11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
2.
3.
எதன் இடையே கொடுக்கப்படும் வெற்றிடத்தை ஜாவாஸ்கிரிப்ட் நிராகரிக்கும்
கட்டளைகள்
ஸ்கிரிப்ட்
வில்லைகள்
உரை
4.
உலவியில் கோப்பை மீண்டும் ஏற்றம் செய்ய எந்த குறுக்கு வழி சாவியை பயன்படுத்த வேண்டும்
F2
F3
F4
F5
5.
< script > ஒட்டில் எத்தனை பண்பு கூறுகள் உள்ளது?
2
3
4
5
6.
விரிவாக்கம் (DHTML)
Distance Hyper Text Markup language
Dynamic Hyper Text Markup language
Distance High Text Markup language
Dynamic High Text Markup language
7.
எந்த கூற்றை பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட்யை செயல்படுத்தலாம்?2019
< head >
< Java >
< Script >
< text >
8.
பயனர் உள்ளீடு செய்த தரவு சேவையகத்திற்கு அனுப்பும் முன் சரிபார்க்கப்படுவதை இவ்வாறு அழைப்பர்
சேவையக போக்குவரத்து
மாறும் வலைப்பக்கம்
சேவையக வழித்தடம்
வலை சேவையகம்
9.
மாறும் வலைப்பக்கம் சேவையகத்தில் எதை சேமிக்க உதவும்
வேலை
வழித்தடம்
போக்குவரத்து
பாதை
10.
CGI –ன் விரிவாக்கம்
common Gateway Interface
Complex Gateway Information
Common Gateway Information
Complex Gateway Interface
11.
write( ) கூற்றின் பொதுவடிவத்தை எடுத்துக் காட்டுடன் தருக.
12.
< Script > ஓட்டின் கட்டளை அமைப்பை எழுதுக.
13.
Prompt உரையாடல் பெட்டியின் பயன்கள் யாது?
14.
செயற்குறி வகைகள் பற்றி குறிப்பு வரைக.
15.
ஜாவாஸ்கிரிப்ட்-ல் எத்தனை நிலையுறுக்கள் உள்ளன அவற்றின் வகைகளை எழுதுக.
16.
மாறிகளின் வரையெல்லை என்றால் என்ன அதன் வகைகள் யாது?
17.
ஒப்பீட்டுச் செயற்குறிகள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
18.
ஜாவாஸ்கிரிப்டில் கோவைகள் என்றால் என்ன? விவரி.
19.
நிரல் மொழியின் நன்மைகள் யாது?
20.
< Script > ஒட்டு பற்றி எழுதுக
21.
சரம் செயற்குறி பற்றி குறிப்பு வரைக
22.
ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள அடிப்படை தரவு வகைகள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
23.
கணித செயற்குறி பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக
24.
ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள மேல்மீட்பு உரையாடல் பெட்டிகள் பற்றி விரிவாக எழுதுக
1.
(b)
2.
(a)
3.
(c)
வில்லைகள்
4.
(d)
F5
5.
(a)
2
6.
(b)
Dynamic Hyper Text Markup language
7.
(c)
< Script >
8.
(b)
மாறும் வலைப்பக்கம்
9.
(c)
போக்குவரத்து
10.
(a)
common Gateway Interface
11.
write கூற்றின் பொது வடிவம்:
document write ("string" +var);
எ.கா:
document.write ("THe Sum of Data1 and Data2:" +sum);
12.
ஜாவாஸ்கிரிப்ட் தொகுதியின் தொடரியல்:
< script language = "javascript" type = "text/javascript" >
JavaScript code
< /script >
< SCRIPT > ஒட்டு இரண்டு பண்புக்கூறுகளை ஏற்கக் கூடியது.
Language:
இந்தப் பண்பு ஸ்கிரிப்ட்டின் மொழியை தெரிவிக்கின்றது. பொதுவாக, இதன் மதிப்பு JavaScript ஆக இருக்கும். இருப்பினும் HTML ன் புதிய பதிப்பான (Extensible HyperText Markup Language - XHTML) ல் இந்தப் பண்பு பயன்படுத்துவது அவசியமில்லை.
Type:
இந்தப் பண்பு ஸ்கிரிப்ட்டின் மொழியை சுட்டிக்காட்டிப் பயன்படுத்துகிறது. இதன் மதிப்பு எப்பொழுதும் "text/javascript" என்றிருக்க வேண்டும்.
13.
மேலமீட்பு உறைப்பெட்டி மூலம் பயனர் உள்ளீடு செய்வதற்கான தகவலைக் கொடுக்க prompt உரையாடல் பெட்டி பயன்படுகிறது. பயனருடன் ஊடாட இது பயன்படும். உறைப்பெட்டி புலத்தில் பயனர் உள்ளீடு செய்து OK பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
prompt உரையாடல் பெட்டியின் கட்டளை அமைப்பு:
Prompt ("Message", "defaultValue");
(or)
window.prompt("sometext", defaultText");
எ.கா:
prompt("Enter Your Name", "Name");
(or)
window.prompt("Enter Your Name", "Name);
14.
செயலேற்பியின் தரவு வகையை பெற type of செயற்குறி உதவும். செயற்லேற்பி நிலையுருவாகவோ அல்லது மாறி அல்லது செயற்கூறு போன்ற ஏதேனும் ஒரு தரவு கட்டமைப்பில் இருக்கலாம். இந்தசெயற்குறி செயலேற்பியின் தரவு வகையைத் திருப்பி அனுப்பும்.
கட்டளை அமைப்பு
typeof operand
or
typeof(operand)
type of செயற்குறி பூலியன், செயற்கூறு, எண், சரம்அல்லது அறிவிக்கப்படாத தரவினம் போன்ற ஏதேனும் ஒரு மதிப்பை திருப்பி அனுப்பும். கீழேகொடுக்கப்பட்டுள்ள அட்டவணை type of செயற்குறி திருப்பி அனுப்பும் மதிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது.
ஜாவாஸ்கிரிப்ட் கீழ்கண்ட செயற்குறிகளை அதிகரிக்கும்.
1. எண் கணித செயற்குறி (Arithmetic Operators)
2. ஒப்பீட்டு செயற்குறி (Relational Operators)
3. தருக்க செயற்குறி (Logical Operators)
4. மதிப்பிருத்து செயற்குறி (Assignment Operators)
5. சரம் செயற்குறி (String Operators)
6. மிகுப்பு மற்றும் குறைப்பு செயற்குறி (Increment and Decrement Operators)
7. நிபந்தனை செயற்குறி (Conditional Operator)
8. ஒரும + மற்றும் ஒரும - எதிர்மம் செயற்குறி (Unary + மற்றும் Unary - செயற்குறி)
9. typeof செயற்குறி (typeof Operator)
15.
ஜாவாஸ்கிரிப்ட்- 5 நிலையுருக்கள் உள்ளன. மூலக்குறிமுறையில், மாற்ற முடியாத மதிப்பை ஏற்கும் மாறியை நிலையுரு என்பர். மாறிகளுக்கு முதன்மை மதிப்பிருத்த நிலையுருக்கள் பயன்படுகின்றன. முழு எண், மிதப்பு புள்ளி, குறியுறு, சர மற்றும் பூலியன் போன்றவை மிதப்புகளாக இருக்கலாம்.
16.
ஒரு மாறியின் வரையெல்லை, அது எந்த மூலக் குறிமுறையில் வரையறுக்கப்பட்டுள்ளதோ அந்த குறிமுறையின் வாழ்நாள்வரை இருக்கும்.
1. முழுதளாவிய மாறி அதை வரையறுக்கப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் நிரலின் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படலாம்.
2. ஒரு செயற்கூரினுள்ளே அறிவிக்கப்பட்டுள்ள மாறிகளை அவை வரையறுக்கப்பட்ட செயற்கூறின் உடற்பகுதியில் பயன்படுத்தப்படலாம். இவ்வகை மாறிகள் உள்ளமை மாறிகளாகும். இவை உள்ளமை வரையெல்லை கொண்டிருக்கும்.
17.
ஒப்பீட்டு செயற்குறிகள் இரண்டு மதிப்புகளை ஒப்பீட்டு அதன் விளைவை மெய் அல்லது பொய் என்ற விளைவை அறிவிக்கும். = = (சமம்), != (சமமில்லை), < (சிறியதாக), > (பெரியதாக). <= (சிறியதாக அல்லது சமம்), மற்றும் >= (பெரியதாக அல்லது சமம்) போன்ற மேம்படுத்தப்பட்ட ஒப்பிட்டு செயற்குறிகள் ஜாவாஸ்கிரிப்டில் உள்ளது. ஒப்பீடு செயற்குறி பயன்படுத்தப்பட்ட கோவையில் உள்ளகட்டளை சரியெனில் அது இயக்கப்படும் போது மெய் என்றும் அல்லது பொய்யாக இருக்கும்.
| ஒப்பீட்டு செயற்குறி | பொருள் | எடுத்துக்காட்டு | விளைவு |
| x = 10 மற்றும் y = 20 என்று எடுத்துக்கொள்ளலாம் | |||
| = = | சமம் (Equality) | x == y | False |
| ! = | சமமில்லை (Inequality) | x != y | True |
| < | சிறியதாக (Less-than) | x < y | True |
| > | அதிகமாக (Greater-than) | x > y | False |
| <= | சிறியதாக அல்லது சமம் (less-than or equal to) |
x <= y | True |
| >= | பெரியதாக அல்லது சமம் (Greater-than or equal to) |
x >= y | False |
ஒப்பீட்டு செயற்குறிகளை பயன்படுத்தி
< Html >
< Head >
< Title >Demo Program - To test Relational(Comparison) Operators in JavaScript
< /Title > .
< /Head >
< Body >
< script language = "javascript" type = "text/javascript" >
var value1 = 522, value2 = 10;
document.write(" < br > Data1 : "+value1);
document.write("< br > Data2 : "+value2);
document.write("< br > < br > Whether Data1 = Data2 : "+(value1 = = value2));
document.write(" <br > Whether Data1 < Data2 : " +(value1 < value2));
document.write(" < br > Whether Data1 > Data2 : "+(value1 > value2));
document.write(" < br > Whether Datal <= Data2 : "+(value1 <= value2));
document.write(" < br > Whether Data1 >= Data2 : "+(value1 >= value2));
document.write("< br >Whether Data1 != Data2 : "+(value1 != value2));
< /script >
< /Body >
< /Html >
வெளியீடு

18.
ஜாவாஸ்கிரிப்டில் உள்ள சொற்றொடர்கள் கோவைகளாகும். இவற்றை ஜாவாஸ்கிரிப்ட் நிரல் பெயர்ப்பி இயக்கி மதிப்பைப் பெறும்.
கோவைகளை இயக்கினால் இறுதி மதிப்பு கிடைக்கும். எல்லா கோவைகளின் இறுதி மதிப்பு, முழு எண் அல்லது மிதப்புப் புள்ளி மதிப்பு அல்லது பூலியன் மதிப்பாக இருக்கலாம். கோவைகள் மூன்று வகைப்படும். அவை:
1. கணித கோவைகள்
2. ஒப்பீடு கோவைகள்
3. தருக்க கோவைகள்
19.
ஜாவாஸ்கிரிப்ட் நிரலாக்க மொழியின் பயன்கள்:
1. நடைமுறையில் இணையப் பக்கங்கள் ஊடாடுதல் தன்மையுடன் இருக்க வேண்டும். இத்தகைய ஊடாடுதல் தன்மையுடைய இணையப் பக்கங்களை (Dynamic Web Page) உருவாக்குவதற்கு ஜாவாஸ்கிரிப்ட் நிரலாக்க மொழி பயன்படுத்தப்படுகிறது.
2. ஜாவாஸ்கிரிப்ட் ஊடாடுதல் இணையப் பக்கத்தில் பயனர் உள்ளீடு செய்த தரவுகளை பிணையத்திற்கு அனுப்பும் முன் செல்லுபடியாக்குகிறது (validation). இதனால் பிணைய வேலை சுமை குறைக்கப்படுகிறது. இதையே சேவையகம் போக்குவரத்து வேலை சுமை என்பர்.
3.ஜாவாஸ்கிரிப்ட் உள்ள சில உறைப்பெட்டி (Textboxes) பொத்தான்கள் இழுத்து விடு பொருள்கள் மற்றும் சறுக்கிகள் பயன்படுத்தி பயனருக்கு ஒரு மேம்படுத்தப்பட்ட ஊடாடுதல் செய்ய முடியும். எடுத்துக்காட்டாக. ஒரு புதிய மின்னஞ்சல் கணக்கை ஏதேனும் ஒரு இணைய இணைப்பு வழங்கும் நிருவத்தில் உருவாக்குவது.
20.
< script > ... < /script > ஓட்டுகளைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் கூற்றுகளைக் கொண்டு, ஜாவாஸ்கிரிப்ட்டை நடைமுறைப்படுத்தலாம். ஜாவாஸ்கிரிப்ட்டைக் கொண்ட < script > ஓட்டை இணையப் பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் பொருத்தலாம். ஆனால் < ஹெட் > ஓட்டுகளில் உள்ளே கொடுப்பதையே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. < Script > ஒட்டு உலவி நிரலுக்கு இந்த ஓட்டுகளுக்குள் கொடுக்கப்பட்ட அனைத்து உரையையும் ஸ்கிரிப்ட் கட்டளைகளாக ஏற்க வேண்டும் என்ற எச்சரிக்கை அளிக்கும்.
Hyper Text Markup Language (HTML ) அல்லது Dynamic Hyper Text மற்குப்+language (DHTML) ல் உள்ள ஜாவாஸ்கிரிப்ட் தொகுதியின் தொடரியில் கீழ்க்கண்டவாறு உள்ளது.
< script language = "javascript" type = "text/javascript" >
JavaScript code
< /script >
< SCRIPT > ஒட்டு இருப்பது பண்புக்கூறுகளை ஏற்கக் கூடியது.
Language:
இந்தப் பண்பு ஸ்கிரிப்ட்டின் மொழியை தெரிவிக்கின்றது. பொதுவாக, இதன் மதிப்பு ஜாவாஸ்கிரிப்ட் ஆக இருக்கும். இருப்பினும் HTML ன் புதிய பதிப்பான (Extensible HyperText Markup Language - XHTML) ல் இந்தப் பண்பு பயன்படுத்துவது அவசியமில்லை.
Type:
இந்தப் பண்பு கிரிப்ட்டின் மொழியை சுட்டிக்காட்டப் பயன்படுகிறது. இதன் மதிப்பு எப்பொழுதும் "text/javascript" என்றிருக்க வேண்டும்.
21.
சரம் செயற்குறிகள்:
ஜாவாஸ்கிரிப்ட்டின் ஒரு உள்ளமைந்த அன்சமானது சரங்களை இணைப்பது + செயற்குறி எண்களை கூட்டல் மட்டுமல்லாது சரங்களையும் இணைக்கவும் உதவும். செயலெற்பிகள் சரங்கள் எனில் + செயற்குறி சரங்களை இணைக்கும் செயல் எண்களை கூட்டல் செயலைவிட முன்னிரிமை உடையது.
எ.கா:
செயற்குறி பயன்படுத்தி சரங்களை இணைத்தல்
< Html >
< Head >
< Title > Demo Program - To Concatenating (+) Operators in JavaScript < /Title >
< /Head >
< Body >
< script language = "javascript" type = "text/javascript" >
var String1 = "Java";
var String2 = "Script";
var String3 = String1 + String2;
document.write("< br > String1: "+String1);
document.write("< br > String2: "+String2);
document.write("< br > < br > Concatebated String of String1 and String2: "+String3);
< /script >
< /Body >
< /Html >
வெளியீடு:

22.
சரங்கள், எண்கள் மற்றம் பூலியன் என்பவை ஜாவாஸ்கிரிப்டின் அடிப்படை தரவினங்களாகும்.
1. ஒரு சரம் என்பது குறியுருக்களின் வரிசையாகும். மேலும் சரநிலையுரு என்பது இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் குறியுருக்களைக் குறிக்கும் சரங்கள் ஒரு குறியுரு அல்லது குறியுருக்கள், இடைவெளி மற்றும் புதிய வரி போன்ற சிறப்பு குறியுருக்களைக் கொண்டிருக்கும்.
2. முழு எண் அல்லது மிதப்புப் புள்ளி எண்களின் மதிப்பை எண்கள் தரவினம் ஏற்கும் எண்களின் நிலையுறு இயல்பான முறையில் குறிப்பிடப்படும்.
3. மெய் அல்லது பொய் என்ற இரண்டில் ஏதேனும் ஒரு மதிப்பை பூலியன் ஏற்கும். மூலக்கூறியில் பூலியன் நிலையுருக்கள் மெய் அல்லது பொய் என்ற மதிப்புகள் கொண்டு உணர்த்தலாம்.
23.
கணித செயற்குறிகள் (Arithmetic Operators)கூட்டல் (+), கழித்தல் (-), பெருக்கல் (*), வகுத்தல்(/) மற்றும் வகுமீதி (%) போன்ற அடிப்படை கணிதசெயற்குறிகள் எல்லாவற்றையும் ஜாவாஸ்கிரிப்ட் ஆதரிக்கும்.
| கணித செயற்குறி | பொருள் | எடுத்துக்காட்டு | விளைவு |
| + | கூட்டல் | var sum = 20+120 |
Variable sum = 140 |
| - | கழித்தல் | var diff - 20-120 |
Variable diff - 100 |
| * | பெருக்கல் |
var prod = 10*100 |
Variable prod = 1000 |
| / | வகுத்தல் |
var res = 100/522 |
Variables = 5.22 |
| % | வகுமீது | var rem = 100%522 |
Variable rem = 22 |
குறுக்குவழி கணித செயற்குறிகள்
Output:
24.
ஜாவாஸ்கிரிப்ட்-ல் மூன்று வகையான மேல்மீட்பு பெட்டிகள் உள்ளது அவை : Alert உரையாடல் பெட்டி, confirm உரையாடல் பெட்டி மற்றும் Prompt உரையாடல் பெட்டி,
(i) Alert உரையாடல் பெட்டி (Alert Dialog Box):
பயனருக்கு எச்சரிக்கை செய்தி கொடுப்பதற்கு மிகுதியாக Alert உரையாடல் பெட்டி பயன்படும். எடுத்துக்காட்டாக, ஒரு உள்ளீட்டு புலத்தில் ஏதேனும் உரையைத் தட்டச்சு செய்ய வேண்டும். ஆனால் பயனர் உள்ளீடு செய்யவில்லையெனில், உறுதிபடுத்தும் செயலாக, Alert பெட்டி பயன்படுத்தி பயனருக்கு ஒரு எச்சரிக்கை செய்தியைக் கொடுக்கலாம். Alert பெட்டி ஒரே ஒரு "OK" பொத்தானை மட்டும் கொண்டிருக்கும். அதை பயன்படுத்தி அடுத்த நிலைக்கு செல்லலாம்.
Alert பெட்டியின் கட்டளை அமைப்பு
Alert("Message"); (or))
Window.alert("Message");
எடுத்துக்காட்டாக :
alert("Name is compulsory entry");
(or)
window.alert('Name is compulsory entry");
(ii) Conform உரையாடல் பெட்டி :
ஏதேனும் ஒரு விருப்பத்திற்கு பயனரின் ஒப்புதல் பெற confirm உரையாடல் பெட்டி உதவுகிறது. இந்த உரையாடல் பெட்டி OK மற்றும் Cancel என்ற இரு பொத்தான்களை தெரிவிக்கும். பயனர் ok பொத்தானை அழுத்தினால் confirm() மெய் என்ற மதிப்பை திருப்பி அனுப்பும். பயனர் Cancel பொத்தானை அழுத்தினால் Confirm() பொய் என்ற மதிப்பை திருப்பி அனுப்பும்.
Confirm உரையாடல் பெட்டியின் கட்டளை அமைப்பு :
confirm("message");
(or)
window.confirm("message");
எடுத்துக்காட்டாக :
confirm("Hai Do you want to continue=");
(or)
window.confirm("Hai Do you continue:"'); want to continue
(ii) Prompt உரையாடல் பெட்டி : மேல்மீட்பு உரைப் பெட்டி மூலம் பயனர் உள்ளீடு செய்வதற்கான தகவலைக் கொடுக்க prompt உரையாடல் பெட்டி பயன்படுகிறது. உரைப் பெட்டி புலத்தில் பயனர் உள்ளீடு செய்து ok பொத்தானை கிளிக் செய்யவும்.
Prompt() செயற்முறையைப் பயன்படுத்தி prompt உரையாடல் பெட்டியில் செய்தியை தெரிவிக்க உதவும் இதில் இரண்டு அளபுருக்கள் உள்ளன (i) உரைப்பெட்டி தோன்றும் செய்தி (ii) உரைப்பெட்டியில் தோன்றும் கொடாநிலை சரம். இந்த உரையாடல் பெட்டியில் இரண்டு பொத்தான்கள் உள்ளன அவை ok மற்றும் Cancel பயனர் ok பொத்தானை கிளிக் செய்தால் prompt() ல் உள்ள உரைப்பெட்டியில் உள்ளீடு செய்த மதிப்பை திருப்பி அனுப்பும், பயனர் Cancel பொத்தானைக் கிளிக் செய்தால் null என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும். Prompt உரையாடல் பெட்டியின் கட்டளை அமைப்பு:
Prompt("Message", "defaultValue");
(or)
window.prompt("sometext","defaultText");
எடுத்துக்காட்டாக :
prompt("Enter Your Name:","Name");
(or) window.prompt("Enter Your Name:","Name");
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards