11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் வேலை செய்தல் (Basics)
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?
3
2
4
5
2.
=H1<>H2 என்ற கூற்றுக்கான வெளியீட்டு மதிப்பு என்ன?(H1=12, H2=12 என்க.)
True
False
24
1212
3.
+ A1 ∧ B2 என்ற வாய்பாட்டுகான வெளியீட்டு மதிப்பு எது? (A1 = 5, B2 = 2 என்க)
7
25
10
52
4.
அட்டவணைத்தாளிளிற்குள் நுண்ணறை சுட்டியை முன்னோக்கி நகர்த்தும் பொத்தான் எது?
Enter
Tab
Shift+Tab
Delete
5.
6.
பரப்பு என்றல் என்ன? எ.கா: தருக.
7.
அட்டவணைத்தாள் என்றால் என்ன?
8.
நகலெடுத்து ஒட்டுதல் மற்றும் வெட்டி ஒட்டுதல் வேறுபடுத்துக.
9.
“Insert Cells” உரையாடல் பெட்டியிலுள்ள தேர்வுகள் யாவை?
10.
நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?
11.
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ன் உரை செயற்குறியை பற்றி குறிப்பு வரைக.
12.
13.
Calc ல் உள்ள POWER () செயற்கூறைப் பற்றி எழுதுக.
14.
Insert Cells கருவிப்பட்டை மூலம் வரிசை, நெடுவரிசை மற்றும் நுண்ணறைகளை எவ்வாறு சேர்ப்பாய்?
15.
தானியங்கு சேமித்தல் பற்றி எழுதுக.
16.
Viscalc பற்றி குறிப்பு வரைக.
17.
ஏதேனும் மூன்று வடிவூட்டல் தேர்வுகளை எழுதுக.
18.
Backspace மற்றும் Delete பொத்தான்களை பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக.
19.
ஓபன் ஆஃபீஸ் கால்க் – குறிப்பு வரைக.
20.
ஓபன் ஆஃபீஸ் கால்கின் சிறப்பியல்புகளைப் பட்டியலிடுக.
21.
கால்க்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக.
1.
(a)
3
2.
(b)
False
3.
(b)
25
4.
(b)
Tab
5.
(c)
6.
(i) ஒரு நுண்ணறையிலிருந்து, மற்றொரு நுண்ணறை வரை தொடர்ச்சியாக உள்ள நுண்ணறைகளின் தொகுப்பு "பரப்பு" (Range) எனப்படும்.
(ii) அரைப்புள்ளி (;) பரப்பு பறவையிடு செயற்குறி ஆகும்.
(iii) எ.கா: (A1 : A10)
7.
கால்க் சன்னல் திரையின் முக்கிய பகுதி பணிப் பகுதி (Work Area) அல்லது அட்டவணைத் தாள் (Work Sheet) என்று அழைக்கப்படுகிறது.
அட்டவணைத்தாள் என்பது கட்டங்களுடன் கூடிய நுண்ணறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு, அதன் ஒன்னொரு நுண்ணறையிலும் நிரலாக்கப்பட்ட கணிப்பாண்கள் இணைத்துள்ளன.
8.
| நகலெடுத்து ஓட்டுதல் | வெட்டி ஓட்டுதல் |
| 1. நுண்ணறையின் உள்ளடக்கத்தை நகல் எடுக்கப் பயன்படுகிறது |
நுண்ணறையின் உள்ளடக்கத்தை நகர்த்தப் பயன்படுகிறது. |
| 2. நுண்ணறையின் உள்ளடக்கம் மூல நுண்ணறையிலும் இருக்கும். |
நுண்ணறையின் உள்ளடக்கம் மூல நுண்ணறையிலிருந்து நீக்கப்பட்டு. இலக்கு நுண்ணறையில் மட்டும் இருக்கும். |
9.
"Insert Cells" உரையாடல் பெட்டியில் உள்ள நான்கு விருப்பத் தேர்வுகள்:
1.Shift cells down
2. Shift cells right
3. Entire row
4. Entire Column
10.
| செயல் | குறுக்குவழிச் சாவிச் சேர்மானம் |
| நகலெடுத்தல் | Ctrl + C |
|
வெட்டுதல் |
Ctrl + X |
| ஓட்டுதல் | Ctrl +V |
11.
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் & என்ற குறியீடு உரை செயற்குறியாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உரைகளை ஒன்றாக சேர்க்க இந்த செயற்குறி பயன்படுகிறது.இரண்டு உரைகளை ஒன்றாக சேர்த்தல் உரை இணைத்தல் எனப்படும்.
எ.கா. A1 & B1
12.
13.
(i) POWER () என்பது, ஒரு எண்ணின் அடுக்கு மதிப்பை (Power of an exponent) கணக்கிடுவதர்க்கானச் செயற்கூறு ஆகும்.
(ii) ஒரு எண்ணின் அடுக்கு மதிப்பைக் கணக்கிடுவதற்கு இரண்டு மதிப்புகள் உள்ளீடாகத் தரப்பட வேண்டும்.
(iii) அவை, அடிமானம் (Base) மற்றும் அடுக்கு (Exponent) மதிப்பு.
(iv) = POWER (Base; Exponent)
எ.கா: 25 ன் அடுக்கு 2 [252] மதிப்பைக் கண்டறிய = POWER (25; 2) என்று கொடுக்க வேண்டும்.
14.
(i) "Insert Cells" மிதவைக் கருவிப்பட்டையைப் பெற, View ➝ Toolsbar ➝Insert Cells கட்டளையைக் கிளிக் செய்யவும்.
(ii) ஒரு சிறிய மிதவைக் கருவிப்பட்டை, நான்கு பணிக்குறிகளுடன் தோன்றும்.
1. Shift Cells Down
2. Shift Cells right
3. Entire row
4. Entire Column.
(iii) பணிக்குறிகளைப் பயன்படுத்தி, ஒரு புதிய வரிசை, நெடுவரிசை சேர்க்க முடியும்.
15.
1. ஓபன் ஆஃபீஸ் ஒரு கோப்பை, குறிப்பிட்ட கால் இடைவெளியில் சேமிக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இது தானியங்கு சேமித்தல் என்று அழைக்கப்படுகிறது.
2. கொடாநிலை தானியங்கு சேமிப்புக்கான கால இடைவெளி 15 நிமிடங்களாகும். இந்தக் கால இடைவெளியை மேலும் குறைக்க முடியும்.
3. எதிர்பாராத விதமாக கணிப்பொறியின் இயக்கம் தடைபடும் போது, இந்த வசதி கோப்புகளை அழிவிலிருந்து காக்கின்றது.
16.
1.விஸ்கால்க் (Visible Calculator) என்பது ஆப்பிள் II என்ற கணிப்பொறிக்காக, விசிகார்ப் என்ற நிறுவனத்தால், தனியாள் கணிப்பொறிகாக 1979 ல் வடிவமைக்கப்பட்ட முதல் அட்டவணைச் செயலி ஆகும்.
2. பொழுதுபோக்குக்காக சேகரித்தல் மற்றும் பயன்படுத்தும் நிலையில் இருந்த கணிப்பொறிகளைப் பயன்படுத்தும் வகையில் மாற்றம் பெற "விஸ்கால்க்" முக்கிய பங்காற்றியுள்ளது.
3. ஆறு ஆண்டுகளில் ஏழு இலட்சம் பிரதிகள் வரை விற்பனை செய்யப்பட்ட, அதன் வரலாற்றில் சுமார் 1 மில்லியன் பிரதிகள் வரை விற்பனை செய்யப்பட்டது.
17.
| வடிவூட்டல் தேர்வு | விசைப்பலகை குறுக்கு வழி |
பயன் |
| எழுத்துரு வகை | - | எழுத்துரு வகையை மாற்றப் பயன்படுகிறது. |
| எழுத்துரு அளவு | - | எழுத்துருக்களின் அளவை மாற்றுவதற்கு பயன்படுகிறது. |
| தடினமாக்குதல் | Ctrl + B | தரவை தடினமாக்குவதற்கு பயன்படுகிறது. |
| சாய்வெழுத்தாக்குதல் | Ctrl + I | தரவை சாய்வெழுத்தாக மாற்றுருவதற்கு பயன்படுகிறது. |
| அடிக்கோடிடுதல் | Ctrl + U | தரவுகளை அடிக்கோடிடுவதற்கு |
| வலது இசைவு | Ctrl + L | நுண்ணறைக்குள் தரவுகளை வலது இசைவில் அமைக்க |
| இடது இசைவு | Ctrl + R | நுண்ணறைக்குள் தரவுகளை இடது இசைவில் அமைக்க. |
| மைய இசைவு | Ctrl + E | நுண்ணறைக்குள் தரவுகளை மைய இசைவில் அமைக்க |
| நேர்த்தி இசைவு | Ctrl + J | நுண்ணறைக்குள் தரவுகளை வலது மற்றும் இடது ஓரங்களில் சமமானதாக மாற்றுவதற்கு |
| நுண்ணறை சேர்ப்பு | - | தேர்தெடுக்கப்பட்ட நுண்ணறைகளை, ஒரே நுண்ணறையாக மாற்றுவதற்கு. |
18.
| Backspace | Delete |
| Backspace பொத்தானைப் பயன்படுத்தி அழித்தல் |
Delete பொத்தானைப் பயன்படுத்தி அழித்தல் |
| இது காட்டிக்கு (cursor) இடப்புறம் உள்ள எழுத்துருக்களை அழிக்கும் |
இது காட்டிக்கு வலப்புறம் உள்ள எழுத்துருக்களை அழிக்கும். |
19.
கால்க் (Calc) என்பது ஓபன் ஆஃபீஸ் (Open Office) தொகுப்பில் உள்ள அட்டவணை செயலியாகும்.
(i) ஓபன் ஆஃபீஸ் கால்க் ஒரு பிரபலமான திறந்த மூல (Open Source) அட்டவணைச்செயலி ஆகும். இதனை தற்போது அபாச்சி (Apache) நிறுவனம் பராமரித்து வருகிறது.
(ii) கால்க்(Calc) என்பது ஓபன் ஆஃபீஸ் (Open Office) தொகுப்பில் உள்ள அட்டவணைசெயலியாகும். அட்டவணைசெயலில் எந்த விதமான தரவுகளையும் உள்ளீடாக கொடுத்து, செயலாக்கம் செய்து, வெளியீட்டை பெற முடியும்.
(iii) மேலும் “ என்ன-எனில் பகுப்பாய்வு” முறையின் மூலம் ஏதேனும் ஒரு தரவை மீண்டும் தட்டச்சு செய்யாமல், மாற்றம் மட்டும் செய்தால் அவற்றின் வெளியீடுகள் எவ்வாறு மாறுகிறது என்பதை எளிதாக பார்க்க முடியும்.
20.
(i) எக்ஸெல் அட்டவணைசெயலியுடன் இணைப்பு: மைக்ரோசாப்ட் எக்ஸெல் அட்டவணைச் செயலிகளை திறக்கவும். பதிப்பாய்வு செய்யவும் மற்றும் சேமிக்கவும் முடியும்.
(ii) தானியங்கு கூட்டல் (Autosum): நுண்ணறைத் தொகுப்பில் உள்ள மதிப்புகளின் கூட்டுத் தொகையைக் கண்டறிய உதவுகிறது.
(iii) பட்டியல் தானியங்கு நிரப்பி (List Auto Fill): ஒரு பட்டியலின் இறுதியில், சில புதியத் தரவுகளைச் சேர்க்கும் போது. மற்ற நுண்ணறைகளுக்குச் செய்யப்படும் வடிவூட்டல்கள், தானாகவே புதிய தரவுகளுக்கும் நீட்டிக்கப்படும்.
(iv) தானியங்கு நிரப்பி (Auto Fill) : கால வரிசைப் படியான தேதிகள் அல்லது வரிசை எண்கள் அல்லது மீண்டும், மீண்டும் காட்சிப்படுத்த வேண்டிய உரைகளை அனைத்து நுண்ணறைகளிலும் விரைவாகத் தோன்றத் செய்ய தானியங்கு நிரப்பு வசதி வகை செய்கிறது. செயற்கூறுகளை நகலெடுக்கவும் இவ்வசதி பயன்படுகிறது. மேலும் இதன் மூலம் உரை மற்றும் எங்களை மாற்றி அமைக்க முடியும்.
(v) விளக்கப்படும் (Charts) : தரவுகளை, வட்ட (Pie), பட்டை (Bar), கோட்டு (Line) போன்றப் விளக்கப்படங்களாகத் தருவதற்குப் பயன்படுகிறது.
(vi) செயற்கூறுகள் (Functions): தரவுகளின் மீது, சிக்கலான கணக்கீடுகளைச் செய்ய உதவும் வாய்பாடுகளை உருவாக்கப் பயன்படுகிறது.
(vii) தரவுதள செயற்கூறுகள் (Database functions) : தரவுகளை ஒழுங்குபடுத்தி, வடிகட்டி, சேமிக்க உதவுகிறது.
21.
வழிமுறை 1 :
1. எந்த நெடுவரிசையின் அகலத்தை மாற்ற விரும்புகின்றோமோ அந்த நெடுவரிசையைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. Format ➝ Column ⇾ Width என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. Column Width உரையாடல் பெட்டி தோன்றும்.
4. தேவையான அளவை Width சூழல் பெட்டியில் கொடுத்து OK பொத்தானை கிளிக் செய்யவும்.
வழிமுறை 2 :
1. அகலம் மாற்றப்பட வேண்டிய நெடுவரிசையைத் தலைப்பில் சுட்டியை வைத்து வலது கிளிக் செய்யவும்.
2. Column Width உரையாடல் பெட்டி தோன்றும்.
3. தேவையான அளவை Width சுழல் பெட்டியில் கொடுத்து OK பொத்தானை கிளிக் செய்ய்யவும்.
வழிமுறை 3 :
1. எந்த நெடுவரிசையின் அகலத்தை மாற்ற வேண்டுமோ, அந்த நெடு வரிசையை, அடுத்த வரிசையிலிருந்து பிரிக்கும் கோட்டிற்கு சுட்டியை எடுத்துச் செல்லவும்.
2. சுட்டெலியின் சுட்டி இருதலை அம்புக்குறியாக மாறுவதைக் காணலாம்.
3. அந்த நிலையில் கிளிக் செய்து சுட்டியை இடதுப்புறம் அல்லது வலப்புறம் இழுத்து அகலத்தைக் குறைக்கவோ அல்லது கூடவோ செய்யலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards