கூட்டமைப்பு W3C என்ற சர்வதேச சமூக அமைப்பானது வலையை மேம்படுத்தவத்தில் உறுதி கொண்டுள்ளது. பல்வேறு தொடர்புடைய, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பல நூறு உறுப்பினர் அமைப்புகளை கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வலைக்கான நெறிமுறைகளை அமைப்பதன் மூலமாக சிறந்த தகவல் தொடர்பு திறன் மற்றும் அனைத்து வலை பங்குதாரர்களையும் ஒருங்கிணைப்பது போன்றவற்றை W3C அமைப்பு மேற்கொள்கிறது. இது உலகளாவிய வலையை (WWW) உருவாக்கிய டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners-Lee) என்பவரால் 1994ல் நிறுவப்பட்டது.
11.
| நிலையானது | மாறக்கூடியது |
| 1. வலைப்பக்கத்தின் பொருளடக்கமும் தோற்றமும் நிலையானதாக இருக்கும். |
பொருளடக்கமும் தோற்றமும் இயக்க நேரத்தின் போது மாறும். |
| 2. நிலையான வலைப் பக்கமானது தரவுத்தளத்தை உபயோகிக்காது. |
வினவல்களால் மாறக் கூடிய பொருளடக்கத்தை கொண்ட வலைப்பக்கத்தை தரவுத்தளத்தை பயன்படுத்தி உருவாக்கும். |
| 3. நிலையானது வலைப் பக்கமானது, சேவையகத்தின் எந்த பயன்பாட்டின் துணையுமின்றி நேரடியாக வலை உலாவியில் இயங்கும். |
மாறக்கூடிய வலைப் பக்கமானது சேவையகத்தின் பயன்பாட்டு நிரலைக் கொண்டு முடிவை வெளியிடுவதன் மூலம் இயங்கும். |
| 4. நிலையான வலைப் பக்கத்தை உருவாக்குவது எளிது. |
மாறக்கூடிய வலைப்பக்கத்தை உருவாக்க நிரலாக்கத்திறன் தேவை. |
12.
(i) இணையத்தில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் : உங்கள் தனிப்பட்ட தகவலை கொடுக்க வேண்டாம்.) உங்கள் தனிப்பட்ட தகவலான வீட்டு முகவரி, தொலைபேசி எண்கள், பெற்றோர்கள் பணிபுரியும் இடத்தின் முகவரி போன்றவற்றை இணையத்தில் பதியக்கூடாது. சைபர் குற்றவாளிகள் தங்களுடைய விபரங்களை கொண்டு போலியான சுய விவரக் குறிப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
(ii) WHAT GOES ON LINE, STAYS ONLINE: தனிமறை அமைப்புகளை பயன்படுத்தி தாங்கள் பதிவிடும் புகைப்படங்கள், மற்றும் செய்திகளை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்குமாறு செய்யவேண்டும்.
(iii) பாதுகாப்பு மற்றும் தனிமறை அமைப்பை சரிபார்த்துக் கொள்ளுதல் : சமூக அமைப்புகளுக்கான அமைப்பை (settings) பாதுகாப்பாக அமைத்துக் கொள்வதன் மூலம் தங்களுடைய சுய விபரங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்ப்பதை உறுதி செய்யவும், மேலும் தங்களின் தனிமறை அமைப்புகளை பயன்படுத்தி தங்களின் பதிவுகள், புகைப்படங்கள், ஒளிக்காட்சிகள் போன்றவற்றை யார் மட்டும் பார்க்க முடியும் என்பதை கட்டுப்படுத்த முடியும்.
(iv) கடவுச்சொல் பாதுகாப்பு : உங்களுடைய கடவுச் சொல்லை உங்களுடைய பெற்றோர்களுடன் பகிர்வது என்பது அறிவார்ந்த யோசனை ஆகும். ஆனால் தங்கள் நண்பர்கள் தங்களுடைய கடவுச்சொல்லை யாரிடமும் சொல்லமாட்டேன் என அறுதியிட்டு கூறினாலும் பகிரக் கூடாது. கடவுச்சொல்லை அமைக்கும்போது யாரும் எளிதில் யூகிக்க முடியாததாக இருப்பதை உறுதி செய்யவும், அதாவது உங்களின் செல்லப்பிராணியின் பெயர், போன்றவை.
(v) அலைப்பேசியினை பாதுகாப்பாக வைத்திருத்தல்: உங்கள் அலைபேசியானது கடவுச் சொற்கள் (எண்கள்) மூலம் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்து கொள்ளவும். இதன் மூலம் அலைப்பேசியினுள் சேமிக்கப்பட்டுள்ள தங்களின் சுய விபரங்கள் பாதுகாக்கப்படும். உங்களுடையவலை அலைபேசியானது தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ அதில் உள்ள தகவல்களை இங்கிருந்து அழிக்க பாதுகாக்கும் பயன்பாட்டை (app) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
(vi) அந்நியர்களுடன் ஆன்லைனிலோ அல்லது ஆஃப் லைனிலோ தொடர்பு கொள்ள வேண்டாம். அந்நியர்கள் உங்களை ஆன்லைனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தால் உங்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்தவும்.
(vii) பெரியவர்களின் பேச்சை கேளுங்கள்
பெரியவர்கள் உங்களைப் பற்றி எப்போதும் கவலைப்படுவார்கள். அந்நியர்களுடன் ஆன்லைனில் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து அவர்களின் மனதை அமைதிப்படுத்துங்கள்.
13.
மின் வணிகம்:
மின் வணிகமானது சம்பந்தப்பட்ட / ஈடுபடுபவர்களை பொறுத்து கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1. வணிகம் - வாடிக்கையாளர் (B2C):
வணிகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே நடைபெறும் பரிவர்த்தனைகளை குறிக்கும், B2C வணிகம் என்பது கடைசி பயனாளிக்கு பொருள்களை விற்றல் அல்லது சேவைகளை வழங்குவது போன்றதாகும்.
2. வணிகர்கள் - வணிகர்கள் (B2B):
பெயருக்கு ஏற்றாற் போல் B2B இரு வணிகர்களுக்கிடையே நிகழும் பரிவர்த்தனைகளை குறிப்பதாகும்.
3. நுகர்வோர் - வணிகர்கள் (C2B):
இம்முறையில் ஒரு நுகர்வோர் பொருள்களை விற்றல் அல்லது வணிகத்திற்காக பண மதிப்பில் பங்களிப்பு வழங்கும் போது நிகழும் கூட்டாளிகள் வணிகமும் இம்முறையின் கீழ் வரும்
4. நுகர்வோர் - நுகர்வோர் (C2C):
தங்கள் யுகத்திற்கு ஏற்றாற் போல் இரு நுகர்வோர்களுக்கிடையே பொருள்களை விற்பது அல்லது வாங்குவதன் மூலமாகவோ நிகழும். இம்முறையானது பொதுவாக ஆன்லைன் போன்ற சந்தைகளில் நடைபெறுகிறது. ஒரு தனிநபர் மற்றொரு தனிநபர்க்கு பொருள்களை விற்றல் அல்லது சேவைகளை வழங்குதல் போன்றவையாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards