11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
இந்தியப் பொருளாதாரம்
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் பெற்ற ஆண்டு
1998
2000
2008
2010
2.
காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகளை தொடர்ந்து வலியுறுத்தியவர் யார்?
ஜவஹர்லால் நேரு
V.K.R.V இராவ்
J.C குமரப்பா
A.K சென்
3.
தேசிய வளர்ச்சிக்கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார் ?
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
ஜவஹர்லால் நேரு
டாக்டர் இராதாகிருஷ்ணன்
V.K.R.V இராவ்
4.
எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது?
2000
2001
2005
1991
5.
மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு
இட அமைப்பியல்
மக்கள் தொகையியல்
புவியியல்
தத்துவவியல்
6.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவது குறிப்பிடுவது
GNP
GDP
NNP
தலாவருமானம்
7.
கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______
கோலார்
இராமகிரி
அனந்தபூர்
கொச்சின்
8.
இறப்பு விகிதம் என்றால் என்ன?
9.
பிறப்பு விகிதம் என்றால் என்ன?
10.
தொழில்நுட்பத் தெரிவு” பற்றி சென் கூறுவது என்ன?
11.
இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.
12.
இயற்கை வளங்களைப் பற்றிக் குறிப்பு வரைக.
13.
பொருளாதார வளர்ச்சியின் பொருள் எழுதுக.
14.
மக்கள் தொகை அடர்த்தி விளக்குக.
15.
'J.C குமரப்பா' குறிப்பு வரைக.
16.
கிராம தொகுதிகள் பற்றி எழுதுக.
17.
சமூகக் கட்டமைப்புகளை விளக்குக.
18.
பெருக்கி கருத்தைப் பற்றி V.K.R.V ராவ் பங்களிப்பு எழுதுக.
19.
கிராம சர்வோதயம் – சிறுகுறிப்பு வரைக.
20.
பொருளாதார முன்னேற்றம் – வரையறு.
21.
இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.
22.
இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான அம்சங்களை விவரி.
1.
(a)
1998
2.
(c)
J.C குமரப்பா
3.
(b)
ஜவஹர்லால் நேரு
4.
(b)
2001
5.
(b)
மக்கள் தொகையியல்
6.
(b)
GDP
7.
(a)
கோலார்
8.
இறப்பு விகிதம் என்பது 1000 மக்கள் தொகைக்கு இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
9.
குழந்தைகள் பிறப்பு விகிதம் என்பது 1000 மக்கள் தொகைக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறிக்கும்.
10.
மூலதன செறிவை நுட்பமான முறையில், உழைப்பாளர்கள் உபரியாக உள்ள பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது கடினம் என்று 'தொழில் நுட்பத் தெரிவு' என்ற புத்தகத்தில் சென் குறிப்பிடுகிறார்.
11.
இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு வேளாண்மையாகும்.
12.
1. ஒரு நாட்டின் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் இயற்கை வளங்கள் எனப்படும்.
2. உதாரணம்: காடு, நீர், கனிம வளங்கள் மற்றும் ஆற்றல் சக்திகள் ஆகியவையாகும்.
13.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் வருமானத்தால் அளவிடப்பட்டாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியாலேயே (GDP) குறிப்பிடப்படுகிறது.
14.
1.மக்கள் தொகை அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை குறிக்கின்றது.
2.நிலம் மற்றும் மனிதன் விகித அளவைக் குறிக்கிறது.
3.மொத்த நிலப்பரப்பு மாறாதிருக்கும் போது அதிகரிக்கும் மக்கள் தொகையானது மக்கள் தொகையின் அடர்த்தியை அதிகரிக்கின்றது.

4. சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னர் வரை மக்கள் தொகை அடர்த்தி 100-க்கும் குறைவு.ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் மக்கள் தொகை அடர்த்தியானது 1951ல் 117ஆக இருந்து உயர்ந்து பின் 2001-ல் 325 ஆக அதிகரித்தது.
15.
1.ஜோசப் செல்லத்துரை குமரப்பா தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் 1892 ஜனவரி 4ல் பிறந்தார்.
2.குமரப்பாவின் அனைத்து பொருளாதார கருத்துகளையும் காந்தியம் என்பதன் அடிப்படையிலேயே அமைத்துக் கொண்டார்.மேலும் "காந்தியப் பொருளாதாரம்" என்ற கருத்தையே அவர் உருவாக்கினார்.
காந்தியப் பொருளாதாரம்:
1.J.C குமரப்பா, காந்தியின் கருத்தான கிராமத் தொழில்கள்,கிராமத் தொழில் வளர்ச்சி சங்கம் ஆகியவற்றை வலுவாக ஆதரித்தார்.
2.குமரப்பா உப்பு சத்தியாக் கிரகத்தின் போது (young India)யங் இந்திய பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டே அகமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதார பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
3.அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தை 1935ல் தோற்றுவித்தார்.
4.வெள்ளையனே நெளியேறு இயக்கத்தின் போது ஓராண்டிற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டார்.
5.சிறையில் இருந்தபோது "நிலைத்த பொருளாதாரம் இயேசுவின் வழிமுறைகள் (1945)"மற்றும் "கிறிஸ்துவம் அதன் பொருளாதாரமும் வாழ்க்கை முறையும் (1945)"ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதினார்.
16.
1.கிராம முன்னேற்றத்திற்காக கிராம குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
2.ஊரக வளர்ச்சிக்காக கிராமங்கள் தொகுப்பாக ஒரே அலகாக செயல்பட வேண்டும்.
3. கிராமங்களிடையே சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு அடையும்.
4.பொருளாதார தொடர்பு கிராமத்தில் அதிக வளர்ச்சியையும் ஆற்றல் மிக்க உற்பத்தியையும் தன்னாக்க முறையில் செய்ய பொது மக்கள் அதன் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக்கொள்பவராகவும் இருக்க வேண்டும் என்று ராவ் கருதினார்.
17.
1. மனித வளங்களை மேம்படுத்துவதும் பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுகமாகத் துணைசெய்வதுமான அமைப்புகளை சமூகக் கட்டமைப்புகள் என்கிறோம்.
2. இந்த அமைப்புகள் உற்பத்தி மற்றும் பகிர்வுக்கு வெளியே இருக்கின்றன.
3. சமூக அமைப்புகளின் மேம்பாடு மனித வளங்களின் திறமையையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்கின்றன.(எ.கா.) பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது வசதி மற்றும் இதர குடிமை வசதிகள்.
4.குறைவான சமூக அடிப்படைக் கட்டமைப்பினால் இந்திய பணியாளர்களின் உற்பத்தி திறன் குறைவாக இருக்கிறது.
18.
1. 'முன்னேற்றம் அடையாத நாடுகளில் முதலீடு, வருமானம் மற்றும் பெருக்கி ஆகியவற்றிற்க்கு இடையேயான தொடர்பு' (1952) என்ற ராவ் அவர்களின் புத்தகம் பேரியியல் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு வழங்கியது.
2.முன்னேறிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தில் முதலீடு சேமிப்பு, பெருக்கி ஆகியவற்றை ஆய்வு செய்தல்.
3.கீன்சின் மாணவர்களில் சிறந்தவராகV.K.R.V ராவ் அவர்களை கருதுகிறார்.
4.சிந்தனையாளர் ஆசிரியர் பொருளாதார ஆலோசகர் மற்றும் நேரடி கொள்கை வடிவமைப்பாளர் என்ற பார்வையில் J.M. கீன்சின் அடிகளை பின்பற்றுகிறார்.
19.
1."உண்மையான இந்தியா வாழ்வது நகரங்களிலோ, புறநகரங்களிலோ இல்லை கிராமங்களில் தான்" என்று கூறுகிறார்.
2.கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாகவும் சுயசார்பு பெற்றவைகளாகவும் இருக்க வேண்டும் என்றார்.
20.
1. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுவாக அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் மட்டும் குறிப்பிடப்படுவதன்றி அந்நாட்டு மக்களின் உயர்ந்த வாழ்க்கைத்தரம் அல்லது மக்களின் நல்வாழ்வையும் உள்ளடக்கியதாகும்.
2. ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தின் அளவீடுகள் என்பது.
1. மனிதவள மேம்பாட்டு குறியீடு
2.வாழ்க்கைத் தரக்குறியீடு
3. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு ஆகியவற்றை பொறுத்தது.
21.
1. இரும்புத் தாது:
1. இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமிதமாகக் காணப்படுகிறது.
2. இரும்பு தாது 4630 மில்லியன் டன் மற்றும் மேக்னடைட் இரும்புத்தாது 10619 மில்லியன் இருப்பு உள்ளது.
3. ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
2.நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1. பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3. மேற்கு வங்காளம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக் கூடிய இடங்களாகும்.
3. அலுமினியத்தாது (பாக்சைட்):
1. பாக்சைட்- அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2. கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
4.மைக்கா:
1. மைகா ஒரு வெப்பத்தை தடுக்கும் தனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2. இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்கா தான் உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
3. பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
5. சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1. இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், பாடர்பூர், நகர்க்காட்டிகா, காசிம்பூர்,பள்ளியரியா, ரூத்ராபூர், சிவசாகர், மார்ன்.
6.தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3. கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்சசூரில் ஹட்டி தங்க வயல் சுரங்கத்திலும், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கிரி தங்க வயல் சுரங்கத்திலும் ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
7. வைரம்:
1. UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2. அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும், ஆந்திரபிரதேசத்தில் கர்னுல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுகையிலும் கிடைக்கிறது.
3.புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியுபடா பார்கர் மாவட்டம், மாத்தூர் கிருஷ்ணா பகுதி கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா பகுதி மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
22.
1. இந்தியப் பொருளாதாரம் ஒரு கலப்பு பொருளாதாரம்:
1. இந்தியப் பொருளாதாரம் கலப்பு பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
2. தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து சீரிய முறையில் செயல்படுவது. ஒரு புறம் மிக முக்கியமான அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் பொதுத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன.
2. வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது:
1. இந்தியாவில் அதிகமானோர் வேளாண் தொழில் செய்து வருவதால் அது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. இந்தியாவில் 60% மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
3. இந்தியாவில் 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது.
3.வளர்ந்து வரும் சந்தை:
1. முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையே இந்தியாவின் சந்தை பிற நாடுகளுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகின்றது.
2.இந்தியா குறைந்த முதலீட்டில் குறைவான இடர்பாட்டு காரணிகளினால் அதிகமான வளர்ச்சி சாந்தியங்களைக் கொண்டுள்ளதால் நம் நாடு வேகமாக வளர்ந்து சந்தையாக மாறி இருக்கிறது.
4. வளர்ந்து வரும் பொருளாதாரம்:
விரைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் G20 நாடுகளில் இடம் பெற்றுள்ளது.
5.வேகமாக வளரும் பொருளாதாரம்:
இந்தியப் பொருளாதாரம் அதிக நிலையான வளர்ச்சியினை கொண்டது.
6. வேகமாக வளரும் பணிகள் துறை:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு பணிகள் துறையின் பங்களிப்பாகும்.
7. பேரளவு உள்நாட்டு வளர்ச்சி:
நமது நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதால் உள்நாட்டு நுகர்வு பொருட்களை வாங்குவது பெருமளவு அதிகரித்து இருக்கிறது.
8. நகரப் பகுதியின் விரைவான வளர்ச்சி:
பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளில் நகரமயமாதல் முக்கிய அறிகுறியாகும்.
9. நிலையான பேரளவு பொருளாதாரம்:
1. நாடுகளில் இந்திய ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2."நிலைத்த உறுதிவாய்ந்த சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம் "என்று குறிப்பிடுகிறது.
10. மக்கள்தொகை -பகுப்பு;
1. இந்திய மனித வளம் இளைஞர்களால் நிரம்பியுள்ளது.
2.இந்தியா அதிக அளவு இளைஞர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
3.நாடு உச்ச வளர்ச்சி அடைவதற்கு மனிதவளம் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது.
4.வெளிநாட்டு முதலீட்டையும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் ஈர்க்கிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards