11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
ஆவணத்தில் அட்டவணைகள், பொருள்கள் சேர்ப்பது மற்றும் ஆவணத்தை அச்சிடல்
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
Drawing கருவிப்பட்டையிலுள்ள எந்த பணிக்குறி உறைப்பெட்டியை பெரும்?
Text பணிக்குறி
Text Box பணிக்குறி
Draw பணிக்குறி
Draw Box பணிக்குறி
2.
Insert table உரையாடல் பெட்டி திறப்பதற்க்கான குறுக்கு வழி சாவி சேர்மானம் எது?
Ctrl + F5
Ctrl + F8
Ctrl + F10
Ctrl + F12
3.
Insert பட்டிப்பட்டையிலுள்ள எந்த கட்டளை ஆவணத்தில் பக்க முறிவு சேர்க்க உதவும்?
Manual Break
Hard Page Break
Section Break
Page Break
4.
எந்த விருப்பத்தை தேர்வு செய்து உரை ,அட்டவணை,வரைகலை மற்றும் மற்ற பொருளை ஒரு பொத்தானுக்கு அல்லது பொத்தான்களுக்கு கொடுக்க முடியும்.
Manual Break
Hard page break
Section break
Page Break
5.
"Table Format” உரையாடல் பெட்டியை பயன்படுத்தி ஒரு நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு கொடுக்கலாம்?
File ⟶ Table properties
Format ⟶ Table properties
Table ⟶ Table Properties
Table ⟶ Table format
6.
Writer-ல் அட்டவணையின் எல்லைகளை எவ்வாறு மாற்றியமைப்பாய்?
7.
முழு அட்டவணையை எவ்வாறு நீக்குவாய்?
8.
ஆவணத்தில் அட்டவணையை உருவாக்குவதற்கான பல்வேறு வழிகள் யாவை?
9.
ரைட்டரில் உள்ள வார்த்தை கலையின் (Word Art) பயன் யாது?
10.
ஆவணத்தில் சிறப்பு எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எழுதுக.
11.
ஆவணத்தில் ஒரு படத்தை எவ்வாறு சேர்ப்பாய்?
12.
ரைட்டரில் Word Art செருக (Insert) உதவும் வழிகளை எழுதுக.
13.
Writer ல் அட்டவணையில் எல்லைகளின் பண்புகளை எவ்வாறு மாற்றுவாய் ?
14.
Writer ல் உள்ள அட்டவணையின் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு நீக்குவாய்?
15.
Insert Table உரையடால் பெட்டியைப் பயன்படுத்தி அட்டவணையை எவ்வாறு உருவாக்கலாம்?
16.
பின்னணியிலுள்ள ஒரு படத்தின் தெளிவை எவ்வாறு மாற்றுவாய்?
17.
வரைவி கருவிப்பட்டி பற்றி குறிப்பு வரைக
18.
ஒரு ஆவணத்தை அச்சிடப்படுவதற்கு முன் எவ்வாறு முன்னோட்டம் செய்வாய் என்னும் வழிமுறைகளை எழுதுக?
19.
படங்களுக்கு எவ்வாறு வடிவூட்டம் செய்வாய்?
20.
ஒரு வார்த்தைக்கு "Autotext" எவ்வாறு உருவாக்குவாய்?
1.
(a)
Text பணிக்குறி
2.
(a)
Ctrl + F5
3.
(a)
Manual Break
4.
(a)
Manual Break
5.
(a)
File ⟶ Table properties
6.
1. அட்டவணையின் எல்லைகளை மாற்றியமைக்க, Table→Table Properties என்ற கட்டளையை தேர்வு செய்யவும்.
2. Table Format உரையடால் பெட்டி தோன்றும். தில் Borders தொகுதியை தேர்வு செய்து . அட்டவணை அல்லது சிற்றரைகளின் குழுவின் எல்லைகளை மாற்றலாம்.
7.
1. Edit→Select All என்ற கட்டளையை பயன்படுத்தியோ அல்லது Ctrl + A என்ற குறுக்குவழி பயன்படுத்தியோ முழு அட்டவணையை தேர்வு செய்ய வேண்டும்.
2. Table→Delete→Table என்ற கட்டளையை பயன்படுத்தினால் தேர்வு செய்யப்பட்ட அட்டவணையை நீக்காலம்.
8.
அட்டவணை உருவாக்க இரு வழிகள் உள்ளன.
1. அட்டவணைபி பணிக்குறியைப் பயன்படுத்தி அட்டவணையை உருவாக்கலாம்.
2. Insert Table உரையடால் பெட்டியைப் பயன்படுத்தி அட்டவணையை உருவாக்கலாம்.
9.
1. Word Art வார்த்தை கலை என்பது Open Office Writer யில் உள்ள உரை மாற்றப்படும் அம்சமாகும்.
2. ஒரு வார்த்தைக்கு அல்லது சொற்றொடருக்கு நிழல்கள்,வரைபடங்கள், வண்ணங்கள்,சாய்வு 3D விளைவுகள் போன்ற தாக்கங்கள் (effects) இதன் மூலம் பெறலாம்.
3. Word Art-ல் உள்ள சிறப்பு தாக்கங்கள் மூலம் உரையை மேலும் படிப்பதற்கு எளிமையாக மற்றும் தூண்டுவதாகவும் அமைக்க முடியும்.
10.
1. ஆவணத்தில் எந்த இடத்தில் சிறப்பு எழுத்துக்கள் தோன்ற வேண்டுமோ அந்த இடத்திற்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும்.
2. Insert→Special Character என்ற கட்டளையைத் தேர்வு செய்தால், தோன்றும் Special Character உரையாடல் பெட்டியிலிருந்து தேவையான சிறப்பு எழுத்தின் மீது கிளிக் செய்ய வேண்டும்.
3. தேவையான சிறப்பு எழுத்து கண்டறிய முடியவில்லை எனில் வேறு எழுத்துரு வகையைத் தேர்ந்தெடுத்து அந்த சிறப்பு எழுத்தைப் பெறலாம்.
4. OK பொத்தானை கிளிக் செய்யவும்.
11.
1. எந்த இடத்தில் படத்தை சேர்க்க வேண்டுமோ அந்த இடத்திற்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும்.
2. Insert\(\rightarrow \)Picture\(\rightarrow \)From file என்ற கட்டளையைத் தேர்வு செய்யவும்.
3. Insert Picture உரையாடல் பெட்டி படத்தொகுப்புடன்(Picture gallery) தோன்றும்.அதில் தேவையான படத்தைத் தேர்வு செய்து Open பொத்தானை கிளிக் செய்யவும்.
12.
1. Drawing கருவிப்பட்டியில் Font work பணிக்குறியைக் கிளிக் செய்யவும்.
2. Font work Gallery சன்னல் திரையின் பல்வேறு வடிவிலான எழுத்துருக்களுடன் கூடிய எழுத்து வகைகள் தோன்றும்.
3. தேவையான Font work பாணி மீது இருமுறை கிளிக் செய்து, நமக்குத் தேவையான வார்த்தை அல்லது சொற்தொடரைத் தட்டச்சு செய்யவும்.
13.
Line arrangement: எல்லைகளில் உள்ள கோடுகளை மாற்றியமைக்கப் பயன்படுகிறது. ரைட்டரில் ஐந்து வகையான கோடு ஏற்றமைப்பு உள்ளது.
1. Line விருப்பம் எல்லையின் பாணியைக் குறிக்கும்.
2. Color விருப்பம் எல்லை கோட்டின் நிறத்தை தேர்வு செய்ய உதவும்.
3. Spacing to Content என்ற விருப்பம் எல்லைக்கும் சிற்றரை உள்ளடக்கத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை குறிக்கும்.
14.
1. ஒரு வரிசை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகளை நீக்க, செருகும் புள்ளியை அந்த வரிசையில்,அமர்த்தி தேவையான வரிசை அல்லது வரிசைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.இதன் பின் Table Formatting கருவிப்பட்டையில் உள்ள Delete Row பணிக்குறியை கிளிக் செய்தால் அல்லது Table → Delete→ Rows என்றக் கட்டளையை பயன்படுத்தினால் தேர்வு செய்யப்பட்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகள் நீங்கும்.
2. ஒரு நெடுவரிசை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நெடுவரிசைகளை நீக்க, செருகும் புள்ளியை அந்த நெடுவரிசையில்,அமர்த்தி தேவையான நெடுவரிசை அல்லது நெடுவரிசைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.இதன் பின் Table Formatting கருவிப்பட்டையில் உள்ள Delete Column பணிக்குறியை கிளிக் செய்தால் அல்லது Table → Delete→ Columns என்றக் கட்டளையை பயன்படுத்தினால் தேர்வு செய்யப்பட்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நெடுவரிசைகள் நீங்கும்.
15.
Table→ Insert→Table அல்லது Ctrl + F12 கிளிக் செய்யவும்.
1. Name உரைப் பெட்டியில் அட்டவணைக்கான பெயரை தர வேண்டும்.
2. அந்த உரையாடல் பெட்டியில்தேவையான வரிசைகள் (rows) மற்றும் நேடுவரிசையின் (columns) எண்ணிக்கையை சுழற் அம்புக்குறி மூலம் அல்லது எண்ணிக்கையை நேரடியாகத் தட்டச்சு செய்ய வேண்டும்.
3. அட்டவணையின் முதல் வரிசையை தலைப்பாக எடுத்துக்கொள்ள Heading தேர்வு பெட்டியைக் கிளிக் செய்தால் அட்டவணை உள்ள எல்லா பக்கங்களிலும் தலைப்பு தோன்றும்.
4. அட்டவணையில் கட்டங்களுடன் காட்ட Border தேர்வுப் பெட்டியைக் கிளிக் செய்யவும்.
5. OK பொத்தானைக் கிளிக் செய்தால் அட்டவணை உருவாக்கப்படும்.
16.
1. சேர்க்கப்பட்ட படத்தின் மேல் கிளிக் செய்தால் Picture கருவிப்பட்டை தோன்றும்.
2. Transparency பணிக்குறி உதவியுடன் படத்தின் தோற்றத் தெளிவை சதவீதத்தில் ( % ) மாற்றலாம்.
17.
View →Toolbars→ Drawing என்ற கட்டளையை கிளிக் செய்தால் வரையும் கருவிப்பட்டை(Drawing toolbar) தோன்றும்.
(i) வரையும் கருவியை (Drawing Tool) பயன்படுத்துவதற்கான வழிகள்:
1. ஆவணத்தில் எந்த இடத்தில் வரைய வேண்டுமோ அந்த இடத்தில் கிளிக் செய்யவும்.
2. வரையும் கருவிப்பட்டையிலிருந்து தேவையானக் கருவியை தேர்வு செய்யவும்.
3. சுட்டியின் வடிவம் Cross hair Pointer -ஆக மாறும். கிறுக்கு வடிவில் உள்ள சுட்டியை ஆவணத்தில் எந்த இடத்தில் வரைபடம் தோன்ற வேண்டுமோ அங்கு கிளிக் செய்து கொண்டே இழுத்து வரைபடத்தை உருவாக்கலாம். சுட்டியை அழுத்துவதை விட்டுவிட்டால் வரைதலுக்கான தேர்வு செயலில் இருக்கும். இதனால் பயனர் தேவைப்பட்டால் வேறு வடிவங்களை வரையலாம்.
4. தேர்வு செய்யப்பட்ட வரைபட செயல்பாட்டை ரத்து செய்ய ESC சாவியை அழுத்தவும் அல்லது Drawing கருவிப்பட்டையில் உள்ள Select பணிக்குறியைப் பயன்படுத்தலாம்.
5. வரைபடத்தின் பண்புகளை Fill color, LineType போன்று மாற்றுவதற்கு Drawing Object properties கருவிப்பட்டை அல்லது உரையாடல் பெட்டியிலுள்ள விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்.
6. T பணிக்குறியைப் பயன்படுத்தி உரைப்பெட்டியை உருவாக்கலாம்.
18.
ஆவணத்தை அச்சிடும் முன் பார்வையிடும் வழிமுறைகள்:
(i) File → Page Preview அல்லது Page Preview பொத்தானை கிளிக் செய்யவும். ரைட்டர் தற்போதைய பக்கத்தைத் திரையில் காட்டும்.
(ii) Page Preview கருவிப்பட்டையில் Multiple pages பணிக்குறியை கிளிக் செய்து எத்தனை பக்கங்கள் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.
(iii) Close Preview பொத்தானை கிளிக் செய்தால் இத்திரை மூடப்படும்.
அச்சுப்பொறியின் அமைப்பை மாற்றுவதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:
1. File → Print (அ ) Ctrl + P (அ) Print File பணிக்குறியை கிளிக் செய்தால் Print உரையடால் பெட்டி தோன்றும்.
2. General தொகுதியைக் கிளிக் செய்யவும்.
3. பல்வேறு அச்சுப்பொறிகளின் தொகுப்பு பட்டியலிருந்து தேவையான அச்சுப்பொறியை கிளிக் செய்யவும்.
4. Range and Copies பகுதியில் தோன்றும் All Pages விருப்பத்தை தேர்வு செய்தால் எல்லா பக்கங்களும் அச்சிடப்படும் Pages விருப்பத்தை தேர்வு செய்தால் தேவையான ஒரு பக்கம் அல்லது பக்கங்கள் மட்டும் அச்சிடப்படும்.
5. Number of Copies சுழல் பெட்டியில் பக்கத்தை எத்தனை நகல் எடுக்க வேண்டும் என்பதை குறிப்பிடலாம்.
6. Print பொத்தானை கிளிக் செய்யவும்.
19.
சேர்க்கப்பட்ட படத்தின் வடிவூட்டத்தை மாற்ற ரைட்டரில் உள்ள Picture கருவிப்பட்டை உதவுகிறது. படத்தின் மேல் கிளிக் செய்தால் Picture கருவிப்பட்டை தோன்றும்.இதன் உதவியுடன் படத்தின் அளவு மாற்றலாம். எல்லைகளை அமைக்கலாம். படத்தின் உயரம் மற்றும் அகலம் பின்னணி போன்ற பல்வேறு வடிவூட்டல்களை படத்திற்கு செய்யலாம்.
1. படத்தின் நான்கு மூலைகளை கிளிக் செய்து இழுத்தால் அதன் அளவை பெரிதாக்க மற்றும் சிறிதாக்க முடியும்.
2. Crop விருப்பத்தை தேர்வு செய்தால் Cropping கைப்பிடிகள் தோன்றும். இவற்றை கிளிக் செய்து இலுத்தால் படத்தை வேண்டிய அளவிற்கு வெட்டலாம்.
3. Crop கட்டளையை கிளிக் செய்தால் Crop கருவி தேர்வு நீக்கப்பட்டுவிடும்.
4. Default கீழிறங்கு பெட்டியில் அம்புகுறியை கிளிக் செய்தால் Black and White, Grey and Scale அல்லது Water Mark ( Background) போன்ற விருப்பங்கள் தோன்றும். இதில் Default விருப்பம் அசல் படத்தை காட்டும்.
5. Flip Horizontally பணிக்குறியைக் தேர்வு செய்தால் படம் கிடைக்கை திசையில் புரட்டப்பட்டிருக்கும்.
6. Flip Vertically பணிக்குறியைக் தேர்வு செய்தால் படம் கிடைக்கை திசையில் புரட்டப்பட்டிருக்கும்.
7. Transparency பணிக்குறி உதவியுடன் படத்தின் தோற்றத் தெளிவை சதவீதத்தில் ( % ) மாற்றலாம்.
20.
ஏதேனும் ஒரு உரைக்கு Auto text மூலம் குறுக்குவழி அமைத்தலுக்கான வழிகள்:
1. உரையை ஆவணத்தில் தட்டச்சு செய்யவும்.
2. தேர்வு செய்த உரை உயர்திக் காட்டப்படும்.
3. Edit → Autotext என்ற கட்டளை அல்லது Ctrl +F3 கிளிக் செய்யவும்.
4. Name உரைப் பெட்டியில் உரைக்கான குறுக்கு எழுத்தைத் தட்டச்சு செய்யவும். Writer தானாகவே ஒரு எழுத்து கொண்ட குறுக்கு எழுத்தை Shortcut பெட்டியில்காட்டும்.
5. உரையாடல் பெட்டியில் வலது புறத்தில் உள்ள Autotext பொத்தானை கிளிக் செய்து அதில் தோன்றும்பட்டியிலிந்து New ( Text only) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
6. இறுதியாக Close பொத்தானை கிளிக் செய்தால் ஆவணத்திற்கு திரும்பிவிடும்.
7. குறுக்கெழுத்தை உருவாக்கியவுடன், ஆவணத்தை எந்த இடத்தில் Autotextஉரை தோன்ற வேண்டுமோ அந்த இடத்தில் செருகும் புள்ளியைக் கொண்டு சென்று Ctrl + F3அழுத்தவும். பட்டியிலுள்ள பெயரைத் தேர்ந்தெடுத்து Insert பொத்தானை கிளிக்செய்யவும்அல்லது குறுக்கெழுத்தைத் தட்டச்சுசெய்தபின் F3-யை அழுத்தவும்.
8. Autotext உரை செருகப்பட்டுவிடும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards