11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 17/12/2018
11th Economics -Important 2 mark questions
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
MS Word என்றால் என்ன?
2.
ICT வளர்ச்சி கடந்துள்ள இந்து கட்டங்களை எழுதுக.
3.
Qd = 200 -10p மற்றும் Qs =10p என்பது முறையே தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் ஆகும் இதனைக் கொண்டு சமநிலை விலை மற்றும் அளவைக் காண்க.
4.
இந்திய கல்வி முறை அடிப்படையில் உள்ள ஆறு நிலைகளை எழுதுக?
5.
கட்டமைப்பு வசதிகள் என்றால் என்ன?அது எத்தனை வகைப்படும்?
6.
இந்தியப் பொருளாதாரத்தின் பலன் 5ஐ எழுதுக.
7.
சமமுறிவுப் புள்ளி என்றால் என்ன?
8.
உண்மைச் செலவு என்றால் என்ன?
9.
பொருளாதாரச் செலவு என்றால் என்ன?
10.
விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவுகள் யாவை?
11.
வரவு செலவுக் கோட்டை வரையறு.
12.
மொத்தப் பயன்பாட்டை வரையறு.
13.
ஊரக தொழிற்சாலைகள் என்றால் என்ன?
14.
ஊரக தொழிற்சாலைகளின் வகைகள் யாவை?
15.
பொருளியல் ஆய்வு முறை இரண்டினை எழுதுக.
16.
நுகர்வுப் பண்டத்தையும் மூலதனப் பண்டத்தையும் வேறுபடுத்துக.
17.
பொருளியல் தலைப்புகளில் காணப்படும் பல நூல்கள் யாவை?
18.
வேளாண்மை சார்ந்திருத்தல் என்றால் என்ன?
19.
அகச்சிக்கனங்கள் - சிறு குறிப்பு வரைக.
20.
பொருளாதார சிக்கனங்கள் எத்தனை வகைப்படும்?அவை யாவை?
21.
விகித அளவு விளைவு விதியின் மூன்று நிலைகள் யாவை?
22.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் யாவை?
23.
தமிழ்நாட்டில் மொத்த உள் உற்பத்தியில் அதிக பங்களிப்புத் துறையை பற்றி எழுதுக.
24.
வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம் பற்றி எழுதுக.
25.
நகரமயமாதல் சிறுகுறிப்பு வரைக.
26.
பொதுத் துறை வங்கிகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
27.
மஹலநோபிஸ் மாதிரியை பற்றி எழுதுக.
28.
நீர்மை விருப்பக் கோட்பாட்டின் நோக்கங்கள் யாவை?
29.
கூலிக் கோட்பாடுகள் யாவை?
30.
இறுதி நிலை உற்பத்தி திறன் கோட்பாட்டின் குறைபாடுகள் யாவை?
31.
நிறைகுறைப் போட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்?
32.
குவித்தல்(Dumping) சிறுகுறிப்பு வரைக?
33.
முற்றுரிமை போட்டி என்றால் என்ன?
34.
தொழில் உரிம விலக்களித்தல் பற்றி எழுது.
35.
பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தாக்கம் பற்றி எழுதுக?
36.
முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டத்தை (MRTP) ஒழித்தது எது?
37.
MS Word ன் முக்கிய அம்சங்கள் யாவை?
38.
62 = 34 + 4 X என்றால் X இன் மதிப்பு காண். (தீர்வு x = 7)
39.
40.
பகிர்வின் வகைகள் யாவை?
41.
மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணைக் கணக்கிட உதவும் குறியீடுகளை கூறுக.
42.
பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக.
43.
பாரம்பரிய சுற்றுலா என்பது என்ன?
44.
தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?
45.
இந்தியாவில் ஊரக மின்மயமாக்கலின் இரண்டு பாதக காரணிகளை கூறுக.
46.
மறைமுக வேலையின்மை என்றால் என்ன?
47.
மத்திய மற்றும் மாநில அரசுகள் அறுவடைக்குப் பின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் உட்கூறுகளைக் கூறுக
48.
இந்தியப் பொருளாதாரத்தில் கட்டமைப்பு சீர்திருத்தத்தை செயல்படுத்த காரணம் என்ன?
49.
இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.
50.
இயற்கை வளங்களைப் பற்றிக் குறிப்பு வரைக.
51.
கீழ்க்கண்ட நிறுவனத்தின் தேவைகோடு வரைக
அ) நிறைவு போட்டி ஆ) முற்றுரிமை
52.
“அங்காடி” வரையறு
53.
உற்பத்தி சார்பினை குறிப்பிடுக
54.
உற்பத்திக் காரணிகளை வகைப்படுத்து
55.
வெளியுறு செலவு - வரையறு.
56.
வருவாயை வரையறு.
57.
நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.
58.
விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவை விவரி
59.
பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக
60.
இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க
1.
1. MS Word என்பது ஒரு வார்த்தை செயலியாகும் (word Processor)
2. இச்செயலி செய்திகளையும், புள்ளி விவரங்களையும் உருவாக்க, ஒழுங்குற அமைக்க, அச்சிட மற்றும் தகவல்களை ஆவணமாக பாதுகாக்க உதவுகிறது.
2.
ICT வளர்ச்சி ஐந்து கட்டங்களை கடந்துள்ளது. அவை,
1.கணினி (Computer)
2.PC
3.நுண்செயலி (Micro processor)
4.இணையம் (Internet) மற்றும்
5. வயர்லெஸ் தொடர்புகள் (Wireless Links)
3.
Qs = Qd என்றும் போது சமநிலை ஏற்படுகிறது.
10p=200-10p
10p+10p=200
20p = 200

p=10 எனில்
அளிப்புச் சார்பில்
Qs= lOp
= 10 x 10
\(\boxed{\therefore QS =100}\)
தேவைச்சார்பு
Qd=200-10p
= 200 - (10 x 10)
=200-100
\(\therefore\) Qd= 100
எனவே p = 10, Qs = 100, Qd = 100
விலை ரூ. 10 என்கின்ற போது தேவையின் அளவு அளிப்பின் அளவிற்குச் சமமாக 100 அலகுகளாக உள்ளது.
4.
1.குழந்தை கல்வி.
2.தொடக்க கல்வி.
3.இடைநிலைக் கல்வி.
4.மேல்நிலைக் கல்வி.
5.இளங்களைப் பட்டம்.
6.முதுகலைப் பட்டம்.
5.
1.கட்டமைப்பு மேம்பாடு என்பது பல்வேறு வளர்ச்சிக்கு உதவும் வகையிலான கட்டமைப்புகளாகும்.
2.இது இரு வகைப்படும்
1.பொருளாதார கட்டமைப்பு
2.சமூக கட்டமைப்பு
6.
1.கலப்பு பொருளாதாரம்.
2.வேளாண்மை.
3.புதிய தொழிற் கொள்கை.
4.வளர்ந்து வரும் அங்காடி.
5.பேரளவு நுகர்வு.
7.
1.ஒரு நிறுவனத்தின் மொத்த வருவாயானது மொத்த செலவிற்கு சமமாக இருக்கும் (TR=TC)
2. இப்புள்ளிகளில் நிறுவனத்திற்கு இலாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை.
3.இந்த புள்ளி சமமுறிவுப் புள்ளி என்று அழைக்கப்படுகின்றன.
8.
1. உற்பத்தி மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடக் கூடிய செலவுகளுடன், நிர்வாகச் செலவையும் சேர்த்துக் கொண்டால் அது முதன்மைச் செலவு எனப்படும்.
2.இச்செலவுகள் நேர்முகச் செலவுகள் என்றும் அழைக்கப்படும்.
3.
9.
1.ஒரு நிறுவனத்தின் உற்பத்திக்கு உறுதியான அளிப்பாய் முறைப்படுத்தும் சொந்த வளங்கள் மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட செலவுகள் பொருளாதாரச் செலவுகள் எனப்படும்.
2.வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த செலவுகளை உள்ளடக்கியதே பொருளாதாரச் செலவு எனப்படும்.
3.
10.
1. முற்றிலும் நெகிழ்ச்சியுள்ள தேவை (EP=\(\alpha\))
2.முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவை (EP=0)
3.மிகைத் தேவை நெகிழ்ச்சி (EP>1)
4.குறைவான நெகிழ்ச்சியுள்ள தேவை (EP<1)
5. அலகுத் தேவை நெகிழ்ச்சி (EP=1)
11.
1.நுகர்வோர் வருமானத்தைப் பொருத்து,கொடுக்கப்பட்டுள்ள விலையில் பண்டங்களை எவ்வளவு வாங்க முடியும் என்பதை அறிய வரவு செலவுக் கோடு பயன்படுகிறது.
2. வரவு செலவுக் கோடு 'விலை விகிதக் கோடு'எனவும் அழைக்கப்படுகிறது.
12.
1. ஒரு பண்டத்தின் எல்லா அலகுகளையும் நுகர்வதால் கிடைக்கும் பயன்பாட்டின் கூடுதலே மொத்தப் பயன்பாடு ஆகும்.
2.TU=MU1+MU2+MU3+......+MUn
(அ)
\(\boxed{TU=\sum MU}\)
13.
(i) ஊரக பகுதிகளில் ஊரக மக்களால் நடத்தப்படும் அனைத்து தொழிற்சாலைகளும் ஊரக தொழிற்சாலைகள் ஆகும்.
(ii) உள்ளூரில் கிடைக்கும் கச்சாப் பொருட்கள், திறன்கள் மற்றும் சிறிய அளவிலான முதலீடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.
14.
(i) குடிசைத் தொழில்கள்
(ii) ஊரக தொழில்கள்
(iii) சிறு தொழில்கள்
(iv) குறுந்தொழில்கள் மற்றும்
(v) வேளாண்சார்ந்த தொழில்கள்
15.
பொருளியலில் இருவகையான ஆய்வு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை,
1. பகுத்தாய்வு முறை (Deductive Method)
2. தொகுத்தாய்வு முறை (Inductive Method)
16.
| வ.எண். | நுகர்வுப் பண்டங்கள் | மூலதனப் பண்டங்கள் |
| 1. | நுகர்வோர் பண்டங்கள் என்பது நேரடியாக மனித விருப்பங்களை நிறைவேற்றுவதாகும். | மூலதனப் பண்டங்கள் என்பவை நேரடியாக நுகர்வோருக்கு மனநிறைவு தருவதில்லை |
| 2. | (எ.கா.)தொலைக்காட்டி | (எ.கா.)இயந்திரங்கள். |
17.
பொருளியல் போன்ற படத்திற்கு
1.பொருளியலில் அறிமுகம்.
2. பொருளியல் ஓர் அறிமுகம்.
3. அடிப்படைப் பொருளியல்.
4. பொருளியலின் கூறுகள்.
5. தொடக்கப் பொருளியல்.
6.பொருளியலின் அடிப்படைகள்
போன்ற தலைப்புகளில் பொருளியல் நூல்கள் பல காணக் கிடைக்கின்றன.
18.
(i) ஊரக பொருளாதாரம் இயற்கையையும், வேளாண் நடவடிக்கைகளையும் சார்ந்துள்ளது.
(ii) வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த செயல்களே ஊரக மக்களின் முக்கிய தொழிலாகும்.
19.
1.அகச்சிக்கனம் என்பது நிறுவனம் பொருளின் உற்பத்திச் செலவினை குறைத்து பெறும் நன்மையினை குறிக்கும்.
2. நிறுவனமானது புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதாலும், புதிய முதலீட்டை உருவாக்குவதாலும், மேலாண்மை திறனை மேம்படுத்துவதாலும் உற்பத்திச் செலவினை குறைக்கிறது.
20.
பொருளாதார சிக்கனங்கள் இரண்டு வகைப்படும் அவை,
1. அகச்சிக்கனங்கள்
2. புறச்சிக்கனங்கள்
21.
1. வளர்ந்து செல் விகித அளவு
2. மாறா விகித அளவு
3. குறைந்து செல் விகித அளவு
22.
(i) ஆங்கில ஆதிக்கம் இந்தியத் தொழில்களை முடக்கியது.
(ii) ஆங்கிலப் பொருளாதாரக் கொள்கைகளை இந்தியாவின் மூலதன ஆக்கத்தை குறைய செய்து வளிர்ச்சிய தடுத்து நிறுத்தியது.
(iii) நம்மிடமிருந்து சுரண்டப்பட்ட சொத்துக்கள் ஆங்கிலேயர்களின் மூலதனமாக மாறியது.
23.
(i) 35 மில்லியன் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% பங்களிப்பையும், மொத்த ஏற்றுமதி வருவாயில் 3% ஜவுளித்துறையிலிருந்தும் கிடைக்கிறது.
(ii) உற்பத்தித் துறையில் 14% பங்களிப்பு ஜவுளித்துறை மூலமாக கிடைக்கிறது.
24.
(i) சராசரியாக ஒரு நபரின் எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அளவே ஆயுட்காலம் என்று அழைக்கப்படுகிறது.
(ii) வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவு.
(iii) இந்தியாவின் சராசரி ஆயுட்காலம் 67.9 ஆண்டுகள்.
25.
(i) இந்திய அளவில் நகரமயமாதலின் சராசரி அளவு 31.5% ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 48.4% ஆக உள்ளது.
(ii) இந்திய அளவில் மொத்த மக்கள் தொகையில் 6% ஐக் கொண்டுள்ள தமிழகம், நகரமக்கள் மொத்த மக்கள்தொகையில் 9.61% மாக உள்ளது.
26.
பொதுத் துறை வங்கிகள் இரண்டு வகைப்படும். அவை
(i) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்.
(ii) மாநில வங்கிகள் மற்றும் அவற்றின் கூட்டு நிறுவனங்கள் .
27.
(i) இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் PC மஹலநோபிஸ் மாதிரியை அடிப்படையாக கொண்டது
(ii) இதன் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதாகும்
28.
29.
(i) பிழைப்பு மட்ட கூலிக் கோட்பாடு
(ii) வாழ்க்கைத்தர கூலி கோட்பாடு
(iii) கூலி நிதிக் கோட்பாடு
(iv) எச்ச உரிமை கூலி கோட்பாடு
(v) இறுதிநிலை உற்பத்தித் திறன் கூலிக் கோட்பாடு
30.
(i) நடைமுறையில் உற்பத்திக் காரணிகள் ஒருமித்த தன்மை கொண்டதாக இருக்காது.
(ii) காரணிகளை ஒன்றுக்கொன்று பதிலீடு செய்து கொள்ள முடியாது.
(iii) நீண்ட காலத்திற்கு மட்டுமே இவ்விதி பொருந்தும் குறுகிய காலத்திற்கு பொருந்தாது.
31.
நிறைகுறைப் போட்டி எனும் கருத்தை 1933-ல் இங்கிலாந்து நாட்டின் ஜோன்ராபின்சன் (John Robinson) மற்றும் அமெரிக்காவின் E.H.சேம்பர்லின் (Chamberlin) ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
32.
(i) குவித்தல் என்றால் ஒரு முற்றுரிமையாளர் தனது உற்பத்தி பண்டத்திற்கு உள்ளூர் அங்காடியில் அதிக விலையும். வெளியூர் அங்காடியில் குறைந்த விலையும் நிர்ணயிப்பது ஆகும்.
(ii) உதாரணமாக இந்தியாவில் மின்னணு சாதன அல்லது சீனாவில் மின்னணுப் பொருட்களால் நிரப்பப்பட்டுள்ளது.
33.
(i) Mono என்ற சொல் ஒன்று, Poly என்ற சொல் விற்பதையும் குறிக்கும்.
(ii) முற்றுரிமை என்பது ஒரு பண்டத்தை அங்காடியில் ஒருவரே விற்பனை செய்வதாகும்.
(iii) முற்றுரிமை போட்டியில் நெருங்கிய பதிலீட்டு பண்டங்கள் கிடையாது.
34.
1191-ன் புதிய தொழிற் கொள்கையின் கீழ் தொழிலுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்தல் மற்றும் சிவப்பு நாடா முறையை முடிவுக்கு கொண்டு வருதலாகும்.
35.
பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் தொழில்துறை மற்றும் சேவைத்துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
36.
1991 ஆம் ஆண்டின் புதிய தொழிற்கொள்கை முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டத்தை அகற்றியது.
37.
வார்த்தை செயலி (word processor) யின் அம்சங்கள்:
1. ஆவணத்தை உருவாக்க நகலெடுக்க திருத்தியமைக்க, வடிவமைக்க முடியும்.
2.வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை இடையில் சேர்த்திட, மாற்றிட (அ)நீக்கிட முடியும்.
3.வடிவமைப்பினை பயன்படுத்த முடியும்.
4.பக்கங்களின் அளவு மற்றும் விளிம்பு அளவுகளை சரிசெய்து கொள்ள முடியும்.
5. பிழைத்திருத்தம் செய்யும் வசதியுள்ளது.
6.பல ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஒன்றாக இணைக்க முடிகிறது.
38.
62=34+4x
62-34=4x
28=4x

\(\boxed{\therefore x=7}\)
39.
40.
(i) தனிநபர் பகிர்வு
(ii) பணிசார் பகிர்வு
41.
(i) HDI1 ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் மனித மேம்பாட்டு அறிக்கையினை பொருத்துள்ளது).
(ii) HDI 2 (வாழ்க்கைதரம் )
(iii) HDI3 (வறுமை ஓழிப்பு) மற்றும் HDI4 (நகரமயமாதல்) ஆகிய நான்கும் மனித மேம்பாட்டுக் குறியீடுகளாகும்.
42.
பசுமைப்புரட்சியின் பலவீனங்களாவன :
(i) பருவ மழையை நம்பியிருப்பது.
(ii) விதைகள் , பூச்சிக் கொல்லிகள் , தண்ணீர் போன்ற உள்ளீடுகளுக்காக பேரளவு மூலதனம் தேவைப்படுகிறது.
(iii) பெரு , சிறு மாற்று குறு விவசாயிகளுக்குகிடயே வருமான இடைவெளி அதிகரித்திருப்பது.
(iv) பண்ணைகள் இயந்திரமயமாக்கப் படுத்தல் ஆகிய இவை அனைத்தும் பசுமைப்புரட்சியின் பலவீனங்களாவன.
43.
மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் (மதுரை), ஸ்ரீரங்கநாதா சுவாமி கோயில் (ஸ்ரீரங்கம்), பிரகதீஸ்வரர் ஆலயம் (தஞ்சாவூர்) மற்றும் மகாபலிபுர சிற்பகோயில்கள் ஆகியவை பாரம்பரிய சுற்றுலாத்தலங்கள் ஆகும்.
44.
எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களாகும். நாகப்பட்டினம் நடுத்தர துறைமுகமாகும்.
45.
(i) நிதிப்பற்றாக் குறை
(ii) மாநிலங்களுக்கிடையேயுள்ள பிரச்சினைகள்.
46.
தகுதிக்கு குறைந்த வேலையில் ஈடுபடுதல், உபரியான வேலையாட்கள் நியமிக்கபடுதல், வேலையிலிருந்து சிலரை நீக்கினாலும் உற்பத்தியின் அளவு குறையாது ஏனெனில் அவர்களின் இறுதிநிலை உற்பத்தித்திறன் ஒன்றுமில்லை இவ்வகையான சூழலையே மறைமுக வேலையின்மை என்கிறோம்.
47.
(i) விவசாய விளை பொருட்களின் விரயங்களைக் குறைப்பதற்காகவும் மற்றும் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதற்கும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் அமைச்சகம் (MOFPI) மத்திய மாநில அரசுகளால் ஏற்படுத்தப்பட்து.
(ii) பெரிய உணவுப்பூங்கா, ஒருங்கிணைந்த குளிர் இணைப்பு அறுவடை இடத்திலிருந்து பாதுகாப்பு பெட்டகம் வரை குளிர்பதன வசதி, மதிப்பு கூட்டி பாதுகாக்கும் கட்டமைப்பு ஆகியவை நிறுவப்பட்டன.
48.
வறுமையும், வேலையின்மையும் பொருளாதாரத்தின் கட்டமைப்பு சீர்திருத்தத்தை செயல்படுத்தக் காரணங்களாக இருந்தது.
49.
இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு வேளாண்மையாகும்.
50.
1. ஒரு நாட்டின் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் இயற்கை வளங்கள் எனப்படும்.
2. உதாரணம்: காடு, நீர், கனிம வளங்கள் மற்றும் ஆற்றல் சக்திகள் ஆகியவையாகும்.
51.
52.
(i) பொதுவாக 'அங்காடி' என்பது பொருள்கள் மற்றும் பணிகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் இடத்தை குறிக்கும்.
(ii) பொருளாதாரத்தில் 'அங்காடி'என்பது ஒரு பொருளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள பரிமாற்றம் முறையையேக் குறிக்கும்.
53.
பல்வகை உள்ளீடுகளின் அளவுகளுக்கு வெளியீட்டு பொருள்களின் அளவுகளுக்கும் இடையே உள்ள தொடர்பே உற்பத்தி சார்பு ஆகும்.
54.
உற்பத்தி காரணிகள் நான்கு வகைப்படும். அவை,|
1. நிலம்
2. உழைப்பு
3. மூலதனம் மற்றும்
4. அமைப்பு அல்லது தொழில் முனைதல்.
55.
1. உற்பத்திக் காரணிகளை வாங்க மற்றவர்களுக்கு செலுத்தும் செலுத்துகையே வெளிப்படையான செலவு எனப்படும்.
2. வெளிப்படையான செலவு என்பது கணக்கியல் செலவு (அ) வெளிச்செலவு (அ) பணச் செலவு என்றும் அழைக்கப்படும்.
56.
1.ஒரு விற்பனையாளர் தன் பண்ட பரிமாற்றத்தின் மூலம் ஈட்டுகின்ற பணமே வருவாய் எனப்படும்.
2. உற்பத்தியாளர் தான் உற்பத்தி செய்த பண்டத்தை ஒரு குறிப்பிட்ட விலையில், சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் பெறுகின்ற வருமானமே அந்நிறுவனத்தின் வருவாய் எனப்படும்.
57.
1. ஒரு பொருளுக்கு நுகர்வோர் கொடுக்க விரும்பும் விலைக்கும் உண்மையிலேயே கொடுக்கும் விலைக்கும் உள்ள வித்தியாசமே நுகர்வோர் எச்சம்.
2. நுகர்வோர் எச்சம் =TU-(P x Q)
அல்லது
3. நுகர்வோர் எச்சம் = தகுவிலை - உண்மை விலை.
TU =மொத்தப் பயன்பாடு
P =விலை
Q =பண்ட அளவு
58.
விலையில் ஏற்படும் பிரதிபலிப்பின் காரணமாக தேவை ஏற்படும் மாற்றம் விலைத் தேவை நெகிழ்ச்சியாகும்.
1. முற்றிலும் நெகிழ்ச்சியுள்ள தேவை\((EP= \alpha)\)
2.முற்றிலும் நெகிழ்ச்சியுற்ற தேவை \((EP= 0)\)
3. மிகை தேவை நெகிழ்ச்சி \((EP>1)\)
4. குறைவான நெகிழ்ச்சியுள்ள தேவை / குறைத்தேவை நெகிழ்ச்சி \((EP<1)\)
5. அலகுத் தேவை நெகிழ்ச்சி \((EP=1)\)
59.
பகுத்தாய்வு முறை என்பது முழுமை தொகுதியினை பற்றிய கருத்தின் அடிப்படையில் அதன் தனி அலகு ஒன்றினைப் பற்றி கருத்துக் கூறுவதாகும்.
60.
1. இயல்புரை அறிவியல், உள்ளதை உள்ளவாறு கூறுகிறது.
2. நிரூபிக்க இயலும்
3. காரண காரியங்களை தொடர்புபடுத்துகிறது.
4. உண்மையின் அடிப்படையில் அமைந்தது
5. வெளிப்படையானது, என்ன என்பதைக் கூறுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards