11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/08/2019
அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
முற்றுரிமை அங்காடிக்கு எடுத்துக்காட்டு ________
மின்சார வாரியம்
LIC
வங்கி
சிமெண்ட் ஆலை
2.
சில்லோர் முற்றுரிமை அங்காடி _______ அங்காடியின் ஒரு வகையாகும்.
நிறைவுப்போட்டி
முற்றுரிமை
முற்றுரிமைப் போட்டி
நிறைகுறைப் போட்டி
3.
பலவிதமான விலைகளை பல்வேறு நபர்களிடம் பெறுவது ________ ஆகும்.
தனிநபர் பேதம்
இட பேதம்
பயன் அடிப்படையில் பேதம்
மேற்கூறிய அனைத்தும்
4.
நிறைகுறைப் போட்டியை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ________ அறிமுகப்படுத்தினார்.
திருமதி.ஜான் ராபின்சன்
E.H.சேம்பர்ஸின்
மார்ஷல்
ஆடம் ஸ்மித்
5.
MC = MR என்பது
விலை
சமநிலை
தேவை
வருவாய்
6.
உலக அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளை பரிமாற்றம் செய்யும் அங்காடி ________
உள்ளூர் அங்காடி
மாகாண அங்காடி
தேசிய அங்காடி
பன்னாட்டு அங்காடி
7.
விற்பனை செலவிற்கு உதாரணம்
கச்சாப்பொருள் விலை
போக்குவரத்துச் செலவு
விளம்பர செலவு
கொள்முதல் செலவு
8.
விலை தலைமை அம்சம் கொண்டது
நிறைவு போட்டி
முற்றுரிமை
சில்லோர் முற்றுரிமை
முற்றுரிமையாளர் போட்டி
9.
விலையின் மற்றொரு பெயர்______
சராசரி வருவாய்
இறுதிநிலை வருவாய்
மொத்த வருவாய்
சராசரி செலவு
10.
11.
முற்றுரிமைக்கு ஏதுவான சூழ்நிலைகள் யாவை?
12.
முற்றுரிமை போட்டி என்றால் என்ன?
13.
இடத்தை பொறுத்து அங்காடியின் வகைகள் யாவை?
14.
விலையை ஏற்பவர் யார்?
15.
“அங்காடி” வரையறு
16.
முற்றுரிமையின் போட்டியின் முக்கிய இயல்புகள் யாவை?
17.
வாங்குவோர் முற்றுரிமை (Monopsony) விளக்குக.
18.
விலைபேதம் காட்டுதலின் வகைகளை விளக்குக.
19.
இருவர் முற்றுரிமையின் இயல்புகள் யாவை?
20.
நிறுவனம் மற்றும் தொழிற்சாலைக்கு இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
21.
முற்றுரிமை போட்டியில் எவ்வாறு விலை மற்றும் உற்பத்தி அளவு தீர்மானிக்கப்படுகிறது?
22.
முற்றுரிமையின் போட்டியில் வீண் செலவுகள் யாவை?
23.
1.
(a)
மின்சார வாரியம்
2.
(c)
முற்றுரிமைப் போட்டி
3.
(a)
தனிநபர் பேதம்
4.
(a)
திருமதி.ஜான் ராபின்சன்
5.
(b)
சமநிலை
6.
(d)
பன்னாட்டு அங்காடி
7.
(c)
விளம்பர செலவு
8.
(c)
சில்லோர் முற்றுரிமை
9.
(a)
சராசரி வருவாய்
10.
(a)
11.
(i) இயற்கை முற்றுரிமை
(ii) அரசு முற்றுரிமை
(iii) சட்ட முற்றுரிமை
12.
(i) Mono என்ற சொல் ஒன்று, Poly என்ற சொல் விற்பதையும் குறிக்கும்.
(ii) முற்றுரிமை என்பது ஒரு பண்டத்தை அங்காடியில் ஒருவரே விற்பனை செய்வதாகும்.
(iii) முற்றுரிமை போட்டியில் நெருங்கிய பதிலீட்டு பண்டங்கள் கிடையாது.
13.
(i) உள்ளூர் அங்காடி
(ii) மாகாண அங்காடி
(iii) தேசிய அங்காடி
(iv) பன்னாட்டு அங்காடி
14.
(i) ஒரு நிறுவனம் தொழிற்சாலை நிர்ணயிக்கும் விலையை ஏற்றல் விலையை ஏற்பவர் எனப்படும்.
(ii) நிறைவு பேட்டி அங்காடியில் ஒரு நிறுவனம் விலை ஏற்பவராக உள்ளார்.
15.
(i) பொதுவாக 'அங்காடி' என்பது பொருள்கள் மற்றும் பணிகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் இடத்தை குறிக்கும்.
(ii) பொருளாதாரத்தில் 'அங்காடி'என்பது ஒரு பொருளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள பரிமாற்றம் முறையையேக் குறிக்கும்.
16.
முற்றுரிமையின் போட்டியின் முக்கிய இயல்புகள்:
(i) எண்ணற்ற வாங்குவோர் மற்றும் விற்போர்.
(ii) நிறுவனங்கள் விலை நிர்ணயிக்க முடியாமல் அவர்களே தங்கள் பண்டங்களுக்கு விலை நிர்ணயிப்பர்.
(iii) நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி செய்த பண்டங்களை மற்றவர்களின் பண்டங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முயற்சிப்பதே முற்றுரிமைப் போட்டியின் முக்கிய அம்சமாகும்.
(iv) தொழிலில் உள்ளே நுழைய மற்றும் வெளியேற நிறுவனங்களுக்கு தடையில்லை.
(v) ஒவ்வொரு நிறுவனமும் தன் உற்பத்தி பண்டத்தின் விற்பனையை அதிகரிக்க அதிக விற்பனை செலவை (Selling cost) மேற்கொள்கிறது.
(vi) விலை அல்லா போட்டி (Non price competition) ஒவ்வொரு நிறுவனமும் சுதந்திரமான விலைக் கொள்கையை பின்பற்றும்.
17.
(i) ஒரு அங்காடி அமைப்பில் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்க ஒருவரே இருப்பதால் அது வாங்குவோர் முற்றுரிமை எனப்படும்.
(ii) சில பண்டங்களுக்கு ஒருவரே வாடிக்கையாளராக இருப்பதால் அந்த அங்காடியில் வாங்குபவர் மிகுந்த சக்தியுடன் காணப்படுவார்.
(iii) முற்றுரிமையும், வாங்குபவர் முற்றிமையும் ஒரே மாதிரி இருந்தாலும், வாங்கும் முற்றுரிமையாளர் அங்காடியின் தேவை பக்கத்திலும், முற்றுரிமையாளர் அங்காடியில் அளிப்புப் பக்கத்திலும் ஆதிக்கத்துடன் இருப்பர்.
18.
விலைபேதம் காட்டுதல் மூன்று வகைப்படும்.அவை,
(i) தனிநபர் பேதம்
(ii) இட பேதம்
(iii) பயன் அடிப்படையில் பேதம்
(i) தனிநபர் பேதம்:
(1) பல விதமான விலைகளை பல்வேறு நபர்களிடம் பெறுவது.
(2) (உம்) இரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிப்பது.
(ii) இட பேதம் :
(1) ஒரே பொருளுக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு விலைகளை நிர்ணயித்தல்
(2) (உம்) ஒரு புத்தகத்திற்கு இந்தியாவிற்குள் ஒரு விலையும் அதே புத்தகத்திற்கு வெளிநாடுகளில் வேறு விலையும் பெறுவது.
(iii) பயன் அடிப்படையில் பேதம் :
(1) ஒரு பண்டத்தின் பயனின் அடிப்படையில் பல்வேறு விலைகள் பெறுதல்
(2) (உம்) தமிழ்நாடு மின்சார வாரியம் மின் நுகர்வை வீட்டிற்கு பயன்படுத்தினால் குறைந்த விலையும் அதே மின்சாரத்தை கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தினால் அதிக விலையும் வசூலிக்கிறது.
19.
(i) சில்லோர் முற்றுரிமையின் ஒரு சிறந்த கோட்பாடு இருவர் முற்றுரிமை.
(ii) இங்கு இரு விற்பனையாளர் இருப்பார்கள்.
(iii) இவ்விரு விற்பனையாளரும் தனித்தனியாகவும், அவர்களுக்கிடையே எவ்வித ஒப்பந்தமும் கிடையாது .
(iv) அவர்களே அவர்களுடைய பொருளுக்கு விலையை தீர்மானிப்பார்.
(v) அவர்கள் முறையற்ற கழுத்தறுக்கும் போட்டியில் ஈடுபடலாம்.
(vi) உற்பத்தி பண்டங்களுக்கு வேறுபாடு இல்லை.
20.
தொழில் :
(i) தொழில் என்பது ஒரு பொருளாதாரத்தில் ஒரே மாதிரியான பொருள் அல்லது பணியை உற்பத்தி செய்யக்கூடிய பல நிறுவனங்களின் தொகுப்பை அல்லது குழுவைக் குறிக்கும்.
நிறுவனம் :
(i) ஒரு நிறுவனம் என்பது ஒரு தொழிலில் இருக்கும் ஒற்றை உற்பத்தி அலகாகும்.
(ii) பொருள் அல்லது பணியை உற்பத்தி செய்து அதற்கு விலையை நிர்ணயித்து விற்பனை செய்வதை நிறுவனம் என்கிறோம்.
21.
முற்றுரிமை:
(i) முற்றுரிமையில் ஒரு விற்பனையாளர் ஒரே தன்மையான பொருளை விற்பனை செய்வதால் புது நிறுவனங்கள் உள்ளே நுழைவதற்கு தடைகள் உள்ளன.
(ii) இங்கு நெருங்கிய பதிலீட்டுப் பண்டம் கிடையாது.
முற்றுரிமையில் விலை மற்றும் உற்பத்தி நிர்ணயம் :
(i) முற்றுரிமையில் நிறுவனமே தொழிற்சாலையாகும்.
(ii) முற்றுரிமை நிறுவனம் கீழ்நோக்கி சரியும் தேவை வளைகோட்டை (AR) கொண்டுள்ளது.
(iii) இறுதிநிலை வருவாய் வளைகோடு (MR), AR வளைகோட்டிற்கு கீழ் அமைந்துள்ளது (MR < AR).
(iv) ஒரு முற்றுரிமையாளர் இறுதிநிலைச் செலவை விட இறுதிநிலை வருவாய் அதிகமாக இருக்கும் வரை MR > MC தொடர்ந்து உற்பத்தி செய்து விற்கின்றார்.
(v) இங்கு சமநிலை உற்பத்தியானது MC = MR ஆகும்.
(vi) சமநிலை புள்ளிக்கு மேல் உற்பத்தியாளர் நட்டம் ஏற்படும் என்பதை எதிர்பார்த்து விற்பனையை நிறுத்திக்கொள்வார்.
முற்றுரிமையில் விலை மற்றும் உற்பத்தி நிர்ணயம்
வரைபட விளக்கம் :
(i) X - அச்சில் உற்பத்தி அளவும், Y - அச்சில் செலவு / விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ii) மேற்காணும் வரைபடத்தின் படி 3 அலகு உற்பத்தி விற்பனை செய்யப்படுகிறது.
(iii) MR,MC யை விட அதிகமாக இருக்கும் வரை உற்பத்தி நடக்கும்.
(iv) முற்றுரிமை நிறுவனம் எவ்வாறு இலாபம் பெறுகிறது என்பதை பார்க்க சராசரி வருவாய் கோடு மற்றும் சராசரி செலவுக் கோட்டை பயன்படுத்தலாம்.
(v) சமநிலை உற்பத்தியானது 3 அலகிற்கு சராசரி வருவாய் ரூ 88/- ஆகும்.
(vi) சராசரி செலவு ரூ 50/-
∴ (88-50)=38 ஓர் அலகிற்கான இலாபம்.
(vii) மொத்த இலாபம் = (AR-AC) xமொத்த வெளியீடு
=(88-50)x3=38x3=114
எனவே மொத்த இலாபம் = 114.
22.
வீணாக்கப்பட்ட சக்தி :
(i) வீணாக்கப்பட்ட சக்தி என்பது உத்தம அளவு உற்பத்திக்கும் உண்மை அளவு உற்பத்திக்கும் உள்ள வேறுபாடாகும்.
(ii) நீண்ட காலத்தில் நிறுவனங்கள் குறைந்தளவு சராசரிச் செலவு இருந்தாலும் உத்தம அளவு உற்பத்தி விட வேண்டுமென்றே குறைந்த அளவு உற்பத்தி செய்கின்றன.
(iii) முற்றுரிமைப் போட்டியில் இந்த அளவு சக்தி வீணாக்கப்படுவதாகவே கருதப்படுகிறது.
வேலையின்மை:
(i) முற்றுரிமையாளர் போட்டியில் நிறுவனங்கள் உத்தம அளவை விட குறைவாக உற்பத்தி செய்வதால் வளங்களை முழுமையாக பயன்படுத்துவதில்லை.
(ii) உற்பத்தி திறன் முழுமையாக பயன்படுத்தபடுவதில்லை.
(iii) இதனால் மனிதர்களுக்கு வேலையின்மை ஏற்படுகிறது.
விளம்பரம் :
(i) முற்றுரிமை போட்டியில் போட்டியின் காரணத்தினால் விளம்பரத்திற்காக அதிகப் பணம் செலவிடப்படுகிறது.
(ii) வீண் விளம்பரங்களினால் நுகர்வோருக்கு விலை அதிகரிக்கிறது.
(iii) விளம்பரங்களில் உண்மையற்ற தகவல் மூலம் நுகர்வோர் ஏமாற்ற படுவதும் நடக்கிறது.
பல்வேறு விதமான பண்டங்கள்:
முற்றுரிமை போட்டியில் ஒரே பயனுக்கு பல்வேறு விதமான பண்டங்களை அறிமுகப்படுத்துவது மற்றொரு வீண் செலவாகும்.
செயல்திறன் குறைந்த நிறுவனங்கள்:
(i) முற்றுரிமை போட்டியில் சில செயல்திறன் குறைந்த நிறுவனங்கள் தமது இறுதிநிலைச் செலவை விட அதிக விலை வசூலிக்கின்றனர்.
(ii) நிறுவனங்கள் வெளியேற்றப்பட வேண்டும்,ஆனால் நுகர்வோர் பெரும்பாலும் உணர்ச்சி தூண்டுதலால் இத்தகைய நிறுவனப் பொருட்களை வாங்குவதால் திறமைக் குறைவான நிறுவனங்களை வெளியேற்ற முடிவதில்லை.
(iii) திறமையான நிறுவனங்கள் நுகர்வோரைக் கவரும் வகையில் விளம்பரம் செய்ய போதிய அளவு செலவு செய்வதில்லை இதனால் திறமைக் குறைவான நிறுவனங்களை வெளியேற்ற முடிவதில்லை.
23.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards