11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம்
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
எந்த சமுதாயத்திலும் காணப்படும் அடிப்படைப் பொருளியல் பிரச்சினைகள் யாவை?
2.
நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.
3.
சாமுவேல்சனின் வளர்ச்சி இலக்கணத்தின் முக்கியக் கருத்துக்களை விவரி.
4.
இயல்புரை பொருளியல் மற்றும் நெறியுரை பொருளியல் ஒப்பிடுக
5.
நுண்ணியல் மற்றும் பேரியல் பொருளியலுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை
6.
பயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?
7.
8.
பொருளாதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக
9.
‘என்ன உற்பத்தி செய்ய வேண்டும்” என்பதற்கான முக்கிய முடிவுகள் யாவை?
10.
பொருளியலைப் பற்றிய பற்றாக்குறை இலக்கணத்தை விளக்குக. மேலும் அதனை மதிப்பீடு செய்க.
1.
1. என்ன உற்பத்தி செய்வது? எவ்வளவு உற்பத்தி செய்வது?
1. உணவுப் பண்டங்களை அதிகம் உற்பத்தி செய்வதா?(அ) ஆடம்பரப் பண்டங்களை அதிகம் உற்பத்தி செய்வதா?
2. விவசாயப் பண்டங்களை அதிகம் உற்பத்தி செய்வதா?(அ)தொழிற்சாலைப் பண்டங்களை அதிகம் உற்பத்தி செய்வதா?
3. நுகர்வுப் பண்டங்களை அதிகம் வைத்துக் கொள்வதா?(அ) முதலீட்டுப் பண்டங்களை வைத்துக் கொள்வதா?
4. வளங்களை அதிகமாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பயன்படுத்துவதா?(அ) ராணுவப் பணிகளுக்கு பயன்படுத்துவதா?
2.எவ்வாறு உற்பத்தி செய்வது?
உழைப்பு செறிவு மிக்க தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதா?(அ) மூலதனச் செறிவு மிக்க தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதா?
3.யாருக்காக உற்பத்தி செய்வது?
உற்பத்தி செய்த பண்டங்களை சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு எவ்வாறு பிரித்துக் கொடுப்பது?யார் அதிகம் பெறுகிறார்கள்?யார் குறைவாக பெறுகிறார்கள்?

2.
1. ஒரு பொருளாதாரத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்ள உதவுகிறது.
2. பொருளாதாரக் கொள்கைக்கான கருவியைத்தருகிறது.
3. பொருளாதார நலனின் நிலையை பற்றி ஆராய்கிறது.
4. வளங்களை திறன்பட பயன்படுத்த உதவுகிறது.
5. பன்னாட்டு வாணிபத்தில் பயன்படுகிறது.
6. பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு பயன்படுகிறது.
7. வளங்களை உத்தம அளவில் பங்கிட பயன்படுகிறது.
8.முன்கணிப்பிற்கு அடிப்படையாக உள்ளது.
9. விலை நிர்ணயம் செய்ய உதவுகிறது.
3.
1.எல்லையற்ற இலக்குகளோடு தொடர்புடைய சாதனங்கள் பற்றாக்குறையானவை, அவை மாற்றுப் பயனுடையவை என ராபின்ஸ போன்றே சாமுவேல்சனும் கூறுகிறார்.
2. சாமுவேல்சன் தன்னுடைய இலக்கணத்தில் காலத்தையும் சேர்த்து இயக்கத் தன்மையுடையதாக உருவாக்கியுள்ளார்.
3.பணம் பயன்படுத்தப்படாத பண்டமாற்றுப் பொருளாதாரத்திற்கும் பொருந்தக்கூடியது என்கிறார்.
4. உற்பத்தி, பகிர்வு மற்றும் நுகர்வு போன்றே பல கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது என்கிறார்.
5.சாமுவேல்சன் பொருளியலை ஒரு சமூக அறிவியலாக கருதினார், ஆனால் ராபின்ஸ் பொருளியலை தனி மனிதனின் நடத்தை பற்றிய அறிவியலாக கருதினார்.
4.
| வ.எண் | இயல்புரை பொருளியல் | நெறியுரை பொருளியல் |
| 1. | இயல்புரை அறிவியல்,'உள்ளதை உள்ளவாறு' கூறுகிறது. | நெறியுரை பொருளியல் 'எதுவாக இருக்கவேண்டும்' என்ற வினாவிற்கு விடையளிப்பதாக உள்ளது. |
| 2. | நிரூபிக்க இயலும் | நிரூபிக்க இயலாது |
| 3. | என்ன என்பதைக் கூறுகிறது | எப்படி இருக்க வேண்டும் என உரைக்கின்றது. |
| 4. | உண்மையின் அடிப்படையில் அமைந்தது. | உண்மைகளின் அடிப்படையில் அமைந்ததன்று. |
5.
| வ.எண் | நுண்ணியல் பொருளியல் | பேரியல் பொருளியல் |
| 1. | சிறிய அளவை ஆராய்கிறது. | பெரிய அளவை ஆராய்கிறது. |
| 2. | தனி ஒரு பண்டத்தின் விலை, தனிப்பட்ட நிறுவனங்கள் அல்லது தொழில், குடும்பங்கள் பற்றி ஆராய்கிறது. | நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத் செயல்பாடுகள் பற்றி முழுமையாக ஆராய்கிறது. |
| 3. | விலைக்கோட்பாட்டின் கீழ் விளக்கப்படுகிறது. | வருமானக் கோட்பாட்டின் கீழ் விளக்கப்படுகிறது. |
| 4. | ஆல்பிரட் மார்ஷல் நுண்ணியல் பொருளியலில் தந்தை என அழைக்கப்படுகிறார். | J.M. கின்ஸ் பேரியல் பொருளியலில் தந்தை என அழைக்கப்படுகிறார். |
6.
1. பயன்பாடு உளவியல் சார்ந்தது.
2. பயன்பாடும், உபயோகமும் ஒன்றானவை அல்ல.
3. பயன்பாடு தனித்தும், சார்ந்தும் இருக்கும்.
4. பயன்பாடு மனித விருப்பத்தின் தீவிரத்தைச் சார்ந்தது.
5. பயன்பாடு ஒரு உளவியல் கருத்தாகும்
6. பயன்பாடு நீதிநெறி, ஒழுக்க நெறியில் முக்கியத்துவம் கொண்டதல்ல.
7. பயன்பாடும் மகிழ்ச்சியும் ஒன்றானவை அல்ல.
7.
8.
பொருளாதார நடவடிக்கைகள் நுகர்வு, உற்பத்தி, பரிமாற்றம், பகிர்வு ஆகியவைகளாகும்.
நுகர்வு:
மனித விருப்பங்களை நிறைவு செய்யும் நுகர்வு, பொருளாதார நடவடிக்கைகளின் துவக்கப் புள்ளியாக விளங்குகிறது.
உற்பத்தி:
உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றும் செயல்பாடே உற்பத்தி எனப்படும்.
பரிமாற்றம்:
பரிமாற்றம் என்பது பல்வேறு அங்காடி அமைப்புகளின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதோடு தொடர்புடையது.
பகிர்வு:
உற்பத்தி காரணிகளின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் விளைவாகும்.
9.
1. உணவு உடை வீட்டுப்பொருட்கள் போன்றவற்றை அதிகம் உற்பத்தி செய்வதா? அல்லது ஆடம்பர பண்டங்களை அதிகம் உற்பத்தி செய்வதா?
2. விவசாயப் பொருட்களையா? அல்லது தொழிற்சாலைப் பண்டங்களையா?
3. வளங்களை, அதிகமாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பயன்படுத்துவதா? அல்லது ராணுவப் பணிகளுக்கு பயன்படுத்துவதா?
4. நுகர்பண்டங்களை அதிகம் வைத்துக்கொள்வதா?அல்லது முதலீட்டு பண்டங்களை வைத்துக்கொள்வதா?
5. அடிப்படைக் கல்விக்கு அதிகம் செலவு செய்வதா? அல்லது உயர்கல்விக்கு அதிகம் செலவு செய்வதா?
10.
பொருளியல் என்பது "விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையான சாதனங்களோடும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளைப் பற்றி படிக்கும் ஓர் அறிவியலே "ஆகும் என இலயனல் ராபின்ஸ கூறியுள்ளார்.
ராபின்ஸ் இலக்கணத்தின் முக்கிய சிறப்புயல்புகள் :
1. மனித விருப்பங்கள் எண்ணற்றவை.
2. மனிதனின் எல்லையற்ற தேவைகளை பூர்த்தி செய்யும் வளங்களின் அளிப்பு பற்றாக் குறையாக உள்ளன.
3. பற்றாக்குறையான வளங்கள் மாற்று வழிகளில் பயன்தரக்கூடியவையாக உள்ளன.
திறனாய்வு:
1. ராபின்ஸ் மனிதர்களுக்கு நலன் தரக்கூடிய பொருட்கள் அல்லது நலன்தரா பொருட்கள் என்று தரம் பிரிக்கவில்லை.
2. அரிசியை உற்பத்தி செய்வதால் மனிதனின் நலன் மேம்படுகிறது.
3. பொருளியல் என்பது நுண்ணியப் பொருளியில் மட்டுமல்லாமல் பேரியல் பொருளாதார நிகழ்வுகளான தேசிய வருமானம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதையும் உள்ளடக்கியது.
4. இவ்விலக்கணமானது பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கவில்லை.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards