11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
பகிர்வு பற்றிய ஆய்வு
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
MRP=_________.
MPP x MR
MPP \(\div \) MR
MPP - MR
MPP + MR
2.
கடன் நிதி வட்டிக் கோட்பாடானது _________
தொன்மைக் கோட்பாடு
நவீன கோட்பாடு
மரபுக் கோட்பாடு
புதிய தொன்மைக் கோட்பாடு
3.
துய்ப்பு தவிர்ப்பு வட்டிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்
ஆல்ஃப்ரட் மார்ஷல்
N.W. சீனியர்
போம்போவர்க்
நட் விக்சல்
4.
புத்தாக்க இலாபக் கோட்பாட்டை வழங்கியவர் _________
ஹாலே
சும்பீட்டர்
கீன்ஸ்
நைட்
5.
இலாபம் இதற்கான வெகுமதி ஆகும்
நிலம்
அமைப்பு
மூலதனம்
உழைப்பு
6.
தனி நபர்களுக்கு நாட்டின் செல்வத்தை அல்லது வருமானத்தைப் பகிர்ந்தளிப்பதென்பது _________
செயல்முறைப் பகிர்வு
தனி நபர் பகிர்வு
பண்டங்களின் பகிர்வு
பணிகளின் பகிர்வு
7.
முதலீட்டை பயன்படுத்துவற்கான வெகுமதி
வாரம்
கூலி
வட்டி
இலாபம்
8.
9.
நிலத்திற்கு உண்மையானதும் அழிக்க முடியாதசக்தியும் உள்ளது என்ற கருத்தைப் பயன்படுத்தியவர்
JS மில்
வாக்கர்
கிளார்க்
ரிக்கார்டோ
10.
பகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உற்பத்தி விலைக் கோட்பாடு
காரணி விலைக் கோட்பாடு
கூலிக்கோட்பாடு
வட்டிக்கோட்பாடு
11.
பொருளியலில் வருமானப் பகிர்வு என்பது எதனுடன் தொடர்புடையது
உற்பத்திக் காரணிகள்
தனி நபர்
நிறுவனங்கள்
வணிகர்கள்
12.
நீர்மை விருப்பக் கோட்பாட்டின் குறைபாடுகள் யாவை?
13.
நிகர வட்டி என்றால் என்ன?
14.
கூலி என்றால் என்ன?
15.
பகிர்வுச் சார்பு என்றால் என்ன?
16.
வட்டியின் வகைகள் யாவை?
17.
18.
இலாபம் என்றால் என்ன?
19.
வட்டி பற்றி நீ அறிவது யாது?
20.
வாரம் வரையறு
21.
பகிர்வின் வகைகள் யாவை?
22.
புத்தாக்க இலாபக் கோட்பாட்டை சுருக்கமாக கூறுக
23.
வாரம் மற்றும் போலி வாரம்: வேறுபடுத்துக
24.
பணத்தேவைக்கான நோக்கங்கள் யாவை?
25.
கடன்நிதி வட்டிக் கோட்பாட்டை விளக்குக.
26.
ரிகார்டோவின் வாரக் கோட்பாட்டை எடுத்துக்காட்டுடன் விவரி.
1.
(a)
MPP x MR
2.
(d)
புதிய தொன்மைக் கோட்பாடு
3.
(b)
N.W. சீனியர்
4.
(b)
சும்பீட்டர்
5.
(b)
அமைப்பு
6.
(b)
தனி நபர் பகிர்வு
7.
(c)
வட்டி
8.
(b)
9.
(d)
ரிக்கார்டோ
10.
(b)
காரணி விலைக் கோட்பாடு
11.
(a)
உற்பத்திக் காரணிகள்
12.
(i) குறிப்பிட்ட ஒரு காலத்திலேயே பல்வேறுபட்ட வட்டி விகிதம் சந்தையில் இருப்பதை இக்கோட்பாடு விளக்கத் தவறிவிட்டது.
(ii) குறுகிய கால வட்டி வீதம் பற்றி மட்டுமே இது விளக்குகிறது.
13.
(i) மொத்த வட்டியில் ஒரு பகுதியே நிகர வட்டி ஆகும்.
(ii) மூலதனத்தை பயன்படுத்த மட்டுமே நிகர வட்டி வழங்கப்படுகிறது.
(iii) அரசு பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி நிகர வட்டிக்கு எடுத்துக்காட்டாகும்.
14.
(i) ஒரு உழைப்பாளரின் அறிவையோ, உடல் உழைப்பையோ பயன்படுத்த கொடுக்கப்படும் ஊதியமே கூலி ஆகும்.
(ii) கூலி தினசரியோ, வாரம் ஒரு முறையோ, மாதம் இருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ மேலும் ஆண்டு முடிவில் கொடைக்கூலியாகவோ வழங்கப்படும்.
15.
(i) உற்பத்திக் காரணிகளான நிலம், உழைப்பு, முதல் மற்றும் தொழில் முனையும் திறன் போன்றவை உற்பத்தியில் ஈடுபடுகின்றன.
(ii) இந்த உற்பத்திக் காரணிகளுக்கு விலையை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை பகிர்வுச் சார்பு கோட்பாடு விளக்குகிறது.
16.
வட்டி இரண்டு வகைப்படும். அவை,
(i) மொத்த வட்டி
(ii) நிகர வட்டி
17.
18.
தொழில்முனைவோரின் தொழில் திறமையைப் பயன்படுத்துவதற்கான வெகுமதி இலாபம் ஆகும்.
19.
முதலைப் பயன்படுத்திக் கொள்ள அதைப்பெற்றவர்கள் அதை வழங்கியவர்க்கு வெகுமதியே வட்டியாகும்.
20.
பொருளியலில் வாரம் என்பது நிலத்தைப் பயன்படுத்துவதற்காக மட்டுமே குத்தகைக்காரர் நிலச்சொந்தக்காரருக்கு வழங்கும் பகுதித் தொகை ஆகும்.
21.
(i) தனிநபர் பகிர்வு
(ii) பணிசார் பகிர்வு
22.
(i) ஜோசப் A சும்பீட்டர் புத்தாக்க இலாபக் கோட்பாட்டை எடுத்துரைத்தார்.
(ii) சும்பீட்டர் கருத்துப்படி, ஒரு தொழில்முனைவோர் உற்பத்தி செயல்பாடுகளில் வணிகத்தை நடத்துவதோடு மட்டுமல்லாமல் புத்தாக்கம் புனைபவராகவும் இருக்கிறார்.
(iii) புத்தாக்கம் புனைவதற்கான வெகுமதியே இலாபம்.
(iv) சும்பீட்டரின் கூற்றுப்படி, புத்தாக்கம் புனைதல் என்பது கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது.
(1) புதிய பண்டங்களை அறிமுகப்படுத்துதல்.
(2) புதிய உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்துதல்.
(3) புதிய சந்தைகளைத் தொடங்குதல்.
(4) புதிய மூலப்பொருட்களைக் கண்டறிதல்.
(5) தொழில்/நிறுவனங்களை மறு சீரமைத்தல் புத்தாக்கத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் தான் அதிக இலாபம் பெற முடியும்.
திறனாய்வு:
புத்தாக்கம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் இது ஒன்று மட்டுமே காரணமல்ல. மேலும் இது இடர் தங்கும் பணியைப் புறக்கணித்துவிட்டது
23.
| வாரம் | போலிவாரம் | |
| 1 | பொருளியலில் வாரம் என்பது நிலத்தை பயன்படுத்துவதற்காக மட்டுமே குத்தகைக்காரர் நிலா சொந்தக்காரருக்கு வழங்கப்படும் பகுதித் தொகை ஆகும். |
மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் இருந்து பெறப்படும் வருவாயே போலி வாரம் ஆகும். |
| 2 | நிலத்தின் அளிப்பு நிலையானது | போலிவாரம் என்பது குறுகியகாலத்தில் மாறும் செலவுக்கு மேலாக உற்பத்தியாளர் பெரும் உபரியாகும். |
| 3 | வாரம் விலையுடன் சேரும். | போலி வாரம் விலையுடன் சேராது. |
24.
கீன்ஸ் கூற்றுப்படி, நீர்மை விருப்பத்திற்கு மூன்று நோக்கங்கள் உள்ளன. அவை,
பரிமாற்ற நோக்கம்:
(i) மக்கள் அன்றாட பரிவர்த்தனைக்காக பணத்தை ரொக்கமாக வைத்திருப்பதன் விருப்பமே பரிமாற்ற நோக்கமாகும்.
(ii) இந்த நோக்கத்திற்காக பணம் சேமிக்கும் அளவு வருமான அளவைச் சார்ந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நோக்கம்:
(i) நோய்வாய்படுதல், விபத்து, தீப்பற்றுதல், திருட்டு போன்ற எதிர்பாராத செலவுகளை சந்திப்பதற்காக மக்கள் பணத்தை ரொக்கமாக வைத்திருப்பதற்கான இந்த நோக்கம் முன்னெச்சரிக்கை நோக்கம் எனப்படும்.
ஊக நோக்கம்:
(i) முதலீட்டு சந்தையில் பங்குகள் மற்றும் பத்திரங்களின் எதிர்கால விலை மாற்றத்திற்கேற்ப அதனுடைய நன்மைகளைப் பெற பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்க தேவையான பணத்தை மக்கள் ரொக்கமாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இதுவே ஊக நோக்கமாகும்.
(ii) இந்த நோக்கத்திற்காக கையில் சேமிப்பாக வைத்திருக்கும் தொகையின் அளவு வட்டி விகிதத்தைப் பொறுத்து அமையும்.
(iv) (எ.கா) (Ms=450-100i) இங்கு நீர்மை விருப்பத்திற்கும் வட்டி விகிதத்திற்கும் எதிர்மறையான உறவாகும்.
25.
(i) கடன் நிதிக்கோட்பாடு, புதிய தொன்மைக்கோட்பாடு எனவும் அழைக்கப்படுகிறது
(ii) பொருளியல் வல்லுநர்கள் விக்செல் பெர்டில் ஓலின் வைனர் மற்றும் குன்னர் மிர்தால் ஆகியோர் மேம்படுத்தினார்.
(iii) கடன் அங்காடியில் கடன் நிதியின் தேவை மற்றும் அளிப்பின் சமநிலைப்புள்ளியில் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.
கடன் நிதிகளின் தேவை:
(i) முதலீட்டுத் தேவை
(ii) நுகர்வுத் தேவை
(iii) பதுக்குவதற்கான தேவை
கடன் நிதியின் அளிப்பு
(i) சேமிப்பு
(ii) வங்கிக்கடன்
(iii) பதுக்கியதை மீட்டல்
(iv) முதலீடு செய்யாதிருத்தல்
சமநிலை:
தேவை மற்றும் அளிப்பின் சமநிலையில் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.
கடன் நிதிகளின் அளிப்பு =சேமிப்பு +வங்கிக்கடன்(BC)+பதுக்கியது மீட்டல் (DH)+முதலீடு செய்யாதிருத்தல்
=S+BC+DH+DI
கடன் நிதிகளின் தேவை =முதலீடு (I) +நுகர்வு (C) +பதுக்குதல்(H )
=I+C+H
வரைபட விளக்கம்:
(i) x அச்சில் கடன்நிதிகளின் தேவை மற்றும் அளிப்பு குறிக்கப்படுகின்றன. y அச்சில் வட்டி விகிதம் குறிக்கப்படுகிறது. IS கொடு மொத்த கடன் நிதிகளின் அளிப்பு கோடாகும். இது சேமிப்புக்கொடு (S) வங்கி கடன்கோடு(BC) பாதுக்காதிருத்தல் கோடு (DH) மற்றும் முதலீடு செய்யாதிருத்தல் கோடு(DI) ஆகியவற்றின் ஒட்டு மொத்தமே ஆகும்.
(ii) இந்த LD கோடு LS கோடும் E என்ற புள்ளியில் வெட்டி கொள்கின்றன.
(iii) இது சமநிலைப்புள்ளி ஆகும்.
(iv) இந்த புள்ளியில் வட்டி விகிதம் OR கடன் நிதிகளின் அளவு OM.
குறைபாடு:
(i) வட்டி வீதத்தினை நிர்ணயிக்கும் பல காரணிகள் இங்கு சேர்க்கப்பட்டு உள்ளன. ஆனாலும் சரியான செய்திப் பரவலின்மை, ஒழுக்கக் கோடுகள் போன்ற காரணிகள் இன்று மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
(ii) வருமான அளவை முன்கூட்டியே தெரியாமல் கடன்நிதிக்கோட்பாட்டை தீர்மானிக்க இயலாது.
(iii) உண்மை காரணிகளை சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றை பணம் சார்ந்த காரணியான வங்கிக்கடன் நீர்மை விருப்பம் ஆகியவற்றின் தொடர்புபடுத்துவது கடினம் .
26.
வாரம் என்பது நிலத்தின் உண்மையானதும் அழிக்க முடியாததுமான சக்திகளை பயன்படுத்திக் கொள்வதற்காக நிலத்தின் விளைச்சலிருந்து ஒரு பகுதியை நில உரிமையாளருக்கு கொடுப்பதே ஆகும்.
டேவிட் ரிகார்டே விளக்கிய வாரக்கோட்பாடு தொன்மைக் கால வாரக் கோட் பாடாகும்.
அனுமானங்கள் :
(i) நிலம் வளத்தில் வேறுபட்டது.
(ii) வேளாண்மையில் குறைத்து செல் விளைவு விதி செயல்படுகிறது.
(iii) நிறைவுப் போட்டி நிலவுகிறது.
(iv) நீண்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டது.
(v) நிலம் உண்மையானதும் அழிக்கமுடியாத சக்திகளையும் கொண்டது.
(vi) அதிக வளமுள்ள நிலங்கள் முதலில் பயிர் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டுடன் இக்கோட்பாட்டின் விளக்கம் :
(i) புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தீவில் குறிப்பிட்ட சில மக்கள் குடியேறுவதாக கொள்வோம்.
(ii) அங்கு மூன்று தரமுடைய நிலங்கள் உள்ளன.
(iii) A,B மற்றும் C, A என்பது மிகவும் வளம் பொருந்திய நிலம்.
(iv) A யுடன் ஒப்பிடும்போது B குறைந்த வளம் உடைய நிலம்.
(v) C என்பது மிகக் குறைந்த வளமுடைய நிலம்
(vi) நிலம் பயன்படுத்தப்பட்டால் அபரிமிதமாக இருப்பதால் அத்தகைய நிலம் இலவசமாக கிடைக்கிறது.அதுவரை வாரம் கிடையாது.
(vii) குறிப்பிட்ட அளவு உழைப்பாளரையும் மூலதனத்தையும் பயன்படுத்துவதால் 'A' தரம் உள்ள நிலத்தின் ஒரு ஏக்கருக்கு 40 மூட்டைகள் நெல் விளைகிறது.
(viii) அடுத்தடுத்த மற்றொரு சிறிய மக்கள் கூட்டம் அதே தீவில் குடியேறுவதாக கொள்வோம்.
(ix) சில காலத்திற்கு பிறகு B தர நிலத்தை பயிர் செய்ய பயன்படுத்துவார்கள்.
(x) வளம் குறைந்த 'B' தர நிலத்தின் 30 மூட்டைகள் நெல் விளைவிக்கப்படுகிறது.
(xi) A தர நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 10 மூட்டைகள் உபரியாக உள்ளது (40-30) இதை 'A' தர நிலத்திற்கான பொருளாதார வாரம் என அழைக்கிறோம்.
(xii) இன்னும் ஒரு சிறு மக்கள் கூட்டம் அதே தீவில் குடியேறுகிறது.
(xiii) "C" தர நிலத்தில் 20 மூட்டைகள் நெல் விளைவிக்கப்படுகிறது.
(xiv) 'A' தர நிலத்தின் உபரி தற்போது 20 மூட்டைகளாக அதிகரிக்கிறது (40-20) இது 'A' தர நிலத்தின் பொருளாதார வாரமாகும்.'B' தர நிலத்தின் பொருளாதார வாரமாகும்.
(xv) 'C' தர நிலத்தின் உற்பத்தி செலவு அதன் உற்பத்தி மதிப்பிற்கு சமமாக உள்ளது.எனவே அதற்கு எந்த ஒரு வாரமும் கிடைக்காது(20-20) எனவே 'C ' தர நிலங்களை "வாரமில்லா நிலம்" அல்லது இறுதி நிலை நிலம் என அழைக்கப்படுகிறது.
(xvi) வாரம் பெறக்கூடிய நிலத்தை உள் இறுதிநிலை நிலம் என்கிறோம்.
| நிலத்தின் தரம் | உற்பத்தி (மூட்டைகளில்) | உபரி(வாரம்) (மூட்டைகளில்) |
|---|---|---|
| A | 40 | 40-20=20 |
| B | 30 | 30-20=10 |
| C | 20 | 20-20=0 |
(i) X அச்சில் நிலத்திற்கான தரமும் Y அச்சில்ஏக்கருக்கான விளைச்சல் (மூட்டைகளும்) குறிப்பிடப்படுகிறது.
(ii) வரைபடத்தில் C தர நிலங்கள் வாரமில்லா நிலங்கள் எனப்படும்.
(iii) A மற்றும் B தர நிலங்கள் பெற்ற "இறுதிநிலை வாரமுள்ள நிலம்" (குறுக்கு வெட்டு நிலம் வரைபடத்தில் கோடிடப்பட்ட பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது)
குறைபாடுகள்:
(i) முதலில் வளம் பொருந்திய நிலம், பின்னர் வளம் குறைந்த நிலம் என்கிற வரிசை வரலாற்றின் அடிப்படையில் தவறானது.
(ii) இக்கோட்பாடு வாரமானது வாரம் விலையில் சேராது என குறிப்பிடப்படுகிறது.ஆனால் வாரமானது விலையுடன் சேர்ந்திருக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards