11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/11/2019
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பிக்செல்ஸ் என்றால் என்ன?
2.
கீழே உள்ள கூற்றிள் கொடுக்கப்பட்டுள்ள i,ii,iii மற்றும் iv என்ற இடத்தில் குறிப்பிடப்படுபவை எவை?
\(\underset { \overset { | }{ (i) } }{ float } \quad \underset { \overset { | }{ (ii) } }{ add } \quad \underset { \overset { | }{ (iii) } }{ : : } \quad \underset { \overset { | }{ (iv) } }{ display() } \)
3.
கட்டளை தொகுதியின் செயல்கள் யாவை?
4.
நெறிமுறை குறியிட்டூ முறைகள் யாவை?
5.
பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?
6.
மடக்கு மாற்றமிலியை வரையறுக்கவும்.
7.
கோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது?
8.
பல பயனர் இயக்க அமைப்பு என்றால் என்ன?
9.
தரவு என்றால் என்ன?
10.
ஒரு கூற்று பல கூற்றுகளைக் கொண்டு அமைக்கப்பட்டால் அக்கூற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தேர்ந்தெடுப்பு கூற்று
மடக்குகள்
தொடர்க்கூற்று
கூட்டு கூற்றுகள்
11.
தரவுகளை சேமிப்பதற்கு எது பெயரிடப்பட்ட பெட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன?
தரவு
மாறிகள்
செயல்கள்
கட்டுப்பாட்டு ஓட்டம்
12.
எந்த இயக்க அமைப்பானது ஸ்மார்ட் கைபேசிகளுக்கானது?
iOS
லினக்ஸ்
ஆண்ட்ராய்டு
இவரில் எதும் இல்லை
13.
A - வின் ASCII குறியீடு ...........
97
65
38
42
14.
அளபுருக்களை ஏற்கும் ஆக்கி Simple S1(10,20) என்ற கூற்று எதனுடைய எடுத்துக்காட்டு?
inline அழைப்பு
non-inline அழைப்பு
உள்ளார்ந்த அழைப்பு
வெளிப்படையான அழைப்பு
15.
பின் வரும் கூற்றில் எது சரியான கூற்று?
(i) பதின்மம் எண் இலக்கங்களில் காற்புள்ளிக்கு அனுமதி இல்லை
(ii) எண்ம இலக்கங்கள் 0 என்ற முன்னொட்டுடன் தொடங்குகிறது
(iii) பதினாறு நிலை இலக்கங்கள் ox அல்லது OX என்ற என்ற முன்னொட்டுடன் தொடங்குகிறது
(iv) மிதப்புப்புள்ளி மாறிலி பின்னப்பகுதியை கொண்ட ஒரு எண் மாறிலி
(i) மற்றும் (iv)
(ii) மற்றும் (iii)
(i) மற்றும் (iv)
அனைத்தும் சரியான
16.
அணியில் உள்ள அனைத்து உறுப்புகளின் மதிப்புகளை வெளியிடுவது பின்வரும் எதனின் எடுத்துக்காட்டாகும்?
பொருள் வரையறை
பயணித்தல்
பணிமிகுப்பு
செயற்கூறு
17.
இவற்றுள் எது வரையெல்லை செயற்குறியாகும்?
>
&
%
..
18.
பின்வரும் எந்த கூற்றை பண்முறைச் செயல் கூற்று எனலாம்?
கிளைபிரித்தல்
தேர்ந்தெடுப்பு
மடக்கு
தீர்மானிப்பு
19.
பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறு இனக்குழுக்களும் மற்றும் பொருள்களும் அடிப்படையாகக் கொண்ட நிரல் அணுகுமுறையை விவரிக்கிறது?
OOP
POP
ADT
SOP
20.
மடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை
மடக்கின் தொடக்கத்தில்
ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தில்
ஒவ்வொரு தற்சுழற்சியின் முடிவில்
நெறிமுறையின் தொடக்கத்தில்
21.
எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.
பட்டிப்பட்டை
கருவிப்பட்டை
தலைப்புப் பட்டை
பணிப் பட்டை
22.
பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்
விண்டோஸ்
உபுண்டு
பெடோரா
ரெட்ஹெட்
23.
பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?
லொகேட்டர் (Locator)
என்கோடர் (Encoder)
டிகோடர் (Decoder)
மல்டி ஃபிளக்சர் (Multiplexer)
24.
எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
25.
பயனர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய குறிப்புகள் யாவை?
26.
getline() செயற்கூறு பற்றி வரைக.
27.
நடைமுறை நிரலாக்கத்தின் அம்சங்கள் பற்றி குறிப்பு வரைக.
28.
நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (programmable Read Only Memory-PROM) விவரி.
29.
m+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.
30.
கீழ்காணும் பதினாறுநிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: BE
31.
ஒரே நேரத்தில் பல கோப்புகளில் நீங்கள் வேலை செய்யும் போது, சில நேரங்களில் கணினி செயலிழக்கக்கூடும். இதற்கு காரணம் என்ன? அதை எவ்வாறு சரி செய்வாய்.
32.
விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?
33.
கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.
34.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை பற்றி விரிவாக எழுதுக.
35.
வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறியை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதவும்.
36.
கட்டுருக்களின் அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
37.
38.
பின்னலான இனக்குழுவை எடுத்துக்காட்டுடன் விளக்கு
39.
C++ - ல் பயன்படுத்தப்படும் இருநிலை செயற்குறிகளை பற்றி எழுதுக.
40.
பொருள் நோக்கு நிரலாக்கம் மற்றும் நடைமுறை நிரலாக்கம் -வேறுபடுத்துக.
41.
பின்வரும் குறியுரு இருநிலை எண்களின் கணக்கியல் செயல்பாடுகளை செய்க: 1410 - 1210
42.
A என்ற எண்ணைய் B என்ற எண்ணால் வகுத்து, ஈவு மற்றும் மீதியை கணக்கிடுவதற்கான சுழற்சி நெறிமுறை ஒன்றை கட்டமைக்கவும்.நெறிமுறை திட்டத்தின் படி இந்த நெறிமுறை கீழ்கண்ட விதிகளுக் கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
divide (A , B)
-- inputs: A ஒரு முழு எண் மற்றும் B ≠ 0
-- outputs : q மற்றும் r; such that A = q X B+ r --
-- மற்றும் 0 ≤ r < B
43.
ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக
1.
திரையகத்தில் படங்கள் பிக்செல்ஸ் (PIXELS) எனப்படும் படக் கூறுகளுடன் உருவாக்கப்படுகின்றன.
2.
(i) உறுப்புச் செயற்கூறின் தரவினம்
(ii) இனக்குழுவின் பெயர்
(iii) வரையெல்லை செயற்கூறு
(iv) உறுப்புச் செயற்கூறு
3.
1. தரவு மாற்றம்
2. எண்கணித செயல்முறைகள்
3. தருக்க செயல்முறைகள்
4. கட்டுப்பாட்டு நகர்வு
5. உள்ளீடு / வெளியீடு
4.
நெறிமுறைகளை குறிப்பிட சில குறியிட்டூ முறைகள் தேவைப்படுகின்றது. ஒரு நெறிமுறையை குறிப்பிட மூன்று முதன்மை குறியிட்டூ முறைகள் உள்ளது.அவை
1. நிரலாக்க மொழி (programming Language)
2. போலிக் குறிமுறை (Pseudo code)
2. பாய்வுப்படம் (Flowchart)
5.
i) நாம் முக்கியநெறிமுறைகளை செயல்பாடுகளாக பிரிக்கிறோம்.
ii) முக்கியநெறிமுறை மற்றும் பிறசெயல்பாடுகளை தனித்தனியாக ஒவ்வொரு செயலையும் கட்டமைக்கிறோம்.
iii) இறுதியாக, நாம் செயல்பாடுகளை பயன்படுத்தி முக்கிய நெறிமுறையை கட்டமைக்கிறோம்.
இந்த செயல் பிரித்தல் (Decomposition) எனப்படுகிறது.
6.
(i) மடக்கின் உடற்பகுதியிலுள்ள மாற்றமிலி மடக்கு மாற்றமிலி என்றழைக்கப்படுகிறது.
(ii) ஒரு மடக்கில், டு என்பது மடக்கின் உடற்பகுதியாகிய கூயின் மாற்றமிலியானால், டு அதன் "மடக்கு மாற்றமிலி" என்றழைக்கப்படுகிறது.
7.
(i) எந்த வகை கோப்பு என்பதை உறுதி செய்கிறது
(ii) இயக்க அமைப்பு கோப்பின் தன்மையை தெரிந்துகொள்ள உதவுகிறது
8.
1. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள், தரவுகளையும் பயன்பாடுகளையும் கணிப்பொறியில் பயன்படுத்த அனுமதிக்கும் இயக்க அமைப்பு "பல பயனர் இயக்க அமைப்பு" என்று பெயர்.
2.இந்த இயக்க அமைப்பில், பயனர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளமுடியும். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ் போன்றவை பல பயனர் இயக்க அமைப்புக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
9.
தரவு என்பதற்கான ஆங்கில வார்த்தையான னுயவய என்ற சொல் னுயவரஅ என்ற சொல்லிலிருந்து வந்தது, அதன் பொருள்'' செயல்படுத்தப்படாத உண்மை தகவல்'' (Raw facts ) என்பதாகும்.
தரவு என்பது மக்கள், இடங்கள் அல்லது பொருட்களின் உண்மைத் தகவல்களை கொண்டது.
எடுத்துக்காட்டு : பெயர் (Name), வயது (Age), வகுப்பு (class), மதிப்பெண் (Marks) மற்றும் பாடம் (subject) போன்றவை மாறிகள் என்று எடுத்துக்கொள்வோம். இப்போது இந்த ஒவ்வொரு மாறியிலும் அதற்குரிய மதிப்புகளை இருத்தினால், கீழ்கண்டவாறு தோன்றும்
Name = Rajesh
Age =16
Class = XI
Marks = 65
Subject = Computer Science
மேலே கூறப்பட்ட எடுத்துக்காட்டில் , இந்த ஐந்து மாறிகளில் இருத்தப்பட்ட மதிப்புகள் தரவு எனப்படும்.
10.
(d)
கூட்டு கூற்றுகள்
11.
(b)
மாறிகள்
12.
(c)
ஆண்ட்ராய்டு
13.
(b)
65
14.
(d)
வெளிப்படையான அழைப்பு
15.
(d)
அனைத்தும் சரியான
16.
(b)
பயணித்தல்
17.
(d)
..
18.
(c)
மடக்கு
19.
(a)
OOP
20.
(d)
நெறிமுறையின் தொடக்கத்தில்
21.
(a)
பட்டிப்பட்டை
22.
(a)
விண்டோஸ்
23.
(c)
டிகோடர் (Decoder)
24.
(c)
மூன்றாம்
25.
(i) திருப்பி அனுப்பும் தரவு வகை என்பது C++ ஏற்கும் ஏதேனும் ஒரு ஏற்கதகு தரவின வகையில் அமைக்கலாம்.
(ii) செயற்கூறின் பெயர் என்பது பயனர் வரையறுத்த குறிப்பெயர்கள்.
(iii) அளபுருக்களின் பட்டியல் , கொடுப்பது அவசியமில்லை . இது மாறிகளின் பட்டியல் இதில் கொடுக்கப்பட்டுள்ள மாறியின் முன்பாக அதன் தரவினத்தை அறிவிக்கப்பட்டு , மாறிகள் காற்புள்ளியுடன் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
(iv) செயற்கூறின் உடற்பகுதி - செயற்கூறின் உடல் பகுதியில் இந்த செயற்கூறு செயற்படுத்த வேண்டிய C++ கூற்றுகளை கொண்டிருக்கும்.
26.
C++ மொழியில் getline () என்ற செயற்கூறும் ஒரு முழு வரியிலான இடைவெளிகளுடன் கூடிய உரையை உள்ளீட்டு தாரையின் மூலம் உள்ளெடு செய்யப்பயன்படுகிறது. இது குறியுருக்கான நகர்த்தி திரும்பலை (newline charcter) அல்லது வரம்புக்குறியை (delimiter) பயனர் உள்ளீடு செய்யும் வரை உள்ளீட்டை ஏற்கும். < string > என்ற தலைப்பு கோப்பில் இந்த செயற்கூறுக்கு உரிய அறிவிப்புகள் உள்ளது.
27.
(i) நிரலானது, துணை நிரல் கூறுகளாகவோ கூறு அல்லது துணை நிரல்களாகவோ கட்டமைக்கப்படுகிறது.
(ii) அனைத்துத் தரவு உறுப்புகளும் முழு தளாவியவை ஆகும்.
(iii) நிரல் குறிமுறைகளைப் பராமரித்தலும் மேம்படுத்தலும் கடினமாகும். ஒரு மாறியின் தரவு வகைகளை மாற்ற வேண்டுமெனில், அதே தரவு வகையைப் பயன்படுத்தும் துணை நிரல்கள் அனைத்திற்கும் அந்த தரவு வகை மாற்றத்தை செய்ய வேண்டியது அவசியமாகும். இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது.
எடுத்துக்காட்டு: FORTRAN மற்றும் COBOL
28.
1.நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் ஒரு அழியாநினைவகம் ஆகும்.இதில் தரவுகள் ஒரு முறைமட்டும் எழுத முடியும்.
2. PROM-ல் ஒரு முறை நிரல்களை எழுதிவிட்டால் எப்பொழுதும் அழியாமலிருக்கும்.முதன்மை நினைவகம் போன்று அல்லாமல் கணினியின் செயல்பாடு நிறுத்தப்பட்டாலும்,PROM-ன் உள்ளடக்கம் அழியாமல் இருக்கும்.
3. PROM-ROM ல் இருந்து மாறுபட்டதாகும் தயாரிக்கப்படும் பொழுது ஒரு காலி நினைவகமாக தயாரிக்கப்படும்,அனால் தயாரிக்கும் பொழுதே அதில் நிரல்கள் சேமிக்கப்படுகின்றது.
4. ஆனல் PROMல் நிரலருக்கு தேவைப்படும் பொழுது நிரல்களை எடுத்துக்கொள்ளலாம்.
5. PROM Burner என்ற மென்பொருளை பயன்படுத்தி PROM சிப்பில் தரவுகள் எழுதப்படுகின்றன.இந்தவகையான PROM-ன் நிரலாக்கம் PROM-ல் எழுதுதல் என்றழைக்கப்படும்.
29.
P (m, n) = m + 3n 6T6Ifilro,
P (m, n) [m, n := m + 3, n - 1]
= m + 3n [m, n:= m + 3, n- 1]
=(m+3)+3(n-l)
=m+3 +3n- 3
=m+3n
=P(m, n)
(m + 3n) [m, n := m + 3, n - I] = m + 3n என்பதால் +3n v < gJ m, n := in + 3, n - 1 என்ற மதிப்பிருத்தலின் ஒரு மாற்றமிலியாகும்
30.
| பதினாறு நிலை எண் | இருநிலை எண் |
| BE | 1011 1110 |
31.
(i) ஒரு நேரத்தில் பல கோப்புகளில் வேலை செய்யும் போது, சுழற்சி முறையில், ஒவ்வொரு பணிக்கும், ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும்.
(ii) எடுத்துக்காட்டாக, ஹ,ஷி, ஊ மூன்று வேலைகளை இருப்பதாக எடுத்துக்கொள்வோம். இதில், முதலாவது ஹ பின்னர் கூஷி அதை தொடந்தது ஊ என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் சுழற்சி முறையில் மைய செயலகம் செயலாக்கம் செய்யும். மீண்டும் அடுத்தசுழற்சியில் வட்டவரிசைமுறையில் வேலை ஒதுக்கீடு செய்யப்படும்.
(iii) ஒரே நேரத்தில் பல கோப்புகளில் நிரலினை பொருத்து சில நேரங்களில் கணினி செயலிழக்கப்படும்.
(iv) ஒரே நேரத்தில் அதிகப்படியான கோப்புகளை திறக்காமல் இருப்பதன் மூலம் இதை சரி செய்யலாம்.
32.
| வ.எண் | விண்டோஸ் | லினக்ஸ் |
| 1 | வின்டோஸ் தனியுரிமை இயக்க அம்மைப்புகளின் ஒரு குடும்பமாகும். | லினக்ஸ் ஒர் திறந்த-மூல இயக்க அமைப்புகளின் ஒரு குடும்பமாகும். |
| 2 | இது சொந்த நிறுவனத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். | இது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் மாற்றப்பட்டு விநியோகிக்கப்படலாம். |
| 3 | விலை கொடுத்து வாங்க வேண்டும் | இலவசம் |
33.
i) பணியிடத்தில் பலர் வருகை பதிவு செய்யவும் சான்றுகளை பதிவு செய்யவும் பயன்படுத்துகின்றனர் (to keep records).
ii) தரவை அலச (analyze data), ஆராய்ச்சி செய்ய (do research), திட்டப்பணிகளை நிர்வகிக்க (manage projects) கணினிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
iii) வீட்டில், நீங்கள் கணினியைப் பயன்படுத்தித் தகவல்களைத் தேடி எடுக்கலாம் (to find information), படங்களையும் இசையையும் (store pictures and music) வைத்துக்கொள்ளலாம்.
iv) வரவு செலவு கணக்கிடலாம்
v) விளையாட்டுகள் ஆடலாம் (யீடயல பயஅநள).
vi) மற்றவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் (Communicate With Others).
vii) இணையத்துடனும் இணைக்கலாம் (to connect to the Internet); இணையம் என்பது உலகெங்கும் உள்ள கணினிகளை இணைக்கும் ஒரு பிணையம் (network). இணைய வசதி (Internet access) இருந்தால் நீங்கள் உலகெங்கும் உள்ள மனிதர்களோடு தொடர்பு வைத்திருக்கலாம், மிகப் பெரிய அளவு தகவல்களைக் கண்டறியலாம்.
viii) தெரு வரைபடங்களைக் (street maps) காணலாம், உங்கள் நகரத்திற்கான வானிலை (weather forecast) முன்னறிவிப்பினை பார்க்கலாம்.
ix) பெரும்பாலான நிறுவனங்கள், அரசு அமைப்புகள் (government agencies), அருங்காட்சியகங்கள் (museums), நூலகங்கள் (libraries) ஆகியனவற்றின் வலைத்தளங்களில் அவற்றின் தயாரிப்புகள் (products) சேவைகள் (services), தொகுப்புகள் (உடிடடநஉவடிளே) போன்றவை பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
x) அகராதிகள் (dictionaries), கலைக் களஞ்சியங்கள் (encyclopedias) போன்ற தகவல் ஆதாரங்களும் பரவலாகக் கிடைக்கின்றன.
34.
சுட்டியின் வகைகள்:
(i) இயந்திரவியல் (Mechanical) சுட்டி:
ஒரு சிறிய கடினமான ரப்பர் பந்து சுட்டியின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும். அது அந்தசுட்டியின் அடிப் பகுதியில் உள்ள ஒரு துளையின் வழியே, தரைப் பகுதியில் உள்ள ஒரு துளையின் வழியே, தரைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அட்டையின் மீது உருளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சுட்டி நகர்த்தப்படும்போது பந்து உருளும். பந்தின் நகர்வு, சமிஞ்கைகளாக மாற்றப்பட்டு கணிப்பொறிக்கு அனுப்பப்படுகிறது.
உருவாக்கம் / அறிமுகம்: டெலிஃபன்கள், ஜெர்மானிய நிறுவனம். 02/10/1968 (Telefunken, German Company)
(ii) ஒளியியல் (Optical) சுட்டி:
இயங்கும் முறை: சுட்டியின் இயக்கம் மற்றும் (acceleration) முடுக்கம் அளவிடப்படும். சுட்டி நகர்வதைத் தீர்மானிக்கப் பந்துக்குப் பதிலாக ஒளிபயன்படுத்தப்படுகிறது. ஒளியியல் சுடியியல் மூன்று பொத்தான்கள் உள்ளது ஒளியியல் சுட்டிக் குறைவான உணர்திறன் கொண்டது.
உருவாக்கம் / அறிமுகம்: 1980-ல் ரிச்சர்டு லயன் (Richard Lyon), ஸ்டீவ் கிரீஸ் (Steve Kirsch) தன்னிச்சையாக பலவகையான ஒளியியல் சுட்டியின் வகைகளைக் கண்டுபிடித்தனர்.
(iii) லேசர் (Laser) சுட்டி:
இயங்கும் முறை: சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration) அளவிடப்படும். லேசர் சுட்டி அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது. லேசர் சுட்டி மிகுந்தஉணர்திறன் கொண்டது மற்றும் எந்தக் கடினமான மேற்பரப்பிலும் செயல்படும்
35.
வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி (scope resolution operator ) : வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி ஒரு மாறியின் மறைந்து கிடக்கும் வரையெல்லையை வெளிக்கொணரும். வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி :: இதற்கு பயன்படுகிறது
பொதுமையான மாறியும் உள்ளமை மாறியும் ஒரே பெயரை கொண்டிருப்பதால் பொதுமையான மாறி யை இயக்க வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி பயன்படுத்தும் ஒரு எடுத்துக்காட்டு:
நிரல் :
// Program to show that we can access a global varrable
// using scope resolution operator :: where there is a local
// variable with same name //
#include < iostream >
using namespace std;
int x = 45; // Global Variable x
int main ()
{
int x = 10; // Local Variable x
cout << ''\n Value of global x is '' << :: x ;
cout << ''\n\n Value of loval x is '' << x;
return 0;
}
வெளியீடு :
Value of global x is 45
Value of local x is 10
36.
ஒரு வகுப்பில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். எனவே ஒரு மாணவரின் கட்டுரு வரையறையை அனைத்து மாணவர்களுக்கு விரிவுபடுத்தலாம். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருந்தால் 20 மாணவர்களுக்கும் தனித்தனியாக 20 கட்டுருக்கள் தேவைப்படும். இந்த தேவைக்காக கட்டுருக்களின் அணி பயன்படுகிறது. உள்ளிணைந்த தரவு வகையில் ஒரு அணி அறிவிக்கப்பட்டது போன்றே கட்டுருக்களிலும் அணிகள் அறிவிக்க முடியும்.
பின்வரும் நிரலானது 20 மாணவர்களின் விவரங்களை உள்ளீடாக பெற்று அந்த மாணவர்களின் விவரங்களையும் அச்சிட்டு காட்டும்.
include < iostream >
using namespace std;'
struct Student
{
int age;
float height, weight;
char name[30];
};
void main()
{
Student std[20];
int i;
cout << "Enter the details for 20 students" << endl;
for(i=0; i<20; i++)
{
cout << " Enter the details of student" << i+ 1 << endl;
cout << " Enter the age:" << endl;
cin >> std[i].age;
cout << "Enter the height:" <<endl;
cin >> std[ i].height;
cout << "Enter the weight" << endl;
cin >> std[i].weight;
}
cout << "The values entered for Age, height and weight are" << endl;
for(i=0; i<20; i++)
cout << "Student" << i+1 <<"\t" << std[i].age << "\t" << std[i].height <<"\t" <<std[i].weight;
}
37.

38.
ஓர் இனக்குழு ஆனது மற்றொரு இனக்குழுவின் உறுப்பாக (ஓர் இனக்குழுவிற்குள் மற்றொரு இனக்குழு) அமைந்திருந்தால் அது பின்னலான இனக்குழு எனப்படும். பின்னலான இனக்குழுவை இரண்டு வழிகளில் உருவாக்கலாம்.
1. ஓர் இனக்குழுவிற்குள் மற்றொரு இனக்குழுவை அமைத்தல்.
2. ஓர் இனக்குழுவின் பொருளை மற்றொரு இனக்குழுவின் உறுப்பாக அறிவித்தல்.
ஓர் இனக்குழுவானது பொருளை மற்றொரு இனக்குழுவினுள் அறிவிக்கப்பட்டிருந்தால், உள்ளமைக்கப்பட்ட இனக்குழுவானது உள்ளமை இனக்குழு (Nested class)எனவும் வெளியே உள்ள இனக்குழுவானது அடைப்பு இனக்குழு (Enclosing class)எனப்படும் அடைப்பு இனக்குழுவின் (Enclosing class). Public அணுகியல்பு பகுதியில் உள்ளமை இனக்குழு ஆனது private அணுகியல்புடன் வரையறுக்கப்படலாம்.
#include< iostream >
using namespace std;
class enclose
{
private:
int x;
class nest
{
private:
int y;
public:
int z;
void prn()
{
y=3;z=2;
" << y*z << "\n";
}; //inner class definition over
nest n1;
public:
nest n2;
void square()
{
n2.prn(); //inner class member function is called by
its object
x=2;
n2.z=4;
cout << "\n The product of " << n2.z << '*' << n2 .
z << "= " << n2.z*n2.z << "\n";
cout << "\n The product of " << x << '*' << x << "=
" << x*x;
}; //outer class definition over
int main()
{
enclose e;
e.square(); //outer class member function is called
}
வெளியீடு :
The product of 3*2=6
The product of 4*4=16
The product of 2*2=4
39.
இரண்டு செயலேற்பியை மட்டும் ஏற்கும் செயற்குறிகள் இரும் செயற்குறிகள் என்று அழைக்கப்படுகின்றன.
(i) கணக்கீட்டு செயற்குறிகள்
(ii) ஒப்பீட்டு செயற்குறிகள்
(iii) மதிப்பிருத்து செயற்குறிகள்
(iv) தருக்கச் செயற்குறிகள்
(i) கணக்கீட்டு செயற்குறிகள் (Arithmetic Operations): கணக்கீட்டுச் செயற்குறிகள் எளிய கணிதச் செயல்பாடுகளாகிய கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற கணக்கீடுகளை செயல்படுத்துகிறது.
(ii) ஒப்பீட்டு செய்குறிகள் (Relational Operators): ஒப்பீட்டுச் செய்குறிகள் செயலெற்பிகளுக்கு இடையயேயான உறவு முறையை கண்டுபிடிக்க பயன்படுகிறது. ஒப்பீட்டு செயற்குறிகள் இரண்டு செயலேற்பிகள் மீது செய்லபடுத்தப்படும் போது விடையானது பூலியன் மதிப்பாக இருக்கும். 1 அல்லது 0 என்பது முறையே சரி அல்லது தவறு என்பதை குறிக்கிறது. C++, ஆறு ஒப்பீட்டுச் செயற்குறிகளை வழங்குகிறது.
(iii) தருக்கச் செயற்குறிகள் (Logical Operators):
தருக்கச் செயற்குறிகள், தருக்க மற்றும் ஒப்பீட்டு கோவைகளை மதிப்பிட பயன்படுகிறது. தருக்க செயற்குறிகள் செய்லேற்பிகளாகிய தருக்க கோவைகளின் மீது செயல்படுகிறது. C++ மூன்று தருக்கச் செயற்குறிகளை வழங்குகிறது.
. AND, OR இரண்டும் இரும செயற்குறிகள்
(iv) மதிப்பிருத்து செயற்குறி (Assignment Operator): செயற்குறி = (சமம்) என்பது சாதாரண மதிப்பிருத்து செயற்குறி ஆகும். ஒரு மதிப்பிருத்து கூற்றின் வலப்பக்கம் இருக்கும் மதிப்பை இடப்பக்கம் உள்ள மாறியில் இருத்தும். இது பொதுவாக எல்லா கணிப்பொறி மொழிகளிளும் பயன்பாட்டில் உள்ளது. இது ஒரு இரும செயற்குறி ஆகும்.
C++ பலவிதமான மதிப்பிருத்து செயற்குறிகளைப் பயன்படுத்துகிறது. அவைகள் குறுக்கு வழி மதிப்பிருத்து செயறிகுறிகள் எனப்படும்.
40.
41.
| எடுத்து செல்லப்படும் பிட் | ||||||||
| 1410 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 | 1 | 0 |
| 1210 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 | 0 | 0 |
| (விடை)(210) | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 |
1410 - 1210 210
42.
43.
1.படிக்கமட்டும் நினைவகம் (ROM) கணிப்பொறியின் ஒரு சிறப்பு நினைவகம்.இது உருவாக்கப்படும் போதே, தரவுகள் பதிவு செய்யப்பட்டு விடுவதால் அதில் மாற்றம் செய்ய முடியாது.
2.இதில் சேமிக்கப்படும் நிரல்கள் கணினியைத் துவக்கவும் மற்றும் தொடங்கும் போது செய்யவேண்டிய செயல்கள் போன்றவை இத்தகைய நினைவகங்களில் வைக்கப்படுகின்றன.
3.ROM ல் கணினியை துவங்குவதற்கான மிக முக்கிய நிரல்களை சேமித்து வைக்கும்.ஒரு முறை தரவுகளை இதில் எழுதிவிட்டால் அதை மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியாது.ஆனால் படிக்கமட்டும் முடியும்.ROM ன் உள்ளடக்கம் மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் அழிவதில்லை.இதனால் ROM யை அழியாநினைவகம் என்று அழைக்கப்படுகிறது.
i.நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம்(Programmable Read-Only Memory - PROM )
4.நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம், ஒரு அழியாநினைவகம் ஆகும்.
5.இதில்தரவுகள் ஒரு முறைமட்டும் எழுத முடியும்.PROM-ல் ஒருமுறை நிரல்களை எழுதிவிட்டால் எப்பொழுதும் அழியாமலிருக்கும்.
6.முதன்மை நினைவகம் போன்று அல்லாமல் கணினியின் செயல்பாடு நிறுத்தப்பட்டலும். PROM-ன் உள்ளடக்கம் அழியாமல் இருக்கும்.
7.PROM-ROM ல் இருந்து மாறுபட்டதாகும் PROM தயாரிக்கப்படும் பொழுது ஒரு காலி நினைவகமாக தயாரிக்கப்படும், ஆனால் ROM தயாரிக்கும் பொழுதே அதில் நிரல்கள் சேமிக்கப்படுகின்றது.
8.ஆனால் PROM ல் நிரலருக்கு தேவைப்படும் பொழுது நிரல்களை எடுத்துக்கொள்ளலாம். ஞசுடீஆ Burner என்ற மென்பொருளை பயன்படுத்தி PROM சிப்பில் தரவுகள் செலுத்தப்படுகின்றது.
9.இந்த வகையான PROM -ன் நிரலாக்கம் PROM -ல் எழுதுதல் என்றழைக்கப்படும்.
ii.அழிக்கக்கூடிய நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (EPROM) Erasable Programmable Read-Only Memory:
10.அழிக்கக்கூடிய நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம், ஒரு PROM வகையான சிறப்பு நினைவகம் ஆகும்.
11.ஆனால் அதில் புறஊதா ஒளி மூலம் தகவல்கள் அழிக்கப்படுகிறது.EPROM -ல் தகவல்கள் புறஊதா ஒளி செலுத்தும் வரை தகவல்களை சேமித்து வைக்கப்படுகின்றது.
12.புறஊதா ஒளியைச் செலுத்தி PROM-ன் உள்ளடக்கத்தை அழித்தும், மீண்டும் வேறு நிரல்களை மறுபடியும் எழுதலாம்.PROM ஒரு முறை எழுதப்பட்டபின் அதை அழிக்கமுடியாது,அதனால் EPROM, PROM லிருந்து மாறுபட்டது.
13.EPROM பொதுவாக தனியாள் கணினியில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.ஏனெனில் உற்பத்தியாளர்கள் கணினியை வழங்குமுன் ஞசுடீஆ-ன் உள்ளடக்கத்தைமாற்றி, மேம்படுத்தி அல்லது நீக்கவேண்டியவற்றை அழிக்கமுடியும்.
iii.மின்சாரத்தால் அழிக்கும் மற்றும் நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (EEPROM) Electrically Erasable Programmable Read-Only Memory:
14.ஒரு சிறப்பு PROM வகையை சார்ந்த நினைவகம் ஆகும்.இதில் உள்ள தரவுகளை மின்சாரத்தைச் செலுத்தியே அழிக்கலாம்.
15.மற்ற PROM வகையைப் போலவே மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் தரவுகள் அழியாது.மற்ற ROM வகைகளை ஒப்பிட்டால்,EEPROM ஒரு மெதுவாக இயங்கும் நினைவகம் ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards