11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மனோகார்ப்பிக் பலப்பருவ தாவரங்கள் என்பது யாது? எ.கா. தருக
2.
வரையறு:சவ்வூடுபரவல் திறன்.
3.
வளையத் துளைக்கட்டை என்பது யாது?
4.
மண்புழு உரம் தயாரித்தலில், மண்புழு உரம் அறுவடைக்கு தயாராக உள்ளது என்பதை எவ்வாறு அறியலாம்?
5.
கிளாக்கோமா ஏற்படக் காரணம் யாது?
6.
அகச்சட்டகம் என்பது யாது?
7.
லிங்கா முத்துக்கள் என்பவை யாவை?
8.
மின்முனைப்பியக்க மீட்சி -வரையறு.
9.
பச்சை சுரப்பி என்றால் என்ன? பணியை குறிப்பிடுக.
10.
அம்மோனியாவாதல் என்றல் என்ன?
11.
துணை செல்கள் பற்றி எழுதுக.
12.
எந்த நிலையில் DNA அளவானது 2C யிலிருந்து 4C ஆக பெருக்கமடைகிறது?
13.
புரோட்டோபிளாசத்தின் கூழ்ம தன்மை எதன் அடிப்படையில் அமைகிறது?
14.
வகைப்பாட்டியல் மற்றும் இதை தொடர்பு தொகுப்பமைவியலின் நோக்கம் யாது?
15.
கீழ் வருவனவற்றைப் பெயரிடுக
i) தேன்கூட்டின் மிகப்பெரியத் தேனீ
ii) சில ஆண் தேனீக்களுடன் புதிய கன்னி இராணித் தேனீ கூட்டைவிட்டுப் பறந்து செல்லுதல்.
16.
தேவையான தூண்டுதல் கிடைத்தவுடன் செயல்மிகு மின்னழுத்தம் ஏற்படும்.ஆனால் தேவைக்குக் குறைவான தூண்டுதலில் ஏற்படாது.இக்கோட்பாட்டின் பெயர் என்ன?
17.
சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?
18.
கரப்பான் பூச்சியைத் தீங்குயிரி என ஏன் அழைக்கின்றோம்?
19.
உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?
20.
வலது வென்ட்ரிக்கிள் சுவர், இடதுவென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது. ஏன்?
21.
ஏன் தட்டைப்புழுக்கள் உடற்குழியற்றவை என அழைக்கப்படுகின்றன?
22.
கோவேறுகழுதை (Mule) ஏன் மலட்டுத்தன்மை உடையதாக உள்ளது?
23.
நைட்ரோஜீனஸ் காரம் மற்றும் கனிம வேதியியலில் பயன்படும் காரத்தை வேறுப்படுத்துக
24.
மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக
25.
வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன?
1.
பல ஆண்டுகள் வாழ்ந்து ஒரு முறை மட்டும் மலரும் தாவரங்கள் மனோகார்ப்பிக் பலபருவ தாவரங்கள் எனப்படும்
எடுத்துக்காட்டு: மூங்கில்
2.
ஒரு கரைசலில் உள்ள கரைப்பான் துகளின் எண்ணிக்கைக்கும் அதன் கரைபொருள் துகளின் எண்ணிக்கைக்கும் அதன் கரைபொருள் துகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள விகிதமாகும்.
3.
1.பின்பருவக் கட்டையில் காணப்படும் துளைகளை விட முன் பருவக்கட்டையில் காணப்படும் துளைகளை விட ம் முன் பருவக்கட்டையில் காணப்படும் துளைகள் பெரியன.
2.இவ்வாறு, அகன்ற மற்றும் குறுகலான இரண்டு வகை சைலக் குழாய்களும் ஒரு ஆண்டு வளையத்தில் அமைந்திருக்கும்.
4.
1. மண்புழு உரம் தயாரிப்பின் போது, மண்புழுக்கள் தங்களது கழிவுகளை நாக்கூழ் கட்டிகளாக படுக்கையின் மேற்பரப்பில் வெளியேறுகின்றன.
2. மேற்பரப்பில் மண்புழுக்கழிவு தென்பட்டால், அக்குழிகள் அறுவடைக்குத் தயாராக உள்ளது என்பதை அறியலாம்.
5.
1. கண்ணின் ஸ்க்லெம் கால்வாயில் ஏற்படும் அடைப்பு கண் உள் அழுத்தத்தை அதிகரிக்கும்.
2. இந்த அதிகரிக்கப்பட்ட அழுத்தமானது விழித்திரையையும், பார்வை நரம்புகளையும் நெருக்கி அழுத்துகிறது.
3. இதனால் கிளாக்கோமா என்னும் கோளாறு ஏற்படுகிறது.
6.
(i) உயிரிகளின் உடலின் உட்பகுதியில் காணப்படும் சட்டகப் பொருட்கள் ஆகும். தசைகள் சட்டகப் பொருட்கள் ஆகும்.
(ii) தசைகள் வெளியே அமைந்திருக்கும் முதகெலும்புகளின் சட்டக மண்டலம் இதற்கு எடுத்துகாட்டாகும்.
7.
முத்துச்சிப்பிகள், பாறை மடிப்புகள், இறந்த பவளப்பாறைகள் ஆகிவற்றில் வளர்ந்து பரந்த முத்து வங்கிகளாகின்றன. இவற்றால் உருவாக்கப்படும் உயர் மதிப்பு முத்துக்களுக்கு லிங்கா முத்துக்கள் என்று பெயர்.
8.
K அயனிகள் ஆக்ஸோலெம்மாவை விட்டு வெளியேறுவதால் ஆக்ஸோலெம்மாவின் உட்புறம் மீண்டும் எதிர்மறை மின்தன்மையைக் பெறுகிறது. இச்செயலே மின்முனைப்பியக்க மீட்சி எனப்படும்.
9.
இறால் போன்ற கிரஸ்டேஷியாக்களில் பச்சை சுரப்பி அல்லது உணர்நீட்சி சுரப்பிகள், கழிவு நீக்கப் பணியைக் செய்கின்றன.
10.
அம்மோனியாவாதல் (Ammonification )
(i) இறந்த தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து பெறப்படும் கரிம நைட்ரஜன் (புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள்) பாக்டீரியங்களால் அம்மோனியாவாக மாற்றப்படும் நிகழ்வு அம்மோனியாவாதல் எனப்படும்.
(ii) இச்செயலில் பங்கேற்கும் பாக்டீரியங்கள் பாசில்லஸ் ரமோசஸ் மற்றும் பாசில்லஸ் வல்காரிஸ்.
11.
(i) சைலக் குழாய்களுடன் இணைந்து காணப்படுகின்ற மெல்லிய சுவருடைய நீண்ட சிறப்பு வகையான பாரங்கைமா செல்கள் துணைச் செல்கள் எனப்படும்.
(ii) இச்செல்கள் உயிருள்ளவை சைட்டோபிளாசத்தையும் தெளிவான உட்கருவையும் கொண்டுள்ளன.
(iii) இவை சல்லடை குழாய்களின் பக்கசுவரில் உள்ள குழிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
12.
S நிலை (அ) உருவாக்க நிலை.
13.
கரைபொருட்களின் ஒரு படித்தான தன்மை (நீரில் கலைபவை) அல்லது பலபடித்தானதன்மை (நீரில் கரையாதவை)யின் அடிப்படையில் புரோட்டோபிளாசத்தின் கூழ்ம தன்மை அமைகிறது.
14.
வரையறுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் உயிரினங்களை வகைப்படுத்துவதாகும்.
15.
அ) இராணி தேனீ
ஆ) சில ஆண் தேனீக்களுடன் புதிய கன்னி இராணித் தேனி கூட்டைவிட்டுப் பறந்து செல்லுதல் கலவிப்பறப்பு எனப்படும்.
16.
தேவையான தூண்டுதல் கிடைத்தவுடன் செயல்மிகு மின்னழுத்தம் ஏற்படும்.ஆனால் தேவைக்குக் குறைவான தூண்டுதலில் ஏற்படாது. இது "உண்டு அல்லது இல்லை கொள்கை" எனப்படும் கோட்பாடு ஆகும்.
17.
இரைப்பையில் குடல் உறிஞ்சிகள் கிடையாது.
காரணம்:
1. இரைப்பை உணவை சேமிக்கிறது.
2. இரைப்பை உணவை அரைக்கிறது
3. இரைப்பை நீரில் நொதிகள் காணப்படுவதால் செரித்தலில் மட்டும் ஈடுபடுகிறது.
4. உணவு முழுமையாக செரித்தல் அடையாமல் இருப்பதால் உறிஞ்சுவதற்கேற்ற சிறிய மூலக் கூறுகள் உருவாகவில்லை.
5. உறிஞ்சுவதற்குரிய நுண்ரத்தக்குழாய்கள் கிடையாது. மேற்கூறிய காரணங்களினால் இரப்பை குடல் உறிஞ்சிகளைப் பெற்றிருக்கவில்லை.
18.
1. காலரா, வயிற்றுப்போக்கு, காசநோய், டைபாய்டு நுண்ணுயிரிகளை எடுத்துச் செல்கிறது.
2. ஆஸ்துமா நோய் வருவதற்கு இப்பூச்சிகள் காரணமாக இருப்பதால் இவைகளை நாம் தீங்குயிரி என அழைக்கின்றோம்.
19.
குரல்வளை மூடி
20.
1. வலது வென்ட்ரிக்கிள் - இங்கிருந்து ஆக்சிஜனற்ற இரத்தம் இதயத்தின் அருகில் உள்ள நுரையிரலுக்கு செல்வதால், குறைவான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டுவதால் இதன் சுவர் சற்று மெல்லியது.
2.இடது வென்ட்ரிக்கிள் - இங்கிருந்து ஆக்சிஜன் உள்ள இரத்தம் இதயத்தை விட்டு தூரமான உறுப்புகளுக்கு அனுப்பப்படவேண்டுமானதல், அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டி இருப்பதால், அதன் சுவர் தடிமனாக உள்ளது.
21.
1. இதன் உடற்சுவர் பகுதி நடு அடுக்கினால் ஆக்கப்பட்டதாகும்.
2. இதில் உடற்குழி இல்லாததால், உடல் சற்றுத் திடத் தன்மையுடன் காணப்படுகிறது.
3. உள்ளுறுப்பு சூழ்குழியற்று காணப்படுவதால் உள்ளுறுப்புகளில் சுதந்திரமான இயக்கத்தை தடுக்கிறது.
22.
இயற்கையில் இனப்பெருக்கப் பண்புகளில் இரு வேறு சிற்றினங்கள் தனிப்படுத்தப்பட்டுள்ளது. வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையே அவ்வாறு இனப்பெருக்கத்தடை உண்டு.
ஆனால் சில வேளைகளில் நெருங்கிய தொடர்புடைய சில சிற்றினங்களுக்கிடையே இனக்கலப்பு செய்யும் போது மலட்டுத் தன்மையுடைய சேய்கள் உருவாகிறது.
அதனால் தான் கோவேறு கழுதை மலட்டுத் தன்மையுடையதாக உள்ளது.
23.
1.நைட்ரோஜீனஸ் காரத்தில் நைட்ரஜன் காணப்படும்.
எ.கா. பியூரைன்காரம், பிரிமிடின் காரம்.
2.கரிம வேதியியலில் பயன்படும் காரத்தில் நைட்ரஜனுக்குப் பதிலாக -OH தொகுதி காணப்படும்.
24.
I) மொனிரா உயிரின உலகத்தின் அனைத்து புரோகாரியோடிக் உயிரினங்களையும் உள்ளடக்கியது.
II) இவை ஒரு செல் உயிரிகள்.
III) இவை இடப்பெயர்ச்சி அடையும் திறன் கொண்டவை. சில பாக்டீரியாக்கள் ஒட்டுண்ணிகள்ளாகவும், மற்றவை உடனுண்ணிகள்ளாக வாழ்கின்றன.
எடுத்துக்காட்டு : ஆர்க்கி பாக்டீரியா.
25.
| வேர் ஏறு கொடிகள் | தண்டு ஏறு கொடிகள் | |
| 1. | தாவரங்களின் கணுக்களிலிருந்து தோன்றும் வேற்றிட வேர்களின் மூலம் ஆதாரத்தைப் பற்றி தாவரங்கள் ஏறுகின்றன. |
இவ்வகை தாவரங்களில் ஆதாரத்தைப் பற்றி ஏறுவதற்கான சிறப்புத் தகவமைப்புகள் கிடையாது. எனவே தண்டு ஆதாரத்தைச் சுற்றி பின்னி வளர்கின்றன. |
| 2. | எ.கா. பைப்பர் பிடல் பைப்பர் நைக்ரம் ஹீடிரா ஹீடிரா ஹெலிக்கஸ், போதாஸ் |
எ.கா. ஐபோமியா, கண்வால்வுலஸ், டாலிகஸ், கிளைட்டோரியா குவிஸ் குவாலிஸ். |
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards