11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு)
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
Windows இயக்க அமைப்பின் Windows 7, Windows - 8 மற்றும் Windows - 10 பதிப்புகளில் உள்ள பாதுகாப்பு முறையில் உள்ள வேறுபாடு யாது?
2.
உபுண்டுவின் பட்டிப்பட்டையில் உள்ள அறிவிப்புப்பகுதியில் உள்ள பொதுவான குறிப்பான்கள் யாவை?
3.
உபுண்டுவில் உள்ள கணிப்பொறி அமைப்புகள் (System settings) பணிக்குறி விண்டோஸ் இயக்க அமைப்பிலுள்ள கட்டுப்பாட்டு பலகத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன.
4.
தண்டர்பேர்டு (Thunderbird) என்பது என்ன?
5.
தொடக்கப்பட்டியிலுள்ள Shut down தேர்வில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்தால், தோன்றும் பல்வேறு தேர்வுகள் யாவை?
6.
File பட்டியைப் பயன்படுத்தி கோப்பு மற்றும் கோப்புறைகளுக்கு எவ்வாறு மறுபெயரிடுவாய் ?
7.
கோப்பு மற்றும் கோப்புறைகளுக்கு எவ்வாறு மறுபெயரிடுவாய் ?
8.
வேர்டு பேட் என்றால் என்ன?
9.
பணிக்குறி (icons) என்றால் என்ன?அதன் வகைகள் யாவை?
10.
சன்னல் திரை (Window) என்றால் என்ன?
11.
Ubuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்?
12.
திறந்த மூல (Open Source) மென்பொருளின் நன்மைகள் யாவை?
13.
Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
14.
கோப்பு மற்றும் கோப்புறைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
15.
Cut மற்றும் Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
1.
| Windows -7 | Windows-8 | Windows-10 |
|---|---|---|
| உள்புகும் போது கொடுக்கப்படும் சாதாரண கடவுச் சொல். |
உள்புகும் போது கொடுக்கப்படும் சாதாரண கடவுச் சொல். |
Windows Hello என்ற பாதுகாப்பு சிறப்பம்சம் பயனரைக் கடவுச் சொல்லுக்குப் பதிலாக தங்களது கைரேகை, முகம் மற்றும் கருவிழி போன்றவற்றைப் பயன்படுத்தி உள்ளே புக அனுமதிக்கிறது. |
2.
1. வலையமைப்பு குறிப்பான் ( Network Indicator)
2. உரை உள்ளீடு அமைப்பு ( Text Entry Settings)
3. செய்திக் குறிப்பான்( Messaging Indicator)
4. ஒலிக் குறிப்பான்( Sound Indicator)
5. கடிகாரம் (Clock)
6. அமர்வுக் குறிப்பான் (Session Indicator)
3.
இந்த பணிக்குறி விண்டோஸ் இயக்க அமைப்பிலுள்ள கட்டுப்பாட்டு பலகம் (Control panel) போன்றதாகும். உபுண்டுவில் இதைப் பயன்படுத்த பயனர் கடவுச் சொல்லைக் கொடுக்க வேண்டும். விண்டோஸ் அமைப்பில் மாற்றுவது போல இதில் எளிதாக மாற்ற முடியாது.
4.
1. உபுண்டு-ல் உள்ளிணைந்த மின்னஞ்சல் மென்பொருளாக தண்டர்பேர்டு (Thunderbird) உள்ளது.
2. இதில், மின்அஞ்சல் பயன்பாட்டிற்கான எக்ஸேஞ்ச் (Exchange),ஜிமெயில் (Gmail).ஹாட்மெயில் (Hotmail) போன்றவற்றை இயக்க வசதி உள்ளது.
5.
1. Switch user
2. Lock
3. Sleep
4. Logoff
5. Restart
6. Hibernate.
6.
1. மறுபெயரிட வேண்டிய கோப்பு மற்றும் கோப்புறையை கிளிக் செய்யவும்.
2. கிளிக் File \(\rightarrow \)Rename
3. புதிய பெயரைத் தட்டச்சு செய்து Enter பொத்தானை அழுத்தவும்.
7.
கோப்பு மற்றும் கோப்புறையை மறுபெயரிடுவதற்கான வழிகள்:
(i) File \(\rightarrow \)Rename என்ற பட்டிப்பட்டைத் தேர்வின் மூலம்
(ii) கோப்பின் மீது வலம் கிளிக் செய்து வரும் பட்டியலில் Rename என்றத் தேர்வை கிளிக் செய்வதன் மூலம்
(iii) கோப்பின் மீது கிளிக் செய்து F2 பொத்தான் மூலம்.
8.
வேர்டு பேட்(Wordpad) விண்டோஸ் இயக்க அமைப்பின் உள்ளிணைந்த சொற்செயலி பயன்பாடாகும். உரை ஆவணங்களை உருவாக்கவும், கையாளவும் பயன்படுகிறது.
9.
விண்டோஸின் கூறுகளான கோப்பு, கோப்புறை, குறுக்குவழிகள் போன்றவற்றைக் குறிக்கும் படக்குறியீடு "பணிக்குறி " எனப்படும்.
பணிக்குறிகளின் வகைகள்:
1. செந்தரப் பணிக்குறிகள்
2. குறுக்கு வழிப் பணிக்குறிகள்
3. வட்டு இயக்கிப் பணிக்குறிகள்.
10.
ஒரு ஆவணம் அல்லது பயன்பாட்டின் பொதுவான செவ்வகப் பகுதி "சன்னல் திரை" எனப்படும்.
11.
இயங்கும் கணிப்பொறியில் நம்முடைய பணி முடிந்தவுடன், மேல் குழுவின் வலது ஓரத்திலுள்ள அமர்வு குறிப்பினால் உள்ள வெளியேறுதல்(LogOut), இடைநிறுத்தம் (Suspend) அல்லது மூடுதல் (Shut Down) போன்ற ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து வெளியேற வேண்டும்.
12.
1. திறந்த மூல நிரல் அனைத்துப் பயனரும் பயன்படுத்த வசதியாக வலைதள சமூகத்தில் விலையில்லாமல் கிடைக்கும்.
2. ஒரு திறந்த மூல நிரல் பொதுவாக பல நிரல்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து பலராலும் மேம்படுத்தப்பட்டு அனைத்து பயனரும் பயன்படுத்த பகிரப்படுகிறது.
13.
1. முதன் முதலாக ஒரு கோப்பினை சேமிக்கும் பொது 'Save' அல்லது 'Save As'. இதில் எதைத் தேர்வு செய்தாலும் 'Save As' உரையாடல் பெட்டி தோன்றும். அதில் கோப்பின் பெயர், வடிவம் மற்றும் எங்கு சேமிக்க வேண்டும் என்பதைக் கொடுத்து சேமிக்கலாம்.
2. ஒரு முறை கோப்பினைக் குறிப்பிட்ட பெயரில் சேமித்த பின், 'Save' என்றத் தேர்வைப் பயன்படுத்தினால் மாற்றங்கள் நடப்புக் கோப்பில் சேமிக்கப்படும். மேலும் தொடர்ந்து அக்கோப்பில் வேலை செய்யலாம்.
3. ஆனால் 'Save As' தேர்வைப் பயன்படுத்தினால் மீண்டும் 'Save As' உரையாடல் பெட்டி தோன்றும் அதில் கோப்பிற்கு வேறொரு பெயர்,வடிவம் மற்றும் எங்கு சேமிக்க வேண்டும் என்பதைக் கொடுத்து, கோப்பினை நகலெடுத்துக் கொள்ளலாம்.
14.
| கோப்பு | கோப்புறை |
|---|---|
| 1.கோப்பு தரவுகளைக் கொண்டிருக்கும் . | கோப்புறை என்பது கோப்பு மற்றும் உள் கோப்புறைகளின் திரட்டு ஆகும் |
| 2. கோப்புகள் சில பைட்டுகள் முதல் கிகா பைட்டுகள் வரையிலான நினைவகத்தை எடுத்துக் கொள்ளும். |
கோப்புறைகள் வன்வட்டில் தமக்கென எந்த இடத்தையும் எடுத்துக் கொள்வதில்லை. |
15.
| Cut தேர்வு | Copy தேர்வு |
|---|---|
| Cut தேர்வானது கோப்பு, கோப்புறை, உரை,வரைபடம், பொருள் போன்றவற்றை நகர்த்தப் பயன்படுகிறது |
Copy தேர்வானது தேர்வு செய்யப்ட்டவற்றை நகல் எடுக்கப் பயன்படுகிறது. |
| இத்தேர்வு, தேர்வு செய்யப்ட்ட தரவை மூல இடத்திலிருந்து நீக்கும். |
இத்தேர்வு, தேர்வு செய்யப்ட்ட வற்றை தரவை மூல இடத்தில் பாதிப்பதில்லை அல்லது நீக்குவதில்லை. |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards