11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
11th Computer Applications - Public Model Question Paper 2019 - 2020
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
HTML-ல் அட்டவணையை உருவாக்க எத்தனை ஒட்டுகள் வேண்டும்?
ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
2.
பின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?
உள்ளீட்டுச் சாதனங்கள்
வெளியீட்டுச் சாதனங்கள்
நினைவக சாதனங்கள்
நுண்செயலி
3.
எந்த கூற்றை பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட்யை செயல்படுத்தலாம்?2019
< head >
< Java >
< Script >
< text >
4.
கீழ்கண்டவற்றில் எது தீங்கிழைக்கும் நிரல்கள்?
வார்ம்ஸ்
ட்ரோஜன்
ஸ்பைவேர்
குக்கிகள்
5.
நீண்ட நிரல்கள் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது
கூறுகள்
தொகுதி
கணங்கள்
குழு
6.
if-else_____கூற்றிக்கு மாற்றாக எந்த கூற்றை பயன்படுத்தலாம்
While
If
Else-if
Switch
7.
கீழ்கண்டவற்றுள் எதில் CSS சரியாக எழுதப்பட்டுள்ளது?
p{color:red; text-align:center};
p {color:red; text-align:center}
p {color:red; text-align:center;}
p (color:red;text-align:center;)
8.
இணைய உலாவி ஜன்னல் திரையில் எந்த பகுதியானது ஆவணத்தின் பிரதான உள்ளடக்கத்தை காட்டும்?
Head
Body
Title
Heading
9.
W3C 1994 ஆம் ஆண்டில்______என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது
டிம் – பெர்னர்ஸ் லீ
டிம் –பர்னார்டு லீ
கிம் – பெர்னர்ஸ்
கிம் – பர்னார்டு
10.
எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.
பட்டிப்பட்டை
கருவிப்பட்டை
தலைப்புப் பட்டை
பணிப் பட்டை
11.
பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்?
விண்டோஸ்
உபுண்டு
பெடோரா
ரெட்ஹெட்
12.
Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்?
64
255
256
128
13.
ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?
தொடுதிரை
திரையகம்
ஒலி பெருக்கி
அச்சுப்பொறி
14.
கால்க்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது:
எண்
குறியீடு
தேதி
எழுத்து
15.
Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?
File
Edit
Tools
Format
16.
CSS ஐ HTML உடன் எவ்வாறு இணைப்பாய்?
17.
சரம் செயற்குறி பற்றி குறிப்பு வரைக
18.
கணினி பயனர் பின்பற்றும் வழி காட்டுதல்கள் பற்றி எழுதுக?
19.
உடற்பகுதி ஒட்டினுள் (Body) உள்ள பண்புக்கூறுகள் யாவை?
20.
மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.
21.
கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510
22.
ஓபன் ஆஃபீஸ் கால்க் – குறிப்பு வரைக.
23.
உரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.
24.
இரண்டு எண்களின் கூட்டுத்தொகையை கண்டுபிடிக்கும் ஜாவாஸ்கிரிப்ட் நிரலை செயற்கூறினை பயன்படுத்தி எழுதுக.
25.
வரி முறிவு மற்றும் பத்தி ஒட்டு பற்றி விவரி.
26.
கால்கில் விளக்கப்பட்டதை உருவாக்குவதற்கான செய்முறையை எழுதுக.
27.
பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.
28.
ஒரு எண்ணின் கனசதுரத்தைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் வடிவ நிரல் எழுதுக.
29.
கீழேயுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
< Html >
< Head >
< Title > for statement< /title >
< Head >
< Body >
< script language= "java Script" type = "text / javaScript" >
var no1= prompt ( "please enter table you want:", "0" );
document write ( "< h2 > multiplication for your need < /h2 >" )
for ( Var no2= 0; no2<=10; no2++ )
{
document write (no1+ "x" + no2+ "=" + no1+no2+ "< br >);
}
< /script >
< /body >
< /Html >
30.
விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுபெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.
31.
திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை விளக்குக
32.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு சொல்லை தேடி மற்றொரு சொல்லாக மாற்றும் வழிகளைப் பற்றி எழுது.
33.
கீழ்கண்ட நிரலின் வெளியீடு என்ன?
34.
தளபரப்புப் பாணி தாள்கள் அல்லது வெளிநிலை பாணி தாள்கள் என்றால் என்ன?
35.
இயற்கை மொழி செயலாக்கம் (NLP) என்றால் என்ன?
36.
பணிப்பட்டை என்றால் என்ன?
37.
பொதுவான நிகழ்த்துதல் நிரல்கள் சிலவற்றை எழுதுக.
38.
உள் ஒலி / ஒளிக்காட்சி என்றால் என்ன?
39.
தேடு பொறி என்றால் என்ன?
40.
நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?
41.
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ன் உரை செயற்குறியை பற்றி குறிப்பு வரைக.
1.
(a)
ஐந்து
2.
(d)
நுண்செயலி
3.
(c)
< Script >
4.
(d)
குக்கிகள்
5.
(a)
கூறுகள்
6.
(d)
Switch
7.
(b)
p {color:red; text-align:center}
8.
(b)
Body
9.
(a)
டிம் – பெர்னர்ஸ் லீ
10.
(a)
பட்டிப்பட்டை
11.
(a)
விண்டோஸ்
12.
(a)
64
13.
(a)
தொடுதிரை
14.
(d)
எழுத்து
15.
(b)
Edit
16.
CSS யை HTML உடன் இணைத்தல்:
தலைப்புப் பகுதியில் CSS கோப்பை HTML உடன் இணைக்க < link > ஒட்டு பயன்படுத்தப்படுகிறது. < link > ஓட்டினைப் பயன்படுத்தும் பொழுது, பின்வரும் பண்புக்கூறுகளை அதன் நிலையான மதிப்புகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
rel = "stylesheet"
1. type = "text/css"
2. href பண்புக்கூறு .css கோப்பை இணைக்கப் பயன்படுகிறது.
< Link > ஓட்டின் பொது வடிவம்:
< Link rel = "stylesheet" type = "text/css" href = CSS_File_Name_with_Extension >
HTML உறுப்பை CSS மூலம் வடிவமைத்தல்
Mystyle.css
H1
{
font - family: "Comic Sans MS";
Font - weight: Bold;
border: 2 px solid blue;
}
p {
font - style: Italic;
color: Medium Sea Green;
}
CSS_Test.htm
< html >
< head >
< title > Demonstration of using CSS < /title >
< link rel = "stylesheet" type = "text/c" href = "mystyle.css" >
< /head >
< body >
< H1 > Welcome to CSS < /H1 >
< P >
CSS was invented by HakonWium Lie on October 10, 1994 amd maintained through a group of people within the W3C called the CS Working Group. The CSS Working Group creates documents called specifications. When a specification has been discussed and officially ratified by W3C members, it becomes a recommendation.
< /P >
< body >
< html >
வெளியீடு:

17.
சரம் செயற்குறிகள்:
ஜாவாஸ்கிரிப்ட்டின் ஒரு உள்ளமைந்த அன்சமானது சரங்களை இணைப்பது + செயற்குறி எண்களை கூட்டல் மட்டுமல்லாது சரங்களையும் இணைக்கவும் உதவும். செயலெற்பிகள் சரங்கள் எனில் + செயற்குறி சரங்களை இணைக்கும் செயல் எண்களை கூட்டல் செயலைவிட முன்னிரிமை உடையது.
எ.கா:
செயற்குறி பயன்படுத்தி சரங்களை இணைத்தல்
< Html >
< Head >
< Title > Demo Program - To Concatenating (+) Operators in JavaScript < /Title >
< /Head >
< Body >
< script language = "javascript" type = "text/javascript" >
var String1 = "Java";
var String2 = "Script";
var String3 = String1 + String2;
document.write("< br > String1: "+String1);
document.write("< br > String2: "+String2);
document.write("< br > < br > Concatebated String of String1 and String2: "+String3);
< /script >
< /Body >
< /Html >
வெளியீடு:

18.
நன்னெறியின் வழிகாட்டுதல்கள் (GUIDELINES OF ETHICS) பொதுவாக, பின்வரும் வழிகாட்டுதல்கள் கணிப்பொறி பயன்படுத்துவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. நேர்மை (Honesty) : இணையத்தை பயன்படுத்தும் பயனர் உண்மையுள்ளவராக இருத்தல்.
2. நம்பிக்கை (Confidentiality): பயனர் அங்கீகரிக்கப்படாதவர்களிடம் முக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்யாமல் இருத்தல்.
3. மரியாதை (Respect) : மற்ற பயனருக்கு உள்ள தனி உரிமைக்கு உரிய மரியாதையை ஒவ்வொரு பயனரும் கொடுத்தல்.
4. தொழில்முறை (Professionalism) : தொழில்முறையில் ஒவ்வொரு பயனரும் தொழில் முறை நடத்தையுடன் இருத்தல்.
5. சட்டத்திற்கு கீழ்படிதல் (The Law): சட்டத்திற்கு கணிப்பொறி பயன்பாடுகளின் கீழ்படிதல் போன்று இணைய சட்டத்திற்கு கீழ்படிதல்.
6. பொறுப்பு (Responsibility) : பயனர் ஒவ்வொருவரும், ஒவ்வொரு செயலுக்கும் உடைமையாளராக பொறுப்பேற்றுக் கொள்ளுதல்.
19.
Body ஒட்டுக்கான பண்புக்கூறுகள் :
ஆவணத்தின் உடற்பகுதியை வரையறுக்க < body > ஒட்டானது பயன்படுகிறது. வலை ஆவணத்தின் பொருளடக்கமானது ....< body > என்ற இணை ஒட்டுகளுக்குள் அமைந்திருக்கும் < body > ஒட்டானது வலவகையான பண்புக்கூறுகளைக் கொண்டுள்ளது.
i. Background Color ( பின்புறவண்ணம்) ( bgcolor = color) : அனைத்து வலை உலாவிகளும் வெண்மையான பின்னணி கொண்ட திரையில் உரையினை வெளியீட்டாக தரும். வலை உலாவியின் பின்னணி நிறத்தை bgcolor என்ற பண்புக்கூறின் மூலம் மாற்றியமைக்க முடியும். பின்னணி வண்ணத்தை மாற்ற பயன்படும் தொடரியல்
(ii) உடற்பகுதியில் இடம்பெறும் உரையின் நிறத்தை மாற்றுதல் text = color
மீவுரை ஆவணத்தில் உடற்பகுதியில் உள்ள உரைகளின் கொடாநிலை வண்ணமானது கருப்பு (black) ஆகும். இது தானமைவு வண்ணம் எனவும் அழைக்கப்படுகிறது. உடற்பகுதியில் உள்ள உரையின் வண்ணத்தை மாற்ற பயன்படும் ஒட்டின் பண்புக்கூறு
(iii) வலைஉலாவியின் பின்புறத்தில் படத்தை அமைத்தல்:
Background image: background=image வலை உலாவியின் பின்னணியாக உருவப்படத்தையோ(image) அல்லது நிழற்படத்தையோ(picture) அமைக்க முடியும். வலையின் பின்னணியாக உருவப்படத்தை அமைக்கும் போது வெளிப்படுத்தப்படும் உரையானது உருவப்படத்தின் மேல் வெளிப்படுத்தப்படும்.பின்னணி படிமமானது / உருவப்படமானது இழைவாகவோ (texture) அல்லது படமாகவோ (iamge) அல்லது புகைப்படங்களாகவோ (photos) இருக்கலாம். சிறிய உருவப்படத்தை பின்னணியாக அமைக்கும் போது வலை உலாவியானது அந்த உருவப்படத்தை குறுக்கும் நெடுக்குமாய் ஆவணம் முழுவதும் நிரப்பிக்கொள்ளும். அசைவூட்டப்படத்தை பின்னணியாக அமைப்பது சுவாரசியத்தை மேலும் அதிகரிக்கும்.
வலை உலாவியின் பின்னணியாக படத்தை அமைக்க பயன்படும் தொடரியல்
20.
1.கைபேசிகள், டேப்ளட்கள் மற்றும் எம்பி 3 பிளேயர்கள் போன்ற மொபைல் சாதனங்கள் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கணினிகளில் இருந்து வேறுபட்டவை. எனவே அவற்றிற்கு சிறப்பு இயக்க அமைப்புகள் தேவைப்படுகின்றன.
2.பொபைல் சாதனங்களுக்கான இயக்க அமைப்புகள் பொதுவாக முழுமையாக இல்லை டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினி கம்ப்யூட்டிற்காக உருவாக்கப்பட்டவை போல் அனைத்தையும் இயக்க முடியாது. எ. கா : ஆப்பிள் iOS மற்றும் கூகிள் ஆண்ட்ராய்டு.
21.
அ)-2210+1510
படிநிலை 1: 2210 மற்றும் 1510 எண்களை இருநிலை எண்வடிவில் மாற்றுக.
2210 ன் இருநிலை மதிப்பு -10110
8 bit வடிவில் -00010110
1-ன் நிரப்பு முறை மதிப்பு -11101001
+1
-2210 ன் நிரப்பு முறை மதிப்பு -11101010
படிநிலை 2:
1510 இருநிலை மதிப்பு -1111
1510 ன் இருநிலை மதிப்பு 8 bit வடிவில் -00001111
படிநிலை 3:
-22 மற்றும் 15 க்கான இருநிலை கூட்டல்
| எடுத்துச் செல்லப்படும் பிட் | 1 | 1 | 1 | |||||
| -2210 | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 0 |
| 1510 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 | 1 | 1 |
| -710 | 1 | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 1 |
-2210+1510=-710
ஆ) 2010+2510
படிநிலை 1:
2010 இருநிலை மதிப்பு -(10100)2
8 bit வடிவில் -(00010100)2
படிநிலை 2 :
2510 இருநிலை மதிப்பு -(11001)2
8 bit வடிவில் -(00011001)2
படிநிலை 3: 2010 மற்றும் 2510 க்கான இருநிலை கூட்டல்
2010+2510=(00101101)2=(45)10
22.
கால்க் (Calc) என்பது ஓபன் ஆஃபீஸ் (Open Office) தொகுப்பில் உள்ள அட்டவணை செயலியாகும்.
(i) ஓபன் ஆஃபீஸ் கால்க் ஒரு பிரபலமான திறந்த மூல (Open Source) அட்டவணைச்செயலி ஆகும். இதனை தற்போது அபாச்சி (Apache) நிறுவனம் பராமரித்து வருகிறது.
(ii) கால்க்(Calc) என்பது ஓபன் ஆஃபீஸ் (Open Office) தொகுப்பில் உள்ள அட்டவணைசெயலியாகும். அட்டவணைசெயலில் எந்த விதமான தரவுகளையும் உள்ளீடாக கொடுத்து, செயலாக்கம் செய்து, வெளியீட்டை பெற முடியும்.
(iii) மேலும் “ என்ன-எனில் பகுப்பாய்வு” முறையின் மூலம் ஏதேனும் ஒரு தரவை மீண்டும் தட்டச்சு செய்யாமல், மாற்றம் மட்டும் செய்தால் அவற்றின் வெளியீடுகள் எவ்வாறு மாறுகிறது என்பதை எளிதாக பார்க்க முடியும்.
23.
வழிமுறை 1 :
தேவையான உரையைத் தேர்வு செய்து வலது பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் மேல் மீட்பு பட்டிப்பட்டையில் உள்ள Line spacing என்றத் தேர்வை கிளிக் செய்யவும் இப்போது தோன்றும் single 1.5 அல்லது double போன்ற ஏதேனும் வரி இடைவெளியைத் தேர்வு செய்யலாம்.
வழிமுறை 2 :
1. Edit \(\rightarrow \) Select All கட்டளையைப் பயன்படுத்தி முழு ஆவணத்தையும் தேர்வு செய்யவும்.
2. Format \(\rightarrow \) paragraph கட்டளையைப் கிளிக் செய்யவும்.
3. paragraph உரையாடல் பெட்டி தோன்றும் இதில் indents & spacing தொகுதியைக் கிளிக் செய்யவும்.
4. Line Spacing வகை யிழு பட்டியல் தேவையான வரி இடைவெளியைத் தேர்வு செய்து ok பொத்தானைக் கிளிக் செய்யவும்.
24.
< html >
< head >
< title > Function Example < /title > < head > < Body >
< script type="text/JavaScript" >
var input 1 = window.prompt("Enter Valuel :", "0");
var input2=Window.prompt("Enter Value2:", "O");
var vl=parseInt(inputl);
var v2=parseInt(input2):
var s=sum(vl,v2);
document.writeln("< br > < h4 > < u > Example for
Function< /u > < /h4 > ");
document.writeln("First No:"+v1+< br > Second
No:"+ v2+"< br > The Sum=" + s);
function sum(x, y)
{
var s=x+y;
returns
}
< /script >
< body >
< /body >
< /html >
25.
26.
(i) விலக்கப்பட வழிகாட்டி உரையாடல் பெட்டி, கால்க் -ல் விளக்கப்படங்களை உருவாக்கப் பயன்படுகிறது.
(ii) இந்த உரையாடல் பெட்டியைத் திறப்பதற்கு, செந்தரக்கருவிப் பட்டையிலுள்ள "Chart" என்ற பணிக்குறி அல்லது Insert Chart கட்டளையினை கிளிக் செய்ய வேண்டும்.
(iii) இப்போது, விளக்கப்பட வழிக்காட்டி உரையாடல் பெட்டித் தோன்றும்.
(iv) விளக்கப்பட வழிகாட்டி உரையாடல் பெட்டியில் நான்கு படிநிலைகள் உள்ளன.
1. விளக்கப்படத்தின் வகை
2. தரவுப்பரப்பு
3. தரவுத்தொடர்
4. விளக்கப்பட கூறுகள்
(i) படிநிலை 1: Chart type :
1.விளக்கப்பட வழிகாட்டி உரையாடல் பெட்டியின் முதல் படிநிலை Chart type, விளக்கப் படத்தின் வகையைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது,
2. "Choose a chart type" என்ற பட்டியல் பெட்டியில் அனைத்து விளக்கப்பட வகைகளும் பட்டியலிடப்பட்டிருக்கும்.
3. இந்த பட்டியல் பெட்டிக்கு வலது பக்கத்தில், தேர்ந்தெடுக்கப்படும் விளக்கப்படத்தின் பாணி பட வடிவிலேயே காட்டப்பட்டிருக்கும்.
4. ஒவ்வொரு விளக்கப்படமும் வித்தியாசமான பாணிகளைப் பெற்றிருக்கும்.
5. 3D Look தேர்வு விளக்கப்படத்தை விரும்பும் வகையில் காட்டும்.
6. இரண்டாவது படிநிலைக்கு நகர்வதற்கு, "Next" பொத்தானை கிளிக் செய்யவும்.
(ii) படிநிலை 2: Data Range :
1. இந்த படிநிலையில், எந்த தரவுப் பரப்பிற்கு விளக்கப்படம் வரைப்பட வேண்டுமோ, அந்த தரவின் பரப்பை, "Data Range" உரைப்பெட்டியில் கடைசியில் உள்ள "Select data range" என்ற பொத்தானை கிளிக் செய்யலாம்.
2. விலக்கப்பட வழிகாட்டியை இயங்குவதற்கு முன்பே, தரவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், தேர்வு செய்யப்பட்ட நுண்ணறைகளின் முகவரி, தோன்றும்.
3. அதற்கும் கீழே, First row as label மற்றும் First column as label என்ற இரண்டு தேர்வுப் பெட்டிகள் உள்ளது. இவை விளக்கப்படத்தில் X - அச்சு மற்றும் Y - அச்சுக்கானத் தலைப்புகளை உருவாக்கப் பயன்படுகிறது.
4. மூன்றாவது படிநிலைக்கு "Next" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(iii) படிநிலை 3: Data Series:
1. இந்தப் படிநிலை, விளக்கப்படம் உருவாக்குவதற்காக சேர்க்கப்பட்ட தரவினை மேலும் சீர்பபிடுத்தப் பயன்படுகிறது.
2. விளக்கப்படத்தில் சேர்க்கப்பட்ட தரவுகளில் ஏதேனும் ஒரு நெடுவரிசையை நீக்க வேண்டுமெனில் , "Data Series" பட்டியல் பெட்டியிலுள்ள தலைப்பை கிளிக் செய்து "Remove" பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. அதே போல, ஏதேனும் ஒரு நெடுவரிசையை புதிதாகச் சேர்க்க விரும்பினால், "Add" பொத்தானை கிளிக் செய்து, கடைசி படிநிலைக்கு நகரலாம்.
(iv) படிநிலை 4: Chart Element:
1. இந்தப் படிநிலை விளக்கப்படத்திற்கு தலைப்பு மற்றும் லெஜெண்டு (Legend) களை புதிதாக சேர்ப்பதற்க்கோ அல்லது மாற்றியமைப்பதற்கோ பயன்படுத்தப்படுகிறது.
2. "Title" உரைப்பெட்டியில், விளக்கப்படத்திற்க்கான முதன்மைத் தலைப்பை உள்ளிட வேண்டும்.
3. "Subtitle" உரைப்பெட்டியில் விளக்கப்படத்திற்கு இரண்டாம் நிலை அல்லது துணைத் தலைப்பு ஏதேனும் கொடுக்க விரும்பினால் அதனைத் தட்டச்சு செய்யவும்.
4. அதே போன்று X மற்றும் Y அச்சுகளில் தோன்ற வேண்டிய தலைப்புகளை முறையே "X axis" மற்றும் "Y axis" உரைபெட்டிகளில் தட்டச்சு செய்ய வேண்டும். அனைத்து படிநிலைகளை முடிந்த பின்னர். "Finish" பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
27.
இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் தரவு மற்றும் நிரல்களை நிரந்தரமாகச் சேமித்து வைக்கப் பயன்படுகின்றன.
இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள்:
(i) வன்வட்டுகள் (Hard disk)
(ii) குறுவட்டு (Compact Disk -CD)
(iii) டிஜிட்டல் வெர்சடைல் வட்டு/டிஜிட்டல் வீடியோ வட்டு (DVD)
(iv) ஃபிளாஸ் நினைவக சாதனங்கள்
1. வன்பொருள் (Hard disk):
(i) வன்வட்டு ஒரு காந்தவட்டாகும். இதில் தரவுகளைச் சேமிக்கலாம்.
(ii) வன்வட்டு ஒவ்வொரு வட்டிற்கும் ஒரு ஜோடி தலைகள் கொண்டு அணுகும் வண்ணம் பல வட்டுக்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள ஏற்பாட்டில் அமைந்திருக்கும்.
(iii) வன்வட்டுகள் ஒற்றை அல்லது இரட்டை பக்க வட்டுக்களாக இருக்கும்.
2. குறு வட்டு (CD):
(i) CD எனப்படும் CD-ROM 1.2 மில்லிமீட்டர் பருமன் அளவில் பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனதாகும்.
(ii) மெல்லிய அளவிலான அலுமினியம் அல்லது தங்க முலாம் அதன் மேல்பகுதியில் பூசப்பட்டிருக்கும்.
(iii) CD-ல் தரவுகள் சிறிய தடங்களில் துணுக்குகளாக அதில் சேமிக்கப்படுவது "pits" எனப்படும். இவை அடுக்கின் மேல் ஒரு சுருள் பாதையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இரண்டு pits -களுக்கு இடையே உள்ள இடைவெளி "lands" என்று அழைக்கப்படும்.
(iv) CD-யைப் படிக்கும் சாதனத்தில் உள்ள மோட்டர் CD-யை சுழற்றும்.
(v) ஒரு சாதாரண CD -ன் கொள்ளளவு 700 MB ஆகும்.
3. டிஜிட்டல் வெர்சடைல் வட்டு/டிஜிட்டல் வீடியோ வட்டு (DVD):
(i) DVD (Digital Versatile Disc அல்லது Digital Video Disc) ஒரு கண்ணாடியிழை வட்டு (Optical Disc)
(ii) இது 4.7 GB வரை தரவுகள் சேமிக்கும், இந்த அளவு 6 CD-ன் கொள்ளளவுக்கு சமமாகும்.
(iii) திரைப்படங்களை சிறந்த தரத்தில் DVD-களில் சேமித்து, லேசர் மூலம் படிக்க முடிகின்றது.
(iv) ஒரு 12 செ.மீ விட்டம் உள்ள வட்டு ஒரு பக்க மற்றும் ஒரு அடுக்கு உள்ள வட்டு சுமார் 4.7 GB கொள்ளளவாகவும் மேலும் ஒரு பக்க இரு அடுக்கு உள்ள வட்டு 8.5 GB கொள்ளளவாக இருக்கும். 8 cm உள்ள DVD 1.5 GB கொள்ளளவைக் கொண்டது.
(v) ஒரு DVD ROM-ன் கொள்ளளவு அதில் உள்ள தரவுப் பக்க எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்.
4. ஃபிளாஸ் நினைவக சாதனங்கள் (Flash Memory Devices):
(i) ஃபிளாஸ் நினைவகம் ஒரு மின்னணு (திட நிலை) அழிவுறாத சேமிக்கும் சாதனமாகும். மேலும் மின்சாரத்தின் மூலம் நிரல்களை அழித்து மறுபடியும் நிரலாக்க முடியும்.
(ii) ஃபிளாஸ் நினைவகம் ஒரு EEPROM அல்லது EPROM வகைப்படும்.
எ.கா: பென் டிரைவ் (Pen Drive), மெமரி கார்டு (Memory Card)
(iii) ஃபிளாஸ் நினைவகம் வேகமான அணுகல் நேரத்தை வழங்குகிறது.
5. ப்ளூ -ரே வட்டு (Blu -Ray Disc):
(i) ப்ளூ-ரே வட்டு அதிக அடர்த்தியானக் கண்ணாடி இழை வட்டு வடிவமைப்பு பெற்ற DVD-யை ஒத்ததாகும்.
(ii) ப்ளுரே வட்டு பெரும்பாலும் விளையாட்டு மென்பொருட்களை, உயர் வரையறை திரைப்படங்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
(iii) ஒரு இரண்டு அடுக்கு ப்ளூ -ரே வட்டில் 5.2 GB வரைத் தரவுகளைச் சேமிக்கலாம். இதன் கொள்ளளவு 5 DVD மற்றும் 70 CD க்குச் சமமாகும்.
(iv) இந்த வடிவமைப்பு பதிவை இயக்குவதற்கு மீண்டும் எழுதுவதற்கும், உயர் வரையறை வீடியோவை இயக்குவதற்கும், மேலும் மிக அதிகத் தரவுகளைச் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
(v) ப்ளூ-ரே வட்டு, ப்ளூ வைலைட் லேசர்-ஐ தரவை எழுதுவதற்குப் பயன்படுத்துவதால் ப்ளூ-ரே என்று பெயர் பெற்றது.
28.
< html >
< head >
< tittle > Function Example
< /tittle >
< /head >
< Title >
< Function cube < Title >
< script language = " javascript"type ="text/
javasscript" >
{
function cube( x)
{
vars=x*x*x;
return s;
var x=prompt (" Enter a number :","o");
var n=parseInt(x);
var c= cube(n);
docment.writeIn("< br >< h4 >Cube of
"n+"is ="c+< /h4 >);
< /body >
< /body >
< /html >
OUTPUT
Enter value: 5
Cube Function Number: 5
The cube: 125

29.
விடை :
30.
| செயல் | விண்டோஸ் (Windows)இயக்க அமைப்பு | உபுண்டு (Ubuntu) இயக்க அமைப்பு |
| கோப்பை உருவாக்குதல் | தேவையான பயன்பாட்டைத் திறந்து File\(\rightarrow \)New தேர்வின் மூலம் (அ) Ctrl+N என்றச் சாவிக் சேர்மானம் மூலம் கோப்பை உருவாக்கலாம். | 1.திரைமுகப்பில் வலது கிளிக் செய்து New document என்ற தேர்வின் மூலம், 2.File\(\rightarrow \)New document என்ற பட்டிப்பட்டைத் தேர்வின் மூலம். |
| கோப்பிற்கு மறு பெயரிடல் | 1.எக்ஸ்புளோரர் சன்னல் திரையில் File\(\rightarrow \)Rename என்றக் கட்டளையைத் தேர்வு செய்வதன் மூலம். 2.F2 விசை மூலம் 3. கோப்பின் மீது வலது கிளிப் செய்து வரும் பட்டியலில் Rename என்றத் தேர்வைக் கிளிக் செய்வதன் மூலம். |
1.Edit\(\rightarrow \) Rename என்ற தேர்வின் மூலம். 2. கோப்பின் மீது வலது கிளிக் செய்து வரும் பட்டியலில் Rename என்றத் தேர்வைக் கிளிக் செய்வதன் மூலம். |
| கோப்பை நீக்குதல் | 1. கோப்பின் மீது வலது கிளிக் செய்து வரும் பட்டியலில் Delete என்பதைத் தேர்வு செய்வதன் மூலம். 2. கொப்பினைத் தேர்வு செய்து Delete என்ற விசையை விசைப்பலகையிலிருந்து அழுத்துவதன் மூலம் |
1.Edit \(\rightarrow \) Move to Trash என்றத் தேர்வின் மூலம் 2. கோப்பின் மீது வலது கிளிக் செய்து வரும் 'Move to Trash'என்றத் தேர்வின் மூலம். |
| கோப்பை சேமித்தல் | 1.File\(\rightarrow \)Save or file\(\rightarrow \)Save As என்றக் கட்டளையை தொடர்புடைய பயன்பாட்டில் தேர்வு செய்வதன் மூலம் 2. Ctrl+S என்றச் சாவிச் செரிமானத்தின் மூலம் |
File \(\rightarrow \)Save அல்லது File \(\rightarrow \)Save As அல்லது File \(\rightarrow \)Save a Copy என்றத் தேர்வின் மூலம். |
31.
நன்மைகள்:
இலவசமாக பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் மாற்றிடக் கூடியதாகும்.
உருவாக்கிய மூல நிறுவனத்தையோ அல்லது உருவாக்கிய அறிஞரையோ சார்ந்திருப்பதில்லை. நிறுவனம் இயங்கவில்லை என்றாலும் இயக்க அமைப்பின் குறிமுறை தொடர்ந்து இருக்கும் மற்றும் அதன் பயனர்களால் மேலும் புதுப்பிக்கப்படும்.
தீமைகள்:
வணிக தனி உரிம இயக்க அமைப்புகள் போல பயனர் எளிதாக பயன்படுத்த முடியாது.
திறந்த மூல இயக்க அமைப்பு மற்றும் தனி உரிம இயக்க அமைப்பு இரண்டிலும் இயங்கக் கூடிய பயன்பாட்டு மென் பொருள்கள் குறைவு.
எனவே திறந்த மூல இயக்க அமைப்புக்கு மாறினால், தனி உரிம இயங்கு தளத்தில் இயங்கும் மென்பொருள்களின் ஒத்தியங்கும் பகுப்பாய்வை மேற்கொள்ளுதல் வேண்டும்.
திறந்த மூல இயக்க அமைப்புகளின் உருவாக்கம் இணையாக சென்று கொண்டிருக்கும். இது எந்த பதிப்பில் எந்த வகையான செயல்பாடு உள்ளதெனக் குழப்பத்தை ஏற்படுத்தும்.
திறந்த மூல இயக்க அமைப்புகள் மிகப்பெரிய உறுதுணையாக இருப்பிதில்லை.
தற்போது கிடைக்க கூடிய வன்பொருள்கள் திறந்த மூல இயங்கு தளங்களில் ஒத்துப் போவதில்லை.
32.
1.Search for பெட்டியில் தேட வேண்டிய சொல்லை தட்டச்சு செய்யவும். எடுத்துக்காட்டாக “Bombay” என்ற வார்த்தையை தேடி அதற்கு பதிலாக “Mumbai” என்று மாற்றம் செய்ய Search for பெட்டியில் “Bombay” என்று தட்டச்சு செய்யவும். Replace with பெட்டியில் மாறி வர வேண்டிய “Mumbai” என்ற சொல்லை தட்டச்சு செய்க.
2.Find பொத்தானை கிளிக் செய்தவுடன், தேடல் தொடங்கி “Bombay” என்ற வார்த்தையின் முதல் இருப்பிடத்தில் அந்த வார்த்தையை கண்டுபிடித்து அது உயர்த்திக் காட்டப்படும்.
3.உயர்த்திக் காட்டப்பட்ட சொல்லை மட்டும் மாற்றியிடுவதற்கு Replace பொத்தானை கிளிக் செய்யவும்.
4. Find All கிளிக் செய்தால் ஆவணத்தில் தேடப்படும் சொல் உள்ள எல்லா இடங்களிலும் தேடப்பட்டு அந்த சொல்லானது அனைத்து இடத்திலும் தேர்வு செய்யப்பட்டு உயர்த்திக் காட்டப்படும்..
5. Replace All பொத்தானை கிளிக் செய்தால் உயர்த்திக் காட்டப்பட்ட அனைத்து “Bombay” என்ற வார்த்தை இருக்கும் எல்லா இடத்திலும் “Mumbai” என்று மாற்றப்பட்டிருக்கும்.
6.உரையாடல் பெட்டியில் உள்ள Match case தேர்வு செய்தால் பெரிய மற்றும் சிறிய வடிவிலான வழக்கு எழுத்துக்களை தனித்தனியாக தேடலின் போது வேறுபடுத்த முடியும்.
7. Whole words only-ஐ தேர்வு செய்தால் அந்த வார்த்தையை மட்டும் தேடும்.
8. Close பொத்தானை கிளிக் செய்யவும்.
33.
< html >
< head >
< title > Type Casting < /title >
< /head >
< body bgcolor = orange >
< font size = 7>
< script language = "javascript"type = "text/ javascript" >
var x =6+parseInt("3")
document.write (x)
< /sript >
< /Font >
< /body >
< /html >
34.
பல்வேறு பக்கங்களுக்கு ஒரே பாணியைப் பயன்படுத்த விரும்பினால் அந்த பாணிகளைத் தனி பாணிக் கோப்புகளாக "தளபரப்புப் பாணி தாள்கள்" அல்லது வெளிநிலை பாணி தாள்கள் ("Sitewide Style Sheets" or "External Style Sheets) எனப்படும்.
35.
1. இயற்கை மொழி செயலாக்கம் (NLP-Natural Language Processing) என்பது செயற்கை நுண்ணறிவியலில் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.
2. மனித மொழியிலிருந்து பொருளைப் பெறுவதற்குப் பயன்படுகிறது.
36.
1.திரைமுகப்பின் கீழே உள்ள கிடைமட்ட பட்டை "பணிப்பாட்டை"(Taskbar) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பட்டை தொடக்கப் பொத்தான், பல்வேறு பயன்பாடுகளின் குறுக்குவழிகள், மற்றும் சிறிதாக்கப்பட்டப் பயன்பாடுகளைக் கொண்டிருக்கும்.
2. மேலும் அதன் வலதுகோடியில். ஒலி கட்டுப்பாட்டகம், வலையமைப்பு. தேதி மற்றும் நேரம் போன்ற வசதிகளை உள்ளடக்கிய "கணினி அமைப்பு தட்டு"(System tray) ஒன்றும் உள்ளது.
3.அடிக்கடி பயன்படுத்தப்படும் பயன்பாடுகளை கொண்டிருக்கும் "விரைவு தொடக்க கருவிப்பட்டை" (Quick lauch toolbar),தொடக்க பொத்தானுக்கு அடுத்ததாக உள்ளது.
37.
1.OpenOffice Impress
2. Microsoft Powerpoint
3. Apple's Keynote
38.
ஓர் இணையப் பக்கத்தைப் பார்வையிடும் போது, பின்புலத்தில் இசையை ஒலிக்கச் செய்யலாம். இதனை உள் ஒலி/ஒளிக் காட்சி என்பர். ஒட்டினைப் பயன்படுத்தி HTML ஆவணத்தில் உள் ஒலி / ஒளிக் காட்சியை இணைத்துக் கொள்ளலாம்.
39.
தேடுபொறிகள் என்பது தேவையான தகவலை உலகிலாவிய வலையில் இருந்து (WWW) தேடி தருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருளாகும்.
எ.கா : பரவலாக பயன்படும் தேடுபொறிகள்:
Yahoo, Lycos, Altavista, Hotbot, Google மற்றும் Askjeeves.
40.
நிரலில் அடுத்து செயற்படுத்த வேண்டிய கட்டளையின் முகவரியை மையச்செயலகத்தில் சேமித்து வைக்கப்பயன்படும். ஒரு சிறப்பு பதிவேடு நிரல் கவுண்ட்டர் (Program Counter) எனப்படும்.மையச்செயலகத்திலுள்ள கணித ஏரணச் செயலகம் செயற்படுத்த வேண்டிய நினைவக முகவரியை நினைவக முகவரி பதிவேட்டில் (Program Counter) சேமித்து வைக்கும்.
41.
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் & என்ற குறியீடு உரை செயற்குறியாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உரைகளை ஒன்றாக சேர்க்க இந்த செயற்குறி பயன்படுகிறது.இரண்டு உரைகளை ஒன்றாக சேர்த்தல் உரை இணைத்தல் எனப்படும்.
எ.கா. A1 & B1
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards