11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
இந்தியாவின் கள்ளிக்க்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்
1498
1948
1489
1849
2.
3.
பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம்
கோயம்புத்தூர்
திருப்பூர்
ஈரோடு
கரூர்
4.
ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுக
வேளாண்மை சாரா வேலையின்மை
அதிக வேலை நிலை
குறைந்த பணவீக்க வீதம்
அதிக முதலீடு
5.
GST யில் அதிகபட்ச வரிவிதிப்பு_______ ஆகும். (ஜீலை 1, 2017 –நாளின்படி)
18%
24%
28%
32%
6.
FPI என்பதன் விரிவாக்கம்
வெளிநாட்டு தனியார் முதலீடு
வெளிநாட்டு தொகுப்பு முதலீடு
வெளிநாட்டு நேரடி முதலீடு
வெளிநாட்டு செலாவணி தனியார் முதலீடு
7.
முதன்மை உற்பத்திக் காரணிகளாவன
உழைப்பு மற்றும் தொழிலமைப்பு
உழைப்பு மற்றும் மூலதனம்
நிலம் மற்றும் மூலதனம்
நிலம் மற்றும் உழைப்பு
8.
சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு
TC / Q
TVC / Q
TFC / Q
TAC / Q
9.
நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்?
ஆடம் ஸ்மித்
மார்ஷல்
ராபின்ஸ்
ரிக்கார்டோ
10.
இலாபம் என்றால் என்ன?
11.
பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள் யாவை?
12.
ஊரக ஏழ்மை – வரையறு.
13.
உபரி சக்தி – விளக்குக
14.
உழைப்பு – வரையறு
15.
வெளியுறு செலவு - வரையறு.
16.
விருப்பங்களை வகைப்படுத்து.
17.
பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக
18.
கடன்நிதி வட்டிக் கோட்பாட்டை விளக்குக.
19.
20.
சம இறுதிநிலை பயன்பாட்டு விதியை விளக்குக.
21.
22.
தமிழ்நாட்டின் கனிம வளங்கள் - குறிப்பு வரைக.
23.
PQLI என்றால் என்ன?
24.
SHG யின் பண்புகளைக் கூறுக
25.
உலக மயமாக்கல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரி
26.
பொருளாதார முன்னேற்றம் – வரையறு.
1.
(a)
1498
2.
(b)
3.
(b)
திருப்பூர்
4.
(a)
வேளாண்மை சாரா வேலையின்மை
5.
(c)
28%
6.
(c)
வெளிநாட்டு நேரடி முதலீடு
7.
(d)
நிலம் மற்றும் உழைப்பு
8.
(b)
TVC / Q
9.
(b)
மார்ஷல்
10.
தொழில்முனைவோரின் தொழில் திறமையைப் பயன்படுத்துவதற்கான வெகுமதி இலாபம் ஆகும்.
11.
(i) இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது
(ii) 2012 ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15% ஆக குறைக்கும் குறிக்கோள்களை கொண்டடிருந்தது
12.
(i) கிராமங்களில் காணப்படும் வறுமையை ஊரக ஏழ்மை எனலாம்.
(ii) ஏழ்மை என்பது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வருமானத்தை ஈட்ட முடியாத நிலையாகும்.
13.
உபரி சக்தி என்பது உத்தம அளவு உற்பத்திக்கும், உண்மை உற்பத்திக்கும் உள்ள வேறுபாடாகும்.
14.
மார்ஷலின் கூற்றுப்படி, உழைப்பு என்பது உற்பத்தி காரணியான உழைப்பாளர் வருமானம் ஈட்டுவதற்காக தனது உழைப்புச் சக்தியைப் பயன்படுத்துவதாகும்.
15.
1. உற்பத்திக் காரணிகளை வாங்க மற்றவர்களுக்கு செலுத்தும் செலுத்துகையே வெளிப்படையான செலவு எனப்படும்.
2. வெளிப்படையான செலவு என்பது கணக்கியல் செலவு (அ) வெளிச்செலவு (அ) பணச் செலவு என்றும் அழைக்கப்படும்.
16.
விருப்பங்களில் வகைகள் மூன்று.
1. இன்றியமையாத விருப்பம்.
2. வசதிக்கான விருப்பம்.
3. ஆடம்பரத்திற்கான விருப்பம்.
17.
பகுத்தாய்வு முறை என்பது முழுமை தொகுதியினை பற்றிய கருத்தின் அடிப்படையில் அதன் தனி அலகு ஒன்றினைப் பற்றி கருத்துக் கூறுவதாகும்.
18.
(i) கடன் நிதிக்கோட்பாடு, புதிய தொன்மைக்கோட்பாடு எனவும் அழைக்கப்படுகிறது
(ii) பொருளியல் வல்லுநர்கள் விக்செல் பெர்டில் ஓலின் வைனர் மற்றும் குன்னர் மிர்தால் ஆகியோர் மேம்படுத்தினார்.
(iii) கடன் அங்காடியில் கடன் நிதியின் தேவை மற்றும் அளிப்பின் சமநிலைப்புள்ளியில் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.
கடன் நிதிகளின் தேவை:
(i) முதலீட்டுத் தேவை
(ii) நுகர்வுத் தேவை
(iii) பதுக்குவதற்கான தேவை
கடன் நிதியின் அளிப்பு
(i) சேமிப்பு
(ii) வங்கிக்கடன்
(iii) பதுக்கியதை மீட்டல்
(iv) முதலீடு செய்யாதிருத்தல்
சமநிலை:
தேவை மற்றும் அளிப்பின் சமநிலையில் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.
கடன் நிதிகளின் அளிப்பு =சேமிப்பு +வங்கிக்கடன்(BC)+பதுக்கியது மீட்டல் (DH)+முதலீடு செய்யாதிருத்தல்
=S+BC+DH+DI
கடன் நிதிகளின் தேவை =முதலீடு (I) +நுகர்வு (C) +பதுக்குதல்(H )
=I+C+H
வரைபட விளக்கம்:
(i) x அச்சில் கடன்நிதிகளின் தேவை மற்றும் அளிப்பு குறிக்கப்படுகின்றன. y அச்சில் வட்டி விகிதம் குறிக்கப்படுகிறது. IS கொடு மொத்த கடன் நிதிகளின் அளிப்பு கோடாகும். இது சேமிப்புக்கொடு (S) வங்கி கடன்கோடு(BC) பாதுக்காதிருத்தல் கோடு (DH) மற்றும் முதலீடு செய்யாதிருத்தல் கோடு(DI) ஆகியவற்றின் ஒட்டு மொத்தமே ஆகும்.
(ii) இந்த LD கோடு LS கோடும் E என்ற புள்ளியில் வெட்டி கொள்கின்றன.
(iii) இது சமநிலைப்புள்ளி ஆகும்.
(iv) இந்த புள்ளியில் வட்டி விகிதம் OR கடன் நிதிகளின் அளவு OM.
குறைபாடு:
(i) வட்டி வீதத்தினை நிர்ணயிக்கும் பல காரணிகள் இங்கு சேர்க்கப்பட்டு உள்ளன. ஆனாலும் சரியான செய்திப் பரவலின்மை, ஒழுக்கக் கோடுகள் போன்ற காரணிகள் இன்று மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
(ii) வருமான அளவை முன்கூட்டியே தெரியாமல் கடன்நிதிக்கோட்பாட்டை தீர்மானிக்க இயலாது.
(iii) உண்மை காரணிகளை சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றை பணம் சார்ந்த காரணியான வங்கிக்கடன் நீர்மை விருப்பம் ஆகியவற்றின் தொடர்புபடுத்துவது கடினம் .
19.
20.
சம இறுதிநிலை பயன்பாட்டு விதி:
1. குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதியானது விரிவாக்கப்படு சமஇறுதிநிலை பயன்பாட்டு விதியாக உருவானது.
2. இவ்விதி பதிலீட்டு விதி நுகர்வோரின் சமநிலை விதி காசனின் "இரண்டாம் விதி " மற்றும் "உச்ச பட்ச திருப்தி விதி "என்றும் அழைக்கப்படுகிறது.
வரையறை:
மார்ஷலின் கூற்றுப்படி, ஒரு மனிதன் பல வகையிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளைப் பெற்றிருந்தால் அதன் பலவகைப் பயன்களிடையே பகிர்ந்தளிக்கும்போது அதன் பயன்களில் இறுதிநிலைப் பயன்பாடு ஒரே அளவில் சமமாய் இருக்கும்படி பகிர்ந்தளிப்பார், ஒன்றை விட மற்றொன்றில் அதிக இறுதிநிலைப் பயன்பாடு கிடைக்குமெனில் அவர் அதிகப்பயன் பெறும் நோக்கில் குறைந்த பயன்தரும் பொருளுக்கு மாற்றிவிடுவார்.
அனுமானங்கள்:
1. திருப்தியை அதிகப்படுத்த விரும்பக் கூடிய பகுத்தறிவாளராக இருக்க வேண்டும்.
2. பண்டத்தின் பயன்பாடு எண்ணளவில் அளவிடப்பட வேண்டும்.
3. பணத்தின் இறுதிநிலைப் பயன்பாட்டில் மாற்றமில்லை.
4. நுகர்வோரின் வருமானம் வரையறுக்கப்பட்டது.
5. சந்தையில் நிறைவுப் போட்டி நிலவுகிறது.
6. பண்டங்களின் விலைகள் வரையறுக்கப்பட்டது.
7. குறைந்த செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி செயல்படுகிறது.
விளக்கம்:
1. ஆப்பிள் மற்றும் அரஞ்சு என்று இரு பண்டங்களில் தன் வரையறுக்கப்பட்ட வருமானத்தை ஒரு நுகர்வோர் செலவிட விரும்புகிறார் என்று எடுத்துக் கொள்வோம்.
2. அவரின் வரையறுக்கப்பட்ட வருமானத்தில் அதிக திருப்தியை பெறக்கூடிய நிலையில் அவர் சமநிலையை அடைவார்.

\({MU_A \over P_A}={MU_o \over P_o}=k\)
3. அவர் அந்த முழுத் தொகையையும் ஆப்பிளுக்காகவும் ஆரஞ்சுக்காகவும் செலவிட விரும்புகிறார்.
4. ஆப்பிளின் விலையும் Rs. 1 :ஆரஞ்சின் விலையும் Rs. 1 ஆக இருக்கிறது.
5. இங்கு \(={MU_A \over P_A}={MU_o \over P_o}\)எனவே \({4\over1}={4\over1}\)
| பண்டங்கள் எண்ணிக்கை |
ஆப்பிள் மொத்த பயன்பாடு |
இறுதிநிலைப் பயன்பாடு |
ஆரஞ்சு மொத்த பயன்பாடு |
இறுதிநிலைப் பயன்பாடு |
| 1 | 25 | 25 | 30 | 30 |
| 2 | 45 | 20 | 41 | 11 |
| 3 | 63 | 18 | 49 | 8 |
| 4 | 78 | 15 | 54 | 5 |
| 5 | 88 | 10 | 58 | 4 |
| 6 | 92 | 4 | 61 | 3 |

வரைபட விளக்கம்:
1. X-அச்சில் செலவின் அளவும், Y- அச்சில் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சின் இறுதிநிலைப் பயன்பாட்டையும் குறிப்பிடுகிறோம்.
2. நுகர்வோர் ஆப்பிளுக்கான ம் Rs. 6ம், ஆரஞ்சுக்காக Rs. 5ம் செலவிடுகிறார் எனக் கொண்டால், இரண்டின் இறுதிநிலைப் பயன்பாடும் சமமாக இருக்கும்.
3. ஆகவே அவர் உச்ச பயன்பாட்டினை பெறுகிறார்.
21.
22.
(i) டைட்டானியம், லிக்னைட், மேக்னசைட், கிராபைட் லைம்ஸ்டோன், கிரானைட், பாக்சைட் போன்ற சுரங்கத் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன.
(ii) நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் ஒரு முன்னோடி திட்டம் எனலாம்.
(iii) இதன் வளர்ச்சியால் அனல்மின்நிலையம், உரதொழிற்சாலை, கார்பன் சார்ந்த தொழில்கள் வளர்ந்து வருகின்றன.
(iv) சேலத்தில் மாங்கனீசு சுரங்கமும், கஞ்சமலையில் இரும்புத்தாது சுரங்கமும் அமைந்துள்ளன.
(v) மாலிப்டினம் எனும் இராசாயனத்தாது இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில் கரடிக்குட்டம் என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது.
23.
(i) வாழ்க்கைத்தரக் குறியீட்டெண்ணை (PQLI) மோரிஸ் டி மோரிஸ் உருவாக்கினர்.
(ii) ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரத்தினை அளவிடப் பயன்படுகிறது.இதற்காக அவர் எதிர்பார்ப்பு ஆயுட்காலம், குழந்தை இறப்பு விதம் மற்றும் எழுத்தறிவு வீதம் போன்ற குறியீடுகளை பயன்படுத்தினர்.
(iii) ஒவ்வொரு குறியீட்டெண்ணின் அளவும் 1லிருந்து 100 வரையிலான எண்களுக்கு இருக்கும்.
(iv) எண் 1 என்பது ஒரு நாட்டின் மோசமான செயல்பாட்டை குறிக்கும்
(v) 100 என்பது மிகசிறப்பான செயல்பாட்டை குறிக்கும்.
(vi) எடுத்துக்காட்டாக : எதிர்பார்க்கப்படும் ஆயுளுக்கான குறியீட்டில் மேல் எல்லையான 100 என்பது 77 வருட ஆயுளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
24.
(i) சுய உதவிக் குழுவின் உறுப்பினர்கள் பொதுவாக ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் உள்ளவர்கள்.
(ii) சுய உதவிக் குழுக்கள் 10 முதல் 20 பெண் உறுப்பினர்களை கொண்டவை.
(iii) SHGs தமக்கென்று வடிவமைக்கப்பட்டச் சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்டுள்ளன.
(iv) தொடர்ச்சியாக கூட்டம் நடத்துதல் மற்றும் முறையாக பதிவேடுகளை பராமரித்தல் சேமிப்பு மற்றும் கடன் வழங்குதல் ஆகிய ஒழுங்கினை அவை கடைபிடிக்கின்றன.
(v) SHG க்கள் முழு பங்கேற்பினை அளித்து அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதுடன் தங்களை தாங்களே நிர்வகித்துக் கொள்கின்றனர்.
25.
(i) சுங்க வரிக்குறைப்பு மற்றும் சுங்கவரித் தவிர்ப்பு போன்ற செயல்பாடுகளின் மூலம் இறக்குமதியை எளிமைப்படுத்துதல்.
(ii) அயல்நாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் அயல்நாட்டு தொகுப்பு முதலீடுகளுக்கான (FPI) கதவுகளைத் திறந்து வைப்பது போன்ற ஒரு சில நடவடிக்கைகள் உலகமயமாக்குதலின் அளவீடுகள் ஆகும்.
26.
1. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுவாக அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் மட்டும் குறிப்பிடப்படுவதன்றி அந்நாட்டு மக்களின் உயர்ந்த வாழ்க்கைத்தரம் அல்லது மக்களின் நல்வாழ்வையும் உள்ளடக்கியதாகும்.
2. ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தின் அளவீடுகள் என்பது.
1. மனிதவள மேம்பாட்டு குறியீடு
2.வாழ்க்கைத் தரக்குறியீடு
3. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு ஆகியவற்றை பொறுத்தது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards