11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
Mail Merge Wizard ன் 'Select starting document' என்ற படிநிலையில் உள்ள விருப்பத் தேர்வுகளைப் பட்டியலிடு.
2.
முழு அட்டவணையை எவ்வாறு நீக்குவாய்?
3.
விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?
4.
உபுண்டுவின் பட்டிப்பட்டையில் உள்ள அறிவிப்புப்பகுதியில் உள்ள பொதுவான குறிப்பான்கள் யாவை?
5.
தொடக்கப்பட்டியிலுள்ள Shut down தேர்வில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்தால், தோன்றும் பல்வேறு தேர்வுகள் யாவை?
6.
ரியாக்ட் OS என்றால் என்ன?
7.
நுண்செயலியின் கட்டளைத் தொகுதிகள் செயல்படுத்தும் செயல்கள் யாவை?
8.
எண்ணிலை எண்முறை குறிப்பு வரைக
9.
இயற்கை மொழி செயலாக்கம் (NLP) என்றால் என்ன?
10.
முதல் தலைமுறைக் கணிப்பொறிகளின் குறைபாடுகளைப் பட்டியலிடு.
11.
ஆண்ட்ராயடு பயன்பாடு விசைப்பலகை என்றால் என்ன?
12.
மாணவர் வளையகம் என்றால் என்ன
13.
கணிப்பொறியின் வலையமைப்பை வரையறு?
14.
Slide Master -வரையறு
15.
ஒரு சில்லு மற்றும் சில்லுகாட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
16.
வடிகட்டியின் வகைகள் யாவை?
17.
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் தொடர்ச்சி மற்றும் தொடர்ச்சி அல்லாத தாள்களை எவ்வாறு தேர்ந்தெடுபப்பாய்?
18.
காலக்-ல் ஒரு வாய்ப்பாட்டை உருவாக்குவதற்கான பொது கட்டளை அமைப்பை எழுதுக
19.
திறந்த மூல (Open Source) மென்பொருளின் நன்மைகள் யாவை?
20.
பல்பணியாக்கம் என்றால் என்ன?
21.
பாதுகாப்பு மேலாண்மையின் நன்மைகள் யாவை ?
22.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?
23.
கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?
24.
தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.
25.
ஒரு அட்டவணையில் எவ்வாறு ஒரு சிற்றறையை பல சிற்றறைகளாக பிரிப்பாய் மற்றும் பல சிற்றறைகளை எவ்வாறு ஒன்றாக சேர்ப்பாய்?
1.
Select starting document படிநிலையில் உள்ள நான்கு விருப்பத் தேர்வுகள்.
1. Use the current document
2. Create a new document,
3. Start from existing document
4. Start from a template
2.
1. Edit→Select All என்ற கட்டளையை பயன்படுத்தியோ அல்லது Ctrl + A என்ற குறுக்குவழி பயன்படுத்தியோ முழு அட்டவணையை தேர்வு செய்ய வேண்டும்.
2. Table→Delete→Table என்ற கட்டளையை பயன்படுத்தினால் தேர்வு செய்யப்பட்ட அட்டவணையை நீக்காலம்.
3.
1. செருகும் புள்ளியை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
2. Shift பொத்தானை அழுத்தியவாறு நகர்வுப் பொத்தான்களை பயன்படுத்தி தேவையான உரை தேர்வு செய்யப்பட்டப்பின் Shift பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
4.
1. வலையமைப்பு குறிப்பான் ( Network Indicator)
2. உரை உள்ளீடு அமைப்பு ( Text Entry Settings)
3. செய்திக் குறிப்பான்( Messaging Indicator)
4. ஒலிக் குறிப்பான்( Sound Indicator)
5. கடிகாரம் (Clock)
6. அமர்வுக் குறிப்பான் (Session Indicator)
5.
1. Switch user
2. Lock
3. Sleep
4. Logoff
5. Restart
6. Hibernate.
6.
1. விண்டோஸ் இயக்க அமைப்பின் ஒரு மாற்று திறந்த மூல அமைப்பாக ரியாக்ட் OS விளங்குகின்றது.
2. விண்டோஸ் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
3. மைக்ரோசாஃப்டின் எந்தக் குறிமுறையும் பயன்படுத்தப் படவில்லை.
7.
1. நுண்செயலியின் கட்டளைகளின் தொகுதி செயல்படுத்தும் செயல்கள்:
2. தரவு மாற்றம்
3. எண் கணித செயல்முறைகள்
4. தருக்கச் செயல்முறைகள்
5. கட்டுப்பாட்டு நகர்வு
6. உள்ளீடு/ வெளியீடு
8.
எண்ணிலை எண் முறையில் 0 முதல் 7 வரை மொத்தம் எட்டு எண் உருக்கள் உள்ளது. இந்த எண் முறையும் "நிலைநிறை " முறையாகும்
9.
1. இயற்கை மொழி செயலாக்கம் (NLP -Natural Language Processing) என்பது செயற்கை நுண்ணறிவியலில் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.
2. மனித மொழியிலிருந்து பொருளைப் பெறுவதற்குப் பயன்படுகிறது.
10.
1. அளவில் பெரியது.
2. அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக் கொண்டது.
3. அதிக வெப்பம் காரணமாகச் செயலிழக்கும்.
4. இயந்திர மொழி பயன்படுத்தப்பட்டது .
11.
செல்லினம் மற்றும் பொன்மடல் : ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஆண்ட்ராய்டு இயக்க அமைப்பில் ஆங்கில ஒலியியல் முறையில் பயன்படுத்தப்படும் இடைமுக விசைப்பலகை மென்பொருட்கள் ஆகும்.
12.
மாணவர் வலையகம் என்பது, மாணவர்களை இலக்காகக் கொண்டு, அவர்கள் வலையகக் கலையைப் பயின்று, அதன் மூலம் வணிக சமூக நிகழ்வில் வசதியாக உணரச் செய்யும் ஓர் இடமாகும்.
13.
(i) இணைப்பில் உள்ள கணிப்பொறியின் வன்பொருள், மென்பொருள், வளங்கள் மற்றும் தரவுகளை அவற்றிற்கிடையே உள்ள தொடர்பு இடையகத்தின் வழியே பகிர்ந்து கொள்ளும் அமைப்பாகும்.
(ii) கணிப்பொறி வலையகத்தில் உள்ள கணிப்பொறிகள் கம்பிகள், தொலைபேசி கம்பிகள், வானொலி அலைகள் செயற்கைகோள்கள் அல்லது அகச்சிவப்பு அலைகள் வழியாக இணைக்கப்படுகிறது.
14.
1.Slide Master என்பது முன்கூட்டியே தொகுக்கப்பட்ட 28 சில்லுகளைக் கொண்ட தொகுப்பாகும்.
2.நிகழ்த்துதலில் உள்ள எல்லா சில்லுகளிலும் முழுதளாவிய மாற்றங்களைச் செய்ய Slide Master பயன்படுகிறது.
15.
| சில்லு | சில்லுக் காட்சி Slideshow |
| உரை, படங்கள், ஒளிக் காட்சிகள், அசைவுப் படங்கள்,இணைப்பு ஒலி வரை,படங்கள், பட்டியல்கள் அட்ட வணைகள் போன்ற கூறுகளைக் கொண்ட நிகழ்த்தலுக்கான அடிப்படை உறுப்பாகும். | ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய செய்திகளை வரை படச் சில்லுகளாகவோ ஆவணப் பக்கங்களாகவோ கொடுக்கும் ஒரு காட்சியாகும். |
16.
கால்க்-ல் மூன்று வகையான வடிக்கட்டல்கள் உள்ளன. அவை :
1. தானியங்கு வடிகட்டல் (Auto filter)
2. செந்தர வடிகட்டல் (Standard filter) மற்றும்
3. மேம்பட்ட வடிகட்டல் (Advanced filter)
17.
தொடர்ச்சியான ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டவணைத்ததாள்களை தேர்ந்தெடுத்தல்.
1. முதலில் ஒரு கணக்கீட்டுத் தாளின் தத்தலை (Sheet Tab) கிளிக் செய்யவும்.
2. Shift பொத்தானை அழுத்திப் பிடித்தவாறு கடைசி கணக்கிட்டுத்தாளின் தத்தலை (Sheet Tab)கிளிக் செய்யவும், தொடர்ச்சியாக அமையாத ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டவணைத் தாள்களை தேர்ந்தெடுக்க.
படி 1 : ஏதேனும் ஒரு தாளை கிளிக் செய்யவும்.
படி 2 : Ctrl பொத்தானை அழுத்திப் பிடித்தவாறு. தேர்வு செய்ய வேண்டிய வேறு ஒரு தாளை கிளக் செய்யவும்.
18.
ஒரு வாய்ப்பட்டை உருவாக்குவதற்கான பொது கட்டளை அமைப்பு : நுண்ணறை முகவரி < செயற்குறி > நுண்ணறை முகவரி2
வாய்ப்பாடுகள், = அல்லது + அல்லது - குறியுடன் தொடங்கி மதிப்புகள். செயற்குறிகள் மற்றும் நுண்ணறை முகவரிகளுடைய தொகுப்பாக அமையும். சமக்குறியுடன் தொடங்குவது சிறந்த முறையாகும்.
எ.கா:-A1+ B1*5
19.
1. திறந்த மூல நிரல் அனைத்துப் பயனரும் பயன்படுத்த வசதியாக வலைதள சமூகத்தில் விலையில்லாமல் கிடைக்கும்.
2. ஒரு திறந்த மூல நிரல் பொதுவாக பல நிரல்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து பலராலும் மேம்படுத்தப்பட்டு அனைத்து பயனரும் பயன்படுத்த பகிரப்படுகிறது.
20.
1. பல் பணியாக்கம் அல்லது பல செயலாக்கம் என்பது இயக்க அமைப்பு அம்சங்களின் ஒன்றாகும். பல செயலாக்க செயல்முறை(வேலை) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகளைக் கொண்டுள்ளது.
2. செயலாக்கம் இணையாக செய்யப்படுவதால் இது இணையாக்க செயலி ஆகும்.
3. ஒவ்வொரு செயலாக்கமும் ஒரே வேலையில் வெவ்வேறு பகுதிகளில் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு பணிகளைச் செய்கிறது.
21.
இயக்க அமைப்பு பயனருக்கு மூன்று நிலை பாதுகாப்பை வழங்குகிறது.
1. கோப்பு நிலை
2. அமைப்பு நிலை
3. வலை நிலை
1. கோப்பு நிலை:
ஒரு கோப்பினை யார் யார் படிக்க, மாற்ற முடியும் என்பது போன்ற தகவல்களைப் பெற்று அதன்படி கோப்பு அணுக்கத்தைக் (access) கட்டுப்படுத்த வேண்டும். இந்த தகவல்களை, கோப்பினை உருவாக்கியவர் அல்லது கணிப்பொறி நிர்வாகித்து கொடுக்கலாம்.
2. அமைப்பு நிலை:
இதில் ஒரு பயனர் குறிப்பிட்ட கடவுச் சொல்லை கொடுத்தாலொழிய கணிப்பொறியைப் பயன்படுத்த இயலாது.
3. வலை நிலை :
வலை பாதுகாப்பு என்பது சற்று சிக்கலான விஷயம். ஏனென்றால் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் கணிப்பொறியை அணுகலாம்.உரிய பாதுகாப்பு அளிக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.
22.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்பது ஒளிக்காட்சித் கட்டுப்படுத்தியிலிருந்து வரும் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை கணிப்பொறித் திரையுகம். LCD புரொஜக்டர் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு மாற்றப் பயன்படும் ஒரு ஒலி/ஒளி இடைமுகம் ஆகும்.
23.
(i) மையச்செயலகம், நினைவகம் உள்ளீடு/வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பட்டகம் கட்டுப்படுத்துக்கிறது.
(ii) மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துக்கிறது.
24.
| தரவு | தகவல் |
|---|---|
| 1. பல்வேறு வகையிலும் திரட்டப்படும் அடிப்படைச் செய்தித் துணுக்கு தரவு எனப்படும். இது தொடர்பு கொள்வதற்கும் , விளக்குவதற்கும் அல்லது செயலாக்கம் செய்வதற்கும் ஏற்றது. | முடிவுகளை எடுக்கக்கூடிய உண்மைகளின் தொகுப்பாகும் . |
| 2. அர்த்தமற்றவை . | அர்த்தமுள்ளவை |
| எ.கா : 16, அருண் , 'c' | எ.கா : அருண் வயது 16 |
25.
(i) குழுவாக உள்ள சிற்றரைகளை இணைக்க :
1. இணைக்க வேண்டிய சிற்றறைகளைத் தேர்வு செய்யவும்.
2.Table Cell→Merge Merge Cells கட்டளை அல்லது Merge Cells பணிக்குறி அல்லது வலது கிளிக் செய்து தோன்றும் மேல் மீட்புப் பெட்டியில் Cell → Merge என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
(ii) ஒரு சிற்றரையை இணைக்க :
1.பிரிக்க வேண்டிய அந்த ஒரு சிற்றரைக்குள் செருகும் புள்ளியை அமர்த்த வேண்டும்.
2.Table→Split Cells கட்டளை அல்லது பணிக்குறி அல்லது வலது கிளிக் செய்து தோன்றும் மேல் மீட்புப் பெட்டியில் Cell → Split என்பதை தேர்வு செய்தால் Split Cells உரையாடல் பெட்டி தோன்றும்.
3. இதில் சுழற் அம்புக்குறிகளை நகர்த்தி பிரிக்க வேண்டிய எண்ணிக்கையைத் தேர்வு செய்யலாம் அல்லது நேரடியாக எண்ணிக்கையைத் தட்டச்சு செய்யலாம்.
4.சிற்றரைகளின் வரிசைகளாகப் பிரிக்க கிடக்கையாக (Horizontally) என்றத் திசையைத் தேர்வு செய்யலாம் அல்லது நெடுவரிசையாகப் பிரிக்க நெடுக்கையாக (Verti cally) என்றத் திசையைத் தேர்வு செய்யலாம்.
5. தேர்வு செய்யப்பட்ட ஒரு சிற்றரை, நாம் விரும்பிய எண்ணிக்கையில் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளாக பிரிக்கப்பட்டுயிருக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards