11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
11 Std Revision Test 2018-2019
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
________செயலி செய்திகளையும், புள்ளி விவரங்களையும் உருவாக்க ஒழுங்குற அமைக்க, அச்சிட மற்றும் தகவல்களை ஆவணமாக பாதுகாக்க உதவுகிறது.
MS Excel
MS word
MS power point
MS Document
2.
மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள மாநிலம் _________.
உத்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசம்
பீகார்
கேரளா
3.
ஒருவரிடம் உள்ள ஒரு பண்டத்தின் இருப்பு கூடுகின்றபொழுது ஒவ்வொரு கூடுதல் அலகிலிருந்தும் கிடைக்கும் பயன்பாடு_______.
அதிகரிக்கிறது
குறைகிறது
பெருக்குகிறது
எதுவுமில்லை
4.
SBLP தொடங்கப்பட்ட ஆண்டு _____
1992
1993
1994
1995
5.
அளிவியல் பொருளாதாரம் ________ படங்களை உள்ளடக்கியது ஆகும்.
கணிதம், அறிவியல்,பொருளியல்.
பொருளியல், வணிகவியல், கணிதம்.
புள்ளியியல், கணிதம், பொருளியல்.
புள்ளியியல்,அறிவியல், கணிதம்.
6.
சம உற்பத்தி செலவுக்கோடு _________ என்றும் அழைக்கப்படுகிறது.
சம உற்பத்திக்கோடு
சமநோக்கு உற்பத்திக்கோடு
இரண்டும் 'அ' மற்றும் 'ஆ'
எதுவுமில்லை
7.
தமிழ்நாட்டில் _______________ முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
8.
கடன் நிதியின் தேவை ____________காரணிகளைச் சார்ந்துள்ளது.
S+BM+DH+DI
S+BM+DH+DS
I+CH
S+M+I
9.
______ இரு விற்பனையாளர் இருக்கும் அங்காடியாகும்.
முற்றுரிமை
இருவர் முற்றுரிமை
சில்லோர் முற்றுரிமை
நிறைகுறைப் போட்டி
10.
தேவை நெகிழ்ச்சி ______________ உள்ள விகிதம் ஆகும்.
இறுதிநிலை தேவைச் சார்பிற்கும் வருவாய் சார்பிற்கும்
இறுதிநிலை தேவைச் சார்பிற்கும் சராசரி தேவைச் சார்பிற்கும்
நிலையான மற்றும் மாறும் வருவாய்
இறுதிநிலை தேவைச் சார்பிற்கும் மொத்த தேவைச் சர்ப்பிற்கும்
11.
1969-ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
10
12
14
16
12.
மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாட்டின் தரம்
2
4
6
7
13.
தொன்மை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் யார்?
ரிக்கார்டோ
கீன்ஸ்
மார்ஷல்
வாக்கர்
14.
15.
இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் __________ ஏற்படுத்தப்பட்டது.
மும்பை
சென்னை
காண்ட்லா
கொச்சி
16.
சராசரி உற்பத்தி குறையும்போது இறுதிநிலை உற்பத்தி
சராசரி உற்பத்தியை விட அதிகமாக இருக்கும்
சராசரி உற்பத்தியை விட குறைவாக இருக்கும்
அதிகரிக்கும்
அ மற்றும் இ
17.
18.
சராசரிச் செலவுக்கான வாய்ப்பாடு
AVC / Q
TC / Q
TVC / Q
AFC / Q
19.
சமநிலை விலை என்பது அந்த விலையில்
எல்லாம் விற்கப்படுகிறது
வாங்குபவர்கள் பணத்தை செலவிடுகின்றனர்
தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்
மிகைத்தேவை பூஜ்ஜியம்
20.
இறுதிநிலைப் பயன்பாடு பூஜ்யமாக இருக்கும் போது மொத்தப் பயன்பாடு ……….
குறைவாக
உச்சமாக
பூஜ்ஜியமாக
எதிர்மறையாக
21.
விளம்பரத் தேவை நெகிழ்ச்சி என்றால் என்ன?
22.
உற்பத்தி என்றால் என்ன?
23.
நீர்மை விருப்பக் கோட்பாட்டின் நோக்கங்கள் யாவை?
24.
விலை பேதம் காட்டுதல் என்றால் என்ன?
25.
நிதிப்பற்றாக்குறையின் நிர்ணயம் யாது?
26.
Y = 2x3 – 6x, எனில் \(\frac { dy }{ dx } \)ஐ காண்க.
27.
மனித மேம்பாமேம்பாட்டுக் குறியீட்டெண் (HDI) மற்றும் வாழ்க்கைத் தரக்குறியீட்டெண் (PQLI)- ஆகியவற்றை வேறுபடுத்துக.
28.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) - வரையறு.
29.
புதுப்பிக்கப்பட இயலாத ஆற்றல் வளங்கள் தருக.
30.
பண்டங்களை பணிகளிலிருந்து வேறுபடுத்துக
31.
14x1-2x2-2x3=0
20x1 - 4x2 + 2x3 = 16
12x1 + 6x2 - 4x3 = 14 என்ற சமன்பாடுகளின் தீர்வு காண்க.
32.
இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.
33.
சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.
34.
இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை நிறைகுறைப் போட்டியின் அடிப்படையில் விளக்குக.
35.
பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.
36.
வகைக்கெழு கணித முறையைப் பயன்படுத்தி தேவையின் சமன்பாடு P = 60 − 0.2Q ஆக இருக்கும்போது
(i) P = 0
(ii) P=20
(iii) P = 40 என்றால் தேவை நெகிழ்ச்சிக் கெழு மதிப்பு காண்.
37.
தமிழ்நாட்டின் பொதுதுத்துறை போக்குவரத்து முறையினை விளக்குக.
38.
39.
ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.
40.
இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.
41.
42.
அகச்சிக்கனக்ஙள் மற்றும் புறச்சிக்கனங்களை விவரி
43.
மொத்தச் செலவு = 10+Q3, Q = 5 எனில் AC, AVC, TFC, AFC ஆகியவற்றைக் கண்டுபிடி
44.
பொருளியலைப் பற்றிய பல்வேறு இலக்கணங்களை ஒப்பிட்டு வேறுபடுத்துக
45.
10x1 + 6x2 = 60
12 x1 - 4 x2 =16 என்ற அமைப்பின் தீர்வு காண்க.
46.
திருவள்ளுவரின் பொருளாதார சிந்தனை எழுதுக.
47.
மார்ஷல் நல இலக்கண வரையறையில் சிறப்பம்சங்களை விவரி.
48.
சம அளவு உற்பத்திக் கோட்டுத் தொகுதியின் வரைபடம் வரைந்து விளக்குக.
49.
தமிழ்நாட்டின் உயர்கல்வி பற்றி குறிப்பு வரைக?
50.
பசுமைப்புரட்சி - விளக்குக
51.
52.
MUDRA வங்கியின் நோக்கங்களை பட்டியலிடுக.
53.
உலக மயமாக்கல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரி
54.
வாய்ப்புச் செலவை எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.
1.
(b)
MS word
2.
(c)
பீகார்
3.
(b)
குறைகிறது
4.
(a)
1992
5.
(c)
புள்ளியியல், கணிதம், பொருளியல்.
6.
(c)
இரண்டும் 'அ' மற்றும் 'ஆ'
7.
(d)
நான்கு
8.
(c)
I+CH
9.
(b)
இருவர் முற்றுரிமை
10.
(b)
இறுதிநிலை தேவைச் சார்பிற்கும் சராசரி தேவைச் சார்பிற்கும்
11.
(c)
14
12.
(d)
7
13.
(a)
ரிக்கார்டோ
14.
(b)
15.
(c)
காண்ட்லா
16.
(b)
சராசரி உற்பத்தியை விட குறைவாக இருக்கும்
17.
(a)
18.
(b)
TC / Q
19.
(c)
தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்
20.
(b)
உச்சமாக
21.
1.விளம்பரத்தினாலோ (அல்லது) பிற வியாபாரத்தை உயர்த்தும் செலவுகளாலோ தேவையில் மாற்றம் ஏற்பட்டால் அதை விளம்பரத் தேவை நெகிழ்ச்சி என்று அழைக்கிறோம்.
2.
22.
(i) உற்பத்தி என்பது பல்வேறு வகையான இரு பொருட்களைப் பயன்படுத்தி இறுதிப் பொருட்களை உற்பத்தி செய்து நுகர்வுக்காக வழங்குதல் ஆகும்.
(ii) உற்பத்தி என்பது புதிதாக உருவாக்குதல் ஆகும்.
(iii) உற்பத்தி என்பது உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றுவது ஆகும்.
23.
24.
(i) விலை பேதம் காட்டும் முற்றுரிமை என்பது ஓரு பொருளுக்கு பல்வேறு வாடிக்கையாளரிடம் பல்வேறு விலையைப் பெறுவதாகும்.
(ii) விலையைப் பற்றிக் கண்டுக் கொள்ளாத நுகர்வோரிடம் அதிக விலை வசூலிக்கப்படும்.
25.
நிதிப்-பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று பன்னாட்டு பணநிதி நிர்ணயம் அறிவித்தது.
26.
Y = 2x3 – 6x
x ஐ பொருத்து ‘y’ யினை வகையிட
\(\frac { dy }{ dx } =2\left( 3 \right) { x }^{ 3-1 }-6\left( 1 \right) { x }^{ 1-1 }\)
\(-6{ x }^{ 2 }-6{ x }^{ 0 }\)
\(\frac { dy }{ dx } -6{ x }^{ 2 }-6\)
27.
| வ.எண் |
மனித மேம்பாட்டுக் குறியிட்டென்(HDI) |
வாழ்க்கைத் தரக்குறியீட்டென் (PQLI) |
|---|---|---|
| 1 | ஐக்கிய நாடுகள் முன்னேற திட்டம் (UNDP) வெளியிடப்பட்டது | ஒரு நாட்டின் வாழ்க்கைத்தரத்தினை அளவிடப் பயன்படுகிறது |
| 2 | இது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் கூறியடூ, கல்விக்குரியீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் அமைக்கப்பட்டது | இதில் எதிர்பார்ப்பு ஆயட்காலம் , குழந்தை இறப்பு வீதம், மற்றும் எழுத்தறிவு வீதம் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தினார். |
| 3 | பாகிஸ்தானின் பொருளியல் அறிஞர் மஹாபூப் உள் ஹக் என்பவரும் இந்தியாவை சார்ந்த அமர்த்திய குமார் சென் என்பவரும் இக்கோட்பாட்டை மேம்படுத்தினர் | மோரிஸ் டி மோரிஸ் என்வரால் உருவாக்கப்பட்டது |
28.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு மாநிலத்தின் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.
29.
1. மீண்டும் உருவாக்கப்பட முடியாத நிலைத்து இருக்க முடியாதவைகள் புதுப்பிக்கப்படஇயலாத ஆற்றல் வளங்கள் ஆகும்.
2.(எ.கா.) நிலக்கரி, பெட்ரோலியம், கனிமங்கள், படிம எரிபொருட்கள்
30.
| வ. எண் | பண்டங்கள் | பணிகள் |
| 1. | பண்டங்கள் உற்பத்தி செய்யப்படும். | பண்டங்களோடு சேர்த்து பணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு நுகரப்படுகின்றன. |
| 2. | பண்டங்களுக்கு உருவ அடையாளம் உண்டு | பணிகளுக்கு உருவ அடையாளம் இல்லை |
| 3. | பண்டங்கள் உரிமையாளரிடமிருந்து தனித்துக் காணப்படும். | பணிகளை உருவாக்குபவரிடமிருந்து பிரிக்க இயலாது. |
31.
கொடுக்கப்பட்ட அணி வடிவம் பின்வருமாறு,
\(\begin{bmatrix} 14 & -2 & -2 \\ 20 & -4 & 2 \\ 12 & 6 & -4 \end{bmatrix}\begin{bmatrix} { x }_{ 1 } \\ { x }_{ 2 } \\ { x }_{ 3 } \end{bmatrix}=\begin{bmatrix} 0 \\ 16 \\ 14 \end{bmatrix}\)
\(\triangle =\begin{bmatrix} 14 & -2 & -2 \\ 20 & -4 & 2 \\ 12 & 6 & -4 \end{bmatrix}\)
= 14 (+ 16 -12) - (-2) (-80-24) + (-2) (120 + 48)
= 14 (4) + 2 (-104) -336
= 56 - 208 - 336
\(\triangle \)= -488
\(\triangle x _1 =\begin{vmatrix} 0 & -2 & -2 \\ 16 & -4 & 2 \\ 14 & 6 & -4 \end{vmatrix}\)
= 0 (+ 16 -12) - (-2) (-64 -28) + (-2) (96 + 56)
= 0 (4) + 2 (-92) -2 (152)
= 0 -184 - 304
=-488
\(\therefore \triangle x_ 1=-488\)
\(\triangle x _2 =\begin{vmatrix} 14 &0 & -2 \\ 20 & 16 & 2 \\ 12 & 14 & -4 \end{vmatrix}\)
= 14 (-64 -28) -0 (-80 -24) + (-2) (280 - 192)
= 14 (-92) 0 -2(88)
=-1288-176
\(\therefore \triangle x_2=1464\)
\(\triangle x _3 =\begin{vmatrix} 14 & -2 & 0 \\ 20 & -4 & 16 \\ 12 & +6 & 14 \end{vmatrix}\)
= 14 (-56 -96)-(-2) (280 - 192)0 (120 + 48)
= 14(-152)+2(88)+0(168)
= - 2128 + 176 + 0
= -1952

\(\therefore x_1=1,x_2=3,x_3=4\)
32.
நம் நாட்டில் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் இயற்கை வளங்கள் ஆகும். அவை.
1.காடு
2. நீர்
3. கனிம வளங்கள்
4.ஆற்றல் சக்திகள் போன்றவை ஆகும்.
1.இந்தியா பெருவாரியான ஏழை மக்களை கொண்டுள்ளது.
2. இயற்கை நமக்கு பல்வேறு காலநிலை பாசனத்திற்கான பல்வேறு ஆறுகள், மின்சக்தி, அதிக கனிம வளங்கள்,காடுகள் மற்றும் பல்வேறு மண் வளங்களை அளிக்கிறது.
மண் வளம்:
1.இந்தியா மொத்த பரப்பளவில் 32.8 லட்சம் சதுர கிலோ மீட்டர் நில பரப்புடன் உலகில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
2.உலக நிலப்பரப்பில் 2.42% ஆகும்.
வன வளம்:
1.2007ம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியாவில் காடுகள் 69.09 மில்லியன் ஹெக்டர் அதாவது மொத்த நிலப்பரப்பில் 21.02%ஆகும்.
2.இதில் 8.35 மில்லியன் ஹெக்டர் அடர்ந்த காடுகள்,ஓரளவு அடர்ந்த காடுகள் மற்றும் 28.84மில்லியன் ஹெக்டேர் காடுகள் பரந்த வெளி காடுகள்.
முக்கியமான கனிம வளங்கள்:
(அ) இரும்புத்தாது:
1.இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமதமாக காணப்படுகிறது.
2.இருப்பு தாது 4630மில்லியன் டன் மற்றும் (மேக்னடைட் )இரும்புத்தாது 10619 மில்லியன் டன் அளவிற்கு இரும்புத்தாது நமது நாட்டில் இருப்பு உள்ளது.
3.ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
(ஆ)நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1.பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3.மேற்கு வாங்காளம், பீகார், மத்திய பிரதேசம்,மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக்கூடிய இடங்களாகும்.
(இ)அலுமினியத்தாது(பாக்சைட்):
1.பாக்சைட் அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2.கிழக்கு கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதில் அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
(ஈ) மைக்கா:
1.மைக்கா ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2.இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்காதான் உற்பத்தியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
3.பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
(உ)சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1.இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், படர்பூர், நாகர்காட்டிகா,காசிம்பூர் பள்ளியரியா, ருத்ராபூர் சிவசாகர் மார்ன் (அஸ்ஸாமின் அனேக இடங்கள்) காம்பே வளைகுடா, அங்கலேஸ்வர் மற்றும் காலோல் (குஜராத்தின் அனேக இடங்கள் ) ஆகியவை முக்கியமான எண்ணெய் வளங்கள் உள்ள இடங்களாகும்.
(ஊ) தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3.கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்ச்சூரில் ஹிட்டி தங்க வயல் சுரங்கத்திலும்ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
(எ)வைரம்:
1.UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2.அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும்,ஆந்திரபிரதேசத்தில் கர்னூல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுக்கையிலும் கிடைக்கிறது.
3. புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியூபடா மற்றும் பார்கர் மாவட்டம்,மாத்தூர் கிருஷ்ணா பகுதி, கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
(ஏ)ஆற்றல்:
நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும்.
33.
நுகர்வோர் சமநிலை:
1.நுகர்வார் தனது வருமானத்தின் முழுமையும் பண்டங்கள் வாங்க செலவிடுவதன் மூலம் அதிலிருந்து அதிகபட்ச திருப்தியைப் பெறுகின்ற புள்ளியே நுகர்வோர் சமநிலைப் புள்ளி ஆகும்.
2.சமநிலைக்கான நியதிகள்
\(\boxed{MRS_{xy}=P_x/P_y}\)

வரைபட விளக்கம்:
1.சமநோக்கு வளைகோட்டை அடி மட்டத்தில் வரவு செலவுக்கோடு தொடும் புள்ளியில் நுகர்வோர் சமநிலை அடைகிறார்.
2.AB என்ற வரவு செலவுக் கோடு IC3 என்னும் சமநோக்கு வளைகோட்டை T என்ற புள்ளியில் தொடுகிறது.
3.இந்த IC3 வளைகோடே அதிக அளவு திருப்தியைத் தரும் வளைகோடாகும்.
4.இந்த சமநிலைப் புள்ளியில் IC யின் சாய்வு (slope)MRSxy யைக் குறிக்கிறது.
5.வரவு செலவுக் கோட்டின் சாய்வு X மற்றும் Y ன் விலை விகிதத்தை குறிக்கிறது \(({P_x / P_y})\)
6.ஆகவே \(MRS_{xy}=({P_x / P_y})\)
34.
நிறைகுறைப் போட்டியில் இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாடு:
நிறைகுறைப் போட்டியில் காரணியின் விலை தீர்மானம் விளக்கப்பட்டுள்ளது. இதனை கீழ்க்கண்ட வரைபடம் விளக்குகிறது.
வரைபட விளக்கம்:
(i) AFC என்பது காரணியின் சராசரி செலவுக்கோடு, காரணிகளை வழங்கப்பட்ட விலையை குறிக்கிறது.
(ii) AFC உயரும்போது MFC ஆனது AFC க்கு மேலே மேல்நோக்கிச் செல்லும் கோடாக அமைந்துள்ளது.
(iii) MFC என்பது காரணிகளுக்கு வழங்கப்பட்ட இறுதிநிலைச் செலவை குறிக்கிறது.
(iv) Q என்ற புள்ளியில் MFC யும், MRP யும் சமநிலையில் உள்ளது.
(v) இப்புள்ளியில் உற்பத்தியாளர் அதிகபட்ச இலாபத்தைப் பெறுகிறார்.
(vi) காரணிக்கு செய்த சராசரி செலவு NR மற்றும் சராசரி வருவாய் NQ ஆகும்.
(vii) ஒவ்வொரு அலகு காரணியும் RQ அளவுக்கு சுரண்டப்படுகிறது.
(viii) மொத்த காரணிகளின் எண்ணிக்கை ON க்கு சமம்.
(ix) உற்பத்தியாளர் காரணியை மொத்தமாக சுரண்டிய அளவு.
(கோடிடப்பட்ட பகுதி)
(x) எனவே நிறைகுறைப் போட்டியில் சமநிலையில் உற்பத்திக் காரணி சுரண்டப்படுகிறது.
35.
(i) இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன.
(ii) வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவைகளாவன,
ரொக்க இருப்பு வீதம்:
(i) 1991ஆம் ஆண்டு நரசிம்மம் குழு பரிந்துரைப்படி, சட்டரீதியான நீர்மை விகிதம் மற்றும் ரொக்க இருப்பு வீதம் குறைக்கப்பட்டது.
(ii) SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
(iii) CRR விகிதத்தையும் 4 ஆண்டுகளில் 3.5% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வட்டி விகிதத் தளர்வு:
(i) வைப்புகளுக்கான வட்டி வீதம்.
(ii) வங்கிக் கடன்களுக்கான வட்டி போன்றவற்றை கட்டுப்படுத்தி வந்த இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தளர்த்தப்பட்டது.
(iii) பொதுத்துறை, தனியார்துறை மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கிடையேயான அதிகப்படியான போட்டியை சமாளிக்க நிர்வாகத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டன.
(iv) செயல்பாட்டிலிருக்கும் வங்கிகளின் வலையமைப்பை பரவலாக்க வங்கிக் கிளைகளுக்கான உரிமம் தளர்த்தப்பட்டது.
(v) புதிய கிளைகள் மற்றும் சிறப்புகிளைகளை திறக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டன.
(vi) புதிய தனியார் துறை வங்கிகள் தொடங்குவதற்கு வழிமுறைகள் வழங்கப்பட்டன.
(vii) வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பினை கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
36.
தேவை நெகிழ்ச்சிக் கெழு = η
\(ηd=\frac{dp}{dq}\)
p=60-0.2 Q
\(\frac{dp}{dq}= -0.2\)
\(\boxed { \eta d=\frac { -q }{ p } \frac { dp }{ dq } } \)
\(\eta d=\frac{+q}{60-2.0q}(+0.2)\)
=\(\frac{0.2q}{60-0.2q}\)
இதில் q=0 எனில்
\(= \frac{0.2(0)}{60-0.2(0)}=0\)
q=20 எனில்
\(\eta d=\frac{0.2(20)}{60-0.2(20)}\)
=\(\frac{4.0}{60-4}\)
\(\eta d=\frac{1}{14}\)
இதில் q=40 எனில்
\(\eta d=\frac{0.2(40)}{60-0.2(40)}\)
\(=\frac{8}{60-8}\)
\(\eta d=\frac{2}{13}\)
விடை :
| q | 0 | 20 | 40 |
| ባd | 0 | \(\frac{1}{14}\) | \(\frac{2}{13}\) |
37.
போக்குவரத்து:
(i) தமிழ்நாடு மிகச்சிறந்த மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளைக் கொண்டது.
(ii) அதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கிறது.
(iii) நாட்டிலுள்ள நகரங்கள், கிராமப்புறங்கள் மற்றும் வேளாண் அங்காடிப் பகுதிகளை இணைக்கக்கூடிய தரமான சாலைப் போக்குவரத்தைக் கொண்டுள்ளது.
சாலை வசதி:
(i) மாநிலத்தில் 28 தேசிய நெடுஞ்சாலைகள் 5,036 கிமீ தொலைவினை இணைக்கிறது.
(ii) சென்னையிலுள்ள கோயம்பேடு மற்றும் ஈரோடு மத்தியப் பேருந்து நிலையங்கள் நம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையங்களாகும்.
(iii) தமிழ்நாட்டின் மொத்த சாலை நீளம் 1,67,000 கிமீ ஆகும்.
(iv) இதில் 60,628 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது.
(v) சாலை போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இரயில் போக்குவரத்து:
(i) தென்னக இரயில்வே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா, ஆந்திராவின் சில பகுதிகளை உள்ளடக்கியது.
(ii) தமிழ்நாட்டில் உள்ள இருப்புப்பாதையின் மொத்த நீளம் 6693 கி.மீ. ஆகும்.
(iii) 690 இரயில் நிலையங்கள் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.
வான்வழிப்போக்குவரத்து:
(i) தமிழ்நாட்டில் நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மும்பை மற்றும் தில்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக சென்னை விளங்குகிறது.
(ii) சர்வதேச விமான நிலையங்கள், கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
(iii) இத்துறையின் தொடர் வளர்ச்சியின் மூலம் பயணிகள் போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்தும் உன்னத வளர்ச்சி அடைந்துள்ளது.
38.
39.
(1) ஊரக ஒரு நிறுவனம்:
கிராமம் என்பது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு ஊரக சமுதாயத்தின் அணைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
(2) வேளாண்மையை சார்ந்திருத்தல்:
ஊரக பொருளாதாரம் இயற்கையையும் வேளாண் நடவடிக்கைகளையும் சார்ந்துள்ளது.
(3) ஊரக மக்களின் வாழ்க்கை முறை:
ஊரக மக்களின் வாழ்க்கை முறை மிக எளிமையானது. பொது பணிகளான கல்வி, வீடு, உடல்நலம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கி செயல்பாடு, சாலைகள் மற்றும் அங்காடி வசதிகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கிறது.
(4) மக்கள் தொகை அடர்த்தி:
ஒரு சதுர கி.மீ. நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை மக்கள் தொகை அடர்த்தி மிகவும் குறைவாகவும் வீடுகள் கிராமம் முழுக்க பரவிக் காணப்படுகிறது.
(5) வேலைவாய்ப்பு:
(i) வேலையின்மை, பருவகால வேலையின்மை மற்றும் குறை வேலையுடைமை ஆகியன கிராமப்புறங்களில் நிலவுகின்றன.
(ii) வேலையின்மை என்பது தொழிலாளர்கள், வேலை செய்ய தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது ஆகும்.
(6) வறுமை:
வறுமை என்பது அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாத நிலை.
(7) கடன் சுமைகள்:
(i) ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்கள் வறுமையும், குறைவேலையுடைமையும், விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்க நிலை குறை ஊதிய வேலை, பருவகால உற்பத்தி, குறைந்த அங்காடி வசதிகள் போன்றவைகளாகும்.
(ii) ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலேயே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டு செல்கின்றான்.
(8) ஊரக வருமானம்:
ஊரக பொருளாதாரம் ஊரக மக்களுக்கு போதுமான வருமானத்தை ஈட்டித்தரும் வேலைவாய்ப்புகளையோ, சுய வேலைவாய்ப்புகளையோ தர இயலவில்லை.
(9) சார்ந்திருத்தல்:
ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் நகரத்தில் வேலை செய்ய தமது குடும்ப நபர்களின் வருவாய் மற்றும் சமூக நிதி உதவிகளையும் பெருமளவு சார்ந்துள்ளனர்.
(10) இரட்டைத் தன்மை:
எதிரிடையான இரண்டு அம்சங்கள் நிலவுவதே இரட்டை தன்மை ஆகும்.
(11) ஏற்றத்தாழ்வு:
ஊரக பகுதிகளில் வருமானம், சொத்து மற்றும் செல்வம் ஆகியவற்றின் பகிர்வு ஊரக மக்களிடையே ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது.
(12) குடிப்பெயர்ச்சி:
(i) ஊரக மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி கிராமங்கலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயரும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
(ii) "இரட்டை நஞ்சாக்கல்" என சுமாசர் குறிப்பிடுகிறார். தற்போதைய வளர்ச்சி வகை முறை அபாயகரமானது என்று அவரின் சிறியது அழகு என்ற நூலில் விளக்குகிறார்.
40.
1. இரும்புத் தாது:
1. இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமிதமாகக் காணப்படுகிறது.
2. இரும்பு தாது 4630 மில்லியன் டன் மற்றும் மேக்னடைட் இரும்புத்தாது 10619 மில்லியன் இருப்பு உள்ளது.
3. ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
2.நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1. பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3. மேற்கு வங்காளம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக் கூடிய இடங்களாகும்.
3. அலுமினியத்தாது (பாக்சைட்):
1. பாக்சைட்- அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2. கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
4.மைக்கா:
1. மைகா ஒரு வெப்பத்தை தடுக்கும் தனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2. இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்கா தான் உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
3. பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
5. சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1. இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், பாடர்பூர், நகர்க்காட்டிகா, காசிம்பூர்,பள்ளியரியா, ரூத்ராபூர், சிவசாகர், மார்ன்.
6.தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3. கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்சசூரில் ஹட்டி தங்க வயல் சுரங்கத்திலும், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கிரி தங்க வயல் சுரங்கத்திலும் ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
7. வைரம்:
1. UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2. அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும், ஆந்திரபிரதேசத்தில் கர்னுல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுகையிலும் கிடைக்கிறது.
3.புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியுபடா பார்கர் மாவட்டம், மாத்தூர் கிருஷ்ணா பகுதி கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா பகுதி மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
41.
42.
பொருளாதார சிக்கனம்:
பொருளாதார சிக்கனம் என்பது உற்பத்திக்காரணங்களை பயன்படுத்தும் விகிதம் மாறுபடுவதால் வரும் நன்மையாகும்.
பொருளாதார சிக்கனம் இரு வகைப்படும்:
1. அகச் சிக்கனங்கள்
2. புறச் சிக்கனங்கள்
1. அகச் சிக்கனங்கள்:
1. அகச்சிக்கனம் என்பது நிறுவனம் பொருளின் உற்பத்தி செலவினை குறைந்து பெறும் நன்மையினை குறிக்கும்.
2. நிறுவனமானது புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதாலும் புதிய முதலீட்டை உருவாக்குவதாலும் உற்பத்தி செலவினை குறைக்கிறது.
(அ) தொழில்நுட்ப சிக்கனங்கள்:
1. தொழில் நுட்ப சிக்கனங்கள் என்பது நிறுவனத்தின் பெரிய அளவாக இருப்பதால் கிடைக்கும் மூலதனமும் அதிகமாக இருக்கும்.
2. ஒரு நிறுவனம் நவீன நுட்பங்களை புகுத்த முடியும்.
(ஆ) நிதிச் சிக்கனங்கள்:
பெரிய நிறுவனங்கள் சந்தையில் பங்கு விற்பனை மூலம் மூலதன பெருக்கத்தை ஏற்படுத்தலாம்.
(இ) மேலாண்மை சிக்கனங்கள்:
பேரளவு உற்பத்தி வேலைப்பகுப்பு முறைக்கு உதவுகிறது. இதன் மூலம் சரியான வேலையாட்கள் சரியான துறையில் இருப்பார்கள்.
(ஈ) உழைப்புச் சிக்கனங்கள்:
பேரளவு உற்பத்தி வேலை பகுப்பு முறைக்கு வழிவகுக்கிறது. சிறப்பு உழைப்பு எனலாம்.
(உ)சந்தை சார்ந்த சிக்கனங்கள்:
1. பேரளவு உற்பத்தியின் காரணமாக மூலப்பொருட்கள் குறைந்த விலைக்கு வாங்க இயலும்.
2. தொலைதூர சந்தையில் பொருட்களை விற்க முடியும்.
(ஊ) சந்தையில் தொடர்ந்திருப்பதன் சிக்கனங்கள்:
1. பெரிய நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யலாம்.
2. உற்பத்தி செய்யப்பட்ட ஒரு பொருளின் சந்தையில் தோல்வியுற்று இழப்பு நட்ட மேற்பட்டாலும் வேறொரு பொருளின் இலாபத்தினால் இழப்பினை ஈடு செய்ய முடியும்.
2. புறச்சிக்கனங்கள்:
அ. புறச் சிக்கனங்கள் என்பது நிறுவனத்திற்கு வெளியே ஏற்படும் மாற்றங்களால் உற்பத்தியின் முறைகளில் ஏற்படும் மேம்பாடுகளைக் குறிக்கும்.
ஆ. ஒரு நிறுவனம் மட்டும் பெறும் நன்மை அல்லாது அனைத்து நிறுவனங்களும் பெறும் நன்மை அல்லாது அனைத்து நிறுவனங்களும் பெறும் பயனாகும்.
இ. மேம்பட்ட போக்குவரத்து வசதிகள்.
ஈ. வங்கி செயல்பாடு சார்ந்த வசதிகள்.
உ. நகரியல் வளர்ச்சி.
ஊ. தகவல் மற்றும் தொலை தொடர்பு வளர்ச்சி.
43.
1.\(\boxed{TC=TFC+TVC}\)
TC=மொத்தச் செலவு,
TFC=மொத்த மாறாச் செலவு,
TVC=மொத்த மாறும் செலவு
\(\boxed{AVC={TVC\over Q}}\)
\(\boxed{AFC={TFC\over Q}}\)
AVC=சராசரி மாறும் செலவு
Q=உற்பத்தி
AFC=சராசரி மாறாச் செலவு
AC= சராசரி செலவு
மொத்த செலவு =10+Q3,Q=5 எனில்
மொத்தச் செலவு =10+(5)3
=10+125

2. மொத்தச் செலவில் இரண்டு செலவுகள் உள்ளடங்கியுள்ளது. அவை,
3. மொத்த மாறும் செலவு மற்றும் மொத்த மாறாச் செலவு ஆகும்.
4. மொத்த மாறாச் செலவு உற்பத்தி அதிகரித்தாலும் குறைந்தாலும், புஜ்ஜியமாக இருந்தாலும் மாறாது.
எனவே, TC=10+Q3
5. இங்கு மொத்த மாறாச் செலவு 10 ஆகும்
TC=135,TFC = 10 TVC =?
135 =10+TVC
135 - 10 = TVC
\(\boxed{\therefore 125= TVC}\) மொத்த மாறும் செலவு
TVC = 125, TC = 135, TFC = 10, Q = 5

\(\boxed{\therefore AVC=25}\) சராசரி மாறும் செலவு
\(AFC={TFC\over Q}\) TFC= 10, Q=5

\(\boxed{\therefore AFC=2}\) சராசரி மாறாச் செலவு
\(AC={TC\over Q}\) TC= 135, Q=5

\(\boxed{\therefore AC=27}\) சராசரி செலவு
AC = AFC+AVC
AC = 2 +25
\(\boxed{\therefore AC=27}\) ஆகும்.
44.
1. ஆடம்ஸ்மித்தின் செல்வ இலக்கணம்:
1. பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல் என்று வரையறுத்துள்ளார்.
2. சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தனது சுய நன்மைக்காகவும், இலாபத்தை முன்னேற்றவும் உழைக்கின்றான் என்று கூறுகிறார்.
2. நல இலக்கணம்: ஆல்ஃபிரட் மார்ஷல்:
1. பொருளியல் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கையை படிப்பதும், பொருள்சார் நலனை அடைவதின் பொருட்டு தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் செயல்பாட்டை குறித்து ஆராய்வதும் ஆகும்.
2. பொருளியல், ஒருபுறம் செல்வத்தை பற்றியும் மறுபுறம் மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது.
3. பற்றாக்குறை இலக்கணம்: இலயனல் இராபின்ஸ்:
1. பொருளியல் என்பது விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையான சாதனங்களோடும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளைப் பற்றி படிக்கும் ஓர் அறிவியலே ஆகும்.
2. மனிதர்களின் எல்லையற்ற தேவைகளை பூர்த்தி செய்யும் வளங்களின் அளிப்புகள் பற்றாக்குறையாக உள்ளன என்பதை இந்த இலக்கணம் கூறுகிறது.
4. வளர்ச்சி இலக்கணம்: சாமுவேல்சன்:
பொருளியில் என்பது "மனிதனும், சமுதாயமும் பணத்தை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ, மாற்று வழிகளில் பயன்படக்கூய பற்றாக்குறையான வளங்களைக் கொண்டு பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்து, அவற்றை தற்காலத்திலும், எதிர்காலத்திலும் மக்களுக்கிடையேயும் சமுதாயக் குழுக்களுக்கிடையேயும் நுகர்விற்காக எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை தெரிவு செய்யும் இயலாகும்".என வரையறை செய்கிறார்.
45.
சமன்பாடுகளின் கெழு மற்றும் மாறிலி உறுப்புகள் பின்வருமாறு தரப்படுகின்றன.
\(\triangle =\)\(\begin{vmatrix} 10 & 6 \\ 12 & -4 \end{vmatrix}\)
=-40-72
=-112
\(\triangle x_1 =\)\(\begin{vmatrix} 60 & 6 \\ 16 & -4 \end{vmatrix}\)
=-240-96
\(\therefore \triangle x_1 =\) -336
\(\triangle x_2 =\)\(\begin{vmatrix} 10 & 60 \\ 12 & 16 \end{vmatrix}\)
=160-720
\(\boxed {\triangle x_2 =-560}\)
\(\triangle x_1 ={\triangle x_ 1\over \triangle}\)

\(\boxed {\therefore x_1 =3}\)
\( x_2 ={\triangle x_ 2\over \triangle}\)

x2=+5
\(\boxed {\therefore \triangle x_1 =3,x_=5}\)
46.
பொது நிதி:
திருவள்ளுவர் பொதுநிதி பற்றி பொது வருவாய்,பொதுச்செலவு, நிதி நிர்வாகம் ஆகிய தலைப்பில் விரிவாக எழுதியிருக்கிறார்.
1.வருவாய் உருவாக்குதல்.
2.வருவாயை சேகரித்தல்.
3.வருவாய் நிர்வாகம்
4.பொதுச் செலவு பற்றியெல்லாம் குறிப்பிடுகிறார்.
47.
1.அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கும் முதலும், முடிவுமாக செல்வமே என்று கருதப்படவில்லை மாறாக மனித நலத்தை மேம்படுத்த முயல்கிறான்.
2. பொருளியல் சாதாரண மனிதனின் நடத்தையைப் பற்றியதே, அவர்கள் சாதாரண அன்பினால் கட்டுப்பட்டவர்களேயன்றி,உச்ச பட்ச பணம் பெறுவதை நோக்கிச் செல்பவர்கள் அல்லர்.
3. பொருளியல் ஓர் சமூக அறிவியலாகும்.அது சமுதாயத்தில் ஒருவர் மற்றொருவர் மீது செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றிய படிக்கிறது.
48.
1.சம அளவு உற்பத்திக் கோட்டுத் தொகுதி என்பது உற்பத்திக் காரணிகளின் பல்வேறு இணைப்பில் உள்ள பல சம அளவு உற்பத்தி கோடுகளின் தொகுதி ஆகும்.
2. ஒவ்வொரு சமநோக்கு வளைகோடும் வேறுபட்ட உற்பத்தியைக் கொண்டவை.
3.சுருங்கக்கூறின் சமநோக்கு வளைகோட்டின் குடும்பம் சம அளவு உற்பத்தி வரைபடமாகும்.
சம அளவு உற்பத்திக் கோட்டுத் தொகுதி

4. சம அளவு உற்பத்திக் கோடு மேலேச் செல்ல செல்ல அதிக உற்பத்தியையும், கீழேச் செல்ல செல்ல குறைந்த அளவு உற்பத்தியையும் கொடுக்கும்.
5. வரைபடத்தில் x-அச்சு உழைப்பையும்,y-அச்சு மூலதனத்தையும் குறிக்கிறது.
6.ஒன்றுக்கு மேற்பட்ட பல சம அளவு உற்பத்திக் கோடுகள் இருந்தால் அது சம அளவு உற்பத்திக் கோட்டுத்தொகுதி எனப்படும்.
49.
(i) உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து பிற மாநிலங்களைக் காட்டிலும் முதன்மை பெற்று முதலிடத்தில் உள்ளது.
(ii) தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை வீதமான (GER) 46.9% அனைத்து மாநிலங்களின் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.
(iii) தமிழ்நாட்டில் 59 பல்கலைக் கழகங்களும், 40 மருத்துவ கல்லூரிகளும், 517 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.
(iv) 2260 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 447 பல்தொழில்நுட்ப கல்லூரிகளும், 20 பல் மருத்துவக்கல்லுரிகளும் உள்ளது.
(v) ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து 4 இலட்சம் பொறியியல் மற்றும் பல்தொழில்நுட்பம் பயில்கின்ற மாணவர்கள் வெளியேறுகின்றனர்.
50.
(i) பசுமைப்புரட்சி என்பது வேளாண் துறை தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு திருப்புமுனையாக அமைந்தது
(ii) 1960 க்கு பிறகு பாரம்பரிய வேளாண் முறைகள் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு புதிய தொழில் நுட்பத்தை வேளாண் முறைகள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டன.
(iii) ஆரம்பமாகா 1960 -61 ல் ஏழு மாவட்டங்களில் ''வழிநடத்தும் திட்டம் புதிய தொழில் நுட்பத்தை வேளாண் துறையில் பயன்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது
(iv) அதிக விளைச்சல் தரும் ரகங்களைஉற்பத்தி செய்வதற்கான திட்டம் (HYVP)
51.
52.
(i) குறுங்கடன் வாங்குபவரையும், பெறுபவரையும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் குறுங்கடன் வழங்குவதில் நிலைத்த தன்மையை ஏற்படுத்தல்.
(ii) சிறு தொழில் புரிபவர்கள், சில்லறை வியாபாரிகள் சுய உதவிக்குழுக்கள் தனிநபர்களுக்கு நிதி மற்றும் கடன் வசதியை ஏற்படுத்தி தருதல்.
(iii) அனைத்து சிறு நிதி வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல் செயல்பாடுகளை தரம் நிர்ணயம் செய்தல் மற்றும் முறையான ஒப்புதல் வழங்குதல்.
(iv)சிறு தொழில்களை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் மூலதனத்தை மேற்பார்வையிடல் ஆகியவற்றுக்கு பொருத்தமான தொழில்நுட்ப உதவிகளை அறிமுகப்படுத்தல்.
(v) கடன் வழங்குதல், கடன் பெறுதல் மற்றும் பகிர்ந்தளிக்கப்படும் மூலதனத்தை மேற்பார்வையிடல் ஆகியவற்றிற்கு பொருத்தமான தொழில்நுட்ப உதவிகளை அறிமுகப்படுத்துதல்.
53.
(i) சுங்க வரிக்குறைப்பு மற்றும் சுங்கவரித் தவிர்ப்பு போன்ற செயல்பாடுகளின் மூலம் இறக்குமதியை எளிமைப்படுத்துதல்.
(ii) அயல்நாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் அயல்நாட்டு தொகுப்பு முதலீடுகளுக்கான (FPI) கதவுகளைத் திறந்து வைப்பது போன்ற ஒரு சில நடவடிக்கைகள் உலகமயமாக்குதலின் அளவீடுகள் ஆகும்.
54.
1. பிறவாய்ப்பு செலவு என்பது அடுத்த சிறந்த மாறுபட்ட செலவைக் குறிக்கும்.
2. ஒரு பண்டத்தின் சிறந்த பயன்பாடு தேந்தெடுக்கப்படுவதால் அதனுடைய அடுத்த சிறந்த பயன்பாடு விட்டுக் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
3. எடுத்துக்காட்டாக, ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் நெல் சாகுபடி செய்தால், நெல்லின் வாய்ப்புச் செலவு யாதெனில் விட்டுத்தந்த கரும்பு உற்பத்தியின் அளவே ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards