11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
கணினி அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
லேசர் அச்சுப்பொறிகள் பற்றிக் குறிப்பு வரைக.
2.
விசை (Keyer) பற்றிக் குறிப்பு வரைக.
3.
திரையகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகளை பற்றி எழுதுக.
4.
ஆறாவது தலைமுறையின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
5.
தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
6.
ஒளியியல் சுட்டி மற்றும் லேசர் சுட்டி வேறுபடுத்துக
7.
ஏதேனும் மூன்று வெளியீட்டு சாதனங்களை விளக்குக?
8.
உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
9.
கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.
10.
கணிப்பொறியின் தன்மைகள் யாவை?
1.
1. லேசர்(Laser) அச்சுப்பொறிகள் பெரும்பாலும் படியெடுப்பான் (photo copiers) பயன்படுத்தும் ஒத்த தொழில்நுட்பத்தையே பயன்படுகிறது.
2. அச்சுப்பொறியின் உள்ளே ஒரு உருளை(drum) முழுவதும் லேசர் கதிர் முன்னும் பின்னுமாக வருடும் போது ஒரு நிலையான மின்சாரம் ஒரு வடிவத்தை உருவாக்குகிறது.
3. வரைகலைப் படங்களைத் திறன்பட உருவாக்குகிறது.
4. லேசர் அச்சுப்பொறியின் முக்கியச் சிறப்பியல்புகளில் ஒன்று அவற்றின் பிழிதிறன் (resolution0 என்பது 1200 dpi க்கு கிடைக்கக்கூடிய பிழிதிறன் வரம்பு, ஏறக்குறைய ஒரு நிமிடத்தில் 100 பக்கங்களை அச்சிடலாம் (PPM- Page Per Minute).
2.
1. ஒரு விசை என்பது கையால் சமிக்கை செய்வதற்கான ஒரு சாதனமாகும்.
2. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலைமாற்றி (switch)-களைக் கொண்டு அழுத்துவதன் மூலம் செயல்படுகிறது.
3. முழு அளவு விசைப்பலகை போல் அல்லாமல், நவீன விசை. (கெய்சர்) ஏராளமான நிலைமாற்றிகளைக் கொண்டடிருக்கும்.
4. பொதுவாக இந்த எண்ணிக்கை 4 மற்றும் 50க்கு இடையில் இருக்கும்.
5. விசையில் "எந்தப் பகையும் இல்லை" ("no board ") என்ற கருத்தில்தான் "விசை" ஒரு 'விசைபலகை'யிலிருந்து மாறுபடுகிறது. ஆனால் விசைகள் ஒரு குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளன.
3.
1. தகவலைத் திரையில் காட்டப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வெளியீட்டு சாதனம் திரையகம் ஆகும்.
2. திரையகத்தில் படங்கள் பிக்செல்ஸ் எனப்படும் படக்கூறுகளால் உருவாக்கப்படுகின்றன.
3. ஒரே வண்ணமுடைய திரையகம் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காட்டுகிறது. வண்ணத் திரையகம் பல நிறங்களில் காட்டுகிறது.
4. சிஆர்டி (கத்தோட் ரே டியூப்) -CRT(Cathode Ray Tube). எல்சிடி(லிக்விட் கிரிஸ்டல் டிஸ்பிளே) -LCD (Liquid Crystal Display) மற்றும் எல்ஈடி(லைட் ஏமிட்டிங் டயோட்கள்-LED ) (Light Emitting Diodes) போன்ற பல்வேறு வகையான திரையகங்கள் கிடைக்கின்றன.
5. திரையகம் தகவலை விஜிஏ(ஒளிஉரு வரைபட வரிசை)-VGA (Video Graphics Array) மூலம் திரையில் காட்டுகிறது.
6. விசைப்பலகை திரையகத்துடன் தொடர்ப்பு கொள்ள ஒளிஉரு வரைபட அட்டை (Video Graphics Card )உதவுகிறது.
7. அண்மையில் உள்ள மதர்போர்ட்களில் உள்ளிணைந்த வரைபட அட்டை வழக்கமாக உள்ளது.
4.
(i) செயற்கை நரம்பியல் வலையமைப்பின் (ANN -Artifical Neural Networks) அடிப்படையில் ஆறாவது தலைமுறை கணிப்பொறிகள். அறிவு சார்ந்த கணிப்பொறிகள் என வரையறுக்கப்படுகிறது.
(ii) ஆறாவது தலைமுறை கணிப்பொறிகளின் வியத்தகு மாற்றங்களில் ஒன்று பரந்த வலையமைப்பு (WAN- Wide Area Network ) -ன் வளர்ச்சி ஆகும்.
(iii) இயற்கை மொழி செயலாக்கம் (NLP -Natural Language Processing) என்பது செயற்கை நுண்ணறிவின் (AI - Artifical Intelligence )- ஒரு அங்கமாகும் .
(iv) இது மனித மொழியைப் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு கணிப்பொறி நிரலை உருவாக்குவதற்கானத் திறனை வழங்குகிறது.
5.
1. இந்த வகையில் ஒரு சிறு கம்பி , மை நாடா மீது தட்டி ஒரு புள்ளியை ஏற்படுத்தும் அல்லது ஒரு முழு எழுத்தை தட்டி அந்த எழுத்தை ஏற்படுத்தும்.
2. இந்த அச்சுப்பொறிகள் இயந்திர அழுத்தத்தைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் பல படிகள் எடுக்க வகை செய்கிறது. எ.கா : வரி அச்சுப்பொறி மற்றும் வரிபுள்ளி அச்சுப்பொறி
3. புள்ளி அச்சுப்பொறி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையலினா செருகி அல்லது கம்பிகளைக் பயன்படுத்தி அச்சிடுகிறது.
4. ஒவ்வொரு புள்ளியும் ஒரு சிறிய உலோகக் கம்பி மூலம் உருவாக்கப்படுகிறது .
5. இதில் பொதுவாக ஒரு நேரத்தில் ஒரு வரி உரையே மட்டுமே அச்சிட முடியும்.
6. வரிபுள்ளி அச்சுப்பொறிகள் நிலையான அச்சுத் தலையை அச்சிடப் பயன்படுத்துகிறது.
7. இந்த அச்சுப்பொறிகளின் அச்சிடும் வேகம் 30 முதல் 1550 சிபிஎஸ்(CPS - Character Per Second) வரை வேறுபடுகிறது.
8. அடிப்படையில், இது ஒரு பக்க அளவிலான புள்ளிகளை அச்சிடுகிறது.
9. வரி அச்சுப்பொறிகள் வினாடிக்கு 1000 க்கு மேற்பட்ட வரிகளை அச்சிடும் திறன் கொண்டது.
6.
| ஒளியியல் சுட்டி | லேசர் சுட்டி |
|---|---|
| 1. ஒளிப் பயன்படுத்தப்படுகிறது | அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது |
| 2. இதில் மூன்று பொத்தான்கள் உள்ளன. | அதிகளவாக 12 பொத்தான்கள் வரை இருக்கும். பயனர் தனக்கேற்ற வகையில் அவைகளை நிரலாக்கம் செய்து கொள்ள முடியும் . |
| 3. குறைவான உணர்திறன் கொண்டது. | மிகுந்த உணர்திறன் கொண்டது. |
| 4. கடினமான மேற்பரப்பில் செயல்படாது. | எந்தக் கடினமான மேற்பரப்பிலும் செயல்படும். |
7.
(i) திரையகம் : தகவலைத் திரையில் காட்டப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வெளியீட்டுச் சாதனம்.
(ii) வரைவி : தாள்களில் தவல்கள் மற்றும் வரைகலை வெளியீட்டை அச்சிடப் பயன்படுகிறது.
(iii) அச்சுப்பொறி: தாள்களில் தவல்களை அச்சிடப் பயன்படுகிறது.
(iv) பல்லூடகப் படவீ ழ்த்தி: கணிப்பொறி திரையக வெளியீட்டைப் பெரிய திரையில் திரையிடப் பயன்படுகிறது .
(v) ஒலிப்பெருக்கி: பேச்சு இணைப்பாக்கம் மென்பொருளை இதனுடன் பயன்படுத்திக் கணிப்பொறி குரல் வெளியீட்டை வழங்க முடியும்.
8.
(i) உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது.
(ii) உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன.
9.
கணிப்பொறிகள் பயன்பத்தப்படும் பல்வேறு துறைகளில் சில:
1. கல்வி மற்றும் ஆராய்ச்சி
2. சுற்றுலா
3. வானிலை முன்னறிவிப்பு
4. சமூக வலைதளம்
5. மின் வணிகம் (e-commerce)
6. இரயில்,வானுர்தி மற்றும் திரைப்படம் முன்பதிவு
7. பொழுதுபோக்கு
10.
கணிப்பொறியின் தன்மைகள்
வேகம்: அதிவேக கணக்கீட்டுத்திறன் கொண்டது.
துல்லியம்: வேலையைத் துல்லியமாக செய்து முடிக்கும் திறன் கொண்டது.
தளரா ஊக்கம்: மனிதர்களைப் போல் ஒரே வேலையயைச் செய்யும் போது தளர்வடைவதில்லை.
பல்வகைச் செயலாக்கத்திறன்: பல்வேறு வகையிலான பணிகளைச் செய்யும் திறன் பெற்றவை. எ.கா : இரயில் முன்பதிவு, வங்கிச் சேவை , வானிலை முன்னறிவிப்பு போன்றவை .
சேமிப்புத்திறன்: மிக அதிக அளவிலானத் தரவுகளைச் சேமிக்கும் திறன் பெற்றவை.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards